அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 18

IMG-20220619-WA0006-70737c2d

An-18

ஐரா, அகிலோடு எத்தனை சண்டை போட்டாலும் அனைத்து பகிர்தலும் அவனுடன் என்றாகியிருந்தது. வீட்டில் அன்னை, தந்தை, அண்ணன் தாண்டி அவனுக்கும் அவள் சம்பந்தப்பட்ட அத்தனையும் தெரிந்திருந்தது. ஐராவுக்கும் அப்படியே.

அத்தோடு அவனளவில் கூடுதல் உரிமை எடுத்துக் கொள்வாள்.

உடை, உணவிலிருந்து அவன் விருப்பங்கள் அவளுக்கும் பிடித்திருக்க அந்த உரிமையில் எப்போதும் அகில் முகம் சுழிக்கவோ, விருப்பம் இன்மை காட்டியதோ இல்லை.

அன்று வீட்டினர் மட்டுமே ஒன்று கூடி தங்கள் சந்தோஷத்தினை பகிர்ந்து கொண்டனர். ஐரா தாவணி அணிந்து அழகாய் இருந்தாள். சற்றே முகத்தில் மழலை சாயல் மறைந்திருப்பதாகவே வீட்டினர் பேசி அவளை பெரியமனுஷியாய் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் அகிலுக்கு என்னவோ சிறு பெண்ணை பெரிய மனுஷியாய் உருவகப்படுத்தி அவள் மழலையை மறைப்பதாகவே எண்ணினான்.

கிருஷ்ணாவும் கூட வீட்டில் சொல்லிவிட்டான். அவளை எப்போதும் போலவே விட்டுவிட வேண்டும். அவளே உணர்ந்து அவளை சரிப்படுத்திக்கொள்வாள் என்று.

அங்கே அனைவரும் பேசிக் கொண்டிருக்க கிருஷ்ணாவோடு கையில் வெள்ளை நிற பெட்டியொன்றோடு நுழைந்தான் அகில். இவள் அருகே வந்து அதனை திறக்க அதில் அவளிடம் இருந்த வகையான பூனைக்குட்டி ஒன்று.

“ஹேய்! “அத்தனை நாள் ஸ்நோவியை பிரிந்து வருந்தியிருந்தவள் இதன் வரவில் அதனை மறக்க முயன்றாள்.

இப்படியாக காலம் உருண்டோட வருடங்கள் ஐந்து கடந்திருந்தன.

அகிலின் சில செயல்களை ரம்யா கண்டிக்க ஆரம்பித்திருந்தார். அவன் முன்னே அவரோடு சண்டையிட்டு பின் அவனோடு பேசாதிருந்து ரம்யாவின் வார்த்தைகளை செய்ய வைத்திடுவாள் ஐரா.

கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் இருந்தவன் நண்பர்களோடு ஊர் சுற்றி நடுநிசி தாண்டி வரப் பழகியிருந்தான். அவ்வப்போது கிளப் சென்று வருவதாக ரகுராம் கூறியிருந்தார்.

இத்தனைக்கும் படிப்பில் சுட்டி. அவனை குறை கூறும் அளவில் இருக்கவே மாட்டான். பிழை செய்திருந்தாலும் கூட, ‘அட இவன் தானே பண்ணுனான் பரவாயில்லை’ என சொல்லும் அளவில் இருப்பான்.

இவர்கள் இப்படியிருக்க அங்கே தனியுலகில் லயித்திருந்தார்கள் இருவர். கிருஷ்ணா மற்றும் அகிலின் அக்கா அனன்யா.

காதலா என்றால் அவர்களே இல்லை என்பார்கள். ஆனால் இருவரிடையே உருவாகியிருந்த நேசம் அவர்களின் புரிதல் பார்ப்பவர்களுக்கு அத்தனை இனிமையாய் இருந்தது.

இடையில் இரண்டு வருடங்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றுவந்திருந்தாள் அனன்யா.

அவள் தந்தையின் தொழிலை எடுத்து நடத்தும் விதமும் சாமர்த்தியமும் ரகுராமிடம் இருந்து வந்தது என்றால் அதற்கு துணையாய் மொத்தம் இருந்தது கிருஷ்ணா.

திருமணத்தை பிற்போட்டுக் கொண்டே இருக்க இருவருக்குமான உறவை இன்னும் பிணைக்க நந்தன் விரும்பியப்போது ஒருமுறை ரகுராமோடு பேசியும் இருந்தார். அத்தோடு ரகுராமிற்கு சற்றே அதில் பிடிப்பில்லை. முகத்தில் காட்டாவிட்டாலும் நந்தன் உணர்ந்து கொண்டார். அதனாலேயே அந்தப் பேச்சினைப் பற்றி ரகுராமோடு அதன் பிறகே கலந்துகொள்வதில்லை.

