அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 21

IMG-20220627-WA0025-575ab602

An kn-21

மிகக்கடினமான நாட்களாய் கடந்து போயின அந்நாட்கள். ரம்யாவும் உடலளவில் மிகவும் பாதிக்க, ரகுராமிற்கும் அவருடனேயே சரியென்றானது.

ஐராவிடம் கேட்டுவிட்டு மொத்தமாய் வீட்டினருக்கு இறுதிச் சடங்குகளை செய்து முடித்தனர். வைத்தியசாலையிலேயே ஐரா குணமாகும் வரை குழந்தையை பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருந்தான் அகில். ஒருவாரம் கடந்து தங்கள் வீட்டிற்கு இரண்டு நாட்களாய் செவிலியர் ஒருவரின் உதவியோடு குழந்தைக்கு என்னென்ன செய்யவேண்டும், குழந்தையை எப்படி தூக்க வேண்டும் என ஒவ்வொன்றாய் கேட்டு கொஞ்சமாய் பழகியும் கொண்டாள்.”அகி பாப்பா கூட்டிட்டு வீட்டுக்கு போகலாம்.”

“நீ எப்படி பார்த்துப்ப?”

“நான் தானே பார்த்துக்கணும் இது என் பாப்பால்ல.” சிவந்த குழந்தையின் பாதங்களை வருடிக் கொடுத்துக்கொண்டே கூற,

“ஐரா உன்னால எப்டி?”

“நீ எங்கூட இருப்பல்ல?”

“நான் எங்க போகப்போறேன்?”

“அப்றமா என்ன, என்னால முடியும்.”அகிலுக்கு உள்ளுக்குள் அச்சமாய் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவெல்லாம் இல்லை. சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் இருக்க அமைதியாகிவிட்டான்.

ரகுராமோ விடயம் அறிந்து ஆடி தீர்த்துவிட்டார். ‘எப்படி ஒரு பச்சக் குழந்தையை பார்த்துக்க முடியும், எல்லா விஷயத்துலயும் நீ எது பண்ணுனாலும் நான் சரின்னு போறேன்னா, அதுல ஒரு அர்த்தம் இருக்கும். இந்த விஷயத்துல சொல்றதைக் கேளு.”

“என்னால முடியும்ப்பா.”

“அப்போ முதல்ல கல்யாணத்தை பண்ணிட்டு அப்புறமா குழந்தையை பார்த்துக்க.”

“ரகுப்பா இது எங்குழந்தை. நான் வளர்த்துப்பேன். அகி,நீ கல்யாணம் பண்றதுன்னா பண்ணிக்கோ. ஆனா குழந்தை எங்கூட கூட்டி போய்டுவேன்.”

“என்ன நீ, அவருதான் ஏதோ பேசுறாருன்னா நீயும்.’

‘ப்பா அவளுக்கு நான் மட்டுந்தான் இனி எல்லாமே. அதோட கெளதமோட அப்பா நாந்தான். அதுக்கு இஷ்டம்னாதான் இனி எல்லாமே.”

“என் பேச்சை கேட்காம என் வீட்ல யாரும் இருக்க முடியாது. ஊருக்கு பதில் சொல்ல வேணாமா. உங்களோட சேர்த்து இந்த குழந்தையோட வாழ்க்கையையும் தொலைச்சிராதீங்க.”

“ப்பா,உங்க பேச்சை எப்போவும் மீறினது இல்ல. ஆனால் இப்போ.’

‘ஐரா,போய் வண்டில ஏறு வந்துர்றேன். ஐராவை பார்த்துக் கூறியவன்,’அப்பா நெக்ஸ்ட் வீக் வேலைல ஜோஇன் பண்ணிக்குறேன். இந்த வீக் என்னால மேனஜ் பண்ணிக்க கஷ்டமா இருக்கும்.”

“மலர் அக்கா நம்ம கூட வரீங்களா? நீங்க வந்திங்கன்னா உங்க பாப்பாக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும்.”

” சரிங்க தம்பி இதோ துணிமணியெல்லாம் எடுத்துட்டு வந்துர்றேன்.”

