அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 31

யுக்தா வினய் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, வினய் கன்னத்தில் கை வைத்துச் சோகமாக உட்கார்ந்திருந்தான்.

“ஏன் டா அண்ணா! உனக்கு நிஷாவ புடிக்கலயா?? நா சொன்னேன்னு தான் அவளைக் கட்டிக்கிட்டியா” என்று வேண்டுமென்றே வினய்யை வெறுப்பேத்த,

“ஏய்!! ஏய்!! அதெல்லாம் ஒன்னு இல்ல.‌.. நிஷான்னா எனக்கு உயிரு, நா அவளை ரொம்ப லவ் பண்றேன். அவ இல்லாம எனக்கு லைஃப்பே இல்ல… நா அவளைப் புடிச்சு தான் கட்டிக்கிட்டேன்.”

ஓஓஓ!! ‘பரவயில்லயே சார் பொண்டாட்டிய இவ்ளோ லவ் பண்றாரே?? இத வச்சே இவனை அவகிட்ட கேத்து விட்ரேன் பாரு… அந்தக் கெழவி கூட சேர்ந்து, இவனும் தானா என் கல்யாண விஷயத்துல கூட்டு களவாணி தனம் செஞ்சு ஆதித் கூட என்னைக் கோத்து விட்டான்.‌ இரு டா இரு’ என்று உள்ளுக்குள் ப்ளான் போட்டவள். “ஏன் டா?? இத நீ அவகிட்ட சொன்னீயா?? நிஷாக்கு நீ அவளை லவ் பண்றா மேட்டர் தெரியுமா??”

வினய் சோகமாக இல்லை என்று தலையை ஆட்டியவன், “அவளுக்கு ஃபர்ஸ்ட்ல இருந்தே என்னைச் சுத்தமா‌ புடிக்காது சாம். ஆனா, அதுல அவ தப்பு ஒன்னும் இல்ல… நா தான் அவளை மொறச்சிட்டே திரிஞ்சேன். அதோட பலனை இப்ப நல்லா அனுபவிக்கிறேன். அன்னைக்கு நா அவகிட்ட, இந்த கல்யாணம் புடிக்காட்டி சொல்லு, நா சாம் கிட்ட பேசி இந்த கல்யாணத்தை நிறுத்துறேன். நீ வேற யாரையாச்சு விரும்பினா, அவன் கூடவே உனக்குக் கல்யாணமும் செஞ்சு வைக்கிறேன்னு சொல்லும்போது கூட அவ அப்படி எதுவும் சொல்லிடக்கூடாது. அவ மனசுல நா மட்டும் தான் இருக்கணும்னு, கடவுள் கிட்ட எப்டி கெஞ்சு வேண்டிக்கிட்டேன் தெரியுமா?? ஆனா, அவ நானும் உனக்காக ஒன்னும் கல்யாணம் செஞ்சுக்கல, யுகிக்காகத் தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்னு சொல்லிட்டா!! அப்ப எனக்கு எப்டி இருந்துச்சுத் தெரியுமா சாம்!! உள்ளுக்குள்ள அப்படியே நொறுங்கி போய்டேன்… இதயம் தீ புடிச்சு எரிஞ்ச மாதிரி ஒரு ஃபீல்” என்றவன் குரல் கலங்கி விட…

யுக்தா அவனையே பார்த்தவள், ‘அட லூசு அண்ணா!! அவளும் உன்னை உயிருக்கு உயிரா விரும்றா!! அது புரியாம?? என்மேல இருக்க அன்புல, நீ அப்படிப் பேசிட்டா… அவளுக்கும் உன்மேல இருக்க காதலை விட!! எம் மேல இருக்கப் பாசம் பெருசுனு அந்த வார்த்தையைச் சொல்லிட்டா, ஏன்டா? எல்லாரும் என்னை இவ்ளோ நேசிக்குறீங்க?’ என்று உள்ளம் பூரித்தவள், “சரி டா அண்ணா! இப்ப நீ என்ன முடிவு பண்ணி இருக்க? எது எப்டியே? நீங்க ஆசபட்ட மாதிரி என்னோட வாழ்க்கை ஜஸ்ட் இல்ல!! ரொம்ப ரொம்ப செம்ம சிறப்ப சுப்பரா அமைச்சு, அந்த லூசு ஆதித் எனக்குக் கெடச்சிட்டான். இப்ப உன்னோட முடிவு என்ன??”

