அனல் அவள் 14
ஊருக்கு சுற்றுலா செல்வதற்கு ஒருநாள் முன்பு மித்ரனும் விவேகனும் மித்துமா வை அடாவடியாக தென்றலின் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
சிறிது நேரம் சங்கடமாக உணர்ந்த மித்துமா பிறகு அக்ஷா மற்றும் தேவகியின் இயல்பான செய்கையில் அவரும் அவர்களுடன் ஒன்றிவிட்டார்.
பிறகுதான் மித்ரனுக்கும் விவேகனுக்கும் நிம்மதியே. இருவருக்குமே அவரை தனிமையில் விட்டுச் செல்ல விருப்பமில்லை அதனாலேயே இந்த முடிவை எடுத்து இருந்தனர்.
பிறகு மாலை நேரம் தமிழிடம் பேசிய, விவேகனும் மித்ரனும் எப்பொழுது எங்கிருந்து கிளம்பலாம் என விசாரிக்க மூவரும் சேர்ந்து அவர்களின் 5 நாள் சுற்றுலா பயணத்தை பிளான் செய்து கொண்டனர்.
பிறகு தமிழிடம் விவேகன், “எங்கடா உன் தம்பிய ரொம்ப நாளா காணோம்” என வினவ.
“அவனை ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பள்ளியில் சேர்த்து விட்டதாகவும், வீட்டிலேயே இருந்தால் தன் அன்னையால் அவன் படிப்பு பாதிக்கப்படும்” என கூறிய தமிழுக்கு ஆதரவு கூறிய விவேகனும் மித்ரனும் வீடு வந்து சேர்ந்தனர்.
ஏன்? எதற்கு என்று கேட்டு எல்லாம் தமிழை சங்கட படுத்த அவர்கள் விரும்பவில்லை.சொல்ல கூடிய விஷயமாக இருப்பின் அவனே சொல்லி இருப்பான் என்ற எண்ணம் அவர்களுக்கு.
மறுநாள் இரவு தேவகி தர்மராஜ் மற்றும் மித்துமாவின் அட்வைஸ் மழையில் இருந்து தப்பித்த நால்வரும் ஒரு வழியாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை நோக்கி செல்லும் ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில் ஏறினார்கள்.
மித்ரன் தமிழ் ஒரு இருக்கையிலும் விவேகன் தென்றல் மற்றொரு இருக்கையிலும் அமர்ந்து கொண்டனர்.
அவர்களின் பயணம் இனிமையாக தொடங்கியது.
தமிழின் அருகில் தன்னை அமரவைத்த விவேகனை வசை பாடிக் கொண்டே வந்தான் மித்ரன்.
‘சந்தேகப்பேர்வழி கிட்ட சிக்க வச்சுட்டியே பரட்ட’ என மைண்ட் வாய்ஸ் மழையை பொழிந்து கொண்டிருந்தான்.
இங்கு தமிழையோ அவன் கனவு உலகில் தென்றலை நினைத்து கரைந்து கொண்டிருந்தான் அவனுக்கு ஒருதலைக் காதலும் பெரும் சுகமாகவே இருந்தது.
ஆம்,காதல் தான் தென்றலின் பாராமுகம், அந்த வயதிற்கே உறிய சில பல ஹார்மோன்களின் ஆட்டத்தை தூண்டி விட, அந்த ஆண்மகனும் அதற்கு விதிவிலக்கல்லவே,
தமிழும் தென்றலின் மீது காதலில் விழுந்தே விட்டான்.
அந்த காதல் தாக்கத்தின் அதிர்வலைகள் அவன் இதயத்தில் இன்னிசையாய் ஸ்வரம் மீட்ட துவங்கி இருந்தது…
சில நாட்களாகவே தென்றல் சரி இல்லை என்பதனை விவேகன் மனதில் குறித்துக் கொண்டு தான் இருந்தான். இந்த பயணத்திற்கு சென்று வந்த பிறகாவது அவள் முன்பு போல் மாறி விடுவாள் எனும் நம்பிக்கை அவனுள் இருந்தாலும் ஏதோ ஒன்று தவறாக இருப்பது அவன் மனதை அரித்துக்கொண்டே இருந்தது.
