அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 20

IMG-20220619-WA0006-9be71192

Ankn-20

“அனி போய் சேர்ந்துட்டீங்களா?”

மிகக் கடினப்பட்டு இயல்பாய் பேசினாள்.

“ஹ்ம், இப்போதான் எல்லாருமா கிளிம்பி பன்ஷனுக்கு போய்ட்டிருக்கோம். அப்பா, கிருஷ் எல்லாருமே கால் எடுத்துட்டாங்க ஒருத்தருக்கும் அன்செர் பண்ணல. நா எடுக்கவும் ஒரே ரிங்ல எடுத்துட்ட.”

“தூங்கிருந்தேனா, அதான் கேட்கல. இப்போதான் எழுந்தேன். எழவும் உன் கால் அதான்.”

“என்னாச்சு இந்நேரத்துக்கு தூங்குன?”

“மழை பெய்யுதா தனியா போர் அடிச்சது.”

“ஓஹ் இங்கேயும் செம மழை, வெளில போகவெல்லாம் நினைக்கவும் முடியாது. நல்ல வேளை நீ வரல. ரூம்குள்ளேயே இருந்துட்டு வரப்போறோம். சரி நீ சாப்டியா?”

“இனிமேதான்.”

“சரிடா, நாமளும் இப்போ பங்ஷனுக்கு ரீச் ஆகிட்டோம். ரூம்க்கு போய் பேசுறேன்.”

“சரி, அப்பாகிட்ட அப்றமா பேசுறேன் சொல்லிரு.”

சரி என அழைப்பை துண்டித்தவள் ‘தான் செய்த மடத்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள். தான் இப்படி சத்யாவிடம் கேட்டது வீட்டினருக்கோ, அகிலுக்கோ தெரிந்தால் என்னவாகும்? எனை எத்தனை அவமானப்படுத்தி விட்டான். தான் செய்த மடத்தனத்தினால் வீட்டினருக்கும் சேர்த்தல்லவா அவப்பெயரை சேர்த்துவைத்தேன். ஆனாலும் அவன் இத்தனை பேசியிருக்க கூடாது. எல்லாருமே பார்த்து சிரிக்க வச்சுட்டான்ல. என் லவ் அவனுக்கு அத்தனை குறைச்சலா போய்டுச்சு. எல்லாரும் பண்றதைத்தானே நானும் கேட்டேன். அப்பறம் என்ன?’

“பாப்பா சாப்பிடறதுக்கு என்ன பண்ணட்டும்?” கூந்தலை உயர்திக்கட்டிக்கொண்டே மாடியிறங்கி கீழே வந்தவளை  கேட்டார் பண்ணிப்பெண்.

மேசையில் அமர்ந்து அங்கிருந்த பழம் ஒன்றினை சாப்பிட, அவள் ஸ்நோவியும் வந்து அவளருகே அமர்ந்துக் கொண்டது.”கடைசில எனக்கு நீ உனக்கு நாந்தான்டா. பார்த்தல்ல நிலைமைய?”

‘நாராயணா! உன்னை அடிக்கடி கூப்பிட்டதுக்கு நல்லா வச்சு செஞ்சுட்டல்ல’ பணிப்பெண்ணின் அழைபேசி வழி ஐராவை பார்த்துக்கொண்டிருந்த அகில், காலையில் அவள் இருந்த மலர்ச்சிக்கும் இப்போது அவள் முகமும் பேச்சும் சரியில்லாததைக் கண்டு ஏதோ நடந்திருப்பதை உணர்ந்தவன் அவளாகப் பேசும்வரை கேட்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டான்.

“அக்கா, இப்போ கால கட் பண்ணிட்டு ரெண்டு தோசை மட்டும் பண்ணி குடுங்க போதும்.” என்றாள்.

“பாப்பா, தம்பிதான் ரொம்ப நேரமா  நீங்க கால் பண்ணலன்னு எடுத்தாரு.”

“ஹ்ம்…”

‘என்னை பிடிச்சிருக்க மாதிரிதானே நடந்துக்கிட்டாங்க. நான் வேற யாருகூடவும் அப்டில்லாம் இருந்ததில்லையே, எனக்கு அப்டி தோணுனது கூட இல்லையே…’ ஐராவிற்கு காலை நடந்த சம்பவத்திலேயே மனம் உலன்றுக் கொண்டிருந்தது. யாரிடமும் கூறி ஆறுதல் தேடும் நிலையும் இல்லை. தன்னையே நொந்துக்கொள்வதைத் தவிர வழியில்லை என்று தன்னையே திட்டித் தீர்த்துக் கொண்டாள்.

