ஐராவிற்கு தூக்கம் களையும் போது மணி ஏழு தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. அகிலின் பேச்சு சத்தம் கேட்கவும் தான் அவன் ஞாபகமே அவளுக்கு வந்தது.
‘நாராயணா…இவனை மறந்துட்டேனே.’
கூந்தலுக்கு ஒரு பேண்டை எடுத்து போட்டுக்கொண்டவாறே அறைவிட்டு வெளியில் வந்தாள்.
“இப்போதான் வந்தியா அகி? ”
“நான் வந்து அரைமணி மேல ஆச்சு ஐரா. ரெண்டு பேரும் நல்லா தூங்கவும் எழுப்பல.”
“நீ என்னை எழுப்பியிருக்கலாம்ல?” சொல்லிக்கொண்டே கிச்சனுக்குச் சென்றாள்.
“ஐரா, மலர் இப்போதான் கிளம்புனாங்க. சோ நான் அவங்க கிட்ட கேட்டு டீ குடிச்சிட்டேன்.”
“எனக்கு போட்டுக்க போறேன் உனக்கும் தரட்டுமா?”
“நோ, இப்போ டீ குடிச்சிட்டு எப்போ டின்னெர் சாப்பிடறது.”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். உனக்கு வேணாம்னா வேணாம்னு சொல்லு. என்னை குடிக்க வேணாம் சொல்லாத.”
அவளுக்கான தேநீரை ஊற்றிக்கொண்டு வந்து அவனுக்கெதிரே அமர்ந்தாள்.
ஏதோ லேப்பில் பார்த்துக்கொண்டே யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். அவன் முகத்தை சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள், எழுந்துவந்து அவனருகே அமர்ந்தாள்.
ஷாபிங் காம்ப்லெஸ் ஒன்று பிரபல வர்த்தக நகர் ஒன்றின் மையத்தில் அமைப்பதற்கான கொட்டேஷன் தயார் படுத்திக் கொண்டிருந்தான்.
தனி நபர் ஒருவரின் முதலீட்டில் அமைக்கப்போகும் அந்த இடம், மொத்த நகரையும் மையப் படுத்தியிருந்தது. அனைத்து ரக மக்களையும் கவரும் வகையில் இருக்கும் படியான அமைவாக, அமைப்பாக இருக்க வேண்டும் என்பதே அந்த முதலீட்டாளரின் விருப்பம்.
அத்தோடு அதில் பங்குகள் பெறுவதற்கும் வாய்ப்புகள் இருக்க அகில் இந்த சில வாரங்களாகவே அதில் கூடுதல் கவனம் எடுத்து வேலை பார்க்கின்றான்.
ஐரா அவன் தயார் செய்திருந்த கொட்டேஷனை பார்வையிட்டவள், அந்த கட்டிட வடிவமைப்பில் அசந்து போனாள். அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்து,
“அகி,பில்டிங் டிசைன் யாரு பண்ணுணது?”
“என் ஐடியா சொல்லவும் நம்ம ரேகா தான் பண்ணுனாங்க.”
“ரொம்ப அழகா வந்திருக்கு, கண்டிப்பா காண்ட்ராக்ட் நம்மளுக்கு தரல்லன்னாலும் பில்டிங் பிளான் கேக்க போறாங்க பாரு.”
“நல்லதா ஏதும் சொல்ல மாட்டியா?’ அவள் தலை குட்டியவன்,’இதை அப்படி விட முடியாது ஐரா. ஐ நீட் திஸ் ”
அவன் தீவிரம் அவளுக்கு புரிந்தது.அதில் ஒரு தகவலைக் காட்டி,
“ஆமா இதுல மட்டும் ஏன் ரேட் ஜாஸ்தி ஆகுது.”
“ஆமா ஐரா, அது கம்மி பண்ணிட்டா நம்மளுக்கு அவ்வளவா லாபம் இருக்காது. அதுல லாபம் பார்க்குறது கஷ்டமும் கூட.”
