அன்பின் பெருவெளி 04

அன்பு 04

கிட்ட தட்ட ஒரு நாள் முழுவதும் ரயிலில் பயணம் செய்தவர்கள் ,காலை பத்து மணிப் போல் சென்னை வந்திறங்கிய அபிநந்தனுக்கும் தாரணிக்கும் கடந்த கால வாழ்க்கை ஒரு நொடியேனும் கண்ணில் தோன்றி மறைந்தது.

கடந்த கால நிகழ்வுகளில் அபியை விட , அதிகமாக இழந்தது என்னவோ தாரணியும் நிவேதாவும் தான். அதிலும் தாரணி அப்போது சிறுப்பிள்ளை பன்னிரெண்டாம் வகுப்பு தான் படித்திருந்தாள்.

அவளுக்கு எதிலும் எப்போதும் அவள் அண்ணன் வேண்டும். அண்ணனை தவிர்த்து யாரிடமும் சட்டுன்னு வம்பு வார்த்திடமாட்டாள்.

இந்த மூன்று வருடத்தில் அவள் இழந்ததை மறக்கவே , அனைவரிடத்தும் வம்பு வளர்ப்பது எல்லாமே..

சுருங்க சொல்ல வேண்டும் என்றால் மனதில் இருக்கும் கவலையை மறக்க செய்ய வெளியில் சிரித்து கொண்டிருக்கிறாள்.

அதே தான் இங்கிருக்கிற ஒவ்வொருவருக்கும். அவரவர் மனநிலையை பொருட்டு அனைத்தும் மாறுப்பட்டது.

“அண்ணா ,நாம திரும்பி மும்பைக்கே போய்டலாமா? எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை ” என அழுக துடிக்கும் குழந்தை போல் அவள் சொல்ல,

“அம்மு , என்ன இது.? உன்கிட்ட அண்ணா கேட்டேன்ல , உனக்கு சந்தோஷமான்னு .நீ தாரணி ஹாப்பின்னு தானே சொன்ன .இப்போ மாத்தி பேசலாமா” என சிறுப்பிள்ளையிடம் சொல்வது போல் சொல்ல,

“ஆமா சொன்னேன். ஆனா…ஆனா எனக்கு இங்க பிடிக்கலை னா ” என்று பயத்தில் அவன் கையை அழுந்த பிடித்துக் கொண்டாள்.

“என் அம்மு எவ்வளோ தைரியமானவங்க தெரியுமா? ஆனா நீ என்ன இப்படி பயந்துட்டு இருக்க.?” என அவளை உசுப்பேத்திவிட,அது சரியாக வேலை செய்தது.

“ஹான் , நான் ஒன்னும் பயந்த பிள்ளை இல்லை. மீ ஜான்சி ராணியாக்கும் ” என தனது ஆர்ம்ஸை தூக்கி காட்டினாள் தாரணி.

“பார்டா ,மேடமுக்கு கொளு கொளுன்னு ஆர்ம்ஸ் இருக்கு ” என தங்கையை கிண்டலடித்தான் அண்ணன்.

“போ னா ,உன் கூட நான் டூ .என்னைய சமாதானம் படுத்த எனக்கு ஏதாவது சாப்பிட வாங்கி கொடு ” என்று அந்த ரயில் நிலையத்தில் வம்பு வளர்த்தாள்.

“அடியேய் ,நான் போய் மூஞ்சி கழுவிட்டு வரதுக்குள்ள ரெண்டு பேரும் அடுத்த பாசமலர் சீனை ஓட்ட ஆரம்பிச்சாச்சா .நடைய கட்டுங்க ரெண்டு பேரும் ” என இருவரையும் அழைத்து வெளியே வந்தார்.

“இப்போ நாம எங்க போக போறோம் டா.?” என சரோஜினி கேட்க,

“ம்மா,அவினாஷ் கிட்ட சொல்லி இருந்தேன் மா வீடு பார்க்க சொல்லி. பார்த்துட்டேனு தான் சொன்னான். இப்போ அங்க தான் போகனும் ” என்றான்.