“இதுல நா சொல்ல ஒன்னு இல்ல சாம். நிஷா தான் முடிவெடுக்கனும். அவளுக்கும் என்னைப் புடிச்சிருந்தா? இன்னேரம் சொல்லி இருப்பாளே?? அவ இப்ப வரை எதுவும் சொல்லல, அப்ப அவ சொன்ன மாதிரி உனக்காகத் தான் என்னைப் பொறுத்துட்டு என் கூட இருக்கப் போல சாம். அப்றம் இதுல நா சொல்ல என்ன இருக்கு??” என்று வினய் கலங்கி விட,

ம்ம்ம்… என்று பெருமூச்சு விட்ட யுக்தா, “எதுவும் பேசாமலே!! ஒருத்தர் பார்வையை வச்சே அவங்க மனசை நல்லா புரிஞ்சு ரெண்டு பேரும் நடந்துக்குறீங்க!! ஆனா, ரெண்டு பேரும் வாயைத் தொறந்து காதலை சொல்லிக்க மட்டும் மாட்டீங்க!! உங்களா எல்லாம் என்ன தான் செய்றதோ?? ஐய்யோ!! ஐய்யோ!! என்று தலையில் அடித்துக் கொண்டவள், “சரி டா அண்ணா, இந்த விஷயத்தை இதுக்கு மேல இழுத்த சரி வராது. நீ இப்பவே நேர அவகிட்ட போய், யுக்தா லைஃப் செட்டில் ஆகிடுச்சு, இனி நீ என்ன செய்ப்போற..?? இப்பவும் உனக்கு என்னைப் புடிக்காட்டி சொல்லு, பேசாம நா உனக்கு டைவஸ் குடுத்துடுறேன். நீ வேற கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருன்னு சொல்லு‌” என்று சொல்ல…

வினய் திக்கென அதிர்ந்தவன், “ஏய்!! ஏய்!! என்னடி உலர்ர நீ?? என்னால எல்லாம் அவ இல்லாம வாழ முடியாது.‌ அவளை வேற யாருக்கும் விட்டுக் குடுக்கவும் முடியாது. அவ என் கூட பேசாம, சேர்த்து வாழாம இருந்த கூட பரவாயில்ல, ஆனா, அவளை விட்டு ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது” என்று குதிக்க,

“டேய் அண்ணா… கொஞ்சம் அடங்குறீயா!! இப்ப யாரு அவளை விட்டுக்குடுக்கச் சொன்னா?? நீ சும்மா அப்டி ஒரு பிட்டு போடு, அப்ப தான் அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியும். ஒருவேளை நீ சொல்ற மாதிரி அவளுக்கு இப்பவும் உன்னைப் புடிக்காம இருந்தா? நா சொன்னத நெஜமாவே செய். அவளாது நல்லா இருக்கட்டும்” என்று சோகமாகச் சொல்வது போல் யுக்தா நடிக்க,

வினய் கலங்கி நின்றவன், “ஆமா சாம். பாவம் அவ! நா எவ்ளோ செல்பிஷ்ஷா இருந்துருக்கேன் இல்ல? அவளை எனக்குப் புடிக்கும்னு யோசிச்சிசேனே தவிர அவளைப் பத்தி யோசிக்கவே இல்லயே.. நீ சொன்னது தான் சரி.‌ நா இப்பவே போய் அவகிட்ட பேசுறேன்” என்று வேகமாக எழுந்தவன். நின்று திரும்பி யுக்தாவை பார்த்தவன், “அவளுக்கும் என்னைப் புடிக்கும்னு சொல்லுவா இல்ல சாம்?? அவ என்னை விட்டு போக மாட்டா தானே?? என்று பிடித்த பொம்மையைப் பறிகெடுத்த சின்னக் குழந்தை போல் கேட்க… யுக்தா இல்லை என்று தலையாட்டியவள், “நீ போண்ணா” என்று கண் காட்டியவள், “இன்னையோட உங்க பிரச்சனை எல்லாம் முடிஞ்சிடும் டா அண்ணா. ஆனா, நா சொன்னதை, நீ அப்டியே அவகிட்ட சொன்ன அடுத்த நிமிடம் உனக்கு தர்மா அடி கன்பார்ம். உனக்கு சேதாரம் கொஞ்சம் அதிகமா இருக்கும் தான். ஆனா, பிரச்சனை சரியாகிடும். ஆப்ரேஷன் சக்ஸஸ்… பட் ஃபேஷன்ட் டெத்” என்று சிரித்தவள் அங்கிருந்து நகர.. வினய் அவன் அறைக்குச் சென்றான்.

