அன்புடைய ஆதிக்கமே 6

       அத்தியாயம் 6 :

          ஞாயிற்று கிழமை  காலை பத்து மணியாகியும் வீடு நிசப்தமாக இருந்தது. தன் அறையில் இருந்து வெளியேவந்த அவந்திகா சமயலறையினுள் சென்று காபி போட்டுக்கொண்டு ஹாலில் இருந்த ஒற்றைசோபாவில் வந்து  அமர்ந்தாள்…

            அவந்திகாவின் தாய் ,தந்தை,தம்பி அனைவரும் சுருதி ஜெயக்குமார் நிச்சியத்திற்காக நேற்று இரவே சுருதியின் வீட்டிற்கு சென்றிருந்தனர். இவள் மட்டும் செல்லவில்லை…இரவு தான் அங்கிருந்து இங்கே வந்திருந்தாள்…அதனால் தான் யாரும் இவளை வற்புறுத்தாமல் அவர்கள் மட்டும் சென்றிருந்தனர்…

             காபியை குடித்துவிட்டு  அதை சமயலறையினுள் சென்று கழுவி வைத்துவிட்டு குளிக்கச்சென்றாள். சிறிது நேர இடைவேளைக்கு பிறகு குளித்துவெளிவந்தவள் அரக்கு நிற சுடிதார் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் அமர்ந்தாள்…

             கண்ணாடியில் தனக்கு முன் தெரிந்த தன் பிம்பத்தையே வெறித்து பார்த்தவாறு அளவிடமுடியா சோகமும் குழப்பமமும் குடிக்கொண்டிருந்த அழகு வதன முகத்தில் foundation போட்டாள்.. கண்ணீர் தேங்கி நின்றிருந்த  அந்த நீண்ட தாமரை இதழ் போன்ற கண்களில் eyeliner mascara போட்டு அழகுபடுத்தினாள்…அவள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே தேங்கி இருந்த இரண்டு சொட்டு கண்ணீர் அவள் முகத்தில் வழிந்தது…

        அதை துடைத்தவள் எப்பொழுதும்  தன் முகத்தில் இருக்கும் அமைதியை முயன்று தழுவவிட்டவள்; இரண்டு இன்ச் இன்ஸ்டன்ட் புன்னைகையை உதடுகளில் வலுக்கட்டாயமாக பொருத்தியவள் வீட்டை பூட்டிவிட்டு சுருதியின் வீடுநோக்கி சென்றாள்.

          

            ********************************************************

 

                  விசேஷ வீடென்றால் இது ஒரு எழுதப்படாத விதி…அங்குள்ள வீட்டு உறுப்பினர்கள் மட்டுமின்றி விழாவிற்கு வந்திருந்த சொந்தங்கள் அனைவரும் ஏதோ ஒரு வேலையாக குறுக்க மறுக்க நடந்துகொண்டிருப்பர்….அந்த விதிக்கு பங்கம் விளைவிக்காதவாறு மணமகன் வீடான ஜெயக்குமாரின் வீடும் பரபரப்பாக தான் இருந்தது.

    “டேய்.இன்னும் என்ன டா பண்றீங்க? ஆறுமணி ஆகப்போது வேகமா வாங்க டா.”என்று ஜெயக்குமாரின் அறையை நோக்கி அதட்டல் போட்டவாறு கையில் புடவை மற்றும் நகைகள் அடங்கியிருந்த சீர் தட்டை தூக்கிக்கொண்டு சென்றார் ஜெயக்குமாரின் தாய் லட்சுமி…

        “வந்துட்டோம் மா.”என்று உள்ளியிருந்து ஆறு ஆண் சிங்களின் குரல் கேட்டது.அந்த ஆறு ஆண்சிங்கங்கள் யாரென்றால் நம் கதாநாயகனின் ஆருயிர் நண்பர்கள் ஐவர் மற்றும் நம் கதாநாயகன்…(மூணாவது அத்தியாயத்துல பார்த்தோமே.அந்த poor  boys தான்.)

        “டேய் ரொம்ப ஓவரா பண்றீங்க டா. மாப்பிள்ளை நானே கிளம்பிட்டேன். நீங்க பண்ற அக்கப்போர் தான் டா தாங்கல.”