நேரம் இரவு ஒன்பதைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. ஐராவின் அழைபேசி அடிக்க யாரென்று பார்த்தாள். திரையில் ஒளிர்ந்த அனன்யாவினது முகங்கண்டு ‘பேசாம இவகூட போயிருக்கலாம்…’

கூறிக்கொண்டே அழைப்பை ஏற்றாள்.

***

“இன்றைக்கு இப்படியெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை அகி. ரொம்ப சந்தோஷமா இருக்கு.” அவனிடத்தில் புன்னகை மட்டுமே. இருவரும் ஒன்றாய் வெளியில் சென்று வந்து வீட்டில் இருவருக்குமாய் சமைத்திருந்தவன் ஒன்றாக அமர்ந்து பேசி களித்து உண்டனர். மாலை வீட்டின் வரவேற்பறையின் ஒரு பக்க சுவற்றுக்கு முழுதாய் திரை அமைத்து இருவருமாய் ஒரு படத்தினையும் பார்த்தனர். அவளோடு இருக்கும் மிக அதிகமான நேரங்கள் இவை. மயூரி ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தாள் என்றுதான் கூற வேண்டும். இத்தனை நாட்களும் நடக்காதா என எதிர்பார்த்த நிகழ்வுகள் நடக்க சந்தோஷமாய் இருந்தாள்.

கேக் வெட்டி பிறந்த நாளையும் கொண்டாடினர். இரவு அனைத்தையும் இருவருமாக  பேசிக்கொண்டே ஒழுங்குபடுத்தி முடிக்க, விடாது அனன்யாவின் அழைப்பு அடித்தோய்ந்தது. அதன் பின்னர் தந்தையின் அழைப்பு. எதையும் ஏற்கவில்லை அகில். ‘போனோமா அங்க இருக்க வேலையை பார்த்தமான்னு இருக்குதுங்களா. நம்மளையும் இம்ச பண்ணிக்கிட்டு.’

“எதுக்குன்னு கேட்கலாம்ல?”

“வேறெதுக்கு வீட்ல ஒருத்தி இருக்கால்ல, அவளை பத்தி கேட்கத்தான். அவ நானில்லாம நிம்மதியா இருக்காளா இருக்கும். டைமாச்சு,நீ போய் தூங்கு. நான் லைட்லாம் ஆப் பண்ணிட்றேன்.”

“அகி, எனக்கு கிப்ட் ஏதும் தரலயே?”

கேள்வியாய் அவனை நோக்க, அவள் முகத்தினில் ஏதோ ஓர் எதிர்பார்ப்பு.

“அப்போ காலைல இருந்து பண்ணுறதெல்லாம் என்னவாம்?”

“அது…”

அவள் அருகே வந்தவன், அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொத்திக்கொண்டவன், ” ஐ ரியலி ஹாப்பி டு பி வித் யூ.” பொத்தியிருந்த கைகளுக்குள் ஏதோ குளிர கைகளை விரித்தவள் அதில் இதய வடிவ பேண்டண்ட் ஒன்று இருந்தது. “ஹேய், ரொம்ப அழகா இருக்கு. உடனே தன் கழுத்தில் இருந்த சங்கிலியில் மாட்டி அணிந்தும் கொண்டாள். இருவரும் அருகருகே நெருங்கி நின்றிருக்க, அவன் கண்களையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனை முத்தமிடும் எண்ணம்.

மெல்லமாய் அவன் தோளில் கையிட்டவள் பின்னந்தலை வழி விரல்களை நுழைக்க அவள் கண்களை அப்போதுதான் பார்த்தான். தானாய் கைகள் அவள் இடைவளைத்து தன்னோடு சேர்த்துக்கொள்ள உள்ளுக்குள் ஏதோ அவனுள் மாற்றம். கண்கள் கலந்த இடம் இதழ்கள் நுழைய அவ்விதழ்களை சுவைக்கவே எண்ணம் போல. அவளை மெல்லமாய் நெருங்கினான்.

தொட்டுக்கொள்ளும் தூரம் நூலிழை இடைவெளி அசைந்தாலும் இசைக்கும் நொடி இசைத்தது அவன் அழைபேசி.

அவளுக்கேயான ரிங்டோன் அவள் இருப்பைக் காட்டிக்கொடுக்க,அவன் அழைப்பை ஏற்க முன்னமே அதை எடுத்து தூரப்போட்டிருந்தாள் மயூரி.

