அலை ஓசை 14

sea2-c79af085

அலை ஓசை – 14

தர்மாவின் செயல்களால் கோபத்தில் இருந்த ஆதி, தன்னை தானே நிதான படுத்தி கொண்டு, அந்த அறையை நோட்டமிட்டான். ஒரு மூலையில் பால்கனி தெரிய, அங்கே சென்றான். ஆனால், பால்கனிக்கான கதவு வெளிபுறம் தாழ் போட்டு இருந்தது. “பரவால ஆதி. வேற ஏதாவது ஒரு துருப்பு கண்டிப்பா கிடைக்கும். தேடு தேடு ” நன்றாக நோட்டமிட்ட போது தான் ஒன்றை கவனித்தான். 

அந்த இடம் முழுக்க, வெள்ளை திரைகள் போர்த்தி இருந்தது, மேலும் சவுண்ட் புரூப் ஆகி, ஜாமர் இருப்பது போலவே தோன்றியது. காரணம், அவனது போன் அவன் கையில் தான் இருந்தது. 

“எவ்வளவு தான் பிளான் பண்ணினாலும் ஒரு இடத்தில மிஸ் ஆகி இருக்கும். கண்டு பிடி ஆதி ” என்று தன்னை தானே ஊக்குவித்து தேடலானான். தேடியவன் கையில் அவனது செல்போன் கிடைத்து இருந்தது. ஆனால் அந்தோ பரிதாபம் , அந்த அறை முழுவதும் ஜாமெறால் சிக்னல் எல்லாம் அடைத்து வைக்க பட்டு இருப்பது, அவனுக்கு சில நிமிட நேர போராட்டத்திற்கு பிறகே தெரிந்து போனது.

கண்டிப்பாக அவன் அந்த அறையை விட்டு வெளியே வந்தே ஆகணும் என்ற உந்துதல் மேலோங்க, ஆதி அந்த கதவை தன்னால் முடிந்த அளவிற்கு உடைக்க போராடி, அதை உடைக்கவும் செய்தான். தான் இருப்பது ரெண்டாவது மாடி என்று தெரிந்து, அந்த வெள்ளை திரைகளை எல்லாம், கயிறாக மாற்றி, அவன் கீழ் இறங்கி கொண்டு இருந்தான்.

எனினும் ‘எல்லாத்தையும் சரியா பிளான் செய்யுற தர்மா ஏன் தன்னை மட்டும் , எந்த செக்யூரிட்டியும் இல்லாமல் அடைத்து இருக்கிறான். இதுவும் அவனது பிளான் தானோ? எப்போதும் போல நாம் அவனது திட்டபடியே நடக்கிறோமோ?’ மனதோரம் ஒரு குழப்பம் இருக்கவே செய்தது அவனிற்கு!

# # # # # 

வாய்ப்பு என்பது
பாட்டி சுடும்
வடை மாதிரி,
நாம் தான்
காக்கா போல
போய் தூக்கனும்…
பீட்சா மாதிரி
வீடு தேடி
வரும் என்று
வழி மேல்
விழி வைத்து
காத்திருக்க கூடாது!

# # # # # 

தன் நண்பன் உக்கிரனை காண வந்த தர்மா முதலில் கேட்டது, ” அந்த குட்டி பாப்பாவும் அம்மாவும் நலம் தான? நோ இஷூஸ் ரைட்? பாப்பாவுக்கு அம்மாவுக்கு போஸ்ட் டெலிவரி பெயின் எதுவும் இல்லைல. ஏன்னா, பாப்பா ரொம்ப பலவீனமா இருக்கு டா. ஜான்டீஸ் வர சான்ஸ் இருந்துச்சு. அதான் ” என்று அடுக்கி கொண்டே போக, 

“ரிலாக்ஸ் தர்மா. எந்த சிக்கலும் இல்லை. இன்னும் சொல்ல போனா, அவங்களை இரண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிடுவோம். பாப்பாவும் நல்லா ஆரோக்கியமா தான் இருக்கா. நீ வந்ததும் உன் வேளைய பத்தி கேப்பேனு நினைச்சேன்டா. என்னால உன்னை புரிஞ்சுக்கவே முடியல. அந்த கபில் கூட உன்னை பார்க்க வேண்டும் என்று சொன்னாங்க. நான் தான் நீ கிளம்பிட்டேன்னு சொன்னேன். நீ உன் குழந்தை கூட சந்தோஷமா இருக்க வேண்டும் என்று அந்த கபில் ஓட அம்மா சொன்னாங்க டா ” என்று கூற, 

அவன் கூறிய கடைசி வார்த்தையில் கண் கலங்கி ” அவங்க சொன்னது நிஜமாகட்டும்டா. நான் அவங்கள பாக்கலாமாடா?” என்று சிறு குழந்தை போல கேட்க, 

“போடா. இதுலாம் கேட்டு கிட்டு,பட் பீ கேர்புல். யாரும் உன்னை பார்த்துட கூடாது. யாருக்காவது அடையாளம் தெரிஞ்சா போட்ட பிளான் எல்லாம் சுதப்பல் தான் டா” என்று நினைவூட்ட, தலை அசைத்து அதை ஏற்று, தன்னை நிலை படுத்திக் கொண்டு வாடிற்கு சென்றான். 