“அப்போ எதுக்கு இங்க நின்னுக்கிட்டு ,வா போகலாம். இங்கேயே நின்னோம்னா இவ பார்க்கிற எல்லாத்தையும் கேட்பா ” என மகளை சந்தடி சாக்கில் வாரி விட்டார்.

“மம்மி , நான் என்ன உன்கிட்டயா கேக்குறேன். என்னோட அண்ணா கிட்ட தானே கேக்குறேன். உனக்கு வேணும்னா நீயும் அண்ணா கிட்ட கேட்டு வாங்கிக்கோ. அதுக்காக இப்படி ஸ்டோமக் பேர்ன் ஆகாத” என கோபம் கொண்டவளாய் மகள் பேச,

“யாரு எனக்கு வயிற்று எரிச்சல் ஆகுது. சாப்பிட்டு சாப்பிட்டு உனக்கு ஆகாம இருந்தா சரி தான் ” என அப்போதும் மகளை வாரி விட்டார் சரோஜினி..

“னா ” என சிணுங்களுடன் அழைத்தாள் சின்ன குட்டி.

“ம்மா விடுங்க ,அவ தான் சின்ன பொண்ணு ஏதோ விளையாட்டுக்கு பேசுறான்னா நீங்களுமா” என்று தங்கைக்காக பேசியவனை சுற்றி போட்டாள் தங்கை.

“என் செல்லம் னா நீ ” என செல்லம் கொஞ்சியவள் அன்னைக்கு பழிப்பு காட்டினாள்.

‘இதென்னடா வம்பா போச்சி , வயசாகிடுச்சின்னா பேச கூட உரிமை இல்லையா ‘ என்று மனதுள்ளே நொடித்து கொண்டார் சரோஜினி.

இவர்களின் லூட்டிகளை இரசித்த படியே ,அவினாஷ்க்கு அழைக்க அவனோ எடுக்கவே இல்லை.

‘இந்த அவி ஏன் போன் எடுக்க மாட்டேங்கிறான்னு தெரியலையே ‘ என மனதினுள் நினைத்தவன் அவனுக்கு மெசேஜ் தட்டிவிட்டான்.

அதனை பார்த்த அவினாஷிற்கு ,சிரிப்பாக இருந்தது.

“உன்னைய பார்க்க தான் வந்துட்டு இருக்கேன். அதுக்குள்ள ஓட பாக்குற ” என வாய் விட்டு சொன்னவன் காரை பார்க்கிங்கிள் ஓரமாக பார்க் செய்தான்.

காரை விட்டு இறங்கிய அவினாஷ் நடந்தவாறே , நண்பனுக்கு அழைத்தான்.

“டேய்! உன்னை வீட்டு அட்ரஸ் தானே அனுப்ப சொன்னேன். நீ இன்னும் அனுப்பாம இருக்க ” என எடுத்த எடுப்பிலே கத்த,

“சில் மேன்,எதுக்கு இவ்வளோ ஹாட் ,அதுவும் நம்ம ஊரு வெயிலுக்கு நீயும் ஹாட்டா இருக்காத .அப்புறம் உன்னால அந்த ஹீட்டை தாங்க முடியாது பார்த்துக்கோ ” என வம்பு பேச,

“இப்போ நீ வீட்டு அட்ரஸ் அனுப்புவியா மாட்டியா?” என பொறுமையை இழுத்து பிடித்து கேட்க,

“இதோ தந்துட்டா போச்சி ” என அவன் பின்னாலில் இருந்து குரல் வரவும் திடுக்கிட்டு போனான் அபிநந்தன்.

“அவி “

“அபி “

இருவரும் ஒரே நேரத்தில் அழைத்தனர்.

பின்,அவி அவனை பார்த்த சந்தோஷத்தில் கட்டிக் கொண்டான் .

