அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 2

IMG-20220627-WA0025-0351b472

 

அத்தியாயம் 1இன் தொடர்…

…அவனது சுற்றமே மறந்து இவர்கள் இருவர் மட்டுமே அப்போதைக்கு நினைவில் இருக்க, அவனுமே அவன் அலைபேசியை மறந்திருந்தான்.

அதனால் ஏற்பட்ட நட்டம்…? அவனளவில் நட்டமே இல்லை.யார் இவன்…?

AN KN-2

ரகுராம் இந்தியாவின் பிரபல வர்த்தக புள்ளிகளில் ஒருவர்.தன் தந்தை ஆரம்பித்து வைத்த ஒன்றியத்தை தானும் திறம்பட நடத்தி வந்தவர். இப்போது தன் பார்வைக்குள் தன் மகனால் நடத்திக்கொண்டிருப்பவர்.

இந்தியாவில் இயங்கிவரும் பெரும் வர்த்தக ஒன்றியம் தான் இவர்களின் ‘இமயம் குழுமம்.’

அவர்களிடம் இல்லாதது என்று எதுவுமில்லை. கால் பதிக்காத துறையும் இல்லை. பிரதான நகர்களில் பத்து கிளைகளைக்கொண்டது தான் இவர்களின் குழுமம்.

பல வர்த்தக குழுமங்கள் பங்குதாரர்களாக இருந்தபோதும் இவர்கள் தலைமையிலேயே அனைத்து செயல்களும். முன்னணியாக இன்றளவும் தளர்வில்லாது கொடி கட்டிப் பறந்துக் கொண்டிருக்கின்றது.

அகில் ரகுராம். ரகுராமின் ஒரே வாரிசு. தலைமையகம் அவனின் பொறுப்புக்குக் கீழ் வந்து ஐந்து வருடங்களைத் தொட்டு விட்டது.

முப்பது வயதை தொட்டுக்கொள்ளும் இவனும் இன்றைய தலை முறைக்கு எடுத்துக்காட்டகவும், இன்றைய அனைத்து நவீனத்தையும் அனுபவித்து வாழ்பவனாகவும் இருக்கிறான்.

ஆக, பார்ப்பவர்களுக்கு அவனை நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ பிரித்தறிய முடியாத கேட்டகரியை சேர்ந்தவன். அவன் பற்றி அறிந்தவள் அவள் ஒருத்தி மட்டுமே.

அவள் ‘ஐரா நந்தன்’. அவனோடு பயணித்தால் மட்டுமே அவள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

****

“காலைல இருந்து எத்தனை கால் பண்ணியாச்சு, ஒன்னுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை. அட்லீஸ்ட் என்ன பண்ணலாம்னாவது பார்த்திருக்கலாம்.”

“சார், இப்போவும் என்ன தப்பு நடனத்திருக்குன்னு பார்த்துட்டு தான் இருக்காங்க. “

“இப்போ பார்த்து என்னாகப்போகுது ப்ரேம். காலைல இருந்து எந்நிலை யாரும் யோசிச்சாங்களா?நாமளும் எத்தனையை சமாளிக்கிறது? நெட்ஒர்க் இல்லன்னா காலேஜ்ல ஒன்னுமே பண்ண முடியாதுன்னு தெரியுமா இல்லையா? இவ்வளவு கேர்லஸ்ஸா இருக்காங்க.”

“சார், மேடம் இதுக்கு முன்ன இப்படி நடந்திருக்காங்களா? ஏதாவது ரீசன் இருக்கும். கொஞ்சம் பொறுமையா இருக்கலாமே.”

“அதேதான் ப்ரேம். ரீசன் இருக்கு. அதை அவங்களால முடிலன்னா கண்டிப்பா இன்னும் யாரையாவது பார்க்கச் சொல்லியிருக்கணும்.”

“சார் அவங்களுக்கு என்ன ப்ரோப்லம்னு தெரில. எதுன்னாலும் அவங்க சரி பண்ணிருவாங்க. ப்ளீஸ் காம் டவுன்.”