நிஷா, அப்போது தான் குளித்து முடித்து ஆகாய வண்ணப் புடவையை அழகாய் காட்டி முடித்திருக்க, வினய் அவளையே இமைக்காமல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நிஷா அவனையே சில நிமிடம் பார்த்தவள். புருவம் உயர்த்தி ‘என்ன’ என்று கேட்க.. வினய், யுக்தா சொன்னதை அப்படியே சொல்ல, அடுத்த நிமிடம் எறியும் கன்னத்தைக் கையில் தாங்கி கொண்டு நின்றான் வினய்.

“உனக்கு எவ்ளோ கொழுப்பு டா?? அன்னைக்கு வேற யாரையாச்சும் விரும்புனா சொல்லு நானே கட்டி வைக்குறேன்னு சொல்லும் போதே உன்னயெல்லாம் பொலந்திருக்கணும்… போன போகுது நம்ம பையன் தானேனு விட்ட!! உனக்கு எவ்ளோ தைரியம் இருந்த என்னை டிவோஸ் பண்றேன்னு என்கிட்டயே சொல்லுவா?? என்னை டிவோஸ் பண்ணிடுவீயா டா நீ?? பண்ணிடுவீயா டா நீ??” என்று அவன் கழுத்தை நெறித்தவள், “என்னை விட்டுட்டு உன்னால இருக்க முடியாது டா!! நீ என்னை அந்த அளவு லவ் பண்றா!! அன்னைக்கு மயக்கத்துல இருந்த என் ‌ கிட்ட, நீ பேசுனது எல்லாம் எனக்கு நல்லா கேட்டுச்சு… அப்ப எனக்கு எப்டி இருந்துச்சு தெரியுமா.. சும்மா அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருந்துது. யுக்தா நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசுனது கூட நம்ம ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்னு தெரிஞ்சு தான். அன்னைக்கு நானும் உன்னை லவ் பண்றேன். யுக்தா வாழ்க்கை சரியானதும் நம்ம வாழ்க்கை பத்தி யோசிக்கலாம்னு சொல்லத் தான்டா வந்தேன். ஆனா, நீ என்ன சொன்னா?? நீ வேற யாரையாது விரும்புறீயான்னு கேட்ட இல்ல நீ??” என்று விசும்பியவள், “அது மட்டுமா..?? அப்டி இருந்த சொல்லு நானே கட்டி வைக்குறேன்னு வேற சொல்றா நீயி!! அன்னைக்கு எனக்கு எப்டி இருந்துது தெரியுமா டா?? அப்படியே உன்னை ரெண்டா வெட்டனும் போல இருந்துச்சு!! இருந்தும் சரி போகுதுன்னு உன்னைச் சும்மா விட்டுட்டேன். சரி யுகி கல்யாணம் முடிஞ்சிது இனிமே எல்லாத்தையும் சரி பண்ணலாம்னு நெனச்சுக் காத்திருந்தா?? உனக்கு எவ்ளோ திமிர் இருந்த?? இப்டி பேசுவா??” என்று வினய் முடியை பிடித்து உலுக்க.. அவனோ இமைக்காமல் நிஷாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“போடா உனக்கு எம்மேல லவ்வோ இல்ல!! உனக்கு நா வேணாம் இல்ல? ஓகே… நா போறேன்!! மறுபடியும் நா டெல்லிக்கே போறேன். எனக்கும் நீ வேணாம்” என்ற அழுதவள், முழங்கை கொண்டு அழுது வடியும் கண்களைத் துடைத்தபடியே நகரப் போக… அவளை அசைய முடியாதபடி இறுக்கி அணைத்திருந்தான் அவள் காதலன்.

