அன்பின் பெருவெளி 06

அன்பின் பெருவெளி 06

அன்பு 06

வீட்டிற்கு வந்த நாராயணன் , வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலே தான் இருந்து ரெஸ்ட் எடுக்க தொடங்கினார்.

சவுந்தர்யா தான் கம்பெனியின் மொத்த பொறுப்புகளையும் எடுத்து பார்த்தார்.

இது எப்பொழுதும் செய்யும் வேலை தான் என்றாலும் , கணவரோடு இருந்து கவனித்து கொண்டதற்கு இப்போது தனியாக எல்லாவற்றையும் பார்க்க சிரமமாக தான் இருந்தது.

பெற்றவர்களுக்கு துணை நிற்காமல் தனக்கு மட்டுமே கவலை இருக்கு என்று உள்ளுக்குள்ளே அடைந்து கிடக்கும் பெண்ணை நினைத்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அந்த பாசமிகு அன்னைக்கு.

இவளை எப்படியாவது இந்த சாம்ப்ராஜியத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று அதை பற்றி சிந்திக்க தொடங்கி இருந்தார் சவுந்தர்யா.

இந்த யோசனை எல்லாம் சிறிது நாட்களாக தான் வந்தது. அதற்கு முன்பு வரை அவள் எப்படி இருந்தால் எனக்கென்ன என்பது போல் தான் இருப்பார்.

ஆனால் , இதோ அவரின் சாம்ப்ராஜியத்தை அழிக்கவே அபிநந்தன் வந்து விட்டான் என்று தெரிந்த நொடியே அவருக்கு எப்படியாவது இசையை அவனுக்கு எதிர்க்க நிற்க வைத்திட வேண்டும் என்ற உந்துதல்.

அவருக்கு தான் முன்பே தெரியுமே , இசை பிறந்த போதே ஜோசியர் கூறியிருக்காறே தங்களுக்காக காவல் இசை தான் என்று..

ஆனால் தன்னால் அவளை தன் வழிக்கு கொண்டு வர முடியும் என்று தோன்றவில்லை.

இதை செய்ய நாராயணனால் மட்டுமே முடியும் என்று சவுந்தர்யாவிற்கு தோன்றியது. அவரை கொண்டு அவளை இதற்குள் நுழைக்க முடியும் என்று தோன்றியதும் தான் மற்ற வேலைகளை கவனிக்க தொடங்கினார்.

இசைப்பிரியா எதை பற்றியும் நினையாமல் அவளின் காதலனை பற்றி மட்டுமே இருபத்தி நாலு மணிநேரமும் சிந்தித்தாள்.

தான் எப்படி எல்லாம் அவனுடன் வாழ வேண்டும் என்று ஆசைக் கொண்டேன். அதை எல்லாத்தையும் கெடுக்கும் விதமாக அவள் வாழ்க்கையை பாலைவனமாக்கிய அபியின் மீது கோபமாக வந்தது.

தன்னை போல் அவனும் கதற வேண்டும், துடிக்க வேண்டும் தான் முடங்கியது போல் அவனும் அவன் வாழ்வில் முடங்க வேண்டும். அதை பார்த்து இரசிக்க வேண்டும் . அப்போது தான் அவனின் ஆத்மா சந்தோஷப்படும் என்று நினைத்து கோபத்தோடு கண்ணீரும் சிந்தினாள் பெண்ணவள்.

★★★★

நாட்கள் வழமையாக அதன் போக்கில் செல்ல , அன்றைய தினம் அவர்களுக்கு ஏனோ சவாலாக அமைந்தது போல..

சிறிது நாட்களாகவே , வேலையில் ஏனோ தவறு நடப்பது போல் நிரலிக்கு தோன்ற , அன்றைய நாள் அபியை அழைத்து கொண்டு சைட்டிற்கு சென்றாள்.