“காலையில இருந்து ஒரு வேலையும் நடக்கல ப்ரேம். என்கிட்டல்ல எல்லோரும் கேள்வி கேப்பாங்க.”

“ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யூ சார்.”

எப்படியும் நைட்க்குள்ள சரிப்பன்னிருவாங்க. முதல்ல இப்படி உட்காருங்க சார்.”

“என் பதவிக்கு இல்லன்னாலும் என் வயசுக்கு மரியாதை கொடுக்க வேணாமா ப்ரேம்.” தன் வழுக்கை தலையை தடவிக்கொண்டே முகத்தில் ஒட்டுமொத்த அதிருப்தியையும் காட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடத்துகொண்டிருந்தவர் இருக்கையில் அமர்ந்தார்.

இவர் ரங்கநாதன். இமயம் குழுமத்தின் கீழ் இருக்கும் இமாலயா காலேஜின் தலைமை ஆசிரியர்.

தன்னை விட சிறியவனிடம் பேச்சு வாங்கியதே இவரின் இத்தனை கோபத்திற்கும் காரணம்.

“மேடமை தப்பா யாரு பேசினாலும் சாருக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சது தானே சார். “

“நான் அவங்களை எதுவும் சொல்லல ப்ரேம்.”

“நீங்க ரகுராம் சாருக்கு கால் பண்ணினது தான் பிரச்சினை ஆகிடுச்சு சார்.”

உள்ளிருந்து ப்ரேமை அழைக்கும் சத்தம் கேட்க, “வெயிட் அ மினிட் சார்.” என உள்ளே ஓடினான் ப்ரேம்.

பாவம் இருவருக்கும் இடையே இருந்து நொந்துப்போனான்.

“இன்னும் அந்தாள் போகாம என்ன பண்றார்? “

“சார் அது வந்து… “

வெளியில் இருந்தவருக்கோ தெளிவாகவே அவனின் குரல் கேட்டிருக்கும் போல. எழுந்தவர் திரும்பியும் பார்க்காது அப்படியே வெளியேறிவிட்டார்.

“சார் ப்ளீஸ். முதல்ல பிரச்சினையை சரி பண்ணிரலாம்.”

“அதெல்லாம் பண்ணியாச்சு ப்ரேம். இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு இந்தாளு எதுக்கு அப்பாக்கு கால் பண்ணிருக்கார். இது ஒரு சின்ன பிரச்சினை, நானே சரி பண்ணிருப்பேன். சும்மாவே ஆடுவார், இப்போ சொல்லவும் வேணுமா. நாளைக்கே கிளம்பி வராரா இல்லையான்னு பாருங்க. “

“சமளிச்சுக்கலாம் சார்.”

“வேற வழி?” கூறிக்கொண்டே சோர்வாக இருக்கையில் அமர்ந்தான் அகில். மிகவும் களைப்பாகத் தெரிந்தான். தனக்கு எதிரே நீள் இருக்கையில் உறங்கும் சின்னவனை கண்டவனுக்கு உள்ளுக்குள் இருந்த சோர்வெல்லாம் மறைந்து போனது.

“ப்ரேம் சாப்பிட ஏதாவது வேணும். காரமில்லாம.”

“கண்டிப்பா சார்.உங்களுக்கும்?”

“காபி மட்டும் போதும் ப்ரேம்.”

“ஓகே சார்.”

காலையிலிருந்து மதியம் வரை ஹாஸ்பிடல் வசம். எப்படியோ அவனிருக்குமிடம் அறிந்து ப்ரேம் தான் சென்றிருந்தான். சென்றதுமே ஏதோ நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்தும் கொண்டான்.

அத்தனை நேரம் சுற்றம் மறந்திருந்தவனுக்கு அவனைக்காணவும் தான் அவன் அலைபேசியே ஞாபகத்திற்கு வந்தது. அவனிடம் கூறி அலைபேசியை எடுத்து வர, ஏகப்பட்ட மிஸ்ட் கால்கள். பார்த்தப்படி அப்படியே அமர்ந்து விட்டான்.