“டேய் என்னா விடு டா விடு” என்று அவள் திமிர..‌. ம்ம்ம் அந்தக் காவல்காரியால் அவள் காதலன் பிடியில் இருந்து இன்ச் கூட நகர முடியவில்லை, “நீ என்னை லவ் பண்ணாமல் இருந்திருந்தாலே, நா உன்ன என்னைவிட்டு போக விட்டீருங்க மாட்டேன் டி!! இப்ப நீயும் என்னை லவ் பண்றேன்னு தெரிஞ்சு போச்சு… இப்ப உன்னை டெல்லிக்கு அனுப்ப, நா என்ன பைத்தியமாடி?? இந்த ஜென்மத்துல நா உன்னை விட்டு போகவும் மாட்டேன்!! உன்னை யாருக்கும் விட்டுக் குடுக்கவும் மாட்டேன்” என்றவன் அவளை இன்னும் தன்னோடு சேர்த்து அணைத்தவன், “ஆனா, ஒன்னு டி… இதுவரை நா எம் பொண்டாட்டி நிஷாவை தான் பாத்துருக்கேன். இன்னைக்குத் தான்டி நிஷா ஐபிஎஸ் சை பாக்குறேன்!! யாப்பா!! என்ன அடி!! ஒரு அடிக்கே… கடவப்பல்லு கழன்டுடுச்சு, இன்னென்னு விட்டிருந்தா.. என் கன்னத்துல விழும் பள்ளத்துல ரெண்டு லாரி மண்ணைக்கொண்டு தான் மூடி இருக்கணும்.‌ அப்றம் நீ முத்தம் குடுக்க எனக்குக் கன்னமே இருந்திருக்காது டி!!”

“ஒரு அறையோட விட்டனேன்னு சந்தோஷப்படு டா.. எனக்கிருக்கக் கோவத்துக்கு??” என்றவளை அவன் மேலும் தன்னோடு இறுக்கிக் கொள்ள.. தவிப்பில் தனியாய் துடித்த அவள் இதழ்கள் வினய் இதழில் தஞ்சம் புகுந்தது. அதன் பிறகு அவள் அழகாய் கட்டி இருந்த ஆகாய வண்ணப் புடவை அனாதையாகக் கீழே கிடக்க… (ஒகே அவங்க அடுத்த வாரிசு ரெடி பண்ணட்டும்.. நம்ம அப்படியே வேற பக்கம் போட்டுவோம்)

யுக்தா, ராஷ்மி, ஜானு மூவரும் நிஷா முகத்தையே பார்த்திருக்க, “ஏய் இப்ப எதுக்கு மூனு பேரும் நாய் பொரய பாக்குறா மாதிரி என்னைப் பாத்துட்டு இருக்கீங்க? எனக்கு ஒரு மாதிரி இருக்கு!” என்று நெளிய,

“ம்ம்ம் இன்னைக்கு உன் முகத்துல கொஞ்சம் சிகப்பு கூட இருக்கே! அதான் என்ன ஃபேர்னஸ் கிரீம் யூஸ் பண்ணி இருக்கேன்னு பாக்குறோம்?” என்று ஜானு கண்ணடிக்க,

“அந்தக் கிரீம் பேரு எனக்குத் தெரியும் ஜானு, அதுக்கு‌ பேரு கிஸ்! அதை இவளுக்குக் குடுக்கும் ஆளு பேரு வினய்‌ ஆமா, தானா நிஷா? என்ன நிஷா? நேத்து உம் புருஷனுக்குச் செம்ம பூஜை போல? கை, கால் எதையும் ஒடச்சிடலயே! என்று யுக்தா அவளை வம்பிழுக்க,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்று நெளிந்தவள், ஆமா, அது உனக்கு எப்டி தெரியும்?” என்று நிஷா புரியாமல் விழிக்க,

