அன்புடைய ஆதிக்கமே 4

அன்புடைய ஆதிக்கமே 4

அத்தியாயம் 4                

       இன்றைய பொழுதாவது சுகமான தூக்கத்தில் துயில்  இருப்பவளே தன் கரங்களால் அவளை அணைத்து, கொஞ்சி, எழுப்ப வேண்டும் என்று விரைந்து தன் கரங்களை அவளை நோக்கி அவன் நீட்டும் போதே…அறையின் கதவை யாரோ படபடவேணும் தட்டும் சத்தத்தில்  அவளின் தூக்கம் களைந்து எழுந்து அமர்ந்தாள் சுருதி.

        இன்றும் தன்னால் அவளை அணைத்து எழுப்பமுடியவில்லையே என்ற கோவத்தில் இன்னும் உக்கிரமாக தன் கரங்களை உலகம் முழுவதும் பாய்ச்சினான் சூரியன்.

              எழுந்து சுவரை பிடித்தவாறே மெதுவாக நடந்து வந்து கதவை திறந்த சுருதி, வெளியே நின்றிருந்த தன் தாயார் ஜோதியை ரசித்து  பார்த்தவாறு சோம்பல் முறித்தாள்.  ஜோதி தலைக்கு குளித்து ஈரம் சொட்டும் தன் நீண்ட கூந்தலை அடியில் முடிச்சிட்டு இருந்தார்.நெற்றில் நீண்ட கோபுர வடிவ  சிவப்புநிற பொட்டு வைத்திருந்தார். அவருக்கு வட்டவடிவ பொட்டு வைப்பதில் விருப்பம் இல்லை. அதைவிட தன் தந்தைக்கு இதுதான் பிடிக்கும் என்பதால்….இப்டி சின்னசின்ன விருப்பங்களை தன் துணைக்காக  மணவாழ்வில் தன்னால் செய்ய முடியுமா என்றால் முடியேவேமுடியாது.அந்த நொண்டிக்குமார்க்கு பிடிச்சது என்னைக்கு நமக்கு பிடிச்சுயிருக்கு… அவனுக்கு கேவலமான டேஸ்ட்.ச்சீ. என்று தன் மனதிற்குள்ளே நொடித்து கொண்டாள்.

           “அடியே எவ்ளோ நேரம் தான் என்னை குறுகுறுன்னு பார்ப்ப? நா நதியா மாதிரி அழகா இருக்கேன் தான் .அதுக்காக இவ்வளவு நேரமா பார்ப்ப?அம்மாக்கு கூச்சமா இருக்கு பாப்பா…”என்று கண்ணடித்து கூறினார் ஜோதி.

           “ம்மி.உனக்கு இருந்தாலும் இவ்வளவு குசும்பு இருக்க கூடாது.நீ நதியாவா மா? உனக்கே ஓவரா இல்லை…சரி விடு இது நதியாக்கு தெரியாம பார்த்துக்கோ. இல்லாட்டி செத்துருவா செத்து….நமக்கு அந்த பாவம் வேணாம்.”என்று தன் தாயின் தோள்மீது சாய்ந்து கொண்டே கூறினாள் சுருதி.

          “சரி அப்ப தீபிகானு வைச்சுக்குவமா?”என்று குறும்பாக கேட்டார்…

          “தெய்வமே இன்னைக்கு என்ன காலையிலே செம போர்ம்ல இருக்கீங்க போலயே.”

           “ஆமா டி ஆமா…வந்த விஷயத்தை மறந்துட்டேன் பாரு…குளிச்சுட்டு அப்பா ரூம்க்கு போவியாம்.உங்க சித்தப்பாக்களும் வந்துஇருக்காங்க…”என்று அவளை அறையினுள் அழைத்து சென்றவர் கூறினார்.

            “முக்கியமான விஷயத்தை இவ்வளவு லேட்டா சொல்றியே ம்மி.”என்று நொடித்துக்கொண்டே குளியலறைக்கு நொண்டி நொண்டி சென்றாள்.

         அதற்குள் அவளை கைத்தாங்கலாக பிடித்து குளியலறைக்குள் விட்டவர் “எங்கே டி என்னை சொல்லவிட்ட நீ? வேகமா குளிச்சுட்டு வாடி…மேலே போய் விடுறேன்…நீயா போறேன்னு திருப்பி கீழேவிழுந்து தொலைச்சுறதா…”என்று கூறியவாறே வெளியேறினார் .

