அழகிய தமிழ் மகள் 33

அழகிய தமிழ் மகள் 33

அழகிய தமிழ் மகள் Epilogue

ஜீவாவின் கண்ணில் போன ஜீவன் மீண்டும் சுடர் விட்டு ஒளிர்ந்தது.

“டேய் ஆதி!… சாம் உன்னோட கையை இறுக்கி புடிச்சிருக்க டா!… அப்ப அவளுக்கு கான்ஷியஸ் வந்திடுச்சுன்னு தானே அர்த்தம்” என்றவன் ஹாஸ்பிடல் என்றும் பாராமல் சந்தோஷத்தில் சத்தமாக கத்த. ஆதியின் உயர்ந்து இருந்த இடது கையை மயக்கத்திலும் இறுக்கி பிடித்திருந்தாள் யுக்தா…

“எம் பொண்டாட்டி என்னை தனிய விட்டு போகமாட்டானு, நா தான் சொன்னேனே டா!! அவ எப்பவும் சொன்ன வார்த்தையை காப்பாத்துவா. அவ திரும்பி என்கிட்ட வருவான்னு எனக்கு தெரியும்” என்றவன் தன் கையை பிடித்திருந்த யுக்தா கையில் தன் முரட்டு இதழ்களை மென்மையாக பதித்தான்.

முழுதாக எட்டு மணிநேரம் எடுத்தது யுக்தா கண்விழித்து சுய உணர்வுக்கு வர… மெதுவாக கண்விழித்தவள் முன் மொத்த குடும்பமும் அழுது வடிந்து நிற்க… ஆதித் மட்டும் அடக்க முடியாத கோவத்தை தான் கண்களில் தேக்கி வைத்து அவனவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

சிவகாமி பாட்டி வேகமாக யுக்தா அருகில் வந்து அவள் காதை மெதுவாக பிடித்து திருகியாவர், “ஏன்டி ராங்கி? நீ அடங்கவே மாட்டியா டி? வீட்ல இத்தனை பேர் இருக்கோம். ஒன்னுக்கு ஐஞ்சு அண்ணங்காரணுங்க, செக்கு உலக்கை மாதிரி புருஷன் இருக்கும் போது, உன்னை யாருடி அந்த ஏழவெடுத்தவளை பாக்க தனிய போகச் சொன்னது. நீ பாட்டுக்கு இங்க வந்து கம்முன்னு படுத்துட்டீயே? எங்களை பத்தி ஒரு நிமிஷமாச்சும் யோச்சியாடி நீ? எங்களை விடு, நீ இல்லாட்டி ஆதி நெலம என்ன ஆகுன்னு யோச்சி பாத்திய டி? என்றவர் அதற்கு மேல் பேச முடியாமல் வாய் பொத்தி அழ… யுக்தா கண்களை மெதுவாக இமைத்தபடி பாட்டியை பார்த்தவள், “ஏய் கெழவி இப்ப நீ எதுக்கு அழறன்னு எனக்கு புரியலயே? நா இப்டி படுத்துகெடக்கேன்னு அழறீய? இல்ல அய்யோ! இவ திரும்பி வந்துட்டாளே! இனி நம்ம புருஷனை எப்டி இவகிட்ட இருந்து காப்பாத்துறதுனு அழறீய?…” என்று தன் வலியை மறைத்து பாட்டியை கேலி செய்து சிரிக்க, பாட்டி அவள் தலையில் செல்லமாக கொட்டியவர், “வாயை கழுவு டி முதல்ல. எங்க வீட்டு காவல் தெய்வம் எங்களுக்கு குடுத்த வரம் டி நீ… அவ்ளோ சீக்கிரம் அந்த சாமி எங்ககிட்ட இருந்து உன்னை கூட்டி போக மாட்டாருன்னு எனக்குத் தெரியும். எம் புருஷனை உன்கிட்ட இருந்து எப்டி காப்பாத்தனும்னும் எனக்கு தெரியும்” என்றவர் கண்ணில் அவர் கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீர் முத்துக்கள் கொட்டி விட, “ஏன் டி இப்டி எல்லாம் பண்ற..?? எங்களை பத்தி நீ யோசிக்கவே மாட்டிய?” என்று கோபத்தில் ஆரம்பித்து ஆதங்கத்தில் முடிக்க.