ஆனாலும் மகளோடு ரகுராம் தன்னுடைய விருப்பமின்மையை வெளிப்படையாகவே காட்டியிருந்தார். பெரியதொரு நட்புவட்டத்தில் அவளுக்கு பெண் கேட்டிருப்பதாகவும், அவருக்கும் அதுவே சரியாக அமையும் என்றும் கூறியிருந்தார்.

தந்தையின் பேச்சில் கண்ட உறுதி சற்றே மனதை கொஞ்சம் கலங்கச் செய்ய கிருஷ்ணாவோடு பேசியிருந்தாள் அனன்யா. இரு வீட்டுப் பிள்ளைகளும் ஏனோ பெற்றோரை தாண்டி முடிவெடுக்கும் அளவில் வளர்ந்திருக்கவில்லை.

குடும்பங்கள் இரண்டினதும் பிணைப்பு தங்கள் இணைவால் முறிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த கிருஷ்ணா ரகுராமோடு நேரடியாகப் பேசினான்.

தன் மகள் இத்தனை திறம்பட தங்கள் கம்பனியை நடத்த முதல் மூலமே இவந்தான் என்பது நன்று தெரிந்தவர் இவரும், அகிலும் மட்டுந்தான்.

நட்பு தொடர்ந்திட வேண்டுமெனில் குடும்பமாகிட தொழிலில் பிரச்சினைகள் வரலாம் என அதையே காரணம் காட்டி மறுத்தார் ரகுராம். சரி விட்டுப்பிடிக்கலாம் என இன்னும் சில மாதங்கள் காத்திருந்தனர் இருவரும். ஆனாலும் விதியோ அதையெல்லாம் பார்க்கவில்லை.

***

“கிருஷ்ணா”

“சொல்லும்மா என்னாச்சு?”

“இல்ல, நீ வர லேட் ஆகுமா என்ன?”

“இன்னும் ஒரு ஒன் அவர்ல வந்துருவேன்மா. ஏதும் வேணுமா?”

“இல்ல, அப்பா ஆபிஸ்ல இருந்து வந்து சரியா பேசவே இல்லை. நம்ம ஐராவை வேற திட்டிட்டாங்க.”

“என்ன சொல்ற?” தன் அப்பா தங்கையை திட்டினாரா கேட்கவே வியந்து போனான் கிருஷ்ணா. ஆனாலும் ஏதோ நடந்திருக்க வேண்டும். அன்னையை இன்னும் பயப்பப்டுத்தாது, “சரிம்மா இதோ நான் வந்துட்டே இருக்கேன்.” எனக்கூறி அழைப்பை துண்டித்தான். 

“வீட்ல ஏதோ ப்ரோப்லம்னு நினைக்குறேன் அனி. கிளம்பலாம்டா.”

அனன்யாவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணா கைக்கு மேசையிருந்த சாவியை எடுத்துக்கொண்டே கூற,

“என்னாச்சு கிருஷ்?”

“தெரிலடா போய்தான் பார்க்கணும், அப்பா ஏதோ டென்ஷன்ல இருக்காங்களாம்.”

அவனோடு அவளும் வண்டியில் ஏறி அமர்ந்து,”என்னை வேணாம் சொல்லுவியா கிருஷ்? வேற யாறையாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிருவியா கிருஷ்?”

“ஹேய் என்னாச்சு, அப்டில்லாம் ஒன்னும் இல்ல. அவர் ஏதோ ஆபிஸ் டென்டஷன்ல இருக்கார்.”

அவள் கலங்கிய கண்களோடு காண சகியாதவன் அவள் பக்கமாக திரும்பியமர்ந்து கன்னங்களை கைகளில் ஏந்தி, “என்னடி இது. நம்மளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு ஞாபகம் இருக்கா?”

“கிருஷ், அது சும்மா…”

“அடியே என்ன விளையாடுறியா? நாலு சுவருக்குள்ள தாலி கட்டிட்டேன் யாரும் பார்க்கலன்னு, சும்மான்னு சொல்ற?”

“கிருஷ்…” என அவனை அணைத்துக்கொண்டாள்.

“ஹேய் பொண்டாட்டி,பார்க்கத்தான் பெரிய மனுஷி, பாப்பா போல நடந்துக்குற.”

“உங்கப்பாக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க, அவங்களை மதிக்கலன்னு நினைப்பாங்க.”