“அகி, நம்ம கிட்டேயே எல்லா ப்ரோடக்ட்சும் இருக்கு. வெளில எதுவும் எடுக்க வேண்டிய தேவை இருக்காது. இப்போ இங்க கொட்டேஷன் கொடுக்குறவங்கல்லயே நம்ம கம்பனி திங்ஸ் எடுக்குறவங்க தான் மாஸ்ட்லி. சோ அதுவே நம்மளுக்கு பிளஸ் தானே? ”
“கரெக்ட் தான் ஐரா. நம்மகிட்ட இருக்கதை விட கம்மி விலைல வெளில எடுக்கலாம் இல்லையா?”
“பட், நம்மளது பெஸ்ட். அவங்களுக்கு அது தெரியும் தானே. அவங்க ஏற்கனவே இவங்களுக்கு நம்ம ப்ராஜெக்ட் கொடுத்தா நல்லா இருக்கும்னு ஏற்கனவே சிலரை டிசைட் பண்ணிருப்பாங்க. சோ அவங்க லிஸ்ட்ல நம்மளோடது முதல்ல இருக்கத்தான் போகுது.
நம்மளுக்கு இவ்ளோதான் முடியும். முடிஞ்சா கொடுங்க, இல்லன்னா விடுங்கன்னு இரு அகி. தானா வரும்.”
“இதென்ன காலேஜ்க்கு பசங்க சேர்க்குறாங்கன்னு நினைச்சியா? இதெல்லாம் சம் ஒப் ருபீஸ்ல மிஸ்ஸாகிடும் ஐரா. அதோட,என் பட்ஜெட் எல்லாமே ஓகே தான். பட் இந்த அயன் ரோட்ஸ்ல தான் கொஞ்சம் இடிக்குது. கண்டிப்பா தரமானதா இருக்கவே வேணும். அதுல ரேட் கம்மி பண்ணிட்டா இங்க நம்ம கம்பனிலேயே குவாலிட்டி கம்மி பண்ணிருவாங்க. அப்பாவே பண்ண வச்சுருவார்.”
அதோட ஒரு கான்ஸ்ட்ரக்ஷன்ஸ் கம்பனி தான் அந்த ப்ரோடக்ட் நம்மளது போலயே பண்ணுவாங்க. கண்டிப்பா அவங்க கொட்டேஷன் கூடத்தான் நம்மளோடத்தை கம்பேர் பண்ணுவாங்க.”
“தென், ரெண்டு ரேட் குடு அதுக்கு மட்டும். அது அந்த கம்பனியோடதை விட ஜாஸ்தி ஆனாலும்,கம்மி ஆனாலும் சரி இடைப்பட்ட ரேட் அவங்களோடதா இருக்கப்ப அவங்களுக்கு கொடுக்க யோசிப்பாங்க.அதோட தரமானதா இருந்தா ரேட் ஜாஸ்தியா இருக்கத்தான் செய்யும்.”
“நானும் அதேதான் யோசிச்சிட்டு இருந்தேன். ஈவினிங் அது கூட ரெடி பண்ணிட்டேன்.”
அவன் அதையும் அவளுக்கு காட்ட இரண்டையும் பார்த்தவள்,
“அவங்க பிளான்க்கும் நம்ம பிளான்க்கும் தனித்தனியா ரேட் பிக்ஸ் பண்ணிருக்க தானே?சோ இதுவும் பிளஸ் தான்.கண்டிப்பா உன் பிளான் அந்த இடத்துக்கு அவங்களோடதை விட சூட் ஆகுது.ரெண்டையும் சேர்த்து அனுப்பிரு. சரியா வரும் கண்டிப்பா.”
“ஹ்ம்.”
“இன்னும் என்ன யோசிக்கிற?”
“இல்ல அந்த இடம் நா ரொம்ப நாளா வாங்கணும்னு நினச்சுட்டே இருந்தேன். ரேட் ரொம்ப ஜாஸ்தி சொல்லவும்தான் அப்றம் பார்க்கலாம்னு விட்டுட்டேன். திடீர்னு வாங்கிருக்காங்க. அதான் இதாவது நம்மளுக்கு கிடைக்கணும்னு இருக்கு.”