என்று தனக்கு முன்னால் தான் அணிந்திருக்கும் அதே போன்ற தூய வெண்மைநிற முழுக்கை சட்டையும் சாம்பல் நிற காற்சட்டையும் அணிந்திருந்த ஐவரையும் பார்த்து பாவமாக கூறினான் ஜெயக்குமார்.

        “நீங்க எனக்கு நிச்சயத்துக்கு புது டிரஸ் எடுத்து தரேன்னு சொன்னப்பவே நான் சுதாரிச்சுருக்கணும் டா. விட்டுட்டேன்” இவர்களை பற்றி தெரிந்தும் இப்படி வசமாக மாட்டிகொண்டோமே என்று புலம்பினான்…

        “அல்பமா ஒரு pantshirt க்கு ஆசைப்பட்டில மச்சி அதான். நம்ம நட்பை பார்த்து எல்லாரும் வியக்கனும் டா.இப்டி நிச்சயத்துக்கு கூட ஒரே டிரஸ் போட்ட்ருக்காங்களே.அப்டினு.”என்று சட்டையை டக் இன் பண்ணிக்கொண்டே கூறினான் பைபாஸ் @பாலா…

          மற்ற அனைவரும் அவன் சொல்வதை கேட்டு சிரித்தனர்.ஆனால் ஜெயகுமாரோ முறைத்துக்கொண்டிருந்தான்…

         “ச்சி.வந்து தொலைங்க.”என்று அவர்களை திட்டிக்கொண்டே கதவை திறந்து வெளியே சென்றான் ஜெயக்குமார்…

           ஜெயக்குமாரின் பின் ஒருவரின் பின் ஒருவராக வந்தவர்களை பார்த்து ஹாலில் அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்த ஜெயக்குமாரின் அப்பா நாகராஜன் சிரிக்க ஆரம்பித்தார்…

           “டேய்.என்னங்க டா இது? படையப்பா படத்துல வரமாதிரி மாப்பிள்ளை இவரு தான்.ஆனால் டிரஸ் மட்டும் எல்லாரும் ஒரே மாதிரி போட்ருக்கோம்ன்னு சொல்லுவீங்க போலயே டா….”என்று சிரித்தவாறே கேட்டார்…

           “அப்பா ப்ளீஸ் பா சிரிக்காதிங்க…ஜெய் செம கோவத்துல எங்களை பாக்குறான்.அடிப்பிச்சுருவான் பா.”என்று சிரித்துக்கொண்டிருந்த நாகராஜனின் அருகில் போய் கூறினான் தௌபீக்…

         பிழைச்சு போங்க என்ற பார்வையை நண்பர் குழாம் நோக்கி வீசி விட்டு வெளியே சென்றார் நாகராஜன். அவர் பின்னே ஐவரும் ஓடினர். ஜெய்குமார்க்கு இவ்வளவு நேரமாக இந்த விசித்திர விநோதங்கள் மூலம் தற்காலிகமாக மறக்கடிக்கப்பட்டிருந்த சுருதியின் ஞாபகங்கள் மேலும்பி அவனை வேர்க்கவைத்தது…

மூன்று வருடங்களுக்கு முன்பு சுருதியை தான் கடைசியாக சந்தித்த நாளை அவனின் மூளை நினைவு மீட்பு செய்ய ஆரம்பித்திருந்தது…

 

       ******************************************************************

ஜெயக்குமார் மூன்றுவருடங்களுக்கு முன்பு காலப்பயணம் மேற்கொண்ட அதே நேரத்தில்…

        சுருதியின் வீட்டில் மணமகன் வீட்டார் வருவதற்காக அனைவரும் வாசலில் காத்துக்கொண்டிருந்தனர். மணமகன் வீட்டார் வீட்டிலிருந்து கிளம்பி விட்டதாக தெரிந்தவுடன் வெளியே வந்திருந்தனர்…ஏனென்றால்  ஜெயக்குமாரின் வீட்டிலிருந்து சுருதியின் வீட்டை அடைய ஆகும் காலளவு ஐந்து நிமிடங்கள் தான்.