இருவருமாக அன்றோடு வெளியேறியது தான். அதன் பின்னர் அகில் வந்து பெற்றவர்களை பார்த்துப்போக ஐராவோ முற்றாக தவிர்த்துவிட்டாள்.

காலேஜ் செல்வதை நிறுத்திவிட்டவள் முழு நேர வேலையாக குழந்தையை மட்டுமே பார்த்துக்கொண்டாள். சில மாதங்கள் மிகவும் கஷ்டப்பட்டாள். தான் சுமக்கவே வேண்டுமா தாயாகிட,புட்டிப் பால் ஊட்டி வளர்த்தாலும் அவள் மாரோடு அணைத்து அரவணைக்க அவளுக்கான தாய்மை அங்கே ஊற்றெடுக்க ஆரம்பித்திருந்தது. தாயாகும் வயதாகவே இருந்தாலும் வீட்டில் இன்னும் சிறு குழந்தையாய் வாழ்க்கை பற்றிய எந்த தெளிவும் இல்லாதவள் திடீரென ஒரு தாயாகிப்போவது என்பது எத்தனை கடினம். அன்றைய சூழ்நிலையை சமாளித்து, ஈடு செய்ய முடியாத இழப்புக்கள் அனைத்தையும் தாங்கி அந்த குழந்தை ஒன்றுக்காக தன்னை சரிப்படுத்திக் கொண்டாள் ஐரா.

அகிலும் தன் அக்கா முன்னேற்றிவைத்த நிறுவனத்தை தன் புத்தியும் சேர்த்து மேலும் மெருகேற்றினான். நந்தனின் தொழிலையும் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தவன் அதையும் தவரவிடவில்லை.

ஐராவின் பொறுப்பில் ஒப்படைக்கும் வரை இமாலயா கல்லூரியின் முகாமைத்துவத்தை தனக்கு கீழ் கொண்டு வந்திருந்தான்.

“அகில், நந்தன் முழு பொறுப்பையும் நம்ம கம்பனிக்கு கீழதான் வச்சிருக்கார். சோ நீ ஐராவை அதுல இன்வோல்வ் பண்ணணும்னு இல்லை. “

“ப்பா, ஐ க்நொவ் வாட் ஆம் டொய்ங்.நீங்களும் ஷேர் பர்சன்னு நினைச்சுட்டு இருந்தேன், ஆனால் அங்கிள் சும்மாதான் ஜோஇன் ஆகிருக்காங்க.அதோட இது கிருஷ்ணாவோட பெயர்ல இருக்குன்னு அது நம்மளோடது இல்ல, இட்ஸ் பிலோங் டு ஐரா.”

“ஐரா என்ன பண்றான்னு பார்த்துட்டு முடிவு பண்ணலாம் அகில்.”

“யெஸ். உங்களுக்கும் அவளுக்கும் இடைல நான் எப்போவும் இல்லை. ஏற்கனவே உங்ககூட இருக்க கோபத்துக்கு, நீங்களே பார்த்துக்கோங்க”

***

‘மயூரி…’ அவளைப் பற்றிய நினைவே அகிலுக்கு அந்த கொஞ்ச நாட்களில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு மாதங்கள் கடந்திருந்த நாள் ஒன்றில் அவளுக்கு அழைத்திருந்தான். அவள் அழைப்பை ஏற்கவே இல்லை. அவளோ அவன் விட்டுச்சென்ற நாளோடு வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள். வீட்டினருக்கு மட்டுமில்லாது சுற்றத்திற்கும் இவள் அகிலோடு ஒன்றாக வாழ்ந்து பிரிந்து வந்துவிட்டதாக செய்தி பரவியிருந்தது.

மயூரியின் தந்தையிடம் இந்த திருமணத்தையும் அகில் இப்போதைக்கு வேண்டாம் என்று கூறிவிட, மயூரியோ இனி எப்போதுமே வேண்டாம் என்றுவிட்டாள். அகிலும் இப்போதைக்கு இதை இப்படியே விட்டுவிட்டு கொஞ்ச நாள் சென்று மயூரியோடு பேசிப்பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டான்.

