அன்புடைய ஆதிக்கமே 21

அன்புடைய ஆதிக்கமே 21

 

 

அத்தியாயம் 21

           “டேய் நாயே எந்திரி டா.மணி எத்தனைன்னு தெரியுமா.நான் இன்னைக்கு வேகமா போனும் டா எந்திரி.”என்று முதல் நாள் இரவில் நடந்த சம்பவங்களால் சிறிதும் பாதிக்கப்படாமல் அதாவது கூடலால் முளைத்த நாணசிவப்பு சிறிதும் இல்லாமல் எப்பொழுதும் போல் தன் அருமை கணவனை எழுப்பிக்கொண்டிருந்தாள் சுருதி…

           “ஏன் டி.ஐஞ்சு மணிக்கு மேல தானே டி தூங்கவிட்ட..இப்ப வந்து எழுப்புற.”என்று சுருதி வெட்கபட்டுக்கொண்டே சிணுங்கி கூற வேண்டிய டையலாக்கை ஜெயக்குமார் கூறியவாறு மெதுவாக கண்முழித்தான்…

          “டேய்.மானத்தை வாங்காத டா.லூசு பயலே.நீ தானே டா என்னை தூங்கவிடாம பண்ண.”என்று சுருதி இதுவரை செய்து அறியாத அந்த வெட்கத்தை முகம் முழுவதும் பூசிக்கொண்டு சிரிப்புடன் ஜெயக்குமாரின் தோளில் அடித்தவாறு கூறினாள்…

          “பாரு டா.என் பொண்டாட்டிக்கு வெட்கபட கூட தெரியுது.”என்று சுருதியை நோக்கி திரும்பி ஒரு கையை கொண்டு தலையை தாங்கியவாறு கூறினான் ஜெயக்குமார்…

            “ஏதாச்சும் சொல்லிற போறேன் டா…எந்திரி டா.இன்னைக்கு மட்டும் லேட்டா போனே.அவ்வளவு தான்….கே கே என்னை வேலைய விட்டே தூக்கிருவாரு டா.”

              “அப்படியா….வேகமா போகணுமா.”என்று தலையில் இருந்து கால் வரை சுருதியை பார்வையாலே கபளீகரம் செய்தவாறு கேட்டான் ஜெயக்குமார்…

               “ச்சீ. இப்படி ஏன் டா பார்த்து தொலையுற.”என்று கைகளை கொண்டு அவனின் கண்களை மூடியவாறு சிணுங்கினாள் சுருதி…

                “சரி.என் மொபைலை எடு.”என்று படுக்கையை விட்டு எழுந்திரிக்காமலே அவளை வேலைவாங்கினான்.

கைபேசி அவனுக்கு அருகிலிருந்த தலையணையின் மீது தான் கிடந்தது,.அதை எடுக்க வேண்டுமென்றால் அவனை தாண்டி கைநீட்டி தான் எடுக்க வேண்டும்…

         “உன் பக்கத்துல தானே இருக்கு.எடு டா.”என்று அவனை உரசிக்கொண்டு எடுக்க வேண்டுமென்று திட்டினாள் சுருதி…

           “மாமா.ராத்திரிலாம் ஓவர் டியூட்டி பார்த்து டயர்டா இருக்கேன் டி.நீயே எடு.எடுத்தா வேகமா ஸ்கூலுக்கு போலாம்.இல்லாட்டி லீவ் எடுத்து பகலிலேயே வேலை பார்க்கலாம்.என்ன சொல்ற.”என்று சுருதியை பார்த்து கண்ணடித்தவாறு கூறினான் ஜெயக்குமார்…

            “கருமம்.கருமம்.”

