அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 32

அந்த ஆள் நடமாட்டம் இல்லாத அண்டர் கன்ஸ்டிரக்ஷன் பில்டிங்குள்ள யுக்தா வேகமாக நுழைய, அவள் கழுத்தில் ஏதோ சுருக்கென்று குத்தியதை உணர்ந்தவள்… கழுத்தை பிடித்துக்கொண்டு அப்படியே கீழே முட்டிபோட்டு உட்காந்து திரும்பி பார்க்க, அங்கு கையில் மருந்து இல்லாத காலி சிரஞ்சி ஊசியை கையில் பிடித்தபடி குரூரமாக சிரித்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி.

 

யுக்தா கண்கள் செருகும் நிலையிலும் ப்ரீத்தியை தீயாய் முறைத்துக் கொண்டிருக்க, “என்ன மிஸஸ் சம்யுக்தா ஆதித்தன்… கண்ணு செருகுதா?? உடம்பெல்லாம் ஒரு மாதிரி இருக்குமே? நரம்புங்க எல்லாம் சுண்டி சுண்டி இழுக்குதில்ல? ம்ம்ம்… அப்டி தான் இருக்கும். உனக்காகவே ஆப்பிரிக்கா காட்டுல இருந்து ஸ்பெஷல்ல வர வச்ச பயங்கர விஷம் இது சம்யுக்தா. நீ எப்டி என்னோட உதய்ய விஷ ஊசி போட்டு கொன்னீயோ! அதே மாதிரி நீயும் ஒவ்வொரு நிமிஷமும் துடிச்சு துடிச்சு சாகணும். நீ உதய்க்கு குடுத்த விஷத்தை விட இது செம்ம ஸ்டரங்கி டோஸ், நா உன்னையும், உன் ஃப்ரண்ஸ் நிஷா, ஜானவி, ராஷ்மி எல்லாரையும் கொல்லனும்னு தான் டி இந்தியாவுக்கே வந்தேன்..‌. இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சுது. நீ இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்குறதும், என்னோட உதய்யோட குழந்தை உன்கிட்ட வளருதுன்னும். அதை கேக்கும் போது எனக்கு அப்டியே வெறியே புடிச்சு போச்சு டி! என் உதய்யை கொன்னுட்டு நீ மட்டும் நல்லா இருப்பியா? அவன் இருந்த இடத்துல இன்னொருத்தனா?…” என்று பல்லை கடித்தவள், “நானும் உதய் அப்பன் கிட்ட ப்ரணவ்வை கேளுன்னு நெறய முறை சொன்னேன். ஆனா, அந்த கெழவன். நீயும் உன் புதுப் புருஷன் அந்த ஆதித்தனும் ப்ரணவ்வை நல்லா பாத்துக்குறீங்க, ப்ரணவ் உங்க கூட இருக்குறது தான் அவனோடு எதிர்காலத்துக்கு நல்லதுன்னு சொல்லிட்டான் அறிவு கெட்டவன். உதய் குழந்தை உன்கிட்ட இருக்கக் கூடாதுன்னு தான் அவனை கடத்துனேன். ப்ரணவை நானே வச்சிக்கலாம்னு நெனச்சேன். ஆனா, அந்த முட்டாள் சேதுவை கூட்டு சேர்த்தது தான் தப்பபோச்சு! என்னோட ப்ளான் எல்லாம் நாசமா போச்சு! அந்த இன்சிடென்க்கு பிறகு நீயும் உன் புருஷனும் சுதாரிச்சிடீங்க, நான் எவ்ளோ டிரை பண்ணியும் உன்னோட ஃப்ரணஸைசை தொடக் கூட முடியல..‌‌. சரி உன்னை போட்டுத்தள்ள நெனச்ச! உன்னோட புருஷன் இருபத்தி நாலு மணி நேரமும் உன்னை வாட்ச் பண்ண ரெண்டு பேரை உனக்கே தெரியாம போட்டிருந்தான். ம்ம்ம்! போலிஸ்காரிக்கே பாதுகாப்புக்கு ரெண்டு பேர்” என்று அலட்சியமாக சிரித்தவள், “உன்னை நேராடிய எதும் செய்ய முடியாதுனு தான் நா உன்னோட விக்னஸ்ல அடிச்சேன். எனக்குத் தெரியும் சின்ன வயசுல இருந்தே உன்னோட குடும்பம் தான் உன்னோட பெரிய வீக்னஸ்னு! அதான் உன்னோட அருமை அண்ணன் பசங்களை தூக்கிட்டேன்” என்று சொல்லி சிரிக்க.