அவினாஷை கண்ட அபி செய்வது அறியாது அப்படியே நின்றாலும் , அவனின் கைகள் அவனை ஆற தழுவிக் கொண்டது.

இருவரும் அணைத்து இருப்பதை பார்த்த தாரணிக்கு ஏனோ சொல்லொன்னோ கோபம் உருப்பெற்றது.

‘எப்படி என் அண்ணாவை இந்த தடிமாடு கட்டி பிடிக்கலாம் ‘ என மனதினுள் கோபம் கொள்ள

அதை கண்ட சரோஜினி சிரித்த படியே ,” வயிறு கொஞ்சம் கொஞ்சமா எரியுது போலயே ” என எங்கோ பார்த்து சொல்ல ,அன்னையை பார்வையாலே எரித்தாள் .

“அண்ணா ” என கோபத்துடன் தாரணி அழைத்ததில் இருவரும் பிரிந்து நின்றனர்.

குட்டையாக மைதா மாவு நிறத்தில் இருந்தவள் இரட்டை ஜடை பிண்ணி, இரண்டு கைகளையும் மார்புக்கு குறுக்காக மடக்கி அபிநந்தனை பார்த்து முறைத்த படி நின்றாள்.

தாரணியை பார்த்தது “யாரு இந்த குட்ட வாத்து?” என அபியின் காதில் கிசுகிசுக்க,

“என்னோட அம்மு டா.பேரு தாரணி தேவி ” என்று அறிமுகபடுத்தி வைக்க,

“இது அவினாஷ்.என்னோட க்ளோஸ் ப்ரெண்ட்” என்றான்.

‘அப்போ க்ளோஸ் பண்ண வேண்டிய ஆல் தான் இவன் ‘ என மனதுக்குள் நினைத்தவள் வெளியே ஈஈஈஈ என்று சிரித்து வைத்தாள்.

“சரி வீட்டு அட்ரஸ் கொடு நாங்க போறோம் ” என்று சொல்ல

“வீடு பார்த்த எனக்கு உங்களை கூட்டிட்டு போக கூட தெரியும். நீங்க பேசாம என் கூட வந்தா மட்டும் போதும் ” என்றவன் பக்கத்தில் நின்ற சரோஜினியை பார்த்து கண்ணடித்தான்.

அதனை கண்ட தாரணிக்கு அவினாஷின் மேல் கோபம் தான் வந்தது.

‘இந்த குட்ட வாத்து எதுக்கு நம்மளை இவ்வளோ பாசமா பார்க்குது. அதுவும் முதல் சந்திப்பிலே’ என்று நினைத்தவன் சரோஜினியின் பேக்கை மட்டும் தூக்கி முன்னே செல்ல,

அவனை முறைத்து விட்டு தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அவனை பின்தொடர்ந்தாள் தாரணி.

சரோஜினி ஒரு சிரிப்போடு இவர்களுடன் நடந்து சென்றார்.

தனது காரில் இருவரின் பேகினை வைத்தவன் , தாரணியிடம் திரும்பி “உங்களோடதையும் கொடுங்க நான் இதுல வச்சிடுறேன் ” என்கவும்,

“நோ தேங்க்ஸ் .நானே வச்சிக்கிறேன் ” என்று முன்னே இருந்த ஜடையை தூக்கி பின்னே விட்டாள்.

“பார்க்க மட்டும் தான் குட்டி வாத்து பண்றது எல்லாம் அராத்து “என்று அவினாஷ் தனக்குள்ளே முணங்கி கொண்டான்.

அது அவள் காதில் விழுந்ததோ என்னவோ , ஆனால் அவனை ஏகத்துக்கும் முறைத்து விட்டு சென்றாள்.

“லூசு போல” நினைத்தவன் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டான்.

