அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 19

IMG-20220627-WA0025-6e64618c

An kn Epi19.

…இனிதாய் திருமணம் சிறப்பாய் நடந்திட, கையோடு அழைத்து வந்த அவனுக்கான பெண்ணை தன் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் அறிமுகம் செய்துவைத்தான் அகில்

“இது மயூரி… என்னோட லிவிங்ல இருக்கா.”

‘என்னுடைய காதலி’ என்று அறிமுகப்படுத்தியிருக்கலாமோ. ரம்யாவிற்கு அவர்கள் அருகே சென்று பேசவேண்டும் என்று தோன்றினாலும், அவன் சொன்ன வார்த்தையில் இருந்த இடத்திலேயே நின்றுக்கொண்டார். அத்தனை அழகாய் பொருத்தமாய் இருக்க, தங்களை விட வசதியில் குறைந்தவர்களாய் இருந்த போதும் தரமானவர்களாய் இருக்க ரகுராம் ஏதும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே அவர்களை தெரிந்திருந்ததனால் அவர்கள் இருவரையும் கிண்டல் கேலி செய்துக் கொண்டிருந்தாள் ஐரா.

வெறும் பார்வையாளர்களாக மற்றவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தனர்.

“பெருசா நல்லவன் வல்லவன், நாலும் தெரிஞ்சவன்னு பேசுன. பார்த்தியா என் மானத்தையே வாங்குறான் பக்கி.”அனன்யா கிருஷ்ணாவின் காதில் முணுத்தாள்.

 அனன்யா அருகே அகில் மயூரியோடு வர, இருவரையும் வாழ்த்திய மயூரி, “நாம ஏற்கனவே மீட் பண்ணிருக்கோம்’, என கிருஷ்ணாவைக் கூறியவள், ‘உங்களை தான் இன்னிக்கு பார்க்குறேன்.” அனன்யாவிடம் கூறினாள்.

அனன்யா அவனை பார்த்த பார்வையில் அனல் தெறிக்க, கிருஷ்ணாவோ அகிலின் காதில் “வந்த வேலைய சிறப்பா முடிச்சிட்டல்ல இப்போ கிளம்பு.”

“எல்லாமே சொல்லிட்டுதான் செய்வான் சொல்லுவ, இதையுமா சொல்லிட்டு செஞ்சான்? “

“அப்டில்லாம் இல்லடி.”

கிருஷ் இந்த ஐடியாவே நீதான் போட்டுகொடுத்தியா?”

“ச்சே ச்சே நான் அப்டில்லாம் பண்ணுவனா?”பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கூற,”இதுல மட்டும் நம்புறேன் உன்ன. அந்தளவுக்கு ஒர்த் இல்ல நீ.”

அப்படியே சில வாரங்கள் கடந்து போயிருந்தன.

அங்குமிங்கும் நடந்து கொண்டு யோசித்ததெல்லாம் மகனோடு பேசும் பேச்சுக்களா இவை? ஆனாலும் அவனோடு பேசியே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் நடையை நிறுத்திவிட்டு அவனிடம் அதை கேட்கவும் செய்தார்.

“எல்லாம் நல்லா தான் இருக்கு அகி, ஆனா நீங்க இப்டி இருக்கது தப்பில்லையா?”

“இதுல என்ன தப்பிருக்கும்மி?கல்யாணம் பண்ணிட்டு பிடிக்கல, ஒத்துப்போகலன்னு சொல்லி பிரிஞ்சு போறதுக்கு இப்போவே புரிஜிட்டு அப்றம் வாழறது நல்லா இருக்கும்னு நினைக்குறோம்.”

“அப்றம் பிடிக்கல, ஒத்து போகலைன்னா? “

“அப்டி ஆக சான்ஸ் கம்மிதான். வீ க்நொவ் ஈச் அதர்.”

“கல்யாணம் ஆகி பிரிஞ்சவங்களயே ரெண்டாம் தாரமா ஏத்துக்க பிரியப்படறது இல்ல. இப்டி ஒன்னா இருந்த பசங்கள வேறயாரும் எப்படி ஏத்துப்பாங்க?”