“நான் அன்னைக்கு சொன்னதை நீ இன்னிக்கு சொல்ற. ஜஸ்ட் நான் உனக்காக, உன் நம்பிக்கைக்காக பண்ணிக்கிட்டது அனன்யா. ஆனாலும் அது நிஜம் தானே? நம்மளைத் தவிர யாருக்கும் தெரியாது. அவங்க தெரிஞ்சுக்க நாமலே சொன்னாதான் உண்டு. அதோட என்னால ரெண்டாந்தரமா இன்னும் யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.”

“உனக்கு அந்த ஐடியா வேற இருக்கா? நம்ம கல்யாணம் முடிஞ்சப்புறம் நாம வீட்ல சொல்லிரலாம் கிருஷ். இல்லன்னா நம்மளுக்கு தான் அது கஷ்டமா இருக்கும்.”

“ஹ்ம் சொல்லிரலாம். இப்போ கிளம்பலாம். என்ன பண்ணிவச்சிருக்காளோ தெரில, காலேஜ் சேர்ந்ததுல இருந்து ஒரு மார்க்கமா தான் இருக்கா.”

“சேர்ப்பு சரியில்லை கிருஷ்.”

“உன் தம்பிடி.”

“என் தம்பின்னாலும் தப்புன்னா தப்பு தானே.”

“அவன் தப்பு பண்றான்னு நான் சொல்லவே இல்லையே.”

“அவன் தப்பு பண்றான் கிருஷ். கேட்டா மட்டும் நல்லப்பிள்ளையா இனியே பண்ண மாட்டேன் ரேன்ஞ்சுக்கு மூஞ்ச வச்சுப்பான்.

அப்றம் ஏஸ் யூசுவல்.”

“சரி விடு. அவன் எப்போவும் தப்பா இருக்க மாட்டான். ஐ க்நொவ் ஹிம் பெட்டர்.”

“உன்னாலதான் இவ்ளோ ஆகிருக்கான். வயசுக்கு ஒரு மரியாதை வேண்டாம். எனக்கு கொடுக்குற மரியாதை பாதிக்கூட உனக்கு தரல.”

“திடீர்னு போய் அவங்கிட்ட கேட்டா மரியாதைக்கு அவன் எங்கப் போவான்? எவ்ளோ சந்தோஷமா இருக்கோம். இது எப்போவும் இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கோ. அது போதும். இருக்க வரைக்கும் தானே எல்லாமே.”

“போதும் ராசா நிறுத்திக்கோ. விட்டா தாத்தாக்கு தாத்தா ஆய்டுவியே. உன்கிட்டெல்லாம் பசங்க எப்படித்தான் படிக்கிறாங்களோ.”

“ஏன்டி என் கிளாஸ் வந்து ஒரு நாளைக்கு உட்கார்ந்து பாரேன்.”

“நா உட்கார்ந்ததும் நீ பாடம் எடுப்ப? அதை நான் நம்பனும்.”

“நல்லா பாடம் எடுப்பேன் டி. அதுல எல்லாம் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.”

“ஆமா ஆமா…நீ ஸ்ட்ரிக்ட். அதான் தெரியுமே…” சிரித்துக்கொண்டே கூறினாள்.

“ஹேய்! நான் வேற அர்தத்த்துல சொல்லல.

“நானும் வேற ஒன்னும் சொல்லலப்பா.”

இருவரும் பேசிக்கொண்டே வீட்டுக்கு வந்திருந்தனர்.

வாயிலில் தன் தாயைக் கண்டவன் அவர் முகத்தில் தெரிந்த பதற்றத்தில் அவர் அருகே வந்து அமர்ந்தான்.

“ஹேய் அனன்யா! நீயும் சேர்ந்தா வந்திருக்க? வா வா.”

“என்னாச்சு அத்த? இப்டி உட்கார்ந்து இருக்கீங்க? “

“டேய் கிருஷ் நாந்தானே திட்டுவேன் அவளை. இன்னிக்கு வந்ததும் அவரே திட்றார், அவளும் நல்லா பயந்துட்டா. ரூம்குள்ள போனவதான், இன்னும் வெளில வரல.”

“சரிம்மா நான் போய் என்னன்னு பார்க்குறேன்.”

“அவ போன அப்பாகிட்ட எதுக்கோ கொடுத்திருந்தா போல. அதுல ஏதோ பார்த்துட்டு தான் திட்றார். நீ போய் உனக்கும் சேர்த்து திட்டப்போறார். நீ தானே வாங்கிக்கொடுத்த.”

