அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 15

IMG-20220627-WA0025-bb962c52

An kn-15

அகில் சிங்கப்பூரில் இருந்து வந்து இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. இப்பொழுதெல்லாம் முன்பைப் போலவே அதிகம் வீட்டில் தங்குவதில்லை. அத்தோடு அடிக்கடி அவனோடு கெளதமையும் அழைத்துச் செல்ல பழகிக் கொண்டான்.

இன்று பிரபலங்கள் பல கலந்துகொள்ளும் அனைத்துத் துறையினருக்குமான விருது வழங்கும் வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தாள் ஐரா.

சிறந்த கட்டிடத் துறை உற்பத்தி பொருட்களை உயர் தரத்தில் விற்பனை செய்யும் நிறுவனமாக இமாலயா கன்ஸ்டரக்ஷன்ஸ் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை என நடத்தப்படும் இந்த விழாவில் கடந்த இருபது வருடங்களாக இவர்களுக்கே இந்த துறையில் முதலிடம்.

இந்த வருடம் இவர்களது கல்லூரி சிறந்த பெறுபேருகளின் அடிப்படையில் அதிகளவிலான மாணவர்களை உயர் சித்தி அடைய வைத்தமைக்காக தெரிவு செய்திருந்தனர்.

அடுத்தவர் தலையீடு இல்லாது நடத்தப்படும் கல்லூரி என்பதால் இவ்வாறான வைபவங்களில் முன்னுரிமை எடுப்பதென்பது குறைவு தான். ஆக இன்று விழாவில் தன்னை ஈர்க்கும் அளவில் எப்போதும் போலவே தயாராகிக் கொண்டிருந்தாள் ஐரா.

“ம்மி இந்த லேஸ் மட்டும் டை பண்ண முடில.” கூறிக்கொண்டே தயாராகிக்கொண்டிருந்த தன் அன்னை முன்னே வந்து நின்றான் கெளதம். நேற்று அகில் கூறியதை கேட்டதிலிருந்து இனி இவனையும் பொதுவில் தானே அழைத்துச் செல்ல முடிவெடுத்திருந்தாள்.

“கெளதம், கிவ் மீ டூ மினிட்ஸ் டா.”

“ஓகே ம்மி…”

பிளாக் அன்ட் ரெட் வித் கோல்ட் பார்டர் சாரி அவளை உடுத்திக்கொள்ள அத்தனை நளினமும் அழகாய் காட்டி அவளை இன்னும் அழகூட்டியது.

“ம்மி அப்பா இன்னும் வரலையே?”

“இப்போ வந்துருவாங்க கெளதம். இப்போதான் கால் பண்ணாங்க.”

நேற்றிரவு இருவருக்கும் உண்டான பேச்சுவார்த்தை மிகைக்க கோபம் கொண்டவன் அப்போதே சென்றிருந்தான்.

அருகே உறங்கியிருந்த தந்தை, காலை விழிக்கும்போது காணோம் என எழுந்ததில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறான் சின்னவன்.

“கெளதம்… “அகிலின் குரல் கேட்கவும்,

“அப்பா வந்தாச்சு.” கட்டிலில் இருந்து தாவி குதித்து ஓடினான்.

‘ரொம்பத்தான்.’முணு முணுமுணுத்துக்கொண்டே தன்னை சரிபார்த்துக்கொண்டு அறை விட்டு வெளியில் வந்தாள் ஐரா.

“கெளதம், அப்பாக்கு சாப்பிட்டு ரெடியாகச் சொல்லு. இன்னும் டைமிருக்கு.”

“வேண்டாம் டா, இப்போ சாப்பிட முடியாது.”

“வேணாம் சொல்ராங்க ம்மி.” உள்ளிருந்தே குரல் கொடுத்தான் கெளதம்.

“அப்போ நீ வா நாம சாப்பிடலாம்.”

“ரெண்டுபேரும் இன்னும் சாப்பிடலையா? “

“நோ ப்பா, நீ வந்ததும் சாப்பிடலாம்னு ம்மி வெய்ட் பண்லாம் சொன்னா.”

“சரி வா.” என அவனை தூக்கிக்கொண்டு வந்தவன் மூவருமாக அமர்ந்து உண்டான்.

