அலை ஓசை 7(2)
ஆனால், அந்த தாயால் தன் நினைவு களிலிருந்து முழுமையாக வெளியே வராமல் திணறி கொண்டு இருந்தாள்.
ஆனால், தன் கடமையை நிறைவேற்றும் வெறி நிழல் உருவத்தை தன் கடந்த கால நினைவு களிலிருந்து வெளி வர செய்தது.
பின், தன் அடுத்த நபரை கடத்த மருத்துவமனைக்கு சென்றது. அங்கே இருக்கும் தன் நண்பனை பார்க்க சென்றது. ஆனால், அதன் நண்பர் மிகவும் படபடப்பாக இருந்தான்.
“என்னாச்சு டா, ஏன் இப்படி படபடப்பா இருக்க” என்று நிழல் உருவம் கேட்க,
அதன் கேள்விக்கு பதில் கூறாமல், லேபர் வார்டுக்கு அழைத்து சென்றான். அங்கு ஒரு தாய் பிரசவ வலியில் துடிப்பதை நிழல் உருவம் கண்டது.
“ரொம்ப சீரியஸ் கண்டிஷன் போல இருக்கேடா? ஆனால், நார்மல் டெலிவரிக்கு சான்ஸ் இருக்கு. ஆனால், ஏன் இன்னும் அடென் பண்ணாமல் இருக்கீங்க?” என்று அடுத்த கேள்வி நிழல் உருவம் கேட்டது.
அதற்கு அவன் கூறிய பதில் நிழல் உருவத்தின் ஆத்திரத்தை அதிகரிக்க செய்தது.
“யு ஸ்டுபிட்! டாக்டர் இன்னும் நேரம் போன சிசேரியன் நடக்கனும் என்று வெய்ட் பண்ணினா, அது இரண்டு உயிருக்குமே ஆபத்தாகி போகிடும் என்ற அறிவு கூடவாடா இருக்காது?
பணம் எக்ஸ்ட்ரா வரணும்ங்கறத்துக்காக எதுல விளையாடுறதுன்னு விவசத்த இல்லை? நான் அடென் பண்ணுறேன். எனக்கு ஹெல்ப் பண்ண பிரியாவ அனுப்பு. நீ அந்த நந்திதாவ கடத்தறத பாத்துக்கோ. நான் சொன்ன மாதிரி. புரியுதா? “
அடுத்த ஐந்து நிமிடத்தில் பிரியா , நிழல் உருவம் இரண்டு பேரும் லேபர் வார்டில் இருந்தனர்.
“பிரியா போய் இவங்க ஹஸ்பென்ட் இங்க வர சொல்லுங்க. பி குவிக் “என்று பிரியாவிற்கு கிட்ட தட்ட ஆவர் செய்தது.
“யு கேன் அண்டர்ஷான்ட் இங்கிஷ் ரைட்? “என்று அந்த வடநாட்டு தாய் ஆகும் பெண்ணிடம் கேட்க,
“எஸ் டாக்டர், ஐ கேன்” என்று வலியிலும் நிழல் உருவம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தாள்.
“தட்ஸ் கிரேட். பி ரிலாக்ஸ். டோன்ட் ஸ்டிரன் யுவர்செல்ஃப். பிலீஸ் டு ஃபாலோ வாட் ஐ ஆம் சேயிங்!”
“சூர்… டாக்… டர்…” வலியால் வார்த்தைகள் தெளிவாக கூற முடியாமல் சிரமப்பட்டாள்.
“டாக் வித் யுவர் பேபி இன் யுவர் மதர் டங்க், சிஸ்டர். ஐ நோ, இட்ஸ் டிவிகல்ட் ஃபார் யு டு டாக். எட், ட்ரை யுவர் லெவல் பெஸ்ட் டு ஸ்பீக் வித் யுவர் ஸைல்ட். டெல் யுவர் பேபி, தட் ஹி/ஷி கேன் சீ யு விதின் டென் மினிட்ஸ். இட் வில் கெய்ன் சம் இனர்ஜி டு யுவர் சைல்ட். டு டைவர்ட் யுவர் ஃபிலிங் ஆஃப் பேயின் பை வெல்கமிங் யுவர் சைல்ட் டு திஸ் வேல்ட்” என்று கூறி கொண்டே இருக்க, கைகள் பிரசவம் பார்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.