முன்னே அமர போன அபியை பார்த்து ,” னா என் கூட வந்து உட்காரு ப்ளிஸ்” என கெஞ்ச,

“வந்து உட்காரு சொன்னா உட்கார போறேன். இதுக்கு எதுக்கு ப்ளிஸ் எல்லாம் போடுற ” என்றவன் பின்னே அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டதும்,

“அப்போ நான் எங்க உட்காரது ” என சரோஜினி கேட்க,

“ஹான் டிக்கில ” என பட்டென பதில் வந்தது தாரணியிடமிருந்து..

“ஆண்டி , நீங்க எதுக்கு டிக்கில போய் உட்காரணும். வாங்க இங்க முன்னாடி சீட் இருக்கு பாருங்க. இங்க வந்து உட்காருங்க நாம பேசிட்டே போகலாம் ” என கொஞ்சலாக கூறி தாரணியை ஏன்னென்றே தெரியாமலே வெறுப் பேற்ற முயன்றான்.

அதில் முகத்தை தூக்கி வைத்தவள் ,அண்ணனின் தோளில் வாகாக சாய்ந்து கொண்டாள்.

அடுத்த அரைமணி நேரத்திலே வீடு வந்து விட , வீட்டின் முன்பு சடன் ப்ரேக் போடவும் , ட்ரைவர் சீட்டில் தாரணி இடித்துக் கொள்ளவும் சரியாக இருந்தது.

“வண்டியை கூட ஒழுங்கா ஓட்டத் தெரியாதா உங்களுக்கு.?” என தலையை தேய்த்த படி அவனிடம் சீற,

“நீங்க ஒழுங்கா உட்கார்ந்து இருக்கனும் ” என்று விட்டு இறங்கினான்.

“அம்மு , தலையை நல்லா தேய்சிக்கோ. அப்புறம் பெரியவங்க கிட்ட எல்லாம் இப்படி மட்டு மரியாதை இல்லாம பேசக்கூடாது சரியா ” என்றதும்,

” ம்ம் ” என்றாள் முகத்தை உர் என்று வைத்து கொண்டு.

“சரி வீடு வந்துடுச்சி. பார்த்து இறங்கி வா ” என்று அவளிடம் சொன்னவன் இறங்கி நண்பனுக்கு உதவி செய்தான்.

இரண்டு படுக்கையறை கொண்ட அழகிய அளவான வீடு .பின்புறத்தில் சிறிதாக தோட்டம் இருந்தது.

பின், அடுத்த ஒரு மணி நேரத்திலே அனைவருமாக சேர்ந்து வீட்டை சுத்தம் செய்து முடித்தனர்.

பின்னர், வீட்டிற்கு தேவையான சின்ன சின்ன பொருட்களை வாங்கி வந்து வீட்டில் அடுக்கி விட்டு , மதிய உணவை அபியும் அவினாஷூம் கடைக்கு சென்று வாங்கி வந்தனர்.

அந்த நாள் முழுவதும் அவினாஷ் அவன் நண்பன் குடும்பத்துடனே நேரத்தை செலவிட்டவன் இரவு எட்டு மணி போலவே வீட்டிற்கு கிளம்பினான்.

வீட்டிற்கு கிளம்பும் முன் ,ஒரு விசிட்டிங் கார்டை அபி கையில் கொடுத்தவன் ,” இன்னும் இரண்டு நாள்ல உனக்கு இண்டர்வ்யூ இருக்கு அபி. நீ போய் அட்டெண்ட் பண்ணு” என்க

“எனக்கு இப்போதைக்கு ஒரு வேலை வேணும் டா. அது எந்த வேலையா இருந்தாலும் எனக்கு ஓகே தான் “

“சரி வாக்கு மாறாத அபி. அங்க உனக்காக பேசிருக்கேன். கண்டிப்பா அங்க உனக்கு வேலை கிடைச்சிடும் . நீ அங்க போக மாட்டேன்னு சொல்லாம இருந்தா போதும்‌” என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே இசையிடமிருந்து அவனுக்கு போன் வர , அதை கண்ட அபியின் முகம் இறுகியது.