அதன் பின் அவனும் கிளம்பி, “கெளதம், எனக்கு ஒர்க் இருக்கு நீங்க அம்மா கூட வாங்க, நான் அங்க வந்து ஜோஇன் பண்ணிக்கிறேன்.”

“ஓகேப்பா.”

ஐராவை முறைத்துக்கொண்டே வெளியேறினான் அகில். அவன் முறைப்பை பார்த்தவள், ‘கோபத்தை கூட கன்டினு பண்ண தெரிலடா இடியட்.’ நேற்று இரவு இருவருக்குமான உரையாடல் நினைவு வந்தது. இன்றைய நிகழ்வு பற்றி இருவரும் பேசிக் கொண்டிருக்க, “கெளதமை நாளைக்கு கூட்டிக்கொண்டு போகலாம் ஐரா. அவனை எத்தனை நாளைக்கு இப்படியே வளர்க்க? அவனும் எல்லாம் தெரிஞ்சிக்க வேணாமா?”

“ஏன் இப்போ இவனுக்கு என்ன தெரியணும்னு நினைக்குற அகி?”

“வாக்குவாதம் பண்ண வேணாம் ஐரா. நாளைக்கு நான் அவனை கூட்டி போகலாம்னு இருக்கேன்.”

“நீ எப்டி?”

“நீ எப்டின்னா? நாந்தான் அவனுக்கு.”

“என்ன நாந்தான், அப்போ நான் யாரு அவனுக்கு?”

“இப்போ யாரு ஆர்கிவ் பண்றா?”

“உனக்கு ஏற்கனவே உன் லைப்க்குள்ள இருக்கு, இப்போ இவனையும் சேர்த்துக்கிட்டு இன்னும் பிரச்சினையை பெருசு பண்ணாத அகி.”

“நான் என்ன பெருசு பண்றேன்?” அமர்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்தவன், கையிருந்த தண்ணீர் போத்தலை நிலத்தில் தூக்கி அடித்தான். நல்லவேளை பிளாஸ்டிக் போத்தலாக இருக்க வெடித்து நிலத்தில் தண்ணீர்மட்டும் பட்டுத்தெரித்தது.

“என் லைப் பத்தி யோசிக்காதன்னு சொல்லிருக்கனா இல்லையா? எனக்கு என்ன பண்ணிக்கணும்னு தெரியும். உனக்கு என்ன வேணும், அதை எப்டி பண்ணிக்கணும்னு முதல்ல பாரு. திரும்ப திரும்ப அதே இடத்துல வந்து நின்னு என்னை டென்ஷன் பண்ணாத. யாரு என்ன சொன்னாலும் கேட்குறதில்ல, தனக்கு என்ன வேணும்னு அதையும் செஞ்சுக்க தெரில. இல்ல அட்லீஸ்ட் நான் சொல்றதையாவது கேட்குறியா சொல்லு”

“இப்போ நான் என்ன கேட்கல? இப்போவும் எல்லாமே உன் இஷ்டத்துக்கு தானே நடந்துட்டு இருக்கு.”

“சும்மா என்னையே சாக்கு சொல்லாத ஐரா. இன்னும் ஒரே வாரம் தான் இருக்கு. என்ன முடிவு பண்ணிருக்கன்னு சொல்லு. அதுக்குள்ள என்னையோ, கெளதமையோ யோசிச்சு உன் லைப்ல ஏதாவது சிக்கல் பண்ணுன…’ அவள் முன்னே தன் ஆட்காட்டி விரலை நீட்டி எச்சரித்தவன்,’அப்றம் நா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.”

“அவன் என் பையன். அதை நான் எப்படி விட்டுக்கொடுக்க முடியும்.”

“யாருடி உனக்கு விட்டுக்கொடுக்கச் சொன்னா? அதை வச்சு உனக்கு சிக்கல் பண்ணிக்காதன்னுதான் சொல்றேன். அவன் என்கூட இருக்கட்டும்.”

“நோ நாளைக்கு நாந்தான் அவனை என்கூட கூட்டி வருவேன்.”

“உன்னெல்லாம் திருத்த முடியாதுடி. என்னவோ பண்ணிக்கோ. எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும். நான் பார்த்துக்கிறேன்.” கூறியவன் தன் வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டான்.

