அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 5

1657274321500-3820c7ca

நேரே அலுவலகத்திலிருந்து கல்லூரிக்குச் சென்றாள் ஐரா.

கல்லூரி நுழைவாயிலில் அமைக்கப்பட்ட இமாலயா என்ற பெயர் பார்த்ததுமே அவள் உள்ளுக்குள் சிலிர்த்துக் கொள்ளும்.

தானாய் ஒரு கர்வம் அவளை அத்தனை நிமிர்வாய் காட்டும். சின்ன பெண்தானே என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.

பார்ப்பவர்கள் கண்டிப்பாக மரியாதையை கொடுத்தே ஆகவேண்டும் எனும் மிடுக்கு அவள் உடல் மொழியில் இருக்கும். தானாய் பெற்றிட தேவையே இருக்காது. 

எப்போதும் கல்லூரிக்குள் நுழையவும் வாயிலில் இறங்கிக்கொள்வாள். அங்கிருந்து ஒரு அரைமணிநேரம் குறிப்பிட்ட ஒரு பிரிவை சுற்றிப் பார்த்துவிட்டுதான் அலுவலகத்திற்குள் நுழைவாள். 

 சீமேந்து பாதையில் சுற்றும் பார்வையை பதித்தவாரு அவள் நடக்க அவளோடு குறித்த பிரிவிற்கு பொறுப்பாக இருக்கும் ஆசிரியர்கள் இவளோடு இணைந்துகொள்வார்கள். அவர்களோடும் பேசிக்கொண்டே சுற்றத்தையும் கவனித்துக் கொண்டே வருவாள். 

 இன்றும் வளமைப்போலவே சென்றவள், சுற்றிப்பார்த்து விட்டு அங்கே இருக்கும் தேவைகளை அறிந்துக் கொண்டாள்.

சுற்றியும் ஒவ்வொரு பிரிவின் கட்டிடங்கள் இருக்க அதன் நடுவில் காங்கிரட் கல் பதித்த படி அமைப்பிலான பகுதி. அதில் மீட்டிங் ஏற்பாடு செய்யக் கூறியிருந்தாள்.

மாணவர்கள் அங்கே கூடியிருக்க அவர்களுக்கு முன்னால் ஆசிரியர்களும் நின்றிருந்தனர். அவர்களோடு இவளும் வந்து இணைந்துக் கொண்டாள். 

கல்லூரிப் பெண்களே அவளை சைட் அடிக்க பசங்களைச் சொல்லவும் வேண்டுமா? 

அதில் ஒருவன்,”டேய் எப்பிடிடா இன்னுமே நமக்கு ஜூனியர் போலயே இருக்காங்க.” 

 இன்னொருவன், “இதுக்கு நம்ம கிளாஸ் மெட்ஸ், இப்போவே ரெண்டு பசங்களுக்கு அம்மா போல இருக்காளுங்க.” 

 அவர்களோடு இருந்த சக தோழிகள் அவர்களை முறைக்கவென கூட்டத்தினுள் ஆங்காங்கே கொஞ்சம் சிரிப்பு கிண்டல்கள் என கொஞ்சம் சலப்பு. 

தலைமை ஆசிரியர் ரங்கநாதன், மதிய வணக்கம் தெரிவித்து மாணவர்களை அவர்களின் பக்கம் கவனத்தை திருப்பினார். 

“ஸ்டுடென்ட்ஸ் உங்க எல்லாரையும் நம்ம ஐரா மிஸ் மீட் பண்ணனும்னு சொல்லிருந்தாங்க. அதற்காகத்தான் இந்த அவசர மீட்டிங். எதுக்காகண்ணு அவங்களே சொல்லுவாங்க.” ஐராவை அழைத்தார். 

“ஹாய் டியர்ஸ். ரொம்ப நாளைக்கப்றமா மீட் பன்றோம. ஹோப் யூ ஆள் டுய்ங் கிரேட்.’  

‘ரொம்ப வெயிலா இருக்கா?” 

“அதெல்லாம் இல்ல மேம் நீங்க பேசுங்க.”

மாணவர்கள் சத்தமிட பகல் நேரம் என்ற போதும் சுற்றியும் அத்தனை கட்டிடங்கள் இருக்க வெயிலாக இருக்கவில்லை. இருந்தும் கட்டிடத்தின் வெம்மை,உச்சி வெயிலின் சூடும் சுட்டெரிக்கவே அவ்வாறு கேட்டுவைத்தாள்.  

