அலை ஓசை – 9

sea2-f1838bde

அலை ஓசை – 9

அலை ஓசை – 9

அழகே உருவான , காதலர்கள் போற்றும் தேம்ஸ் நதி ஓடும் லண்டன் மாநகரில், எட்டு அடுக்கு மாடியில், அந்த நெடியவன் தன் அறையில் தனிமையில் கையில் கோப்பையோடு, கண்களில் கண்ணீரோடு அமர்ந்து இருந்தான். அவனது கண்கள் அத்தனை கண்ணீரை எங்கு மறைத்து வைத்திருந்ததோ தெரியவில்லை. 

தன் தம்பியின் இறந்த நாள் என்று அழுகிறானா? இல்லை தன் தம்பியின் இறப்பிற்கு தன் நண்பனே காரணமாகி விட்டதை எண்ணி அழுகிறானா? இல்லை தன்னை எண்ணி தன் இயலாமையை எண்ணி அழுகிறானா? அவனே அறிய மாட்டான். 

அவனது கைப்பேசி நூற்றியெட்டாவது முறையாக அடித்து ஓய்ந்தது. அழைப்பது அவன் காதலி தான். அவனும் அறிவான். அவன் எடுக்க மாட்டான், எடுத்தால் அவளிடம் தன் கவலையை கொட்டி தீர்க்க வேண்டும், தீர்த்து விட்டால் அவனது மனபாரம் குறையலாம். ஆனால் அவளது மனபாரம் கூடுமே என்ற அவனது நிலையையும் அவள் அறிவாள்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அவள் அவனது தொடர்பை நிறுத்தி இருந்தால், அவனது வேண்டுகோளை ஏற்று. ஆனால், இன்று மட்டும் அழைத்து விடுவாள். அவனது மனகுறையை போக்க. தன்னிடம் பேசுவான் என்ற அவளது முயற்சி தோல்வி அடைந்தாலும், நெடியவன் தன் அழுகையை நிறுத்திருந்தான். 

“ஐ ஆம் ஃபைன் டா. ஸ்டாப் காலிங் மீ. போய் உன் வேலையை பாரு கண்மணி” என்ற மெசேஜை தட்டி விட்டு, தன் முகத்தை சீர் செய்து, தன் அலுவல் வேலையை பார்க்க சென்றான். 

இங்கே இவள் அவனது மனதை அறிந்தால் போல், அவனது வேலையை பார்க்க சென்று விட்டாள், அவன் சரியாகி விடுவான் என்ற நம்பிக்கையில். காதல் அத்தனை வலிமையானதோ? 

# # # # # 

உன்னை தொடர்பு கொள்ளும்
ஒவ்வொரு முறையும் 
துண்டிக்க படுகிறேன்! 
நீ இன்றி நீளும்
ஒவ்வொரு பொழுதும்
உன் நினைவால் 
தண்டிக்க படுகிறேன்! 
என் இதய துடிப்பின்
ஓசையை விட 
உன்னை பற்றிய 
ஞாபகங்களின் ஓசை
சற்று அதிகமாகவே
கேட்கிறது என்
தனிமையான உலகில்! 
நிழலோடு வாழ்ந்து
நிஜத்தோடு வீழ்ந்து
மறந்தும் மறக்காமல்
கடந்து போய்கிறேன்! 
நீ இல்லாத வாழ்க்கையை
தினம் தினம் போலியாய்! 

# # # # # 

புயலின் அறிகுறிகள் மெல்ல மெல்ல அதிகரித்து கொண்டே இருந்தது. ஆதி, ருத்ரா இருவரும் தாங்கள் எடுத்த வேலையையும் தீவிரமாக செய்து கொண்டு இருந்தனர்.

ரெட்டியின் வீட்டை சோதிக்க சென்ற ருத்ரா கிளம்புவதற்கு  ஆயத்த மாகும் போது,  அவன் கண்ணிலும் கருத்திலும் சிலது படிந்தது. அவனுக்கு ரெட்டியின் வீட்டில் சுவாமி அறையில் இருந்து உள் நோக்கி ஒரு அறை செல்லுவது போல ஒரு பிரமை தோன்றியது.

அதனால்,  ருத்ரா சுவாமி அறைக்கு சென்றான்.  ருத்ரா சுவாமி அறைக்கு செல்லுவதை கண்ட ரெட்டி பதறினான். அதுவரை கத்தி கொண்டு இருந்த ரெட்டி, சுவாமி அறைக்கு செல்லுவதை கண்ட பிறகு  பதட்டமானதை கண்ட ருத்ராவின் போலீஸ் மூளை குறித்து கொண்டது.

சுவாமி அறையில் ஏதோ ஒன்று உள்ளது என்று தீர்மானம் செய்தான்.