தென்றலோ பேருந்தில் ஏறி அமர்ந்ததிலிருந்து பேருந்தின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாலே தவிர மறந்தும் மற்றவர்களின் புறம் திரும்பி பார்க்கவில்லை.அவள் எதை வேடிக்கை பார்க்கிறாள் என்றுகூட அவள் கருத்தில் பதியவில்லை.
சிறிது தூரம் சென்ற நிலையில் அனைவரும் உறங்கி விட பேருந்து ஒரு இடத்தில் சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது.
இவர்கள் நால்வரும் வீட்டிலேயே சாப்பிட்டு வந்ததால் சாப்பிடுவதற்காக இறங்கவில்லை.மித்ரனும் தமிழும் முதலில் பாத்ரூம் சென்று வந்ததும் விவேகனும் சென்று வர அவர்களின் பயணம் மீண்டும் தொடங்கியது.
காலை 5 மணி அளவில் தஞ்சாவூர் மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்னும் பெயர் பலகையின் வளைவுக்குள் அந்த பேருந்து நுழைந்து பேருந்து நிலையத்தை அடைய நால்வரும் பேருந்தில் இருந்து இறங்கினர்.
(தஞ்சையைப் பற்றி நான் அறிந்த சில வரலாறு)
தஞ்சாவூர் மாநகரம் தொன்மையான நகரம் ஆகும்.இது தஞ்சை என்றும் அழைக்கப்படுகிறது. பிற்காலத்தில் சோழர்களின் தலைநகராக விளங்கியது. தஞ்சை என்பது குளிர்ந்த அழகிய வயல்கள் மற்றும் பனை மரங்கள் உள்ள இடம் என பொருள்.
தஞ்சை மாவட்டத்தில் முக்கிய தொழில் விவசாயம் என்பதால் நெல் பயிர் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் திகழ்கிறது.
உலக பாரம்பரிய சின்னமாகவும் உலகப் புகழ் பெற்றதாகவும் தஞ்சையில் உள்ள தஞ்சை பெரிய கோவில் விளங்குகிறது.
தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகரமாகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந்நகரம் பெயராகப் பெற்றது தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.
பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை முற்காலத்தில் தஞ்சன் என்னும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும் சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது.
வைணவ சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மகாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும் அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீஸ்வரர் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.
தஞ்சாவூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு நால்வரும் தமிழின் உறவினர் வீட்டிற்கு பயணமாகினர். அங்கிருந்து 20 நிமிடப் பயணத்திற்குப் பிறகு அந்த ஆட்டோ காவலர் குடியிருப்புக்குள் நுழைந்தது.
தமிழ் இப்பொழுது இவர்களை அழைத்து வந்திருப்பது அவனின் மாமா வீட்டிற்கு தமிழின் மாமா தஞ்சாவூரின் காவல்துறை உதவி ஆணையர் ஆகையால் தான் அவர்கள் காவலர்கள் குடியிருப்புக்கு வருகைப் புரிந்தனர்.
நால்வரையும் வாசலில் இருந்தே இன்முகத்தோடு வரவேற்றனர் தமிழின் மாமாவும் அத்தையும்.
இவர்களுக்கு ஒரு மகள் மட்டுமே அவளும் திருமணம் ஆகி கணவன் வீட்டிற்கு சென்று விட இப்பொழுது இவர்கள் இருவர் மட்டுமே இந்த குடியிருப்பில் வசிக்கின்றனர்.
சில பல நல விசாரிப்புகள் அறிமுகங்களுக்கு பிறகு நால்வரையும் ஓய்வெடுக்கச் சொல்லிய தமிழின் மாமா அவரின் கடமையை பணிபுரிய சென்றுவிட தமிழின் அத்தை சமையல் வேலையை செய்யத் துவங்கினார்.