“இரண்டு நாளைக்கு முதல், நம்ம காலேஜ்ல சின்ன இஸ்சு ஆனது உங்களுக்கே தெரியும். மாஸ்ட்லி இப்போ எல்லா இடத்துலயும் ஏற்படக்கூடிய ஒன்னுதான். ஆனாலும் எங்க காலேஜ்ல ஏற்பட்டது எனக்கு என்னவோ கொஞ்சம் கஷ்டமா இருந்தது.

இவ்ளோ கேர்லெஸ்ஸா இருந்துட்டேன்னு. ஏன்னா என் பொறுப்புல இருக்க எதுலயும் இப்டி எந்த விஷயமும் நடக்குறது நான் விரும்புறது இல்லை. பிகாஸ் அம் பேர்பெக்ட்.” 

 “வி கினோவ் இட் வெல் மேம்.” சில மாணவர்கள் சத்தமாகவே கூறினர். 

 புன்னகைத்தவள், “பட் அன்னைக்கு ஸ்டடிஸ் நடக்கலன்னு அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. 

 

ஆசிரியர்கள் அவளைப் பார்க்க, “முன்னாடி இருந்தவங்க எப்படி படிச்சாங்க? ஏன் நானே அப்டித்தான் படிச்சேன். ஸ்மார்ட் ரூம் ஒன் ஓர் டூ. இப்போதான் மொத்த காலேஜ்க்கும். 

 

சிலபஸ் எல்லாம் லேப்ல, அன்னைக்கான பாடத்தோட ரெக்கார்டஸ்,பேப்பர்ஸ் எல்லாமே காலேஜ் டெஸ்க்டாப்லன்னு சொல்றது எல்லாம் ரீசனா எடுத்துக்க முடியாது. 

 அதோட அன்னைக்கு இஷுல நான் கண்டிப்பா எதிர்பார்த்த ஒன்னு எனக்கு நடக்கல, எதிர் பார்க்காத ஒன்னு எனக்கு நடந்திருக்கு. 

 எனக்கு கம்பளைண்ட் பண்ண வர நேரத்துல இங்க நீங்க சரி பண்ணிருக்கலாம். அட்லீஸ்ட் என்ன ப்ரோப்லம்னு பார்க்கவாவது செஞ்சிருக்கலாம் நோ யூஸ்.

பட் பர்ஸ்ட் இயர் பசங்க ரெண்டு

பேர்தான் பிரச்சினை என்னனு கண்டுபிடிச்சு சரி பண்ணுனாங்க.

நானே எதிர்பார்க்கல. நமக்கென்னனு மத்தவங்களை போல இருக்கல. அதோட அவங்களும் அதுல கத்துக்கிட்டாங்க.

சோ அம் ப்ரௌட்லி ஜோஇன் தெம் வித் மை கம்பனி.” 

கேட்டுகொண்டிருந்தவர்களுக்கு சில நொடி சென்றே அவள் என்ன சொன்னால் என்பது புரிய கைத்தட்டி தங்கள் மகிழ்வை தெரிவித்தனர். 

அடுத்து அந்த இரண்டு மாணவர்களையும் அழைத்து வாழ்த்து கூறியவள்,அவர்களை அறிமுகப்படுத்தினாள். அவர்களுக்கான அந்த தவனைக்கான கல்லூரி கட்டணம் கட்டத் தேவையில்லை ஆனாலும் அது அவர்களின் முயற்சிக்கான சொற்பமான பரிசில் என்றும் கூறினாள். 

 எப்போதும் பணம் கொண்டு திறமையை மட்டப்படுத்தக் கூடாது. ஆனாலும் அவள் அவர்களுக்கு அது அப்போதைக்கு பெருமதியானது என்பதால் செய்திருந்தாள். ஒரு மாணவன், நடுத்தர குடும்பத்தை சேர்ந்திருக்க அவனுக்காக அவ்வாறு செய்திருந்தாள். 

 

“கண்டிப்பா நம்ம கம்பனில முதல் இடம் நம்ம ஸ்டுடென்ட்ஸ்க்கு தான். சோ டூ யூர் பெஸ்ட் டியர்ஸ். தேங்க்யூ.” எனக் கூறி பேச்சை முடித்துக்கொண்டாள்.  