***

அகில் வீட்டுக்கு வர எப்படியும் இரவு ஏழை தொட்டுவிடும். “நாராயணா… இவன் சேட்டை இருக்கே…” என ஆரம்பித்து அன்று முழுநாளும் கெளதம் செய்யும் ஒவ்வொரு செயல்களை சொல்லி அவனையும் அந்த வட்டத்திற்குள் இழுத்துக் கொள்வாள் ஐரா.

வைத்தியசாலை விட்டு வெளிவர கிருஷ்ணாவினதும், அனன்யாவினதும் மோதிரங்கள் இரண்டும் அனன்யாவின் கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செய்னில் கோர்த்து அன்றே அணிந்துக் கொண்டாள். ஏதோ ஒரு பலம் அவர்கள் உடனிருப்பது போல.

இப்படியே மாதம் ஆறு கடந்திருந்தது. கெளதம் அவன் சுட்டித்தனங்களை காட்ட ஆரம்பித்திருந்தான். இருவருக்கும் அவனுடனான நெருக்கம் இன்னுமின்னும் அதிகரிக்க மற்ற பக்கம் ரம்யாவும் உடல் தேரியிருந்தார்.

அவரிடம் இருந்து தினம் வரும் அழைப்புகள் வெறும் வசவுகளாகவே இருக்க அகில் இப்பொழுதெல்லாம் அழைப்பை ஏற்பதையே தவிர்த்துவிட்டான்.

“என்னங்க இப்படி ரெண்டு பேரும் இருந்தா அவங்க வாழ்க்கை என்னாகுறது?”

நாம யோசிச்சு என்ன பண்ண? யோசிக்கவேண்டியவங்க யோசிக்கல.”

“அதுக்காக இப்படியே விட்டுட்டு இருக்க முடியுமா? யாராவது ஒருத்தர் இறங்கி வந்தாக் கூட எதாவது பேசலாம்.”

“அகிலோட பேசுனா சரியா வராது. ஐரா கூட பேசிப்பாறேன்.”

“காலம் தாழ்த்தாது அப்போதே ஐராவிற்கு அழைத்தார் ரம்யா.

“அத்தம்மா எப்டி இருக்கீங்க?”

“நானா கால் எடுக்கணுமா? கால் எடுத்தா மட்டும் முந்திட்டு என்னை நலன் விசாரிக்கிற.”

“எங்க நேரம் இருக்கு,இதோ இவன் பின்னாடி ஓடியே நேரம் முடிஞ்சு போயிடுது. அவன் வந்ததும் அவங்கிட்ட கொடுத்துட்டு பேசலாமே.”

“அவனே வேலை விட்டு எவ்ளோ டையார்ட்ல வருவான், வந்து இவங்கூட சேர்ந்துட்டா ரெண்டையும் சமாளிக்க நான் படற அவஸ்தையிருக்கே”

“என்னவோ காரணம் சொல்ற. ரெண்டு வருஷமாகுது. அவனுக்கும் வயசு ஏறிட்டே போகுது, நீ இப்டி இருக்கப்ப அவன் வாழ்க்கைய பத்தி யோசிக்கவும் மாட்டான். நீயும் இப்படியே எவ்வளவு காலத்துக்கு இருக்கப்போற? அதோட சுத்தி இருக்கவங்க ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமா சொல்றப்ப எனக்கும் மனசுக்கு என்னவோ போல இருக்கு.” அவர் பேசப்பேச அமைதியாக கேட்டுக்கொண்டு மட்டும் இருந்தாள் ஐரா.

“பேசாம இருந்தா என்ன அர்த்தம் ஐரா. அப்பா இருந்திருந்தா இப்டி விட்டிருப்பாங்களா?”

“எனக்குன்னு யாரும் இல்லாததுனாலதானே இப்டி தனிச்சு இருக்கேன். நீங்க கூட என்னை தள்ளி வச்சுட்டிங்கல்ல.”

“ஐரா, என்ன நீ இப்படி பேசுற, நீ வீட்ல இருந்து போறப்ப நான் நல்லாவா இருந்தேன்? நானும் என் பொண்ண இழந்துட்டுதானே இருக்கேன். இந்த மனுஷன் ஏதோ புத்தியில்லாம பேசினாருன்னா நீங்களும் போய்ட்டீங்க. இருக்க ஒருத்தனைக் கூட பக்கத்துல வச்சு பார்த்துக்க முடியாமல்ல நானும் இருக்கேன். ஏன் என் பேரனோட இருக்கக்கூட எனக்கு கொடுத்து வெக்கல.” அவருக்கும் உள்ளுக்குள் இருக்கும் கவலைகளை யாரிடம் கூறுவார். இவளிடம் கொட்டிவிட்டார்.