மீண்டுமாய் அவனை அவள் வசப்படுத்த அவன் இடையோடு கைகோர்த்திருந்தாள் மயூரி. மீண்டும் அதே ஸ்ப்ரிசம் அவளை தீண்டத் தூண்ட தீண்டினான். இதழ்கள் இணைந்த நொடி அவள் இவ்வுலகம் மறந்த நொடி மறவாது மீண்டும் அழைத்தது அழைப்பேசி.

மாலை ஐராவின் வாட்டம், அக்காவின், வீட்டினரின் அழைப்பு,எப்போதும் மயூரியோடு இருக்கும் நேரங்கள் அறிந்து அழைக்காதவள் அழைக்கிறாள். ஏதோ சரியில்லை. மயூரியை தள்ளி நிறுத்தினான்.

“அகி…அவனை அணைத்துக் கொண்டவள் அவள் உணர்வுகளில் வெளிவர முடியாது தடுமாறினாள். அவனுக்கு அப்படியெல்லாம் இல்லை. கைகளை எடுத்துவிட்டவன் அலைபேசி எங்கே என கண்களால் தேடினான்.

“ஒரு பைவ் மினிட்ஸ் எனக்காக தரமுடிலயா அகில்? அதுக்குள்ள அவகூட பேசியேதான் ஆகணுமா?”

“இன்னிக்கு புல்டே உனக்காகத்தான் கொடுத்தேன்.”

“நான் அதை சொல்லல.”

“எனக்காக நானும் நமக்காக  கொஞ்சம் டைம் இப்டி இருக்கதுக்கு நானும் எதிர் பார்க்குறது தப்பா? லிவிங்ல இருக்கோம்னு பேரு. உன் விரல் கூட என்னை தீண்டினது இல்லை. நானா எடுத்து வச்சுக்கிட்டாதான்.”

விட்டுப்போன முத்தத்தின் சுவை அறியமுடியாத தவிப்பில் பேசினாள். “நான் அதுக்காக  லிவிங்ல இருக்கலாம்னு சொல்லவே இல்லையே? ஒருத்தரை ஒருத்தர் புரிஜிக்கலாம்னு தானே சொன்னேன்.”

“அது ஜஸ்ட் நாம இருந்த போலயே புரிஞ்சிருந்துக்கலாமே. இப்டி ஒன்னா ஒரே வீட்ல? எனக்கும் ஐராவுக்கும் வித்தியாசம் இல்லையே. இல்ல நீ ரெண்டு பேரையும் ஒரே கண்ணோட்டத்துல தான் பார்க்குறியா?”

அவள் அப்படிக் கூறவும், அவனுக்கு அவள் பேச்சு பிடிக்கவில்லை, அத்தனைக்கும் அழைபேசியில்  ஐராவை தொடர்புகொள்ள முயற்சிக்க அதுவோ பிஸியாகவே இருந்தது.

“மயூரி தப்பா பேசுற.”

“நான் தப்பா ஏதும் பேசல, ஏதும் தப்பாகிடக் கூடாதுண்ணுதான் பேசுறேன். நீங்க என்னை லவ் பண்றீங்கல்லான்னு சந்தேகமா இருக்கு. நான் எப்போவும் உங்ககிட்ட இருந்து அந்த பீலை உணரவே இல்லை.”

அவள் சொல்லி முடிக்கவும், அவனுள் இடியே விழுந்ததாய் உணர்ந்தான். ‘அவள் சொல்வது நிஜம் தானா? எனக்கு ஏன் மயூரிய நெருங்க முடில. அதான் காரணமா?’

“எனக்கும் ஐராவுக்கும் என்ன வித்தியாசம் இருக்குனு சொல்லுங்க, அவளுக்கு விட எனக்கான உரிமை ஏதோ ஒரு வகையில் ஜாஸ்தியா இருக்கணும் தானே? எனக்கு முதல்ல உங்க மனசுல இடமேயிருக்கான்னு தெரில, இதுல எப்படி ஜாஸ்தி எதிர்பார்க்க? அதான் லிவிங்ல இருக்கலாம்னேன். அப்போவாச்சும் ரெண்டுபேருக்குள்ளேயும் என்ன இருக்குன்னு புரிஜிப்பீங்கன்னு. ஆனாலும் எனக்கு உங்க மேல இருக்க காதல் கூடிச்சே தவிர உங்களுக்கு என் மேல, ஏதோ கட்டாயப்படுத்தி என்கூட நீங்க இருக்க பீல்லதான் நீங்க இருக்கீங்க.”

