அக்னி சிறகே-1

அன்று …
“ஆயிராமஆவது தடவையாகத் தன் தந்தையிடம் தான் வேலைக்குப் போக
வேண்டும் என்றாள்” சாத்விகா.

“அவள் தந்தையும் சலிக்காது அதே ஆயிராமாவது தடவை உனக்கு மேலும் படிக்க வேண்டுமா? படித்துக்கொள், வேலை வெட்டிக்கெல்லாம் போகனும்னா நான் விடமாட்டேன் உன் திருமணதிற்க்கு பின் அது உன் பாடு என்று முடித்துக்கொண்டார்”சதாநந்தன் (எப்படிதான் மனுசன் மாடுலேசன் மாறாமல் ஒரே டயலாக்கை அப்படியே சொல்றாரோ ஒரு வேலை மனப்பாடம்
பண்ணியிருப்பாரோ?.. இருக்கும் இருக்கும்).

“புரிஞ்சுக்கோங்க அப்பா நான் சுதந்திரமா வாழ ஆசைப் படுகிறேன்!”

“ஏன்? உன் சுதந்திரதிற்க்கு இப்போ என்ன ஆகிவிட்டது? நல்ல தூக்கம், நினைத்த நேரத்திற்கு எழுந்திருக்கிற, பிடித்ததை சாப்பிட்டு கொள்கிற, உன் இஷ்டப்படி தானே உன்னைப் படிக்கவைத்தேன், உனக்கு இங்கு
எந்த வீட்டு வேலையும் கொடுக்குறது இல்ல அப்றம் என்ன?

இது மட்டும் தான் சுதந்திரமா?
அவள் வாய் ஊமையாகி போனது! கண்கள் மடடும் கண்ணீரை சிந்தியது.

அன்று மாலை -4 மணி,

சதாநந்தன் தன் அலுவலக வேலை நிம்மிதமாகத் தன் நண்பன் சுதாகரை காணச்சென்றார் …

நலம் விசாரிப்புகளுக்குப் பின், அவருடைய மனைவியைச் சந்தித்தார்அவர் தன் மகள் சாத்விகாவின் கல்லூரி பேராசிரியர் என்பதால் அவரை அறிவார்!.

“சாத்விகா எப்படி இருக்கிறாள் ?

” நன்றாக இருக்கிறாள்”

“அவளிடம் ஒரு முறை உன் கனவு என்னவென்று கேட்டேன்?”

“அவளின் பதில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றது!”

“அதற்கு என்ன போ……..!”

“தந்தை சம்மதிக்கமாட்டார் …”

 “ஏன் என்றேன்? அவருக்கு நான்       யாரிடமும் கையேந்தி வேலை செய்வது
  பிடிக்காது..”

“அது ஏனோ?”

“ஏன்னா நான் அவருடைய இளவரசி!,ஆனால் நான் என் தந்தைக்கு மட்டுமே இளவரசியா இருக்க விரும்பவில்லை ! இந்த உலகத்தில் சொந்த காலுல நிக்கனும்னு ஆசைபடுறேன், எங்க அப்பா அளவுக்கு இல்லனாலும் என் தேவைகளை நான் செய்துக்கனும் இல்லையா?”எனக்குத் தேவையான மொபைல் ரீசாஜ், புக்ஸ், பெட்ரோல் செலவு, அவ்வளவு ஏன் என் நாப்கின்க்கு கூட என் அப்பா தான், செலவு பண்றார், பண்ணுவார்,பண்ணிட்டே இருப்பாரு….! ஆனா ஒவ்வொரு தேவைக்கும் போய் அப்பா முன்னாடி போய் நிக்கும்போது நினைப்பேன் என்னைக்கு நானே என் செலவுகளைச் செய்துகொள்கிறேனோ, அன்னைக்கு தான் நான் சுதந்திரமான மனுசினு! அதுக்காக என் அப்பா எனக்குப் பண்ணுறது தப்புனு நான் சொல்லமாட்டேன்”அவர் இத்தனை காலம் எனக்காகச் செய்தார்.பறவை தன் மகவுகளுக்கு பறக்க சொல்லிகொடுக்கும் கத்துக்கிட்டதும்
அனுப்பிடுமே! நானும் கத்துக்கிட்டேன் இனி நானே பறப்பேன்!என்றாள்..

