அலை ஓசை – 7

sea2-0d3717de

அலை ஓசை – 7

அலை ஓசை – 7

அடுத்த 15 நிமிடங்களில் தன் முன்னே நின்ன ருத்ராவை பார்த்த சந்திரா, 

“ருத்ரா, முதல் நாள் வந்த கிபிட் பாக்ஸில வந்த பேப்பரில் அடுத்த கடத்தல்க்கான க்லூ இருக்குடா. அந்த பேப்பரில் இருந்த இதயத்திற்கான அர்த்தம் ஓபன் ஹார்ட்ஸ் ஹோட்டல் டா” என்று ஆரம்பித்து,   நடந்த அனைத்தையும் கூறினாள்.

“இது எல்லாமே சந்தேகத்தில தான். வோர்க் கௌட் ஆகுமா சது? ”  என்று ருத்ரா சந்தேகமாக கேட்க, “மனசுல சந்தேகம் வந்தாச்சு னா, அதை உடனே சரி பண்ணிட்டு தான் அடுத்த வேலை பார்க்க வேண்டும் ருத்ரா” என்று நம்பிக்கையாக கூற,  அவள் நம்பிக்கையில் ருத்ரா நம்பிக்கை கொண்டான்.

“ருத்ரா,  மகேஷுக்கும்  ரக்க்ஷனுக்கும்  ஏதாவது லிங்க் இருக்கா என்று கண்டு பிடி. ஒரே கல்லூரியா  இருக்க வாய்ப்பு இல்லை.  ஏன்னா மகேஷ் விஸ்காம், ரக்ஷன் மெடிசின். ஸோ, ஸ்கூல் பிரண்ட்ஸா இருக்குற வாய்ப்பு இருக்கு.இல்லனா சோஷியல் மீடியா வழியாக தெரிஞ்சு இருக்கலாம். அவங்களோட எல்லா சோஷியல் மீடியா நெட்வொர்க் எல்லாம் தேடு. அப்புறம் “என்று சந்திரா அடுக்கி கொண்டே போக, 

“ரிலாக்ஸ்  சது. முதல்ல ஆதி கிட்ட இருந்து ரக்க்ஷன் காணோம் என்று கன்பிரிம் ஆகட்டும்.  அப்புறம் பாக்கலாம் ” என்று அவளை நிதான படுத்த நினைக்க, 

” இல்லை ருத்ரா, என் உள்ளுணர்வு சொல்லுது. ஹி மஸ்ட் பீ மிஸ்ஸிங்” என்று அவள் கூறி கொண்டு இருக்கும் போதே,  ஆதியிடம் இருந்து சந்திராவிற்கு கால் வந்தது. 

“மேம், நாம சஸ்பெக்ட் பண்ணது கரட்டு தான்.  ரக்க்ஷன் காணாம போய் நாலு மணிநேரம் ஆகுது. அவன் பிரண்ட் கொஞ்சம் பயத்தில இருக்கான்.  ரக்க்ஷன் மான்ஷனுக்கு வந்துட்டு இருக்கேன் என்று கால் பண்ணிக்கிறான். பட்  அவன் வரல. ஹோட்டல் டூ மான்ஷன் வழில அவன் கிட்னாப் ஆகி இருக்கனும். அந்த வழில இருக்குற டீ கடையில ஒருத்தர் இதை பார்த்து இருக்கிறாங்க.  அது ஒரு சில்வர் கலர் டவேரா வண்டி. பட் நம்பர் பிளேட் அதுல இல்லைனு சொல்லுறாங்க” என்று தான் அறிந்த அனைத்தையும் கூற, 

“கிரேட் ஜாப் ஆதி. கண்ட்ரோல் ரூமிற்கு இன்பார்ம் பண்ணுங்க. அந்த ரக்ஷன் கண்டிப்பாக கிடைச்சாகனும்” என்று கூறி,  

“ருத்ரா, நீ நான் சொன்னதை எல்லாம் செய். நான் வேற ஏதாவது வழி தெரியுதா என்று யோசிக்கறேன்” என்று தன் தந்தையை காண சென்றாள்.