“நீ நினச்சுட்டே இருந்தா எப்படி தெரியும். சொல்லிருக்கலாம்ல. உன்னோட பில்டிங்பிளான் பார்க்கவுமே புரிஞ்சது, எவ்ளோ ஆசையா பண்ணிருக்கன்னு. அப்பாகிட்ட சொல்லிருந்தா ஏதாச்சும் பண்ணிருப்பாங்கல்ல.”
“நான் எனக்கு வாங்கனும்னு நினச்சேன் சொன்னேன்.”
“ஓஹ்! சரி விடு பார்த்துக்கலாம்.”
“எப்படியும் நம்ம கைக்கு தான் வரும்.”
“எப்படி சொல்ற? ”
“தனியாளா வாங்கிருக்கான் ஒருத்தன், கண்டிப்பா ஒருத்தனால சமாளிக்க முடியாது. விசாரிச்சதுல வெளிநாட்டுக்காரன் உதவியோட பண்ணிருக்கான். சோ கண்டிப்பா வில்லங்கம் வரத்தான் போகுது. நாமலும் அதை வச்சு வாங்கத்தான் போறோம்.”
“ஓஹ், முதல்லயே இத சொல்ல மாட்டியா? அப்போ வில்லங்கத்தை ரெடி பண்ணிட்ட. அப்றம் எதுக்கு சோகமா சொல்ற?”
“இல்ல காண்ட்ராக்ட் இன்னொரு கம்பனிக்கு போய்ட்டா அப்றமா இடம் நம்ம கைக்கு வந்தா கஷ்டமாய்டும் அதான். அதோட பைவ் இயர் காண்ட்ராக்ட்.”
“நொட் டு வொரி அகி, பார்த்துக்கலாம்.”
“ஹ்ம்…ஓகே.’என லேப்டாப்பை மூடி வைத்தவன்,
‘கெளதம் என்ன இன்னும் எந்திரிக்கல, எதுவும் சாப்பிடாம தூங்கிருப்பானே.”
“நாம சாப்பிட்டு எழுப்பலாம். மில்க் குடிச்சான்னா போதும். ஈவினிங் நல்லா சாப்டான். விளையாடி டையட் வேற. அதான் நல்லா தூங்றான்.”
“சரி, உனக்கு தோசைக்கு தொட்டுக்க என்ன பண்ணட்டும்? ”
“ஏதாவது இருக்கது குடு ஐரா.”
“சோஸ் இருக்கு அப்போ அதுகூட சாப்பிடு.”
அகில் அவளைப் பார்க்க,”அப்றம் வேறென்ன? கேட்டுக்கொண்டே கிச்சனுக்குச் சென்றாள்.
“தெரியும்ல எதுகூட சாப்பிடுவேன்னு, அப்றம் எதுக்கு கேக்குற?”
கேட்டுக்கொண்டே அவள் பின்னே வந்தவன் கிட்சேன் மேடையில் அமர்ந்தான்.
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிருக்கணும். இப்போ சோஸ் கூடவே சாப்பிடு.” என்றவள் தோசைச் சுட ஆரம்பித்தாள்.
“ஐரா மதியமும் சரியா சாப்பிடல. நான் வேணும்னா எல்லாம் கட் பண்ணி தரேன் சமச்சிரலாம்.”
“இவ்ளோ நாள் எப்படி சாப்ட?கேட்டதெல்லாம் கொடுத்தாங்களா என்ன.”
முதலில் அவனுக்காக இரண்டு தோசையை சுட்டெடுத்தவள் ஒரு தட்டில் வைத்து அவன் விரும்பி உண்ணும் சிக்கன் கிரேவியை இன்னுமொரு தட்டில் ஊற்றி அங்கிருந்த வட்ட மேசையில் வைத்தாள்.
“இங்க வந்து உட்கார்ந்து சாப்பிடு. மெதுவா சாப்பிடு. உன் ஸ்பீடுக்கு என்னால சுட முடியாது.”
அவனும் அமர்ந்து சாப்பிடிட ஆரம்பித்தான். “மலர் போறப்பவே சமச்சுட்டாங்களா.தெரிஞ்சிருந்தா நானே தோசையை சுட்டிருப்பேன்.”