தமிழின் மாமா பெயர் முருகன் அத்தை பெயர் வள்ளி…
ஆண்கள் மூவரும் ஒரு அறைக்கு சென்றுவிட தென்றல் ஒரு அறையில் தனியாக விடப்பட்டாள், பயணக்களைப்பு அவளின் மன பயமும் அவளின் தனிமையை உணர செய்யாது உறக்கத்திற்கு ஆழ்த்தியது.
மதியம் ஒரு மணி வரை ஓய்வெடுத்த அவர்கள் குளித்து முடித்து ரெடியாகி வெளிவர அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட உணவு பரிமாறப்பட்டது. பிறகு உண்டு முடித்தவர்கள் வயல்வெளிகளை மட்டும் இன்று சுற்றிப் பார்த்து வரலாம் என கிளம்பினார்கள்.
சென்னையில் எப்பொழுதும் தலையை வெடிக்கச் செய்யும் வாகன இரைச்சல் தூசு தும்பு நிறைந்த வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்தவர்கள் இந்த புதிய கிராமத்து வாழ்க்கையை மிகவும் மகிழ்ந்து அனுபவித்தனர்.
பார்க்கும் திசையெங்கும் பச்சைப் பசேலென வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களும் பனை மரங்களும் செழிப்பாக வளர்ந்து நின்று காற்றுக்கு ஏற்றவாறு தலையாட்டும் நெற்கதிர்கள் பார்ப்போரின் கண்களுக்கு விருந்தாய் அமைந்தது..
நீண்டதூரம் நடந்து வந்ததால் அனைவருக்கும் கால்களில் வலி எடுத்ததால் சற்று நேரம் அமரலாம் என அங்கிருந்த ஒரு மோட்டார் ரூமுக்கு அருகில் இருந்த பம்புசெட் தொட்டியில் தண்ணீரில் கால்களை ஆட்டியவாறு கைகளால் தண்ணீரை எடுத்து ஒருவர் மீது ஒருவர் தெளித்தவாரும் விளையாடிக்கொண்டே அமர்ந்திருந்தனர்.
விளையாடிக் கொண்டே இருந்த தென்றல் தெரியாமல் தவறி தமிழ் மீது விழுந்து விட்டாள் அன்று ஏற்பட்ட அதை மின்சாரப் பாய்ச்சல் பெண்ணவள் பதறிதான் போனாள்.
மீண்டும் மீண்டும் அவளின் மனதில் ஏற்பட்ட பயமோ இவன் தன்னை அழிக்க வந்த வில்லன் என்பதே இதனைப்பற்றி விவேகன் இடம் கூறவும் பயம் மித்ரன் இடம் கூறவும் பயம் அவனிடம் இருந்து விலகியவள் இவர்களை விட்டு சற்று தூரம் விலகிப் போய் நின்று கொண்டாள்.
அவளின் பயத்தை ரசித்தவாறு தமிழும் விவேகன் மற்றும் மித்ரனின் விளையாட்டில் கலந்துகொள்ள மூவரும் அவர்களை சுற்றி வந்த ஆபத்தை உணர வில்லை.
தங்களை சுற்றி ஏதோ வித்தியாசமான ஓசை கேட்பதை முதலில் உணர்ந்த மித்ரன் சுற்றி முற்றி பார்வையை ஓட விட அவர்களை நெருங்கி ஒரு பாம்பு வந்து கொண்டிருந்தது தமிழை சீண்டி அந்த பாம்பை கைகாட்டிய உடன் தமிழ் “பாம்பு பாம்பு” என அலரத் துவங்கி விட்டான்.
இவன் அலறல் சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்த தென்றல் அந்த பாம்பு விவேகனுக்கு மிக அருகில் சென்று நிற்பதைப் பார்த்து விரைந்து அருகில் சென்று அவனை தள்ளிவிட்டு பாம்பை கையில் பிடித்து தூர தூக்கி எறிந்து விட்டாள்.