# # # # # 

மனம் ஒரு
குரங்கு தான்
மரத்துக்கு மரம்
தாவும் தான்
காற்றிலே தூது
அனுப்பும் தான்
ஆனால் மனம் கூறும்
செய்திகளெல்லாம்
நிஜங்கள் அன்றோ?
சதை பிண்டமென்று
ஒதுக்கி வைப்பது
அநியாயம் அன்றோ? 

# # # #

ஆதி, ருத்ரா, சந்திரா அனைவரையும் ஆட்டி படைத்து,  அவர்களின் பதட்டத்திற்கு காரணமான நிழல் உருவமோ, ரக்ஷனை தன் நண்பன் மூலம் வேறொரு பாதுகாப்பான இடத்தில் பதுக்கி வைத்து விட்டு, கடற்கரையில் சூரியனின் வரவுக்காகவும், தன் உதட்டில் பூக்கும் சிரிப்பின் காரணமான, இரண்டு வயது சிறுமியின் வரவுக்காகவும் காத்துக் கொண்டு இருந்தது.

அதே போல் அக்குழந்தையும் வந்தது அந்த நெடியவனுடன். “என்ன டாடி நீ?  பாரு லேட்டா போச்சு. சீக்கிரம் எழுந்திருக்கலாம் ல. சூரியா வர போறான் பாரு.  ஜல்தி யா வா டாடி” என்று மழலையாக அந்த நெடியவனை பார்த்து கத்தி கொண்டு இருந்தாள்.

அவனும் அவளுக்கு பயந்தது போல நடிக்க, அவன் நடிப்பில் தன் கோபத்தை மறந்து சிரிக்க ஆரம்பித்தாள். கடல் அலைகள் ஓசை எழுப்ப , சூரியனின் வருகையை வரவேற்கும் விதமாக சிவந்த வானத்தின் பிண்ணனியில் குழந்தையை பல விதங்களில் அந்த நிழல் உருவம் போட்டோக்களை எடுத்துக் கொண்டே இருந்தது.

கவிதையான அக்காட்சியை தன் கையளவு கேமராவிற்குள் அடக்கிய போது,  உலகத்தையே அடக்கிய பரவசம் அந்த நிழல் உருவத்தின் முகத்தில் பிரதிபலித்தது.

அதன் சந்தோஷத்தை இடையூறாக அதன் செல்போன் ஒலி எழுப்பியது. சிறிது நேர உரையாடலிற்கு பின்,  “நான் நினைத்ததை விட, யூ ஆர்  கோயிங்  பிரிட்டி ஃபாஸ்ட் சந்திரா. இப்போ தான் ஆட்டத்தில சூடே பிடிக்குது. ஐ ஜஸ்ட் லைக் தட். ஐ ஹவ் டு  பிரசெண்ட் யூ அ கிப்ட் மை டியர் பார்ட்னரின் கிரைம் ” என்று  கத்தி கொண்டு இருந்தது.

அந்தக் கத்தல் கடல் அலைகளின் கத்தலோடு ஆக்ரோஷமாய் கலந்தது. 

# # # # # # 

மனக் கண்ணாடியின் பிம்பமாக
இவளே உருமாறினாள்! 
பார்க்காத பாசத்தை எல்லாம்
சேர்த்து பரிமாறினாள்! 
அடடா வரமாய்  தெய்வமே 
மடியில் குதித்தாடுதே! 
மன குறை எல்லாம் தூசி
போலே பறந்தோடுதே ! 
அன்பு என்னும் நதி 
இன்று கடல் சேர்ந்ததே! 
தந்தை மகள் உறவின் முன்னே
உலகின் அரிதுகள் தோற்ததே!