“எனக்குத் தெரியாமல் எப்டி டி!! அண்ணாக்கு டைலாக் எழுதி குடுத்து, வீரத் திலகம் வச்சு அனுப்பினதே நா தானா!” என்றது தான்…

நிஷா, யுக்தா காதைப் பிடித்துத் திருகியவள், “எரும எரும என்ன வேலை செஞ்சிருக்க டி நீ? நீ பண்ணது தெரியாமா? பாவம்! வினய்யை போட்டு நல்லா மொத்திட்டேன்.‌ பாவம்! அவரு” என்ற நிஷாவின் தாடையைப் பிடித்து முகத்தைப் இப்படியும், அப்படியும் திருப்பி பார்த்த யுக்தா, “உன்னப் பாத்தா அப்படித் தெரியலயே? பலநாள் ஆசை நெறவேருனா ஒரு திருப்தி உன் கண்ணுல தெரியுதே? எத்தனை நாள் ஆச டி? வினய் அண்ணாவை நல்லா மொத்தனும்னு?”

“அது ரொம்ப வருஷம் மனசுல இருந்துச்சு, நேத்து தான் தொக்க சிக்குனாரு, போட்டு பொலந்துட்டேனில்ல” என்று சிரிக்க,

“என்ன நிஷா? வெறும் அடிதடி மட்டும் தானா? இல்ல சம்திங் சம்திங்?” என்று ராஷ்மி, நிஷா இடுப்பை கிள்ளி கண்ணடிக்க, “ச்சீ! போடி பன்னி” என்று நிஷா, ராஷ்மியை அடிக்கத் துறத்த, ஜானு, ராஷ்மிக்குத் துணையாக வர… ஒரு குட்டி கலவரமே அங்கு நடந்தது. இவர்கள் சண்டைக்கு நடுவே யுக்தா ஃபோன் அடிக்க எடுத்துக் காதில் வைத்தவள், “ஹலோ டாக்டர் சொல்லுங்க” என்றவள் முகம் ஃபோனில் சொன்ன செய்தியில் கோவத்தில் கொதித்து.

“ஏய் யுகி ஜீவா பாவம் டி. அவரு ஏதோ தெரியாம பண்ணி இருப்பாரு. எனக்காக அவரை விட்டுடு டி” என்று கெஞ்சிய ஜானுவை முறைத்த யுக்தா, “உனக்கு நா முக்கியம்னா வாயை மூடிட்டு என் கூட வா, இல்ல உன் புருஷன் தான் முக்கியம்னா போ” என்றது தான், “நா வாயே தொறக்கல டி… ஆனா, பாவம் டி அவரு! கொஞ்சம் அடி கம்மிய பாத்துக்க! என்ன இருந்தாலும் அவர் உன்னோட அண்ணா இல்ல! பாவமில்ல! கல்யாணமாகி, இன்னும் எங்களுக்கு ஒரு குழந்தை கூட இல்ல டி ப்ளீஸ்‌ டி” என்று கெஞ்சும் ஜானுவை பார்க்க தோழிகளுக்குச் சிரிப்பு தான் வந்தது.

யுக்தா மற்றும் தோழிகள் மூவரும் ஜீவா அறைக்குள் நுழைய, “ஒய்! என்ன?? இடி, மின்னல், மழை, பூகம்பம் எல்லாம் சேர்ந்து வந்திருக்கீங்க? அய்யோ! பயமா இருக்கே!” என்று நடக்கப்போகும் விபரிதம் தெரியாமல் ஜீவா கிண்டலடிக்க,

“அது ஒன்னு இல்ல ஜீவாண்ணா. ஆதித் ஹெல்த் பத்தி கேக்கலான்னு தான் வந்தேன்? அவனுக்கு இப்ப உடம்பு எப்டி இருக்கு??”