ஒரு வேகத்தில் பாம்பைக் கையில் பிடித்து விட்டவள், நடந்ததை மூளை உணரவும் பயத்தில் மயங்கி சரிந்து விட்டாள்.
விவேகன் பதறி போய் அவள் அருகில் வந்தவன்.
அவள் தலையை தன் மடியில் தாங்கி கொண்டான்.அவள் முகத்தில் எவ்வளவு தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியவில்லை.
மூவரும் தாமதிக்காமல் துரிதமாக செயல்பட்டு அவளை உடனே அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
போகும் வழியெல்லாம் அவளை கைகளில் எங்கும் அந்த பாம்பு தீண்டி இருக்குமோ என்ற பயம் விவேகனை நொடிக்கு நொடி கொன்று கொண்டே இருந்தது.
பிறகு தென்றலை சோதித்த மருத்துவர்கள் அவள் பயத்தில் மயங்கி விட்டதாகவும் மயக்கம் தெளிய ஊசி போட்டு இருப்பதாகவும் சிறிது நேரம் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என கூறி சென்று விட்டனர்.
அரை மணி நேரத்திற்குப் பிறகு மயக்கம் தெளிந்த தென்றல் விவேகனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை கண்டவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டுவிட்டு தனக்கு வேறு எதுவும் இல்லை என்று கூறவும்.
மூவரும் வீட்டிற்கு கிளம்பினர்…
அப்போது அந்த மருத்துவமனையில் ஆறு மாத காலமாக சுயநினைவை இழந்து இருந்த ஒருவன் தற்பொழுது சுயநினைவு பெற்று சிகிச்சைக்காக மருத்துவரை காண சென்று கொண்டிருந்த வழியில் விவேகன் மற்றும் தென்றலை கண்டவுடன் அவன் மூளையில் மின்னல் வெட்ட அந்த இடத்திலேயே மயங்கி சரிந்தான்.
அவன் மயங்கி விழுந்தவுடன் அவனை சுற்றி கூட்டம் கூடிவிட இவர்கள் நால்வரும் அவன் முகத்தை காண முயன்று முடியாமல் போக வீட்டிற்கு கிளம்பி விட்டனர்.
மயங்கி விழுந்த அவன் கண் விழித்து பார்க்கும் போது ஒரு அறையில் படுத்திருந்தான் சற்று நேரத்திற்கு முன்பு என்ன நடந்தது என அவன் கண்களை இறுக மூடி யோசித்தபோது, தென்றல் மற்றும் விவேகனின் முகம் அவன் மூளையில் மின்னலைப் பாய்ச்ச கண்களை குரோதத்துடன் திறந்தவன் உதட்டில் விஷம சிரிப்பு பூத்திருந்தது.
……………………………..
இவர்கள் ஊருக்கு வந்த முதல்நாளே தென்றல் செய்த அளபறையில் இரண்டாம் நாளும் ஓய்வில் சென்றுவிட மீதமிருக்கும் மூன்று நாட்களாவது உருப்படியாக ஏதேனும் செய்து கொண்டாட வேண்டும் என நினைத்தவர்கள் மூன்றாம் நாள் காலையிலேயே ஊர்சுற்ற கிளம்பி விட்டனர்.
விவேகன் மற்றும் தமிழ் பின்தொடர மித்ரனும் தென்றலும் அவர்களுக்கு முன் வளர்ந்து நிற்கும் அந்த கோபுரங்களை அன்னாந்து பார்த்தவாறு சென்று கொண்டிருந்தனர்.
தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக மிக பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் அந்த தஞ்சைப் பெரிய கோவிலை காணக்காண உடலெங்கும் சொல்ல முடியாத ஒரு பரவசம் பரவி அடங்கியது.
ஒரே கல்லில் அமைக்கப்பட்ட 20 டன் எடையும் 14 மீட்டர் உயரமும் கொண்ட அந்த நந்தி சிலையை காண காண தென்றலுக்கு தலைகால் புரியவில்லை.
