அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 3

1656644607723-98706ab7

An-3

“ஐரா என்ன பண்ற? “

அவள் அருகே அமர்ந்து அவள் தலையில் கை வைத்தான்.

அவன் கால்களைக் கட்டிக்கொண்டவள் அவன் முழங்காலில் கன்னம் வைத்துக்கொண்டாள்.

“எதுக்கு இப்டி பண்ற?

இவ்ளோ பெரிய கம்பெனி அசால்ட்டா மேனேஜ் பண்றவ வீட்ல மட்டுமே இப்டி. ஏன்?”

மௌனமாக இருந்தாள்.

“எப்போவும் என் பக்கம் என்ன ஆனாலும் அதை நான் மதிக்கவே மாட்டேன் உனக்கே தெரியும்.”

“உன் மரியாதை எனக்கு எப்போவும் முக்கியம் அது உனக்கும் தெரியும்.” ஐரா கூறினாள்.

“ஏற்கனவே இருக்க பேச்சுதானே, புதுசா யாரும் ஒன்னும் சொல்லிடப்போறதில்லை. சோ ஐ கேன் மேனேஜ். “

“ஏன் இப்டி?”

“ஐரா,கெளதம் மனசு ரொம்ப ஹர்ட் ஆகி இருக்கான். நானும் அதுக்கு பாதி பொறுப்பு. சோ நானும் சேர்ந்துதான் அதை சரி பண்ணனும். ரெண்டு பேரும் பிராமிஸ் பண்ணிருக்கோம்.”

“அதுக்காக இதுதான் முடிவா? இதையே நீ வெளில இருந்தும் பண்ணலாம் அகி.”

“உனக்கு என்ன ப்ராப்ளம் நான் இங்க இருக்கதால? “

“எனக்கு ஒன்னும் இல்லை, ஐ வோன்ட் கேர் எனி ஒன், பட் உனக்கு ஏதும் இதுனால ப்ராப்ளம்?”

“அது ப்ராப்ளமே இல்ல ஐரா. உனக்கே அது தெரியும். இதையே புரிஞ்சிக்காதவங்க எப்டி?’ சொல்லவந்ததை இடையில் நிறுத்தியவன்,

‘அது பற்றி பேச வேண்டாம் டா. இப்போதைக்கு இவனை பார்த்துக்கலாம். ஜஸ்ட் ஒரு ஆறு மாசம். அப்றமா யோசிக்கலாம்.”

“அப்போ அந்த ஆறு மாசம் நான் கம்பனிக்கு வரல. நீயே எல்லாம் பார்த்துக்கோ. நேற்றே நான் முடிவு பண்ணுனதுதான். கெளதமிற்க்காக மட்டுமே இருக்கலாம்னு இருக்கேன்.

“ஆப்டர்?”

“பார்க்கலாம், நானே நாளைக்கு மீட்டிங்ல சொல்லிர்ரேன்.”

“அப்பாவும் நாளைக்கு வருவாங்க.”

“அதெல்லாம் சமாளிச்சுப்பேன்.” புன்னகைத்தாள்.

“அப்போ என் நிலை? “

“அதான், உன் சைட் நீ பார்த்துப்பன்னு சொன்னல்ல.”

“இப்டியே தான் இருக்கப்போறமா? “

“தெரியல அகி.”

“இன்னும் நிறையா இருக்கு டா. வாழ ஆரம்பிக்கவே இல்லை. அதுகுள்ள லிவிங் ப்ரோப்லம் அப்றம் தனியா,ஆபிஸ் ஸ்ட்ரெஸ் இப்போ கெளதம்… “

“என்னால உன் லைப் ஸ்பாயில் பண்ணிக்க வேணாம் அகி.”

“அதெல்லாம் ஸ்பாயில் ஆகாமதான் மேடம் பிரீஸ் பண்ணி வச்சிருக்காங்களே. எனக்காக எப்போ உருகுதுன்னு பார்க்கலாம்.”

 “நீயா உன் லைப சிக்கல் ஆக்கிக்குற அகி.”

“நான், நம்மளை பத்தி பேசுனா என்னை மட்டும் பற்றி பேசுறது நல்லா இல்ல ஐரா.”

அவன் காலை கிள்ளினாள். “வலிக்குது டி.”

“எனக்கும் வலிக்குது அகி.கெளதம் மட்டும் போதும். நான் இப்படியே இருந்துப்பேன் அகி.”