“எனக்கு வேற விழி இல்ல பாட்டி. ஒளிஞ்சு வெளயாடுனா ப்ரீத்திய பிடிக்க இது ஒன்னு தான் வழின்னு எனக்கு தோனுச்சு. நா சந்தோஷமா இருக்குறதை பாத்த கண்டிப்பா அவளால பொறுத்துக்க முடியாது. நிச்சயம் அவ வெளிய வருவா… அப்டி அவ வரும்போது அவ என்னை நெருங்க முடியாத படி உங்க பேரன் பெரிய‌ பாதுக்காப்பு கோட்டையே என்னை சுத்தி எழுப்பி வச்சிட்டான். அந்த ப்ரீத்தி ஒரு சைக்கோ பாட்டி. நா கெடைக்காத கோவத்தை கண்டிப்பா நம்ம வீட்டு ஆளுங்க மேல தான் காமிப்பா, தினமும் அவ என்ன செய்வாளோ? ஏது செய்வாளோன்னு? என்னால யோச்சிட்டு இருக்க முடியாது. அதனால தான் இப்டி சென்சேன். ப்ரீத்தியால நம்ம வீட்ல யாருக்காவது ஒரு சின்ன கீறல் விழுந்திருந்த கூட என்னால என்னையே மன்னிச்சிருக்க முடியாது பாட்டி, அதான் இப்டி” என்றவள் திரும்பி ஆதியை பார்த்து, “எனக்கு தெரியும் பாட்டி, எம் புருஷன் என் கூட இருக்க வரை… எமனே எம் பக்கம் வர பதறுவான். இவ சாதரண சைக்கோ வுமன் பாட்டி. அதெல்லாம் ஆதி தட்டி தூக்கிடுவான்னு தெரிஞ்சு தான் நான் இந்த ரிஸ்க்கை எடுத்தேன்” என்று தன்னிலையை விலக்க… யாருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. எப்படியோ யுக்தா உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் திரும்பி வந்ததே போதும் என்று அனைவரும் அமைதியாகி விட.. ஆதி இன்னமும் யுக்தாவை முறைத்துக் கொண்டு தான் இருந்தான்.

யுக்தா மெலிதாக இதழ் வளைத்து சிரித்தவள் கண்களால் தன்னவனை அருகில் அழைக்க, ஆதி கடுகடுத்த முகத்துடன் அவள் அருகில் வந்து நிற்க அவன் கையை இறுக்கிப் பற்றிக்கொண்ட யுக்தா, ஆதி முகத்தையே இமைக்காமல் பார்த்திருக்க! இனி அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்து, அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க மொத்த குடும்பமும் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர்.

ஆதி யுக்தாவை முறைத்தபடி இருக்க… யுக்தா இதுவரை வலி தேங்கி இருந்த கண்களில் காதலை தேக்கி வைத்து அவனை பார்த்திருக்க, அவளின் அந்த பனிப்பார்வையின் குளுமை தாங்க முடியாமல் ஆதியின் கோபத் தீ கொஞ்ச கொஞ்சமாய் குளிர்ந்து கொண்டிருந்தது. நிமிடங்க பட்டாம்பூச்சியாய் பறக்க, “ஐ லவ் யூ டா புருஷா” என்று வலியோடு நலிந்து வந்த யுக்தாவின் குரலில் மொத்தமாக கரைந்தே விட்டான் அவள் கணவன். கலங்கிய விழிகளோடு கட்டில் படுத்திருந்தவளை இறுக்கி அணைத்தவன், “ப்ளீஸ் டி இனிமே இப்படி எதும் செய்யாத..‌. இன்னொரு முறை உன்னை இப்படி பாக்குற தைரியம் எனக்கு இல்ல யுகி” என்றவன் தன்னவளிள் அணைப்பில் குழந்தையென அழ ஆரம்பிக்க. அவனை இருக்கைகளில் வாரியணைத்துக் கொண்டாள் அந்த காதல்காரி.

“ப்ரீத்தி?” என்று யுக்தா மெதுவாக கேட்க.