“என்ன சர்,எதுக்கு சுவாமி அறைக்குலாம் வரீங்க.  இங்க நீங்கள் சோதனை பண்ண எதுவுமே இல்லை.  சுவாமி படங்கள் மட்டும் தான் இருக்கு,  போங்க சர் வெளியே” என்று ருத்ராவை விரட்டுவதில் ஈடுபட்டான்.

“எதுக்கு இத்தனை டென்சன் ரெட்டி?  இந்த சுவாமி படங்கள் எல்லாம் ரொம்ப பழமையானதாக இருக்கு. எல்லாமே ரொம்ப அழகா இருக்கு. எல்லாமே ரவி  வர்மா ஓவியம் மாதிரி இருக்கே. எனக்கு ரவி வர்மா ஓவியம் என்றால் ரொம்ப பிடிக்கும் ரெட்டி. நான் போட்டோஸ்  எடுத்துகிட்டு போய்டுறேன் ” என்று கூறி கொண்டே ரெட்டியின் முக பாவனைகளை கவனித்து கொண்டு இருந்தான்.

முதலில் பதட்டமாக இருந்த ரெட்டி, ரவி வர்மா ஓவியம் என்றவுடன் கர்வமாக மாறி பின் போட்டோஸ்  எடுத்துகிட்டு போய்டுறேன் என்றவுடன் மறுபடியும் கலவரமாக மாறியது.

“என்ன ரெட்டி,  போட்டோஸ் தான எடுத்துக்க போறேன்.  என்னவோ வங்கி கணக்குகளை கேக்குறதை போல இப்படி கலவரமா பேசுறீங்க ” என்று ருத்ராவின் உதடுகள் ரெட்டிக்கு பதில் சொல்லி கொண்டு இருந்தாலும் கைகள் சுவாமி அறையை விதவிதமாக படம் பிடித்துக் கொண்டு இருந்தது.

“என்ன சர்,   உங்களோட ரொம்ப ரோதனையாக போச்சு. வீட்டை செக் பண்ண வந்தவங்க அது மட்டும் பண்ணிட்டு போக வேண்டிய தானே, எதுக்கு போட்டோ அது இது என்று சீன் போடறீங்க.  இது வீடு என்று நினைச்சீங்களா இல்லை வேறு எதோ ஒன்று என்று நினைச்சீங்களா? ” என்று கத்தி கூச்சலிட்டான். 

முன்னுக்கு பின் முரணாக பேசும் ரெட்டியின் நடவடிக்கையில் ருத்ராவின் சந்தேகம் வலு பெற்றது. அங்கே ருத்ரா ரெட்டி வீட்டில் உள்ள சுவாமி அறையை முழுவதும் போட்டோ எடுத்த பிறகே,  அவ்வீட்டை விட்டு வெளியே வந்தான்.

பிறகு,  ஸ்டேஷனுக்கு வந்த ருத்ரா ரெட்டி வீட்டில் எடுத்த போட்டோ அனைத்தையும் வரிசையாக எடுத்து பார்க்கலானான். சில நொடிகளிலே,  அவன் எதிர்ப் பார்த்தது போலவே,  ஒரு படத்திற்கு பின் ஒரு அறையின் கதவு போல தோன்றியது. ருத்ரா மேலும் உன்னிப்பாக பார்க்க போக,  அவனுக்கு இன்கம் டேக்ஸிடம் இருந்து கால் வந்தது.

“ருத்ரா,  நாங்க ரெட்டி வீட்டை ரைட் பண்ண போறோம்.  நீங்கள் வந்தீங்கனா.  உங்களுக்கு தேவையான ஏதாவது க்லூஸ் கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன். சோ, கம் டூ ரெட்டிஸ் ஹவுஸ் “என்று பேசி முடிக்க, 

” ரெட்டி,  இன்னிக்கு நீ என் கிட்ட வசமாக சிக்கினடா. இன்னிக்கு அந்த சுவாமி அறையில் இருக்கும் அந்த சிதம்பர ரகசியத்தை நான் கண்டு பிடிக்கிறேன்” என்று கூறி கொண்டு இருந்தான்.

# # # # #

காண்டீபம் எடுக்கும்
அர்ஜுனுக்கு சாரதியாக, 
பாலம் கட்டும்
ராமனுக்கு அணிலாக, 
உன்னோடு நான்
இருப்பேன் என்றும், 
கவலை கொள்ளாதே
தர்மம் ஒருபோதும், 
இருட்டில் ஒளிந்து
இருக்காது! 