வார்ட் அருகே நின்ற தர்மா, அந்த அழகான குடும்பத்தின் பாசத்தில் திளைத்து போனான். ஒரு உயிர் ஜெனித்ததில் தந்தையான தாயான பூரிப்பை அந்த ஜோடியிடம் முழுமையாக அவனால் காண முடிந்தது. காதல் திருமணம் போல, இந்த குழந்தையால் அவர்களின் குடும்பமே மீட்டும் இணைந்து விட்டது போல, அவனால் யூகிக்க முடிந்தது. 

குழந்தையின் அழகில் மயங்கிய தர்மா, தன் குழந்தை ஜெனித்த நிகழ்வை நினைவு படுத்தினான். ஒரு டாக்டராக தன் கடமையை செய்த அவனால், ஒரு தந்தையாக செய்ய இயலாத தன் நிலைமையை எண்ணி வருந்தினான். 

“தர்மா!” என்று அவன் நண்பன் தைரியமூட்ட நிகழ்காலத்திற்கு வந்தான். “இனியும் இங்க இருக்கிறது பாதுகாப்பு இல்லடா, கிளம்பு. நானும் உன் கூட வரேன் ” இருவரும் அந்த மருத்துவமனையை விட்டு கிளம்ப, நினைவு வந்தவனாக, “டேய் ஜான்சி?” என்று வார்த்தை வராமல், உணர்ச்சி வசப்பட்டு பேச,

“நீ சொன்னத, நான் செய்து விட்டேன். அவ இருக்குற இடத்துக்கு தான் இப்போ உன்னை கூட்டி கிட்டு போறேன். முதல்ல, உன் உணர்வுகளை கட்டுப்பாட்டில வைடா. இந்த பழைய நினைவுகள் உன்னை பலவீனமா மட்டுமே பண்ணும். ஒரு நண்பனா இல்லை, உன்னோட சேனா சேனையோட மெம்பரா சொல்றேன். நாம இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. நீ அதுக்குள்ள முடிச்சுடாத ” என்று நிதர்சனத்தை கூற, தன் நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தர்மா தவித்து தான் போனான். 

காரில் சென்று கொண்டிருந்த தர்மா, “நான் சொன்ன மாதிரி, ஒரு தடயம் விட்டு தானே வந்த?! ” என்று கேட்க, 

“நீ சொன்ன மாதிரி தான் பண்ணி இருக்கேன்.ஆனா, ” 

“என்கிட்ட என்னடா தயக்கம். சும்மா கேளுடா” என்க, 

“ஏன் அந்த பெண்ணை கடத்தி வந்த போது,தடயம் விட சொன்ன ” என்று கேள்வி எழுப்ப,

“இன்னிக்கு அந்த பொண்ணுக்கு பிறந்த நாள்டா.ஸோ, இன்னிக்கு கண்டிப்பா அவளோட லவ்வர் கிட்ட இருந்து, கால் வரும். அவளும் அந்த காலுக்காக வெயிட் பண்ணுவா.கால் வந்த முதல் ரிங்குலயே எடுத்துடுவா  அப்படி எடுக்கலனா என்ன ஆகும்? ” என்று மர்மமாக கேட்க,

“இவளுக்கு ஏதோ ஆயிடுச்சுன்னு டவுட் வரும். தொடந்து கால் பண்ணுவான். அப்புறம் பக்கத்தில விசாரிப்பான். காணோம் என்று தெரிய வரும். அப்புறம் என்ன? தேடுதல் வேட்டை தான்!ஆனா அது நமக்கு ஆபத்தாகாதாடா?” என்று பயந்தபடி கேட்க, 

‘அந்த நெடியவன் அங்க இருந்து இங்க நம்ம இடத்துக்கு, அதுவும் நம்மல தேடி வரணும்ங்கிறதுக்காக தான இவ்வளவும் பண்ணறேன்.’ மனதில் நினைத்தபடி புன்முறுவல் செய்ய, இதுக்கு மேல் பதில் வராது என்று அறிந்த தர்மாவின் நண்பன் அடுத்த கேள்வியை தொடுத்தான்.