# # # # # 

காலை வேளையில் மும்பை மாநகரமே பரபரப்பாக இருந்தது. தன் தந்தையை காண வந்த சந்திரா, கமிஷனர் வளாகத்திற்குள் காலடி எடுத்து வைத்தாள். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல, ஒரு இரண்டு வயது சிறுமி ” இந்தாங்க அக்கா. உங்களுக்கு கிப்ட் ” என்று ஒரு பெட்டியை அவள் கையில் திணித்து மறைந்தாள். தந்தை அறைக்கு வந்த சந்திரா, அந்த பெட்டியைப் பிரிக்க, 

“வெல் டன் சந்திரா. நான் நினைத்ததை விட, நீ வேகமாகவே போற சந்திரா. இப்போ தான் ஆட்டத்தில சூடே பிடிக்குது. ஐ லவ் இட்” என்று எழுதி இருந்த காகிதமும் ஒரு சிடியும் இருந்தது. சிடியை பிலே செய்ய, அவள் எதிர்ப்பாத்தது போலவே, 1.36 மினிட்ஸ் ஓடிய அந்த வீடியோவில், ரக்ஷன் ஒரு நாற்காலியில் மயங்கிய நிலையில் இருந்தான்.

அவனை சுற்றி இரண்டு அடி இடைவெளியில் ரெகார்ட் செய்ய பட்டு இருக்க வேண்டும். மேலும், அவன் இருக்கும் இடத்தை அறியாமல் இருக்க அவனை சுற்றி வெள்ளை நிற திறை இருந்தது. ஏதோ நினைத்தவளாக சந்திரா அந்த வீடியோவை திரும்ப திரும்ப போட்டு பார்த்தாள். எட்டு முறை கேட்டு பார்த்த போது, பியானோ இசையை மட்டுமே கேட்க முடிந்தது. திரும்பவும் வீடியோவை பிளே செய்து, அவள் யூகித்தது போல,அந்த இசையோடு மிக மிக குறைவாக ஒரு குரல் கேட்டது.

அதோடு, “ நெக்ஸ்ட் ? ? டைம் ?? ஒன் ?? ஒன் ?? ஒன் ?? ஒன் ?? ஒன் ?? கேர்ல் ? ? இஸ் ? ? கோயின் ? ? டு பி ? மிஸ்ஸிங் ?? வாட் ?? வில் ?? யு ? ? டு ? ? சந்திரா ? ? “என்று மிகவும் மெதுவாக கம்மியாக நிழல் உருவம் டப்பிங் வாய்ஸில் பாடி இருந்தது. சந்திரா அதை மிகவும் சரியாக கண்டு பிடித்து இருந்தாள். 

அப்போது சரியாக அவள் ஃபாரன்சிக் நண்பர் சேகர் கால் செய்து, “சந்திரா, நீ கொடுக்க லெட்டர் எழுதியது, கண்டிப்பாக ஒரு மருத்துவராக தான் இருக்க முடியும். இட்ஸ் வெரி கர்ஸிவ். அதோட, அந்த எழுத்துக்களோட ஸ்டைல் கண்டிப்பாக ஒரு மருத்துவரால தான் கொண்டு வர முடியும். உன்னோட கேஸ் பத்தி பார்த்தாலும், ஹாஸ்பிடலோட தான் கணக்ட் ஆகி இருக்கு. ஆல் தி பெஸ்ட்” என்று பேசி முடிக்க, தன் தந்தையை கூட பார்க்காமல் அவ்விடத்தை விட்டு சந்திரா சென்றாள். தன் மனதில் தோன்றியவற்றை செயலாக்க விரைந்தாள். 

# # # # # 

சிக்கல்கள் வாழ்வில்
வந்த வண்ணம் 
இருந்தாலும், 
அதற்கான தீர்வுகள்
எப்போதும் எளிமையாகவே
இருக்கும்… 
குழம்பிய குட்டையில்
எப்போதும் மீன் 
பிடிக்க முடியாது! 
மனதில் தெளிவு 
கொண்டால் சிக்கல்கள்
பறந்தேவிடும்! 

# # # # #

வெயிட் அண்ட் வாட்ச்…

அலைகளின் ஓசை அடங்குவதில்லை…

# # # # #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!