அத்தோடு அலுவலகத்தில் அந்த இரண்டு மாணவர்களை சந்தித்தவள்,

அவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே வேலையில் சேரலாம், அதுவும் படிப்பை பாதிக்காத வகையில் பார்ட் டைம் வேலையாக பார்க்க இப்போதைக்கு அனுமதி உண்டு எனவும் கூறியிருந்தாள். 

 அதன் பின் நேரத்தை பார்க்க மணி இரண்டு பிந்தி முப்பதை தொட்டுக்கொண்டிருகந்தது. கெளதமை சர்ப்ரைஸ் செய்யலாம் என அங்கிருந்து அப்படியே கெளதமின் பள்ளிக்கு கிளம்பினாள் ஐரா. 

 

வண்டியில் ஏறியதும் அகிலுக்கு அழைத்தாள்.

“அகி பிஸியா?” 

“சொல்லு ஐரா.” 

 “நான் கெளதம் பிக்கப் பண்ண போய்ட்டிருக்கேன்.” 

 “நாளைக்கு தானே போறேன் சொன்ன, இன்னிக்கு எதுக்கு? ” 

 “இல்ல நாளைக்குதானே வரேன் சொன்னேன். இப்போ போனா சந்thஷப்படுவான்ல.” 

 

“அது ஓகேதான். பட் இப்போ நீ அப்படியே போறது அவனுக்கு இஷ்டமில்ல ஐரா.” 

“ஏன்?” 

“ஏன்னா நீ ஆன்ட்டி மாறி இருக்கியாம்.” 

 “ஏதே நான் ஆன்டியா?” 

 “இல்லையா பின்ன. அவனுக்கு நீ ஐராவா வரணுமாம் அவங்கூட.” 

 “அகி அவன் சொன்னதா இல்லை இது நீ சொல்றதா? ” 

 “அது நீ எப்படின்னு சொன்னனா சோ, அவனுக்கும் அதுவே பிடுச்சுப் போயிடுச்சு.”

 “இதெல்லாம் டூ மச் அகி.”

 “அதான் இப்போதைக்கு நிஜம். நீ அப்டியே வீட்டுக்கு போய்டு ஐரா. அவன் வீட்டுக்கு வர்றப்ப, நீ வீட்ல இருந்தாலே ஹாப்பி தானே.” 

“ஹ்ம்ம்” 

 அவன் அங்கே அலுவலக வேலையை கவனித்துக் கொண்டே தான் பேசிக் கொண்டிருந்தான்.

“இப்போ இருக்க டிரஸ் கோட் ஆபிஸ்க்கு மட்டும். வேறெங்கேயும் யூஸ் பண்ணக்கூடாது புரிதா.”  

“ஹ்ம்… ” 

 “என்ன ஹ்ம்? சரி சொல்லு ஐரா.” 

 “என்ன நீ என்னை ரூல் பண்ற? ” 

 “அப்டில்லாம் இல்லை ஐரா. ஐ ஜஸ்ட் வாண்ட் டு பிரிங் யூ பேக்.” 

 “அகி, எதோ உள்ளுக்குள்ள பயம்மா இருக்கு.” 

 “நாமதான் அதைச் சொல்லணும் ஐரா. என்னாச்சு உனக்கு? இப்ப புரியுதா நீ என்ன தப்பு பண்றன்னு. இதனாலதான் வீட்டுக்குள்ள இருக்க சின்னவனைக்கூட உன் கண்ணுக்கு தெரில.” 

 “அகி…” 

 “சாரிடா, சொல்லிக்காமிக்கனும்னு இல்ல.” 

 

“புரிது அகி,ஐ வில்…” 

 

“யூ ஷுட் ஐரா.” 

 

“போதும்டா, இதுதான் சான்ஸ்னு விட்டா ரொம்பத்தான் பேசுற. நீயெல்லாம் பேசி நான் கேட்கணும்னு இருக்கு.” 

 

“அடியே, கொஞ்சமாச்சும் மரியாதை கொடுக்கத் தோணலையா? ” 

 

“அது மட்டும் வர மாட்டேங்குது அகி. என்ன பண்ணட்டும்…” 

 

அவள் பேச அந்த குரலில் கனிந்தவன்,

“எனக்கு அந்த ஐராதான் வேணும்டா.” 