‘தன் தந்தையிடம் இருந்து அழைப்பு என்றாலே சிக்கல் தான்.’ எண்ணிகொண்டவனாய்,

“என்னாச்சு ப்ரேம்?”

“சார் காலைல இருந்தே காலேஜ்ல நெட்ஒர்க் எரர் காமிக்குது. காலேஜ் புல் டே நோ ஸ்டடீஸ். அதான் ரொம்ப சிக்கலாகிடுச்சு.”

“நேத்து நைட் வரைக்கும் நல்லாத்தானே இருந்தது. “

“அதான் தெரில சார்.”

“ஹ்ம்” மீண்டும் தந்தையிடமிருந்து அழைப்பு. அழைப்பை ஏற்று காதினில் வைக்க,

“அகில் வேர் ஆர் யூ? “

“ஹாஸ்பிடல் இருக்கேன் டாட்.”

அந்தப்பக்கம் மௌனம். சில வினாடிகளில்,”இப்போ எப்டி இருக்கா? “

“பைன் டாட், நான் சரிபண்ணிட்டு கால் பண்றேன்.” என்ன ஏது ஒன்றுமே விசாரிக்கவில்லை. வைத்துவிட்டான்.

“ப்ரேம் நீங்க ஆபீஸ் கிளம்புங்க, நான் இன்னும் ஒன் அவர்ல அங்க இருப்பேன்.”

கூறிவிட்டு திரும்ப,ஐரா எழுந்திருப்பதாக கெளதம் கூற அவனோடு உள்ளேச் சென்றான்.

அவள் சுயநினைவு திரும்பிவிட்டாள் என்றதுமே முகத்தில் கடினத்தை தத்தெடுத்திருந்தான்.இல்லாவிட்டால் அவளோடு தப்ப முடியாது.

கௌதம் ஐராவின் அருகே அமர்ந்திருக்க, அவன் முகம் பார்த்தவள்,

“அம்மா கூட கோபமா கௌதம்?” எனக் கேட்டு கண்கள் கலங்க,

அவள் வாயில் விரல் வைத்து,

“ஷ்… ம்மி டாக்டர் அங்கிள் பேச வேணாம் சொல்லிருக்காங்க.”

தன் இருக்கை விட்டு எழுதவன்,தன் இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டு தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான்.

“ஆபிஸ் போய்ட்டு வந்ததும் வீட்டுக்கு கிளம்பலாம். அதுவைரைக்கும் பெட் விட்டு கீழ இறங்க வேணாம் சொல்லு கெளதம்.”

“ம்மி ரெஸ்ட் பண்ணிக்கோம்மி. நாங்க ஆபிஸ் போய்ட்டு வந்துர்றோம்.” கூறிக்கொண்டே அகிலின் கை பிடித்து பெட் விட்டு கீழே இறங்கினான் சின்னவன்.

“மம்மி, அப்பா இனி நம்ம கூடத்தான் இருக்கப் போறாங்க.” அத்தனை சந்தோஷமாய் கெளதம் கூற,

‘எதுக்கு இப்படி பண்ற?’ எனும் விதமாய் முகத்தை வைத்துக்கொண்டு ஏறிட்டாள் அவனை.

அவனோ ‘எனக்கேதும் தெரியாது’ எனும் விதமாய் தோளைக் திருப்பிக்கொண்டான்.

அவன் பதில் கூறமாட்டான் என்று நன்கே தெரிந்தவள்,

“அகி… “

“ஈவினிங் வந்து பேசலாம் ஐரா. ரெஸ்ட் பண்ணு.”

அவளிடம் தப்பி இருவருமாக வெளியே வந்தனர்.

கௌதமை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றவன் ஆபிசுக்கு கிளம்பி வர மதியம் பிந்தி மாலை நான்கை தொட்டிருந்தது.