 

யுக்தா அவளை பார்த்து அலட்சியமாக சிரித்தவள். “உனக்கு ஸ்கூல் டேஸ்ல இருந்தே என்னை தெரியும்னு எனக்கு நல்லா தெரியும் டி. ஆனா, எம் புருஷனை பத்தி உனக்கு தெரியாதே?” என்று ஏளனமாக சிரித்தவள், “நீ சொன்னா மாதிரி என்னோட குடும்பம் தான் என்னோட பலகீனம்… அட் தீ சேம் டைம், அது தான் டி என்னோட பெரிய பலம்! எனக்கு தெரியும். நீ என் பக்கம் வர மாட்டேன்னு.. என்னோட குடும்பத்தை தான் டார்கெட் பண்ணுவேன்னு… ஆனா, என்னை மீறி நிஷா, ஜானவி, ராஷ்மி நெழல கூட உன்னால தொட முடியாது. எம் புருஷனை மீறி உன்னோட மூச்சு காத்து கூட எம் மேல படாது. ராம், வினய்,‌ வெற்றி, ஜீவா, விஷ்ணு இருக்க தெச பக்கம் போன கூட, நீ உயிரோட திரும்ப முடியாது. அது உனக்கும் தெரியும். சோ நீ என் வீட்டு குழந்தைங்களை தான் தூக்குவேன்னு தெரிஞ்சு தான் டி. அவங்களை தனிய ஸ்கூலுக்கு அனுப்பினேன்… நீ என்னை ஃபாலோ பன்றேன்னு தெரிஞ்சு தான் டி, உன்னை புடிக்கிற ச்சே! உன்னை முடிக்கிற வேலையை எம் புருஷன் கிட்ட விட்டுட்டேன்” என்று கர்வமாக சிரிக்க,

 

“ம்ம்ம் நீ சொன்னது எல்லாம் சரிதான் யுக்தா. ஆனா, பாரு உன்னோட அந்த அருமை புருஷனால இப்ப உன்னையும் காப்பாத்த முடியாது. அந்த குழந்தைகளையும் காப்பாத்த முடியாது. நீ இருக்க ஏடமே அவனுக்கு தெரியாது. தென் அந்த குழந்தைகளை நா ஒரு சீக்ரெட் ப்ளேஸ்ல மறச்சு வச்சிருக்கேன். அவங்களை சுத்தி பத்து ரவுடிகளை பாதுக்காப்புக்கு வச்சிருக்கேன். சோ! எல்லாம் முடிஞ்சு போச்சு யுக்தா” என்று சிரித்தவள், “உதய்கிட்ட இருந்து நீ எடுத்த பணம் அந்த நிஷாகிட்ட தானே இருக்கு? அவளுக்கு அவ புருஷனை விட நீ தானா முக்கியம்… நீ உயிரோட வேணும்னா, பணத்தை எடுத்துக்கிட்ட ஜானவி, ராஷ்மிய கூட்டிட்டு இங்க வான்னு சொன்ன அடுத்த நிமிஷம் அவங்க மூனு பேரும் இங்க இருப்பாங்க. அடுத்த நிமிஷம் உங்க நாளு பேரையும் கொன்னுட்டு ப்ரணவ்வை கடத்திட்டு நா இந்த நாட்ட விட்டே போய்டுவேன்” என்று திமிராக சொல்ல…

 

யுக்தா தன் உடல் வலியை பொறுத்துக்கொண்டு பலமாக சிரித்தவள், அடியேய்? நீயெல்லாம் இன்னும் வளரவே இல்லயே டி! அதுக்குள்ள ரிவெஞ்சு எடுக்குறேன்னு கெளம்பிட்ட? ஒரு குழந்தை புள்ள எல்லாம் எனக்கு எதிரி! அய்யோ! அய்யோ! இத வெளிய சொன்ன வெட்கக்கேடு டி” என்று தலையில் அடித்துக்கொண்டவள், “அடியேய்! நீ பாதுகாப்புக்கு வச்சிருக்கேன்னு சொன்னீயே பத்து பேர் அவங்களுக்கு ஃபோன் போடு… அதுல ஒருத்தனாது உன் ஃபோனை அட்டென் பண்ணிடட்டும்.‌ நானே அந்த பணத்தையும், ப்ரணவ்வையும் உன்கிட்ட ஒப்படைக்குறேன்” என்று திடமாக சொல்ல… ப்ரீத்தி உள்ளுக்குள் அதிர்ந்தாலும்.. தான் ஃபோனை எடுத்து அந்த ரவுடிகளின் நம்பரை அழுத்தி காதில் வைத்தவள் அந்த பக்கம் யாரும் ஃபோனை எடுக்காமல் போக, பதட்டத்தில் நகத்தை கடித்துக்கொண்டு இங்கும் அங்கும் நடக்க,

