அலை ஓசை 18

sea2-32a8971b

கிரைம் பிரான்சில் இருந்து செல்லும் வழி எல்லாம் ஆதி எங்கே என்றே நினைப்பே இருக்க, கன்றோல் ரூமிற்கு சென்ற நொடி , சந்திராவின் அருகே ருத்ரா  வந்தான்.”நீ கேட்ட படியே அங்கிள் ஹேக்கிங் பேர்சன் அனுப்பி இருக்காரு. அதோட , முன்னமே நாம பேசிக்கிட்டே மாதிரி, ஆதி அனுப்பின லிஸ்ட்ல இருக்குற எல்லாரோட டீடைல்ஸ் கேதர் பண்ணியாச்சு. எல்லாருமே யாரோ வேலை கொடுக்க, அத மட்டுமே பண்ணுற ஆட்களாக இருக்காங்க.

எல்லாரோட கால் டீடெயில்ஸ் அப்புறம் அவங்க சோசியல் மீடியா ஆக்ட்டிவிட்டிஸ் செக் பண்ணியாச்சு. சக்ரவர்த்திங்கிற ஆளு ரீசெண்டாக அடிக்கடி பேசி இருக்காரு. அந்த கேன்கோட தலைவன் அவன் தாணு நினைச்சி, அவனுடைய டீடைல்ஸை செக் பண்ண போக, அவன் ராஜா அண்ணாவோட சித்தப்பாவோட செக்ரிடரியாக இருக்காரு. இது எப்படி நடக்குதுனு தெரியல சந்திரா.

இப்போ விஷ்ணு அங்கிளோட கால் ஹிஸ்டரி அண்ட் அவரோட செல்க்கு வந்த மெசேஜஸ் எல்லாம் ட்ராக் பண்ண சொல்லிருக்கேன்” ருத்ரா பேச பேச சந்திராவிற்கு ஏதோ புரிந்தும் புரியாமலும் இருக்க, ஆதியின் முகம் கண்முன்னே சிரிக்க, “எல்லாம் ஒகே ருத்ரா. நமக்கும் என்னனு புரியல. நாம எல்லாத்தையும் விசாரிப்போம். ஆதி எங்க போனான்னு ஒரு தகவலும் இல்ல. அவனோட வேர்அபௌட்ஸ் என்கிட்ட அவன் அப்டேட் பண்ணிட்டே இருப்பான்.

அதோட நம்ம கைக்கு வந்த அந்த குரூப் லிஸ்ட் ஏன் அப்பாவும் கொடுக்கணும் ஆதியும் மெயில் பண்ணி இருக்கனும். அவனுக்கு ஏதோ ஆபத்துனு நான் நினைக்கறேன். உடனே அவனுடைய நம்பரை ட்ரேஸ் பண்ண சொல்லு” ருத்ராவிடம் அடுத்த செய்ய வேண்டியதை கூறிய சந்திரா, யோசித்தாள் . அவளுக்கு சில நிகழ்வுகள் நிழலாக தெரிய, தன் கவனத்தை ஈர்க்காமல் ஏதோ சிலது நடந்தது போல, ஆனா மூளையின் ஏதோ ஒரு மூலையில் சேமித்து இருந்தது போல ஒரு பிரமை ஏற்பட, கண்ணைமூடி யோசித்தாள். சில நிமிடங்களில் அவளுக்கு விளங்கியது, எங்கே அவள் அடுத்து செல்ல வேண்டும், எதை அவள் செய்ய வேண்டும் என்று!

# # # # #

என்றோ நடந்தது
இன்று ஏன்
என்று ஒதுக்க
முடியாமல் அந்த
நிகழ்வு வாழ்க்கை
பாதையையே புரட்டி
போட்டு இருந்ததே!
அதில் இருந்து
மீளும் நாள்
என்னாள் என்று
வேண்டி நின்றேன்!!
நீ என் கை கோர்க்கும்
நாள் என்று
இதயம் சொன்னதே!!

# # # # #

மனம் மூளை எல்லாம் சதி ஆலோசனையில் மட்டுமே இருக்க, அடுத்தடுத்து என்ன என்ன செய்ய வேண்டும் என்று லண்டனில் இருந்து கிளம்பும் போதே சக்குபாய் திட்டமிட்டு இருந்தான். அதன் முதல் கட்டமாக ஏர்போர்ட்டில் இறங்கிய உடனே, அவனது ஆள் ஒருவன், டிப்டாப்பாக டிரஸ்  செய்து கொண்டு வந்து சக்குபாயின் நீண்ட நாள் நண்பன் என்றும், பார்த்து வெகு நாள் ஆகியது என்றும் ,உடனே அவனோடு கிளம்ப வர வேண்டும் என்றும் , பேசியபடியே இருக்க , நெடியவனின் பொறுமை கட்டுக்குள் அடங்காமல், ஒரு நிலையில், ‘என்னவோ பண்ணுங்க’ என்று சக்குபாயை கழட்டி விட்டு இருந்தான்… இல்லை இல்லை… ஜக்குபாய் அவனது குணத்தை அறிந்து, அவ்வாறு அவனை செய்ய வைத்து இருந்தான். தர்மாவின் இடத்தை அறிந்து அவனை மீண்டும் வெறிகொண்டு அழிக்க சக்குபாயின் உள்ளம் துடிதுடித்தது.