“டாக்டர், இவங்க ஹஸ்பென்ட் ” என்று பிரியா வர, வந்தவன் தமிழனாக தெரிய, “தமிழ் தெரியுமா? ” என்று நிழல் உருவம் கேட்க, வந்தவனும் “ஆமா டாக்டர் ” என்று பதிலளித்து தான் தமிழன் தான் உறுதிபடுத்தினான்.
“கிரேட், உங்கள் ஒரு கையை உங்க மனைவி கையை புடிச்சுக்குங்க. இன்னொரு கையை அவங்க வயிற்றில் வைங்க. டாக் வித் த பேபி நவ். எவ்வளவு தூரம் உங்கள் மனைவியை காதலிக்கறீங்க என்று சொல்லுங்க. எப்படி நீங்கள் உங்கள் குழந்தை பார்த்துபீங்க என்று சொல்லுங்க. டோன்ட் தின்ங். இட் மே பி வியர்ட். டாக்! ” என்று நிழல் உருவம் ஆணையிட… தாயும் தந்தையும் குழந்தையிடம் பேச ஆரம்பித்தனர்.
“ஒரு உயிரை பூமிக்கு கொண்டு வர போறேன். கடவுளே நீ தான் எனக்கு உதவி புரியனும்” என்று மனதில் வேண்டிய நிழல் உருவம் நார்மல் டெலிவரிக்கான வேலையை செய்தான்.
தாய் தந்தை யின் பாசமான வார்த்தைகளில் பிரியா வின் கண்களில் நீர் திரண்டது.
அவர்களின் பாசத்தில் மூழ்கிய குழந்தை அடம் பிடிக்காமல் சமத்தாக அடுத்த அரை மணி நேரத்தில் உலகிற்கு வந்தது.
“இந்த உலகத்திற்கு உன்னோட ஸ்பரிசம் பட்டு பல தீமைகள் அழிந்து போகட்டும். வெல்கம் டு தி வேல்ட் செல்ல குட்டி! ” என்று நிழல் உருவம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து ஒரு உயிரை வெளி கொணர்ந்த சந்தோஷத்தில் திளைத்தது.
அடுத்த அரை மணி நேரத்தில் வார்டில் இருந்து வெளியே வந்த நிழல் உருவத்தை பார்த்து பிரியா, “எப்படி கிரிடிகல் கேஸ நார்மல் டெலிவரியா மாற்றி னீங்க. ஏதாவது ஒரு உயிர் தான் காப்பாற்ற முடியும் என்ற நிலைய எப்படி மாத்தினீங்க?” என்று கேட்க,
“லவ் கேன் டு மேஜிக்ஸ்.அப்புறம் , நான் தான் ஆப்ரேஷன் பண்ணித வெளிய தெரியாம பார்த்துக்கோ! வாழ்க்கை எனக்கு யாரையும் நம்ப கூடாதுன்னு கத்து கொடுத்தாலும் , உன்னை நான் நம்புறேன்! ” என்று கூறி சென்றது.
# # # # #
இரவு நேரத்தில்
புரண்டு படுத்தால்
தன் செல்வத்துக்கு
பாதகம் வந்திடும்
என்று தூக்கத்தை
தியாகம் செய்து,
நடக்க பழக்கட்டும்
என்று ஆசை குறைந்து
விழுந்து விட
கூடாதே என்று
ஆண்டவனிடம் அவசர
பிராத்தனை வைத்து,
கூறிய எல்லா
அறிவுரைகளையும்
புறக்கணித்த போதும்
என் உணர்வுகளை
புரிந்து கொண்ட
ஒரே ஜீவன்,
கருவறையில் சுமந்த
நாள் முதல் தன்
கல்லறையிலும்
என்னை சுமக்க
விரும்பும் தாய்
அன்றி வேறு யாரோ?
# # # # #
இரவு நேரம், புயலின் காரணமாக புயல் காற்று வீசி கொண்டு இருந்தது. அதை எல்லாம் சட்டை செய்யும் நிலையில் ருத்ரா இல்லை.