தன் கை இருந்த கரண்டியை அவனருகே வைத்தவள், “போய் சுட்டுக்கோ.” என அமரப்பார்க்க,
“ஐரா,நான் பேசல.”அவசரமாய் கூறியவன் அதன் பின் ப்லேட்டில் மட்டுமே கவனமாய் இருந்தான்.
நன்றாக வயிறு நிறைய உண்டவன், “இதுக்குமேல முடியாது ஐரா. நீ சாப்பிடு.”
அவளோ அவன் அருகே அமர்ந்து உண்ண ஆரம்பித்தே இருந்தாள்.
“நான் போய் கெளதம எழுப்பவா?”
“இருக்கட்டும். நான் சாப்பிட்டு எழுப்பிக்கிறேன்.”
“ஹ்ம்…கையை கழுவிக்கொண்டு வந்தமர்ந்தவன் அப்போதுதான் அவள் கழுத்தில் குடிகொண்ட மாலையைக் கண்டான். கையில் காப்பையும்.
அந்த மாலையை கைக்கெடுத்து அதில் கோர்த்திருந்த மோதிரம் இரண்டையும் தன் உள்ளங்கை வைத்து பார்த்திருந்தான்.
“அழகா இருக்குல்ல அகி.”
“ரொம்ப… அதைப் போட்டுக்கக்கூட கொடுத்து வெக்கலல்ல.”
“ஹ்ம். அப்டித்தான் ஆகணும்னு இருக்கு அகி. நம்மளால எதுவும் பண்ணமுடியாது. இதோ இப்டி சுமக்க மட்டும்தான் முடியும்.” அவன் கையிருந்து அதனை விடுவித்துக்கொண்டாள். எழுந்துச் சென்று உண்ட பத்திரங்களை கழுவிக்கொண்டே,
“சரி, இன்னிக்கு கெளதமோட மிஸ் ஏதோ கேட்டாங்கலாமே. வந்து சொல்லிட்டிருந்தான்.”
“ஹ்ம் ரொம்ப நேரம் வெய்ட் பண்ணுனேன். மிஸ் வர லேட்டாகவும் வந்துட்டேன்.”
“ஓஹ்! நின்னு நலம் விசாரிச்சுட்டு வந்திருக்கலாமே? “
“ஜஸ்ட் அவன் கிளாஸ் வரைக்கும் போலாம்னு, அவனுக்கு ஹாப்பியா இருக்குமேன்னு போனேன் ஐரா.”
“உனக்கு என்ன சொல்லி அம்ச்சேன் அகி? ஏன் புரிஜிக்க மாட்டேங்குற? போறப்பவே சொன்னனா இல்லையா?”
பழையன பேசவேண்டாம் என்று பேச்சை மாற்ற நினைத்தே இந்தப் பேச்சை எடுத்தாள். ஆனாலும் என்னவோ அவர்களுக்குள் அதனோடே ஒட்டிய வார்த்தைகள் தான் கோர்த்துக்கொண்டு வந்தது.
“எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற?” எழுந்து சென்று அவளை தன் பக்கம் திருப்பியவன்,
“அவன் என் பையன். ஞாபகமிருக்கா இல்லையா?
“ஆனா நான் வேற நீ வேற. உனக்கு அது ஏன் புரிய மாட்டேங்குது?”
“அவனுக்கு நாம ரெண்டு பேரும் ஒன்னுதான். அதை மாற்ற முடியாது.”
“உன் வாழ்க்கை வேற அகி.”
“ஐ க்நொவ் இட் ஐரா. பட் ஐ கேன் மேனேஜ் போத்.”
“என்னால முடியாது. உன்ன சுத்தி இருக்கவங்களாலயும் அது முடியாது. அவன் என் கெளதம், எனக்கு மட்டும் கொடுத்துரு.”
“லூசா நீ?”
