அலை ஓசை – 11

sea2-817ff6bc

அலை ஓசை – 11

பள்ளியில் இருந்து வெளியே வந்த நிழல் உருவம் தொடரும் தாய், தன் குழந்தையை காரில் தன் வீட்டுக்கு அனுப்பி விட்டு , தன் நீண்ட நாள் தோழியின் கல்யாண சன்கீத்துக்கு சென்றாள். அங்கு கல்யாணத்திற்கே உரிய கேளிக்கைகளில் சிறிது நேரம் தன் சொந்த வாழ்க்கையை மறந்தாள். நண்பர்கள் கூடினாலே அங்கு சந்தோஷத்திற்கு குறை ஏது?

பிறகு, ஆடல் பாடல் தொடங்க, தாய் அதில் கலந்து கொள்ளாமல், ஆடுபவர்களை உற்சாக படித்து கொண்டு இருந்தாள்.அவளை தொடரும் நிழல் உருவமும் அந்த இடத்திற்குவந்தது. என்ன நினைத்ததோ, அவள் கை பற்றி மேடையில் ஆட ஆரம்பித்தது.

முதலில் அந்த நிழல் உருவத்திடம் இருந்து தன்னை விடுபட முயற்சி செய்தாள். பின், அந்த நிழல் உருவத்தின் ஸ்பரிசமும் அதன் பார்வையும் அவளை அவள் கட்டு பாட்டில் இருந்து இழக்க செய்தது.

தன் ஆண் நண்பர்களிடம் இருந்து விலகும் அந்த தாய், நிழல் உருவத்தின் கண்களில் காந்த சக்தியால் அதனுடன் ஆடினாள். மிகவும் நெருக்கமாக, அதில் காமம் இல்லை. காதலும் அன்பும் அக்கறையும் பாசமும் மட்டுமே இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு கண்ட காதலர்களின் சந்தோஷம் மட்டுமே இருந்தது. நேரம் தெரியாமல் ஆடி கொண்டே இருந்தனர்.

அன்று நடந்த அளவுக்கு அதிகமாக மன அழுத்தாலும், நெடுநாள் கழித்து நிறைய நேரம் ஆடியதாலும், அந்த தாயிற்கு உடலும் மனமும் சோர்ந்து மயக்கமானாள்.

அவளை கையில் ஏந்தி அவள் வீட்டிற்கு நிழல் உருவம் அழைத்து சென்றது.அவள் அறையில் அவள் படுக்கையில் படுக்க வைத்து நிழல் உருவம் வெளியே வர, அவள் குழந்தை இருளின் காரணத்தால் நெடியவன் என்று நினைத்து ” டாடி” என்று அழைத்து நிழல் உருவத்தை கட்டி அணைத்தது.

“அம்மா மட்டுமே தூங்க வைப்பீங்களா, என்ன யாரு தூங்க வைப்பாங்க?நீங்கள் தான! அப்போது வாங்க. தாலாட்டு எல்லாம் பாடி என்னை தூங்க வைங்க. வாங்க வாங்க” என்று குழந்தை அந்த நிழல் உருவத்தை கட்டி அணைத்து கொண்டு பேசி கொண்டு இருந்தது.

மயக்கத்தில் இருந்து வெளியே வந்த தாய், அவள் இருக்கும் இடத்தை உணர முடியாமல் சிரமப்பட்டாள். பிறகு, ஒரு போட்டோவை கையில் எடுத்து நினைவுகளை தன் மனதில் ஓட்ட ஆரம்பித்தாள்.

குழந்தையையும் தாயையும் தேடி வந்த நெடியவன், அந்த தாய் தன் கையில் ஒரு போட்டோவை அழுதுகொண்டு இருப்பதை பார்த்து அவளிடம் சென்றான்.ஆனால், அந்த தாயோ அவன் வருவதை கூட அறியாமல் தன் கையில் இருந்த போட்டோவையே பார்த்து கொண்டு இருந்தாள். அவள் கண்களில் மட்டும் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.