            “ரொம்ப பண்ணாத டி.எடுத்து குடு.”என்று கிறக்கமாக கேட்டான் ஜெயக்குமார்…

                 அவனை முறைத்தவாறே அவனின் மீது படாமல் தாண்டி கைபேசியை நோக்கி கையை நீட்டும் போதே அவளின் முகத்தை பிடித்து இழுத்து இதழ் பொறுத்திருந்தான்…

                    இழுத்தவேகத்தில் எந்தவித பிடிமானமும் இல்லாததால் அவன் மேலயே விழுந்து தொலைத்தாள் சுருதி.விழுந்தும் விடவில்லையே அந்த கள்வன். விழுந்தது அவனுக்கு வசதியாக போய்விட்டது.கரங்கள் அத்துமீற அவளது இதழோடு உறவாடிக்கொண்டிருந்தான் ஜெயக்குமார்…

                 சுருதியின் நிலைமையோ பரிதாபகரமாக போய்விட்டது.இசகுபிசகாக விழுந்து தொலைந்துவிட்டதால் அவளால் தன்னிச்சையாக எழுந்திருக்கவும் முடியவில்லை.அவள் கணவன் எழுந்திருக்கவும் விடவில்லை…

             அவளது முயற்சிகளை எல்லாம் சாதாரணமாக முறியடித்தவன் இதழ் அமுதம் பருகிவிட்டே அவளை படுக்கையில் விட்டு அவன் எழுந்தான்…

              “எருமை.பன்னி.நொண்டிக்குமாரு.முகரைய பாரு.பல்லு கூட விலக்கமா கருமம் டா டேய்….ச்சை.”என்று சிவந்தமுகத்தையும் நடுங்கிய குரலையும் சரிபடுத்திக்கொண்டு தனது சரிபாதியை திட்டினாள் சுருதி….

              “உனக்கு ட்வின்ஸ் பிடிக்கும்ல.”என்று குறும்புடன் கேட்டான் ஜெயக்குமார்.

          நான் என்ன சொல்லறேன் இந்த நாய் எதை பத்தி பேசுதுன்னு பாரு என்று மீண்டும் மீண்டும் சிவக்க துவங்கும் முகத்துடன் அவனை பொய்யாக முறைத்துப்பார்த்தாள்.

              சுருதியின் அருகில் நெருங்கி சென்றவன் அவளது சிவந்த கன்னங்களை வருடியவாறு  “பல்லு விலக்கமா முத்தம் குடுத்தா.ரெட்டை பிள்ளை பிறக்குமாம்.அதான் டி.”என்று சிரிப்புடன் ஹஸ்கி குரலில் கூறினான்.

  முறைக்க முயன்றும் தோற்றவள் சிரித்தவாறு “லூசு தான் டா நீ.”என்று கூறினாள் சுருதி…

        “நிஜமா தான் டி.”

        “முத்தம் கொடுத்தாலே பிள்ளை பிறக்கும்னு நம்புன 90 ‘s கிட்ஸ் டி  நாம.அப்ப பல்லு விலக்கமா கிஸ் குடுத்தா ரெட்டை பிள்ளை பிறக்கும்னு நம்பனும் டி.”என்று  சுருதியை அணைத்தவாறு சிரிப்புடன் கூறினான் ஜெயக்குமார்…

        “சரி நம்புறேன்..விடு.போய் மூஞ்சி கழுவிட்டு வா.என்னை ஸ்கூல்ல இறக்கி விட்டுட்டு நீ அதுக்கு அப்பறம் வந்து கிளம்பி காலேஜ்க்கு போ.”

         “ஏழு மணிக்கெல்லாம் ஸ்கூலுக்கு போய் என்ன பண்ண போற.ஐயோ நான் இன்னும் சாப்பாடு பண்ணலையே.பட்டினியாவா போக போற.இரு டூ மினிட்ஸ்.உப்புமா பண்றேன்.சாப்பிட்டு போடி.”என்று நிதானமாக விசாரிக்க ஆரம்பித்து பதட்டமாக முடித்தான் …

          “வேணாம் டா.நான் கேன்டீன்ல சாப்பிட்டுக்கிறேன்.நீ வேமாக வா.மொத.”

அங்கே போனாலாச்சும் கே கே நல்ல சாப்பாடு கொடுப்பாரு.இவன் என்னனா உப்புமா சாப்பிட்டு போகவாம்.மண்டையை பாரு நொண்டிக்குமாரு.என்று மைண்ட் வாய்ஸில் பேசினாள் சுருதி.