“நா அவளை ஒன்னு பண்ணல யுகி… அவ உன்னோட இறை. நீ தான் அவளை வேட்டையாடனும். ஜானுவும், ராஷ்மியும் நா உன்னோட ஹாஸ்பிடல் வந்த கேப்ல அவளை தூக்கிட்டாங்க… அந்த ப்ரீத்தி உன் கையால உயிரை விட வெய்டிங்” என்று சிரிக்க. யுக்தா மலர்ந்த புன்னகையோடு மீண்டும் ஆதியை தன்னோடு இறுக்கிக் கொண்டாள்.

யுக்தா ஹாஸ்பிடல் இருந்து வீட்டுக்கு வரும்போது விஷ்ணு கல்யாண ஏற்பாடுகள் முடிந்திருக்க வேண்டும் என்று உத்தரவு போட, மொத்த குடும்பமும் அதை கண்ணும் கருத்துமாக செய்து முடித்தனர்.

ராஷ்மி சோகமாக கன்னத்தில் கைவைத்து உட்காந்து இருக்க, தோழிகள் மூவரோடு மது, கயல்விழியும் விராலை கன்னத்தில் தட்டி யோசித்துக் கொண்டிருந்தனர்.

“இப்ப என்ன பண்றது யுகி? விடிஞ்ச கல்யாணம், இவ இப்ப வந்து எனக்கும் விஷ்ணுக்கும் ஒரு ரொமாண்டிக் சீன் கூட இல்ல… எனக்கு ஒரு தரமான ரொமாண்டிக் சீன் போட்டே ஆகணும்னு அடம்புடிக்கிறளே! இந்த ராத்திரி நேரத்துல என்னத்த செய்யமுடியும். இவளுக்கு நலங்கு வேற வச்சச்சு, இப்ப இவளா நம்ம இந்த ரூம் விட்டு வெளிய கூட்டிப் போனாலே பாட்டி நம்ம கழுவி கழுவி உத்துவாங்க… இதுல இவ விஷ்ணுவ தனிய பாக்கணும்னு வேற சொல்ற? இப்ப என்ன தான் செய்றது??” என்று ஜானவி புலம்ப.

“ஏய் பாவம் டி அவ! அவ விஷ்ணுவை காதலிக்குறனு தான் பேரு? ஆனா, முழு நேரமும் உங்க கூட தானே இருக்க. இப்ப கல்யாணமும் ஆகப்போகுது. இப்ப வரை அவளுக்கு ஒரு ரொமாண்டிக் மொமெண்ட் கூட இல்லாட்டி எப்டி டி? அவளும் பாவம் தானே?” என்று மது ராஷ்மிக்கு வக்காளத்து வாங்க.

“எனக்கு புரியுது அண்ணி! ஆனா, இப்ப என்ன செய்யமுடியும்” என்று சற்று யோசித்த யுக்தா முகத்தில் சட்டென பல்ப் எரிய, “அண்ணிஸ் நீங்க ரெண்டு பேரும் வெற்றி, ராம் அண்ணாக்கு ஃபோன் பண்ணி, தனிய எங்கயாவது தள்ளிட்டுப் போங்க.. அடியேய்! நிஷா, ஜானு நீங்களும் உங்க வூட்டுகாரவங்களுக்கு ஃபோன் போட்டு விஷ்ணு ரூம்ல இருந்து அவங்களை தூக்குங்க” என்றவள் ராஷ்மி காதில் ஏதோ சொல்ல… ராஷ்மி கண்ணில் ப்ளீச் என்று மின்னல் வெட்ட ஓகே யுகி என்று யுக்தாவை அணைத்துக் கொண்டாள்.

“ஏய் யுகி? நாங்க எல்லாம் எங்க ஆளுங்களை கரெக்ட் பண்றோம். நீயும் ஆதி அண்ணாக்கு ஃபோன் போடு” என்ற நிஷாவை பார்த்த யுக்தா. அவசியம் இல்ல டி!” என்று மென்மையான சிரிக்க.