அவனை அவள் முறைக்க, “பின்ன எவ்ளோ சொல்றேன், மண்டைக்குள்ள ஏறுதா? உள்ள இருக்க தேவையில்லாத குப்பை எல்லாத்தையும் தூக்கி வெளில போடு. உனக்கு என்னைப் பத்தி யோசிக்காதன்னு சொல்லிருக்கேன். என்னை பார்த்துக்க எனக்குத் தெரியும். அதை,’
அவள் தலையைத் தட்டிக் காண்பித்தவன்,
‘இங்க நல்லா பதிய வச்சுக்கோ.”
“உன்ன யோசிக்காம நான் என்னை மட்டுமே யோசிச்சு முடிவு பண்ணுனா உன்னால உனக்கு வர ப்ரோப்லம் எதையும் பேஸ் பண்ண முடியாது. அதுக்கப்புறம் நீ என்ன சொன்னாலும் நான் கேட்கப்போறத்தில்லை. பாதில என்னால நிறுத்தவும் முடியாது.”
“ஓகே கோஹெட். ஐ ஜஸ்ட் நீட் தட்.”
“இடியட்.”
“யெஸ் ஆல்வேஸ்.” கூறிக்கொண்டே அறைக்குச் சென்றான்
“முதல்ல இவனை வீட்ல இருந்து விரட்டனும்.”
“அது மட்டும் இப்போதைக்கு முடியாது. சிக்ஸ் மந்த் அக்ரீமெண்ட் போட்டிருக்கோம்.” உள்ளிருந்துக்கொண்டே கூறினான்.
அவனைத் திட்டிக்கொண்டே கெளதமிற்கு பாலை காய்ச்சு அதனை ஆற்றியவள் அதற்கு பழம் ஒன்றை வெட்டிப் போட்டாள். அதை எடுத்துக்கொண்டு அவன் அறைக்குச்செல்ல கெளதமோ அகிலின் மடி அமர்ந்து அவன் கழுதைக்கட்டிக்கொண்டு அரைத் தூக்கத்தில் இருந்தான்.
“கெளதம் எழுந்துக்கோ.” அவன் தலைக்கோத இவளின் மடிக்கு வந்தான். அவனுக்கு பாலைப் புகட்டி மீண்டும் உறங்கச் செய்தாள்.
அகில் இவளையே பார்த்துக்கொண்டிருக்க, அருகிருந்த தலையணை அவன் மீது வீசியவள்,
“வேலைக்கு போனமா வந்தமானு இரு. இதுக்கப்றமா இருக்கு உனக்கு இடியட். குட் நைட்.” கூறியவள் அவளறைக்குச் சென்று விட்டாள்.
போகும் அவளையே பார்த்திருந்தவனுக்கு முன்பிருந்த அதே ஐரா மீண்டிடுவாள் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அவளுள் ஏதோ உறுத்தல் இருப்பதனாலேயே அவ்வப்போது அவள் முகம் யோசனையை தத்தெடுப்பதையும் எடுத்த முடிவை செயல்படுத்த தயங்குவதையும் புரிந்து கொண்டான்.
அறைக்குள் சென்றவள் அறைக்கதவுகளை திறந்துக்கொண்டு வெளி தாழ்வாரத்தில் சென்று நின்றுக்கொண்டாள்.
ஈரம் சுமந்த காற்று முகத்தை தீண்டிச்செல்ல மேனி சிலிர்த்தது. தன்னைத் தானே அணைத்துக்கொண்டவள் தூரம் திரியும் நிலவை பார்த்திருந்தாள்.
‘எனக்கு மட்டும் ஏன், எல்லாமே இருந்தும் ஒன்றையும் அனுபவிக்க முடியாத நிலை. தப்பென்று என்னதான் செய்துவிட்டேன்.’ அன்று கேட்ட அந்தக் குரல் இன்னும் காதுக்குள் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. அன்று இவள் பேசிய வார்த்தைகள் எத்தனை அன்பு மிகுதியில் கேட்டது. மிகைப்பது எல்லாமே அழித்து அழிந்து போகும் போல.’ தனக்குத் தானே கூறிக்கொண்டாள்.