‘இடியட்’ என அவனையே திட்டித் தீர்த்துக்கொண்டு விழா நடக்கும் இடம் வந்து சேர்ந்தாள் ஐரா. வண்டி விட்டிறங்கவுமே, “கெளதம்,அம்மா கூடவே இருக்கணும், ப்பா உள்ள இருப்பாங்க, சத்தம் போட்டுல்லாம் அங்க பேசக்கூடாது ஓகே.”

“ஓகே ம்மி.”

அன்னையின் கைபிடித்து ஒரு கை பாண்ட் பாகேட்டுக்குள் நுழைத்து அவன் நடக்க அத்தனை அழகாய் தெரிந்தான். பல கேமராக்கள் அவனை உள்வாங்கிக்கொண்டது.

இருவருமாக உள்ளே செல்ல அங்கே முன்னமே வந்து அமர்ந்திருந்தான் அகில் ரகுராம். “ம்மி அப்பா” என அகிலைக்காட்டினான் சின்னவன். “ஹ்ம்” என மட்டும் சொல்லியவள் அவளுக்கான இடத்தில் அமர்ந்தாள்.

அகில் இவர்களுக்கு முன்னே இருந்த வரிசையில் நான்கு இருக்கை தள்ளி இடப்பக்கமாக அமர்ந்திருந்தான். அதற்கு நேராக பின்னே இவள் வரிசையில் சத்யாவும் அமர்ந்திருந்தான்.

ஐராவின் அலைபேசியைக் கேட்டவன் அவளோடு சேர்த்து அவனை ஒரு செல்ஃபீ எடுத்து அகிலுக்கு அனுப்பினான்.

“கெளதம் என்ன பண்ற”

“நீதானே சத்தம் போடக்கூடாது சொன்ன. அதான் நாம வந்திருக்கோம்னு அப்பாகிட்ட சொல்றேன்ம்மி.” அகில் அலைபேசியை பாண்ட் போகேட்டின்னுள் சைலன்ட் மோடில் போட்டு வைத்திருக்க, அவன் அதை எடுக்கவே இல்லை.

இங்கிருந்து அவன் அலைபேசி எடுக்கும் மட்டும் அவனையே பார்த்திருந்தான் கெளதம். “ம்மி அப்பா பார்க்கவே இல்லை.”

“கெளதம் லுக் அட் ஹிம். அப்பா யார்கூடவோ பேசிட்டே இருக்காங்க, அப்றம் பார்ப்பாங்க.”

“ஹ்ம்” என முகத்தை சுலித்துக் கொண்டவன் ஒருமுறை அகில் சொல்லித்தந்த ட்ரிக்கை அவனுக்கே பயன்படுத்த எண்ணினான்.

தன் கையிரண்டையும் அகில் பக்கமாக நீட்டி மணிக்கட்டை சுழற்றி விரல்களையும் சுழற்றிக்கொண்டே ‘ப்பா லுக் அட் மீ.’ என இதழுக்குள் மிக மெதுவாக பலமுறை விடாது அழைத்தான்.

ஒரு முறை ஐரா கோவமாக அமர்ந்திருக்க, அவளை தன் பக்கம் திருப்பலாம் என அகில் இப்படியே செய்ய அவளும் சரியாக அந்நேரம் திரும்பியிருந்தாள். ஆக, அப்படிச் செய்ததால் தான் திரும்பினான் என அன்று நம்பியிருந்தான் கெளதம். இன்று இரு முறை செய்தும் திரும்பினான் இல்லை அகில். ஐரா அவளுக்கு அருகே அமர்ந்திருந்தவர்களோடு பேசிக் கொண்டிருக்க இவனை கவனிக்கவில்லை. ஐரா அந்தப்பக்கமாய் திரும்பியிருக்க இவனோ மெதுவாக இறங்கி அகிலிடம் சென்றிருந்தான்.

பின்னிருந்து அவன் கழுத்தோடு கையிட்டவன் “ப்பா” என அவன் கன்னித்தில் இதழ் பதிக்க, “ஹேய் கெளதம்” என அவனும் சற்றே திரும்பி இவனைப் பார்த்தான்.

“எவ்ளோ தடவை கூப்பிடறேன் பார்க்கவே இல்லப்பா.”

“எனக்கு கேட்கலயே கெளதம்.”

“நாந்தான் சத்தமா கூப்பிடவே இல்லையே. போனுக்கு மெசேஜ் கூட அனுப்பினேன், பார்க்கவே இல்லையே.”