      ஜெயக்குமார் சென்று முகம் கழுவி வேறுடை மாற்றி வரவும்.சுருதி புடவையின் சுருக்கங்களை தடவி நேர்படுத்தவும் சரியாக இருந்தது…

            கணவன் வந்துவிடவும் அவனின் இருசக்கர வண்டியில் பின்னே அமர்ந்து கணவனின் இடையை சுற்றி கையை போட்டு அமர்ந்தாள்.தன் இடையை வளைந்திருந்த கையை பிடித்து இன்னும் தன்னுடன் இறுக்கியவன் ரியர் மிரர் வழியாக மனைவியை பார்த்து புன்னகைத்துவிட்டு வண்டியை கிளப்பினான்…

      பின்னணியில் பார்த்த முதல் நாளே பாடல் ஒலிக்க இருவரும் தங்களை அந்தப்படத்தில் வரும் கமல்ஹாசன் கமலினியாக நினைத்துக்கொண்டு பயணப்பட்டனர்…(உங்களுக்கும் பார்த்த முதல் நாளே சாங் பின்னாடி ஓடுதுல.)

      ஜெயக்குமார் தனக்குள்ளையே பாடலை ஓடவிட்டு சிரித்துக்கொண்டே கனவில் மிதந்தவாறு வண்டி ஒட்டிக்கொண்டிருக்கும் போதே நாராசமாக ஒரு குரல் இடையிடுகிறது.

         “குமாரு குமாரு.”என்று அவனது தோள்பட்டையை உலுக்கினாள் சுருதி.அதில் சிறிது தடுமாறியவன் ஓரமாக வண்டியை நிற்பாட்டி விட்டு திரும்பி சுருதியை முறைத்தான் ஜெயக்குமார்(ஏன் மா.)

         “இப்ப பேக்கிரௌண்ட்ல பார்த்த முதல் நாளே பாட்டை தானே ஓடவிட்டு வண்டி ஓட்டிட்டு இருக்க.”என்று சிறிது பதட்டத்துடன் கேட்டாள் சுருதி…

     குமாரோ ஐயோ அடுத்து ஏதோ வில்லங்கமா சொல்ல போறா என்று உள்மனம் சொல்ல அவளை பார்த்து முறைப்புடன் தலையாட்டினான்…

        “அந்த படத்துல இந்த பாட்டு முடிச்சவுடனே கமல் பொண்டாட்டி செத்து போயிரும்ல டா.அடுத்த ஜோதிகா வருவால.நான் மட்டும் செத்து போனும்.நீ மட்டும் இன்னொரு பொண்ணு கூட குஜாலா இருப்ப என்ன. “என்று முறைப்புடன் கூறினாள்…

(ரொமான்ஸ்.வாய்ப்பு இல்லை ராஜா.வாய்ப்பு இல்லை..)

      “ரோடுன்னு பாக்குறேன்.”என்று பல்லை கடித்துக்கொண்டு வார்த்தைகளை துப்பியவன் திரும்பி வண்டியை ஸ்டார்ட் செய்தான்…

       இதற்கு மேல் பேசினால் நிஜமாகவே அடித்துவிடுவான் என்ற பயத்தில் வாயை மூடிக்கொண்டு வந்தாள் சுருதி…

             பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து எப்போதும் அவளை இறக்கி விடும் இடத்தில் இறக்கிவிட்ட போது அங்கு ஏற்கனவே கேகே வும்.இப்பள்ளியின் ட்ரஸ்டியான கார்த்திகாவும் ஏதோ வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தனர்…

          குமாரையும் சுருதியையும் பார்க்கவும் சட்டென்று தங்களது வாக்குவாதத்தை நிறுத்திவிட்டு இருவரையும் பார்த்து சிரித்தனர்…

          “சுருதி.சாரி டா.உன்னோட மேரேஜுக்கு வரமுடியலை.முக்கியமான வேலையா டெல்லி வரை போயிருதேன்.நேத்து தான் வந்தேன்.உன்னை பார்த்துட்டு போலாம்னு இங்கயே வந்துட்டேன்.”என்று திருமணத்திற்கு கலந்துகொள்ள முடியதற்கான காரணத்தை வருத்தத்துடன் ஒரு கண்ணால் சுருதியையும் மறு கண்ணால் சுருதி ஜெயக்குமார் மட்டும் அங்கு உள்ளதுபோல் அவர்களை மட்டுமே பார்த்துக்கொண்டு நிற்கும் கேகேவை பார்த்தவாறு கூறினாள் கார்த்திகா…