             நம்ம கதாநாயகி நீராடி சீவி சிங்காரிச்சு வருவதற்குள் அவர்களுடைய பாண்டவர் பூமி குடும்பத்தை பார்த்து விடுவோமா…

        அய்யாவு-மாரியம்மாள் தம்பதிக்கு மூன்று ஆண்குழந்தைகள் இரண்டு பெண்குழந்தைகள் என்று முறையே ஐந்து குழந்தைகள் இருந்தனர். இவர்களின் வம்சத்தை தழைக்கவந்த முதல் முத்திற்கு முத்துவேல் என்றே பெயரிட்டு நன்றாக படிக்கவைத்து தமிழ் ஆசிரியராக உருவாக்கி ஜோதி என்ற பெண்ணை பார்த்து மனம் முடித்து வைத்தனர். இவர்கள் தான் சுருதியின் தாய் தந்தை.

          அடுத்ததாக தனக்கு அந்த லட்சுமியே மகளாக பிறந்ததாக நினைத்து  லட்சுமி என்று பெயரிட்டனர். இவரையும் நன்றாக படிக்கவைத்து அரசாங்கவேலையிலுள்ள நாகராஜன் என்பவருக்கு மணம்முடித்து வைத்தனர். இவர்களது தவப்புதல்வர்கள் தான் ஜெயக்குமார், செல்வகுமார்.

          அடுத்ததாக  ஆண்குழந்தை கணேசன். படிப்புக்கும் இவருக்கும் இடையில் உள்ள தொலைவில் ஒரு நீண்ட பாலமே கட்டலாம் என்பதால் இவரை பாதியிலேயே படிப்பை நிப்பாட்டிவிட்டு ஆட்டோ ஒன்றை வாங்கிக்குடுத்தனர். இவருக்கு அனுசியா என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தனர். தன் உழைப்பினால் ஒரு ஆட்டோவாக இருந்ததை இப்பொழுது மதுரையின் ஒரு அடையாளமாக பிரபலமாக இருக்கும் KA ட்ராவல்ஸ்க்கு உரிமையாளராக இருக்கிறார். இவரின் மகள் தான் அவந்திகா.ஒரு மகன் சிவா.12 ஆம் வகுப்பு படிக்கிறான்.

            அடுத்ததாக ஒரு ஆண்குழந்தை ஆறுமுகம். இவர் நன்றாக படித்த காரணத்தால் இவர் படித்தபோது அவர்களின் வாழ்கை தரமும் உயர்ந்திருந்ததால் பொறியியல் படிப்பு படிக்கவைத்திருந்தனர்…இவருக்கு புவனா என்ற பெண்ணை பார்த்து மனம் முடித்து வைத்தனர்.

இப்பொழுது உதவி பொறியாளராக அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறார். இவருக்கு ஹரிகிருஷ்னன்.ராமகிருஷ்ணன் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றன…இருவரும் 11 ஆம் வகுப்பு படிக்கின்றனர்…

அடுத்ததாக ஒரு பெண்.மீனாட்சி என்று பெயரிட்டனர்.அவரையும் நன்றாக படிக்கவைத்து பாண்டியன் என்பவருக்கு மணம்முடித்து வைத்தனர்.இவர்களுக்கு சுதாகர் மற்றும் சுவேதா என்ற இருக்குழந்தைகள் இருக்கின்றனர்.சுதாகர் எட்டாம் வகுப்பும் .சுவேதா ஏழாம் வகுப்பும் படிக்கிறனர்…(ஹப்பா மூச்சுவாங்குது.)

            தன் செல்வங்கள் அனைவர்க்கும் வாழ்க்கைப்பாதையை காட்டிவிட்டு அவர்கள் நல்லநிலைமையில் இருப்பதை கண்குளிர பார்த்துவிட்டு ஆறு வருடங்களுக்கு முன்பு மாரியம்மாள் இறந்தார்…

           தன் துணைஇல்லாத இந்த பரந்த உலகில் எப்டியோ மூன்று வருடங்களை நெட்டி தள்ளி வாழ்ந்துவந்த அய்யாவு மூன்று வருடங்களுக்கு முன் தன் இன்னுயிரை இழந்து  தன் மனைவியை நோக்கி சென்றிருந்தார்…

           குளித்து உடைமாற்றி, தலைசீவி அறையை விட்டு வெளிய வந்து தன் தாயை அழைப்பதற்காக சுருதி தன் வாயை திறப்பதற்கு முன் அங்கு பிரசனமானான் செல்வா…

           “என்ன வேணும்ங்க என் அருமை அண்ணி? “என்று இடைவரை குனிந்து போலியாக பணிவு காட்டிகேட்டான் செல்வா…