“ம்ம்ம் இப்ப கொஞ்சம் பரவாயில்ல சாம். ஆனா, முழுசா சரியாகி எழுந்து நடக்க எப்டியும் இன்னும் நாலஞ்சு மாசம் ஆகும்” என்க.. யுக்தா திரும்பி ஜானுவை பார்க்க… அவள் முகத்தைப் பாவம் போல் வைத்திருந்தவள். தலையை இடவலமாக ஆட்டி‌‌, “என்னால அவர்‌ அடிவாங்குறதை பார்க்க முடியாது. நான் வெளிய‌ வெய்ட் பண்றேன்” என்று ஓடி விட, ஜீவா குழப்பமாக முழித்தவன், ‘இவ எதுக்கு இப்படி ஓடுறா?? என்று கேட்க

“ம்ம்ம் கட்டுன புருஷன் அவன் தங்கச்சி கிட்ட அடிவாங்குறதை பாக்க மனசில்லாம ஓடிட்ட டா” என்றவள் தன் சட்டை கையின் பட்டனை கழட்டி, சுருட்டி முழங்கை வரை மடித்துக் கொண்டே, “ஆதித் எழுந்து நடக்க இன்னும் எவ்ளோ நாள் ஆகும்னு சொன்ன?” என்று புருவம் உயர்த்திக் கேட்க…

ஜானு எதற்காக ஓடினாள் என்று ஜீவாவுக்கு நன்றாகப் புரிந்து விட்டது, “அய்யோ இந்தப் பிசாசுக்கு எல்லா உண்மையையும் தெரிஞ்சுருச்சுப் போலயே? அடிப்பாவி ஜானு! இந்தப் பிசாசுக்கு உண்மை தெரிஞ்சு போச்சுன்னு, ஜஸ்ட் ஒரு சிக்னல் தந்திருந்த கூட, நா ஒரு ஒரு வாரம் இல்ல, பத்து நாள் வெளியூர் எங்கயாது தப்பிச்சு ஓடி இருப்பேனே டி! கட்டுன புருஷனை இப்படி மாட்டி விட்டுட்டு, நா அடிவாங்குறதை‌ பாக்க கஷ்டமா இருக்கும்னு நீ வெளி நிக்குறீய? நீதான் டி அக்மார்க் பொண்டாட்டி” என்று புலம்பியவன், “நா ஒன்னும் பண்ணல சாம். ஆதி தான் உன்கிட்ட அப்டி சொல்ல சொன்னான். அவனுக்குக் கொஞ்சம் அடி பலம் தான். பட், அவனோட வில் பவர்க்கு ஒன்னு இல்ல ரெண்டு வாரத்துல அவன் உடம்பு சரியாகிடும். அத நான் ஆதி கிட்ட சொன்னேன். அவன் தான் என்னால கொஞ்சம் நாள் எழுந்து நடக்க முடியாதுனு உன்கிட்ட பொய் சொல்ல சொன்னான். அப்ப தான் ப்ரணவ் கேஸ்க்காக நீ மறுபடியும் போலிஸ்ல ஜாயின் பண்ணுவேன்னு சொன்னான். அதான் நா… ஆதி சொன்னதத் தான் நா செஞ்சேன்.‌ இப்ப ஆதி கம்ப்ளீட்டா குணம் ஆகிட்டான்” என்று நடு முதுகில் யுக்தா குத்தியதில் வளைந்திருந்த முதுகை தட்டி, தட்டி நிமிர்தியபடி சொல்ல, ஜானு அவன் முதுகை நீவி விட்டுக் கொண்டு இருந்தாள்.

“நீ எப்ப டி வந்த? நல்லா என்னை இவகிட்ட கோத்து விட்டுட்டு ஓடிட்டு… இப்ப வந்து நீவிட்ட இருக்க நீயி? பாவி! பாவி! நீயெல்லாம் தமிழ் நாட்டுப் பொண்டாட்டியா டி? என்று ஜானுவை முறைக்க,

“ஏன்டா அவன் தான் அறிவு கெட்டு அப்டி சொன்னா! உனக்குப் புத்தி எங்கடா போச்சு? அவன் சொன்னனாம், இவரு செஞ்ஜாராம். மாடில இருந்து கீழ குதின்னு சொன்ன குதிச்சுடுவீயா டா நீ?” என்று யுக்தா முறைக்க, ஜீவா இல்லை என்று தலையாட்டியவனை யுக்தா மீண்டும் முறைக்கவும் கப்பெனத் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டான்.