இடையே அவன் அலைபேசி ஒலி எழுப்பியது 

“ஓஹ் கோட்.நேத்து நைட் அம்மாக்கு கால் பண்றேன் சொல்லிருந்தேன். ரெண்டு நாளா சொல்லிட்டேதான் இருக்கேன் ஆனா மறந்தே போய்ட்டேன். “

அன்னையின் அழைப்பை பார்த்தவனுக்கு அப்போது தான் ஞாபகமே வந்தது.

“ஹலோ ரம்யா மிஸ், எப்டி இருக்கீங்க? “

“உன்னை மகனா பெத்திருக்கேன்ல. ரொம்ப நல்லா இருக்கேன்டா. “

“கண்டிப்பா ரம்யா மிஸ். அப்போன்னா நல்லா மட்டுமே தான் இருப்பீங்க.”

“உன் வெட்டி கதை கேட்குறதுக்கு நான் பேசல, என் மருமக கிட்ட போன குடு. “

அலைபேசி வழியே அவர் குரல் இவளுக்கும் நன்றாகவே கேட்டது.

“அத்தம்மா… “

“இப்போ எப்டி இருக்கு ஐரா?”

“பரவால்ல அத்தம்மா… “

“குரலே ஒரு மாதிரி இருக்கு. அவன் அங்க வெட்டியா உட்கார்ந்துட்டு என்ன பண்றான். என்ன சாப்ட நீ?”

“அதெல்லாம் நாம நல்லா தான் பார்த்துப்போம்.”

“ஆமா பார்த்துகிட்ட லட்சணம் தான் தெரிதில்ல.”

அவன் எழுந்து போகப்பார்க்க, அவன் கை பிடித்து அமர்த்திக்கொண்டாள்.

“வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் இருந்துட்டு போறியா டா? “

“அதெல்லாம் வேண்டாம் அத்தம்மா. அப்போ இருந்ததுக்கு பரவால்ல.”

“சரி… இப்போ எதுக்கு அவன் அங்க வந்திருக்கானாம். “

“அதான் நானும் கேட்டுட்டே இருக்கேன். சொல்ல மாட்டேங்குறான்.”

“இப்டியே ரெண்டு பேரும் ரெண்டு பக்கமா எவ்ளோ காலத்துக்கு இருக்கப் போறீங்க? கெளதம் பத்தி யோசிக்க வேணாமா? “

“என்னால இவன் லைப் ஸ்பாயில் பண்ணிக்க வேண்டாம் சொன்னேன் அத்தம்மா. கேட்க மாட்டேங்குறான்.”

“ஐரா, நான் உங்களை பத்தி பேசிட்டு இருக்கேன். நீ என்ன அவனை பத்தி பேசுற?’

‘அவன் எப்படியோ போகட்டும். அவன பத்தின பேச்சை விடு.”

“நீயெல்லாம் அம்மாவா? பொறுப்பே இல்லாம பேசுற?”அகில் இடையில் கேட்க,

“அம்மா பேச்சு எப்போ கேட்டிருக்க நீ? எதுலயும் உன் இஷ்டம் தானே. ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கி வச்சிட்டு இருக்கேன்டா. வாய மூடிட்டு போய்டு.”

“அத்தம்மா, கொஞ்ச நாளைக்கு ஆபிஸ் போக வேணாம்னு முடிவெடுத்திருக்கேன். ஆபிஸியலா நாளைக்கு இன்போர்ம் பண்ணிருவேன்.”

“சரிடா, ராம்க்கு நீ சொல்றப்பவே தெரிஞ்சுக்கட்டும். நான் ஏதும் சொல்லிக்கல. 

“தேங்க்ஸ் அத்தமா.”

“கொஞ்சம் பிரீயா இரு. அதான் அவன் இருக்கான்ல பார்த்துக்கட்டும்.”

“ம்மி… ஏற்கனவே உன் புருஷன் ஒட்டுமொத்த வேலையும் என் தலையில் கட்டிட்டு இருக்கார். காலேஜ் ஒர்க்ல மட்டும் தான் கொஞ்சம் பிரீயா இருந்தேன். அது ரொம்ப டென்சன் ஒர்க் மம்மி.”

“அப்போன்னா அதுதான் உனக்கு கரெக்டா இருக்கும்.”

“இல்ல அத்தம்மா, வீட்ல இருந்து பார்த்துக்குற போல பண்ணிக்கலாம். இல்லன்னா அகிலால எல்லாம் மேனஜ் பண்ணிக்க முடியாது.”

“ஹ்ம் சரிடாமா.”

“சின்னவன் என்ன பண்றான்?”

“கார்ட்டூன் பார்த்துட்டு இருக்கான்.”