சிறு குழந்தை என அதனை சுற்றி சுற்றி விதவிதமான போஸ்களில் புகைப்படங்களை எடுத்து குவித்துவிட்டாள். அவளை புகைப்படம் எடுத்து எடுத்து மித்ரனும் அவன் கையில் இருந்த புகைப்பட கருவியும் செயலிழந்து விட்டன.
பிறகு அவர்கள் எடுத்து வந்த உணவை உண்பதற்காக ஒரு கல் மேடையின் மேல் ஏறி அமர்ந்தவர்கள் அரட்டைகளை தொடர்ந்தவாறு உணவுகளை உண்டு முடிக்க,
சிறிது நேரத்திற்கு பிறகு மித்ரனிடம் இருந்து எந்தவித அசைவும் தென்படவில்லை என்ன ஆனது என தென்றல் திரும்பி பார்க்க,
இவர்களின் வயதை ஒத்த பெண் ஒருத்தி இவர்கள் இருக்கும் இடத்திற்கு சற்று தள்ளி நின்று கோவிலை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் அவளை வைத்த கண் வாங்காமல் சைட் அடித்துக் கொண்டிருந்தான் மித்ரன்.
அவனைப் பார்த்து வாய் பொத்திச் சிரித்த தென்றல் அவனை இடித்து “அங்கே பார்” என ஒரு இடத்தில் கையை காட்ட,
மித்ரன் உடன் சேர்ந்து இவர்கள் மூவரும் அந்த இடத்தை பார்க்க ஆறு வயதை ஒத்த சிறு குழந்தை அம்மா என்று அழைத்தவாறு அந்தப் பெண்ணை ஓடிவந்து அணைத்துக் கொண்டது இந்த காட்சியை கண்ட மித்ரன் வாயை பிளக்கவும் மற்ற மூவரும் கலகலவென சிரித்து விட்டனர்.
மற்ற மூவரும் மித்ரனை கேலியாக பார்க்க,
“நான் என்னடா பண்றது பாக்க அந்த பொண்ணு சின்ன வயசு மாதிரி இருந்திச்சு அதான்” என தலையை சொரிய.
தென்றல் உடனே “மஞ்சள் மற்றும் சந்தனத்தின் குணம் நிறைந்த சந்த்தூர் சர்மம் எங்கும் ஜொலிஜொலிக்கும்” என சந்த்தூர் சோப் விளம்பர படத்தின் பாடலை பாட இப்போது மித்ரன் தென்றலை அடிக்க துரத்திக் கொண்டிருந்தான்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அன்றைய நாளை நகர்த்தினார்கள்.
காலை 9 மணிக்கு துவங்கிய ஆட்டம் மாலை 5 மணிவரை தொடர்ந்தது.
தமிழைப் பார்த்து பயந்து பயந்து ஒதுங்கும் தென்றலை பார்த்து அவனுக்கு பாவமாகி போனதால் சற்று இடைவெளி விட்டு நிற்க துவங்கியிருந்தான் தமிழ்.
இன்று மித்ரன் தென்றலுடன் சென்றதால் விவேகன் தமிழ் இடம் மாட்டிக் கொண்டான்.
“ஏன் விவேக் எப்போதும் தென்றலை மித்ரன் கூட விட்டுட்டு நீ பின்னாடி போற இதுக்கு பின்னாடியும் ஒரு பெரிய கதை இருக்கும் போலயே” என அவன் சந்தேகத்தை கேட்க.
மித்ரன் அன்றொரு நாள் தமிழைப் பற்றி பேசியப் போது,
“நல்ல பையன்தான் ஆனா சந்தேகப் பேர்வழி” என கூறியது நினைப்பு வர உள்ளூர சிரித்து கொண்டான்.
தமிழின் சந்தேகத்திற்கு பதில் கூற இவன் என்ன மித்ரனைப் போல ஓட்டவாயா,
‘தி க்ரேட் விவு’ ஆச்சே அதுவும் தென்றலை பற்றிய ரகசியங்கள் இவனிடத்தில் உயிர் போகும் தருவாயிலும் காக்கப்பட கூடியவை.