                தன்னை சுற்றியிருந்த உறவு பட்டாளங்கள் அனைத்தும் தன்னை மானாவாரியாக கலாயத்துக் கொண்டிருப்பதை  கிஞ்சித்தும் கவனத்தில்

எடுக்காமல்  சுருதியோ  தன் தலைவனை கடைசியாக சந்தித்த நாளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தாள்…

 

மூன்று வருடங்களுக்கு முன்…

      

                          “நான் முன்னே போறேன்.

           நீங்க பின்ன வாருங்கோ என.

           சொல்லிட்டு இடம்பிடிக்கப் போதிங்களோ…

 

           நான் காக்காவட்டம் கத்தரனே…

           உங்க காதுக்கு கேக்கலையோ.

           கொண்டு வந்த ராசாவே.

            உங்களுக்கு காதும் கேக்கலையோ…”

என்று வீட்டின் நடுக்கூடத்தில் அய்யாவுவின் பூத உடல்… தலையிலிருந்து நாடி வரை வெள்ளை துணியால் கட்டப்பட்டு, கால் பெருவிரல்கள் இரண்டையும் கட்டி, நெற்றியில் சந்தனத்தில் பொட்டு வைத்து அதில் ஒரு ரூபாய் நாணயம் வைக்கப்பட்டு நாற்காலியில்  சாத்திவைக்கப்பட்டிருந்தவர் முன்னால் அவர் வாழ்ந்த வாழ்வுக்கு எடுத்துக்காட்டாக அவரின் மக்கள் மருமகள்கள் பேரபிள்ளைகள் சொந்தம் பந்தம் அனைவரும் சுற்றி  உட்கார்ந்து ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர்…..

   வீட்டுக்கு வெளியே கரகாட்டகாரர்கள் நடனமாடிக்கொண்டும். அவர்களை பார்க்கவே ஒரு கூட்ட ஆண்கள் சுற்றிநின்று கொண்டும் இருந்தனர்.

           வீட்டின் வெளியே அடுத்த ஓரத்தில் குடும்ப ஆண்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தனர். தாயும் இல்லாது  இப்பொழுது தகப்பனையும் பறிகொடுத்த சோகத்தில் கணேசனும் ஆறுமுகமும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கதறி அழுதுகொண்டிருந்தனர்… தலைமகனான முத்துவேலும் அவரது குடும்பமும் இன்னும் உதகைலிருந்து வந்து சேரவில்லை.  வீட்டு மருமகன்கள் இருவரும் மச்சான்களை தாங்கி பிடித்து ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தனர். அதனால் வந்தவர்களை கவனிக்கும் பொறுப்பு; ஆட்டக்காரர்களுக்கு தேவையானதை செய்வது அப்டி இப்டி என்று அனைத்து வேலைகளையும் செல்வகுமாரும், ஜெயகுமாரும் மூத்த பேரன்களாக அனைத்தையும் பார்த்துக்கொண்டனர்….

              இப்படி நிலவரம் சென்றுகொண்டிருந்த வேலையில் திடிரென்று அந்த இடம் உச்சபட்ச பரபரப்பை தொற்றியது. முத்துவேல் குடும்பத்தினர் வந்திருந்தனர்…

            இரத்த நிறம் கொண்டு அழுகையை அடக்கி வைத்திருந்த முத்துவேலின் விழிகள் தன் உடன்பிறப்புகளை பார்த்ததும் அருவியாக கொட்ட ஆரம்பித்தது. அண்ணனை பார்த்த தம்பிகளும்

      “அண்ணே.”என்ற கூவலோடு கட்டி பிடித்துக்கொண்டு அழுதனர். என்ன தான் பொண்டாட்டி பிள்ளைகள் என்ற ஆயிரம் உறவுகள் இருந்தாலும் தாய் தந்தை இல்லாத உலகில் அனாதையாகவே தங்களை உணர்ந்தனர்…

         அண்ணனை அழைத்துக்கொண்டு கம்பிரமாக இருந்த தன் தந்தை ஒடுங்கி போய் இருப்பதை பார்க்கச்சென்றனர்….