         “என்னை பார்க்க தான் இப்படி காலங்காத்தால இங்கே வந்திருக்கீங்க.இதை நான் நம்பனும்.என்னமா இப்படி பண்றிங்களே மா.”என்று சிரிப்புடன் கிண்டலாக கேட்டாள் சுருதி…

          அதில் அழகாக வெட்கப்பட்ட கார்த்திகா “ஏய்.நிஜமா தான் டி.”என்று கூறினாள்…

          கே கே எதையும் கண்டுகொள்ளாமல் எப்பொழுதும் போல் பிடித்துவைத்த பிள்ளையார் போல் நின்றிருந்தான்.ஜெய்குமாரோ இங்கே என்ன டா நடக்குது.இந்த ஸ்கூல் ட்ரஸ்டிட்ட என் பொண்டாட்டி இப்படி பேசுறா.அவங்களும் வெட்கப்பட்டுட்டே பேசுறாங்க.இந்த ஸ்கூல்ல தான் பா பிரின்சிபால் ட்ரஸ்டிய மதிக்காம கைநீட்டி பேசமுடியும்.ஸ்டாப்பும் ட்ரஸ்டியும் இப்படி கிண்டல் பண்ணி சிரிச்சுக்க முடியும்…

       “விட்டா நீங்க பேசிக்கிட்டே இருப்பிங்க..”என்று இருவரையும் பொதுவாக அதட்டிய கேகே ஜெயக்குமாரை முறையாக கார்த்திகாவிடம் அறிமுகம்படுத்திவைத்தான்.பொதுவான நலவிசாரிப்புகளுக்கு பிறகு சுருதியையும் ஜெயக்குமாரையும் தனது வீட்டிற்கு ஒரு நாள் வருமாறு அழைப்பு விடுத்தாள் கார்த்திகா…

         பிறகு சுருதி ஜெயகுமாரிடம் சொல்லிவிட்டு வரட்டும் என்று கார்த்திகா.கே கே.இருவரும் அவர்களிடம் விடைபெற்று பிரின்சிபால் அறையை நோக்கி சென்றனர்…

 

            “என்ன டி.கேகே சித்து உங்க ட்ரஸ்டியை இப்படி அதட்டுறாரு.நீயும் நல்லா பேசுற.”என்று ஜெயக்குமார் தெரிந்துகொள்ளும் ஆவலில் சுருதியிடம் கேட்டான்.

               “அவங்க இந்த ஸ்கூல் ட்ரஸ்டி மட்டும் கிடையாது.கே கே சாரோட ஜூனியர் காலேஜ்ல.அதுமட்டும் இல்லாது அவரை இவங்க ஒன் சைடா காலேஜ் படிக்குறப்ப இருந்தே லவ் பண்றாங்க.அப்ப கே கே வேற ஒரு பொண்ணை லவ் பண்ணாரு.அவங்களையே கல்யாணமும் பண்ணிகிட்டாரு.ஏதோ மனஸ்தாபத்தால பிரிச்சுட்டாங்க.இன்னும் கார்த்திகா இவரை மறக்காம இருக்காங்க.அதான் உங்க கல்யாணம் தான் முறிச்சுருச்சுல அதுனால என்னை கல்யாணம் பண்ணிகொங்கனு கேட்குறாங்க..கே கே சார் தான் முடியாதுனு திரியுறார்.”என்று ஒரு பெரிய கதையை சொல்லி முடித்தாள் சுருதி.

             “ஓஹ்.இவருக்கு என்ன இப்ப.இவங்களை கல்யாணம் பண்ணிக்க வேண்டித்தானே.ரொம்ப வருசமா காத்துருக்காங்கல்ல.பாவம்.”என்று கார்த்திகாவிற்கு துணையாக பேசினான் ஜெயக்குமார்…

            “நாம நினைச்சு என்ன பிரயஜோனம்.இந்த கயல் பிள்ளை மனசு வைக்கணும்.நம்ம கதையை முடிச்சுட்டு இவங்க கதைக்கு வருவான்னு நினைக்குறேன்.”

