அலை ஓசை – 3

அலை ஓசை – 3

அலை ஓசை – 3

நட்சத்திரங்களான நண்பர்கள் ஆதரவளிக்க,  இன்றாவது தன்னுடைய ஒரு தலை காதலை தன் மனம் கவர்ந்த கள்வனிடம்  சொல்ல வேண்டும் என்ற ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருந்த அழகிய நிலவு, தன் காதலனின் வரவிற்காக கிழக்கு நோக்கி வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தாள். 

 

அந்த அழகான விடியற்காலையில்,  இயற்கையின் அழகில்,  காதலின் மயக்கத்தில் மயங்காது, இந்த மண்ணுலகு சந்திராவோ தன் முன்னே இருக்கும் நோட் பேடில் ஏதோ பரிட்சைக்கு எழுதும் மாணவி போல், கேஸின் நடந்த ரிபோர்ட்களை எழுதி கொண்டிருந்தாள்.  

 

அவளின் கவனத்தை சிதறடிக்கும் விதத்தில் ருத்ரா விடமிருந்து அவளுக்கு ஒரு  குறுஞ்செய்தி வந்தது,  “கம் டு அவர் மீட்டிங் பாய்ண்ட்  ” என்று.

 

“உலகின் முதல் அதிசயமும்

பல சத்தங்களையும் 

தன்னுள்ளே அடக்கியும்

காண கிடைக்காத பல 

அரிய வரலாறுகளையும் 

தின்று செரித்தும்

குழந்தையின் காலடியில்

புதிதாய் பிறந்தும் 

வேடிக்கை காட்டும் கடல்,  

ஒருவகையில் நம்பிக்கை, 

ஒருவகையில் எச்சரிக்கை”

சிறிது நேரத்தில் தாங்கள் வழக்கமாக சந்திக்கும் கடற்கரைக்கு சென்றாள்.  அங்கு தனக்கு முன்பே வந்த ருத்ராவை கண்டு அவள் இதழ்களில் சிறு கீற்றாக புன்னகை பூத்தது,  “நீ எப்போதும் என்னை எதுக்கும் வெயிட் பண்ண விட்டது இல்லை ருத்ரா” 

 

தன் அருகே நிழலாடுவதை உணர்ந்த ருத்ரா, “இந்த கடல் அலைகளை பார்த்தியா சது, எவ்வளவு அழகாக இங்கே இருக்கும் எல்லோரையும் சந்தோஷப் படுத்துகிறது.  ஆனால், இதை சந்தோஷப் படுத்த யார் இருக்கா சொல்லு?  இந்த கடல் எத்தனை மக்களோட முதலீடாக இருக்கு.  இந்த கடல் வாழ் உயிரினங்களை நம்பி எத்தனை மக்களோட வாழ்வாதாரமாக இருக்கு. ஆனால்,  ஒரு ஆழிப்பேரலை வந்தா எல்லாவற்றையும் மறந்து விடுவார்களா சது? ”  என்று தான் ஒரு கம்பீரமான ஐ.பி.எஸ் ஆபிசர் என்பதையும் மறந்து, தன்னிடம் அவன் மனக்குமுறல்களை கூறும் ருத்ராவை ஏனோ ரசிக்க தான் செய்தாள், சந்திரா.

 

” ருத்ரா! நீ சொல்லுவது எல்லாமே கரட் தான். ஆனால், நீ ஒன்று மட்டும் மறந்து போய்டுறடா. கடல் அமைதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்ன தான் ஆழிப்பேரலை வந்து உயிர் சேதம் நடந்தாலும்,  மக்கள்  அதே கடல் தாய் கிட்ட உன் குழந்தை பண்ணின தப்பை எல்லாம் மன்னித்து விடு என்ற மறுபடியும் அதே நம்பிக்கையோடு தான் வராங்க.