“ம்மி நீயே இப்டி சொன்னா எப்டி,நீ ஏத்துக்க மாட்டியா?”

“முடியாததுனால தானே பேசிட்டிருக்கேன்.”

“ஓகே. நா மாறிட்டு போறேன். நான் எனக்கு ஒரு பையன் இப்டி இருந்தா ஏத்துப்பேன். யாராவது ஒரு ஜெனரேஷன் மாறுனா போதும்ம்மி.”

அறையிலிருந்து இவர்கள் பேச்சைக் கேட்டிருந்த ரகுராம் வெளியில் வந்தார். வந்தவரோ ரம்யாவை பார்த்து, “இவங்கிட்ட போய் சும்மா எதுக்கு வீணா உன் எனர்ஜிய வேஸ்ட் பண்ற. இவ்ளோ நேரம் பேசினதை எங்கூட பேசியிருக்கலாம்.நான் ரிலாக்ஸாகிருப்பேன். இப்போ நீ டென்ஷன் ஆனதுதான் மிச்சம்.”

ஏதும் பதில் கூறாது மாடியேறிவிட்டான் அகில்.

“அனன்யா கண்ணு முன்னாடியே சந்தோஷமா இருக்கா, பார்க்க எவ்ளோ நிறைவா இருக்கு. இவனும் ஒரு வழி ஆனா தானே எனக்கு நிம்மதி.”

“ரமி, உன் பையனுக்கு புத்தி ஜாஸ்தி அவனுக்கு அவன் வாழ்க்கை சரிபண்ணி வாழத் தெரியும். ஏதோ அவனே அறியாம, ஏதோ குழப்பதுல இருக்கான். விடு அவனே தெளிஞ்சு வரட்டும்.”

“அதான் பயமே, அவன் தெளிஞ்சு வருவான், அந்த பொண்ணு.”

“அந்த பொண்ணும் இவனுக்கு சலச்சவ இல்ல. இப்போ இருக்க பசங்களை புரிஜிக்கவே முடில. எதுல தன் உரிமை எடுத்துக்கணும்னு தெரில. நாம பேச போய்ட்டா பெண்ணுரிமை, சுதந்திரம்னு பேச வந்துருவாங்க. விடுப்பா என்னதான் செய்றாங்கன்னு பார்க்கலாமே.”

“அத்தம்மா,என்ன காலையிலேயே உர்ருன்னு இருக்கீங்க. நான் டூர் கிளம்புறேன். நாளைக்கு ஈவினிங் தான் ரிட்டர்ன். நானே தேடி வந்து ஒன்னும் கேட்கல. நீங்களா விரும்புனா பாக்கெட் மனி தறலாம்.” கை ரகுராம் பக்கம் நீட்டியவளாய் ரம்யாவை கொஞ்சிக் கொண்டிருந்தாள் ஐரா.

‘இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல.’இது ரகுராம்

“தண்ணில எல்லாம் இறங்கி விளையாடறதில்லை. பார்த்து கவனமா இருந்துக்கணும்.”

“நாராயணா,அந்த காட்டுக்குள்ள இருக்க பால்ஸ் தான் சூப்பரா இருக்குமாம். அதைப்பாக்கதான் போறோம். அதுல போய் இறங்கவேணாம்னா எப்டி அத்தம்மா. கவனமா இருந்துப்பேன்.”

காலேஜ் செல்ல தயாராகி வந்தவன் ரகுராம் ஐராவின் கையில் வைத்திருந்த பணத்தில் பாதியை எடுத்துக்கொண்டு மீதியை ஐராவிடம் திருப்பிக்கொடுத்து,

“இதெல்லாம் ரொம்ப ஓவர்டி. இவ்ளோ காசு எதுக்கு?’

கூறியவன், ‘ம்மி நானும் கிளம்புறேன். வா அப்டியே ட்ரோப் பண்ணிட்டு போய்டுறேன்.” அவளையும் கையோடு அழைத்துக்கொண்டே சென்றான்.

வண்டி ஒட்டிக்கொண்டே,”என்ன முகமெல்லாம் இவ்ளோ பிரைட்டா இருக்கு.”

“அதுவா அது சத்யாவும் வர்ராங்க.

