அலை ஓசை – 5

sea2-6918146f

அலை ஓசை  –  5

சந்திராவின் ருத்ராவின் தூக்கத்தை எல்லாம் அழகாக பறித்த  நிழல் உருவமோ, தான் வழக்கமாக செல்லும் பள்ளி வளாகத்தின் வெளியே, அந்த இரண்டு வயது சிறுமிக்காக காத்துக் கொண்டு இருந்தது.

கலைந்த முடியும்,  தன் உறவின் வருகையை எதிர் நோக்கி, வருபவர்களை எல்லாம் அலசும் அந்த விழிகளும், தன் பையை சுமக்க முடியாமல் சுமக்கும் அந்த குட்டி முதுகும்,  “இன்னுமா வரல? ” என்று செல்லமாக கோபித்துக் கொள்ளும் அழகும், நொடிக்கு ஒரு முக பாவத்தை மாற்றும் அந்த குழந்தையின் அழகில் அந்த நிழல் உருவம் மயங்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.தான் கண்ட அழகை தன் பேசியிலும் பதிவு செய்தது.

பின் ஆறடி உயரம் கொண்ட ஒரு நெடியவனை கண்டவுடன் அக்குழந்தை “டாடி”  என்று ஆர்ப்பரித்து அவன் தோல்களில் ஏறி கொண்டது.  

“அம்மா வரலயா டாடி? “என்று முகம் சுருங்கி கேட்ட குழந்தையை  அள்ளி அணைத்து, ” ஏன் அம்மா தான் வரணுமா? டாடி வர கூடாதா? ” என்று எதிர் கேள்வி கேட்டான்.  “அப்படி எல்லாம் இல்லையே.. ” என்று புது பூவாக அக்குழந்தை  மலர்ந்தாள்.  பின் அருகில் இருக்கும் பார்க் யில் சிறிது நேரம் விளையாடிய பின், அக்குழந்தையின் பசியாற்ற உணவகம்  சென்று,  அவள் விரும்புவதை ஆடர் செய்து சாப்பிட்டு,  தன் வீட்டை நோக்கி அந்த நெடியவன் பயணமானான்.  

அவனையும் அக்குழந்தையையும் அந்த நிழல் உருவம் பின் தொடர  தவறவில்லை. எப்படியாவது அக்குழந்தையின் தாயை காண வேண்டும் என்ற அந்நிழல் உருவத்தின் நோக்கம் நிறைவேறாமலே போனது. அருகில் இருக்கும் முழு நிலவின் ஓவியத்தை கண்ட நிழல் உருவத்தின் உதடுகள் மர்ம புன்னகையை வீசியது.

# # # # # #

மனம் கொண்ட ரௌத்திரமும் 
காணாமல் போனதே 
உன் மழலை சொல்லினிலே! 
நான் கொண்ட திமிரும் 
அகந்தையும் சுக்கல் சுக்கலாக
உடைந்து போனதே, 
உன் சில்லறை சிரிப்பினிலே! 
உலக அற்புதங்கள்
ஒன்றாக சேர்ந்தாலும், 
அன்று மலர்ந்த பூவாக
சிரித்து குதூகலக்கும் 
குழந்தையின் முன்னால் 
தோற்கும் அல்லவா? 

# # # # # # # # 

“மகேஷ் கடத்தல் கண்டிப்பாக திட்டமிட்டதாக இருந்தாலும்,  அதுக்கும் நம்ம பண்ற பிஸினஸுக்கும் எந்த தொடர்பும் இருக்காது பாஸ்,  அதோட என் பையனை நான் நிச்சயமா சீக்கிரமா கண்டு பிடித்து, அவனை அப்படி யார் கடத்தினாங்களோ அவங்களை நான் நிச்சயமா சும்மா விட மாட்டேன்.  நீங்கள் என்னை நம்பலாம் பாஸ்” எல்லாரையும் ஆட்டுவிக்கும்  தீரஜ் ரெட்டி பயந்த நிலையில் யாருடனோ பேசியில் பேசி கொண்டு இருக்க, 

“எனக்கு தெளிவு இல்லாத பதிலில் எப்பயுமே நம்பிக்கை வந்தது இல்லை.  சீக்கிரமா காரியத்தை முடிச்சுட்டு இனிமே நீ பேசலாம்.  அது வரை நம்மலோட டீல் அப்படியே தான் கிடப்புல இருக்கும்.  ” தொப்பியில் தன் முகத்தை மறைத்துக் கொண்டு இருந்த , “பாஸ்” என்று அழைக்கப்படும் அந்த மர்ம ஆசாமி போனில் உறுமி விட்டு வைக்க, 

இந்த பக்கம் இருந்த தீரஜ் கொதி நிலையில்  கமிஷனருக்கு கால் செய்து சில பல திட்டுகளை இலவசமாக கொடுக்க,  அரசியலில் இதுலாம் சாதாரணம் அப்பா என்று கமிஷனரும் அவரின் இயல்புக்கு மாறாக மிகவும் அசால்ட்டாக அவரின் பிற வேலைகளை செய்து கொண்டு இருந்தார்.  