“சரி மச்சான் நான் கிளம்புறேன் ” என்று கிளம்பினான் அவினாஷ்.

போகும் அவனையே முறைத்து பார்த்திருந்தாள் தாரணி.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் , அமைதியாகவும் ஆராவாரமாகவும் சென்றது.

தாரணியும் சரோஜினியும் இருக்கும் இடமெங்கும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது..

அடுத்த நாள் அபிக்கு அவி சொன்ன இடத்தில் இண்டர்வ்யூ இருக்க, அதற்கு தேவையான பேப்பர்ஸ் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து கொண்டிருந்தான்.

சரியாக அந்த நேரத்தில் , “அண்ணா ” என்ற படி தாரணியும் “மகனே ” என்ற படி சரோஜினியும் உள்ளே நுழைந்தனர்.

இருவரையும் பார்த்தவன் ,அமைதியாக ஃபைலை ஒருப் பக்கமாக தள்ளி வைத்தான்.

“னா,இந்தா பால் ” என்று நீட்ட,

“டேய் , உனக்காக மிளகு மஞ்சள் தூள் போட்ட பால் ” என அவரும் நீட்ட,

இருவரையும் பார்த்தவன் யாரிடம் வாங்குவது என்று குழம்பி போனான்.

‘என்ன டா இது அபிக்கு வந்த சோதனை’ என அவன் மனசாட்சி அவனை பார்த்து சிரிக்க ,அதை அடக்கியவன்,

“என்ன இப்படி ரெண்டு பேரும் ஒரே டைம்ல எனக்கு பால் கொண்டு வந்துருக்கீங்க ?”

“அதுவா மகனே , நான் உனக்கு பால் சூடு பண்ணும் போது உன் பாசமலர் என் அண்ணனுக்கு நான் வக்கிறேன்னு அவளும் வச்சா. போடி அவன் நான் கொண்டு போய் கொடுக்கிற பால்ல தான் குடிப்பான்னு சொன்னேன் ” என சிரிக்க,

“னா , நீ நான் கொண்டு வந்த பாலை குடி ” என்று நீட்ட,

” இந்த பா , இதை குடி பார்ப்போம் ” என சரோவும் நீட்ட,

இருவரையும் பார்த்தவன் ,ஒரு முடிவாக இரண்டு பேர்க்கிட்டயும் வாங்கிக் கொண்டு சமையலறை நோக்கி நடந்தான்.

அவன் பின்னாலே இருவரும் சென்று பார்க்க , அபியோ ஒரு பெரிய தம்ளரில் இரண்டு பாலையும் ஊற்றியவன் அதனை அவர்கள் பார்க்க குடித்து முடித்தான்‌.

“நோ நீயா ? நானா ? சீன் ஓகேவா .இரண்டு பேரும் போய் படுங்க ” என்று இருவரையும் மிரட்டி படுக்க அனுப்பி வைத்தான்.

இவர்களுடன் நடந்த சம்பவத்தால் இரவு படுக்க தாமதமாகி விட , காலை வெகு நேரம் கழித்தே எழுந்தான் அபிநந்தன்.

எழுந்த அபி நேரத்தை பார்த்து விழி விரித்தான்.

“அய்யோ மணி எட்டா ” என அலறி அடித்து எழுந்தவன் வேகவேகமாக கிளம்பினான்.

இவன் இங்கே வேக வேகமாக கிளம்பி கொண்டு இருக்க , அவனுக்காக சமையலை இருவரும் செய்து கொண்டிருந்தனர் என்பதை விட சரோஜினி சமையல் செய்ய அதில் பல நொட்டைகளை சொல்லி கொண்டு இருந்தாள் அவரின் பாசமிகு மகள்.