“சரி நீங்க போய் எனக்கு சூடா ஒரு டீ போட்டுத் தாங்க, நா என்னனு பார்த்துட்டு வரேன். “

“அத்த வாங்க நான் போடுறேன், எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.”

“டீ க்கே ஹெல்ப்பா?” கேட்டவன் அனன்யாவிடம் சைகையில் ‘என் நிலை அவ்ளோதான்.’என கூறிவிட்டு மாடியேறினான்.

அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே செல்ல,

“கிருஷ்ணா டோர் லாக் பண்ணிடு.”

“என்னாச்சுப்பா? ஐராவை எதுக்கு திட்டுனீங்க?”

“தப்பு பண்ணுனா ப்பா கேட்க கூடாதா? “

“அப்டில்லாம் இல்லப்பா. அவளைத்திட்டுனதே இல்லையா அதான்.”

“அவ பண்ணின தப்பை விட அவ அண்ணன் பண்ணுன தப்புக்கு சப்போர்ட் பண்ணுனது தான் கஷ்டமா இருக்கு.”

“ப்பா… ப்பா நானே உங்ககிட்ட சொல்லலாம்னு தான் இருந்தேன்.” தந்தையிடம் மறைத்தது இவர்கள் காதல் ஒன்று மட்டுமே, அதனால் அதை பற்றித்தான் கூறுகிறார் என்பதை புரிந்துகொண்டான்.

“ரகு அங்கிள்க்கு கொஞ்சம் இதுல விருப்பம் இல்லை. அதான் நம்மலால குடும்பத்துக்குள்ள பிரச்சினை வந்துரக்கூடாதுன்னு அவங்ககிட்ட பேசி பார்த்துட்டு சொல்லலாம்னு.”

“அப்போவும் பிடிக்கலைன்னா திருட்டுத்தனமா பண்ணிப்பீங்களா? “

“னோ னோ அப்டில்லாம் ஏதும் பண்ண மாட்டேம்பா. நம்ம வீட்லயே பொண்ணு வச்சிட்டு. சாரி ப்பா.”

“ஹ்ம் சரி, நா பேசிக்குறேன் ரகுகூட.” அலைபேசியில் பார்த்தது 

பற்றி கூறவில்லை.

“சரிப்பா.” என்றவன் தனக்கு ஏதோ சார்பாக பேசச் சென்று தந்தையிடம் திட்டுவாங்கிக்கொண்டாள் தங்கை என ஐராவிற்காக மனம் வருந்தினான்.

அலைபேசியின் டிஸ்பிலே உடைந்ததாக தந்தையிடம் மாற்றக் கூறியிருந்தாள் ஐரா. இன்று வரும் போது அது சரிசெய்யப்பட்டு அவர் கைக்கு வர தந்தை தோள் அணைத்து டிஸ்பிலேயில் சிரித்த தனது மகளின் முகத்தை பார்த்து வாஞ்சையாய் தடவிக்கொடுக்க அதுவோ கேலரியை திறந்து கொடுத்தது. முழுதும் அவளும் அவள் பூனைக்குட்டியும் நிறைந்து கிடக்க மீதி மொத்தம் அகிலோடும் வீட்டினரோடும். அதிலே ஒரு வீடியோ.

மகள் என்றாலும் பெண் என்பதால் திறந்து பார்ப்பது முறையில்லை என்று நினைத்தாலும் அந்த வீடியோவில் கிருஷ்ணா அனன்யாவின் கழுத்தில் மாலை இடுவது போல தோன்ற சட்டென அதைத் திறந்தார்.

அவர்களுக்கே தெரியாமல் ஒளிந்து படம் பிடித்திருக்கிறாள் போல. பார்த்ததும் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் பேசுவதும் தெளிவாக இருக்க, பிள்ளைகள் இத்தனை பிணைந்த பின் அவர்கள் காதல் வாழ்க்கையை அழகுபடுத்த, தானே ரகுவோடு பேசவேண்டும் என்று முடிவு செய்தார். இருவரும் தப்பானவர்கள் இல்லை. அனன்யாவின் பயத்தை போக்கவே கிருஷ்ணா செய்திருந்தாலும், ஏதோ ஒரு கட்டத்தில் ரகுராம் மறுக்க என்னாகும் எனும் யோசனையும் கூட. அத்தோடு ஐராவின் மேல் அளவு கடந்த கோபம், அவர்களை விட எத்தனையோ வயது சிறியவள் அவர்கள் அங்கிருக்க இவள் அவர்களின் அறையில், அத்தோடு அவர்கள் பேச ஆரம்பிக்கவுமே வெளியில் வந்திருக்கவேண்டும். அத்தோடு போனை சரிசெய்தவர் இதைப் பார்த்திருந்தால் என்னாகியிருக்கும்?’ சற்றே கண்டிக்க நினைத்தார். அனைத்திலும் விளையாட்டுதனம்.