போனில் உறுமி விட்டு திரும்பிய அந்த “பாஸ்”,  தன்னையே கண்ணை மறைத்து கொண்ட கூலரின் வழியாக உறுத்து பார்த்து நின்று கொண்டிருக்கும் அந்த ஆறடி இளங்காளையின் பார்வைக்கு பயந்து நடுங்கினான்.  

” வரவர உங்க போக்கே சரியில்லை பெரியப்பா!” உங்களை நான் பார்த்து கொண்டு இருக்கிறேன் என்ற ரீதியில் கூறிவிட்டு சென்று விட்டான் அவன்.  கதையின் நாயகனா?  பார்த்தால் அப்படி தான் இருக்கிறான்.  ஆறடி உயரத்தில், ஜிம் உபயத்தால்  முறுக்கேறிய உடலும்,  துளைக்கும் கண்களும், அதை எப்போதும் மறைக்கும் கூலர்சும்  ஆணின் இலக்கணம் கொண்ட ஆணழகன்! 

‘ஆழ்ந்த குரலிலும் தன் கோபத்தை வெளிப்படுத்த முடியுமா? ஆட்டுவிக்கிறானே இவன்! ‘ மனதில் நினைத்ததை சொல்லிடதான் முடியுமா?  அந்த இருளில் ஆட்சி செய்யும் பாஸால்! 

# # # # # # 

வல்லவனுக்கு வல்லவன் 
உலகில் பல பேர் இருக்க 
எல்லாம் எனக்கே 
சொந்தம் என்ற 
அகந்தை மனிதன் 
மனதில் திளைத்திருக்கும் 
காரணம் என்னவோ? 
உன் கையில் இன்று 
புரளும் பண கட்டுகள் 
நாளை எவர் கையிலோ? 
புரிந்து கொள் மனிதா, 
வாழ்க்கை எதார்த்தத்தை! 

# # # # # # # 

தினமும் தன் பாதி அழகை மட்டுமே காண்பித்து வந்த அந்த  வாணுலகத்து தேவதை,  இன்று தன் முழு அழகையும் காட்ட எண்ணி தன் படைகளான நட்சத்திரங்களுடன் விண்ணில் வந்தது.  

அந்த வாணுலகத்து தேவதையின் அழகில் மயங்கிய கடல் அரசன், அவளை கடத்த   தன் அலைகளை ஏவி விட்டான்.  எனினும்,  அந்த அலைகளால் அவளை கடத்த இயலவில்லை.  எப்படியாவது தன் அரசனின் கட்டளையை நிறைவேற்ற மீண்டும் மீண்டும் ஆக்ரோசமாக அலைகளை வான் நோக்கி பாய்ந்தது.  

இதை எல்லாம்  வானில் இருந்த அந்த தேவதையான நிலவு அலைகளின் போராட்டத்தை பார்த்து கர்வமாக சிரித்தது.  இங்கே இந்த காதல் யுத்தத்தை சிறிதும் உணரும் நிலையில் இல்லாமல்,  கடல் அலைகளை வெரித்து பார்த்து கொண்டு இருந்தாள்,  குழந்தையின் தாய்.  

அவள் மனதில் இரண்டு வருடங்களாக ஓடும் அதே நினைவுகள் ஓடி கொண்டு இருந்தது. பௌர்ணமி நிலவும் குளிர்ந்த காற்றும் ஆக்ரோஷமாக கரையை நோக்கி பாய்ந்து வரும் கடல் அலைகளும் அவள் மனதில் பதிய வில்லை.

அவள் கால்கள் வழக்கமாக செல்லும் படகின் அருகே சென்றது.  அவள் வந்ததை உணர்ந்த படகோட்டி,  நடுக்கடலிற்கு சென்றான்.  அவளின் மனம் அவளையும் அறியாமல் மறக்க நினைக்கும் சில நிகழ்வுகளை கண் முன்னே காட்டியது.  

அவள் மனதில் எப்போதும் தோன்றும் கவிதை வரிகளும் தோன்றி, மன வலிகளை மேலும் வலிக்க செய்து கொண்டு இருந்தது.  இறுதி இரண்டு வரிகளில் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.  

அவள் கண்களில் வழிந்த கண்ணீரை கண்ட நிழல் உருவத்திற்கும் கண்ணீர் வழிந்தது.  ஏனோ,  அந்த நிழல் உருவம் தன்னையும் அறியாமல் சில பல திட்டங்களை தீட்டியது.  அந்த திட்டங்கள் யாவும் நல்லதொரு காரியத்தை நிறைவேற்பதற்காக அல்ல.  

 # # # # # # # 

பெண்ணின் அழுகை 
அவள் காதலுக்காகவோ? 
தொலைத்த வாழ்க்கைகாகவோ?
தெரிந்தவர் எவரோ? 
மங்கை கண்ணீர்
எழுப்பும் வினாவிற்கு 
விடை தான் உண்டோ? 
கடலில் ஆழத்தை 
அறிந்தவர் இருந்தும், 
மனதின் ஆழத்தை 
அறிந்தவர் எவரோ? 

# # # # # # #

வெயிட் அண்ட் வாட்ச்… 

அலைகளின் ஓசை அடங்குவதில்லை…

# # # # # # #