“ஒஒக் ஓஓஓஓ… அப்டி…! அந்த அளவுக்கு ஆகிடுச்ச” என்று தோழிகள் கேலி செய்ய, கன்னம் சிவந்த யுக்தா, “ஏய் மூடிட்டு முதல்ல ஃபோன் பண்ணுங்க” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

இங்கு விஷ்ணு அறையில் அவனும் ராஷ்மி போலவே புலம்பிக்கொண்டிருக்க… ஆண்கள் அனைவரும் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு ஒருவரை பார்த்துக்கொண்டிருந்தனர். அனைத்து கணவன்மார்கள் ஃபோனும் அவர்கள் மனைவி அழைப்பில் ஒரே நேரத்தில் அதிவேகமாக அதிர்ந்தது.

ஒரே நேரத்தில் எல்லா ஃபோனும் அடிக்க குழம்பி போன அனைவரும், ஃபோனை அட்டென் செய்ய, “கெளம்பி கீழ வாங்க டா” என்ற தங்கள் பொண்டாட்டிகளின் வார்த்தை கேட்ட அடுத்த நிமிஷம் எல்லாரும் எஸ்கேப். விஷ்ணு, ஆதியை, “என்னடா இது?” என்று கேள்வியாய் பார்க்க. அனைவருக்கும் அழைப்பு வந்து தனக்கு மட்டும் வராமல் போக, இந்த வேலையை பார்த்தது தனது அருமை திமிரழகி என்று புரிந்து தனக்குள் சிரித்தவன், “டேய் விஷ்ணு… கெட் ரெடி” என்று சொல்லிவிட்டு கதவை மூடி விட்டு செல்ல, “டேய் மச்சான் எதுக்கு டா ரெடியாகனும்? சொல்லிட்டு போ டா? என்று விஷ்ணு கத்த. அவன் இருந்த அறையின் ஜன்னல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டு கதவை திறந்தவான். அங்கு பைப்பை பிடித்தபடி அந்தரத்தில் தொங்கும் ராஷ்மியை பார்த்து அதிர்ந்தே விட்டான்.

“அடியேய் கெரங்கு? அங்க என்ன டி பண்ற…? காலையில கல்யாணம், விழுந்து கிழுந்து தொலச்ச அவளோ தான்…” என்றவன் அவளுக்கு கை கொடுத்து அறைக்குள் இழுத்து வர. உள்ளே வந்தவள் சப்பென் விஷ்ணு கன்னத்தில் ஒரு அறை வைத்தாள்.

“ஏய் ராட்சசி எதுக்கு டி என்னை அடிச்ச?”

“டேய்…! வாயத் தொறந்த கொன்னுடுவேன்.. பக்கி! பரதேசி! பண்ணாட! நீயெல்லாம் எனக்கு ஒரு லவ்வரு! கருமம்… உன்னை போய் லவ் பண்ணேனே, எல்லாம் என் தலையெழுத்து…” என்று ராஷ்மி தலையில் அடித்துக்கொள்ள‌‌

“ஒய் என்னக்கு என்னடி கெறச்சல். இந்த அழகான மூஞ்ச பாத்து தானா நீ விழுந்த இப்ப என்னவோ கொனட்ற.. என்னடி??”

“ஆமா இவரு பெரிய ஆணழகன் தான்…? போ டா எரும! என்னடா? நாளைக்கு காலையில கல்யாணம் ஆச்சே? இப்ப வரை நமக்குள்ள ஒரு சின்ன கசமுசா கூட இல்லயே… எதாவது செய்வோம்னு உனக்கு தோனுச்சு டா பன்னி? சரி போனபோகுதுன்னு நானே சூடு, சொரணை விட்டு யுகி கிட்ட கொஞ்சு கெதறி ஒரு ஐடியா பண்ணி பைப் புடிச்சு ஏறி உன்னை பக்க ரூம்க்கு வந்த… மகனே… என்னையே நீ திட்றியா? என்று முறைத்தவள். நா இப்பவே போய் எனக்கு இந்த பையனை புடிக்கல, இந்த கல்யாணம் வேணாம்.‌ ஸ்டாப் தி கல்யாணம்னு சொல்றேன்” என்று சொல்லி முடிக்கும் முன் விஷ்ணு, ராஷ்மி வாயை அடைத்திருந்தான். கையாலன்னு நீங்க நெனச்ச அது உங்க தப்பு.. சரி அவங்க சின்னஞ்சிறுசு எப்படியே போய் தொலயாட்டும்.. நம்ம போய் கல்யாண வேலையை பாப்போம்.