ஆபீஸ் அறையில் உறங்கியிருந்தவன் தூங்கி விழிக்க சுற்றிவர கண்களை சுழற்ற அகிலை கண்டதும் புன்னகைத்தான். அகில் அலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தான். இவன் பார்க்கவும்,

“ஹேய், கம்” என அவனை கையால் அழைக்க அவன் அருகே வந்தான் சின்னவன். அப்படியே தூக்கி மேசையில் இருத்திக்கொண்டான்.

ப்ரேம் கொண்டு வந்த உணவை அவனுக்கு உண்ண இலகுவாக பிரித்துக்கொடுக்க சில வாய்கள் உண்டவன், “ப்பா மம்மி பார்க்க போலாம்.” என்றிட,

“நீ சாப்பிட்டதும் போகலாம்.” என சைகையாலேயே கூறினான்.

அவன் உண்டு முடித்ததும் இருவருமாக கிளம்பி வெளியில் aமீண்டும் அழைத்தார் ரகுராம்.

“டாட் ப்ரோப்லம் சோல்வ்ட். நீங்க வரவே வேணும்னா ரெண்டு நாள் கழிச்சு கிளம்பி வாங்க. இப்போ என்னால மீட்டிங் அட்டென்ட் பண்ற மூட் இல்லை. ஹாப் யூ அண்டர்ஸ்டாண்ட் மீ.”

“ஹ்ம்… என்றவர் அம்மாக்கு கால் பண்ணு. காலைல இருந்து கால் அட்டென்ட் பண்ணலன்னு புலம்பிட்டு இருக்கா. “

“நைட் பேசுறேன் டாட்.” கூறியவன் துண்டித்துவிட்டான்.

“ப்ரேம் இம்போர்டண்ட் கால்ஸ் மட்டும் எனக்கு கனெக்ட் பண்ணுங்க, மேடமோட கால்ஸ் டூ. “

“ஓகே சார்.”

லிப்ட் நோக்கிச் செல்ல,கெளதமின் கைகளை பிடித்துக்கொண்டு நடந்தான் அகில். அவன் நடக்க ஒவ்வொரு அடிக்கும் ஒட்டுமொத்த வேலையாட்களின் கவனமும் இவர்களிடம்.

அதற்கேற்றார் போல கௌதமும் அவன் கை தாங்கி குதித்துக்கொண்டும், அவனோடு வார்த்தைக்கு வார்த்தை அப்பா அப்பா என பேசிக்கொண்டும் செல்ல அத்தனை அழகாய் இருந்தது. 

யாரையும் பொருட்படுத்துபவனில்லை அவன். எப்போதும் அவன்,அவன் விருப்பம் அவ்வளவே. அவன் சற்றே இறங்குவதென்றால் ஐராவிடம் மட்டுமாயிருக்கும்.

எப்போதும் எதிலும் வளைந்து கொடுப்பவனில்லை. அவள் வளைக்க முன்னே வளைக்கும் படி இலகுவாகியிருப்பான்.

ஒட்டுமொத்த உறவையும் தள்ளி நிறுத்தி தானும் தனித்து தவித்துக்கொண்டு வாழ்பவன்,அவளுக்கும் உயிரானவன்.

ஆபிஸில் இருந்து வெளி வந்தவர்கள் வண்டியில் அமர்ந்ததும்,

“ப்பாà,வீட்டுக்குத்தானே?”

அப்போதும் சந்தேகமாய் கேட்டான் சின்னவன்.

“ஆமா கெளதம்.”

“ப்ரோமிஸ்…?” மீண்டும் அவன் முன்னே கை நீட்டினான்.

“ப்ரோமிஸ் டா.”

“மம்மி திட்டுனா? “

“நீதான் என்னை காப்பாத்தனும் கௌதம்.”

“கண்டிப்பா ப்பா…” பெரிய மனுஷனாய் கூறினான்.