“உன்னைச் சொல்லி தப்பில்ல.. எம் புருஷனை சொல்லும்.. இன்னைக்கு இருக்கு அவனுக்குக் கச்சேரி” என்று நகர்ந்தவள். திரும்பி ஜீவாவை பார்த்து, நா அந்தப் பக்கம் போனதும் உன் மச்சானுக்கு ஃபோன் போட்டு அவனை அலர்ட் பண்ண நெனச்சேன்னு வையேன்?” என்று கையை முறுக்கி காட்ட,

“அய்யோ நா ஃபோனையே தொடவே மாட்டேன் சாம். நா தொடர்பு எல்லைக்கு வெளிய போய் ரொம்ப நேரம் ஆச்சு, புருஷன், பொண்டாட்டி பிரச்சனையில மூக்கை விடக் கூடாதுன்னு நம்ம கெழவி தான் சொல்லி இருக்கே. நா பாட்டி சொல்ல தட்ட மாட்டேன். நீ போடா, நீ போ, போய் உன் புருஷனுக்குப் பூச பண்ணு. ஜானு நீ போய் அந்த பெரிய அண்டால வென்னீர் போட்டு” என்று ஆரம்பிக்கும் போதே,

“உங்களுக்கு ஒத்தடம் கொடுக்கவாங்க” என்ற ஜானு முறைத்தவன், “எனக்கு அதெல்லாம் பத்தாது டி! அந்த அண்டால அப்படியே என்னைப் போட்டு முக்கு..‌. அப்ப தான் என் வலி போகும்.”

யுக்தா ஆதி ரூம்மிற்கு வர, “ஏய் யுகி! நல்ல நேரம் நீ வந்த, ப்ளீஸ் என்னோட பில்லோவை எடுத்துக் கொஞ்சம் சரிய வையேன். என்னால கையைத் தூக்க முடியல ரொம்ப வலிக்குது டா” என்று தோளைப் பிடித்துக்கொள்ள.

யுக்தா அவனை ஒருமாதிரி முறைத்துக் கொண்டே தலைகாணியைக் கையில் எடுத்தவள், “உனக்குக் கை ரொம்ப வலிக்குது இல்ல ஆதி? இந்த ஜீவா சரியில்ல போ? பாரு உனக்கு இன்னும் வலி இருக்கு, நா வேணும்னா வேற டாக்டரை கூப்பிடவா??”

“அய்யோ வேணாம் வேணாம்.‌.. அதெல்லாம் தேவையில்லை… வேற டாக்டர் எல்லாம் வேணாம்” என்று ஆதித் பதற

யுக்தா ஆதி அருகில் வந்தவள், “ஏன்டா வேற டாக்டர் வந்த? உன் இந்த பொய் ஆக்டிங்கை கண்டு புடிச்சிடுவாங்களே அதனால வேணாம்னு சொல்றீய? என்று கேட்க… ஆதித் திருதிருவென முழிக்க… அந்தத் தலைகாணி பஞ்சு பஞ்ஜாய் பறந்தது.

ஆதித்தை பெட்டில் தள்ளி அவன் வயிற்றில் ஏறி உட்கார்ந்து, அவன் நெஞ்சில் மாறிமாறி குத்தியவள். வாய்க்கு வந்த படி அவனை வறுத்தெடுத்தாள், “பொறுக்கி, நாயே, பிசாசே, பக்கி, பரதேசி… எதுல வெளயாடனும்னு உனக்கு அறிவுவே இல்லயாடா? இப்டியாடா பொய் சொல்லுவா? உனக்கு இப்டி ஆனதும் எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? ஒவ்வொரு நிமிஷமும் உன்னையே தான் நெனச்சிட்டு இருந்தேன். நீ என்னடான்னா! அந்த ஜீவா கூடச் சேர்ந்து என்னை ஏமாத்தி இருக்க? உன்னை” என்று மீண்டும் ஆதியை அடிக்கக் கை ஓங்க, ஆதி அவள் கையைப் பிடித்து இழுத்து தன் கைக்குள் அடக்கி, அவளைக் கீழே தள்ளி அவள் மேல் படர்ந்தவன்.