அந்த போட்டோவை கையில் எடுத்த அந்த நெடியவன் அதில் எழுதிய வரிகளை படிக்க துவங்கினான்,

கண்ணே உன்னை
கருவுற்றிருக்கும்
வேளையிலே,
அந்த கடற்கரையில்
அழகிய முழு
நிலவொளியில்
கை கோர்த்து
சென்றோம் நானும்
என்னவனும்…
கரையில் அமர்ந்து
காதலுடன் என்
கணவரை பார்க்கையில்
அவனது பார்வையோ
படகில் இருந்தது…
அப்போது தான் புரிந்தது..
நடு இரவில் நிலவு
ஒளியில் படகில்
பயணம் செய்ய
வேண்டும் என்ற ,
என் நீண்ட நாள்
கனவை நினைவாக்கவே
அழைத்து வந்து
இருக்கிறான் என்
காதலை திருடிய கள்வன்…
படகில் பயணிக்கும்
வேளையிலே என்
கண்ணானவரை கட்டி
அணைத்து காதல்
மொழி பேசியதும்…
அந்நேரத்தில் என்
கருவிலிருந்த உன்னிடம்
உன் தந்தை எனக்கு
அளித்த இந்த
அழகிய பரிசுகளை
பற்றி பகிர்ந்து
கொண்டதும் உனக்கு
நினைவு இருக்கிறதா
என் கண்மணி?
இப்படி என் காதலில்
அவனும் அவன்
காதலில் நானும்
திளைத்து இருந்த
ஏகாந்த நிலையில்…
நாங்கள் ரசிக்க
வேண்டிய நிலவு
ஒளியும் கடலையும்…
எங்கள் காதலை
ரசித்து கொண்டு
இருந்தது…
அன்று அளவில்லா
ஆனந்ததில் திளைத்து
இருந்த எனக்கு
தெரியவில்லை…
அது தான், அவன்
என்னுடன் இருக்கும்
கடைசி நேரம் என்று!
இன்றும் முழு
நிலவொளியில்
அதே படகில் எங்கள்
காதல் பரிசாக
அந்த கடவுள்
தந்த உன்னுடன்
பயணிக்கிறேன்…
என் மனம் கவர்ந்த
மன்னவனின்
நினைவுகளாவது
என்னுடன் இருக்க
வேண்டும் என்பதற்காக!

அந்த கவிதையை படித்த நெடியவன் அந்த ஒரு நாளில் பலர் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை நினைக்க ஆரம்பித்தான். அப்போது அவன் காதுகளில் தாலாட்டு பாடல் ஒலித்தது. அந்த நிழல் உருவம் குழந்தை கேட்டதற்காக,

ஸ்ரீ இளஞ்சேயே ஆராரோ
சேமித்த சிரிப்பே ஆராரோ
படிக விழியில் நீ பார்த்தால்
முடியும் துயரம் ஆராரோ
உன் சிறு கையின் அசைவினிலே
என் பூமி சுழன்றிடும் ஆராரோ
உன் ஓர் இதயத் துடிப்பினிலே
என் காலம் அடங்கிடும் ஆராரோ
ம்…ம்…ம்…ம்.. ஆராரோ
ம்…ம்…ம்…ம்.. ஆராரோ
ம்…ம்…ம்…ம்… கண்ணே நீ
ஆளப் பிறந்தவள் ஆராரோ

என்று பாட,

குரலின் இனிமையாலோ அல்லது நிழல் உருவத்தின் அருகாமை தந்த சுகத்தாலோ குழந்தை நிழல் உருவத்தை கட்டி கொண்டு உறங்கியது.கிட்ட தட்ட இரண்டு வருட கனவு நிகழ்ந்த சந்தோஷத்தில், கண்ணில் கண்ணீரும் உதட்டில் சிரிப்பும் நிழல் உருவம் மகிழ்ச்சியில் திளைத்தது.

தன்னை சுற்றி நடக்கும் எதையும் அறியாமல் தன் சிந்தனையில் மட்டுமே இருக்கும் அந்த தாயிற்கு நிழல் உருவத்தின் தாலாட்டு பாட்டு கேட்கவில்லை. ஆனால், அதை கேட்ட நெடியவன் பாட்டு வந்த அறைக்கு செல்ல, அங்கு அந்த நிழல் உருவத்தை கண்டு, ஒரு பக்கம் மகிழ்ச்சியாக, இன்னொரு பக்கம் ஆச்சரியமாக உணர்ந்தான்.