நீ நினைக்கிற மாதிரி யாரும் யாரையும் யூஸ் அண்ட் திரோ மிஷினாக பார்க்கல. எல்லாவற்றிலுமே ஒரு நம்பிக்கை இருக்கு.  நம்பிக்கையில் சின்ன விரிசல் வரலாம்,  ஆனா அதுனால உறவே அருந்து விழுந்துடாதுடா” என்று அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய பின், அவன் தோள் தொட்டு, 

 

” ருத்ரா, உன்னையும் அப்படி யாரும் நினைக்கவில்லை டா. நீ உன்னோட எமோஷன்ஸ் எல்லாம் கன்ட்ரோல் பண்ணு என்று தான் சொல்கிறோம். நீ காட் ஃபாதராக நினைக்கிற கமிஷனரை உன் முன்னாடியே அந்த தீரஜ் மட்டமாக பேசினால் கோபம் வரதான்  செய்யும். இட்ஸ் நெசுரல். ஆனால், அதுக்காக அந்த தீரஜோட சட்டையை பிடிக்கிற அளவுக்கு போகுற அந்த கோபம், அது தப்புடா. அளவுக்கு அதிகமான கோபம்,அது உனக்கும் நல்லது இல்லை, உன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கும் நல்லது இல்லை. அதை மட்டும் கன்ட்ரோல் பண்ணு. நேத்து நைட் அப்பா எல்லாவற்றையும் சொல்லி வருத்த பட்டாருடா. அப்பா உன்னை அடித்ததற்கு நான் சாரி கேட்டுகறேன்  டா” என்று அவன் குறையை சுட்டிக் காட்டிய பின், 

 

” ருத்ரா,  உன்னுடைய கோபத்தை, இந்த கேஸ்க்கான நெக்ஸ்ட் மூவ் என்ன?  என்று யோசிடா. நேற்று காலைல வந்த ஒரு அனானிமஸ் கால், அப்புறம் மாலை வந்த கிபிட் பாக்ஸ், எல்லாத்தையும் யோசி. நாம கைல கேஸ் வந்து ஒன் டே தான் ஆகி ருக்கு. அதுக்குள்ள நீ உன் தன்னம்பிக்கையை இழந்துடலாமா? அந்த கிப்ட் பாக்ஸ் வழியாக நமக்கு ஒரு ஓபன் சாலஞ் விட்டு இருக்கிறாங்கடா.  இது நமக்கு ஒரு சவால் டா. அதை நாம முறியடிக்கணும். உன்னால முடியும்.  நாங்க எல்லாரும் உன் கூட  இருக்கோம். நிதானமாக யோசி ருத்ரா”  என்று அவன் குறையையும் நிறைவாக மாற்ற முயற்சி செய்தாள்.  

 

“நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன் சது”  என்று கடல் மண் புதைய நடந்து, ஒரு படகின் அருகே சென்றான். 

 

அந்த படகோடு பொதிந்து விட்டிருந்த பழைய நினைவுகள் எல்லாம் ஒன்றோடு ஒன்றாக போட்டி போட்டு கொண்டு மனதில் அலை அலையாக வந்து மோத,  அவன் கைகள் தன்னை அறியாமலே அந்த படகின் நடுவே இருக்கும் இதய சின்னத்தை தடவ,  அவன் காதுகளில், 

 

“இந்த விடியலை  பாருடா மாப்பிளளை, சூரியன் மறைஞ்சுட்டான். அப்படியானால்,  அவன் வரவே மாட்டான் என்று அர்த்தம் இல்லை டா.  இங்கே மறைஞ்ச சூரியன் இன்னொரு இடத்தில் உதிக்க தான் செய்யறான்.  வாழ்க்கையில் வெற்றி, தோல்வி இன்பம், துன்பம் எல்லாமே வர தான் செய்யும். நம்முடைய தவறுகளை சரி செய்ய இந்த விடியல் நமக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க தான் வந்து இருக்குடா. நல்லதாவே பொறுமையா நினைச்சு பாருடா,  நமக்கு எல்லாம் நல்லதே நடக்கும். அடுத்து நிமிடம் என்னன்னு தெரியாத வாழற வாழ்க்கை, அதை கொஞ்சம் நிதானமாக தான் வாழ்ந்துட்டு போயேன்டா மாப்பிள்ளை! “

 

என்ற வரிகள் ஒலித்தது.  