நந்தன் வீட்டுக்குள் நுழையவுமே ஐராவை பேசிவிட்டார். அவள் உரையாட ஆரம்பித்த பின் இவரால் கோபம் காண்பிக்க முடியாமல் போகும் என்பதே அதற்குக் காரணம்.

அவரின் அதட்டலான பேச்சிலேயே அவள் நடுங்கிப்போக,

“நந்து என்ன இது?”

அவரைத் திரும்பி முறைத்தவர் “வா எங்கூட.” ஐராவைக் கூறிவிட்டு விருவிருவென மாடியேறிவிட்டார். அவர் பின்னே கலங்கிய கண்களோடு ஐரா உள்ளேச் செல்ல அவள் கைகளில் அவளது அலைபேசியை கொடுத்தார்.

“ஐரா…”

“ப்பா…” மகளின் வார்த்தையில் மனம் இளகினாலும்,

எதுக்கு போன் வாங்கி கொடுத்திருக்காங்க, அடுத்தவங்க பர்சனல் சேவ் பண்ணி வச்சிருக்கவா? நான் பார்ததையே அம்மா பார்த்திருந்தா?”

“என் போன் யாரும் இதுவரைக்கும் எடுத்ததில்லைப்பா.”

“அதான் தப்பு.” அவள் முன்னே அந்த வீடியோவை போட்டு காண்பித்தார்.

“ப்பா நான் இது அகிக்கு காமிக்க எடுத்தேன். தப்பா ஏதும் இல்லை.”

“நீ எதுக்கு அவங்க ரூம்குள்ள போன? தவறுதலாக இன்னிக்கு போன் ரிப்பேர் செய்றவங்க யாரும் இதைப் பார்த்திருந்தா என்னாகும்?

அப்பாகிட்ட வந்து சொல்லணும்னு கூட உனக்கு தோணலை.”

“அது அவங்க…நா எப்டி உங்ககிட்ட அதான்…”

“சாரிப்பா, இதோ இப்போவே அழிச்சிர்றேன்.”

தேம்பித்தேம்பி அழுதாள்.

அவள் அருகே அவரும் வந்து அமர்ந்துகொள்ள, மகளின் கன்னத்தை நனைக்க கண்ணீர், “அப்பாக்கு அந்த வீடியோ பார்த்ததும் கோபம் அதான் கொஞ்சம் சத்தமா பேசிட்டேன்.”

“நான் தப்புதான்ப்பா சாரி இனிமே சரியா நடந்துப்பேன்.” தந்தையின் பேச்சு மகளை அத்தனை காயப்படுத்தியது.

‘அமைதியாகவே பேசியிருக்கலாமோ, அதட்டுகிறேன் என்று அழ வைத்துவிட்டேனே.’ நந்தனுக்கும் கவலை.

‘இந்த வீடியோவுக்குப் போய் என்னை சத்தமா பேசிட்டார்ல. அவங்க பண்ணுனது தப்பில்ல, நாம வீடியோ எடுத்தது தப்பு.’

உள்ளே தேநீரோடு ரம்யா நுழைய, அன்னை முகம் பார்க்க வெட்கிய மகள் குனிந்த தலை நிமிராது எழுந்து சென்றுவிட்டாள்.

“என்னாச்சுங்க, அழுரா?”

சரியாயிடும், அவளைப்போய் என்னனு கேட்டுட்டு இருக்காத. நான் பேசி முடிச்சிட்டேன்.”

“எங்கிட்ட மறைக்கிற அளவுக்கு என்ன? நா அவ அம்மா தானே?”சுமித்ரா கேட்க,

“அதெல்லாம் பெருசா ஒன்னும் இல்லை. அப்பா பொண்ணுக்குள்ள ஒரு பிரச்சினை, சரிபண்ணிட்டேன்.”

“அப்போ தனியா கூப்டு பேசியிருக்கணும், இப்டி நடு வீட்ல வச்சு தான் சத்தம் போடுவீங்களா? இத்தனை நாள் காட்டுன பாசத்த போட்டு உடைச்சிடீங்கல்ல”

” டீ… நீ வேற ஏன்டி, நானே டென்ஷன்ல இருக்கேன்.”

“என்னவோ பண்ணுங்க.” கூறிக்கொண்டே ஐராவின் அறைக்கதவை தட்டினார், “ம்மி நானே கொஞ்ச நேரத்துல வறேன்.”