அங்கே சென்று பார்த்தால் , அங்கு வேலை பார்ப்பவர்கள் எல்லாம் ஆங்காங்கே அமர்ந்து கதையலந்து கொண்டிருக்க ,அதை பார்த்த நிரலிக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது.

அதே கோபத்துடன் அபியை பார்த்து “இங்க வேலை நடக்குதா இல்லையா.? இது தான் நீங்க கவனிக்கிற லட்சனமா மிஸ்டர்.?” என பொறிய,

“எனக்கே தெரியல மேம் இங்க என்ன நடக்குதுன்னு.ஒரு வாரமா நான் சைட் பக்கம் வரலை‌. நீங்க வேற‌ ஒரு ஒரக் கொடுத்ததுனால ,அதுல தான் என் மொத்த கவனமும் இருந்தது ” என அபி அவன் நிலையை சொல்ல,

“என்ன தான் உங்களுக்கு ஒர்க் இருந்தாலும் ,இதை கவனிச்சிருக்கனுமா இல்லையா. இப்படியா இரெஸ்பான்சிபிளா இருப்பீங்க. உங்க கிட்ட இருந்து இதை நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை அபி ” என்றவள் உள்ளே சென்றாள்.

அங்கே எந்த வேலையும் சரிவர செய்திருக்கவில்லை. அதுமட்டுமின்றி செங்கல் மணல் சிமெண்ட் என எந்த விதமான தேவையான பொருட்களும் இல்லாமல் போகவே சைட் மேனேஜரை அழைத்தாள்.

அவனோ அதை ஏற்காமல் போக , திரும்ப அழைத்த போது ஸ்விட்ச் ஆஃப் என்று வரவும் ‌அவளுக்கு அத்தனை கோபம்..

அபியும் அவள் பின்னாடி வந்து இதையெல்லாம் பார்த்து விட்டு , அங்கிருந்த கொத்தனாரை அழைத்தான்.

“அண்ணா ,ஏன் எந்த வேலையும் செய்யாம இருக்கீங்க.? அதுவும் இல்லாமல் இங்க செங்கல் மணல் எதுவும் இல்லையே ” என்க

“ஐயா ,நாங்க வேலை செஞ்சு நாலு நாள் ஆச்சிங்க. மேனேஜர் கிட்ட சொன்னா பொருள் எல்லாம் வர லேட்டாகும்னு சொன்னாரு ” என்றதும் அவன் மொபைலை எடுத்து அவனுக்கு அழைக்க போக,

“அது வேஸ்ட் .‌அவன் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் . இது யாரோ வேணும்னு பண்ற வேலை . நம்மலை அந்த மேனேஜர் சீட் பண்ணிட்டான் ” என்று சீற்றத்துடன் சொல்ல,

“நீங்க கோப படாதீங்க மேடம். நாம ஏதாவது பண்ணலாம் ” என்று சொல்ல,

“இப்போ என்னத்தை பண்றது அபி. இங்க இருக்கிற பாதி பொருட்கள் சீப் மெட்டீரியல்ஸா இருக்கு “

“டென்ஷன் ஆக வேண்டாமே , நம்ம கிட்ட இருக்கிற அமௌன்ட் வச்சி இப்போ மெட்டிரியல்ஸ் வாங்கி ஒர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம். அப்புறம் அடுத்து என்னென்னு யோசிப்போம் மேடம் ” என்று அபி நேரத்திற்கு தகுந்தாற்போல் சொல்லவும்,

அவன் சொல்வதும் சரியாக படவே , அதற்கான வேலையை தொடங்கினார்கள் நிரலியும் அபிநந்தனும்…

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்த மேனேஜர் மெட்டீரியல்ஸ் வாங்க வேண்டி அதிகளவு பணத்தை செக்காக வாங்கி சென்றான்.

இப்போது தீடிரென எதிர்பாராமல் இப்படி ஒரு பிரச்சனை வந்து விட , மெட்டீரியல்ஸ் வாங்க சிரமப்பட்டனர்.