“அன்று அவள் கண்ணில் அத்தனை கனவுகள் இருந்தது சார்” அவள் கனவுகளுக்கு உயிர்கொடுங்கள்.
…………….
அன்று இரவு,
சாத்விகா உறங்க முயற்சித்தாள் முடியவில்லை உருண்டு பிரண்டு பார்த்தாள் நித்திரைஅவளுக்கு இன்று விடுமுறை அளித்ததோ……எழுந்தாள் கொஞ்சம் நடந்தாள்… அவளின் மனதில் பல கேள்விகள் குறிப்பேட்டை கையில் எடுத்து எழுதினாள்…
அன்புள்ள அப்பா,
நீங்க எனக்கு எல்லாமே கொடுத்திருக்கீங்க.. இல்லனு சொல்லல எல்லாமே சரி !ஆனால் வேலைக்கு உன்னை விடமாட்டேன் என்று சொல்வதும் ஒரு அடக்குமுறை தானே!
நான் இந்த வீட்டின் இளவரசி!ஒற்றை இளவரசியும் கூட இந்த வீட்டில் எல்லாம்
என் விருப்படிதான் நடக்குது என் மேல நீங்க ரெண்டு பேருமே ரொம்ப பாசம்
வெச்சிருக்கீங்கஅப்படி இருக்குற உங்களையே என்னால மாத்த முடியல
நாளைக்கு நான் புகுந்த வீடு என்று ஒன்றுக்கு  போகும் போது அவர்கள் என்
உணர்வுகளுக்கும், கனவுகளுக்கும் எந்த அளவு மதிப்பு கொடுப்பாங்கனு யாருக்குமே தெரியாது!,நீ உங்க அம்மா வீீட்டில் இருக்கும்போதே வேலைக்கு போகல இங்க வந்து ஏன் போகிற? இங்க உள்ளவங்க நாங்க என்னமோ உன்னை வேலைக்குப் போகச் சொன்னோம்னு
பேசமாட்டாங்களா? என்பது போன்ற கேள்விகள் என்னைத் துளைக்கும் போது என்னிடம் அதற்குப் பதில் தான் இருக்குமா? சுதந்திரம் என்பது நீங்க சொன்னது மட்டும் இல்ல அப்பா,அதில் என் கனவுகளும் அடங்கும்!,இதுவே என் இடத்தில் ஒரு மகன் இருந்தா நீங்க இப்படி பேசுவீீங்களா?சின்ன வயசுல இருந்தே நீங்க வேலைக்கு போககூடாதுனு சொல்லும்போதுலாம் நம்ம அப்பா தானே பேசி சம்மதிக்க வச்சுடலாம்னு நினைப்பேன் ஆனா முடியல………..”

எனக்கு சிறகுகள் முளைத்தது நானும் பறக்க ஆயத்தமானேன் இல்லை நீ
இப்போ பறக்கக்கூடாதுனு என் சிறகுகளை முடக்கிவிட்டீர்கள்! நான் பறக்கனும் அப்பா உயர உயர பறக்கனும்!ப்ளீஸ்ப்பா……
                            -இப்படிக்கு உங்கள் மகள்.

அந்தக் காகிதத்தை எடுத்துக் கொண்டு தந்தையின் புத்தக அறைக்குச் செ ன்றாள், தந்தை ஒரு புத்தகத்தைப் பாதியில் படித்து வைத்திருந்தார் அது “பெண் விடுதலை – தந்தை பெரியாரின் புத்தகம் அதில் அக்கடித்ததை வைத்தாள்…….
அவள் அறைக்குச் சென்று கண்களை மூடினாள் நாளைய விடியல் அவளுக்குமான விடியலோ!? 💓
சிறகுகள்-1💓