 

அந்த வரிகளில் அவன் மனம் முழுமையாக அமைதி அடைந்தது.  அப்போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது. “சது… சது… சது… ” என்று கத்தி கொண்டே சந்திராவிடம் வந்தான். “சொல்லு ருத்ரா, என்ன யோசனை கிடைத்தது? “என்றாள்,  அவன் மனதை படித்த மாதிரி.

 

” சது..  நீ என்கிட்ட ஓமன் சாலஞ் என்று சொன்னல,  எனக்கு ஒரு ஐடியா. அந்த பேப்பரில் சவப்பெட்டி திறந்து வைக்கப்பட்டது. ஐ மீன் இட்ஸ் ஓபன். சது,  நீ நோட்பேட் வைத்து இருக்கத்தான? ” அவள் ஆம் என்று தலையசைக்க,  

 

“குட், தென் நோட் வாட் எவர் ஐ சே” என்று தன் மனதில் எழும் யோசனைகளை கூற ஆரம்பித்தான்.

 

” பிளஸ் அ குறிக்கிறது எதுவாக இருக்கும்? 

அடிஷன்,  லெட்டர் டி (t), சர்ச் கிராஸ்,  இயேசு கிறிஸ்து,  ஹாஸ்பிடல்,  திசைகள்… 

அப்புறம்,  அந்த சவப்பெட்டி திறந்து வைக்கப்பட்டது. அப்படினா,  பிணம், மார்சுரீ,  சுடுகாடு,  பேய்,  பிசாசு…  அப்புறம் ஹார்ட் சிம்பல் னா அன்பு,  பாசம், காதல்… அப்புறம்,  3 அண்ட் 3 னா நபர்கள்,  நேரம்… இது எல்லாம் இப்போது வரிசைல போட்டு பாரு”

 

சிறிது நேரம் யோசனைக்கு பின்,  இருவருக்கும் ஒரே போல் யோசனை வந்தது. “ருத்ரா,  நான் நினைக்குறத தானே நீயும் நினைக்கிற? ” என்று வினவ,  “ஆமா சது, மகேஷ் ஹாஸ்பிடல்  ல மூன்று மணி அளவில்  கடத்த பட்டிருக்கான்.  நமக்கு அந்த ஹாஸ்பிடல் மார்ச்சுரீீல ஏதோ தடயம் இருக்கு என்று நினைக்கிறேன் ” என்று  தன் யோசனையை கூற,  “அதோட வேறு ஏதோ இருக்கு..  அப்போ ஹார்ட்ஸ், ்ந்த குட்டி வைன் பாட்டில் பொம்மைக்கான அர்த்தம்? ” என்று தன் சந்தேகத்தை முன் வைக்க,  “யு ஆர் ரைட் சந்திரா “என்று மீண்டும் குழம்பினான். 

 

 குழம்பிய அவன் முகத்தை காண பிடிக்காமல்,  ” ருத்ரா!!  இது நம்முடைய முதல் படி, இதுல பிரொசீட் பண்ணலாம்.  நீ இன்றைக்கு ஹாஸ்பிடல்க்கு போ. நான் இதுவரை இந்த கேஸ் ரிபோட்ஸ்  அ அப்பாகிட்ட சொல்லி விட்டு அங்கே வந்த ஜாயின்ட்  பண்ணிக் கிறேன் ” என்று அடுத்து செயல்பட வேண்டிய அவசியத்தை எடுத்து உரைத்தாள்.  இருவேறு திசையில் செல்லும் அவர்களை பார்த்து மெச்சுதலாக நினைத்த அந்த நிழல் உருவம்,  சிறிது நேரத்தில் ஏளனமாக பார்த்தது.