“ஹ்ம் அப்டிங்களா?”

“ஆமா. நல்லா சைட் அடிக்கலாம்.”

கல்லூரி முன்னே தயாராய் இருந்த பேருந்து வண்டியின் பின்னே நிறுத்தியவன், வீட்டிலிருந்து எடுத்த பணத்தை திருப்பி அவளிடமே கொடுத்து,”கவனமா இருந்துக்கணும். தனியா எங்கேயும் போறதில்ல. எதுன்னாலும் கால் பண்ணு.”

“நான் எப்போவும் பிரீதான். நீங்கதான் இப்போ பிசீ… ஆகிடீங்களே.”

“நீ மட்டும் அங்க போய் அவன் பின்னாடியே சுத்தப்போற, என்னை எங்க ஞாபகம் இருக்கும்.”

“நாராயணா… இதுக்கா முகத்தை தூக்கி வச்சிட்டிருக்க?’அவன் கன்னம் கிள்ளியவள்,’போய்ட்டு பேசுறேன் அகி. நைட் லேட்டாகாம வீட்டுக்கு போ.”

“ஹ்ம்…” இவள் இறங்கி போகவும் முன்னால் வந்த சத்யாவைக் கண்டவள், ‘ஹாய்’ என்றிட பதிலுக்கு அவனும் ‘ஹாய்’ கூறி சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். அவனைக் கண்டாலே பிடிக்காத அகிலோ அவள் போகும் வரை இருக்க நினைத்தைவன் அப்போதே கிளம்பியும் விட்டான்.

“என்ன இவ்ளோ வேகமா போறார் உங்க பிரெண்ட்.”

“ஏதோ வேலையா போகணும்னான் தான்.”

“ஓஹ் ஓகே. சரி நீங்க போய் வண்டில ஏறுங்க, நான் பிரண்ட்ஸ பார்த்துட்டு வறேன்.”

அந்தப்பயணம் மொத்தமும் ஐராவின் கண்கள் சத்யாவையே வட்டமடிக்க அவனும் அவள் மிளிர்வில் கிரங்கித்தான் போயிருந்தான். ஆனாலும் அவன் அந்த கல்லூரிக்கே மன்னனாய் இருக்க சற்று அவளை கண்டும் காணாததாய் இருந்தும்கொண்டான்.

வரும் நாளன்று அனைவரும் சேர்ந்து கால்பந்து விளையாட தடுக்கி விழுந்தவளுக்கு நன்றாக அடிபட்டிருக்க காலையும் ஊன்ற முடியாது வலியில் அழுதும் விட்டாள்.

சத்யாவிடம் நண்பர்கள் கூற அவளிடம் விரைந்திருந்தான். இவர்கள் டூர் வந்திருந்த பக்கம் தான்

அகிலும் மயூரியை அழைத்து வந்திருந்தான். நண்பர்கள் மூலம் இவள் விழுந்த செய்தி வந்திருக்க அப்படியே இங்கு வந்துவிட்டான்.

அவன் கண்டது சத்யா ஐராவின் கால்களை தன் மடி வைத்து காலுக்கு பேண்டேஜ் அணிவித்துக் கொண்டிருந்ததைத்தான்.

அவள் அருகே போகவும் வேண்டும் ஆனாலும் அவளுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொள்ளட்டும் என்று அப்படியே திரும்பிவிட்டான்.

அவள் கால் வலி பறந்திருக்க அவளைச் சுற்றி பட்டாம்பூச்சியும் பின்னே மணியோசையும் கேட்க கனவுலகில் மிதந்தபடி இருந்தாள்.

“ஆர் யூ ஆல்ரைட்?”

“ஹான்?ஹ்ம் ஓகே தான்.” அவன் கைபிடித்து தடுமாறி எழுந்தவள் 

வலி மறந்து அவன் அருகாமை ரசித்திருந்தாள்.

அகிலின் மேற்படிப்பு முடிவடையும் தருவாயிலிருக்க ஐராவும் இரண்டாம் வருடத்தை தொடங்க ஆயத்தமாகியிருந்த நேரம்.