யாரிடமாவது உதவி கேட்டால் என்ன என்ற நிலையில் இருக்க, அந்த நேரம் பார்த்து சவுந்தர்யா நிரலி கம்பெனிக்கு வருகை தந்திருந்தார்.

அவரின் வருகையை வரவேற்பாளர் மூலமாக அறிந்து கொண்ட நிரலி புருவம் சுருக்கினாள்.

‘இப்போ இவங்க எதுக்கு வந்திருக்காங்க ‘ என்ற சிந்தனையோடே அபிக்கு அழைத்து அறைக்கு வர பணித்தாள்.

அவனும் அறைக்கு வந்து விட ,” சித்தார்த் க்ருப்ஸ் சீ.ஈ.ஓ மிஸஸ் .சவுந்தர்யா வந்திருக்காங்க ” என்க

“எதுக்காகன்னு தெரியுமா மேடம்? “

“எனக்கு தெரிஞ்சி இந்த ப்ராஜெக்ட் அவங்களுக்கு போய் சேர வேண்டியது. தீடிருன்னு நாராயணன் அவங்களுக்கு அட்டாக் வரவும் கிளம்பிட்டாங்க. சோ இது எனக்கு கிடைச்சிடுச்சி. ஆனா இப்போ எதுக்காக வந்திருக்காங்கன்னு தெரியல ” என்றாள்.

“அப்போ எனக்கு தெரிஞ்சி, இதை அவங்க கைப்பற்ற செய்யிற வேலையா கூட இருக்கலாம்னு தோணுது ” என தன் யோசனையை முன் வைக்க,

” அவங்க எவ்வளோ பெரிய ஆள் நம்ம கிட்ட எதுக்கு மோத போறாங்க நந்தன் “

” சரி ,அவங்க இங்க வரட்டும். அவங்க பேசுறதை வச்சே நாம கெஸ் பண்ணிடலாம் ” என்று அபி சொல்ல,

“ம்ம்ம் ” என்றவள் அவரை உள்ளே அனுப்புமாறு கூறினாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், அவள் முன்பு கால் மேல் கால் போட்டபடி அமர்ந்தார் சவுந்தர்யா.

“எதுக்காக என்னைய பார்க்க வந்திருக்கீங்க ” என நேரடியாகவே நிரலி கேட்க,

“ரொம்ப ஸ்பீட் மா நீ. நேரா பாய்ண்டுக்கே வந்துட்ட ” என்றவர் அபியை ஒரு நொடி பார்க்க, அவன் முறைக்கவும் நிரலியின் புறம் திரும்பி ,” எனக்கு நீங்க இப்போ பண்ணிட்டு இருக்கிற ப்ராஜெக்ட் வேணும் ” என்றார்.

“அப்போ இவ்வளோ வேலையும்..” என முடிக்க கூட இல்லை ,” ஆமா அது எல்லாம் என்னோட வேலை தான் ” என்றார் திமிராக.

“என்கிட்ட மோத தகுதியே இல்லாத கம்பெனி கூட போட்டி போட கூட எனக்கு அசிங்கமா இருக்கு ” என முக சுளித்தார்.

அவரை ஏற இறங்க பார்த்த நிரலி ,” எழுந்திரீங்க மேடம்..” என எழுந்து நின்றாள்.

“வாட்..?”

” என்ன வாத்து கோழின்னு . உங்களை தான் எழுந்திரிக்க சொன்னேன். நீங்களா எழுந்தா நல்லது இல்லன்னா என்னோட பிஏவை வச்சி உங்களை வெளியே இழுத்து போய் விடுற மாதிரி வச்சிக்காதீங்க ” என டீசன்டாக சொல்ல,

இத்தனை நேரம் முறைத்த படி இருந்த அபியின் முகம் இப்போது புன்னகையில் விரிந்தது.