 

# # # # #

 

தான் தங்கியிருந்த இடத்திற்கு வந்த சேர்ந்த நிழல் உருவம், தன் கைபேசியில் இருந்து சில பல கால்கள் செய்து,  அடுத்த கடத்தல் க்கான வேலைகளை செவ்வன செய்து , தன் குறிக்கோள்களை நெருங்கிய படி இருந்தது. 

 

பின் மகேஷ் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு செல்ல, அங்கே பாதி மயக்க நிலையில் இருந்த மகேஷை தட்டி எழுப்ப,அந்த நிழல் உருவத்தை கண்டு பீதியில் அலறிக் கொண்டு இருந்தான் மகேஷ்! 

 

” நீ இன்னமும் சாகாமலா இருக்க,  உன்னை நான் தானே என் கையால கொலை பண்ணினேன்” மகேஷ் பயத்தில் ஒளரிய படி இருக்க, “உனக்கு நான் காலனா வரனும்ன்னு இருக்கும் போது, நான் எப்படி கண்ணா சாவேன்” நிழல் உருவத்தின் குரல் நக்கலடித்தாலும் அதன் கண்கள் ரௌத்திரத்தை மட்டுமே உமிழ்ந்தது.

 

“நண்பன் என்று பழகி 

துரோகம் செய்து 

முதுகில் குத்தும் 

போலி முகவரிகளின் 

முகத்திரை கிழித்தே 

ரௌத்திரம் பழகு! 

 

தீமையை மட்டுமே

செய்து தன் வாழ்வின் 

அடையாளத்தை உருவாக்கும்

நபர்களின் முதுகெலும்பை 

உடைத்து குருதி குடித்தே 

ரௌத்திரம் பழகு! “

 

அந்த நிழல் உருவம் பின் தான் வழக்கமாக செல்லும் ஸ்கூலின் அருகே உள்ள பூங்காக்கு சென்று, அந்த தாய்-சேய் வரவிற்காக காத்திருந்தது.  

 

அதன் காத்திருத்தலை வீணாக்காமல், அந்த தாயும் தன் மகளுடன் வந்தாள்.  “அம்மா,  பாப்பாக்கு டிவ்ஸ் கொடு ” என்று மழலையான குரலில் கேட்க,  அவள் கண்ணத்தில் தன் முத்தத்தை பதித்து,  “பாப்பா,  எப்போதும் போல குட் பாப்பாவா இருக்கணும் சரியா?  ” என்று கேட்க, 

 

 ” டீல்”   என்று தன் கட்டைவிரலை உயர்த்தினாள்.  “ஒகே அம்மா, பாப்பா டாடா”  என்று கை அசைத்து பள்ளி வளாகத்திற்குள் சென்றாள். 

 

குழந்தை உருவம் மறையும் வரை அந்த தாய் காத்திருந்து சென்றாள்.  அந்த தாய் உருவம் மறையும் வரை அந்த நிழல் உருவம் காத்திருந்து சென்றது.

 

# # # # # 

 

கமிஷனர் அலுவலகத்தில், ருத்ராவும் தானும் யூகித்து கண்டு அறிந்த விஷயங்களை தன் தந்தையான கமிஷனரிடம் சந்திரா ரிபோர்ட் செய்து கொண்டு இருந்தாள். 

 

” இட்ஸ் அவர் வெரி காம்பிளிகேடட் கேஸ் டா சந்திரா.. நீங்க சொல்ற மாதிரி அந்த நபர் நம்மகிட்ட தான் ஏதோ சொல்ல வர மாதிரி இருக்கு.  நீங்க சரியான திசையில் ல தான் கேஸ் அ எடுத்து கொண்டு போறீங்க என்று என் இன்டியூஷன் சொல்லுது. பட் இந்த கேஸ் அ நாம எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுப்பிடிக்க வேண்டும்.  அதே சமயம், பீ கேர்பூஸ்!  இதை ஒரு கமிஷனராக இல்லை ஒரு அப்பாவாக சொல்றேன்.  ” என்று விஷ்ணு வருத்தமாக சொல்ல,  ” நோ வொரீஸ் டாட், வீ கேன் டேக் கேர் ஆப் அவர்செவ்ல்ஸ் ”   என்று சிரித்தாள். 