 

“என்ன ஒருத்தனும் ஃபோன் அட்டென் பண்ணலயா?…” என்று நக்கலாக கேட்ட யுக்தா, “உயிரோட இருந்த தானே கால் அட்டென் பண்ணமுடியும். இன்னேரம் எம் புருஷன் அவங்க எல்லாரையும் முடிச்சிட்டு குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிட்டு” என்றவள் கஷ்டப்பட்டு தன் கையை தூக்கி தன் வாட்ச்சில் டைம் பார்த்து, “ம்ம்ம்! இப்ப இன்னேரம் இங்க வந்திருப்பான்” என்று சொல்லி முடிக்கும் முன் கீழே ப்ரீத்தியின் அடி ஆட்கள் அலறும் சத்தம் தெளிவாக கேட்க, “வந்துட்டான்” என்று யுக்தா சிரிக்க! ப்ரீத்திக்கு பைத்தியமே பிடித்துவிட்டது, “எப்டி டி எப்டி அவன் இங்க வந்தான்” என்று தலைமுடியை பிடித்துக்கொண்டு ப்ரீத்தி கத்த,

 

“அடியேய் அப்ரசெண்ட் வில்லி? நீயெல்லாம் பாதியில தான் டி வில்லி, ஆனா, எம் புருஷன் பொறந்ததுல இருந்தே வில்லன். என்னையே ஏமாத்தி எனக்கு தெரியாமயே என்னை கல்யாணம் பண்ண தில்லாலங்கடி டி அவன்! அவன்கிட்ட உன் பருப்பு வேகுமா?? போலிஸ்காரிக்கே பாதுகாப்பன்னு நக்கலடிச்சியே? அது அவன் எனக்கு போட்ட பாதுகாப்பு இல்ல லூசே… உனக்கு விரிச்ச வலை! எம் பின்னாடி ரெண்டு பேர் வருவாங்கன்னு தெரிஞ்சு என்னை இங்க வர வச்ச உன் அறிவை கண்டு நா வியக்கேன் டி” என்று யுக்தா தான் வலியை மறந்து சத்தமாக சிரிக்க.

 

ப்ரீத்தி பேய் பிடித்தது போல் கத்தி அலறியவள், “என்னோட ப்ளான எல்லாம் போச்சு! ஏய் உன்னா சும்மா விடமாட்டேன் டி! உன் புருஷன் இங்க வரும்போது உன்னோட பொணத்தை தான் பாக்கணும்” என்று வெறி வந்தது போல் கத்தியவள் இரும்பு கம்பியை யுக்தாவை நோக்கி ஓங்க… அடுத்த நொடி ஆதி விட்ட அறையில் கன்னம் சிவந்து வாய் கிழிந்து ரத்தம் ஒழுக மயங்கி கீழே விழுந்து கிடந்தாள் ப்ரீத்தி

 

பாதி உயிராக கிடந்த தன்னுயிரை கையில் ஏந்திக்கொண்டு ஆதி வெளியே ஓடி வரவும்… நிஷாவும், வினய்யும் காரில் அங்கு வருவும் சரியாக இருந்தது. ஆதி யுக்தாவை நெஞ்சோடு சேர்ந்து அணைத்தபடி வினய்யை காரை வேகமாக ஓட்ட சொல்லி கத்திக் கொண்டிருக்க, யுக்தா அரை மயக்கத்தில் தனக்காக துடிக்கும் ஆதியின் முகத்தை பார்த்து சிரித்தபடியே, “அவ்ளோ சீக்கிரம் நா உன்னை தனிய விட்டு போகமாட்டேன் டா” என்றவளை ஆதி இன்னும் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைக்க… தன்னவன் காதலை கண்களில் நிறைத்தபடி யுக்தா சுயநினைவை மெல்ல மெல்ல இழந்துகொண்டிருந்தாள்.