           “அது யாரு கயல்.என்ன டி உளறுற.”(என்னை தெரிலைய உனக்கு…. பொண்டாட்டி கூட ஜாலியா இருக்கேல அதான்.ஆப்பு வைச்சுற வேண்டிதான்.சுருதி  மை  டார்லிங்…)

                                 “தெரியாட்டி விடு.சரி நான் வரட்டா.”என்று விடைபெறும் குரலில் கூறினாள் சுருதி…

      “சரி.பார்த்து போயிட்டு வா.டாடா.”என்று கூறியவன் கையசைத்து பறக்கும் முத்தத்தை அனுப்பி விட்டு அவள் நடந்து செல்வதை பார்த்தவாறு நின்றான்.

        அவள் சிறிது தூரம் சென்றிருக்க கூடும்.”சுருதி.சுருதி.நில்லு.நில்லு.”என்று சிறிதாக அவளை கூப்பிட்டவாறு அவளை நோக்கி நடந்து வந்தான்.

            என்ன என்பது போல் தலையை அசைத்து கேட்டாள்.ஒன்றும் இல்லை என்பது போல் தலையசைத்தவன் சுருதியின் ரவிக்கை தாண்டி தெரிந்த உள்ளாடையை ஒதுக்கி விட்டு “லூசு.இதெல்லாம் கவனமா இருக்க வேண்டாம்.”என்று எப்போதும் போல் கடிந்து விட்டு தலையசைத்து விடை பெற்று சென்றான்.

            மெல்லிய புன்னகை புரிந்த சுருதி போகும் தன் கணவனை பார்த்து  “cutiepie “என்று   ரசனையுடன் உதடசைத்துவிட்டு பிரின்சிபால் அறை நோக்கி  சென்றாள்.

          மனைவியை பள்ளியில் இறக்கிவிட்டு வந்தவன் வேகவேகமாக மதிய சாப்பாடு சமைத்துக்கொண்டு.குளித்து கிளம்பி கல்லூரிக்கு சென்றான்…

         முதல்வர் அறைக்கு சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்து இட்டு விட்டு.துறை தலைவர் அறைக்கு சென்று ஒரு வணக்கத்தை கொடுத்துவிட்டு ஸ்டாப் அறைக்கு சென்றான்.

           ஸ்டாப் அறையில் வினிதா தேவி மட்டும் இருந்தார்.கைபேசியில் ஏதோ காரசாரமாக விவாதித்து கொண்டிருந்தாள்.(மூன்றாவது அத்தியாயத்துல வருவாங்க.)

                 “இப்ப தான் ஒரு எமகண்டத்துல இருந்து வெளியே வந்துருக்கோம்.உடனேயே அடுத்ததா.கண்டிப்பா வேணாம்.அந்த ஆளு.மனுஷன் தானா.”என்று ஜெயக்குமார் அவர் அருகில் வந்ததை கவனிக்காமல் கத்திக்கொண்டிருந்தாள்.

                  ஜெயக்குமார் மிக அருகில் வந்தவுடன் தான் கவனித்தவள் அவனை நோக்கி சிறு சிரிப்பை உதித்தவர் “என் முன்னாள் கணவர்.”என்று கூறினார்.

                ஜெயக்குமார் எப்பயும்போல இந்த அம்மா எதுக்கு நம்மகிட்ட சொல்லுது என்று நினைத்தவன்.அவங்க குடும்ப விஷயம் நமக்கெதுக்கு வம்பு என்று நினைத்து அவன் செல்ல வேண்டிய வகுப்பறைக்கு கிளாஸ் ஆரம்பிப்பதற்கு முன்னாலே சென்று விட்டான்.