“போன் சைலன்ட் போட்டிருக்கேன்டா.”கூறிக்கொண்டே அதை எடுத்துப் பார்த்தான். அனுப்பிய படத்தில் இருவரும் அத்தனை அழகாய் இருந்தனர். அகில் அதனைப் பார்க்க அவன் பின்னே அமர்ந்திருந்த சத்யாவும் அந்தப் புகைப்படத்தைத்தான் பார்த்திருந்தான்.

“அழகா இருக்கால்ல? “

“ஹ்ம் ஆல்வேஸ் ஷீ இஸ் ப்ரிட்டிப்பா.”

“ஹ்ம் உன்னைப் போலயே.”

“ஓகே ஓகே நான் போய் அங்க உட்கார்றேன் ம்மி பார்த்தா திட்டப்போறா.”

“ஓகே” என அவனை போகச் சொன்னவன் அவன் செல்வதை திரும்பிப்பார்க்க அப்போதுதான் சத்யாவைக் கண்டான்.

“ஹாய்”

பதிலுக்கு ஹாய் கூறிய சத்யாவோ போகும் கெளதமை பார்த்துக் கொண்டே “உங்கப்பையனா? இன்முகமாகவே கேட்டான்.

“யெஸ்” என பதிலளித்துவிட்டு அகில் முன்நோக்கி திரும்ப சத்யாவின் மனதிலோ பல கேள்விகள், ‘இவன் பையன்னும் சொல்றான், அவ என்னன்னா அவ பையன்னு சொல்றா. என்னதான் நடக்குது இங்க. அப்போ அன்னைக்கு இவன் கூட இருந்தது?’

ஐராவின் அருகே கெளதம் வந்தமர அவனையே பார்த்திருந்தவள், அவனை திட்டி என்னதான் செய்யவென,’நாராயணா என்னை கண்ட்ரோல் பண்ணு’ என்றுமட்டும் வேண்டியவளாக அமைதியானாள். அன்னை திட்டாததினால் ‘நாராயணா தப்பிச்சேன்’ உள்ளுக்குள் மகிழ்ந்தவன் பின் அவள் கை கோர்த்துக்கொண்டு அங்கே நடக்கும் நிகழ்வுகளையும், நபர்களையும் காட்டி கேள்விகளை கேட்டவண்ணமிருக்க, இவளும் அவனுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

இடையே ரகுராம் வர, அவரைக் கண்டவன், “ம்மி தாத்தா… “

“பார்த்தேன் கெளதம்.”

“நான் போய் பேசவா?”

“போறப்ப பேசலாம் கெளதம், இங்க டிஸ்டப் பண்ணக்கூடாது.”

எல்லாம் ரகசிய பேச்சு வார்த்தைத்தான். ஐராவிற்கு சிரிப்புதான் இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. இல்லையென்றால், கெளதமின் சத்தத்தை குறைக்க முடியாதே.

கெளதமோ அகிலை அழைக்கப் பயன்படுத்திய உத்தியை இந்த முறை ரகுராமை அழைக்கப் பயன்படுத்த திரும்பிப்பார்த்தார் அவர்.

சின்னவனோ கையை ஆட்டி அவரிடம் பேச, நீண்ட நாட்களின் பின்னே பேரனைக் கண்ட ஆவலில் அவரும் கையசைக்க ஐராவோ அவரை முறைத்தாள். சட்டென்று ரகுராம் திரும்பிக்கொள்ள இவளுக்குமே சிரிப்புதான்.

இமயம் குழுமத்திற்கான விருது வழங்க, ரகுராம் மேடை ஏறினார். பின் இப்போதைய வளர்ச்சிக்கு முழுக்காரணமும் தன் மகன் மட்டுமே எனக் கூறி அதை தன் மகனுக்கே கொடுக்கக் கூறினார். பின் அகில் ரகுராமை மேடைக்கு அழைக்க எழுந்தவன் பின்னிருந்த ஐராவை ஒரு முறை பார்த்துவிட்டே மேடை ஏறினான். இதை சத்யாவும் பார்த்துக் கொண்டேதான் இருந்தான்.

ஐராவின் முகத்தினில் தெரிந்த மகிழ்ச்சி அருகே அமர்ந்திருந்த சின்னவனின் துள்ளல் என அனைத்தும் அவனை ஏதோ செய்துக் கொண்டேதான் இருந்தது.