நெடுநாள் கழித்து அந்த நிழல் உருவத்தை கண்ட அந்த நெடியவன் கலவையான உணர்வுகளால் இருந்ததால், அவன் தாலாட்டு பாட்டை நிறுத்த வில்லை. அந்த அழகான மாளிகையில் நிழல் உருவத்தின் தாலாட்டு பாட்டு மட்டுமே எதிர் ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த அழகான மாளிகையில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உணர்வுகளில் இருந்தனர்.

கடந்த காலத்தை நினைத்து ஒருவர். நிகழ்கால நிகழ்வை நம்ப முடியாமல் ஒருவர். நிகழ்கால நினைவை சந்தோஷமாக அனுபவிக்கும் ஒருவர். புயலுக்கு பின் அமைதி என்று கூறுவது போல, புயலாக இருந்த நிழல் உருவத்தின் மனம் இப்போது அமைதியான தென்றலாக மாறியது.

# #  # # #

அந்த குழந்தையின் சீரான மூச்சுயில் இருந்து,  அவள் உறங்கி விட்டதை அறிந்த நிழல் உருவம்,  பாடுவதை விடுத்து,  குழந்தையை ரசிக்க ஆரம்பித்து விட்டது.

தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே… 

மனதில் தோன்றிய பாடல் வரிகளை ரசித்து, பால் மனம் மாறாத அந்த குழந்தையின் நெற்றியில் முத்தம் பதித்து எழ நினைக்கையில்,  பிஞ்சு விரல் தன் விரலை பிடித்து இருப்பதை பார்த்து,  அந்த நிழல் உருவம் கண்ணீர் விட்டது. தான் தொலைத்த அழகான சுகமான தருணங்களை நினைத்து.

தன்னை நிதானித்து அறையின் வாசலை நோக்க,  அங்கே அந்த நெடியவன் அதிர்ந்த நிலையை கண்டு தனக்குள்ளேயே சிரித்து கொண்டு,  “குழந்தை பக்கத்தில படு்த்துக்கோடா, நீன்னு தான் நினைச்சு என் தோலில் படுத்து இருந்தா” 

சொல்லும் போது நிழல் உருவத்தின் மனதில் தோன்றிய  வலியை நெடியவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

“வலியிலும் உதட்டில் சிரிப்பு அப்படியே இருக்கே மச்சான். எப்படி டா,  உன்னால மட்டும் முடிது? ” என்று கேட்ட அந்த நெடியவனுக்கும் பதிலாக அதே சிரிப்பை பதிலாக கொடுத்து சென்றது.

குழந்தையின் அருகே சென்ற நெடியவன்,  நிழல் உருவத்தை கண்ட நிம்மதியிலும் குழந்தையின் ஸ்பரிசம் கொடுத்த நிம்மதியிலும்,  நீண்ட நாள் கழித்து நித்திரா தேவி அவனை விரைவாகவே தழுவி கொண்டாள்.

# # # # #

இல்லை என்று 
நம்பிய ஒரு 
பொருளோ நபரோ 
இருக்கு என்று யாரேனும்
கூறினால் அவர்களை
தான் முட்டாள் 
என்று கூறும் 
உலகம்! 
இல்லாததை இருக்கு 
என்று உணரும்
போதோ நம்மையே 
முட்டாளாக்கி சிரிக்கும் 
விதி!
விதியை  வெல்ல
பலபேர் முனைந்து 
போதும் இறுதியில் 
வென்றது என்னவோ 
விதி தான்! 

# # # # #

அங்கே கமிஷனர் அலுவலகத்தில் ஆதியை பலவிதமாக கமிஷனர் சமாதானம் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் கூறிய எந்த சமாதானத்திற்கும் உட்படாத ஆதியை அலுவகத்தில் இருந்து வெளிக்கொணர பெரும்பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டுவிட்டார். 