    “பாரு.பீஸ் கட்டிட்டியா.இல்லாட்டி பிரின்சிபால் போய் பார்த்துட்டு வந்து வெளியே நிக்கனுமே டி.”என்று கவலையாக கேட்டாள் நவீனா…

      “லோன் எப்பயும் போல பாதி பணம் வந்துருச்சு.மீதி பணத்துக்கு என்ன பண்றதுனு தெரில.அப்பா இப்ப தான் கொஞ்சம் நார்மல் ஆகிட்டு வராரு.இருந்த காசு தங்கச்சிக்கு டேர்ம் பீஸ் கட்டிட்டேன்.இன்னும் ஒன் வீக் டைம் வாங்கணும்.”என்று ஒரு சோபை புன்னகையுடன் கூறினாள் பாரதி…

       “எங்க அப்பாகிட்ட கேட்டு பார்க்கலாம்னு பார்த்தா அந்த ஆளு ஒரு கஞ்சப்பிசினாரி.எச்சி கையால காக்கா கூட ஓட்ட மாட்டாரு.சாரி டி.”என்று தன்னால் தன் உயிர் தோழிக்கு உதவ முடியவில்லையே என்று ஆற்றாமையுடன் புலம்பினாள் பவி…

            “விடு மச்சி.மாமா கிட்ட பணம் கேட்ருக்கோம்.நெக்ஸ்ட் வீக் தரேன்னு சொல்லிருக்காரு.சமாளிச்சுரலாம் விடு.”என்று சோகங்கள் அனைத்தையும் தன்னுடன் புதைத்துக்கொண்டு தோழிகளை தேற்றினாள் பாரதி.

        இவ்வாறு பேசிக்கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்து இருந்தனர்.முதல் வகுப்பு துறை தலைவர் அலெர்ட் ஆறுமுகம் வந்து கிளாஸ் எடுத்துக்கொண்டிருந்தார்…

        அப்பொழுது  பியூன் பீஸ் கட்டாத மாணவர்களின் பெயருடன் வந்து அலெர்ட் ஆறுமுகத்தின் லெக்ட்சரரில் இடையிட்டான்.

          இரண்டு மூன்று மாணவர்களுடன் பாரதியின் பெயரும் இருந்தது.அதை பார்த்த அலெர்ட் ஆறுமுகம் பார்வை என்ன இன்னும் நீ பீஸ் கட்டலையா என்பது போல் பாரதியின் மீது படிந்து விலகியது…

       அப்படி இப்படி என்று இவர்கள் துறையில் மட்டும் ஐம்பது  பேருக்கும் மேல் பீஸ் கட்டாமல் இருந்தனர்.அதுவும் பைன் உடன் கட்டவேண்டிய தேதி முடிந்தும் இத்தனை பேர் இருந்தனர்….

          அனைவரும் பிரின்சிபால் அறைக்கு முன் நின்றுகொண்டிருந்தனர்.எப்பொழுதும் எந்த விதமான திட்டு வாங்கும் இடங்களிலும் தன் தோழிகளுடன் இருந்து பழகியதால் இப்பொழுது தனியாக திட்டு வாங்குவது ஏதோ ரொம்ப வலித்தது.கண்கள் கலங்கி இரண்டு சொட்டு கண்ணீர் கூட தரையில் விழுந்து விட்டது…

          இளமை பட்டாளங்களை கொண்டு போய் பாகிஸ்தான் எல்லையில் விட்டால் பயமின்றி சிரித்துவிட்டு வருவார்கள்.தனியாக போய் ஒருவரிடம் பேசி விட்டு வா என்றால் யோசிப்பார்கள்.சங்கடப்படுவார்கள்….அதே தான் பாரதிக்கும் நடந்தது…

        அழுதுகொண்டிருந்தவள் திடிரென்று நிமிர்ந்து சுற்றி முற்றி பார்த்தாள்….யாரோ தன்னையே பார்த்து கொண்டு இருப்பதுபோல் ஒரு உணர்வு.முதுகு தண்டு ஜில்லிடும் உணர்வு….