            தும்பை பூ நிற வெட்டி சட்டை எப்பொழுதும் மடிப்பு கலையாமல் கட்டி இருக்கும் தங்களின் தந்தை அலங்கோலமாக கட்டி இருப்பதையும், நொடிநேரமும் விடாமல் அந்த முறுக்கு  மீசையை முறுக்கி கொண்டிருக்கும் அந்த கைகள் நிலம் நோக்கி கிடந்தது. எப்பொழுதுமே சிம்மமாக கால் மேல் கால் போட்டு உட்காரும் அந்த கால்கள் இரண்டும் இன்று கட்டிவைக்கப்பட்டு இருந்தது…

         அந்த நிலையில் அவரை காணசகிக்காத அவரது மக்கள் ஐவரும் தங்கள் எஜமான் இல்லாத உலகில் ஆதரவற்ற தொழிலாளிகளாக தங்களுக்கு இனிமே தங்கள் மட்டுமே துணை என்று நினைத்து கட்டி அழுதனர் …

   முத்துவேலிருக்கு பின்னையே வந்த ஜோதி தன்னை இந்த வீட்டுக்கு கொண்டுவந்த தனது மாமனாரை பார்த்து அழுதவாறே தனது ஓரகத்திகளுடன் இணைந்து கொண்டார்…

       தன் பெற்றோர்க்கு பின் வந்த சுருதி தன் ஐயாவை பார்த்து அழ ஆரம்பிதற்குள் அழையா விருந்தாளியாக எப்போதும் போல் வாந்தி வந்து தொலைத்தது… வீட்டின் பின் சென்றவள் கொடகொடவென்று வாந்தி எடுக்க ஆரம்பித்திருந்தாள்.

எப்பொழுதுமே அவளுக்கு அவளால் தாங்க முடியா துயரசம்பவங்கள் நடக்கும் போது  வாந்தி வந்துவிடும் …. இதில்  இங்கு வருவதற்கு முன்னிருந்தே ரெண்டு நாட்களாக காய்ச்சல் வேறு .

                  சுருதி அங்கு வந்ததிலிருந்தே ஜெயக்குமார் அவளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கு இந்த மாதிரி ஆகும் என்று அவனுக்கு நன்கு தெரியும். அவனுக்கு மட்டுமில்லை அவர்கள் குடும்பத்திற்கே தெரியும். ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இவளை கவனிக்கும் நிலையில் யாரும் இல்லை …

         அப்பொழுதே இந்த முட்டாள்ற்கு தெரிந்து இருக்க வேண்டாம்…பிடிக்காத ஒருத்தியின் உடல் நலனை யாரவது ஞாபகத்தில் வைத்திருப்பறார்களா என்று விதி வலியது.

       அவள் வாந்தி எடுக்க ஆரம்பித்தவுடனே அனிச்சை செயலாக ஜெயக்குமார் அவளை நோக்கி போகத்தான் இருந்தான்.ஆனால் உடனே அவன் இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவளை கண்ட நிலை ஞாபகம் வந்து தொலைத்து விட்டது…

            அவளை நோக்கி போகத்துடித்த கால்களையும் கைகளையும் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி நின்றுகொண்டிருந்தான்.

         சுருதிக்கு தன் உடலை தாங்குவதே மிகுந்த பாரமாக இருந்தது.எப்டியோ சமாளித்து தண்ணீர் எடுத்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டாள்.அதுவரை மட்டுமே அவளுக்கு ஞாபகம் இருந்தது.கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி 1670 கி மீ வேகத்தில் சுற்றும் பூமி திடிரென்று தனது சுழற்சியை  மட்டும் நிறுத்தி… இவள் மட்டும் கிழக்கு நோக்கி வீசப்படுவது போல் உணர்ந்தாள்…

         ஜெயக்குமார் சுருதியை பார்த்துக்கொண்டிருக்கும் போதே காய்ச்சல் பயணஅலைச்சல் துயரச்செய்தி என்று அனைத்தும் சேர்ந்து அவளை மயக்கத்திற்கு தள்ளியது…

  விழப்போனவளை வேகமாக வந்து தாங்கிய ஜெயக்குமார் ஓரமாக படுக்கவைத்தான்.வீட்டின் பின்பகுதி என்பதால் யாரும் வர வாய்ப்பில்லை.இவ்வீடு மதுரையில் உள்ள அக்ரஹாரா பகுதியில் கட்டப்பட்ட வீடு.வடிவேல் காமெடியில் வருவது போல் முதல் சந்திலிருந்து அடுத்த சந்து வரை வீடு இருக்கும்.அந்தத்தெருவில் இருந்த அனைத்து வீடுகளும் புதுமைக்கேற்றவாறு மாறியிருந்தன.ஆனால் இந்த வீட்டில் மேல் வழக்கு நடப்பதால் இது இன்னும் அப்டியே இருந்தது.அய்யாவு குடும்பம் மதுரைக்கு வந்த புதிதில் மிகுந்த கடன் தொல்லையில் இருந்த ஒரு பிராமண குடும்பம் இவரிடம் விற்று விட்டுச்சென்றது…