தலையை கைகளில் தாங்கி அப்படியே அமந்துவிட்டான். என்ன சொல்கிறாள் இவள். ஐராவின் அழைப்பு மீண்டும் வர, ஏற்கவில்லை. அடித்தோய்ந்தது.

“நீ சும்மா ஏதேதோ யோசிக்கிற மயூரி.

ஐ ஆம் இன் லவ்.”

“யெஸ் பட் வித் ஹூம் ஆர் யூ இன்?”

“மயூரி?”

கண்ணீர் கன்னம் நனைத்த போதும், அழுந்த துடைத்துக்கொண்டவள், “நல்லா டைம் எடுத்துக்கோ அகில். என் மனசு மொத்தமும் நீதான் இருக்க, ஆனால் அதே, உன் மனசுக்குள்ளேயும் நான் இருக்கணுமே. எனக்கு உன் மனசுக்குள்ள நான் இருக்கேன்னு தோணல.”

“நீ தப்பா புரிஞ்சிருக்க மயூரி, அடுத்தவங்க சொல்ற போல நீ என்னை நினைக்கமாட்டன்னு நினைச்சேன்.”

“எப்போவும் நான் அப்படி நினைச்சதில்ல. இனியும் நினைக்க மாட்டேன். ஆனால் நீயா புரிஞ்சிப்ப.”

“புரிஞ்சிக்க ஒன்னுமில்ல, என் மனசுக்குள்ள வேற ஒன்னும் இல்ல.”

அகிலின் அழைபேசி மீண்டும் ஒலிக்க, அழைப்பை ஏற்றாள் மயூரி.

“ஹாய் ஐரா,

“அகி…”

“இதோ இருக்கான்…”

“சொல்லு…” கொஞ்சம் கோபமாகவே வார்த்தைகள் வெளிவந்தன அகிலிடம். அவன் கோபம், தான் இந்த நேரத்தில் அழைப்பெடுத்ததோ, சங்கடமாய் உணர்ந்தாலும், தானிருக்கும் நிலைமை?’

“அகி…”குரல் உடைந்து அந்த வார்த்தையின் பின்னே அழுகை மட்டுமே…

“ரதி…”அவனே அறியாது அவள் அழுகை கேட்க முடியாது சொன்ன பெயரில் திகைத்தாள் மயூரி…

“என்னாச்சுடா எதுக்கு அழுற…?”

அப்பா போன வண்டி ஆக்சிடன் ஆயிடுச்சாம். அனன்யா கால் பண்ணுனா… “

“என்ன சொல்ற?”

“ஆமா இப்போதான், எனக்கு அப்பா பார்க்கணும்…”

“ஒன்னும் ஆகியிருக்காது டா. நான் இதோ வந்துட்டே இருக்கேன். நீ கிளம்பு நாம இப்போவே போகலாம்.’ ‘மயூரி  நான் கிளம்பனும், நாம வந்து பேசிக்கலாம். எதையும் யோசிச்சு குழம்பிக்காத, அல்வேஸ் லவ் யூ சோ மச்.”அவளை அணைத்து விடுவித்தவன் புயலென கிளம்பியும் விட்டான்.

‘கடவுளே எத்தனை கால் பண்ணுனா, அன்செர் பண்ணலையே…’ தலையில் அடித்துக்கொண்டவன் இவனும் மீண்டும் முயற்சிக்க அழைப்பு அந்தப்பக்கம் எடுக்கவே இல்லை. பின்னர் ரகுராமிற்கு அழைத்தான். முதல் தடவை ரிங் சென்று கட் ஆக, பின் அவரே எடுத்தார்.

“ப்பா எங்க இருக்கீங்க?”

“அகி, பக்கத்துல ஐரா இருக்காளா?”

இப்போதான் கால் பண்ணுனா  வீட்டுக்கு போய்ட்டிருக்கேன்ப்பா. “வண்டிய கொஞ்சம் ஓரமா நிறுத்து.”

“ப்பா இப்போ எங்க இருக்கீங்க?கிருஷ், அனன்யா எல்லாம் எங்க இருக்காங்க?

“நானும் ஹாஸ்பிடல் போய்ட்டுத்தான் இருக்கேன். ஆனா நந்தனும் சுமித்ராவும்…”

“ப்பா என்னாச்சு…?”