“அடியேய்! சண்டக்கோழி. எதுக்கு டி இப்டி குதிக்குற? ஆமா நா தான் என் மச்சான் கிட்ட அப்டி பொய் சொல்ல சொன்னேன். இப்ப அதுக்கென்னவாம்? நா அப்டி செஞ்சதால் தான், நீ இந்தக் கேஸ்காக, ப்ரணவ்காக” என்றவன் நிறுத்தி அவள் விழி பார்த்து, “எனக்காக” என்று அழுத்தி சொன்னாவன், “நீ டிபார்ட்மெண்ட்ல மறுபடியும் ஜாய்ன் பண்ண! இல்லாடி நீ இத செஞ்சிருப்பியா டி? சொல்லு டி? நாங்க எல்லாரும் எவ்ளோ சொன்னோம். கேட்டிய நீ? அதான் இப்டி ஒரு ஷாக் டீர்ட்மென்ட் குடுத்தேன், எப்டி உன் புருஷன் ஐடியா?” என்று கண்ணடிக்க. கோவத்தில் யுக்தா விட்ட மூச்சின் வெப்பத்தில் இதமாக குளிர்காய்ந்தவன், “முதல்ல நீ மறுபடியும் போலிஸ்ல ஜாய்ன் பண்ணனும்னு தான் டி நடிச்சேன். ஆனா, நீ என்னைப் பக்கத்துல இருந்து பாத்து பாத்து கவனிச்சிட்டது! பாட்டியை கூட என்கிட்ட வர விடாம, நீயே என்னைக் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கிட்டதும்! என்னைப் பைத்தியம் ஆக்கிடுச்சு யுகி! அத நா ரொம்ப ரசிக்க ஆரம்பிச்சிட்டேன். நீ என் கூட இருந்த ஒவ்வொரு நிமிஷத்தையும் நா நேசிக்கத் தொடங்கிட்டேன். அந்த நொடிக்காக நா ஏங்க ஆரம்பிச்சுட்டேன் டி, எனக்கு அந்தச் சுகத்தை இழக்க மனசு வர்ல… அதான் எனக்கு முழுசா உடம்பு சரியாகியும், அதை உன் கிட்ட சொல்லல” என்றவன் கண்ணில் வழிந்த காதல் காந்தமாய்ப் பாவையை இழுக்க. அதான் ஈர்ப்புவிசை தாங்க முடியாமல் வெட்கத்தில் விழி மூடியவள். அப்போது உணரவில்லை அந்தக் கள்ளன் அவள் உடைகளுக்கு அவள் உடலில் இருந்து விடுதலை தந்திருந்ததை. அவன் கை அவள் வெற்றுடலில் தடையின்றி ஊர்வலம் போக. பெண்ணவள் நாணத்தில் உடல் மூட ஆடை தேடி கிடைக்காமல்… அவளவனையே உடல் மறைக்கும் ஆடையாக இழுத்துப் போர்த்திக் கொண்டாள். மனதால் மட்டும் இணைந்திருந்த இருவுள்ளங்களும், இன்று… ஈருடல் ஒர் உயிராக இணைந்தது.

விஷ்ணு, ராஷ்மி கல்யாணம் நெருங்கி வந்து கொண்டிருக்க, ப்ரீத்தி எங்கிருக்கிறாள் என்று தெரியாமல் யுக்தா வேங்கையாகத் தேடிக் திரிந்து கொண்டிருந்தாள். கல்யாணத்திற்கு முன் எப்படியும் ப்ரீத்தி பிரச்சனையை முடித்து விடவேண்டும் என்ற முடிவோடே இரவு பகலாக அலைந்து கொண்டிருந்தாள், ‘உதய் கேஸில் தனக்கு உதவிய தன் தோழிகளை ப்ரீத்தி டார்கெட் செய்ய வாய்ப்பிருக்கிறது. அதோட தன் குடும்பத்தையும் ப்ரீத்தி கண்காணிக்கிறாளோ’ என்ற சந்தேகம் சில நாளாக அவள் மனதில் தோன்றியிருக்க, தோழிகள் மூவரையும் தன் கண் பார்வையிலேயே வைத்துக்கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!