அவர் பேச்சுக்கு இடைபுகுந்தவள் “உங்க பேரன் இல்லை. அது என் பையன் மட்டுந்தான்.

“ஆமாமா ரெண்டு பேரும் இத மட்டும் சொல்லிக்குங்க. அம்மாடி பேசாம நீங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக் கோங்களேன்.”

“அத்தம்மா… என்ன பேச்சிது. அகி கிட்ட மட்டும் கேட்டுராதீங்க. இப்படித்தான் கண்டதையும் பேசுவீங்களா?”

“நான் என்ன தப்பா கேட்டுட்டேன். ஊருக்கெல்லாம் கெளதம உங்க பிள்ளைனு சொல்லி வச்சிருக்கீங்க. நீங்க ரெண்டு பேரும் இப்படி இருந்து அவன் வாழ்க்கைய கெடுக்கப் போறீங்களா? நீயும் இப்படியே தான் இருப்பன்னா அவனுக்கு அவன் வாழ்க்கையை அமைச்சுக்க சொல்லு. இல்ல இது பத்தி நா அகில் கூட பேசத்தான் போறேன்.”

அன்று இரவு ஐராவிற்கு தூங்கா இரவாங்கிப் போனது. நடுநிசி தாண்டி கெளதமை பார்க்க அறையை திறந்தான் அகில் . சின்னவன் நன்றாக உறங்கியிருக்க ஐராவை அருகில் காணோம். மெல்லாமாய் உள்ளே வந்தவன் அறையை தாண்டி பேல்கனிக்குச் செல்ல அங்கே ஓரமாய் கால்களைக் கட்டிக்கொண்டு தலையை அதில் சாய்த்து அமர்ந்திருந்தாள். இவனும் அமைதியாய் அவளருகே சென்று அமர்ந்துக்கொண்டான்.

அவனை உணர்ந்தவள், தலை உயர்த்தி,”ஏன்டா அகி,என்னால உனக்கு கஷ்டமா இருக்கா? “

“யாரு அப்டி சொன்னா?”

“யாரும் சொல்லல, நானாதான் கேட்குறேன்.”

“நீயே கேக்குறதுன்னா இப்படி கேட்க மாட்டியே, இப்டி வந்து உட்கார்ந்துட்டா சரியாகிருமா? என்னன்னு சொன்னாதானே தெரியும்.” மெல்ல எழுந்து அவந்தோள் சாய்ந்துக் கொண்டவள், “எதுக்குடா என்னை இப்படி அநாதையா விட்டுட்டு போய்ட்டாங்க.”

“நீ அநாதைனா அப்போ நான் உனக்கு யாரு? கெளதம் யாரு? “

“அது வந்து…”

“ஐரா,நான் எப்போவும் அடுத்தவங்க என்ன சொல்ராங்க பார்க்க மாட்டேன். எனக்கு எப்டி இருக்கணுமோ அப்டி தான். எனக்கு பிடிச்சா மாதிரி இருங்கன்னு யாரையும் கட்டாயப்படுத்தவும் மாட்டேன். உன்னையும் சேர்த்து தான்.”

அவன் பேச்சைக்கொண்டே அவனோடு பேசலாம் என எண்ணியவள், “ஆனால் சில நேரம் நாம செய்றது அடுத்தவங்கள பாதிக்கும்னா மாத்திக்கலாம்ல.”

“கண்டிப்பா, ஆனா இன்னிக்கு வரைக்கும் நா அப்டி நடந்துகிட்டதில்லையே.”

“நீ இல்லை, நாம நடந்துக்குறோம்.”

“வாட் யூ மீன்.”

“இல்ல, நாம இப்டி இருக்கதால மயூரி வீட்லயும் ஏதும் பேச முடிலன்னு அத்தம்மா சொல்ராங்க. அதோட நீயும் இப்டியே எவ்ளோ நாளைக்கு தான் இருக்கப்போற? அதுனால “

“அதுனால, நா கெளதம் பார்த்துப்பேன் நீ வீட்டுக்கு போய் இருக்கலாம்ல.”