# # # # # 

அதே நேரத்தில், பிரகாஷைக் காண வந்த ஆதி,  இந்த கேஸுக்கான மொத்த டிடெய்ல்ஸையும்  தான் கண்டு பிடித்த வாட்ஸ்அப் குரூப் மெம்பெர்ஸின் விவரத்தையும் கூறி,  அந்த போட்டோ அடங்கிய பைலை கொடுக்க,  “பிரகாஷ்,  உங்களுக்கு இந்த கேஸ் ஓட எமர்ஜென்சி புரியும் என்று நினைக்கிறேன்.

ஸோ, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எனக்கு இதில இருக்கிறவங்களோட மொத்த ஹிஸ்டரியும் தெரியனும்.என்ன படிச்சுக்காங்க? எதாவது தொழில் செய்யுறாங்களா? இவங்களுக்குள்ள எதாவது தொடர்பு இருக்கா? என்று எல்லாமே தெரியனும். அதோட ரொம்ப கான்ஃபிடென்ஷியல் ” என்று கேஸுக்கான முக்கியத்துவத்தை புரிய வைக்க முயல, 

அந்த பைலை பார்த்த பிரகாஷ் அதிர்ச்சியானான்.  “என்ன ஆதி இது?ஒரு வாரம் முன்னாடி தான் இதே மாதிரி ஒரு பைலை கொடுத்து,  இவங்க டிடெல்ஸ் எல்லாம் வேண்டும் என்று ஒருத்தவங்க வந்து கேட்டாங்க. நீங்களும் இதே வந்து கேட்குறீங்க? ” என்று கூற,  இதை கேட்ட ஆதி அதற்கு மேல் அதிர்ச்சியானான். 

# # # # #

புரியாத புதிராகவே
வாழ்க்கை இருந்தால் தான், 
அந்த வாழ்வின் 
சிக்கலான முடிச்சுகளை
அவிழ்க்க உன்
முழு முயற்சியையும்
செய்வாய் நண்பாய்! 
வாழ்க்கை சிக்கலாக
இருக்கிறது என்று
வருந்தாதே! 
தேடல்கள் தொடரும் 
வரை தான் உன் 
அறிவும் விரிவடையும்! 
சிக்கல் இருந்தால்
தான் சுவாரசியமும்
கூடும்! 

# # # # #

ஆதி,  ருத்ரா வின் நடவடிக்கைகளை நோட்டமிட்ட நிழல் உருவம், ” இப்போ தான் இந்த கேஸ் நான் நினைச்ச மாதிரி போகுது, பரவாயில்லை! பசங்க,  தீவிரமாக தான் இருக்காங்க. கேம் இப்போது தான் நல்லா சூடு பிடிக்குது.ஆனால்,  இந்த சந்திரா எங்கே போனா? ” என்று சந்திராவை எண்ணி சிந்திக்க ஆரம்பித்தது.

பிறகு,  தன் அடுத்த கடத்தலுக்காக தனது திட்டத்தை யோசிக்க ஆரம்பித்தது. எனினும்,  சந்திரா எங்கே,என்ன பண்ணி கொண்டு இருக்கிறாள் என்று தெரியாமல், அந்த நிழல் உருவத்தின் மண்டை குடைந்து கொண்டு இருந்தது.

பிறகு,  தான் வழக்கமாக செல்லும் பள்ளி வளாகத்தில் சென்றது. அந்த பள்ளி வளாகத்தில் ஆனுவல் டே செலிபிரேஷன்ஸ் என்ற அறிவிப்பு போட்ட பலகையை பார்த்து,  முதல் முறையாக அந்த பள்ளி வளாகத்தில் உள் சென்றது. 

‘மழை வேளையில் இவர்களுக்கு எதுக்கு இந்த கொண்டாட்டம், இந்த மழையில் நனையாது எப்படி ஏற்பாடு செய்திருப்பார்கள்? ‘  என்று நிழல் உருவத்தின் மனதில் ஆயிரத்தெட்டு எண்ணவோட்டங்களோடு ஓடினாலும், கண்கள் சின்னஞ்சிறு சிட்டை மட்டுமே தேடி அலைந்தது.

மழை நீரின் ஓசை கூட கேட்காமல், மூவாயிரம் நபர்கள் தாராளமாக உட்கார்ந்து, நிகழ்வுகளை அனுபவிக்கும் வண்ணம் அமைக்கப்பட்ட பள்ளி வளாகத்தின் ஆடிடோரியத்தில் அந்த பள்ளியில் பல குழந்தைகளும் தங்கள் திறமைகளை பல போட்டிகளின் மூலமாக வெளிப்படுத்தி கொண்டு இருந்திருந்தனர்.

பல நாட்களுக்கு பிறகு அந்த தாயின் உதட்டில் சிரிப்பு தவழ்ந்தது. குழந்தைகளின் போட்டிகள் முடிந்தவுடன் அங்கு வந்த பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடைபெற்றன.