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் ஒருமணிநேரம் ஆகியும் அவள் வெளியே வராததால் கிருஷ்ணாவை அழைத்திருந்தார்.

கிருஷ்ணாவும் கதவை தட்ட திறக்காததால் யன்னல் வழியாக சென்று பார்க்க அவள் அறையின் இருக்கவேயில்லை. அனன்யாவை அழைத்து விடயத்தைக் கூற, அவளோ அகிலில் அறையில் சென்று பார்த்தாள்.

“இங்க தூங்குறா கிருஷ்.”

“ஹ்ம் சரி இருக்கட்டும். அவன் வந்தா சரியாயிடுவா.”

மணி ஒன்பதை தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. இரவுணவை மூவருமாக அமர்ந்து உண்டனர், அப்போதும் ஐரா வந்திருக்கவில்லை.

நந்தன் யோசனையாக இருப்பதைப் பார்த்து,

“ப்பா, அவ அகில் கூட இருக்கா. நல்லாத்தான் பேசிட்டிருக்கா. அவ புரிஜிப்பா.”

“ஹ்ம். யாருமேலயோ இருக்க கோவத்த அவமேல காமிச்சுட்டேன்.”

“சாரிப்பா என்னாலதான்.”

“னோ னோ. பார்த்துக்கலாம்.”

“என்ன என்னாச்சு, எங்கிட்ட என்னவோ மறைச்சு பேசுறீங்கல்ல.”

“அதெல்லாம் ஒன்னில்ல. கிருஷ்ணா நீ போய் ஐராவை பார்த்துட்டு வந்துரு.”

அங்கே ஐராவோ அகிலின் அறையில் நன்றாக உறங்கியிருந்தாள். ஏழு மணி போல அகில் வீடு வந்தான். அன்னையிடம் நன்றாக திட்டு வாங்கிக்கொண்டு தனதறைக்கு வந்தவன் வந்த வேகத்தில் கட்டிலில் குப்புற விழ தலையணைக்குள் முகம் புதைத்து கால் மடக்கி உறங்கியிருந்தவள் அவன் செய்கையில் திடுக்கிட்டு விழித்தாள்.

அவன் கை அவள் மேல் இருக்க, “அகி, கை எடு வலிக்குது. அவன் கையை தள்ளிவிட்டுக்கொண்டே கூறினாள்.

“ஹேய் நீ இங்க என்ன பண்ணுற?”

கண்ணைக் கசக்கிக்கொண்டே எழுந்து மடியில் தலையணை வைத்துக்கொண்டு சம்மனமிட்டு அமர்ந்தாள். “ஏன் நீ இவ்ளோ லேட் ஆன வர்றதுக்கு?”

“அது நாம கொஞ்சம் இன்னிக்கு அவுட்டிங் போயிருந்தோம்.”

“ஓஹ்!”

“ஸ்டே பண்ணலாம்னு தான் நினச்சேன் ஆனா ஏதோ வீட்டுக்கு போகணும்னே மனசுக்குள்ள சொல்லிச்சா அதான் வந்துட்டேன். காலைல நல்லா தானே இருந்த இப்போ எப்டி கால்டு வந்துச்சு தொண்டையெல்லாம் கட்டிருக்கு.” கூறிக்கொண்டே குளியலறைக்குள் சென்று முகம் கழுவி உடை மாற்றிக்கொண்டு வந்திருந்தான்.

அப்போதுதான் அவள் முகம் சிவந்து கண் இமைகள் தடித்திருப்பதைக் கண்டான்.

“ஹேய் என்னாச்சு?”

அவன் அவள் அருகே அமர அவன் மடி சாய்ந்து இடை கட்டிக்கொண்டவள், “அப்பா திட்டிட்டார் அகி.”

“அப்பா திட்டினாங்களா? நீ என்ன பண்ணுன?”

“நான்…’இடை நிறுத்தியவள் அவன் முகம் பார்க்க,”என்னத்த பண்ணிவச்ச அவர் திட்றளவுக்கு?”

“அது வந்து … உனக்கு காமிக்கலாம்னு அன்னிக்கு அண்ணா ரூம்குள்ள…”

“திரும்ப எக்ஸாம் பேப்பர்ஸ் எடுக்க போனியா?” எழுந்து அவன் வாயை அவசரமாக மூடியவள்

“ஷ்… எதுக்கு சத்தமா பேசுற? அன்னிக்கே சொன்னேன்ல இதுக்கப்றமா நான் அப்டி பண்ண மாட்டேன் யாருக்கிட்டேயும் சொல்லாதன்னு. அது மட்டும் தெரிஞ்சா அண்ணாவும் சேர்த்து எங்கூட பேச மாட்டாங்க.” அழுதேவிட்டாள்.