பாட்டி ஆசைப்படி யுக்தாவும், ஆதித்தும் முன் நின்று எல்லா சடங்கையும் செய்ய விஷ்ணு, ராஷ்மி கல்யாணம் அழகாய் நடந்து முடிந்தது.

கல்யாணம் முடிந்து அனைவரும் வீடு திரும்பிய ரெண்டு மணிநேரத்தில் புதுமணப் பெண் ராஷ்மி உட்பட யுக்தா, நிஷா, ஜானவி நால்வர் மட்டும் வீட்டில் மிஸ்ஸிங்.

“எனக்கு தெரியும் இந்த ராங்கி இப்டி எதாவது செய்வான்னு‌ எனக்குத் தெரியும். அடங்கப் பிடாரி… தன் கெட்ட கொரங்கு வனத்தையும் சேத்து கெடுக்கும்ன்ற மாதிரி இந்த மூனும் அவ கூட சேந்துடுச்சு” என்று பாட்டி யுக்தாவை புகழ்ந்து கொண்டிருக்க. வீட்டில் அனைவரும் அவருக்கு பதில் சொல்ல முடியாமல் முழி பிதிங்கி நின்றார்.

“டேய் ஆதி எங்காடா என்ற பொண்டாட்டி…? கல்யாணம் முடிஞ்சு இன்னும் அவ மொகத்த கூட ஒழுங்க பாக்கல டா, அதுக்குள்ள உன் பொண்டாட்டி இப்டி சதி பண்ணிட்டாளே! எங்கடா அந்த சாம் எரும? என்ன பொண்டாட்டிய வளத்து வச்சிருக்க நீயி” என்று விஷ்ணு குதிக்க..

“ஆமா! ஆமா! நா தா அவள வளத்துவிட்டேன் பாரு? உன் தொங்கச்சி என்ன என் கிட்ட சொல்லிட்ட வெளிய போறா? இவரு என்னை கேள்வி கேக்குறாரு? அதெல்லாம் நைட் குள்ள திரும்பி வந்துடுவ‌‌! வந்த பின்னாடி அவளையே எங்க போனான்னு கேட்டுக்கோ” என்றவன் அவள் எங்கே சென்றிருப்பாள் என்று புரிந்து ஒரு நமுட்டு சிரிப்புடன் அங்கிருந்து நகர.

தோழிகள் முவரும் தனி சாப்பர்ரில் (சின்னரக விமானம்) ப்ரீத்தியுடன் வானத்தில் பறந்து கொண்டிருந்தார்.

சுற்றி மணல் சூழ்ந்த பாலைவனத்தின் நடுவில் நான்கு நாயகிகள் சுற்றி நிற்க ப்ரீத்தி சுடு மணலில்… வறண்ட நாக்கும், மிரண்ட கண்களும், ஒடுங்கிய தேகமாக உட்காந்து இருந்தாள்.