“மியூசிகல் சேர், ட்ரெஷர் ஹன்ட்” போன்ற பல போட்டிகளை நடத்தினர்.  கடைசியாக ஒரு தமிழ் மேஷப் பாடலை குழலிசையில் ஓட விட்டனர்.

??????????????????????????

நீயும் நானும் 
சேர்ந்தே செல்லும்
நேரமே, 
நீலம் கூட
வானில் இல்லை
எங்கும் வெள்ளை 
மேகமே, 

முன் அந்தி 
சாரல் நீ , 
முன் ஜென்ம 
தேடல் நீ, 
நான் தூங்கும் நேரத்தில் 
தொலைதூரத்தில் வரும் 
பாடல் நீ, 
பூ பூத்த 
சாலை நீ, 

மலர்களை அள்ளி வந்து
மகிழ்வுடன் கையில் தந்து, 
மனதினை பகிர்ந்திடவே
ஆசை கொள்கின்றேன்… 

??????????????????????????

“பாட்டு நல்லா கேட்டு கிட்டீங்கலா அம்மாக்களே.  இப்போ அந்த பாடலோட  குழலிசைக்கான பாடல் வரிகளை நீங்க அழகா பாடல் மாற மாற அப்படியே பாடனும். 

அதே டியூன்ல அப்படியே பாடணும், பாடுறவங்களுக்கு தான் பெஸ்ட் அம்மாக்கான ப்ரைஸ் கிடைக்கும். அவர்களோட குழந்தைகளுக்கு சிறப்பான பரிசும் காத்திருக்கு ” என்று மேடையில் போட்டிக்கான அறிவிப்பு கூற, எல்லா குழந்தைகளும் தங்கள் தாய்மார்களை போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர்.

எல்லா குழந்தைகளின் தாய்மார்களும் தங்கள் முயற்சி செய்தனர். ஆனால்,  எவராலும் மேஷப் பாடலை அதே வரிசைக்கு பாட முடியவில்லை.எல்லாருமே இந்த போட்டியில் யாருமே ஜெயிக்க முடியாது என்று நினைத்து கொண்டு இருந்த போது, நம் நிழல் உருவம் பின் தொடரும் அந்த தாயும் மேடையில் ஏறினாள்.

வேறு வரிசையில் பாடல்கள் ஒலிக்கப்பட்டன. 

??????????????????????????

இது நாள் வரையில் 
உலகில் எதுவும்
அழகில்லை என்றேன்
என்னை ஓங்கி 
அறைந்தாளே! 

குயில் கூச்சத்தால்
நெடில் வாசல்தான்
ஒரு பாடல் 
அறிந்தாளே!

அந்த வானம் பக்கம்
இந்த பூமி சொர்க்கம்
காற்றில் உலவும் ஒரு
காற்றாகிறோம்! 

பூக்களே சற்று 
ஓய்வெடுங்கள் 
அவள் வந்து விட்டாள்
அவள் வந்து விட்டாள்! 

அழகியே!

ஓ வெண்ணிலா!

நிலா காய்கிறது 
நிலம் தேய்கிறது 
யாரும் ரசிக்கவில்லையே! 

இனி கண் தூங்கலாம்
கைகள் தூங்காதுக
ஒரு தாலிக்கு முன்பாக
தாலாட்டு வைக்காதிக! 

??????????????????????????

அந்த பள்ளி வளாகத்தில் உள்ள அனைவரும் அந்த தாயின் குரலில் மயங்கினர் என்றே சொல்லலாம். அச்சு அசலாக அதே பாணியில் பாடினாள்.  அவள் குரல் அனைவர் காதுகளிலும் எதிர் ஒளித்து கொண்டே இருந்தது. மெஸ்மரைஸிங் என்ற சொல்லிற்கு முழுமையான அர்த்தத்தை அங்கு உள்ள அனைவரும் அறிந்தனர்.

அனைவரும் அவள் குரலில் மயங்கி இருக்க,  இருவர் மட்டும் அந்த மேஷப் பாடல் செய்யும் நிகழ்வை நினைவு கூர்ந்தனர்.  இருவருமே பலத்த கரகோஷத்தில் தான் தங்கள் நினைவுகளிலிருந்து வெளியே வந்தனர்.

# # # # #

நீ என்னை விட்டு
தொலைந்த போதும், 
நிலத்தில் விழும்
நிழலாகத் தொடர்கிறது, 
உன் நினைவுகள்
கனவுகளாக!
உன் நினைவுகளிடம்
கூறிவிடு அன்பே! 
உனக்காக மட்டுமே 
கல்லறைத் தேடி
போகாமல் உயிரோடு
வாழ்கிறேன் என்று! 

# # # # #

வெயிட் அண்ட் வாட்ச்…

அலைகளின் ஓசை அடங்குவதில்லை…

# # # # #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!