இருவருமாக ஹாஸ்பிடல் வந்து ஐராவை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர். ஐராவை இரண்டு நாள் அனுமதிக்க கூறியிருக்க இவன் பார்த்துக்கொள்வதாகக் கூறி வீட்டுக்கு அழைத்து வந்தான்.

ஐராவின் மனதிலோ பல எண்ண ஓட்டங்கள். அதற்கு எதிராய் அத்தனை சந்தோஷமாய் இருந்தான் சின்னவன். ‘ப்பா ப்பா ‘ என அவனோ வாய் ஓயாது பேசிக்கொண்டே வர, அகில் அவ்வப்போது முன்னிருந்த கண்ணாடியில் ஐராவைத்தான் பார்த்தான். இரண்டு முறை அவன் பார்ப்பதை உணர்ந்தவள், அவனை முறைக்கவும் தவறவில்லை.

வீட்டுக்கு வந்ததும் ஐராவை அவள் அறைக்குச் அழைத்துச் சென்றவன்,

 “ரெஸ்ட் பண்ணு ஐரா. சாப்பிட ஏதாவது பண்றேன்.” கூறினான்.

“அகி…” கண்கள் கலங்க அவனை பார்த்தாள். அவள் தலை கோதியவன்,

“ரெஸ்ட் பண்ணு ஐரா. எதை பற்றியும் யோசிக்க கூடாது. நான் பார்த்துப்பேன்.”

“அகி…”

“என் பேச்சை நீ எப்போதான் கேட்டிருக்க ஐரா, ப்ளீஸ் இப்போதைக்கு மட்டுமாவது கேளேன்.”

அதற்கு மேல் என்ன சொல்வாள் அப்படியே கட்டிலில் சாய்தாள். இருந்த உடல் வருத்தத்திற்கும் மன உளைச்சலுக்கும் உறக்கம் முழுதாய் அவளை தழுவிக்கொண்டது.

இரவு தூங்கியவள் விடியலில் தான் விழித்தாள். கண் திறக்க எப்பொழுதும் பார்ப்பது கெளதமின் முகத்தை தான். தன் அருகே மகனில்லாததை கண்டவளுக்கு அப்போதுதான் நேற்றைய நிகழ்வு மனதில் வந்து போனது.

கண்களை சில நிமிடங்கள் மூடி நேற்றைய பொழுதை, மகனின் வார்த்தைகளை அசை போட்டாள். பின் எழுந்து மெதுவாகச் சென்று காலைக் கடன்களை முடித்துக்கொண்டாள்.

கெளதமின் அறைக்கதவை மெதுவாக திறக்க, அவள் கண்ட காட்சியில் அப்படியே நின்று விட்டாள்.

அகில் கவிழ்ந்து படுத்திருக்க, அவன் மேல் கெளதம் அவன் கழுத்தில் கையிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

“ஹாப்பி மார்னிங் ஐரா.”

“எழுந்தாச்சா? “

“ஹ்ம் ரொம்ப நேரமாச்சு, அசைய விடறான் இல்ல.”

அவன் பக்கம் வந்து, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் முகம் பார்த்தவன்,

“எப்டி இருக்கு இப்போ?”

“பரவால்ல, பட் நொட் பீலிங் குட்.”

“இப்போ எதுக்கு எழுந்து வந்த? “

“ப்ச், நீ எதுக்கு இங்க வந்த அகி? “

“ஐரா… “

“கெளதம ரீசன் சொல்லாத அகி. இப்போதான் கொஞ்சம் ஸ்மூத்தா போய்ட்டிருக்கு, அகைன் முதல்ல இருந்து…”

” எது ஸ்மூத்தா போய்ட்டிருக்கு? நீ சந்தோஷமா இருக்கியா? அட்லீஸ்ட் சின்னவனையாவது சந்தோஷமா வச்சிருக்கமா? 

நேத்து வரைக்கும் அவன் சந்தோஷமா இருந்தான்னுதான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் இப்போ அதுவும் இல்லைனு புரிஞ்சதுல்ல, இனி அதுக்கு என்ன பண்ணலாம்னு மட்டும் பார்க்கலாம்.”