“ஒழுங்கா ஓடிடு டி . இனியும் இங்கேயே இருந்தா உனக்கும் சோறு கிடையாது உன் நொண்ணனுக்கும் கிடையாது பார்த்துக்கோ ” என கத்தியை காட்டி மிரட்டல் விட,

“சரி சரி வேலை பாரு ” என நைஸாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

பின்,அபி கிளம்பி வெளியே வரவும் இருவரும் அவனுக்கான உணவை வைத்து பரிமாற , சாப்பிட்ட படியே இருவருக்குமான அறிவுரைகளை வழங்கி விட்டே கிளம்பினான் அபிநந்தன்.

நேரமின்னையினால் கேப் பிடித்து இண்டர்வ்யூ நடக்கும் இடத்திற்கு சென்றவனுக்கு , ‘இன்னும் இண்டர்வ்யூ ஸ்டார்ட் ஆகவில்லை’ என்று கேட்டதும் தான் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது அவனால்..

அதற்குள் அவினாஷ் அழைத்திருக்க ,

“சொல்லு அவி..”

“டேய் , நல்ல படியா இண்டர்வ்யூ அட்டென்ட் பண்ணு டா. ஜாயின் பண்ணிட்டு எனக்கு கால் பண்ணு சரியா ” என்றதும்,

“சரி மச்சி , நான் பாத்துக்குறேன் ” என்று வைத்துவிட்டவனுக்கு எங்கே தெரிய போகுது அந்த புறம் அவினாஷ் சிரிப்பது…

சிறிது நேரத்திலே,இண்டர்வ்யூ ஸ்டார்க் ஆகி விட, இறுதியாக தான் அபிநந்தனை அழைத்தார்கள்.

உள்ளே சென்றதும் ,ரிசோஸ் ப்ரேசன்ஸ் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தன்னால் முடிந்த பதில்களை அளித்து அவர்களை திருப்தி அடைய செய்தான் அபி.

பின்னர்,அனைவரும் ரிசல்டிற்காக காத்திருக்க ,அடுத்த அரைமணி நேரத்திலே ரிசல்ட் வந்திருந்தது. அதில் அபி செலக்ட் ஆகி இருக்க மற்றவர்கள் எல்லாம் சோகத்தில் வெளியேறினர்.

ரிசப்ஷனில் இருந்த பெண் ,அபிநந்தனை அழைத்து அவனுக்கான கடிதத்தை கொடுத்து,

“இதை மேடம் கிட்ட கொடுத்து சைன் வாங்கிக்கோங்க சார். தென் நாளைக்கு இங்க நீங்க ஜாயின் பண்ணிக்கலாம் ” என்ற பெண்ணிடம் அந்த லெட்டரை வாங்கி கொண்டவன்,

“தேங்க்ஸ். உங்க மேடம் ரூம் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா ” என்று தன்மையாகவே கேட்டான்.

அவன் கன்னக்குழியில் விழுந்த பெண்ணவள் , அவனை ரசித்த படியே இருக்க

“எக்ஸ் க்யூஸ் மீ மேம் ” என அவள் முன் கையாட்ட,

“ஹான் சொல்லுங்க சார் “

“மேடம் ரூம் எங்க இருக்குன்னு கேட்டேன் “

“செக்கேண்ட் ப்ளோர் ரைட் சைட் தான் மேம் ரூம் ” என்றவளை பார்த்து புன்னகைத்து விட்டு நகர்ந்தான்.

வேலை கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்தில் மேல் மாடி சென்றவன், முதல் கதவை திறந்து உள்ளே பார்த்தவனுக்கு அந்த ஆள் உயர புகைபடத்தில் சிரித்த முகத்துடன் இருந்த பெண்ணவளின் படத்தை பார்த்தவனின் கால்கள் அதிர்ச்சியினால் தானாக பின்னோக்கி சென்றது..

அந்த புகைப்படத்தில் சிரித்த முகமாக இருந்தது நிரலி என்கிற நிரலி வாசுதேவன்.

error: Content is protected !!