“ஓன் ஸ்பாட் இறந்துட்டாங்களாம்டா.

“அச்சோ ப்பா… என்ன சொல்றீங்க…”அப்படியே ஸ்டீரிங்கில் தன் தலை வைத்தவன் கண்ணுக்குள் ஐராவின் முகம்.

“அனன்யா தான் கால் பண்ணுனா எனக்கும். இப்போ நான் ஸ்பாட்கிட்ட வந்துட்டேன். உள்ள போய் கால் பேசிட்டிருக்க முடியுமா தெரியல .நீ அவளை கூட்டிட்டு சீக்கிரமா வந்துரு.”

இவன் வீட்டின் முன்னே வந்து வண்டியை நிறுத்தவும் வாயிற்படியில் அழுதவண்ணம் இருந்தாள் ஐரா. என்னவென்று சொல்வான். வண்டிவிட்டிறங்க அஞ்சி அவளையே உள்ளிருந்து பார்த்திருந்தான்.

அவளாய் வந்து வண்டியில் ஏறி அமர்ந்ததும் ஏதும் பேசாது  வண்டியை கிளப்பினான். கண்களில் நீர் வழிய வாய் மட்டும் நாராயணா, நாராயணா என முனுமுனுக்க அவளும் பாதையை பார்த்தபடி வர, இவனும் அவளை பார்க்கவே அஞ்சினான். இருவரும் விமானத்தில் ஏறி அமரும் வரையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இடையில் ரகுராமிற்கு அழைக்க அவரோ அழைப்பை ஏற்கவும் இல்லை.

விமானத்தில் அவன் அருகே அமர்ந்தவள் அவன் கைக்குள் தன் கை நுழைத்து தலை சாய்த்துக் கொண்டாள்.வாய்க்குள் முனுமுனுப்பு அடங்கவேயில்லை. அவனும் அவள் தலைமேல் தன் கன்னம் வைத்தவன் அவள் கைமேல் தன் கை வைத்து வருடிக்கொடுத்தான். கண்கள் மூட அவன் விழி ஓரம் வழிந்த கண்ணீர் காதோடு அவள் கூந்தலுக்குள் நுழைந்து ஒளிந்துக்கொண்டது.

இருவரும் வைத்திசாலையினுள்ளே நுழைய ரகுராம் சூழ ஒரு போலீஸ் பட்டாளமே இருக்க அதனோடு  இன்னும் பலர் இங்குமங்கும் ஓடிக்கொண்டும் கதறி அழுதுக்கொண்டும் இருந்தனர்.

இன்னும் பலர் அங்கே விபத்தில் சிக்கி அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டான். சிறிய விபத்தாக இருக்கவாய்ப்பில்லை. மனம் குறித்துக்கொள்ள பக்கத்தில் இருந்தவளோ போவோர் வருவோரையெல்லாம் பார்த்து இவன் கையை இன்னுமின்னும் இறுக்கி அவனோடு ஒன்றிக்கொண்டாள்.

“சார் இங்க யாரு ஐராவதி?”

அப்போதுதான் அங்கே வந்து சேர்ந்தவர்களைப் பார்த்து சிகிச்சை பிரிவில் இருந்து வந்த செவிலியர் விசாரித்தார்.ஐராவோ பயந்தவளாய் அவரையும்  இவர்கள் இருவரையும்  பார்க்க, “இவங்கதான் மிஸ்.”

“சார் இவங்களை பார்க்காம பேஷன்ட் ஆபரேஷன் பண்ணிக்கமாட்டேன்னு அடம் பண்ணிட்டிருக்காங்க. ரொம்ப பிளட் லாஸ். அட்மிட் ஆகி பைவ் அவர்ஸ் ஆகுது.கொஞ்சம் காபரேட் பண்ணுங்க, யாராவது ஒருத்தரையாவது காப்பாத்தணும்னு நினைக்குறோம்.”

“அகி என்ன சொல்ராங்க? எனக்கு பயம்மா இருக்கு. எனக்கு அப்பா பார்க்கணும்.”

“ஒன்னில்ல. வா நானும் வரேன். உள்ள போய் பார்க்கலாம்.” அவளையும் அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல இரத்தம் வழிந்து ஒருபக்கம் காய்ந்திருக்க முகத்தில் இவர்களை எதிர்பார்த்தவளாய் இருந்தாள் அனன்யா.