 

“ஏய் ஏய் எந்திரி டி! இன்னும் கொஞ்ச தூரம் தான்! ஹாஸ்பிடல் வந்துடுச்சு” என்று அவள் கன்னத்தில் மாறிமாறி தட்ட, யுக்தாவிடம் எந்த அசைவும் இல்லை.

 

ஆறு மணிநேரம் ஆமையாக நகர… குடும்பம் மொத்தமும் அழுவதற்கு கூட தெம்பு இல்லாமல் யுக்தா அறைக்கு வெளியே ஆ‌ளுக்கு ஒரு முலையில் முடிங்கி இருந்தனர்.

 

 

இருள் படர்ந்த முகத்துடன் அந்த அறையை விட்டு வெளியே வந்த ஜீவாவை அனைவரும் கண்ணீர் திரையை விலகிவிட்டு அவன் வாயில் இருந்து யுக்தாவிற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லும் வார்த்தையை கேட்பதற்காக ஆவலாக அவனை பாத்திருக்க? ஜீவா இடவலமாக தலையை ஆட்டியவன் கண்கள் கலங்கி உதடு துடிக்க, “அவளுக்கு கொடுத்திருக்க பாய்சன் ரொம்ப ஹெவி. விஷம் உடம்பு முழுக்க வேகாம பரவிட்டு இருக்கு, என்னால ஒன்னும் செய்ய முடியல” என்று சொல்ல.. ஜானவி அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தாள்.

 

“ஏன்டா நீ டாக்டர் தானே..?? நீயே இப்டி நம்பிக்கை இல்லாம பேசற..? அந்த ஒரு உயிரை உனக்கு காப்பாத்த துப்பில்லாட்டி நீயெல்லாம் என்ன இதுக்கு டா டாக்டருக்கு படிச்ச? உனக்கெல்லாம் எதுக்கு டா டாக்டர் பட்டம் இவ்வளோ பெரிய ஹாஸ்பிடல்” என்று கத்தியவள் ஜீவா சட்டை கலரை பிடித்து உலுக்கி, “இங்க பாரு நீ என்ன செய்வீயே? ஏது செய்வீயே? எனக்கு தெரியாது. எனக்கு என்னோட யுகி வேணும்… எனக்கு அவ வேணும். மரியாதையா அவளை எனக்கு திருப்பிக் குடு” என்று காத்தியவள் அப்டியே மயங்கிச் சரிய, ஆதி அவளை தாங்கிப் பிடித்து சேரில் உட்கார வைத்தவன். ஜீவா அருகில் வந்து, “அந்த பாஸ்சனுக்கு அண்டிடோட் இல்லையா ஜீவா??” என்று கலக்கமாக கேட்க.

 

“இது ஏதோ பாம்பு விஷம் மாதிரி இருக்கு ஆதி. நானும் முடிஞ்ச வரை டிரை பண்ணிட்டேன். என்னால ஒன்னும் பண்ண முடியல” எனும் போதே அவன் கண்களில் கண்ணீர் துளிகள் வேகமாக வெளியே வந்து விட.. அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தாள் ராஜீ. கூடவே தன் அப்பாவின் நின்று போன பாய்சன்ஸ் பற்றி ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்தி வரும் வருணையும் உடன் அழைத்து வந்திருந்தாள்.

 

வருண் யுக்தாவின் நிலையையும், அவள் மருத்துவ பரிசோதனை ரிப்பேட்டையும் பார்த்தவன். உடனடியாக அவளுக்கு தன்னிடம் இருந்த அண்டிடோட் (விஷ முறிவு மருந்து) மருந்தை அவள் உடலில் செலுத்தினான்.

 

“இன்னும் மூனு மணி நேரத்துல அவங்களுக்கு கான்ஷீயஸ் வரணும். அப்ப தான் நா கூடுத்திருக்க மருந்து வேலை செய்யும். இல்லாட்டி?” என்று இயலாமையோடு தலையை ஆடிய வருண் அங்கிருந்து நகர… அங்கிருந்த மொத்த பேருக்கு நெஞ்சில் நெருப்பள்ளி வைத்து போல் உள்ளம் எரிந்தது.