 

“சரிடா ரொம்ப அருக்காத போதும். நான் வீட்டுக்கு வந்துட்டேன்.” 

 

அவனும் சிரித்துக்கொண்டு அவள் மீண்டுவிடுவாள் எனும் மகிழ்வில் தன் வேலைகளை கவனித்தான்.

 

வீட்டுக்கு வந்தவளை வியப்பாக பார்த்தார் வேலைக்கு இருக்கு மலர்.

 

“என்ன மலர் அப்படி பார்க்குற?” 

 

“இல்ல, இந்த டைம்க்கு வரமாடீங்களே, அதான் மா.” 

 

“அதுவா, இன்னிக்கு நேரமா வேலை முடிஞ்சது அதான் மலர். நாளைல இருந்து இனி வீட்லதான்.” 

 

“சரிங்கம்மா. சாப்பிட எடுத்து வெக்கட்டுமா?”

“கெளதம் வரட்டும் மலர், எனக்கு ஜூஸ் ஏதாவது கொடுங்க, குடிச்சிட்டு நான் குளிச்சிட்டு வரேன்.” 

 

கூறிவிட்டு தனத்தறைக்கு வந்தவள், அறையின் ஜன்னல் திரை சீலைகளைத் திறந்துவிட்டாள். தனக்கான உடையை எடுத்து

வைக்கவுமே மலர் குளிர்ப்பானத்தை கொண்டுவந்து கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு உள்ளே வந்து பருகினாள். அதன் பின் அவசரக் குளியல் ஒன்றையும் போட்டுக்கொண்டு வந்து உடைமாற்றிக்கொண்டாள். 

 

மாற்றியவள் அழுமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

தேடும் அளவில் அதை வைத்தவளில்லை. பத்திரப்படுத்தியது தான். நீண்ட வருடங்கள் பின்னே எடுக்கப்போகிறாள்.

தேடியது கிடைக்கவும் அந்த பெட்டியினை திறந்தாள். உள்ளிருந்ததோ இவளைப் போலவே திமிராய் மின்னுவதாய் ஒரு பிரம்மை.

எடுத்து விரல்களில் தொங்கவிட அது நீண்ட பிளாட்டினம் செயின்.

 

ஆடவர்கள் அணியும் வகை டிசைன் அது. அதில் இரண்டு ரிங் பெண்டன்ட்டாக தொங்கவிட்டிருந்தாள். இரு விரல்களும் எத்தனை காதல் மிளிர்வோடு போட்டுக்கொண்டிருந்தது. இப்போது தன்னிடம் இருக்க அது தன் கைக்கு கிடைக்கப்பட்ட நாள் எண்ணவுமே உடலில் ஒரு நடுக்கம். 

 அழுமாரியின் கதவுகளை பிடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் அதை தன் கழுத்தில் அணிந்துக்கொண்டாள். காதுகளில் சிறு வெண்ணிற ஒற்றை வைரக்கல் பதித்த தோடு. கையில் ஒரு தங்க வளையல் அதுவும் ஆடவர்கள் அணியும் டிசைனில். 

 தன் கூந்தலை உளர்த்திக்கொண்டே கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். மஞ்சள் நிறத்தில் ஒரு டாப் இடைவரை. முட்டிக்கு கொஞ்சம் கீழே மூங்கில் தண்டாய் மின்னும் கால்களை இருக்கிப்பிடித்த நீலநிற லேகின்ஸ். 

 அவளின் மிளிரும் அழகு எப்போதும் அப்படியேதானிருக்கும். அவள் தந்தையின் சாயல் அவள். உயரமும் உடல் மொழியிலே தானாய் தெரியும் நிமிர்வும் அவள் தந்தை அவளுக்கு விட்டுச் சென்றது.

 உணவில் கட்டுப்பாடெல்லாம் இல்லை. ஆனாலும் உடல் எடையில் மாறுபட்டதில்லை. இதோ இப்பொழுதெல்லாம் வயிற்றுக்குள் என்ன செல்கின்றது என்றுத் தெரியமாலே உண்டுக் கொண்டிருப்பவள் சற்றே மெலிந்திருந்தாள்.