            “அண்ணி…பன்னினு கூப்பிட்ட அடிப்பிச்சுருவேன் டா கவாயா.”என்று உட்சபட்ச கோவத்தில் கூறினாள் சுருதி…

          “ஏய்! நான் எங்க பன்னினு கூப்பிட்டேன்.இனிமே உன்னே அண்ணின்னு கூப்பிடணுமாம்.இல்லாட்டி எனக்கு சொத்துலயும் சோத்துலயும் பங்கு தரமாட்டாங்களாம்.”என்று சோககீதம் வாசித்தான்…

           “யாரு டா …லேடி முசோலினி தானே.”என்று சிரிப்புடன் கேட்டாள்…

           ஆமாம் என்பது போல் தலையாட்டி விட்டு அவளை பொடிநடையாக நடத்தி கூட்டி கொண்டு  சுருதியின் அப்பாவின் அறைக்கு முன் விட்டான்…

         அங்கு அண்ணன் தம்பி மூவரும் பொதுப்படையாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்….இவள் வருவதை பார்த்துவிட்டு எழுந்திருந்து வந்த கணேசன் அவளை அழைத்து சென்று படுக்கையின் மேல் அமர வைத்தார்….

           “கால் நிட்டனும்னா நிட்டிக்கோ பாப்பா.” 

“இல்லை பா இருக்கட்டும்.எப்ப வந்திங்க ரெண்டு பேரும்.சித்திங்களா வரலையா பா.ஹரி ராம் சிவா எல்லாரும் எப்படி இருக்காங்க பா.”என்று மூச்சுவிட்டாமல் தனது இரண்டு சிறிய தந்தைகளிடமும் விசாரித்தாள்…

 ஆறுமுகம் சிரித்துகொண்டே”மூச்சு விட்டுட்டு பேசுடா.இப்பதான் வந்தோம்.சித்திங்க யாரும் வரலை.இன்னும் ரெண்டு நாள்ல நீ தான் அங்கே வரப்போறியே டா.”அவள் தலையை வருடியவாறு பதில் கூறினார்…

        இதை பார்த்தவாறு அமர்ந்திருந்த சுருதியின் தந்தை முத்து இவர்கள் தன் மகள் மீது வைத்திருக்கும் இந்த அன்பு என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்…

        சுருதி மதுரையில் இருந்து வந்ததிலிருந்து இந்த திருமணத்தை நிற்பாட்ட தன் தந்தையிடம் பேச முயற்சி பண்ணிக்கொண்டிருக்கிறாள் ஆனால் நேரம் தான் அமையவில்லை….நேரம் அமையவில்லை  என்பதை விட அவள் தந்தை அமைய விடவில்லை.

தன் மகளின் நினைப்பு அவர் அறியாததா…

       “என்னங்க அப்பா வரசொன்னிங்களாம்.அம்மா சொன்னாங்க .”என்று மெதுவாக தூண்டிலை போட்டு பார்த்தாள்.அவரின் ரத்தம் அல்லவா…

          “ஆமாம் டா.”என்று தன் மகளை பார்த்து கூறியவர் திரும்பி தன் தம்பி கணேசனை பார்த்து “கணேஷா உன்கிட்ட கொடுத்த பைலே சுருதிட்ட கொடு டா..”என்றார்.                   

மூவரின் சோகமான முகத்திலிருந்தே தெரிந்தது விஷயம் பெரியது என்று…

             ஒரு நொடியில் உலகத்தையே சுற்றிவரும் வல்லமை கொண்டது இந்த மனது.

            ஒருவேளை நா இவங்களுக்கு பிறந்த பொண்ணு கிடையாதோ.என்னை ஏதாவது  அனாதை ஆசிரமத்துல இருந்து தத்து எடுத்து இருப்பாங்களோ.குமாரை கல்யாணம் பண்ணாட்டி அவங்க பொண்ணு இல்லைனு சொல்லிருவாங்களோ….

 கட்…                                                           

         இல்லாட்டி நானும் குமாரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் எல்லாத்துக்கும் சொத்து.இல்லாட்டி ஏதாவது ஆசிரமத்துக்கு போயிரும்னு ஐயா அப்பத்தா உயில் எழுதிவைச்சுருப்பாங்களோ…

கட்…

         ஒருவேளை எனக்கு ஏதாவது வியாதியிருக்குமோ சீக்கிரமா செத்து போயிருவேனோ அதனால வாழுற கொஞ்சநாளாச்சும் மணவாழ்க்கை வாழட்டும்னு இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களோ.என்று இவை அனைத்தும் அவளது சித்தப்பா அந்த பைலை அவளிடம் கொடுக்க எடுத்துக்கொள்ளும் 10 வினாடிகளில் நினைத்திருந்தாள்…(சுருதி நிறைய தமிழ்ப்படம் பார்த்து கெட்டுப்போயிருக்க மா.)