இவனை அவன் அறிந்து இருந்தான்… அவனை அறிந்தவனும் ஒருவன் இருப்பான் என்று ஜக்குபாய் மறந்தது தான் வேடிக்கையோ! இல்லை, அவனது யோசனையை செயலாக்கும் முன், எவனோ ஒருவன் அவனது வேலைகளை ஆரம்பித்து இருந்தானோ? ஜக்குபாய் நெடியவனிடம் இருந்து பிரிந்த சில நிமிடத்திற்குள்ளே, அவனும் அவனோடு சேர்ந்து இருந்த அவனது சில ஆட்களும் சேனாவின் ஆட்களால் கடத்தப்பட்டு இருந்தனர்.

சக்குபாயிடம் இருந்து விலகிய நெடியவன், நேராக சென்றது ஜான்சி வேலை செய்யும் இடத்திற்கே. அங்கு அவன் சென்ற சில நிமிடத்திற்குள்ளே, உக்கிரன் விட்டுப்போன அடையாளமான, ஜான்சியின் ஆர்ஜே என்ற டாலர் போட்ட செயின் அவனுக்கு கிடைத்து இருந்தது. அந்த ஆர்ஜே டாலரோடு டிசி என்ற டாலரும் கோர்க்க பட்டு இருந்தது.

ஜான்சியின் பிறந்த நாளிற்காக, அவளுக்கு இருவரது பெயர் முதல் எழுத்தையும் சேர்த்து அவன் பரிசளித்திருக்க அதை அவள் எந்த நாளிலும் கழட்டியதே இல்லை எனலாம். அந்த டிசி டாலரின் குறிப்பையும் அவன் புரிந்து கொண்டு இருந்தான்.

புரிந்த குறிப்பை அவன் உணர்ந்த நொடி எப்படி  உணர்ந்தான் என்பதை வார்த்தையால் வடிக்க முடியுமோ? ஆத்திரமா அனுதாபமா துக்கமா ஆனந்தமா இல்லை எல்லாம் கலந்ததா? ஒரு அவஸ்தை அவன் தொண்டை குழியில் சிக்கியது!

எல்லாம் எவனோ
திட்டமிடுகிறான்
அதையும் அவனே
செயலாக்குகிறான்
புரிந்தும் புரியாமலும்
என் நிலை
வேடிக்கை என்று
பாத்திருக்கேன்
அவன் மீது
நான் கொண்ட
நம்பிக்கையில்!

# # # # #

சக்ரவர்த்தி தர்மா சொன்னது போல சக்குபாயின் ஆதி தொடங்கி அந்தம் வரையென, அவன் செய்த, செய்து கொண்டு இருந்த, செய்ய திட்டமிட்டு இருக்கிறதுயென எல்லாவற்றையும் உரிய ஆவணங்களோடு சேகரித்து கொண்டு இருந்தான். அவனுக்கு அதில் ஒன்னும் அத்தனை கஷ்டமாக இருந்ததில்லை. டார்க் வெர்ல்டில் இது சாதாரணம். அதிலும் சக்குபாயின் வலதுகைக்கு எல்லாம் தூஸ். மனதில் பெண் மீது கொண்ட பாசம் எல்லாவற்றையும் அவனை செய்ய வைத்தது.

தர்மா சொன்னது போலவே சிலதை அவன் மறைத்து இருந்தான். சில ஆவணங்களை, எதை வைத்து சக்குபாயை அவன் பழிவாங்கலாம் என்று இருந்தானோ அதை எல்லாம் எரித்தான். அதில் இருந்த சில செர்டிபிகடேஷை மட்டும் தனியாக பத்ரபடுத்தினான். பல வருடங்களாக செய்த கடத்தலுக்கான குறிப்பு, தங்களது அடியாட்கள் குறிப்பு போன்ற எல்லாவற்றையும் சின்ன பென்ட்ரைவிற்குள் அடக்கி இருந்தான். போலீஸ் எப்படியும் தன்னை தேடி வரும் என்று அவன் அறிந்தே இருந்தான். அவர்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தர்மா சொல்லி இருந்தான்.

ஆதி அந்த வீட்டை சுற்றி கொண்டு இருந்தான். அதில் ஒரு ரூம் பூட்டப்பட்டு இருப்பதை கண்டு, அந்த பூட்டை உடைத்து உள்ளே சென்றான். உள்ளிருந்து வந்த வெளிச்சம் அவனது கண்ணை கூச செய்தது. அங்கே அவன் கண்ட காட்சிகள், பார்த்த படங்கள் அவனை நிலைகுலைய செய்தது.

சந்திரா தர்மாவின் திருமண படம் பெரியதாக மாட்டி இருக்க, அதை சுற்றி அவர்களது பரிணாம வளர்ச்சியான படங்கள் மாட்டப்பட்டு இருந்தது. ஆதியின் மூளையில் உதித்தது எல்லாம் ஒரே எண்ணமே, “சந்திராக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்பதே! அவனது மொபைலில் சிக்னல் லேசாக வந்து இருந்தது. ஆனால் அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் தான் ஆதி இருக்கவில்லை!

விதி மூலம் சிலர் இறந்தார்
என்றால் அரக்கனால்
பலர் உயிரை தியாகம்
செய்தே இருந்தனர்
அரக்கனை வதம்
செய்யும் மனிதன் எவனோ
அவனே கலிகால
கந்தனும் கிருஷ்ணனும்
ஆகிறான்!

# # # # #

வெயிட் அண்ட் வாட்ச்…

அலைகளின் ஓசை அடங்குவதில்லை…

# # # # #