பின்னே இமாலயா கல்லூரிக்கான விருதுக்கு ஐராவை அழைக்க, அவளும் மேடையேறினாள்.

அவள் நடையும் உடல் மொழியும் அவள் முகத்தில் தெரிந்த திடமும் தைரியமும் அவள் அந்தக் கல்லூரியை தனித்து இயக்க சரியானவள்தான் எனக் கூறியது. ஒரு நற்பதைந்து மதிக்கத்தக்க பெண்ணாக இருக்கும் என்றே இமாலயாவின் உரிமையாளரை கண்டிராதவர்கள் எண்ணியிருக்க இவளோ தன் வயதுக்கே உரிய அழகோடும், அதை மிகைத்த தன் தலைமை மிளிர்வோடும் மேடையேறினாள்.

“எப்போதோ காத்திருந்த விருது இது. இன்றுதான் என் கைக்கு கிடைத்திருக்கிறது.” என கைக்கு கிடைத்த விருதை பார்த்துக் கொண்டே கூறியவள்,”இமயம் என்றாலே உயர்வு தானே. என்றும் அதனிடம் குறையப் போவதில்லை. அதைக்கொண்டு தான் எப்போதும் மாற்றையவைகளின் உயரம் மதிப்பிடப்படுகிறது. அந்தவகையில் நான் எப்போதும் முதலிடம் தான்.” என்று கூறினாள்.

பின்னர்,தன் கல்லூரி தலைமை பொறுப்பாளருக்கும் மாணவர்களை வழிநடத்திய குருவுக்குமே இந்த விருது எனவும் கூறினாள். அவள் கிழிறங்கி ரகுராம் அருகே வர அவரும் மரியாதை நிமித்தம் எழுந்து அவள் தலையில் கைவைத்து பாராட்டும் விதமாய் பார்க்க அவர் அருகே நின்றிருந்த ரங்கநாதன், “வாழ்த்துக்கள் மா.”

“உங்களுக்குத்தான் நான் சொல்லணும் சார். உங்க டீமாலதானே இன்னிக்கு இந்த விருது. கண்டிப்பா இதை இந்த நிலைக்கு கொண்டுவந்ததற்கு காரணம் நீங்கள் எல்லோரும் தான். கண்டிப்பா இதை கிராண்டா கொண்டாடறோம்.”

முகத்தில் அவள் சந்தோஷத்தின் அளவு அபட்டமாய் பிரதிபளித்தது.

பார்த்துக் கொண்டிருந்தவனுக்கோ அவள் அருகே சென்று வாழ்த்த முடியா சூழ்நிலை. இருந்த இருக்கையிலிருந்தே அவளைத்தான் அவளை மட்டும்தான் பார்த்திருந்தான். பெருமையோடு மனம் நிறைய.

தன் இருகைக்கு வந்தமர கெளதம் எங்கே என்று பார்த்தாள். அவனோ சத்யாவோடு கதைத்துக் கொண்டிருந்தான். அவள் தேடுவதை கண்ட சத்யா,”கெளதம், உங்க மம்மி தேடறாங்க உன்னை.”

“ஓகே அங்கிள், நான் போறேன்.” என எழுந்துக்கொள்ள ஐராவே அவர்கள் அருகில் வந்தாள்.

“என்ன கெளதம் இங்கே வந்துட்ட?”

“சும்மாதான் ம்மி.” என அவள் கையிருந்த விருதை எடுத்துப் பார்த்தான். “ம்மி அப்போவோடத்தை எனக்கு தரேன் சொன்னாங்க. ஆனால் அப்பாக்கும் ஒன்னு வேணுமே. சோ உன்னோடத்தை அப்பாக்கு கொடுக்கலாம் ம்மி.”

கெளதமின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அவன் பேச்சுக்கள் பிடித்த போதும் எப்போதும் எதிலும் அன்னை தந்தையை சேர்த்து பேசுவதை கேட்க ஏனோ பிடிக்கவில்லை.

“கங்கிறாட்ஸ் ஐரா.”

“தேங்க்ஸ்.”

அதன் பின் இருவரும் சகஜமாய் பேசிக்கொண்டார்கள். இந்த இரண்டு வாரக் காலத்தில் அவ்வப்போது நிகழும் சந்திப்புகள் சற்றே இருவரை பழைய நிலைக்கு திருப்பியிருந்தது. இடையே கெளதமை மறந்து. 