“ஓஹ் அந்தளவுக்கு யோசிச்சிடீங்க? நா வீட்டுக்கு போய்ட்டா உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு என் வாழ்க்கையை நா பார்த்துப்பேன்னு நினைசுட்டீங்க.”

“நாராயணா…”

“அவரை சும்மா எதுக்கு இதுக்குள்ள இழுக்குற?

“அப்டில்லாம் இல்ல அகி. நான் எல்லாரையும் இழந்துட்டேன். அவங்க உன்னை வச்சுக்கிட்டே தனிச்சு இருக்காங்கல்ல, அதான்.”

“ஓஹ் அப்றம்?”

“கண்டிப்பா உன்னால இப்டியே இருக்க முடியாது, நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா. உங்க லைப் மட்டும் இல்லை. அவங்க லைபும் உன்னோட முடிவுலதான் இருக்கு.”

“ஓகே தென், நீ முடிவு பண்ணிட்ட, என்னை அனுப்பணும்னு. ஓகே பைன்.’ எழுந்தவன், “நா போறேன், நா எப்டி இருக்கப்போறன்னு நீயும் பார்க்கத்தானே போற, நீயும் இப்படியே இருக்கலாம்னா நானும் எப்பிடி இருக்கேன்னு நீயும் பாரு. அதோட இனிமேல் உன்னோட காலேஜ என்னால பார்த்துக்க முடியாது. வந்து பார்த்துக்கோ, இல்ல என்ன வேணா பண்ணிக்கோ.”

செல்வதற்காய் திரும்பியவன், இவள் பக்கம் திரும்பாது, “இனி நீயா கூப்பிடற வரை இங்க நா வர மாட்டேன். ஆனா என் பையனை பார்க்கணும்னு நினைக்குறப்ப எல்லாம் எங்கிட்ட அழைச்சுப்பேன். வரேன்.”

“அகி…”

“இனி எங்கிட்ட எதுவும் சொல்லாத, உன்னால எல்லாம் முடியும்னு தானே இந்த முடிவு எடுத்திருக்க, கண்டிப்பா உன்னால முடியும்.எனக்கு அது எப்போவும் தெரியும். ஆனா மத்தவங்க பேச்சுக்கு என்னை தள்ளி வச்சுட்டல்ல.”

அவனை அப்படியே பின்னால் வந்து அணைத்துக் கொண்டாள்.”உன்னை ஹர்ட் பண்ணனும்னு எல்லாம் சொல்லல. இப்படியே எவ்ளோ நாளைக்கு இருக்க முடியும். அத்த பேசவும் தான் எனக்கும் புரிஞ்சது.”

மாலை அன்னை அவனுக்கு அழைத்து பேசியது இப்போது அவன் நினைவில்.

‘இப்படியே அந்த வீட்டுக்குள்ளேயே ஐராவை வச்சிருக்க போறியா? அந்த பொண்ணு இப்போ இருக்க நிலைய ஏத்துக்கிட்டு அவ வாழ்க்கைய வாழ வேணாமா? நீயும் போய் அவகூடவே இருந்துட்டு என்ன பண்ற? முதல்ல அவ படிப்பை முடிக்க சொல்லு, அதோட காலேஜ அவளுக்கு ரன் பண்ண கொடுத்துரு, தானா அவளே அவளை மீட்டிப்பா.’

தன் அன்னை கூறுவதும் ஒரு விதத்தில் சரி என்றாலும் அவளை எப்படி தனியே என நினைத்தவன் சற்று தூரமாகி அவளுக்கு அவளை மீட்டிக்கொள்ள வழி செய்ய நினைத்தான்.

ஆனால் அவளோ அவளுக்கென்று ஒரு வட்டம் அமைத்து வேலையும் வீடும் மட்டும் என்றாகிப்போனாள்.

அதில் தான் கெளதமை விட்டும் சற்றே விலகிப் போய்விட்டாள்.

தொடரும்….

இனி இன்றைய நாள் முதல் அவள் வாழ்க்கை…

அடுத்த அத்தியாயத்திலிருந்து…