“என்ன ப்ரீத்தி இது தான் இனிமே நீ வாழப்போற ஏடம். நல்லா பாத்துக்கோ, உனக்கு புடிச்சிருக்கு தானே…” என்று நக்கலாக கேட்ட ஜானவியை எரிக்கும் பார்வை பார்த்த ப்ரீத்தியின் நாடியை பிடித்து தன் பக்கம் திருப்பிய யுக்தா, “உன்னை ஒவ்வொரு செல்ல பிரிச்சு பிரிச்சு கொல்லணும்னும் தான் டி நெனச்சேன். ஆனா, நீயெல்லாம் அவ்ளோ சீக்கிரம் செத்துட கூடாது. அதான் பத்து நாள் மண்டைய ஒடச்சு யோச்சி, உனக்காக இந்த ப்ளான் போட்டேன். இது பாலைவனம்னு உனக்கு புரிஞ்சுருக்கும். பட்! எந்த பாலைவனம்னு தெரியாதில்ல… இது நம்ம இந்திய நாட்டு தார் பாலைவனம் தான். நீ இனி இங்க தான் இருக்கப் போற, இப்ப மதியம் ஒரு மணி ஆகுது. செம்ம வெய்யில் அடிக்குது இல்ல ப்ரீத்தி? பட்! இத விட அதிகமாக நைட் எலும்பையே உறைய வைக்கும் அளவு குளிரும் இங்க. நாங்க உன்னை இங்க தான் விட்டு போகப்போறோம். உனக்கு திறமை இருந்த இங்கிருந்து தப்பிச்சு வந்து எங்களை பழிவாங்கு, வீ ஆர் வெய்டிங் என்று திமிராக சிரித்தவள், “ஒன்னும் இல்ல ப்ரீத்தி! இந்த பக்கம் ஒரு நூறு கிலோமீட்டர், அந்த பக்கம் ஒரு நூறு கிலோமீட்டர். நீ அப்டியே பொடி நடைய நடந்து போன, மே பீ உனக்கு மனுஷங்க யாராது உதவிக்கு கிடைக்கலாம். ஹான்…? நடக்கும் போது கேர்புல் ப்ரீத்தி. இங்க மணல் புதைகுழி இருக்கு” என்று நெற்றிப்பொட்டில் தட்டியவள், “ம்ம்ம்ம்ம் அப்றம் சொல்ல மறந்துட்டேன். கொஞ்சம் ரேட்டில் ஸ்நேக் (rattlesnake) கூட இங்க நெறய இருக்கு… அதுவும் மணல் குள்ள ஊர்ந்து வருமாம், வெஷத்தை மேல துப்புமாம். அதை மட்டும் கொஞ்சம் பாத்து பக்குவமா நடந்து போ” என்றவள் ப்ரீத்தி கை, கால்களில் கட்டி இருந்த கயிற்றை அறுத்து விட்டு, எங்க வீட்டு புள்ளையையாடி தூக்குற நீ? என்று கண்களில் வன்மம் பொங்க ப்ரீத்தியை பார்த்தவள். தன் தோழிகளுடன் மீண்டும் வானத்தில் பறந்தாள். இனி ப்ரீத்தி என்ற பெயர் கூட அவள் வாழ்க்கையில் இல்லாத படி மொத்தமாக அவளை இந்த உலகத்தில் இருந்தே துடைத்து எறிந்துவிட்டு சென்றாள்.

“சில மாதங்களுக்கு பிறகு”

அன்று ப்ரணவ் பிறந்தநாள். மொத்த வீடும் சிரிப்பும், கும்மாளமாக இருக்க, ப்ரணவ் கேக் வெட்டி முதல் துண்டை ஆதிக்கு ஊட்டி விட, யுக்தா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்.. அவள் கன்னத்தில் முத்தமிட்டு சமாதானம் செய்தான் ப்ரணவ்.. ப்ரணவ்வை அனைத்து முத்தமிட்ட படி, “உனக்கு பர்த்டே கிஃப்ட்டா என்ன வேணும் குட்டி?” என்று யுக்தா வாஞ்சையாக கேட்க…

ப்ரண்வ் திரும்பி சிவகாமி பாட்டியை பார்க்க, பாட்டி ஏதோ சிக்னல் செய்து கண்ணடிக்க, “அம்மா எனக்கு, யுகன், சமிராக்கு எல்லாம், எங்க கூட வெளயாட ஒரு குட்டி பாப்பா வேணும்ம்மா” என்று பாட்டி சொன்னதை பேரன் அப்படியே ஒப்பிக்க, யுக்தா பாட்டியை செல்லமாக முறைக்க! ஆதி சிரித்த முகத்தோடு ப்ரணவ்வை தூக்கி கொண்டவன், “என் ப்ரணவ் குட்டி ஒன்னு கேட்ட அம்மா அதை குடுக்காம இருப்பாளா? இன்னும் ஏழு இல்ல எட்டு மாசத்துல உனக்கு வெளயாட ஒரு குட்டி பாப்பா இருக்கும் போதுமா!” என்று யுக்தாவை காதலாக பார்த்தபடி ஆதி சொல்ல.. அவன் சொன்னதின் அர்த்தம் அங்கிருப்பவர்களுக்கு புரியவே சில நொடிகள் எடுத்தது. அர்த்தம் புரிந்த போது உலகின் மொத்த சந்தோஷமும் அந்த வீட்டில் தான் நிறைத்திருந்தது. அனைவரும் யுக்தாவை கொஞ்சி தீர்த்து விட யுக்தா விழிகொட்டாமல் தன் இணையையே பார்த்திருந்தாள்.