தீரன் தன்னை கூப்பிட்ட ஐந்து நிமிடத்தில் சுமார் பத்து கிலோ மீட்டரை கடந்து வந்து, ரெட்டியின் வீட்டை ருத்ரா அடைந்தான்.
தீரன் முதலில் ஜாமர் கொண்டு ரெட்டியின் வீட்டில் உள்ள அனைத்து செல் போன்ஸை ஜாம் செய்து சிக்னல்ஸ் வராத படி செய்தான்.
பின்பு, வீட்டில் உள்ள அனைத்து பைல்ஸையும் செக் செய்ய தன் சக ஊழியர்களின் உதவியுடன் செய்ய ஆரம்பித்தான்.
“என்ன சர், இது என் வீடு என்று நினைச்சீங்களா, இல்லை பரிசோதனை கூடம் என்று நினைச்சீங்களா? ஆளாளுக்கு வந்து சோதனை பண்ணுறீங்க. என்ன சர், என்னோட ஸ்டேடஸ் என்ன? உங்கள் ஹையர் ஆஃபிஸியல்ஸ் கிட்ட பேசவா? என்ன சர், நான் பாட்ல கத்தி கிட்டு இருக்கேன். ஹலோ,ஏன் அதுலாம் எடுக்குறீங்க ” என்று ரெட்டி காட்டு கத்தலாக கத்தி கொண்டு இருந்தான்.
ஆயினும் கடமையே கண்ணாக தீரன், ரெட்டியின் வீட்டை சல்லடையாக தேடி கொண்டு இருந்தனர்.
“தீரன், எனக்கு ஒரு சின்ன ஹெல்ப். ரெட்டிய இன்னும் பத்து நிமிஷத்துக்கு சுவாமி அறை பக்கம் வராமல் பார்த்து கோங்க ” என்று ருத்ரா தீரனின் காதிலே கிசுகிசுக்க.
அதை ஏற்று தீரனும் ரெட்டியை சுவாமி அறை பக்கம் வராமல் பார்த்து கொண்டான்.
அந்த இடை வெளியில், ருத்ரா சுவாமி அறைக்கு சென்று, அங்கு உள்ள அனைத்து படங்களையும் வெளியேற்றினான்.
“சர், நீங்கள் என்ன வேனா பண்ணுங்க. ஆனா, லட்சுமி நரசிம்மர் படத்தை மட்டும் எடுக்க சொல்லாதீர்கள். அது பண்ணினா ஐயா எங்களை கொன்று போட்டுடுவாறு” என்று வேலை செய்யபவன் என் அப்பன் குதுருக்குள் இல்லை என்று கூற,
“போலீஸ் புத்தி எதை செய்ய வேண்டாம் என்று சொல்ல றீங்களோ அதை தான் செய்யும் ” என்ற ருத்ரா, லட்சுமி நரசிம்மர் படத்தை எடுத்து தூர போட்டான்.
அதில் இருந்து ஒரு சாவி விழுந்தது. அதை கையில் பிடித்துக்கொண்டு, படங்கள் மாட்டி இருந்த சுவரை ஓங்கி ஒரு குத்து விட்டான்.
சுவர் விரிசல் விட்டது. பின், ருத்ரா அங்கு வேலை செய்யபவர்களை கொண்டு சுவரை இடிக்க செய்தான்.
சுவருக்கு பின் ஒரு இரும்பு பெட்டி இருந்தது. அதில் தங்க நகைகளும் பணக்கட்டுகளும் பத்திரங்களும் இருந்தன.
சத்தம் கேட்டு வந்த தீரன் அவற்றை பரிசோதிக்க அவை அனைத்தும் பிளாக் மணி என்று அறிந்து அவற்றை கை பற்றினர்.
“ருத்ரா, இதுல இந்த பைல் ல வெறும் நம்பர்ஸா இருக்கு. உங்க கேஸுக்கு யூஸ் ஆகுதா என்று பாருங்கள் ” என்று தீரன் ருத்ராவிடம் ஒரு பைலை கொடுத்தான்.
அதை பெற்ற ருத்ரா தன் ஸ்டேஷனுக்கு சென்று, அதில் இருக்கும் நம்பர்ஸ்க்கான அர்த்தத்தை கண்டு பிடிக்க முயற்சி செய்தான்.