         சுருதியை அங்கு கிடத்தியவன் தண்ணிரை தெளித்து அவளை எழுப்ப முயற்சித்தான்.முடியவில்லை….உடல் அனலாக கொதித்தது.அவளை தொட்டு பார்க்காமலே அவனால் உணர முடிந்தது….

   இதற்கு மேல் தான் செய்யவதற்கு ஒன்றுமில்லை என்று உணர்ந்தவன் வேகமாக  ஓடி சென்று சுருதியின் அம்மா ஜோதியை அழைத்து வந்திருந்தான்.இருவரும் சேர்ந்து அவளை தூக்கி கொண்டு யாரிடம் சொல்லாமல் பின்வாசல் வழியாக மருத்துவமனை சென்றனர்…

     உடலில் நீர் சத்து கம்மியாக இருப்பதால் ட்ரிப்ஸ் போடவேண்டுமென்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.அதுவரை அவள் முழிக்கவும் இல்லை.ட்ரிப்ஸ் எற ஆரம்பித்த சிறிது நேரத்தில் கண் திறந்தாள்.அதன்பிறகு தான் ஜோதிக்கு உயிரே வந்தது.அவளிடம் விசாரித்து விட்டு ஜெயக்குமாரை ட்ரிப்ஸ் ஏறி முடித்தவுடன் அவளை அழைத்துவருமாறு கூறிவிட்டு கிளம்பினார்.அவரை காணாததால் தேவையில்லாத பேச்சுக்கள் வரும் என்பதால் தன் மகளை அவனிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.

  அந்த மருத்துவ அறையில் இருவர் மட்டுமே இருந்தனர்.இருவரும் மற்றவர் முகத்தை தவிர அங்கு இருக்கும் மருந்து.தண்ணீர் டாங்.பெட்.கட்டில்.மேசை.என்று அனைத்தையும் பார்வையிட்டனர்…

      ஜெயக்குமார்க்கு அவள் முகத்தை பார்க்கவே விருப்பம் இல்லை.அந்த முகத்தை பார்த்தாலே இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு திரையரங்கில் ஒருவனுக்கு மிக அருகில் அமர்ந்து இருவரின் முகத்திற்கும் ஒரு இன்ச் இடைவெளியில்.அதுவும் இருவர் உதடுகளும் ஒரு நூலிழை இடைவெளியே.கண்களை முடி எதிரில் இருந்த அந்த பொறுக்கியை நோக்கி திரும்பியவாறு அவன் முத்தத்திற்காக யாசித்த சுருதியின் முகபாவனையும் அந்த பொறுக்கியின் கோணல் சிரிப்பும் தான் ஞாபகம் வந்து தொலைத்தது.

ஜெயக்குமார் பார்த்ததை இவள் அறியாள்.அதற்கடுத்து நடந்த பிரச்சனைகள் எல்லாம் இவனுக்கு தெரியும் என்பதால் அவன் முகம் பார்த்து பேச தயங்கினாள்.இல்லை பயந்தாள் என்று கூட சொல்லலாம்.

  அவனை பார்த்து ஒரு இரண்டு வருடங்கள் இருக்கும்.மதுரையை விட்டு போகும் போது அவனை கடைசியாக பார்த்தது .அதற்கு பிறகு பார்க்க முடியவில்லை.அவன் தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள ஐஐடியில் தொடர்ந்ததால் அவனை பார்க்க கூடிய எந்த சந்தர்ப்பமும் அமையவில்லை…

          இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் பயந்து இருப்பது என்று ஒட்டு மொத்த தைரியத்தையும் திரட்டி”எப்படி இருக்க குமார்.”என்று கேட்டுவிட்டாள்…

         பதிலுக்கு அவன் பார்த்த பார்வையும் அவன் வீசிய கொடும் சொற்களும் அவளை கொன்று போட்டது…