இடையே இருக்கும் கெளதம் மட்டுமே தடையாக இருப்பது நன்றாகவே உணர முடிந்தது சத்யாவுக்கு. ஆனாலும் என்ன செய்ய எப்படி இதை ஏற்றுக்கொள்ள? அதுவும் உள்ளுக்குள் யோசனைதான். விருது முடியும் தருவாயில் இருக்க ஒவ்வருவராக கிளம்பிக் கொண்டிருந்தனர். ஐராவோடு தெரிந்தவர் ஒருவர் வந்து கதைக்க,

அதனிடையே சத்யாவின் அருகே வந்த கெளதம், “அங்கிள் உங்களுக்கு எங்க மம்மிய பிடிக்குமா? “

அவன் அவ்வாறு சட்டென்று கேட்க, என்ன பதில் சொல்வான். “ஏன் அப்டி கேட்குற கெளதம்?”

இல்ல, எங்கப்பா சொன்னாங்க மம்மிக்கு உங்களை ரொம்ப பிடிக்குமாம்னு. உங்க போட்டோ எல்லாம் ஒன்ஸ் காமிச்சாங்க. அதுனாலதான் அன்னிக்கு உங்களை ஆபிஸ்ல பார்த்ததும் கண்டுபிடிச்சேன்.”

“ஓஹ் இஸ் இட்?

“ஹ்ம்… ஷீ லைக்ஸ் யூ லோட். உங்க ஐஸ்,அப்றம் ஸ்டைல் எல்லாம் ரொம்ப பிடிக்குமாம்.”

அவன் கூறிய விதமே தன்னை பற்றி அகில் எப்படியெல்லாம் கூறியிருக்கிறான் என்பதை காட்டிக்கொடுத்தது.

“ஓகே கெளதம், ஷால் வீ?” என ஐரா அவனை அழைக்க,

“அங்கிள் நீங்க இன்னும் நான் கேட்டதுக்கு அன்செர் சொல்லவே இல்லையே?” ரகசியமாய் கேட்டான்.

“எனக்கும் உங்கம்மான்னா ரொம்ப இஷ்டம் தான்.”

“இஸ் இட்?” இருக்கையில் எழுந்து நின்றவன் அவன் கன்னத்தில் இதழ் பதித்து, “எங்கப்பாக்கும் எங்கம்மான்னா ரொம்ப ரொம்ப இஷ்டம். எனக் கூறிவிட்டு இறங்கி ஐராவின் அருகே ஓடினான்.

இதற்கு என்ன பதில் சொல்வான். அவன் செல்வதையே பார்த்திருந்தான். அவன் அருகே வந்த அகில்,”என்ன சத்யா அப்டி பார்த்துட்டு இருக்கீங்க?”

“நதிங், சும்மாதான்.”

“நீங்க என்ன நினைக்குறீங்கன்னு என்னால உணர முடிது.’ அவர்கள் இருவரும் இருக்கும் இடத்தை சுற்றி ஒருதரம் யாரும் இருக்கிறார்களா என பார்த்த அகில்,

‘நான் இப்போ உங்ககிட்ட சொல்றது நீங்க நினைக்கிற கேள்விகளுக்கு விடையாகவோ முடிவாகவோ இருக்கலாம்.” என அவன் கூறியதை கேட்ட சத்யா அவன் கூறிய விதத்தில், “என்ன சொல்றீங்க நீங்க?”

“யெஸ் தெளிவா, வெளிப்படையா சொல்லிட்டா அதுல வேற கேள்விகள் வராது இல்லையா?”

சத்தியாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதை அவன் எதிர் பார்க்கவே இல்லையே.

“ஆனா எப்போவும் இதை நீங்க வெளில சொல்ல மாட்டிங்கன்னு நம்பிக்கைல சொல்லிருக்கேன். ஈவன் டு ஐரா.”

“பட், நான் எப்டி?”

“உங்களுக்கு அதை ப்ரூப் பண்ணனுமா?”

“சச்சே ச்சே அப்டில்லாம் இல்லை.”