அதை உள்வாங்கிக் கொள்ளவோ அதிலிருந்து மீளவோ அவளுக்கு நேரம் கிடைக்கவே இல்லை. அதை தொடர்ந்து அவளுக்கு ஏற்பட்ட இன்னல் இன்று வரையிலும் மீள முடியாமல் அவளை சுழற்றி எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது.
எத்தனை சந்தோஷமாய் சுற்றிப் பறந்த நாட்கள். நினைக்க வலிக்க மட்டுமே செய்கிறது. நினைக்காமல் இருக்கவும் முடியாமல் தவிக்கும் தவிப்புகளையும் என்னவென்று சொல்ல.
தன் பின்னே வந்து நின்றவனை எண்ண மனதில் தோன்றும் வருத்தங்களை அவனோடு பகிரவும் முடியாமல் மிகவும் சோர்ந்துப்போனாள்.
“ஐரா…”
“ஹ்ம்ம்… ”
“இங்கென்ன பண்ற?”
“பார்த்தா தெரிலயா? ”
“அது நல்லா தெரிது. அதான் ஏன்னு கேட்குறேன். ”
“என்னை நானா இருக்க சொல்ற, அப்றம் இடையில் நீ வர்றப்ப என்னால முடில அகி.”
“ஐரா, என்னை பத்தி யோசிக்க வேண்டாம் சொல்லிட்டேன். நேத்து அவ்வளவு பேசினோம், இப்போ திரும்ப அங்கேயே நிக்கிற. நீயா உன்னை மாத்திக்கலன்னா நான் அடுத்து என்ன பண்ணுவேன்னு உனக்கேத் தெரியும்.”
“நீ என்னை மிரற்ற அகி.”
“அப்டியே வச்சுக்கோ. இன்னிக்கு கெளதம் பேஸ் பாரு, அதை விட உன் பேஸ் நீயே பாரு. இன்னிக்கு உன்னை நீயே பார்த்தியா இல்லையா?”
மதியம் தன்னைதானே பார்த்துக்கொண்டிருத்ததை எண்ணிக்கொண்டாள்.
“நம்ம கைல எதுவும் இல்லை. ஆனாலும் நடக்குறதை சிறப்பா மாத்திக்க நம்மளால முடியும். சோ டூ வாட் மேக்கஸ் ஹாப்பி. தட்ஸ் ஆல்.”
“ஹ்ம்.அம் ட்ரயிங்…’
‘அகி, நாளைக்கு கெளதம்கூட போக வண்டிய சர்வீஸ்க்கு விட மறந்தே போய்ட்டேன்…”
“அதெல்லாம் காலைலேயே பண்ணி வச்சுட்டேன். நொட் டு வொரி ஐரா போய் தூங்கு.”
“ஹ்ம்ம்…”
“ஐரா,நான் அந்த கொட்டேஷன் அனுப்பிட்டேன். மே பி நாளைக்கு ஈவ்னிங் அவங்க டிசிஷன் என்னனு என்னோன்ஸ் பண்ணிடுவாங்க.”
“அதெல்லாம் கிடைக்கும். அதைப்பற்றி எல்லாம் யோசிக்காத.”
அப்போதும் அவன் அப்படியே அவளைப் பார்த்திருக்க,
“வேறென்ன?”
சொல்ல வந்ததை சொல்லாது நிறுத்தியவன் “நதிங்.” என்றுவிட்டு அவளைத் தாண்டிச் சென்றான். அவன் கைகளை முழங்கையோடு பிடித்து நிறுத்தியவள்,
“என்ன மறைக்குற எங்கிட்ட?எனக்கு சொல்றதானே, சந்தோஷமா இருக்க என்ன வழின்னு கண்டுபிடிக்கலாம் அகி. சந்தோஷம் இல்லன்னாலும் அடுத்தவங்களுக்கு நிம்மதியை மட்டுமாவது கொடுக்கலாம். அதை விட்டுட்டு தானாகவே அதுக்கான வழி நம்மளை தேடி வர வரைக்கும் இருந்தா காலம் முடிஞ்சு போய்டும் ரெண்டு பேருக்கும். பேசி தீர்த்துக்க முடியும்னா பேசிப்பார்க்கலாமே.”