சத்யா அவனது படிப்பை தொடர வெளிநாடு செல்லவிருப்பதாக கூறிக் கொண்டிருந்தான். நண்பர்கள் மூலம் இதை அறிந்த ஐரா ,’நாராயணா,அவன் இன்னுமே தன்னை தன் காதலை புரிந்து கொள்ளவில்லையே, இப்போது இப்படி தூரம் சென்றுவிட இருவரிடையான உறவு முறிந்து விடுமே. என் காதலை எப்படி அவனுக்கு புரிய வைப்பேன்.’ என யோசித்துகொண்டிருந்தாள். நான்கைந்து நாட்களாகவே சரியாக யாருடனும் பேசாது இருக்க, வீட்டினரும் கேட்டுவிட்டனர்.

அனைவருக்கும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தாள்.

அனன்யாவிற்கு அவர்கள் நிறுவனம் சார்பாக ஒரு விருந்து வழங்கப்பட வேண்டி டெல்லிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அத்தோடு இமாலயா கல்லூரியும் அதனோடு இணைந்ததினால் இரண்டு குடும்பமும் ஒன்றாகவே செல்ல முடிவெடுத்தனர்.

“நீயும் வாயேன் போய்ட்டு அங்க சுத்தி பார்த்துட்டு வரலாம்.”

“எனக்கு அதை விட முக்கியமா இங்க வேலை இருக்கு அனி.”

“மாசமா இருக்கவங்க ஆசையா கேட்டா நிறைவேத்தி கொடுக்கணும்.”

“அதெல்லாம் அவங்க அம்மா அப்பாகிட்டயும், புருஷங்கிட்டயும்.”

“ஓஹ் அப்போ நீ பண்ண மாட்ட?”

“அனி உன் உடன்பிறப்பை கூட்டி போக வேண்டியதானே? “

“வந்துட்டாலும்.”

“அனி முக்கியமான ஒரு விஷயம், போய்ட்டு வந்ததும் சொல்றேன். நீங்க போய்ட்டு வாங்க.”

ஹ்ம் சரி என அடுத்த நாள் அனைவரும் கிளம்பிச் சென்றனர்.

ஐராவும் ஒரு முடிவெடுத்தவளாய் கல்லூரிக்குக்கு கிளம்பினாள்.

கல்லூரிக்கு வந்திறங்கியவளை அழைத்திருந்தான் அகில்.

“என்ன நான் வர முன்னே காலேஜ் கிளம்பிட்ட, அவ்ளோ என்ன அவசரம் உனக்கு?”

‘நாராயணா இவனை எப்டி மறந்தேன்?’

“இல்ல, அது நா முக்கியமான ஒரு முடிவு எடுக்கணும்னு யோசிச்சிட்டே இருந்தேனா அதான் அப்டியே கிளிம்பி வந்துட்டேன்.”

“என்னது அவ்ளோ பெரிய முடிவு?என்னையும் பார்க்காம கிளம்பிட்ட?”

“இல்ல, உன்னை பார்த்துட்டா டென்ஷன் ஆய்டுவேன் அதான்.”

“நா இருக்க டென்ஷனுக்கு உன்னை பார்க்கணும்னு இருந்தேன் நீ என்னன்னா, என்னை பார்த்தா டென்ஷன் ஆய்டுவேன் சொல்ற, என்னவோ தெரில கொஞ்ச நாளாவே முன்ன போல இல்ல நீ.”

“அப்டில்லாம் ஏதும் இல்ல. எப்போவும் போலதான் இருக்கேன். உனக்கு என்ன டென்ஷன், நா வேணும்னா வெய்ட் பண்றேன் வர்ரியா?”

“அதெல்லாம் வேணாம். மே பி நான் அங்க ஸ்டே பண்ற மாறி ஆயிடுச்சுன்னா தங்கிருவேன். கவனமா இருந்துப்பல்ல? லேட் ஆகாம வீட்டுக்கு போய்டணும். போன்லாம் சைலன்ட் போட்டு வச்சுக்க வேணாம். ஓகே.”

ஹ்ம் என்றவள் அவளும் கேட்கவில்லை. அவனும் அவளிடம் சொல்ல தயக்கமோ என்னவோ ஏதும் சொல்லவுமில்லை.