“எனக்கு பயம்மா இருக்கு, நான் வெளில போறேன், பயம்மா இருக்க அகி…” அவனோடு இன்னுமின்னும் ஒன்றிக்கொண்டு கூறினாள் ஐரா.

தன் அக்காவை அந்தக் கோலத்தில் கண்டவனும் கண் மறைத்த கண்ணீரை துடைத்துக்கொள்ள,”சார் என்ன இது  நீங்களும் இப்படி பண்ணுனா எப்படி?”

“அனி…”

“நர்ஸ் என்னைவிட அவளுக்கு தான் தைரியம் ஜாஸ்தி.”, அவள் அருகே சென்று நின்றுக்கொண்டு அவள் முகம் பார்க்க அஞ்சி அகிலின் நெஞ்சினில் முகத்தை புதைத்துக்கொண்டாள் ஐரா.

“இவ்வளவு நேரம் என் உயிர கையில் பிடிச்சிட்டு இருக்கேன் உங்கிட்ட கொடுக்கணும்னு தானே. இப்டி இருந்தா நா யாரை நம்பி விட்டுட்டு போவேன்?”

“ஹேய் எதுக்கு இப்டில்லாம் பேசுற, அப்டில்லாம் ஒன்னும் ஆகாது.”

புன்னகைத்தாள், அந்த புன்னகையில் அவள் முகத்தில் மிளிர்வு…

“என் பையனுக்கு அம்மாவா அப்பாவா எப்பவும் நீங்க ரெண்டு பேரும் தான். இந்த அம்மா பத்தி தெரியவே வேண்டாம். சந்தோஷமா  எப்போவும் இருக்கணும். உன்னை மாதிரியே என் பையன வளர்க்கணும்.”

“அனி…”

“ஷ்… புரிதா? அப்றம் நா அவனைய கெளதம்னு தான் கொஞ்சுவேன், அந்த பெயருக்கு நல்லா ரிஆக்ட் பண்ணுவான். சோ அதே பெயரை வச்சுறனும். சரியா? எப்போவும் ரெண்டு பேரும் இப்ப இருக்க போலயே சந்தோஷமா இருக்கணும்…”

“நாராயணா எனக்கு பயம்மா இருக்கு… இவ எதுக்கு இப்டில்லாம் பேசுறா அகி? அவனை இருக்கிக் கட்டிக்கொண்டு அழ,”ஐரா கடைசியா உன் முகத்தை ஒரு தரம் பார்க்கணும்…”

அவள் குரல் நளிவடைந்துகொண்டே செல்வதை உணர்ந்தவள் அவசரமாக அவள் புறம் திரும்ப எப்போதும் போல அவளை அருகிழுத்து கன்னம் கடித்து வைத்தாள்.

“எனக்கு நீதான் வேணும், பாப்பா வேணாம்.”கத்திக் கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.

“எனக்கு நான் வேணாம்டி.” அவ்வளவுதான் பேசினாள். அத்தோடு அவள் கண்கள் மூடிக்கொண்டாள். அவசரமாக சிகிச்சை ஆரம்பிக்க ஒரு உயிரை இவர்களுக்காய் விட்டுவிட்டு அவள் உயிரை அவளவனைக் காண்பதற்காய் எடுத்து சென்றாள் அனன்யா.

“அனி…”அவளை அந்தக் கோலத்தில் கண்டவள் தான், ஒரு பக்க கையும் காலும் இழுத்துக்கொள்ள வாய் கோணிப் போக அப்படியே மடிந்து விழுந்தாள்.

அகிலின் நிலை,ஐராவிற்கு என்னானதென்று பார்த்துவிட்டு அப்படியே தொய்ந்து இருக்கையில் அமர, அவன் அருகே வந்த ரகுராமை  கட்டிக்கொண்டான்.

“டேய் நீயே இப்படி இருந்தா எப்படிடா?”

அப்பா ஏன்ப்பா இப்டி, என்னாலேயே முடிலயே, அவகிட்ட என்னனு சொல்வேன். தாங்க மாட்டாப்பா. பாருங்க எப்படி இருக்கான்னு?”

“அவளை நீதான் மெதுவா சரிபண்ணனும் அகி. அதுக்கு முதல் அவங்க நாலுபேருக்கும் காரியம் பண்ணிட்டு இருக்கணும். ரொம்ப வச்சுக்க முடியாது.”

“ப்பா அவளுக்கு காமிக்காம எப்டிப்பா? ஹாஸ்பிடல இருக்கபோலயே இருக்கட்டும் அவ எந்திருச்சதும் காட்டிட்டே அடக்கம் பண்ணலாம்ப்பா.”