அதனை கண்ட சவுந்தர்யாவிற்கு முகம் கறுத்து போய் எழுந்து விட ,” உன்ன நான் சும்மாவே விடமாட்டேன் டி. என்னையவே வெளியே போன்னு சொல்லிட்ட இல்ல. நீ எப்படி இதை முடிக்கிறேன்னு நான் பாக்குறேன்” என ஆட்காட்டி விரலை நீட்டி சவால் விடவும்,

அதனை அலேக்காக பிடித்த அபி ,” உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க. நிரலி மேடம்க்காக நான் இருக்கேன். என்னை தாண்டி தான் அவங்களை எதுவா இருந்தாலும் தொட முடியும் .இப்போ நீங்க போகலாம்” என கையை வெளியே காட்ட,

அவமானத்தில் இருவரையும் முறைத்து விட்டு வெளியே சென்றார் சவுந்தர்யா.

அவன் சொன்னதை கேட்ட நிரலியின் பார்வை ,அபியின் புறம் நிலைத்து நின்றது மட்டுமல்லாமல் கண்கள் பனிக்க செய்தது.

சவுந்தர்யா வெளியே சென்றதும் ,அவளை அணைத்து விடுவித்த அபி ” சூப்பர் மேடம் ” என சொல்லி சென்றான்.

அதில் அசையாது அப்படியே நின்று விட்டாள் நிரலி. அவளுக்கு உலகத்தில் நடப்பது யாவும் மாயமானது போல் தோன்றியது.

அடுத்த நொடியே தன் முகத்தை சிலுப்பிக் கொண்டவள் , வேலையை கவனிக்க தொடங்கினாள்.

மறுநாள்…

“அபி அமௌன்ட்க்கு நாம என்ன பண்றது.?” என நிரலி அவனிடம் ஆலோசனை கேட்க,

“எனக்கும் அது தான் புரிய மாட்டேங்குது மேம். இப்படி ஒரு சிட்சுவேஷன் வரும்னு நான் நினைக்கல. இல்லன்னா பாதி அமௌன்ட்க்கு மேல கொடுக்க சொல்லி இருக்க மாட்டேன் ” என தன்னால் தான் என வருந்தி சொல்ல,

“விடுங்க நந்தன். எதாவது ஒரு ஐடியா கிடைக்கும் ” என்றவளின் கண்கள் சுவற்றில் மாலையிட்டிருந்த புகைப்படத்தில் அன்னையின் சிரித்த முகம் தென்பட , அதை கண்டு புன்னகைத்த நிரலிக்கு ஒரு யோசனை தோன்றியது.

“அபி , நான் வேணும்னா என்னோட பார்ட்னர் கிட்ட கேக்கவா?”

“நல்ல ஐடியா தான். ஆனா யாரு அந்த பார்ட்னர்.?”

“அதுவா, அவரு என்னோட அப்பா தான் “

“அப்போ சூப்பர் மேடம்…” என்றான்.

அடுத்த நாளே ,தந்தையிடம் தன் நிலையை பற்றி கூறி உதவி கேட்க,

“உனக்கு இல்லாததா மா. எவ்வளோ வேணும்னு சொல்லு நான் உன் அக்கௌன்ட்க்கு அனுப்பி வைக்கிறேன் .ஆனா நீ கல்யாணத்துக்கு சரின்னு சொல்லனும் மா . உங்க அம்மா இருந்த வரை சரி, ஆனா இப்போ அப்படி இல்லை. உனக்கும் இருபத்தி நாலு வயசு முடிய போகுது . இந்த அப்பாக்காக கல்யாணத்துக்கு சரின்னு சொல்லு ” என்ற தந்தையை பார்த்து வராத புன்னகையை இதழுக்கு நடுவில் கொண்டு வந்தவள் ” உங்க இஷ்டம்” என்றாள்.

அவருக்கு குஷியாகி போய் விட ,” ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. எவ்வளோ அமௌன்ட்னு சொல்லு ,உடனே நான் அனுப்புறேன் ” என்ற தந்தையிடம் அமௌன்டை கூறியவள் அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.