***

அகிலுக்கு மயூரியோடு இரண்டு வருடப் பழக்கம். இருவரும் ஒன்றாய் ஒரே பிரிவில் சேர்ந்திருக்க கண்ட நாள் முதலே இருவரிடையே நல்லதொரு நட்பு. இருவரிடையே ஐராவைக் கொண்டே பேச்சுக்கள் ஆரம்பிக்கும். அகிலுக்கும் ஐராவிற்குமான நட்பைக்கண்டு, அவர்களிடையான பிணைப்பைக் கண்டு ரசித்து பார்ப்பாள். குழந்தைதனமான அவள் செய்கைகள்,அதை இவன் சமாளிக்கத் தெரியாமல் தடுமாறி போகும் நேரங்கள் என சுவரசியமாய் இருக்கும். “நான் ஐராவா இருந்திருக்கலாம்.”

அதுன்னா கண்டிப்பா யாராலயும் முடியாது. அதோட அவ ஒன்ன வச்சே படற பாடு பத்தாதா? இதுல நீயும்? “

“யூ க்நொவ்,இப்போ கொஞ்ச வருஷமா தான் சண்ட போடறதை விட்டிருக்கா, இல்லனா காயம் வர்ற அளவுக்கு சண்ட போட்டுப்போம். அப்போவும் கோபமாவெல்லாம் இருக்க தெரியாது.”

இப்படியாக மயூரியுடனான நட்பு அகிலுக்கு ஏதோ ஒருவகையில் பிடித்துப்போக,அவர்களிடையான அந்த நட்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியதும் என்னவோ அகில்தான்.

“நம்மளுக்கு எல்லா விதத்துலேயும் ஒத்து போகுது மயூரி. ஏன் நாம லைப் லோங் இதை தொடரக்கூடாது?” இருவருக்குமான நட்பு ஆரம்பித்து ஒருவருடம் கடந்திருக்க அவளைக் கேட்டிருந்தான்.

“கண்டிப்பா தொடரலாமே.”

“ரெண்டு பேரும் ஒன்னா ஒரே லைப்?”

கேள்வியாக நிறுத்தி அவளைக் கேட்டான்.

“அகி, என்ன திடீர்னு “

“தோணுறப்ப தானே கேட்க முடியும் அதான்.”

“இங்க பழகுறது வச்சு லைஃப்க்கு ஒத்துபோகும்னு எப்டி சொல்றது?”

“அப்போ நாலு மணிக்கு வந்து காபி சாப்பிட்டு ஐஞ்சு மணிக்கு தட்டு மாத்திக்குறப்ப மட்டும் எப்டி ஒத்துபோகும்னு எப்படி ஏத்துக்குறீங்க? “

“அத ஏன் எங்கிட்ட கேக்குற?நானும் நிறைய தடவ யோசிப்பேன் எப்படித்தான் ஏத்துப்பாங்களோ, எனக்குன்னா புரியவே இல்லை. அதுல ஏதோ மாயம் மந்திரம் இருக்கும் போல.” சிரித்துக்கொண்டே கூறினாள்.

“ஓகே. பி சீரியஸ்,நவ் அன்செர் மீ. ஷேல் வீ?”

“ஐ ஹேவ் டு திங்க் அபௌட் இட் அகி.”

“நீ ஓகேன்னா ரெண்டு பேரும் ஒரு சிக்ஸ் மன்ந் ஒன்னா இருக்கலாம். ஐ மீன் நொட் வாட் அதர்ஸ் மீன்.

தென் இன்னும் புரிஜிக்கலாம். அப்றமும் சரியாவராதுன்னா இப்படியே இருக்கலாம்.”

சிறிது நேரம் யோசித்தாள்.பிழை என்றெல்லாம் இல்லை, சரியாக வருமா என்று மட்டுந்தான்.

“ஹ்ம் ஓகே.”

“ஆர் யூ சூர்? “

“ஹ்ம் யெஸ்.”தோளணைத்துக்கொண்டான்.