***

அன்று இவர்களுக்கான வைபவம் நிறைவடைய ரகுராம் யாரையோ சந்திக்க வேண்டும் எனக் கூறி ரம்யாவோடு முன்னமே கிளம்பிவிட, இன்னுமொரு வண்டியில் நந்தன் முன்னிருக்கையில் அமர பின்னாடி அனன்யா கிருஷ்ணாவோடு சுமித்ரா அமர்ந்தார்.

மழையும் விடாது பெய்ய, இரவுநேரம் என்பதால் பனியும் ஓரளவு. இவர்களுக்கு முன்னால் வந்த சுற்றுலாப் பேருந்தொன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த லோரி ஒன்றில் மோத அப்போது தான் அவ்விடம் கடந்த இவர்கள் வண்டியில் சரிந்திருந்தது.

பேருந்தில் இருந்தவர்களுக்கும் பலத்த காயம்,அத்தோடு உயிர் சேதமும். நிறுத்திவைக்கப்பட்ட லாரியில் மரக்கட்டைகள் இருந்திருக்க, மோதிய வேகத்தில் இரண்டு மூன்றென கிழே விழுந்திருந்தது.

இவர்களின் வண்டி ஒருபக்கம் சரிந்து விழ அந்தப்பக்கம் அமர்ந்திருந்த நந்தனும் சுமித்ராவும் அவ்விடத்திலேயே உயிரை பிரிந்திருந்தனர்.வண்டிக்குள் அனன்யாவோ கிருஷ்ணாவின் மேலே இருக்க சுயநினைவை இழந்திருந்தவள் அவள் காலோடு ஈரத்தை உணர்ந்து விழித்துக்கொண்டாள்.

தான் இருக்கும் நிலை கொஞ்சம் கொஞ்சமாக பிடிப்பட, “கிருஷ்?…”

“இவ்ளோ சீக்கிரம் வாழ்ந்து முடிச்சிருவேன்னு நினைக்கவே இல்லடி, அவ்ளோ நிறைவா வாழ்ந்துட்டோமா? பாப்பாவை பத்திரமா ஐராகிட்ட கொடுத்துட்டு வந்துருடி, அதுக்குமுன்ன அவசரப்படாத.”

“கிருஷ்…கிருஷ்…”அதன்பின் அவனது மூச்சும் அங்கே அடங்கிவிட்டிருந்தது.

அசையக்கூட வழியில்லாது அவள் இருக்கும் நிலையிலேயே கையில் மணிக்கட்டோடு கோர்த்திருந்த பையில் அவசரமாக அழைபேசியை எடுத்து அகிலுக்கு அழைத்தாள். அவன் எடுக்கவே இல்லை. பின்,ரகுராமிற்கு அழைத்தாள்.

“ப்பா… “

“இதோ பின்னாடி வந்துட்டே இருக்கோம்மா.ரூம் போய்ட்டீங்களா?”

“நோ ப்பா…வழில ஆக்சிடன்ட்…”

“அனன்யா எங்கருக்க? “

“ப்பா எனக்கு பாப்பாவை காப்பாத்தனும் ப்பா…”

அதன் பின் அவசரவசமாக அவர்கள் வந்து சேர இரத்த வெள்ளத்தில் அவ்விடமே கலங்கப்பட்டிருந்தது.

ரம்யாவை சமாளிக்க முடியாது திண்டாடியவர் இவர்களின் வண்டியைக் காணவும் தன் மகள் அதற்குள் இருந்து பேசினாளா? வியந்துதான் போனார். அதனை நெருங்கவும் திடமில்லை ஆனாலும், அங்கிருப்பவர்களிடம் சொல்லி வண்டியை மெதுவாக மறுபக்கம் பிரட்டி உள்ளிருப்பவர்களை எடுக்கும் முயற்சியில் இறங்கினார் ரகுராம்.

அனன்யாவை கண்டுகொண்டவர், “சார் சார், எப்பொண்ணுக்கு உயிர் இருக்கு சீக்கிரமா தூக்குங்க.”

“ப்பா, மெதுவா மெதுவா எடுக்கச் சொல்லுங்க என் பாப்பாவை காப்பாத்தணும்…”அனன்யா உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.