தமிழின் கேள்விக்கும் விவேகனின் பதில் உதட்டில் தெரிந்தும் தெரியாமலும் மின்னி மறைந்த சிறு புன்னகையே அதன்பிறகு கேள்வி கேட்க தமிழ் முட்டாளா என்ன.
ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக தமிழிடம் சந்தேகம் கேட்டான் விவேகன்.
“ஏன் தமிழ் தென்றல் உன்னை பார்த்தாலே பயந்து நடுங்குறா எதுவும் பண்ணி வெச்சியா அவள” என அவன் சிரித்தவாறு கேட்டாலும் குரல் வேறு செய்தி சொன்னது சற்று அலர்ட் ஆன தமிழ்.
“என்ன விவேக் இப்படி சொல்லிட்ட, நான் அவளை எதுவும் பண்ணல அன்னைக்கு படியில ஸ்லிப்பாகி விழப்போனவளை தாங்கி புடிச்சேன். அவ்வளவுதான் அதுவும் தப்பான நோக்கத்துடன் இல்லை ஆனால் அவ என்னமோ அன்றிலிருந்து என்னைக் கண்டாலே பேய பார்த்த மாதிரி பயப்படுறா அதான் நான் தள்ளியே இருக்கேன்” என பதறியவாரு விளக்கம் கொடுத்தவனை பார்த்து,
“ம்ம்ம்” என சிரித்தவாறு அவனை கடந்து சென்றான் விவேகன் ஆனால் அந்த ம்ம்ம் சொல்லாமல் சொல்லியது இனியும் தள்ளியே நில் என.
தமிழின் விளக்கத்தைக் கேட்ட விவேகனின் நினைவு முந்தைய நாள் இரவை நோக்கி சென்றது.
பகல் முழுவதும் அறையிலேயே முடங்கிக் இருந்ததால் சற்று காற்று வாங்க மாடிக்கு விவேகனை அழைத்துச் சென்றாள் தென்றல்.
மூன்றாம் நாள் வளர்பிறையை ரசித்து பார்த்து தனியாக சிரிக்கும் தென்றலையே ஒரு மார்க்கமாக பார்த்த விவேகன்.
“ஏன் தென்றல் தமிழ கண்டாலே அவ்ளோ பயம் எதுவும் பண்ணான”?
அவன் கேள்வியில் பதறியவாறு திரும்பியவள், “இல்லை” என வேகமாக தலை ஆட்டி விட்டு அன்று படியில் தான் தவறி விழுந்த கதையையும் தன் கற்பனையையும் கூறினாள்.
இதனைக் கேட்ட விவேகன் பொங்கி வந்த சிரிப்பை கடினப்பட்டு அடக்கியவன்.
“அப்படி இல்ல தென்றல் அவன் உனக்கு வில்லனா இருந்தா இப்படி உனக்கு ஒரு ஆபத்துன்னா அவன் கஷ்டப்படுவானா” என கேட்கவும் தான் தென்றலுக்கு தன் மடத்தனம் தெரிந்தது.
‘நேற்று மருத்துவமனையில் இருந்து வந்தது முதல் தன்னை நெருங்காமல் இருந்தாலும், தன்னை தொடரும் அவன் பார்வை, ஏனோ அது சில்லென்ற உணர்வைக் கொடுத்தது மட்டும் உண்மை.’
‘அது மட்டும் இல்லையே அன்று அந்த மீனவர் வீட்டில் விவேகன் தன்னை அடித்தபோது விவேகனையே முறைத்தவன் தன்னை நினைத்து வருந்தி முகம் சுருங்கினானே அப்படி இருக்க அவனை வில்லன் என்று நினைத்தது தன் மடத்தனம் இன்றி வேறென்ன’ என நினைக்கையில் நாணம் கலந்த புன்னகை அழையா விருந்தாளியாக அவள் இதழோடு இழைந்து ஒட்டி உறவாடியது.