நாட்கள் அதன் போக்கில் நகர , அவளுக்கு வந்த அத்தனை பிரச்சனைகளையும் அபியுடன் சேர்த்து தகர்த்தெறிந்தாள் நிரலி.

அபியும் நிரலியும் அந்த ப்ராஜெக்ட் முடிப்பதில் கவனமாக இருந்து விட , தாரணியை பற்றி சிந்திக்க மறந்தான் அபிநந்தன்.

ஒருமுறை வீட்டிற்கு சென்ற அவினாஷ் கண்ணிற்கு இது பட்டு விட , அன்று இரவே அபிக்கு அழைத்து விட்டான் அவினாஷ்.

“அபி , உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா டா. தலைக்கு மேல வேலை இருந்தாலும் வீட்ல இருக்கிறவங்க கூடவும் டைம் ஸ்பெண்ட் பண்ணனும் டா ” என எடுத்த எடுப்பிலே பொறிய தொடங்க,

“இப்போ நீ என்ன சொல்ல வர அவி.‌?”

“இன்னைக்கு சரோ‌ மம்மியை பார்க்க வீட்டுக்கு போனேன் டா. தாரணி பாக்கவே பாவமா உட்கார்ந்திருந்தா உன் போட்டோவை வச்சிக்கிட்டு ” என்றதும் தான் தங்கையை கவனிப்பதில்லை என புரிய தலையில் அடித்து கொண்டான் அபி.

“இங்க கொஞ்சம் வேலை டா. காண்சென்ட்ரேட் எல்லாம் அதுல இருந்ததுல அம்முவை கவனிக்க மறந்துட்டேன் ” என தலை சொரிய,

“சரி மச்சி , ஆனா அவளை தனியா ஃபீல் பண்ண வைக்காத டா.‌ஏனோ பார்க்கவே பாவமா இருந்தது. நீ வேணும்னா அவளை பிஜி பண்ண சொல்லேன் டா. சும்மா இருக்கிற நேரத்துக்கு அவ படிக்கலாம்ல ” என ஐடியா மணிப்போல் ஐடியா வழங்க,

“சூப்பர் மச்சான் ,அவளும் நல்லா படிப்பா ப்ராணா அண்ணா மாதிரியே. நான் அவகிட்ட பேசிட்டு காலேஜ் அட்மிஷன் போட்டறேன் ” என்று அழைப்பை வைத்தான்.

அன்று சீக்கிரமே வீட்டிற்கு வந்த அண்ணனை ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள் தாரணி.

“னா,நான் உன்ன எவ்வளோ மிஸ் பண்ணேன்னு தெரியுமா ” என சிறுபிள்ளை போல் கண்ணீர் சிந்த,

“அம்முக்காக நான் அவளுக்கு பிடிச்ச சிக்கன் பிரியாணி வாங்கிட்டு வந்தேன். பார்த்தா இங்க அழுது வடியிற பொண்ணு தானே இருக்கு. அழுகிற பிள்ளைக்கு எதுக்கு பிரியாணி ” என அதை சரோஜினியிடம் தூக்கி கொடுக்க போக,

“நான் ஒன்னும் அழுகலை .சும்மா கண்ணுல இருந்து தண்ணீர் வருதான்னு பார்த்தேன் ” என்றவள் அவனிடமிருந்து பிரியாணி கவரை வாங்கி கொண்டு சமையலறைக்கு ஓடினாள்.

மூவரும் சேர்ந்து சாப்பிட்ட பிறகு , அண்ணனின் பக்கத்தில் அமர்ந்து பொம்மை பட பார்த்திருந்தவளை கண்டு ” அம்மு ” என மெதுவாக அழைத்தான்.

“சொல்லு னா ” என அவன் தோளில் வாகை சாய்ந்து கொண்டாள்.