         “நான் எப்படி இருந்தா உனக்கு என்ன டி.இனிமே என் பேரு உன் வாயிலிருந்து வந்துச்சு தொலைச்சு கட்டிருவேன் ராஸ்கல்.ச்சி உன்னை மாறி கீழ்தரமானவ கிட்டலாம் பேசினாலே பாவம் டி.அப்டியே ஒண்ணுமே தெரியாதவ மாதிரி இருந்துட்டு என்ன வேலைலாம் பார்த்துஇருக்க.ப்ளடி bi ….”தகாத  வார்த்தையால் திட்ட வந்தவன் தன்னை அடக்கி கொண்டு பக்கத்தில் இருந்த மேசையின் மேல் ஓங்கி குத்திவிட்டு வெளியே சென்றிருந்தான்.

        சுருதி வடிந்த கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள்…

        அவள் அறிந்த குமார் இப்படியெல்லாம் பேசுபவன் அல்ல….எப்பொழுதுமே அவனை வம்பிழுத்து சிரிப்பது இவளின் பொழுதுபோக்கு.எப்பொழுது திட்டினாலும் அதில் ஒரு அக்கறை பாசம் இருக்கும்….ஆனால் இப்பொழுது…

     வெளியே வந்த ஜெயக்குமார் செல்வாவிற்கு செல்பேசியில் அழைத்து அவளை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறினான்…

      அங்கிருந்தே தனது தாய் தந்தைக்கு அழைத்து ஒரு முக்கியமான assignment  செய்ய வேண்டும் அதனால் உடனே Chennai செல்லவேண்டும் என்றும்.இல்லாவிடில் மதிப்பெண் குறையும் என்று பலபொய்களை கூறி அவர்களை சம்மதம் சொல்ல வைத்து அப்டியே சென்னைக்கு சென்றிருந்தான்…

       அதற்கு பின்பு இருவருமே சந்தித்து கொள்ளவே இல்லை…திட்டி வந்த பின்னாடி அவனை நினைத்தே அவனுக்கு அசிங்கமாக இருந்தது…மிகவும் குற்றஉணர்வில் இருந்தான்.தன்னுடனே வளர்ந்தவளை  என்ன வார்த்தை சொல்லி திட்ட தெரிந்தோம் என்று மிகுந்த குற்றஉணர்ச்சியில் இருந்தான்….

                                                                    

           “என்ன அத்தான் முழிச்சுகிட்டே கனவா.ஆர்த்தி எடுத்துட்டேன்.காசு போடுங்க….”என்ற அவந்திகாவின் பேச்சுக்குரலில் நினைவுகளில் இருந்து மீண்டு நிஜஉலகத்திற்கு வந்தான்…

        தன் பையில் இருந்து 2000  நோட்டை எடுத்து தட்டில் போட்டான் …பின்பு அவனது நண்பர்களையும் காசுபோடச்சொல்லி ஒருவழி படுத்தி விட்டாள்….ஆளுக்கு 500  விதம் போட்டவுடனே தான்”மாப்பிளைக்கு ஈகுவல டிரஸ் போட்டா மட்டும் பத்தாதது. “என்று குறியபின்பே அவர்கள் உள்ளே செல்வதற்கான வழியை விட்டாள்…

           அனைவரும் சிரித்துகொண்டே உள்ளே சென்றனர்….

            “ஏன் டா மச்சி இது ஒரு புள்ளை பூச்சியாச்சே டா.இப்ப என்ன இந்த போடு போடுது….”என்று தௌபீக் ஜெயகுமாரிடம் கேட்டான்…

          ஆனால் அவனோ ஒருஇடத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்….என்னவென்று நிமிர்ந்து பார்த்தபொழுது ஜெயக்குமார்க்கு நேர் எதிராக சுருதி ஜெயக்குமாரை வெறித்து பார்த்தவாறு நின்றிருந்தாள்…

 

 

காதலும் வெறுப்பும்

இரட்டை குழந்தைகளாமே…

அதனால் தானோ என்னவோ .

உன்னை நேசித்துக்கொண்டே

வெறுக்கிறேன்..

வெறுத்துக்கொண்டே நேசிக்கிறேன் போலடி.

 

 

ஆதிக்கம் தொடரும்…