அத்தோடு மயூரியின் வீட்டில் அகில் பற்றி கூறியிருக்க இரு குடும்பம் இடையே ஒருதரம் போய் வந்தனர். படிப்பு முடிய அகில் தொழிலை எடுத்து நடத்த ஆரம்பிக்கவும் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்திருந்தனர்.மயூரியின் வீட்டில் காதல் என்றே சொல்லியிருக்க லிவிங்கில் இருப்பதை மறைத்திருந்தாள்.

***

அதன் பின் இப்போது வரை எப்போதும் ஒன்றாய் ஒரே வீட்டில் இருக்கும் இவர்கள் இரண்டு அறைகளில் அவரவர் வேலைகளை அவரவர் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

ஒன்றாய் சமைப்பதும், ஒன்றாய் அமர்ந்து பல மணிநேரமாக பேசிக்கொண்டும் என மகிழ்வாகவே இருந்தனர். ஆனாலும் ஏதோ ஒன்று இருவருக்கிடையே குறைவதைப்போன்று உணர்ந்தாள் மயூரி. அவ்வப்போது அதை சொல்லியும் விடுவாள்.

“ஏதோ நமக்குள்ள குறையுது.உன்னால உணர முடிதா அகி?”

இல்லையே, எப்போவும் போலத்தானே இருக்கேன்.”

“அதான் நானும் சொல்றேன் எப்போவும் போலதான் இருக்க, எந்த மாற்றமும் இல்லைனு சொல்றேன்.”

“ஐ பீல் கபோர்டப்ல் வித் யூ மயூரி.” அவன் பேச்சுக்கு பதில் அவளால் சொல்ல முடியவில்லை. அமைதியாகிப்போனாள்.

அவனோடு இருக்கும் போது அவள் உணரும் உணர்வுகள் அவனில் அவள் காணவே இல்லை. அவனிடம் சொல்லிடவும் இயலவில்லை.

இன்று அவளுக்கு பிறந்தநாள் முழு நாளும் அவளோடு கழிக்கலாம் என முடிவெடுத்திருந்தான் அகில். எது செய்வதென்றாலும் ஐராவை கேட்பவன் ஏனோ இதை பகிரவில்லை.

மயூரிக்கு ஏதோ வேலை இருப்பதாகக் கூறி வெளியில் சென்றிருக்க, ஐராவை விட்டுவிட்டு வந்தவன் வீட்டை அலங்காரம் செய்து அவளுக்காக சமைத்தும் வைத்திருந்தான்.

அங்கே கல்லூரிக்குள் சென்றவளுக்கோ சத்யாவை தேடி களைத்து போனவளாய் அங்கிருந்த வெளி இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். மனதுக்குள் ஏதோ நெருடல் என்னவென்று சொல்லிட இயலவில்லை. பயமா, பதற்றமா என்று சொல்லிட முடியா ஒரு உணர்வை உள்ளுக்குள் உணர்ந்தாள்.

அவனிடம் காதலை சொல்லிட வந்திருக்கும் பதற்றம் என்றும் தோழிகள் சொல்லும் அறிகுறிகள் தான் என நினைத்துக்கொண்டிருக்க நண்பர்கள் பட்டாலத்தோடு வந்துசேர்ந்தான்.

“ஹேய் ஐரா, இங்க என்ன பண்ணுற கிளாஸ் போகலையா?”

“போகணும் உங்களை மீட் பண்ணிட்டே போகலாம்னு இருக்கேன். “

“சரிடா நீ பேசிட்டு இரு நாம அங்க இருக்கோம் என நண்பர்கள் செல்ல சத்யா அவளோடு வந்தமர்ந்தான்.

அவன் அமரவும் அவன் கைக்கு ஒரு அழகிய கிப்ட் பாக்ஸினை கொடுத்தாள்.

“ஹேய் என்ன இது?”

நண்பர்கள் அங்கே பேசிக்கொண்டிருந்தாலும் ஏனோ கண் இவர்களைத்தான் வட்டமடித்துக்கொண்டிருந்தது. அவனும் அதனை பிரித்துப்பார்க்க அவள் காதலை சொல்லும் விதமாய் 

அதில் ஒரு பரிசு.