” நீ மேல படி அம்மு. நாளைக்கு உனக்கான அப்ளிக்கேஷன் வாங்கிட்டு வரேன்” என்று சொல்ல,

“நான் மேல படிக்க போறேன்னா னா ” என விழி விரித்து கேட்டவளை கண்டு ‘ ஆமாம்’ என்று தலையசைத்தான்.

“லவ் யூ ஜோ மச் அண்ணா ” என்று அவன் நெற்றியில் இதழ் பதித்து ” நான் போய் ஸ்டேட்ஸ் போடுறேன் னா ” என அவளின் அறை நோக்கி ஓடினாள்.

அவளின் சிறுபிள்ளை தனத்தை எண்ணி சிரித்து கொண்டான்.

அவன் சொன்னது போலவே , அடுத்த நாளே அவளுக்கான பிஜி அப்ளிக்கேஷன் ஃபார்மை வாங்கி கொண்டு வந்தான்.

அடுத்த வாரத்திலே அதை கல்லூரியில் கொடுத்து அவளை கல்லூரியில் சேர்த்தும் விட்டான் அபிநந்தன்.

தாரணிக்கு அத்தனை பெருமையாக இருந்தது தன் அண்ணனின் பாசத்தினை எண்ணி கர்வமும் கொண்டாள்.

ஒருமாதம் கழிந்த நிலையில் தாரணிக்கு வகுப்புகள் தொடங்கி விட , அவளை கல்லூரியில் விட்டுச் சென்றான் அபிநந்தன்.

அபியை கண்ட சில பெண்கள் ,அவனின் தோற்ற அழகில் மயங்கியே தாரணியிடம் நட்பு பாராட்ட விரும்பி கேட்க, அவர்களை கடக்க முடியாமல் அவதியுற்றாள்‌ பெண்.

அதனை தூரத்திலிருந்து பார்த்த ஒருவன் ,அவளை நெருங்கி வந்து ” என்ன பண்றீங்க இங்க .? இப்படியா ஒரு பொண்ணை டார்ச்சர் பண்ணுவீங்க ” என்று கோபமாக கேட்க,

அதில் பின்வாங்கிய பெண்கள் ,” ஜஸ்ட் ப்ரெண்டாக சொல்லி தான் கேட்டோம் ” என கூட்டத்தில் ஒருத்தி சொல்ல,

“எது இவங்களோட அண்ணனை பார்த்த பிறகு தான் நட்பு பாராட்ட தோணுச்சா ” என கேட்டவன் அவள் வலக்கரத்தை பிடித்து அழைத்து சென்றான்.

சிறிது தூரம் வந்த பின் அவளின் கையை விடுவித்தவன் , ” நீங்க புதுசா ஜாயின் பண்ணி இருக்கீங்களா.?” என கேட்க,

‘ம்ம் ‘ என தலையை ஆட்டியவள் ” தேங்க்ஸ் அந்த கேர்ள்ஸ் கிட்ட இருந்து காப்பாதினதுக்கு ” என மனசார மன்னிப்பு வேண்ட,

“இப்படி ஒரு ஹேன்சமோட தங்கச்சியா இருந்தா,இப்படி எல்லாம் வரது சகஜம் தான்”

“என்னோட நேம் தன்யன். இங்க தான் பிஜி ஃபர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணி இருக்கேன் . நீங்க.? உங்க நேம்.? என்ன டிப்பார்ட்மென்ட் .?” என அவன் கேட்க,

“தாரணி தேவி. இங்க தான் எம்.ம.சி பிசிக்ஸ் ஜாயின் பண்ணியிருக்கேன் ” என்று சொல்ல,

“ஹே நானும் அதே தான் யா ” என அவளோடு கதையளந்த படியே வகுப்பிற்கு சென்றான்.

இதையெல்லாம் ஸ்டாப் ரூமிலிருந்து பார்த்த அவினாஷிற்கு கடுப்பாக இருந்தது.

அதே கடுப்புடன் அவளது வகுப்பிற்கு சென்று அவளை அதிர்ச்சி குள்ளாக்கினான்.

error: Content is protected !!