“சரி சரி, எதுக்கு அழுற. அவள் கண்களை துடைத்தவள், சரி வேறெதுக்காக திட்டுனாங்க?”

“அன்னிக்கு நான் அண்ணாக்கு எல்லாருக்கும் முன்ன விஷ் பண்ணலாம்னு ரூம்குள்ள போய் ஒளிஞ்சேனா,”

“நாம எல்லாம் சேர்ந்து தானே போனோம்?”

அதுக்கு முன்னாடி நா போயிருந்தேன். அப்போ அனியும் அண்ணாகூட வந்தாங்களா…”

“அப்றம்,”

“இல்ல நா ரூமவிட்டு வந்துரலாம்னு தான் நினச்சேன், ஆனா அப்போ வெளில வந்தா தப்பா எடுத்துப்பாங்களோன்னு அப்டியே இருந்தேன். அப்போ அனி ஒஹ்ன்னு அழுகை.”

“அதான் அன்னிக்கு அவ்ளோ முழிச்சிட்டு நின்னாங்களா ரெண்டு பேரும்.”

“அப்போ ரெண்டு பேரும் ஒருவிஷயம் பண்ணிக்கிட்டாங்க.”

“நீ அப்போவே வெளில வந்திருக்கணுமா வேணாமா?”

“இல்ல, அப்றமா எதாவது பிரச்சனைனு வந்தா சாட்சியா வச்சுக்கலாம்னு தான் வீடியோ பண்ணுனேன்.”

“எரும எரும உன்ன…”அவள் தலையிலேயே கொட்டியவன் எத வீடியோ எடுக்கணும்னு விவஸ்தையே இல்லையா? அண்ணாவ போய்…”

“அகி ஏன் அடிக்கிற உங்கிட்ட காமிக்கலாம்னு தான் பண்ணுனேன்.”

“அடியே அதுல நான் பார்க்க என்ன இருக்கு.”

“இல்ல அவங்க லவ்வுக்கு ரகுப்பா ஏதாச்சும் வில்லங்கம் பண்ணுனா இதவச்சு காப்பாத்தலாம்னு தான்.”

அவன் அலைபேசியை எடுத்து என்ன வீடியோ என பார்த்தான்.

அப்பாகிட்ட அப்போவே டெலீட் பண்ணிட்டேன் சொல்லிட்டு போன தூக்கிட்டு இங்க ஓடி வந்துட்டேன்.

“கேடி…’கூறிக்கொண்டே கண்ணை பாதி திறந்துக்கொண்டு வீடியோவை ஓடவிட்டான்.

கிருஷ்ணா அனன்யா கையில் இருந்த பாக்ஸில் இருந்து கைக்கு எடுத்த தாலியைக் கண்டவன், அதிர்ந்து மீதி மொத்தக் கண்ணையும் திறக்க அனன்யாவின் கழுத்தில் போட்டு அவள் நெற்றியில் இதழ் ஒற்றினான்.

“அடியே என்ன பண்ணி வச்சிருக்கான் இந்த சீனியர்.”

“உங்கக்கா தான் ரகுப்பா வேறயாருக்காவது கல்யாணம் பண்ணி வச்சுருவார்னு ஒரே அழுகை அதான்.”

“அதுக்காக, இப்படி யாருமில்லாம”

“அது அவங்க மன திருப்திக்காக. யாருக்கும் தெரியாதில்லையா? ஏதாவது பிரச்சினை ஆச்சுன்னா சொல்வாங்க இல்லனா அவங்களுக்குள்ளேயே வச்சுப்பாங்க.”

“இத மட்டும் நல்லா தெளிவா பேசு. ரெண்டும் இந்த கொஞ்ச நாளாவே முழிக்கிற முழியே சரியில்லன்னு நினச்சுட்டே இருந்தேன், சீனியரும் ஏதோ சொல்ல வர்றதும் மலுப்புறதுமாவே இருக்கார். இதான் விஷயமா.”

“சரி அப்பா எதுக்கு திட்டுனாரு உன்ன? “

“அது என் போன் ரிப்பேர் ஆச்சுல்ல அப்பா இன்னிக்கு போன் எடுத்துட்டு வர்றப்ப இதை பார்த்துட்டாங்க.”

“இடியட்,ரிப்பேர் பண்றவங்க பார்த்திருந்தா?”