         கணேசன் கையில் குடுத்தவுடனே வேகமாக வாங்கி பார்த்தவள் ஒரு கூடை நெருப்பை தன்மேல் வாரி இரைத்ததை போல் உணர்ந்தாள்…

           அவள் நினைத்ததை போல் அது ஒரு மெடிக்கல் செர்டிபிகேட் தான்.ஆனால் அவளுடையது இல்லை.அவளது தந்தையின் உடையது…

   அவரின் இதயம் பலகீனமாக இருப்பதாகவும் இதுவரை இரண்டு தடவை மாரடைப்பு வந்திருப்பதாகவும் அதில் இருந்தது.அதை பார்த்தவள் கண்ணில் தேங்கியிருந்த கண்ணீரை தொடைத்துவிட்டு தன் கண்கள் பார்த்து முளை சொன்ன செய்தி சரி தானா என்று மீண்டும் ஒருதடவை நன்றாக  பார்த்தாள்…

        தன் கண்களும் மூளையும் தனக்கு எந்த துரோகமும் செய்யவில்லை என்பதை உணர்ந்தாள்…

     உணர்ந்தநொடி அப்பா என்று தன் நடுங்கும் குரலால் கூறியவள் அடுத்து என்ன சொல்லவந்தாளோ அதற்குள் அழையா விருந்தாளியாக நேற்று சாப்பிட்டது.தற்போது குடித்த காபி வரை அனைத்தையும் வாந்தி எடுத்திருந்தாள்…

       வேகமாக அவளிடம் நெருங்கிய மூன்று தந்தைமார்களும் அவளை தாங்கி பிடித்தனர்.பக்கத்தில் ஜக்கில் இருந்த தண்ணிரை எடுத்து அவளின் வாயை தொடைத்துவிட்டு தன் தோளில் சாய்த்துக்கொண்டார் முத்துவேல்…

         அவர் தோளில் சாய்ந்து ஓவென்று அழுக ஆரம்பித்தாள் சுருதி.அதற்குள் குளியலறையில் இருந்து தண்ணி எடுத்துவந்த சகோதர்கள் தாங்கள் பெறாத  மகள் எடுத்த வாந்தியை எந்த முகசுளிப்பும் இல்லாமல் துடைத்தனர்.இருவரும் பேசிக்கொள்ளட்டும் என்று வெளியேற நினைத்த இருவரையும் வேண்டாம் என்று தலையசைப்பால் இருக்க சொன்னார் முத்துவேல்..

           இருவரும் அவர்கள் பக்கத்தில் போய் அமர்ந்தனர்…

            “அழாதே டா.அண்ணனுக்கு ஒன்னும் ஆகாது.உன் கணேசன் அப்பாவை பத்தி தான் உனக்கு தெரியும்ல.அப்பா அப்டிலாம் எங்க அண்ணனை ஈஸியா விட்ருவேனா பாப்பா.எல்லாம் சரி ஆயிரும் .”என்று அவள் கையை பிடித்தவாறு பேசினார் கணேசன்…

        “கரெக்டா மெடிசின் எடுத்துக்கிட்டா ஒன்னும் ஆகாது டா.நீ ஏன் அழுற இப்ப.அழுகாதே.இல்லாட்டி வீடியோ எடுத்து நாம வானத்தைப்போல பேமிலி குரூப்ல போட்ருவேன்.”அது வேலை செய்தது.அழுகையுடனே அவரை பார்த்து முறைத்தாள்.தன் தந்தையிடம் திரும்பி “ஏன் அப்பா என்கிட்டே சொல்லல.மெடிசின் போட்டுட்டீங்களா.அம்மாக்கு தெரியுமா.அம்மா எப்படி பா இதைலாம் தாங்குவாங்க.” என்று நிறுத்தாமல் கேள்விகளாக கேட்டாள்…

   “சாப்பிட்டேன் டா.அம்மாக்கு தெரியும்.அவளே தைரியமா தான் இருக்கா.நீ தான் இப்டி அழுமூச்சியா இருக்க.”சிரித்தவாறு கூறினார்..