 

அனைவரும் அவள் காதில் விழும்படி அவள் பெயரை கத்தி கத்தி அழைக்க அவளிடம் எந்த அசைவும் இல்லை. ப்ரணவ்வின அம்மா! அம்மா! என்று கதறும் சத்தம் கூட அவள் காதுகளை எட்டவில்லை. அவள் உயிர் கொஞ்ச கொஞ்சமாக அவள் கூட்டைவிட்டு வெளியேறி கொண்டிருக்க… அதை அவள் உடலிலேயே க‌ட்டிவைக்க, அனைவரும் போராடிக் கொண்டிருந்தனர்.

 

நேரம் ஆக ஆக யுக்தா உடலில் எந்த மாற்றம் இல்லாமல் போக, ஆதி மெதுவாக அவள் அருகில் வந்தவன் அந்த அறையில் இருந்த அனைவரையும் வெளியே இருக்க சொல்லிவிட்டு யுக்தா படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் ஒரு சேரை போட்டு உட்கார்தவன். அவள் வலக்கையை எடுத்து தன் இரு உள்ளங்கைக்குள்ளும் அழுத்தி பிடித்துக் கொண்டு, அவள் முகத்தையே பார்த்தபடி இருக்க! அவன் உதடுகள் எதை எதையே பேச ஆரம்பித்தது.

 

“உனக்கு தெரியும் இல்லடி? இப்படி தான் நடக்கப்போகுத்துன்னு தெரிஞ்சு தானா அன்னைக்கு நா இல்லாட்டி என்னையும், ப்ரணவ்வையும் நல்லா பாத்துப்பியான்னு பாட்டிகிட்ட கேட்ட நீ?.‌..” என்று கண் மூடிக் கிடக்கும் தன்னவளை முறைத்தவன். ப்ரீத்தி எப்டியும் உன்ன கொன்னுடுவான்னு தெரிஞ்சு தான் நீ அவளை புடிக்கிற வேலைய எனக்கு குடுத்தியா டி?? அப்ப உனக்கு எல்லாமே தெரியும் இல்ல? எல்லாம் தெரிஞ்ச உனக்கு! நீ இல்லாட்டி நான் இல்லான்னு ஏன்டி தெரியாம போச்சு? என் உசுரு உனக்குள்ள தான் கலந்திருக்குன்னு, ஏன்டி உனக்கு புரியல?” என்றவன் குரலில் அப்படி ஒரு வெறுமை. ம்ம்ம் என்று மூச்சை இழுத்து விட்டவன். “எனக்கு தெரியும் டி! நா பேசுறது எல்லாம் உனக்கு கேக்கும்னு எனக்கு நல்லா தெரியும்… ஏன்னா? இப்ப உன் மனசு முழுக்க நா தான் இருக்கேன். நா உன்னை விரும்புறதை விட நீ என்னை அதிகம் நேசிக்கிறன்னு எனக்கு தெரியும்… நீ என்னையும் ப்ரணவ்வையும், நம்ம குடும்பத்தையும் தனிய விட்டுப் போக மாட்ட, அது உன்னால முடியாது. நீ இல்லாம? உன் இம்சை இல்லாம? நா நிம்மதிய சந்தோஷமா இருக்குறத கண்டிப்ப நீ சகிச்சுக்க மாட்டான்னு எனக்கு தெரியும் டி! சோ? உனக்கு ஒன்னு ஆகாது. நீ சீக்கிரம் திரும்பி வந்துடுவா” என்றவன் தன் கைக்குள் இருந்த அவள் கையில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்து, “சீக்கிரம் கண்ணை தொற டி, ப்ளீஸ் டி! என்னால உன்ன இப்டி பாக்க முடியல” என்று புலம்பிக் கொண்டிருக்க. அப்போது உள்ளே வந்த ஜீவா மானிட்டரில் அவள் இதயம் துடிப்பு குறைத்து கொண்டே செல்வதை பார்த்தவன் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய, “ஆதி…………… ஆதி……… சாம்…………… சாம்………… நம்ம எல்லாரையும் விட்டு” என்றவன் வாயை பொத்திக்கொண்டு கதற…

ஆதி மெதுவாக திரும்பி ஜீவாவை பார்த்தவன். தன் இடக்கையை தூக்கி காட்ட. ஜீவா திகைத்துப்போய்! அப்படியே சிலையாகி நின்றான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!