“அதுக்காக நீ இங்க வந்தது சரியா வரும்னு தோணல அகி.”

“அதெல்லாம் நான் பார்த்துப்பேன்.”

அவனை முறைத்தாள்.

“உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு. முறைபொண்ணாட்டம் முறைச்சிட்டே இருக்காத. நான் கெளதம் கூட்டிட்டு என் வீட்டுக்கு போய்டுறேன் “

“அகி…” அங்கிருந்தே அவன் சிகையைப்பிடித்து ஆட்டினாள்.

“ஐரா பேக் டு போர்ம்…’ கூறிக்கொண்டே அவள் கையை எடுத்து விட்டவன்,’கை எடு வலிக்குதுடி.”

அவன் கூச்சலில் கெளதமும் எழுந்து விட, இருவரையும் ஒன்றாகக் கண்டவன் “ம்மி” என அன்னையின் கழுத்தோடு கையிட்டு இழுத்து முத்தம் வைத்து “ஹாப்பி மார்னிங் மம்மி.”என்றான்.

அவளும் அகில் அருகே அமர்ந்துகொள்ள அவள் மடியில் தலையணை வைத்து இவன் படுக்க, கெளதம் அவன் வயிற்றில் அமந்துகொண்டான்.

‘மகனின் முகத்தில் இத்தனை நாள் இந்த சந்தோஷத்தை காணவில்லையே. எப்படி கவனிக்க மறந்தேன்.’ தன்னையே நொந்து கொண்டாள். கண்கள் கலங்கும் போல இருந்தது.

“ஐரா நம்மளுக்கு டீ தர ஐடியா இருக்கா?”

“நோ ப்பா, அம்மா நொட் வெல். பிங்கி சொன்னா,அவங்க மம்மிக்கு பிவர் இருக்கப்ப அவளும் அவங்க அப்பாவும் தான் குக் பண்ணுவாங்களாம். அவங்க மம்மிய ரூம் விட்டு வெளில வர விட மாட்டாங்களாம்.”

“ஓஹ்! “

“சோ வி ஷுட் டேக் கேர் ஒப் ஹர் “

“யாரு அந்த பிங்கி கெளதம்?”

“ஷி இஸ் மை பெஸ்ட் பிரென்ட் மம்மி. என் பிரண்ட் யாருன்னு கூட உனக்கு தெரிலம்மி.”

“சாரி கெளதம்.” கூறியவளுக்கு ‘தான் தன் மகனை இன்னும் நெருங்கியிருக்க வேண்டுமோ’ மனதில் கேட்டுக்கொள்ள உள்ளுக்குள் மொத்தமாய் உடைந்து போனாள் .

“ஓகே தென், மம்மி பெட் விட்டு கீழ இறங்க வேண்டாம். இன்னிக்கு நாம தான் மம்மிக்கு சர்வண்ட்ஸ் ஓகே? “

சின்னவனை தூக்கிக்கொண்டு அறைவிட்டு வெளியே செல்லப்பார்க்க,

“முதல்ல வாஷ் ரூம் போனும் ப்பா.”

“ஆமால்ல ஓகே கம்.” என இருவருமாய் குளியலறைக்குள் புகுந்துக்கொண்டனர்.

இருவரும் கூச்சலிட்டு, விளையாடி, கொண்டாடி முடித்துவிட்டே வெளியில் வந்தனர்.

அதுவரையில் ஐரா இவர்களுக்காக தேநீரும் காலை உணவையும் செய்து முடித்தவள் மேசையில் காத்திருந்தாள்.

“ரொம்ப லேட் பண்ணிட்டோமா? “

“ரொம்பவே… ” மூவருமாக உண்டு விட்டு எழ அடுத்த மணி நேரங்கள் மொத்தம் அகிலும் கெளதமும் ஒருவரை ஒருவர் பிரியவில்லை.

ஐரா உண்டு விட்டு மாத்திரை போட, மதியம் வரை நல்ல உறக்கம். அது அவளுக்கு அப்போதைக்கு மிகவும் தேவையாய் இருந்தது.