      “ஏன் பா நீங்க என்கிட்டே சொல்லவே இல்லை.”என்று அடுத்த அழுகைக்கு அறிகுறியாக உதடு பிதுங்க தன் தந்தையை பார்த்தாள்…

       “இல்லை டா.நீ அப்ப மதுரைல இருந்த.முதல் அட்டாக் வந்தது எனக்கே தெரியாது டா.ரெண்டாவது தான் தெரியும்.நா நல்லா இருக்கப்பவே உன்னை நல்ல இடத்துல செட்டில் பண்ணிரனும்னு நினைக்குறேன் டா.அதான் இந்த கல்யாணம்.”சிறிதுநேர அமைதிக்கு பின் சுருதி ஏதோ கேட்க வாய் திறக்கும் போதே அதை புரிந்துகொண்ட முத்துவேல் பேச ஆரம்பித்தார்…

     “நீ என்ன கேக்கவரேனு புரியுது.வேற மாப்பிள்ளை பாத்திருக்கலாம்னு தானே.நா போனதுக்கு அப்புறம் உனக்கு யாரு டா இருக்கா. “அவர் கூறிமுடிப்பதற்குள் அண்ணா அப்பா என்ற ஆட்சேப குரல்களை ஒதுக்கி விட்டு

“be pratical .நான் எப்பயும் உன் கூடவே இருக்கமுடியாது.எல்லாருக்கும்  முடிவுன்னு ஒன்னு இருக்குல்ல.என் முடிவு வந்ததுக்கு அப்புறம் நீ என்ன ஆகுவ பாப்பா.உன் திருமண வாழ்க்கைல வர பிரச்சனையே யார்ட்ட சொல்லுவ.உனக்கு ஒண்ணுன்னா ஓடி வர அண்ணன் இருக்கானா.இல்லை தம்பி இருக்கானா.ஆம்பள துணை யாரும் இல்லை..பாப்பா.உங்க சித்தப்பாங்க கேக்கலாம்.ஆனால் அவன் பயப்படுவானா.நீங்க யாருடா என் குடும்ப பிரச்சனைல தலையிடனு கேட்டா இவங்க என்ன பண்ணுவாங்க.ஒன்னும் பண்ணமுடியாது. அதான் யோசிச்சேன் பாப்பா. ரொம்ப யோசிச்சேன். என் பொக்கிஷத்தை யாருகிட்ட கொடுத்தா நல்லா பார்த்துக்குவாங்கனு…இது இப்ப வந்த யோசனை இல்லை பாப்பா….உனக்கு அப்புறம் எந்த குழந்தையும் எங்களுக்கு இல்லனு தெரிஞ்சப்பவே வந்த யோசனை…என் எல்லாம் யோசனைக்கு பதிலா கிடைச்சவன் தான் குமார்.என் பொக்கிஷத்தை எந்த சேதாரமும் இல்லாம அவன் நல்லா பார்த்துக்குவான் பாப்பா.உனக்கும் அவனுக்கும் ஆகாதுன்னு எனக்கு தெரியும்.ஏன் நம்ம குடும்பத்துக்கே தெரியும்.ஆனால் உங்க ரெண்டுபேருக்கும் இடையில் ஏதோ இருக்கு பாப்பா.அது உங்களுக்கு தெரியாது.பாக்குற எங்களுக்கு தான் தெரியும்.ஒரு நாள் உங்களுக்கும் புரியும்.அப்பா உனக்கு நல்லது தான் செய்வேன்னு உனக்கு நம்பிக்கை இருக்குல்ல பாப்பா…”ஆமாம் என்று சொல்லிவிடேன் என்ற இறைஞ்சலோடு தன் மகளை பார்த்த விழிகளை பார்த்தவள் விழிகள் ஆமாம் என்றும் வாய் தானாக “உங்களை நம்புறேன் பா.இந்த கல்யாணத்தை மனப்பூர்வமா ஏத்துக்கிறேன் பா..இந்த கல்யாணம் உடைய எப்பயுமே நா காரணமா இருக்கமாட்டேன் பா.”என்று வாக்கு குடுத்தது…

     மகளை அணைத்துக்கொண்ட முத்துவேல் கண்களில் மன்னிப்போடு தன் உடன்பிறப்புகளை பார்த்தார்.அதில் உங்களை நம்பாமல் இல்லை.ஒரு தந்தையின் பயம் என்ற குறிப்பு இருந்தது.அதை புரிந்துகொண்ட சகோதரர்களும் ஒரு சோம்பல் புன்னைகையோடு தலையசைத்தனர்….

 

 புரிந்துகொள்ளும் உறவுகள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே.அந்த வரம் முத்துவேலுக்கும் அவரது மகளுக்கும் கொட்டிக்கிடக்கிறது….

 

ஆதிக்கம் தொடரும்..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!