“நீ சாப்பிடறதெல்லாம் எங்க போகுது, இருக்க வயிரோ ஒரு கைக்குள்ள அடக்கிறலாம். ஆனா ஒரு அண்டா சாபிட்ற நீ. இதுல உங்கம்மா நீ மெலிஞ்சிட்டன்னு சோகப் பாட்டு வேற. உனக்கெல்லாம் சாப்பிடக் கொடுத்தே பாதி சம்பளம் முடிஞ்சு போய்டும் போலயே…” 

 “நா உங்கிட்ட எப்போ கேட்டேன் எனக்கு சாப்பாடு போடுன்னு.” 

 “கேட்க வேற செய்யணுமா? புண்ணியமா போகட்டுமேன்னு பண்ண நினைச்சேன்.” 

 “எனக்கு சாப்பாப்பிடக் கொடுத்து நீ ஒன்னும் புண்ணியம் சேர்த்துக்க வேண்டாம்…” 

 “டேய், கண்ணு வெக்கிற. நீயும் சாப்பிட மாட்ட, சாப்பிடறப் பொண்ண என்ன பேச்சு பேசுற நீ.’

 ‘நீ சாப்பிடு என் ராசாத்தி.” 

 “நல்லா கொஞ்சிக் கொஞ்சி ஊட்டு. ஒருநாள் இல்ல ஒரு நாள் உன்னப்போல இவள் வரல, அப்போ இருக்கு.” 

 வாய் நிறைத்து இனிப்பை உண்டுக் கொண்டிருந்தவளோ அவரையும் அவர் உடல் பருமனையும் பார்த்துவிட்டு அவனை பாவமாய் பார்த்திட,

“இந்தளவுக்கில்லன்னாலும் இப்டி ஆகத்தான் போற.” கூறினான் அகில்.

 அன்றைய பேச்சுக்கள் நினைவில் ஒரு வளம் அவளை கூட்டிச் சென்றுக் கொண்டிருந்தது. முகத்தில் தானாய் புன்னகையும் வந்து ஒட்டிக்கொண்டது.

 “கெளதம் தம்பி வர்ர டைம் மா.” மலரின் குரலில் நனனவுக்கு வந்தாள் ஐரா. 

 “நான் போறேன் மலர்…”அவசரமாக தன்னை சரிசெய்துக்கொண்டு வெளியேச் சென்றாள்.

 வீட்டின் நுழைவாயில் இருந்து வீட்டுக்கு வர ஒரு நூறு அடி இடைவெளி. அதில் ஒரு பக்கம் வீடு வரை காங்க்றீட் கற்கள் பதித்து இருக்கும். அடுத்த பக்கம் சிறு தோட்டம். அதில் சுற்றும் மலர்கள் நடுவே புற்கள் பதித்து ஓரமாய் நால்வர் அமையும் வகையில் ஒரு வட்ட மேசையோடு இருக்கை. அதன் அருகே உயர்ந்த மாமரம் கிளை விட்டு செழித்து வளர்ந்திருந்தது. அவ்வளவே.

 அதுவெல்லாம் ரசிப்பதில்லை இவள். வீட்டின் வாயிலையே இன்றுதான் காண்பவள் போல பார்த்திருந்தாள். அதே நேரம் கெளதமை கூட்டிக்கொண்டு வரும் வண்டி நுழைய கண்கள் அதன் பக்கம் திரும்பியது.

 பின் கதவுகளை திறந்துக் கொண்டு கிழிறங்கினான் கெளதம். குண்டுக் கன்னங்கள் சிவந்து, இதழ்களை பிதுக்கிக்கொண்டு ஏதோ முனுமுனுத்துக் கொண்டு வந்தான்.

 ‘எப்போதும் போல தனியேதான் இருக்கணுமா’ சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு கழுத்தில் தொங்கிய தண்ணீர் பாட்டிலை கை இரண்டால் பிடித்துக் கொண்டு சோர்வாக நடந்து வந்தான்.

கதவருகே நின்றுக் கொண்டிருந்தவள் அவன் அவள் அருகே வரும் வரை அவனையேதான் பார்த்திருந்தாள்.

 எல்லா வீடுகளிலும் அன்னை தந்தைமார் பிள்ளைகள் பள்ளி விட்டு வரும்போது இருப்பதில்லை. வேலை சென்றிருப்பார்கள்தான். ஆனால் ஏதோ ஒரு வகையில் பிள்ளைகளோடு அருகிருப்பார்கள்.

அருகாமை, உடனிருப்பை உணர்த்த மறுக்கும் பொழுதுகளில் தான் பிள்ளைகள் மன உழைச்சலுக்கு ஆளாகின்றனர்.