“சரிடா உடம்பு பார்த்துக்கோ. நான் அப்றம் பேசுறேன்.”

“இந்தா அகி” அவனிடம் அலைபேசியை நீட்ட எடுத்துக்கொண்டு எழுந்து அறையின் வெளித் தாழ்வாரத்திற்கு சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக்கொண்டான் .

“சொல்லு ம்மி… “

“அகி நீ பண்றது நல்லாவா இருக்கு?”

“ஐ க்நொவ் வாட் அம் டுய்ங்.”

“ஆமா தப்புன்னு தெரிஞ்சே பண்றன்னு எனக்கும் நல்லாவே தெரிது அகில். அப்பா ரொம்ப கோவமா இருக்கார்? அந்த கோபத்தைக்கூட அவ மேலதான் காட்டுவார்.”

“என் பர்சனல் தலையிட வேணாம்னு சொல்லிருக்கேன் ம்மி.”

“உன் பர்சனல்குள்ள தானே நானும் அப்பாவும் இருக்கோம். எங்க பையன் பத்தி கவலை படக்கூட உரிமை இல்லையா என்ன. நான் என்ன நாலஞ்சு பெத்து வச்சிருக்கனா? ஏன்டா இப்டி பண்ற?”

“கொஞ்ச நாள் போகட்டும் ம்மி. பார்க்கலாம்.”

“உன் கொஞ்சநாள் எப்போ வரும்னு சொல்லேன்? மூனு வருஷமா கேட்டுட்டு இருக்கேன். ரெண்டு பேருமே இப்டி அடம் பண்ணிட்டு இருக்கீங்க? ரெண்டு பேருக்கும் நடுவுல நான் தானே தவிச்சிட்டு இருக்கேன். என்னை யாரு மதிக்குறா? கொஞ்சமாவது சின்னவனை பத்தி யோசிக்கிறீங்களா?”

“ம்மீ…அடுத்தவங்களுக்காக வாழ முடியாதும்மி. பிடிச்சிச்சிருக்கதை விட ரெண்டு பேருக்கிடையேயும் பிடிப்பு இருக்கணும். அது இல்லன்னா இப்படித்தான்.”

“புதுசு புதுசா ஒன்னொன்னும் சொல்லாத அகில். கல்யாணங்கிறது நீங்க நினைக்குற போல இல்லை.

 நீ பண்றது எல்லாமே சரின்னு சொல்லிக்க ஏதாவது காரணம் சொல்லிடற.”

“அப்டில்ல ம்மி…”

“என்ன வாழ்க்கை டா இது? அசிங்கம் பிடிச்சவனே…நீயும் சந்தோஷமா இல்லை எங்களையும் நிம்மதியா வச்சிருக்கியா? பேசாத.”

திட்டிவிட்டு இவன் பதில் பேசும் வரை காத்திருக்காது துண்டித்து விட்டார்.

அன்னை திட்ட ஆரம்பிக்கவுமே இருக்கையில் அமர்ந்தவன், அலைபேசியை ஸ்பீக்கர் மோடில் போட்டுவிட்டு பக்கத்திலிருந்த ஸ்டூலில் வைத்துவிட்டான்.

இருவருக்குமான திட்டு என்பதால் அவளும் கேட்கட்டும் என்றுதான் அப்படி செய்தது.

“சந்தோஷமா? நீ பேச்சு கேட்குறது போதாதுன்னு நானும் அதை கேட்கணுமா?”

“ப்ச்… விடு ஐரா. அவங்களுக்காகவெல்லாம் நாம வாழ முடியாது.”

“உங்களுக்காக நீங்க வாழ்ந்து அதை நீங்க நல்லா ருசிச்சும் பார்த்தாச்சு.”

“அதான் சொல்றேன், ருசிச்சது சுவைக்கல.”

“அதுக்காக ஒவ்வன்னா ருசி பார்க்க முடியுமா? “

“அதுலென்ன தப்பு? “

“கொன்னுருவேண்டா போய்டு. வாழ்க்கைனா புளிப்போ இனிப்போ அதுக்கேத்தாப்ல நம்ம நாக்கை தான் சரி பண்ணிக்கணும்.”

“ஹா ஹா…” சிரித்துக்கொண்டே அவள் தோள்களில் கையிட்டு தன்னோடு சேர்த்துக்கொண்டவன்,

“ஐரா நம்ம நாக்குலேயே ஒவ்வொன்னையும் ருசிச்சு பார்க்க பார்ட் பார்ட்டா பிரிச்சு வச்சிருக்கு. சோ ஒரே டேஸ்ட்ட எப்டி அதுவும் ருசிக்கும். பாவம்ல.”