பேப்பரில் சில நம்பர்ஸ் மட்டுமே பல விதங்களாக எழுதப்பட்டிருந்தது. அதை எல்லாம் தன் குறிப்பு நோட்டில் எழுதினான்.
2121311491131514419_1211211122212
191816211316_1122222
2511419-11122
185412516-2112111
1215225-2221
1920513351212-22121122
16114-212
“சீக்ரட் கோட் ஆ தான் இருக்கனும். ஆனால், இதை எப்படி கண்டு பிடிக்கறது. சது க்கு கால் பண்ணி வர சொல்லலாமா? இல்லை, வேண்டாம். ஆல்ரெடி, லேட் நைட் ஆயிடுச்சு. அதோட, புயலால் ரோடே சரியாக இல்லை. வீட்டுக்கு போகி இருப்பா. நாம அங்கயே போலாம்” என்று ருத்ரா அவனே ஒரு யூகம் செய்து சந்திராவின் இல்லம் நோக்கி பயணமானான்.
# # # # #
எதார்த்தம் என்னை
சுக்குநூறாக்கி தூக்கி
எறிந்த போதும்,
ஆபத்துக்களை நான்
அணிகலனாக அணிந்து
மகிழ்ந்த போதும்,
தோல்விகளை படியாக்கி
வெற்றி கல்பாதையில்
முன்னேறிய போதும்,
மனதோரம் தோன்றும்
சிறு பயவுணர்வு உன்
மீது நான் கொண்ட அன்பை,
எனக்கு புரிய வைக்கும்
அதை நீ புரிந்து
கொள்வது எப்போதோ?
# # # # #
அங்கே ஆதி, புயல் ஏற்பட்ட தாக்கத்தால் மக்கள் பதட்டத்தில் இருந்தார்களோ இல்லையோ, பிரகாஷ் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் மிகவும் பதட்டமாக இருந்தான்.
“யார் கேட்டாங்க என்று சொல்லுங்க பிரகாஷ்! “என்றான் ஆதி பதட்டமாக, ஒருவேளை நிழல் உருவமே கேட்டிருந்தால் வசதியாக போயிற்று என்ற நப்பாசையும், நிழல் உருவத்திற்கு உதவும் ஆளாக இருந்தால், அந்த நபரை அதட்டி உருட்டியாவது நிழல் உருவத்தின் நோக்கத்தை அறியலாம் என்ற வேகத்தோடும்!
” நான் ஒன் மன்த் அவுட் ஆஃப் ஸ்டேஷன். ரிபோட்ஸ் பார்க்கும் போது தான் தெரிஞ்சு கேட்டேன். அந்த ரிபோட் ரெடி பண்ண யோகேஷ் இன்னிக்கு லீவ். புயல் காரணமாக எல்லாரும் சீக்கிரம் கிளம்பிடாங்க. வாங்க ஆதி. நாம சிசிடிவி ஃபுடேஜஸ்ல பார்க்கலாம்” என்று வாய் ஆதியிடம் நடந்ததை கூற, கைகளோ ரிபோட்களை சேகரித்து, சிசிடிவி ரெக்கார்ட்ஸை ஆராய்ந்து கொண்டு இருந்தது.
சில நிமிடங்களில், ரிபோர்ட் ரெடி பண்ண கேட்டவர், கமிஷனர் என்று அறிந்து கொண்டனர். உடனே, பிரகாஷ் யோகேஷுக்கு கால் செய்ய, “கமிஷனர் ஏன் இந்த நபர்களின் தகவல்களை கேட்டார் ” என்று கேட்க,
“சாரி பிரகாஷ், உங்க கிட்ட கூட சொல்ல கூடாது என்று சொல்லி இருக்காரு கமிஷனர். அதோட இந்த தகவல் எல்லாம் தப்பான வழிக்காக கேட்கல, எல்லாம் நல்லது பண்ண தான் என்று சொன்னாரு” என்று யோகேஷ் வைத்து விட,
லவுட் ஸ்பீக்கரில் போட்டதால், அதை ஆதியும் கேட்க, ஒரு நிமிடம், ஆதிக்கு தான் கேட்டது அனைத்தும் நம்ப முடியாமல் தவித்தான்.