பிறகு அந்த நிழல் உருவத்திற்கு ஒரு அவசர மெசேஜையும் தட்டிவிட்டார் , ‘வெரி அர்ஜென்ட் கம் டு தி சீக்ரட் லோகேஷன் இமிடியட்லி! ‘ என்று. ‘யாருக்காக கமிஷனர் சார் இவ்வளவு ஹெப் பண்ணனும். அந்த நிழல் உருவத்திற்கும் இவருக்கும் என்ன சம்பந்தமா இருக்கும்?  ஏதாவது இரத்த சம்பந்தமா இருக்குமா? இல்லை,  ஏதாவது சீக்ரட் மிஷனா இருக்கமா? நம்மனால கமிஷனர தப்பாவே நினைக்க முடியலையே? ‘ என்று மனதில் ஆதி புலம்ப ஆரம்பித்து விட்டான்.

அவனையே பார்த்து கொண்டு, இல்லை இல்லை, கணித்து கொண்டு இருந்த கமிஷனர், ஆதியின் முகத்தை வைத்தே அவன் மனதில் ஓடுவதை அறிந்து.

“நீ நினைக்கிறது சரி தான் ஆதி. இவ்வளவு நாளாக நம்ம எல்லாருக்கும்,  இல்லை இல்லை,  உங்க எல்லாருக்கும் போக்கு காட்டி கொண்டு இருப்பது. என்னோட இரத்த சம்பந்தம் தான் ” என்று அவர் நிறுத்த.

“என்னது, இரத்த சம்பந்தமா? சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லையா.  இவ்வளவு நாளா போலீஸ் கண்ணுல விரலை விட்டு ஆட்டுறான்.  எதுக்கு என்றே தெரியாம ஆளுங்கள கடத்துறான். அதுக்கு நீங்களும் சப்போர்ட். நல்லா வருவீங்க. ச, இந்த பொழப்புக்கு நாண்டு கிட்டு சாகலாம். கொடுத்த பதவிய தவறாக பயன்படுத்துற நீங்களாம்.  உங்களை யா நான் அத்தனை உயர்வா  நினைச்சேன்”  என்று ஆதி கூறி கொண்டு இருக்கும் போதே,  அவன் சட்டை காலரை கொத்தாக பிடித்து, 

“யார் கிட்ட வந்து யாரை பத்திடா தப்பா பேசுற. என்னோட பையன் டா அவன்.  எவ்வளவு பேர் வந்தாலும் ஒரே ஆளா இருந்து சமாளிக்கும் என்னோட பையன் டா அவன்.  எல்லோருக்கும் நல்லது மட்டுமே நினைக்கிற ஆம்பள சிங்கம் டா அவன்.  அன்பால எல்லாத்தையுமே சாதிக்க முடியும் என்று நம்புற நல்லவன் டா அவன்.  

உலகத்தில ஒரு உசுர காப்பாத்தினாலே சாமி ன்னு கும்பிடுவாங்க,  இரண்டு உசுர காப்பாத்துற என்னோட குல சாமிடா என் புள்ள. அ வெரி எலிஜிபில் கைனகாலஜிட் அண்ட் அ  சைல்ட் ஸ்பெஷலிஸ்ட். தப்ப தட்டி கேட்கிற என்னோட வாரிசு டா அவன்.

என்னோட பையன்.  தர்ம சேனா. என்னோட பல சீக்ரெட் மிஷின்களுக்கு எனக்கு  உதவி செஞ்சி இருக்கான். ஒரு நல்ல மருத்துவரா மட்டும் இல்லை. ஹி இஸ் அ ”  கர்வம் கூத்தாடியபடி, என் பையனை எப்படி தப்பா சொல்லுவ என்ற கோபமும் அவர் முகத்தில் நன்றாகவே தெரிய, ஆதியின் சட்டையே கிழித்து விடும் அளவிற்கு இறுக பிடித்து, உணர்ச்சி வெள்ளத்தில் சிக்கி இருந்தவர், என்ன சொல்லவந்தரோ? 

“அம்மாமாமாமாமாமா” என்று ஆதி கத்தியவுடன் தான் தன் சுய நினைவிற்கு வந்தார். அதன் பின்னே,  நிழல் உருவத்தை, அதான் பெயரு தெரிஞ்சுடுச்சே.  தர்மா அங்கு வந்தததையே மனிதர் கவனித்தார். 

“எதுக்கு டா அவனை அடிச்ச? பாவம் டா அவன்.  உண்மையா வேலை செய்ற ஒரு சின்சியரான போலிஸ் டா அவன்!” யாரிடம் தன் மகனை பற்றி ஆக்ரோஷமாக கூறி கொண்டு இருந்தாரோ,  அவனை அடித்ததற்காக தன் மகனையே கண்டித்து கொண்டு இருந்தார்.