அலுவலக அழைப்புகளை அகில் அவ்வப்போது ஏற்றாலும் அது கெளதமை பாதிக்காது பார்த்துக்கொண்டான்.

அகில் இவர்களது வீடு வந்து இன்றோடு இரண்டு இரவுகள் முடிந்துவிட்டது. ஐராவும் சற்று தெளிவாகியிருந்தாள்.

“கெளதம் இரண்டு நாள் லீவ் ஸ்கூலுக்கு.”

நாளை செல்லவே வேண்டும் எனக் கூறிக்கொண்டு அவன் புத்தகங்களை சரிபார்த்துக் கொண்டிருக்க, முகத்தை தூக்கிகொண்டு ஒரு ஓரமாய் சென்று அமர்ந்துக்கொண்டான் சின்னவன்.

“என்னாச்சு கெளதம?”

“ப்பா நாளைக்கு ஆபிஸ் போய்டுவாங்க, மம்மியும் போய்டுவாங்க. தென் மலர் ஆன்ட்டி கூடத்தான் நான் வீட்ல இருக்கணுமா? பாலு அங்கிள் கூடத்தான் ஸ்கூல் போகணுமா?”

“இல்லையே.. அப்டி யாரு சொன்னா? ” ஐரா கேட்க,

“எப்போவும் அப்படித்தானே?”

“இனி எப்போவும் அப்டி இல்லையே?”

“நிஜம்மா?”

“ஹ்ம் பட் நாளைக்கு ஒருநாள் அம்மாக்கு டைம் கொடுக்கணும். ஆப்டர்…ஐ வில்.”

“தென்,நாளைக்கு அப்பா கூடப் போறேன்.”

“கெளதம், அப்பாவால அங்கெல்லாம் வர முடியாது.”

“வை?”

“கெளதம் திருப்பி அம்மாவை கேள்வி கேட்குறதெல்லாம் நல்ல பழக்கமா என்ன? “

“ஐரா, ஸ்கூல் தானே, ஐ கேன் மேனேஜ்.”

“ஐ க்நொவ் வாட் அம் டுய்ங். நான் வேண்டாம்னு சொல்றதை தான் பண்ணுவேன்னு இருக்காத. எல்லாமே உன் இஷ்டம் போல பண்ண முடியாது.

இவன் சைட் மட்டுமே பார்க்குற, உன் சைட் எவ்ளோ பேஸ் பண்ணனும் யோசிக்க மாட்டியா?”

கண்களால் கெளதமைக் காட்டியவன்,

“உங்கம்மாக்கு பொறாமை,உங்க ஸ்கூல் வந்து நான் உன் பிரெண்ட்ஸ் கூட பிரெண்டாகிருவேன்னு. அதான் நான் போக வேண்டாம் சொல்றா.”

ஐரா அப்படியே எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

“ப்பா மம்மி டென்ஷன் ஆக்கிட்டாங்களா? “

“இல்லடா அதெல்லாம் சும்மா. “

“டாக்டர் அங்கிள் சொன்னாங்கல்ல. டென்ஷன் ஆகவேணாம்னு. மம்மியே நாளைக்கப்றம் வரட்டும் ப்பா. அதுவரைக்கும் நான் பாலு அங்கிள் கூடவே போய்டுறேன். “

“நாளைக்கு அப்பா கூடத்தான் போறோம் ஓகே டன்? ” அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவனை சிரிக்க வைத்தவன் அவன் மாலை நேரம் பார்க்கும் கார்ட்டூன் சேனலை டிவியில் ஒளிபரப்பினான்.

“நீ பார்த்துட்டே இரு நான் அம்மா என்ன பன்றாங்க பார்க்கிறேன்.” கூறி உள்ளே சென்றான்.

கீழே தரை விரிப்பில் அமர்ந்து கட்டிலில் தலை வைத்து படுத்திருந்தாள் ஐரா.