   கண்களை நாலாபக்கமும் உருட்டி பார்த்தும் யாரும் இவளை பார்க்கவில்லை.ஆனால் உள்ளுணர்வு அடித்து சொல்லிக்கிறதே.யாரோ பார்க்கிறார்கள் என்று…

         சிறிதுநேரம் திட்டிய பிரின்சிபால் அனைவரையும் வகுப்பறைக்கு செல்ல சொன்னார்.நாளைக்கு கட்டாவிடில் வராதீர்கள்.வந்தாலும் வகுப்பறைக்கு வெளியேவே நின்று கொள்ளுங்கள் என்று கத்திவிட்டு சென்றார்…

         அவ்வளவு நேரமும் பாரதி சுற்றி முற்றி பார்த்துக்கொண்டே தான் இருந்தாள்.ஆனால் யாரும் அவளை பார்க்கிற மாதிரி இல்லை.ஆனால் அவள் உள்ளுணர்வு யாரோ தன்னை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்று கூறியது…

        ஒரு பெருமூச்சுடன் அந்த இடத்தை விட்டு அகன்றவள் தனது வகுப்பறை நோக்கி சென்றாள்.அதற்குள் அடுத்த பாடவேளை ஆரம்பித்து ஜெயக்குமார் வந்து பாடம் நடத்திக்கொண்டிருந்தான்…

       அவனிடம் அனுமதி பெற்று உள்ளே சென்று அவள் இடத்தில் அமர்ந்தாள்.ஜெயக்குமார் எதையும் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை.எங்கே போயிட்டு வந்திங்கனு ஒரு கேள்வி.அதற்கு பதில் சொல்வதற்குள் உள்ளே சென்று அமர சொல்லிவிட்டான்.

  தோழிகள் மூவரும் கண்களாலையே பேசிக்கொண்டும் சமாதானம் கூறிக்கொண்டும் பாடத்தை கவனிக்க ஆரம்பித்தனர்…

     “எனக்கு கொஞ்ச வேலை இருக்கு டி பேபி மா.வர லேட் ஆகும்.நீ ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போ.மாமிகிட்ட சாவி இருக்கு.சாப்பாடு பிரிட்ஜ்ல இருக்கு எடுத்து சாப்பிட்டு டீ குடிச்சுட்டு இரு.மாமா வந்துருவேன்.உம்மா.லவ் யூ.”

      வந்திருந்த குறுஞ்செய்தியை பார்த்த சுருதியின் முகத்தில் ரகசிய புன்னகை வந்து அமர்ந்தது.அவளே அவனுக்கு அழைக்க வேண்டும் என்று இருந்தாள்.ஏனெனில் அன்புடை கரங்கள் ஆஃபிஸில் ஒரு சின்ன வேலைக்காக வந்திருந்தாள்.அதனால் குமாரை நேராக இங்கே வருமாறு சொல்ல நினைத்தாள்.அதற்குள் அவனே வேலை இருப்பதாக சொல்லி விட்டான்…

        என்ன நேரமோ என்னவோ ஒரு ஆட்டோ கூட இவள் கையசைத்து நிற்கவே இல்லை..நின்றதோ பயங்கர கூட்டமாக இருந்தது.பேருந்தில் பயணப்படலாம் என்றால் பள்ளி மாணவர்கள் தொங்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தனர்…

            காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்று பின்னணியில் பாடல் ஒலிக்காத குறையாக ரோட்டை பார்த்தேநின்றிருந்தாள்…

         அப்பொழுது ஜெயக்குமார் வண்டி ஓட்ட பின்னே அமர்ந்திருந்த பெண் அவனின் தோள்பட்டையை பிடித்திருக்க வண்டி சல்லென்று அவளை தாண்டி சென்றது.சுருதி அதிர்ந்து போய் பார்த்தாள்.ஒருவேளை எதுவும் காட்சிப்பிழையோ என்று நினைத்துக்கொண்டு வண்டி எண்ணை பார்க்க அதுவும் அவள் கணவனின் எண்ணாக இருந்தது. (ஏன் குமாரு..ஏன் உனக்கு மட்டும் இப்படி.)

**************************************************************************

              கல்லூரி நேரம் முடிந்து அனைவரும் கிளம்பி சென்று கொண்டிருந்தனர்.ஜெய்குமாரும் தன்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு தனது வண்டியே எடுக்க கிரௌண்டில் நடந்து வந்துகொண்டிருந்தான்…

       அப்பொழுது பின்னிருந்து “ஜேகே சார்.ஜேகே சார்.”என்றொரு பெண் குரல் கேட்கவும் நின்று திரும்பி பார்த்தான்…

       வினிதா தேவி இவனை அழைத்துக்கொண்டே வேகமாக இவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள்…

        அவள் அருகில் வரவும் “என்ன மேம்.என்ன வேணும்.”என்று கேட்டான்…

         “இல்லை சார்.ஒரு சின்ன ஹெல்ப்.என் பையன் விளையாடும் போது கீழே விழுந்துட்டானாம்.கால்ல அடியாம்.என்னை இந்த **** ஹாஸ்பிடலுக்கு வரச்சொல்லி  ஸ்கூல்ல இருந்து கால் வந்துச்சு.வேகமா போனும்.ரொம்ப அழுவுறானாம் சார்.”