“டெலிவரி பாக்க உனக்கு உதவ, எத்தனையோ பேர் இருக்கும் போது நீ ஏன் பிரியா வ அனுப்ப சொன்ன ? ” தன் மண்டையை கொடையும் கேள்வியை ஒரு வழியாக கேட்க, பதிலாக சிரிப்பை மட்டுமே தந்த தர்மாவை வினோதமாக பார்த்தவன், பின் அவனே யூகித்தவனாக “அவளால நமக்கு ஏதோ உதவி வரப்போகுதுனு சொல்ற… அதுவும் ரொம்ப பெரிய உதவி. அதுக்கு முன்னாடி நீ நல்லதுக்காக தான் பண்ணுறங்கிறதா அவளுக்கு புரியவைக்க ட்ரை பண்ணுற ரைட்?” கேள்வியின் பதிலாக தர்மா கண் மூடி திறக்க, “ஒரே கல்லில ரெண்டு மாங்கா ” என்று ராகம் பாட, அவர்கள் வர வேண்டிய இடமும் வந்தது. 

# # # # #

தனி அரிமா
போல மனம்
எண்ணும் தருணம்
மூளை உணர்ந்திடும்
அது வீரம்…
சக மனிதனின்
துயரம் என்று
அறிந்த பின்
மனம் பதறி
சினமெழுவதும் வீரம்…

# # # #

தர்மா தொடரும் தாய் ஒரு பார்க்யில் இருந்தாள். அவள் அருகே ஒரு சிறுமி அழ எத்தனிக்க, அவளை ஒரு சிறுவன் தன் தோளில் சாய்த்து கொண்டான். இதை பார்த்த தாயிற்கு, தர்மாவின் நியாபகம் வந்தது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நேராக தர்மாவின் வீட்டிற்கு வர, கார் சத்தம் கேட்டு, ஒரு சிறுவன் வந்தான். 

அவன் வருவதை கண்ட தர்மா,”டேய் மச்சான்” என்ற கூவலுடன் அணைத்து கொண்டான். அவர்களின் பாச பிணைப்பை கண்டு அனைவரும் மகிழ குட்டி மா மட்டும் கண்ணீர் மல்க நின்றாள். 

அவளை கண்ட தர்மாவின் பாட்டி, “யாருடா இது? ” என்று கேட்க, நடந்த அனைத்தையும் கூற, “ஏற்கனவே இங்க ஒரு அனாதை இருக்கு, இதுல இவ வேறையா? ” என்று இடித்து கூறி சென்று விட்டார். 

அவர் கூறிய பின்னே, சிறுவன் குட்டி மாவை கவனித்தாள். 

“யார் மா இவ? ” 

“உன் தங்கை டா இவ! “

“பாப்பா, கொஞ்சம் பயந்து இருக்க போல, வா விளையாடலாம் டா. வா தர்மா ” என்று தர்மா வயதே ஆன சின்னா, அனுபவத்தால் பெரிய மனிதன் போல பேசினான். 

தான் ஒரு அனாதை என்றதாலோ என்னவோ சின்னாவிற்கு குட்டி மாவை மிகவும் பிடித்துவிட்டது. 

தன் தாய் கூறியவற்றால் ஏற்பட்ட மன கசப்பை மாற்றிய சின்னாவை கண்டு அகம் மகிழ்ந்தனர், தர்மாவின் பெற்றோர். 

பின், குட்டி மாவை சமாதானம் செய்து விளையாட வைத்த பெருமை தர்மாவையே சாரும். தர்மாவின் குடும்பத்தை பற்றி கூற வேண்டும் என்றால், 

போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விற்கும் , வீட்டையாளும் அதிகாரியாக பார்கவிக்கும் பிறந்தவன் தான் ஆஸ்திக்கும் ஆசைக்குமாக ஒரே மகன் தர்ம சேனா. விஷ்ணுவின் தாயாரும் இருந்தார். அவனது நண்பனாக, அவர் செல்ல பெயரிட்டு அழைக்கும் சின்னாவும், இப்போது குட்டிமாவுமாக அழகான கூட்டில் நிறைவான குடும்பமும். 

அந்த அழகான கூட்டில் கோபமும் இல்லை மன கசப்பும் இல்லை. பாட்டி கூறும் சின்ன சின்ன விஷயங்களையும் பெற்றோர்கள் விளக்கி விடுவார்கள். அதனால், அங்கே சந்தோஷம் மட்டுமே நிலவி வந்தது. 

அழகான கூட்டுக்குள் அப்படியே இருந்துருக்கலாம். கடவுள் ஏன் இப்படி பண்ணாரு?! கண்ணீர் விட்டாள். 

# # # # # 

நம்மை கண்டு
ஊரின் கண் பட்டாலோ
நட்சத்திர கூட்டம் கொண்டு
திருஷ்டி சுத்திப்போடலாம்!
மேகம் போலே
வந்து வந்து மோதும்
சோகமெல்லாம்
காற்று போலே ஊதலாம்!
அருவி போலெ அன்பை தந்து
எல்லார் மனதையும் நனைத்து
திருடி செல்லும் திருடர் கூட்டம்
நாங்கள் தான் அன்றோ?

# # # # # 

வெயிட் அண்ட் வாட்ச்…

அலைகளின் ஓசை அடங்குவதில்லை…

# # # # #