“ஒன் மோர் திங், எப்போவும் ஹி இஸ் மை ஒன். அவனுக்கு அவனளவுல அவதான் அம்மா. அதுல எப்போவும் மாற்றம் இல்லை. பட் உங்களுக்கு இடைஞ்சலா அவன் இனியும் இருக்கப் போறதில்லை. நீங்க எடுக்குற முடிவுல அவனை சேர்த்துக்க வேணாம்.”

“ஆர் யூ சூர்?”

“யெஸ். பட் ஐராவுக்கு தெரிய வேண்டாம் எப்போவும்.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்க “ப்பா” என எப்போதும் போல அவன் கையில் தொற்றிக்கொள்ள அவனை ஒரு முறை சுழற்றி எடுத்தான் அகில்.

“ம்மி போலாம் சொல்றா, ஆர் யூ கமிங் வித் அஸ்?”

அகில் பதில் கூறும் முன்னமே,

“ரகு தாத்தா இஸ் தேர், ஷேல் ஐ ஸ்பீக் டு ஹிம்.”

ரகுராம் எங்கே என அகில் பார்க்க அவர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

“கெளதம்,தாத்தா ஏதோ முக்கியமா பேசிட்டு இருக்காங்க, நாம இப்போ அங்க வீட்டுக்கு போலாம்.”

“ஓகேப்பா.” எனவும் ஐராவும் அவர்கள் அருகே வந்தாள். சார் ஒரு கிளிக் என அங்கிருந்த போட்டோக்ராபர் கூற மூவருமாக நின்றனர்.

ஐராவின் அருகே சத்யா நிற்க அவன் அருகே அகில் அவன் கை பிடித்துக்கொண்டு கெளதம் என அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

அவன் செல்லவும் ஐரா என அழைத்த சத்யா அவளோடு ஓரிரு செல்ஃபீக்களை எடுத்துக் கொண்டான். அகில் மெதுவாக நழுவி கெளதமோடு பேசிக்கொண்டே பார்க்கிங்கிற்கு வந்திருந்தான். அவர்கள் செல்வதை கண்டுகொண்ட ஐராவும் பார்க்காதது போல இருந்துக்கொண்டாள்.

‘உனக்கு இதானே வேணும் அகி சோ ஐ வில்.’

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டே மெதுவாக நடந்து வந்தனர். “இப்டியே எவ்வளவு நாளைக்கு இருக்கப்போற ஐரா?”

“தெரில.”

“நான் வீட்ல பேசலாம்னு இருக்கேன்.”

“என்னன்னு?”

“கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு?

“யாருக்கு?”

“என்ன இப்டி கேட்குற? நமக்குத்தான்.”

“என்ன திடீர்னு?”

“திடீர்னு இல்ல, எப்போவோ தோணுனது தான், ஆனால் ஒரு முடிவை எடுக்க விடாம தடுத்துட்டே இருந்த சிக்கல் இப்போதான் க்லியர் ஆச்சு. சோ இனியும் எதுக்கு தள்ளி போடலாம்னுதான்.”

“உங்க பார்வைக்கு எப்டி தெரிஞ்சனோ அதே நாந்தான் எப்போவும் போல இப்போவும் இருக்கேன் சத்யா.”

 “ஐ க்நொவ் ஐரா. இனி என் பார்வை மாத்திக்கலாம்னு இருக்கேன்.”

“ஆர் யூ சூர்?”

“யெஸ்”

“இத்தனை நாள் மாதிக்காதது இப்போ திடீர்னு எப்டி?”என்றாள்.

“இப்போ மாத்திக்கிறது தான் நல்லதுனு தோணுது அதான்.”

முன்பு ஐரா பற்றிய எண்ணம் காலப்போக்கில் அவள் மீதான பிடித்தத்தில் மாறிப் போயிருந்தாலும் இத்தனை வருடம் அவன் எடுக்கவிருந்த முடிவை தள்ளிப்போடச் செய்தது அகில் கூறிய செய்தி என்பது ஐரா அறிந்திருக்கவில்லை. ஆனால் அகில் அதை நன்கு புரிந்துக் கொண்டான்.

இவர்கள் இருவரிடையே என்ன நடந்தது என்பது அவனுக்கு தெரியவில்லை. ஆனால் அது தன்னைக் கொண்டுதான் என்றிருக்க தான் தானே அதை சரிசெய்ய வேண்டும் என்றுதான் இன்று சத்யாவோடு கதைத்தான்.