“அதான் அப்பாவும் சொல்லி திட்டுனாங்க. நீ அன்னிக்கே வீட்ல இருந்திருந்தா காமிச்சிட்டு டெலீட் பண்ணிருப்பேன். நீ தான் இப்போல்லாம் என்னை பார்க்கவே வர்ரதில்லையே. அதான் இப்டி ஆச்சு.”

“ஆனால் அப்பா என்னை…”

“ஐய, எனக்கே கோவம் வருது அப்பாக்கு பார்த்ததும் எப்டி இருந்திருக்கும் அதான்.”

“தனியா கூப்டு கேட்க வேண்டியதானே, அம்மா முன்னாடி சத்தம் போட்டாங்க”

“சோ வாட். அம்மா தானே.”

“கஷ்டமா இருக்கு.எப்போவுமே இப்டி பேசுனதே இல்லை. பாரு இன்னும் சாப்பிட கூட இல்ல. எனை யாரும் தேடி வரக்கூட இல்ல.”

“அதெல்லாம் தேடி வந்துட்டுதான் போறாங்க. மேடம் நல்லா தூக்கம். எழுப்ப வேணாமேன்னு போய்ட்டாங்க.” கூறிக்கொண்டே அனன்யா அவளுக்கு உணவு எடுத்துக்கொண்டு வந்தமர்ந்தாள்.

“முதல்ல சாப்பிடு. அவளே ஊட்ட அமர்ந்திருந்தவாறே உண்டு முடித்தாள்.

“காலைல மீட்டிங் இருக்குன்ன இன்னும் தூங்காம என்னபண்ற?”

“ஹ்ம், நா தூங்குறேன் இவளை கொண்டுபோய் விடு, அங்கிள் பார்த்துட்டு இருக்காங்களாம்.”

ஐராவோ அவன் கட்டிலிலேயே மீண்டும் சாய்ந்துகொண்டாள். இவனும் அருகே ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு சாய்ந்து அவளை தட்டிக்கொடுக்க அப்படியே உறங்கினாள். ‘காலேஜ் போக ஆரம்பிச்சாச்சு இன்னும் குழந்தை குணம் மாறல.’ பெருமூச்சொன்றை விட்டவனாய் எழுந்து சென்று சோபாவில் உறங்கினான்.

நந்தன் ரகுராமோடு கதைக்க அவரோ முதலில் சொன்னது அவர் தரத்திற்கு ஏற்றார் போல அவர்களது கம்பனியை கிருஷ்ணா நடத்த வேண்டும். இப்போதும் நடத்திக்கொண்டுதான் இருக்கிறான். ஆனாலும் கல்லூரியில் பேராசியராக இருப்பதையே மிகவும் விரும்பி செய்கிறான்.

தரத்தில் எப்போதும் உயர்வு தான், ஏதோ தடுக்க வேண்டு மென்பதற்கான காரணங்கள் அடுக்கினார்.

“அவன் வேலையை விடுவானா தெரில. ஆனா என் கம்பனியகி ருஷ்ணா தான் நடத்துறான். சோ முழுசா பண்ணுனு சொன்னா மறுப்பு சொல்ல மாட்டான் ரகு. எனக்கு பசங்க வாழ்க்கை தான் முக்கியம். பணம் புகழ் எல்லாம் நிரந்தரம் கிடையாது. கண்டிப்பா நாம சேர்த்து வச்சதாலதான் அவங்க இன்னிக்கு நிம்மதியா இருக்காங்க. அதே அவங்க பசங்களுக்கும் பண்ணிருவாங்க. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை இல்லையே. என்னை போல உன்னை போலயே சந்தோஷமா இருக்கட்டும். பசங்க தப்பு பண்ணுனா கண்டிப்பா நாம திருத்தலாம். ஆனா அவங்க முடிவை மாற்ற நினச்சு, அதற்கு பிறகு அவங்க எடுக்குற முடிவு நம்மளை ரொம்ப பாதிக்க வச்சுரும் அதான். நந்தன் பேசப் பேச பல யோசனைக்கு பின்னர் ஒப்புக்கொண்டார் ரகுராம்.

இரண்டு வீட்டிலும் சந்தோஷத்தில் அனைவரும் கொண்டாடித் தீர்த்தனர். மண மக்களை விட ஐராவிற்கும் அகிலுக்குமே கொண்டாட்டம். பிரெண்ட்ஸ்,பார்ட்டி என கொண்டாடித் தீர்த்தனர்.

இனிதாய் திருமணம் சிறப்பாய் நடந்திட, கல்யாணம் முடியவும் கையோடு அழைத்து வந்து அவனுக்கான பெண் என தன் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் அறிமுகம் செய்துவைத்தான் அகில்.