‘யாருக்கு நல்லது பண்ணுறாறாம், போலிஸுக்கா இல்ல அந்த கடத்தல் நிழல் உருவத்துக்கா’ என்று ஆதி மனதில் நினைத்த போதும்,
பின், வீணாக கற்பனை செய்ய வேண்டாம் என்று கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றான்.
அலுவலகத்திற்கு செல்லும் வழியில், எதற்கும் இருக்கட்டும் என்று, தான் சேகரித்த அனைத்து தகவல்களையும் பைல்களையும் ருத்ரா சந்திரா இருவருக்கும் மெயில் அனுப்பி விட்டு, கமிஷனர் முன் ருத்ர மூர்த்தியாக நின்று கொண்டு இருந்தான்.
” என்ன கமிஷனர் சார் நீங்கள், இப்படி பண்ணிடீங்க. இதுவரை எவ்வளவு நேர்மையான முறையில் ஒவ்வொரு கேஸையும் ஹேண்டில் பண்ண நீங்கள் இப்போ இப்படி ஒரு நம்பிக்கை துரோகம் செஞ்சுடீங்க” என்று ஆதி தன் மன குமுறலை கோபமாக மாற்றி கத்தி கொண்டு இருந்தான்.
பிறகு நிதானமாக பிரகாஷிடம் சென்றதில் இருந்து நடந்த அனைத்தையும் கூற.
” ஆமா ஆதி. நான் தான் அந்த நிழல் உருவத்திற்கு இதுவரை ஹெல்ப் பண்ணி கிட்டு இருக்கேன்” என்று மிகவும் நிதானமாக ஒரு குண்டை ஆதியிடம் கமிஷனர் இறக்கினார்.
‘ஒரு நாளைக்கு எவ்வளவு சாஷ்க்கை தான் நான் தாங்குவேன். ஐயோ !’ என்று தலையில் கை வைத்து அப்படியே ஆதி அமர்ந்து விட்டான்.
# # # # #
வாழ்க்கை போடும்
ஆட்டங்களில் சில
சமயம் நாம் மிகவும்
நம்பும் நபர்களே,
நம் அறிவை
மழுங்க செய்து
நம்மை பகட காயாக்கி
விளையாடும் போது,
வாழ்க்கை மீது
உள்ள நம்பிக்கை
அற்று போகும்
சமயம் வரும் போதும்,
உணர்ந்து கொள்
மனமே நிரந்தரம்
என்று எதுவும்
இல்லை என்று!
இதுவும் ஒரு
நாள் கடந்து
இல்லாமல் போகலாம்!
# # # # #
பள்ளியில் இருந்து வெளியே வந்த நிழல் உருவம் தொடரும் தாய் தன் குழந்தையை காரில் தன் நீண்ட நாள் தோழியின் கல்யாண சன்கீத்துக்கு சென்றாள்.
அங்கு கல்யாணத்திற்கே உரிய கேளிக்கைகளில் சிறிது நேரம் தன் சொந்த வாழ்க்கையை மறந்தாள். நண்பர்கள் கூடினாலே அங்கு சந்தோஷத்திற்கு குறை ஏது?
பிறகு, ஆடல் பாடல் தொடங்க,தாய் அதில் கலந்து கொள்ளாமல், ஆடுபவர்களை உற்சாக படித்து கொண்டு இருந்தாள்.
அவளை தொடரும் நிழல் உருவமும் அந்த இடத்திற்குவந்தது. என்ன நினைத்ததோ, அவள் கை பற்றி மேடையில் ஆட ஆரம்பித்தது.
முதலில் அந்த நிழல் உருவத்திடம் இருந்து தன்னை விடுபட முயற்சி செய்தாள். பின், அந்த நிழல் உருவத்தின் ஸ்பரிசமும் அதன் பார்வையும் அவளை அவள் கட்டு பாட்டில் இருந்து இழக்க செய்தது.