கடினப்பட்டு அன்னன்யாவை வெளியில் எடுத்து 

வைத்தியசாலை வரும் வரை அவளை மட்டுமாயும் காப்பாற்றும் எண்ணம் மட்டுமே…

அவசரப்பிரிவில் அனுமதிக்க அவள் இடுப்புக்குக் கீழே செயலிழந்து விட்டதாக கூறினார் வைத்தியர். கால்கள் இரண்டும் வண்டியின் முன்னிருக்கைக்கு இடையே சிக்கி பல இடங்களில் முறிந்திருந்தது. செயலிழந்ததினாலோ என்னவோ அவளுக்கு அதன் வலி தெரியவில்லை. வேறெதுவும் அவளுக்கு காயங்கள் இல்லை என்றிருக்க காதோடு வழிந்தது உதிரம். தலைக்குள் அடிப்பட்ட வேகத்தில் ஏதோ ஆகியிருப்பதை தெரிந்துகொண்டார் வைத்தியர்.

“என்ன சார் இப்படி திடமா இருக்காங்க?” செவிலியர் கேட்க, அவங்க மனதைரியம் தான்.

“உங்க பெயர் என்ன?”

“அனன்யா.”

“அனன்யா,சீக்கிரமாவே ஆபரேஷன் பண்ணிட்டா குழந்தையை காப்பாற்றிடலாம், அதுக்கப்பறம் உங்களையும்.”

புன்னகைத்தாள்.பின்,”ஒரு ஆறு மணிநேரம் என் குழந்தை என் வயிதுக்குள்ள இருந்தா ஏதும் ஆகுமா டாக்டர்? “

“இல்லம்மா, ஆனா குழந்தை எடுத்ததும் தான் உங்களுக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க முடியும்.”

“ஒரு சிக்ஸ் அவர்ஸ்க்கு என்னை உயிரோட வச்சுக்க எதாவது  பண்ணுங்க, கண்டிப்பா அவள பார்க்காம உயிர்விற்ற மாட்டேன், ஆனாலும் உங்ககிட்ட ஒரு ஹெல்ப்பா இதை மட்டும் கேட்டுக்குறேன் ப்ளீஸ்…”

 அவள் நிலை உணர்ந்தவர், சரியென்று கூறிவிட்டு அவளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். அவள் உயிர் கொடுத்த உறவை அவள் உயிர் தோழிக்கு துணையாய் விட்டுவிட்டு உயிர் பிரிந்து சென்று விட்டாள்.

இன்றோடு இரண்டு நாட்கள் கடந்து விட்டது, என்னவோ பல வருடங்களை கடந்துவந்ததாய்  உணர்ந்தான் அகில். அத்தனை கொடுமையான நொடிகளாய்  ஒவ்வொரு நொடியும் கண்டந்திருந்தான்.

அவள் விழிக்க அவள் அருகே அமர்ந்து கட்டிலில் தலை வைத்திருந்தான் அகில். அவன் சிகையை தொட, அவள் தொட்டதும்

விழித்துக்கொண்டவன், அவள் முகம் பார்க்க, புன்னகைத்தாள்.

இவனுக்கு அந்த புன்னகை பார்த்ததுமே அடக்க முடியா அழுகை மட்டுமே வந்தது. இந்த இரண்டு நாட்கள் அடக்கி வைத்திருந்த மொத்தம் அவளை அணைத்து ஆறுதல் தேடினான்.

அழ வேண்டியவளோ அமைதியாய்  அவன் சிகை  மட்டும் கோதிக்கொடுத்தாள்.

“அழுதுட்டே இருந்தா நம்மளவிட்டு போனவங்க திரும்ப நம்ம கிட்ட வந்துருவாங்களா? நினைச்சிட்டே இருந்தா விட்டுட்டு போனவனை யார் பார்த்துப்பா. நம்மள நம்பித்தானே விட்டுட்டுப் போனா?”

அவளை வியப்பாய் பார்த்தான் அகில். அவள் எழுந்ததும் எப்படி சமாதானம் செய்யவென்று ஒவ்வொரு நொடியும் பயந்துக்கொண்டே இருந்தவனுக்கு அவள் பேச்சு மனதுக்கு சந்தோஷத்தை தந்தாலும் அவள் கவலைகளை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டதென்னவோ அச்சத்தையும் வரவழைத்தது.

“ரதி…”

“நீ மாட்டுமாவது எங்கூட இருப்பல்ல?”

“ஏன்டி…” அவள் நுதல் ஒற்ற அவள் முகம் மொத்தம் அவன் கண்ணீர் நனைத்தது.