“நீங்க விட்டா எல்லாத்தையும் ஒளறி இருப்பீங்க.  இந்த சின்சியர் சிகாமணி நம்ம பிளான் எல்லாத்தையும் ஃபிலாப் ஆக்கி விட்டுறுக்கும். நம்ம பிளான் நல்லபடியாக முடியிற வரை நீங்க என்னோட அப்பாவும் இல்லை.  நான் உங்க பையனும் இல்லை. இப்படி தான பேசிக்கிட்டோம். என்ன பா இப்போ இப்படி பண்ணிடீங்க ” என்று தர்மா கவலையாக கேட்க, 

“முடியல டா.  என் பையனை எப்படி தப்பா சொல்லுவான் என்கிற கோபத்தில. இனி பாத்துகிறேன் டா” அவரும் தந்தை தானே,  “இரண்டு வருட தவம் பா.  சொதப்ப வேண்டாம் என்று நினைக்கிறேன்.  நான் இழந்தது ரொம்ப ஜாஸ்தி “

ஏதோ கூற வாய் எடுத்தவன்,  தந்தையின் முக கவலையை கண்டு பேசாமல் விட்டான். “நான் இவனை பார்த்துகிறேன்.  நீங்க போங்க. அம்மாவ பார்த்து கோங்க பா”என்று தர்மா அவர் தோல்களில் ஆதரவாக அழுத்தம் கொடுக்க,  அதில் அவரும் தன்னை நிலைபடுத்திக் கொண்டார்.

” தர்மா,  ஆதி  நாம எடுத்த மாதிரியே லிஸ்ட் ரெடி பண்ணி இருக்கான்.  என்ன பண்ணட்டும் டா. ” என்று கேட்க, 

கீழே விழுந்த ஆதியை மெச்சுதலாக பார்த்த தர்மா,  “தீயா வேலை செஞ்சி இருக்கான் போல? இத சந்திரா கிட்டயோ இல்லை  ருத்ரா கிட்டயோ கொடுத்துடுங்க பா. நாம எதுவும் பண்ண வேண்டாம். அவங்களே பாத்துபாங்க ” என்று கூறிய அடுத்த நொடி,  தர்மா ஆதியுடன் காணாமல் போய் இருந்தான்.

“இந்த வேகத்தை நான் இரண்டு வருசமா மிஸ் பண்ணுறேன் டா தர்மா. ரொம்ப சோதிக்காத.  சீக்கிரம் எங்க கிட்ட  வந்துடு டா கண்ணா ”  

சிறந்த கமிஷனராக இருந்து, இந்த பிரிவு அவசியமானது என்பதை அறிந்தும், தந்தையாக இந்த பிரிவை அவரால் ஜீரணிக்க முடியாமல் தவித்து தான் போனார்.

“இன்னும் கொஞ்ச நாள் தான் பா. ஐ வில்  செட் எவிரிதிங். என்னோட சந்தோஷத்த மட்டும் நீங்க நல்லா பார்த்துக்கோங்க ”   என்று தர்மா அவர் மனதை படித்ததை போல் டெலிபதி மூலம் அவருக்கு கூறி கொண்டு இருந்தான். 

அவனுடைய சந்தோஷம், நினைத்த போதே அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றி விட , ஆதியை தான் குடி இருந்த வீட்டில் மறைத்து வைத்து, அவளை காண தன் வண்டியில் பறந்தான். 

# # # # # 

மீன்கள் விளையாடும் 
கடலின் ஆழத்தை
கண்டறிந்த போதும் ,
ஆழ்துளை கிணற்றின் 
ஆழத்தை அறிந்து 
கொண்ட போதும், 
நிலவு இருக்கும் 
வானத்தின் நீளத்தை 
அளந்த போதும், 
மனிதனின் கையளவு 
இருக்கும் இதயத்தின் 
ஆழத்தை கண்டவர் எவரோ? 

# # # # # 

வெயிட் அண்ட் வாட்ச்…

அலைகளின் ஓசை அடங்குவதில்லை…

# # # # #