அப்படியே அவள் தோள்களில் கையிட்டவன்,
“நேத்து உங்கூட எல்லாம் பேசி முடிச்சிட்டேன்னு நினைக்குறேன். முடிவெடுக்க டைம் கொடுத்திருக்கேன் ரைட். சோ அந்த முடிவை வச்சுதான் என்னோட அடுத்த ஸ்டெப் இருக்கும். சோ… ”
“சோ…?”
“யூ ஜஸ்ட் லிவ் யூர் லைப்…இட் வில் டிசைட் வட் வீ நீட். தட்ஸ் ஆல். குட் நைட்.” கூறி அவள் அறைவிட்டு வெளியேறினான்.
‘இவனுக்காகவேணும் வாழவேண்டும் நானும் நானாய்.’ முடிவாய் தன் மனம் சரி செய்தவள் உறங்கிப்போனாள்.
கெளதம் அருகே வந்து உறங்கியவனுக்கோ, உறக்கம் விழிகளை எட்டவே இல்லை. எப்படியெல்லாம் வாழ்க்கை மாறிப்போகிறது. தான் இப்படியெல்லாம் இருப்பவன் என்று எவரும் நம்பப்போவதில்லை. ஏன் தன்னையே தானே எண்ணி வியக்கும் படிதான் இப்போதெல்லாம் அவன் நடவடிக்கைகள்.
தொழில் என்று வந்து விட்டால் அவனுக்கு வேறுமுகம். ஆனால் அது தவிர்த்து பர்சனல் லைப் என்பதே அவன் தனி உலகு. அதை பார்த்திட இயலாது. பார்ப்பவருக்கு புரியவும் செய்யாது. தனி ராஜ்யம், அவன் இஷ்டத்திற்கு என்னவும் செய்வான். அதில் அவன், அவன் சந்தோஷம், அவன் சார்ந்தது மட்டுமே தானிருக்கும்.
அவன் அருகே உறங்கிக் கொண்டிருக்கும் சிறியவன் முகம்பார்க்க, அவனுக்காய் தன் சுயத்தை மறைத்தது எண்ணி வியந்துதான் போனான்.
யாரையும் சந்திக்கக் கூடாது எனும் முடிவை எடுத்துவிட்டான் என்றால் அவர்களை எதிரே எப்பொழுதும் அவன் வர விட்டதே இல்லை. அத்தோடு அவர்கள் இருக்கும் இடத்திற்கும் தன் நிழலையும் அனுமதிக்க மாட்டான்.
பகை என்று எவரோடும் இல்லை. பிடிக்கவில்லையா ஒதுங்கிப்போவான். நட்பாகி விட்டானா, எத்தனை கீழிறங்கியும் அவர்களுக்காய் வருவான்.
காரணமே இன்றி அவனோடு ஏனோ இத்தனை கோபம் வருகிறது. அந்த அவனுக்குமே அதுவே தான்.
‘நாளைய காண்ட்ராக்ட் முடிவோடு அவனையும் சந்திக்க நேருமா, அது தன்னை விட, ஐராவிற்கு தெரிந்தால் பழையன மீளுமா? அதுதான் இப்போதைய சிந்தனையாக.
நல்லவேளை அவள் கம்பனி பொறுப்புகளை தன்வசம் தந்து விட்டது. எப்போதும் இவனின் முடிவுகளில் அவள் பங்கு எங்கும் இருக்கத்தான் செய்யும். இப்போது இவன் கூறாது தெரியப் போவதில்லை அவளுக்கும். அகிலுக்கு அதுவே போதுமாய்.
ஹ்ம் பார்க்கலாம்.
யாரிவன்?
‘நாராயணா… என்னாகுமோ தெரிலயே’
ஐரா அடிக்கடி பயன் படுத்திக்கொள்ளும் வார்த்தையை அகிலின் வாயும் முணுமுணுத்தது…
புன்னகைத்துக்கொண்டே கெளதமின் தலைக்கோத, உறக்கத்திலேயே முகம் மலர்ந்தான் சின்னவன். அவன் முகம் பார்த்தாவாரே அகிலும் சிறிது நேரத்தில் உறங்கி விட்டான்.