 

 பின் தயங்கி கொண்டே,  “சதுமா, இஸ் ருத்ரா ஆல்ரைட் ?” என்று விஷ்ணு வினவ,  “அவன பத்தி உங்களுக்கு தெரியும் தான டாட்,  கொஞ்சம் நேரம் தான் அப்செட் ஆ இருந்தான். அப்புறம் சரியாகிட்டான் டாட்”  என்று தந்தையின் கவலையா போக்க, “பட், அந்த ரெட்டி என்னை அடிக்க வரும்போது ருத்ரா அது தடுத்து ஒரு சத்தம் போட்டான் பாருமா? ஏதோ பெருசா சாத்தி மாதிரி இருந்துச்சு” என்று அவர் சொல்லி கொண்டு இருக்கும் போதே, ருத்ராவே சந்திரா வுக்கு கால் செய்தான். 

 

“சது,  நீ உடனே ஹாஸ்பிடலுக்கு வா. நாம நினைத்த மாதிரி நமக்கு ஒரு ஆதாரம் கிடைத்து இருக்கு. மகேஷ் எப்படி கடத்தப்பட்டு இருக்கான் என்று ஆதாரத்துடன் கிடைத்து இருக்கு. நீ சீக்கிரமாய் வா சது.” என்று ருத்ரா போனில் ஆர்ப்பரித்து கொண்டிருந்தான். 

 

சந்திரா ஹாஸ்பிடலுக்கு கிளம்ப, கமிஷனருக்கு ஒரு அனாமிஸஸ் கால் வர அதை எடுத்தவர்,  ரகசியமாக பேச பக்கத்து அறைக்கு செல்ல, சந்திராவிற்கு அதில் சந்தேகம் வர, 

 

 அவரை தொடர்ந்தவள், “எல்லாமே நம்ம பிளான்படி தான் நடக்குது. பட், பிளானை எவ்வளவு சீகிரமா எக்ஸிகூட் பண்ணறமோ அவ்வளோ நல்லது. பீ கேர்பூல்” என்று கால் ஐ கட் செய்ய, அறை வாயிலில் சந்திராவை சத்தியமாக எதிர்ப்பார்க்காத கமிஷனர்,  “அண்டர் கிரௌண்ட் கேஸ் ஏதாவது இருக்கா டாடி? ” அவளே கேள்வியையும் கேட்க,  “ஆமா மா,  ஆனால் பெருசா இல்லை” என்று சமாளிப்பாக அவர் கூறியது சந்திரா மனம் அறிந்தாலும், அதை அப்படியே விட்டு விட்டாள். 

 

ஒருவேளை அவள் மனம் அறிந்ததை கொஞ்சம் சீரியசாக எடுத்திருந்தாலும் கேஸை அப்போதே முடித்திருக்கலாமோ?  அதை அறியாது சந்திரா ஹாஸ்பிடலுக்கு சென்றாள். 

 

அதே சமயம்,  இங்கே கான்ஸ்டபிள் ஒரு கிப்ட் பாக்ஸை சந்திராவிற்கு வந்ததாக கூறி கொண்டு வந்து வைத்தான்.

 

# # # # #

 

அந்த கிப்ட் பாக்ஸில் என்ன இருக்கும்?

ஹாஸ்பிடலில் ருத்ரா என்ன ஆதாரம் கண்டு பிடித்தான்?

நிழல் உருவம் அடுத்து என்ன செய்ய போகிறது?

கமிஷனர் யாரிடம் பேசி இருக்க கூடும்? 

விதியின் விளையாட்டில் யார் புலி யார் பலி? 

 

# # # # # 

 

வெய்ட் அண்ட் வாட்ச்… 

 

அலைகளின் ஓசை அடங்குவதில்லை… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!