தன் ஆண் நண்பர்களிடம் இருந்து விலகும் அந்த தாய், நிழல் உருவத்தின் கண்களில் காந்த சக்தியால் அதனுடன் ஆடினாள். மிகவும் நெருக்கமாக, அதில் காமம் இல்லை. காதலும் அன்பும் அக்கறையும் பாசமும் மட்டுமே இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு கண்ட காதலர்களின் சந்தோஷம் மட்டுமே இருந்தது. நேரம் தெரியாமல் ஆடி கொண்டே இருந்தனர்.
அன்று நடந்த அளவுக்கு அதிகமாக மன அழுத்தாலும் நெடுநாள் கழித்து நிறைய நேரம் ஆடியதாலும் அந்த தாயிற்கு உடலும் மனமும் சோர்ந்து மயக்கமானாள்.
அவளை கையில் ஏந்தி அவள் வீட்டிற்கு நிழல் உருவம் அழைத்து சென்றது.
அவள் அறையில் அவள் படுக்கையில் படுக்க வைத்து நிழல் உருவம் வெளியே வர, அவள் குழந்தை இருளின் காரணத்தால் நெடியவன் என்று நினைத்து ” டாடி” என்று அழைத்து நிழல் உருவத்தை கட்டி அணைத்தது.
“அம்மா மட்டுமே தூங்க வைப்பீங்களா, என்ன யாரு தூங்க வைப்பாங்க?நீங்கள் தான! அப்போது வாங்க. தாலாட்டு எல்லாம் பாடி என்னை தூங்க வைங்க. வாங்க வாங்க” என்று குழந்தை அந்த நிழல் உருவத்தை கட்டி அணைத்து கொண்டு பேசி கொண்டு இருந்தது.
மயக்கத்தில் இருந்து வெளியே வந்த தாய், அவள் இருக்கும் இடத்தை உணர முடியாமல் சிரமப்பட்டாள். பிறகு, ஒரு போட்டோவை கையில் எடுத்து நினைவுகளை தன் மனதில் ஓட்ட ஆரம்பித்தாள்.
குழந்தையையும் தாயையும் தேடி வந்த நெடியவன், அந்த தாய் தன் கையில் ஒரு போட்டோவை அழுதுகொண்டு இருப்பதை பார்த்து அவளிடம் சென்றான்.
ஆனால், அந்த தாயோ அவன் வருவதை கூட அறியாமல் தன் கையில் இருந்த போட்டோவையே பார்த்து கொண்டு இருந்தாள். அவள் கண்களில் மட்டும் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.
அந்த போட்டோவை கையில் எடுத்த அந்த நெடியவன் அதில் எழுதிய வரிகளை படிக்க துவங்கினான்,
கண்ணே உன்னை
கருவுற்றிருக்கும்
வேளையிலே,
அந்த கடற்கரையில்
அழகிய முழு
நிலவொளியில்
கை கோர்த்து
சென்றோம் நானும்
என்னவனும்…
கரையில் அமர்ந்து
காதலுடன் என்
கணவரை பார்க்கையில்
அவனது பார்வையோ
படகில் இருந்தது…
அப்போது தான் புரிந்தது..
நடு இரவில் நிலவு
ஒளியில் படகில்
பயணம் செய்ய
வேண்டும் என்ற ,
என் நீண்ட நாள்
கனவை நினைவாக்கவே
அழைத்து வந்து
இருக்கிறான் என்
காதலை திருடிய கள்வன்…
படகில் பயணிக்கும்
வேளையிலே என்
கண்ணானவரை கட்டி
அணைத்து காதல்
மொழி பேசியதும்…
அந்நேரத்தில் என்
கருவிலிருந்த உன்னிடம்
உன் தந்தை எனக்கு
அளித்த இந்த
அழகிய பரிசுகளை
பற்றி பகிர்ந்து
கொண்டதும் உனக்கு
நினைவு இருக்கிறதா
என் கண்மணி?
இப்படி என் காதலில்
அவனும் அவன்
காதலில் நானும்
திளைத்து இருந்த
ஏகாந்த நிலையில்…
நாங்கள் ரசிக்க
வேண்டிய நிலவு
ஒளியும் கடலையும்…
எங்கள் காதலை
ரசித்து கொண்டு
இருந்தது…
அன்று அளவில்லா
ஆனந்ததில் திளைத்து
இருந்த எனக்கு
தெரியவில்லை…
அது தான், அவன்
என்னுடன் இருக்கும்
கடைசி நேரம் என்று!