 அவன் முகமும், சோர்வும் கண்டவளுக்கு உள்ளுக்குள் அத்தனை வலி. தன்னைத் தானே திட்டிக்கொண்டாள். ‘அவனோடு இருக்க வேண்டிய பல நேரங்களை தான் தவறவிட்டு விட்டேனே. என் மனசே என்னை மன்னிக்காதே.’

 வீட்டின் வாயில் வரை வந்தவன் அங்கே நின்றிருந்த கால்களை படிகளில் நின்றிருந்த பாதங்களையே முதலில் கண்டான். அந்த கால்களின் வழி தன் கண்களை மேலே கொண்டுச் சென்றவன் தன் அன்னை முகம் காணவும் 

 “ம்மி…”அவன் முகத்தில் பூத்த மலரைக் கண்டவள் அவன் உயரத்திற்க்கு மண்டியிட்டு அமர, அவள் கழுத்தில் கையிட்டு இருக்கி அணைத்துக்கொண்டான். 

 “ஐ மிஸ் யூ ம்மி…” 

 “ஐ டூ மிஸ் யூ சோ மச் கெளதம்.” சிகை கோதிக்கொண்டே எழுந்து அவனைத் தூக்கிக் கொண்டவள் அவன் முகத்தை எச்சில் படுத்தினாள். 

 “அச்சோ ம்மி, மீ டர்ட்டி” 

 “இன்னிக்கு மட்டும்… ” என்றவள் அவன் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்து வயிற்றோடு காலிட்டு அவனை தூக்கிக் கொண்டு அப்படியே அவனறைக்கு அழைத்துச் சென்றாள். 

 அவனை அமர வைத்து அவனோடு பேசிக்கொண்டே உடைகளை கழற்றியவள் மலர் கொண்டுவந்து தந்த பழச்சாற்றினை பருகச் செய்தாள். 

 “ம்மி இன்னிக்கு பிங்கி என் அப்பா ஹீரோ போல இருக்காராம் சொல்றா.அதானாலதான் நான் அவரை ஸ்கூல் கூட்டி வரவே இல்லையா கேட்டா.” 

 “ஓஹ்!” 

 “யெஸ் ம்மி. நானும் ஆமா சொல்லிட்டேன்.” வாய் பொத்தி சிரிக்க அவனை இடையோடு இழுத்து அணைத்துக்கொண்டான். 

 “அப்றம், அப்பா நான் என் டேபிள் போய் உட்காருற வரைக்கும் பார்த்துட்டே இருந்தாரா, நான் டாட்டா காமிச்சேனா, அப்றம் ப்பா ஸ்டைலியா ஸ்பெஷக்ஸ் போட்டுட்டு போனாங்களா… எங்க மிஸ் அப்போதான் உள்ள வந்தாங்க. அதுக்குள்ள நான் யாருக்கு கை காமிக்குறேன் பார்த்துட்டு,

“ஹூ இஸ் தட் ஹண்ட்ஸம் கேட்டாங்க.” 

 “ஹோ! அப்புறம்?” 

 “அப்றம் நொதிங் ம்மி. ஹி இஸ் மை டாட் சொன்னேன்.” 

 “உங்க அப்பா மிஸ்ஸ காணலையா? ” 

 “நோ ம்மி. அப்பா அந்தப்பக்கம் போனாங்களா, மிஸ் இந்தப்பக்கம் உள்ள வந்தாங்க. ஜஸ்ட் மிஸ் ம்மி. இல்லன்னா இன்றோ கொடுத்திருப்பேன்.” 

 “கிரேட் மிஸ்…

ஓகே கெளதம் வாஷ் பண்ணிட்டு சாப்பிடலாம் வா.” என அவனை குளிக்க வைத்து உடைமாற்றி அவனோடு இணைந்து உணவூட்டி தானும் மனம் நிறைவோடு உண்டாள்.

 மாலை வரை ஒன்றாய் நேரம் செலவிட்டாள். அதன் பின் பள்ளியின் வீட்டுவேலைகளை ஒன்றாக இணைந்து செய்தார்கள். மாலை இருவருமாக விளையாடிக் களைத்து உறங்கியும் போனார்கள்.

 வீடு வந்த அகில் இவர்களைப் பார்க்க கெளதமின் அறையில் உறங்கியிருந்தனர் இருவரும்.