தென்றல் மனதை தெளிவுபடுத்திய நிம்மதியுடன் விவேகனும் மன தெளிவுடன் தென்றலும் அவரவர் அறைக்கு செல்ல,
தெருவின் மின் விளக்கு கம்பத்தின் மறைவில் இருந்து இவர்களை குரோதத்துடன் பார்த்த ஒரு ஜோடி விழிகள் அதன் வாகனத்தில் ஏறி காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது.
தமிழ் வந்து இவன் தோள் பற்ற சுயநினைவு அடைந்தவன் மித்ரன் மற்றும் தென்றல் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சென்றனர்.
கோவிலில் ஒரு இடத்தில் வீற்றிருந்த மரத்தை நிமிர்ந்து பார்த்தவாறு சிலர் நின்றிருக்க மித்ரனும் தென்றலும் அதையே தான் செய்து கொண்டிருந்தனர்.
“அப்படி என்னதடா தேடுறீங்க மரத்துல” என விவேகன் கேட்கவும்,
” உஷ்ஷ்ஷ் சத்தம் போடாத விவு” என தென்றல் கூற மித்ரன் பொறுமையாக பதில் கூறினான்.
“இந்த மரத்துல ஏதோ பல்லி இருக்குமாம், மரத்தோட நிறத்திலேயே அவளோ சீக்கிரம் யாருக்கும் தெரியாதாம் அதைப் பார்த்தா நல்லதுன்னு சொன்னாங்க(எனக்கு அப்படி தான் மக்களே சொன்னாங்க சின்ன வயசுல கோவில் போன அப்போ அது உண்மையானு எனக்கு தெரில உங்களுக்கு தெரிந்தா சொல்லுங்க)அதான் தேடிட்டு இருக்கா” என மித்ரன் கூற.
“வீட்டில் தூரத்தில் பல்லியை கண்டால் குய்யோ முய்யோ” என கத்தி ஊரை கூட்ட வேண்டியது, இங்கு வந்து தெரியாத பல்லியை தேடி தேடி பார்க்கிறது “லூசு பெண்” என விவேகன் தலையில் அடித்துக் கொண்டான்.
சிறிது நேரம் தான் இந்த நினைவு எங்கிருந்து வந்தார்கள் என தெரியாத அளவுக்கு சாமியார்களின் கூட்டம் அந்த இடத்தை நிறைத்தது.
வந்தவர்கள் அனைவரும் விவேகன் மித்ரன் தமிழை, தென்றலை விட்டு பிரித்தவாறு இவர்களுக்கு இடையில் இவர்களை கடந்து சென்றனர். அவர்கள் கடந்து சென்ற பிறகு தென்றல் நின்ற இடத்தில் இருந்து காணாமல் போயிருந்தாள்.
சுற்றுமுற்றும் தேடியும் கிடைக்கவில்லை.
மித்ரன், “தெரியாத ஊரில் எந்த பானிபூரி காரன் பின்னாடி போனால் இந்தக் கிராததி” என புலம்பினான்.
இவர்களுக்கு சிறிது தூரம் தள்ளி நின்ற ஒருவன் விவேகனைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஏதோ ஒன்று உறுத்த திரும்பி பார்த்த விவேகனின் விழிகளில் விழுந்தான் அவன்.
இப்போது விவேகனுக்கு ஏனோ அவனின் பார்வை தனக்கான அழைப்பு என்று தோன்ற,
அவனை துரத்திக் கொண்டு இவன் ஓட அவன் கூட்டத்தோடு கூட்டமாக ஓடி மறைந்தான்.
விவேகன் செய்வதறியாது இரு கைகளாலும் தலையை தாங்கியவாறு முழங்காலில் அமர்ந்துவிட்டான்.
மனதில் நொடியும் நிற்காமல் “விவு விவு விவு” எனும் தென்றலின் அழைப்பு எதிரொலித்துக் கொண்டே இருந்தது…
(தொடரும்)