“அகி… வாழ்க்கை பத்தி பேசுனா சாப்பாடு பத்தி சொல்ற?”

“நீதானே ருசிச்சு பார்த்தேன்னு சொன்ன.”

“எல்லாமே நம்மளுக்கு சரியா அமையாது அகி.”

“அதையேதான் நானும் சொல்றேன் ஐரா. இப்டியே காலம் பூரா நான் இருப்பேன். ஆனா உன்னால இருக்க முடியாது.”

அவள் தோள் பற்றி தன் முன் நிறுத்தியவன், அவள் கண்களை நேராக பார்த்து,

“இந்த ஆறு மாசம் உனக்கு மட்டுமா வாழு. உனக்காக மட்டும். ஐரா நந்தனா மட்டும். சரியா இன்னைல இருந்து அஞ்சு வருஷம் பின்னாடி போலாம்.”

“எனக்கு அந்த காலத்துக்கு போக இஷ்டமில்லை அகி.”

“அங்க போக வேணாம்டா. அப்போ இருந்த ஐராவா மட்டும் இரு.ஜஸ்ட் ட்ரை பண்ணு. சரியா ஆறுமாசம் கழிச்சு இப்போ நாம இருக்க இதே இடத்துல நாம திரும்ப இது பத்தி பேசிக்கலாம். அதுவரைக்கும் நம்ம லைப் பத்தி நீயோ நானோ பேச வேணாம்.

இடையில் யாரு பேசுனாலும் மைண்ட் பண்ணவேணாம்.”

அவள் அவனையே பர்த்துக் கொண்டிருக்க, “என்ன ஓகேவா?” கேட்டான்.

“ஹ்ம். அப்புறம் நான் என்ன முடிவெடுத்தாலும் ஒத்துக்கணும்.”

“முடிவை எடுத்துட்டு அதுகூட பயணிக்க முடியாது. முடிவை எடுக்குறதுக்காக பயணிக்கலாம். அதுகப்பறம் நீ என்ன முடிவெடுத்தாலும் ஓகே தான்.”

“ஹ்ம்…” அவளை தன் தோள் வளைவுக்குள் கொண்டு வந்தவன்,

“ரெண்டு பேரோட கனவு, ஆசை, விருப்பம் எல்லாமே ரெண்டு பேருக்கும் நல்லாவே தெரியும் ஐரா. எதுக்கு இல்லாம பண்ணிக்கணும். நானா விருப்பப்பட்டு இப்டி தள்ளி இருக்கனா? உள்ளுக்குள்ள எவ்ளோ வலின்னு என்னை விட உனக்கு நல்லாவே தெரியும்.’

‘நம்பிக்கை நாம ஏற்படுத்துறது தான். ஆனாலும் அந்த பிணைப்பு எந்த நிலைலயும் விட்ர கூடாதுல்ல? தளர்த்துறது விட்டு போகட்டும்னு இல்லையே. விட்டுப் போகமாட்டாங்கன்ற நம்பிக்கை தானே…’

‘ஐரா,ரெண்டு பேரும் தவற விட்டது அங்க தான். சரியாகுதா பார்க்கலாம். நான் இன்னும் கை நீட்டிட்டே தான் இருக்கேன். விரும்பி பிடிச்சா எப்போவும் விட மாட்டேன். ஆனால் எப்போவும் இழுத்து பிடிக்க மாட்டேன்.”

‘அவன் முகத்தில் இருந்த வலி மனதில் இருக்கும் சிறு துளிதான்’ என்பதை நன்கு உணர்ந்தாள் ஐரா. அவன் நீட்டியிருந்த கையைப் பற்றிக்கொண்டவள்,

“உன்ன ரொம்ப மிஸ் பண்ணுனேன் அகி.” எனக் கூறி அவன் தோள் சாய்ந்துக்கொண்டாள்.

“இனி என் ஐராவை மிஸ் பண்ண முடியாது. ஐ வாண்ட் ஹேர் பேக்.”

“ரொம்ப நேரமாச்சு. கெளதம் என்ன பன்றான் பார்க்கலாம் வா.” என அவளை அழைத்துக்கொண்டு முன்னறைக்குச் சென்றான்.

கெளதம் அப்படியே சோபாவில் உறங்கியிருக்க, ஐராவை அருகமர்த்திக்கொண்டு இரவுணவை செய்தான்.

அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்ட அன்பின் அகிலம் அவன்.