ஐராவிற்கு அவள் பிடித்த வாழ்க்கை அமைந்தால் அது போதுமே அவனுக்கு.

அகிலின் காரில் முன்னே போனட்டில் கெளதமை அமர வைத்து பேசிக் கொண்டிருந்தான். அத்தோடு சில பல செல்ஃபீக்களும்.

அவர்களை நோக்கி வந்த ஐராவைக் கண்டவன் “ம்மி” எனஅழைக்க அவளும் அருகே வர அவள் கழுத்தில் கையிட்டு தன் அருகே இழுத்தவன் “ப்பா ஒன் மோர்.” எனவும் மூவருமாக ஒரு செல்ஃபீ.

இதனை புன்னகைத்தவாறே பார்த்திருந்தான் சத்யா.

“ம்மி,நாம ரகுதாத்தா ஹோம் போறோம்.”

“ஹ்ம்.” என்றவள் அகிலைப் பார்த்தாள்.நேற்று இருவருக்கும் ஏற்பட்ட உரையாடலுக்குப்பின் இன்னுமே இருவரும் ஒருவரை ஒருவர் பேசிக்கொள்ளவில்லை.

சத்யா இவர்களையே பார்த்துக்கொண்டிருக்க ஏதும் பேசாது தன் கண்ணாடியை கண்ணுக்கு மாட்டியவன் சத்யாவிடம் கூறிக்கொண்டு கிளம்பினான்.

அவன் வண்டியை கிளப்பி அவ்விடமிருந்து திருப்பிக்கொண்டு போகும் மட்டுமே அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் ஐரா.

அவனோ அவள் பக்கம் திரும்பவே இல்லை. என்னவோ தான் மட்டுமே தனிக்கப்பட்டதாய் உணர்ந்தாள் ஐரா.

அவள் முகவட்டத்தைக் கண்ட சத்யா,”ஹேய் என்னாச்சு?”

“நதிங்.”அவன் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள். “அப்போ நான் கிளம்புறேன்.”

“நான் வேணும்னா ட்ராப் பண்ணட்டுமா?” வேண்டாமென்று சொல்ல ஏதும் நினைப்பானோ என்றெண்ணி,”என் வண்டி இருக்கே.”

“டிரைவர்க்கு சொல்லி எடுத்துக்கலாம். பார்க்க டல்லா இருக்க நானே ட்ரோப் பண்றேன் வா.” என அழைத்துச் சென்றான்.

செல்லும் வழியில் அவனின் இடைப்பட்ட காலங்களில் நடந்த நிகழ்வுகள் பற்றி எப்போதும் போல பகிர்ந்துக் கொண்டான். நிறையப் பேசினான். ‘ஹ்ம்’ கொட்டிக் கொண்டே ஐரா வந்தாலும் ஏதும் அவள் மனதை எட்டவில்லை என்பதே நிஜம். திடீரென தன்னை எங்கோ இழுத்துச் செல்வதாய் உணர்ந்தாள்.

தனக்கு என்னதான் வேண்டும் என்பது அவளே அறியாத போது அகில் மட்டுமே எப்படி அறிந்து விலகிப்போகிறான்…

அகில் இரவு அவர்களது வீட்டிலேயே கெளதமோடு தங்குவதாக மெசேஜ் அனுப்பியிருந்தான். இது இப்போ சில நாட்களாக நடப்பதனால் அவளும் தனக்குள் ‘என்னவும் பண்ணிக்கோ’ என்றவள், அவனுக்கு பதில் அனுப்பவில்லை.

தன்னந்தனியே இரவின் இருளினை பார்த்திருந்தவளுக்கு அடுத்து வந்த குருஞ்செய்தி அவள் கடந்து போன மகிழ்ந்து கழித்த நாட்களை நினைவினில் கொண்டு சேர்த்தது.

அவளின் கல்லூரி கால புகைப்படம் ஒன்றிணை அனுப்பி,”கேன் யூ ரிமெம்பர் திஸ் டே.” எனக் கேட்டிருந்தான் சத்யா.

மறக்க முடியுமான நாட்களா அவை…

‘நான் உயிர்ப்போடு இருக்கவும் எனை மென்று தின்பதும் அவை தானே…’

 

தொடரும்…

இனி அடுத்த அத்தியாயங்கள் அவள் கடந்த நிகழ்வுகளோடு …