இன்றும் முழு
நிலவொளியில்
அதே படகில் எங்கள்
காதல் பரிசாக
அந்த கடவுள்
தந்த உன்னுடன்
பயணிக்கிறேன்…
என் மனம் கவர்ந்த
மன்னவனின்
நினைவுகளாவது
என்னுடன் இருக்க
வேண்டும் என்பதற்காக!
அந்த கவிதையை படித்த நெடியவன் அந்த ஒரு நாளில் பலர் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை நினைக்க ஆரம்பித்தான்.
அப்போது அவன் காதுகளில் தாலாட்டு பாடல் ஒலித்தது. அந்த நிழல் உருவம் குழந்தை கேட்டதற்காக,
ஸ்ரீ இளஞ்சேயே ஆராரோ
சேமித்த சிரிப்பே ஆராரோ
படிக விழியில் நீ பார்த்தால்
முடியும் துயரம் ஆராரோ
உன் சிறு கையின் அசைவினிலே
என் பூமி சுழன்றிடும் ஆராரோ
உன் ஓர் இதயத் துடிப்பினிலே
என் காலம் அடங்கிடும் ஆராரோ
ம்…ம்…ம்…ம்.. ஆராரோ
ம்…ம்…ம்…ம்.. ஆராரோ
ம்…ம்…ம்…ம்… கண்ணே நீ
ஆளப் பிறந்தவள் ஆராரோ
மண்ணில் தோன்றும்
உயிருக்கு எல்லாம்
ஏதோ அர்த்தம் இருக்குமடா
எந்தன் அர்த்தம் நீதானே
எந்தன் அந்தம் நீதானே
இந்த வரத்தை நான் பெறவே
இத்தவத்தை புரிந்தேன் ஆராரோ
நித்தில நிலவே ஆராரோ
நித்திரை கொள்வாய் ஆராரோ
நித்தில நிலவே ஆராரோ
நித்தியம் நீயே ஆராரோ
என்று பாட,
குரலின் இனிமையாலோ அல்லது நிழல் உருவத்தின் அருகாமை தந்த சுகத்தாலோ குழந்தை நிழல் உருவத்தை கட்டி கொண்டு உறங்கியது.
கிட்ட தட்ட இரண்டு வருட கனவு நிகழ்ந்த சந்தோஷத்தில், கண்ணில் கண்ணீரும் உதட்டில் சிரிப்பும் நிழல் உருவம் மகிழ்ச்சியில் திளைத்தது.
தன்னை சுற்றி நடக்கும் எதையும் அறியாமல் தன் சிந்தனையில் மட்டுமே இருக்கும் அந்த தாயிற்கு நிழல் உருவத்தின் தாலாட்டு பாட்டு கேட்கவில்லை.
ஆனால், அதை கேட்ட நெடியவன் பாட்டு வந்த அறைக்கு செல்ல அங்கு அந்த நிழல் உருவத்தை கண்டு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இன்னொரு பக்கம் ஆச்சரியமாக உணர்ந்தான்.
நெடுநாள் கழித்து அந்த நிழல் உருவத்தை கண்ட அந்த நெடியவன் கலவையான உணர்வுகளால் இருந்ததால், அவன் தாலாட்டு பாட்டை நிறுத்த வில்லை.
அந்த அழகான மாளிகையில் நிழல் உருவத்தின் தாலாட்டு பாட்டு மட்டுமே எதிர் ஒலித்துக் கொண்டு இருந்தது.
அந்த அழகான மாளிகையில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உணர்வுகளில் இருந்தனர்.
கடந்த காலத்தை நினைத்து ஒருவர்.
நிகழ்கால நிகழ்வை நம்ப முடியாமல் ஒருவர். நிகழ்கால நினைவை சந்தோஷமாக அனுபவிக்கும் ஒருவர்.
புயலுக்கு பின் அமைதி என்று கூறுவது போல, புயலாக இருந்த நிழல் உருவத்தின் மனம் இப்போது அமைதியான தென்றலாக மாறியது.
# # # # #