ஆதி அவர்கள் அறையில் நின்றிருக்க யுக்தா பின்பக்கமாக அவனை தன் மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்தவள், “உனக்கு எப்டி டா தெரியும்? எனக்கே நேத்து மதியம் தான் நா கன்சீவ்வ இருக்கேன்னே தெரியும்” என்றவள் கையை பிடித்து இழுத்து தன் மார்பில் போட்டுக்கொண்டவன், “ஏன்டி என்கிட்ட சொல்லல??” என்று கொஞ்சலாக கேட்க.

“முதல்ல உன்கிட்ட சொல்லணும்னு தான் டா… மது அண்ணி கேட்டப்பே கூட ஒன்னும் சொல்லல… ஆனா,” என்று இழுத்தவள், “எனக்கு உன் மொத்தை பார்த்து சொல்ல வெக்கமா இருந்துது டா” என்று அவன் நெஞ்சில் விராலால் கோலம் போட்டவள், “உனக்கு எப்டி டா தெரிஞ்சுது?” என்று கேட்க.

தன் விரால் கொண்டு அவள் நாடியை பிடித்து தூக்கி தன் முகம் பார்க்க வைத்தவன், “உன்னை எனக்கு அனுஅனுவ தெரியும் டி. உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி. எப்பவும் கொரங்கு மாதிரி மூனு மூனு படிக்கட்டா தாண்டி தாண்டி குதிச்சு போற நீ! நேத்துல இருந்து தரைக்கு கூட வலிக்காம மெதுவாக பாத்து பாத்து நடந்துட்டு இருந்த!… அதுவும் நிமிஷத்துக்கு ஒரு முறை என்னை திருட்டுத்தனமாக பாத்து பாத்து சைட் அடிச்சிட்டே, உன் வாயித்த தொட்டு தொட்டு பாத்து வெக்கப்பட்டு சிரிச்சுட்டே இருந்த! அப்பவே தெரிஞ்சு போச்சு… என்னோட திமிரழகிக்குள்ள என் காதல், உயிரா வளர ஆரம்பிச்சுடுச்சுன்னு” என்றவனை இமைக்காமல் ஆழமாக பார்த்த யுக்தா.. காற்று கூட நுழைந்து செல்ல இடமில்லாமல் தன்னவனை தன்னோடு இறுக்கிக் கொண்டாள்.

சம்யுக்தா, ஆதித்தன் ஜோடிக்கு ஆதியின் ஆசைப்படி பெண் குழந்தை பிறக்க, ‘என் ஆதியும் அந்தமும் நீயே’ என்று தன் கணவனை நினைத்த யுக்தா தன் மகளுக்கு “ஆதினி” என்று பெயர் வைத்தாள். வினய் & நிஷா, ஜிவா & ஜானவி ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது.. விஷ்ணு ராஷ்மி வீட்டில் உள்ள குழந்தைகளை வளர்த்து ட்ரைனிங் எடுத்து பிறகு நாங்க குழந்தை பொத்துக்குறோம் என்று சொல்லிவிட்டனர்.

இதுவரை யுக்தாவை உருட்டி மிரட்டிப் கொண்டிருந்த சிவகாமி பாட்டி அவள் மகள் ஆதினியிடம் பெட்டி பாம்பாய் அடங்கி விட்டார்.‌ ஆதினி தன் கண் அசைவில் அந்த குடும்பத்தை ஆளத் தொடங்கிவிட்டாள்.. யுக்தாவை போல் ஆதினியும் அந்த வீட்டின் செல்ல இளவரசியாய் முடிசூட்டிக் கொண்டாள்.

இனி அந்த குடும்பத்தில் இன்பம் மட்டுமே நிறைந்திருக்கும்.

………………முற்றும்………………

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!