          “ஓஹ்.ஏதாவது உதவி வேணுமா மேம்.கேஷ் ஏதாவது.”என்று சிறுபிள்ளைக்கு அடிபட்டு விட்டதே அவசரத்துக்கு பணம் வேண்டும் போல என்று நினைத்துக்கொண்டு கேட்டான்…

          “ஐயோ.அதெல்லாம் வேணாம் சார்.நீங்க என்னை அங்க கொஞ்சம் ட்ராப் பண்ண முடியுமா சார்.ப்ளீஸ்.ஆட்டோல போனா நேரமாகும் சார்.ப்ளீஸ் சார்.”என்று வினிதா கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்…

     இதற்கு என்ன மறுமொழி சொல்வேதென்று யோசித்தான்.ஏனெனில் இப்படியே சென்று அவன் மனைவியை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும்.இவர்கள் சொல்லும் மருத்துவமனையோ இவன் போக வேண்டிய வழிக்கு எதிர்பக்கம் இருந்தது.இவர்களை இறக்கி விட்டு விட்டு சுருதியை கூப்பிட செல்லலாம் என்றால் தாமதமாகி விடும்.என்று யோசித்தவன் ஒரு முடிவை எடுத்தான்…

       வினிதாவை நோக்கி சரி என்பதை போல் தலையசைத்து “வாங்க.”என்று கூறியவன் மனைவிக்கு வாட்சப்பில் மெசேஜ் தட்டிவிட்டான்.

 

  பத்து நிமிட இடைவேளையில் ஆட்டோ கிடைத்து விட ஜெயக்குமாரை போட்டு தாளித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தவள்.அவளது கொலைகார மாமியிடம் இருந்து சாவி வாங்கி வந்து வீட்டை திறந்து உள்ளே வந்தவள் கொலை காண்டில் இருந்தாள்…

        சுருதி வந்து பத்து நிமிட இடைவேளையில் குமாரும் வந்துவிட்டான்.அவள் டீ போட பாலை அடுப்பில் வைத்து நிமிர்ந்து பார்த்தால் குமார் நின்று கொண்டு இருந்தான்,.

          “சாரி டா.கொஞ்சம் வேலை.நீ போய் உட்காரு,.நான் டீ போட்டுட்டு வரேன்.”என்றவன் அவளை இழுத்துவந்து தொலைக்காட்சி முன்னாடி அமரவைத்தான்…

         சரி வந்தவுடனே சண்டை போட வேணாம்.டீ மிச்சர் எல்லாம் சாப்பிட்டுவிட்டு தெம்பாக சண்டைபோடலாம் என்று நினைத்தவள் தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்தாள்…

         ரிமோட்டை வைத்து மாத்திக்கொண்டே வந்தவள் லோக்கல் தொலைக்காட்சியில் வடிவேல் காமெடி போடவும் அந்த அலைவரிசையை வைத்து பார்த்தாள்…

     இடைவேளையில் வந்த விளம்பரத்தை பார்த்து அதிர்ந்தவள்.கைகள் நடுங்க வாய் குழற “கு கு கு கு மார்ர்ர்ர்….”என்று கத்தினாள்…

      அதில் பதறி அடித்து வந்தவன் அவள் பார்வை தொலைக்காட்சியை வெறிப்பதை பார்த்தவன்..தொலைக்காட்சியை அவனும் பார்த்தான்….

       இத்தனை வருடங்கள் எது சுருதிக்கு தெரியக்கூடாது என்று முத்துவேலும் ஜெய்குமாரும் நினைத்தாரோ அது நடந்துவிட்டது….

 

 

 

ஆதிக்கம் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!