“அழகா இருக்கு.” அவனையே பார்த்திருந்தாள். ‘நாராயணா!  உள்ளுக்குள் சந்தோஷக் கூச்சல் ‘

“எனக்கு எப்பிடி சொல்றதுன்னு தெரில. ஐ திங்க்…”

“புரிது ஐரா, இதுகூட புரிஜிக்கலைன்னா எப்டி.”

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில. உன்னை புடிக்கும் ஆனாலும் ஏதோ நமக்குள்ள செட் ஆகாதுன்னு ஒரு நெனப்பு.

“இல்ல நாம பேசி பழகுனதே இல்லையே, மே பி பழகிருந்தா பிடிச்சிருக்குமா?”

“அப்டில்லாம் இல்ல ஐரா. இன்னும் நமக்கு டைம் இருக்கு, சோ பார்க்கலாம்.”

“இல்லை நீங்க போய்ட்டா அப்றம் எப்டி?”

“ஆமால்ல…”

ஏதோ அவன் அவள் பேச்சை அத்தனை பெரிதாய் எடுத்து பேசவில்லை. தினம் அவனுக்கான ப்ரபோசல்கள் அதிகம் இல்லையா. இவளும் வந்து பேச பெருமையாய் உணர்ந்தான் அவ்வளவே.

“இல்ல என்னை புரிஜிக்கிட்டா உங்களுக்கு பிடிக்கிம்னா நாம வேணும்னா ஒரு சிக்ஸ் மந்த் லிவிங்ல இருக்கலாம்.”

அவள் சொல்லவும் அவன் முகத்தில் வந்த புன்னகையை பார்த்து கேள்வியாக அவனை நோக்க, அவனோ அவ்ளோடே பேசி முடித்திருக்கலாம்.ஆனாலும்,

“டேய், இங்க வாங்களேன், நம்ம மேடம் என்ன சொல்றாங்கன்னு கேளு,

“சத்யா…நண்பர்கள் அவர்களை சுற்றிக்கொண்டனர். 

“ஐரா… உங்களவுக்கு இல்லன்னாலும் நானும் அப்பர் கிளாஸ் தான்.ஆனா எங்கப்பாம்மா நீ சொல்ற மாதிரில்லாம் இருக்க எங்களை வளர்க்கல. அதோட உங்க வீட்ல இதெல்லாம் சாதாரணமா இருக்கலாம். உங்கண்ணாவும் கூட அகில் அக்காவோட அப்டித்தான் இருந்தான்னு சொல்லிக்கிறாங்க. அதுக்கப்றமா தான் கல்யாணம் பண்ணிகிட்டாங்களாம். இப்போ அகிலும் அப்படித்தானே இருக்கான்.

இப்போ நீயும். ஆனா நீ கூப்பிட்டதும் நானும் வருவேன்னு எதிர்பார்த்த பாரு அதான் தப்பு.

 அப்படி பழகிப்பார்த்துதான் காதல் கல்யாணம்னா இதோ என் பிரென்ட் சர்க்கல்லேயே இருக்கானுங்க. நீயே செலக்ட் பண்ணிக்கலாம். “

இத்தனையும் அவளோடு அமர்ந்திருந்தவாரே அவளோடு பேசியிருந்தால் அவளும் அவள் கேட்ட விதம் பிழையாகிப்போனதையும், அவன் போய்விடுவான் எனும் பதற்றத்தில் வந்த வினை எனவும் அவனுக்கு புரிய வைத்திருப்பாள். ஆனால் அவனோ,நண்பர்களை அங்கே கூடியிருக்க வெட்கித்தான் போனாள்.

கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் விழவில்லை. அப்படியே எழுந்தாள். தன் பையை எடுத்துக்கொண்டவள்,

“சாரி.” என்று மட்டுமே அவன் முகம் பார்த்து கூறினாள். திரும்பியும் பார்க்காது சென்றுவிட்டாள்.

எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்றெல்லாம் தெரியவில்லை. தன் தலையணைக் கட்டிக்கொண்டு எத்தனை மணிநேரம் அழுதாளோ, மாலை ஐந்து மணியிருக்கும், அனன்யாவின் அழைப்பில் தன் சுயம் திரும்பினாள்.