அழகிய தமிழ் மகள்

IMG-20210123-WA0000-bf4a185c

அழகிய தமிழ் மகள் 1

“இருளைக் கிழித்துச் சூரியன் வெளியே வர காத்திருக்கும் விடியல் காலைப்பொழுதில், இருட்டை கிழித்து, வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது அந்தக் கார்..

“தன் மொபைலில் இளையராஜாவின் பாடல்களை மெல்லிய ஓசையில் ஓலிக்க விட்டு, இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிய காத்திருக்கும் கூர்க்கின் (கொடகு) அமைதியான அழகை ரசித்துக்கொண்டு வந்தான் ஆதித்யன்..

“கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம் கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்று. கர்நாடக மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலநாட் பிரதேசத்தில் இது உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டரிலிருந்து 1715 மீட்டர் வரையான உயரத்தில் அமைந்துள்ளது.”

“இந்த மலைப்பிரதேசத்தில் என்றும் பசுமையான காடுகள், வளமான பசுமை பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பரந்து காணப்படும் காபி மற்றும் தேயிலை தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் மற்றும் சலசல வென ஓடும் ஓடைகள் என்று பல விதமான இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால் இது கர்நாடகாவின் காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது..”

“கூர்க் பிரதேசம் ஒரு புராதனமான அழகை இங்குள்ள ஆரவாரமில்லாத அமைதியான நகரங்கள் பெற்றுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எந்த விதமான சந்தடியுமற்ற மிதமான வேகத்தில் நகரும் ஒரு வாழ்க்கை சூழலை – மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு மற்றும் கிழக்கு பக்க சரிவுகளின் வியக்கத் தக்க இயற்கை காட்சிகளுடன் இங்குப் பார்த்து ரசித்து அனுபவிக்கலாம்.. அமைதியான சுழலில் அழகாக வாழ்க்கை வாழ ஏற்ற இடம் கூர்க்..”

“தன்னுடைய புதிய வேலையில் சேர்வதற்காக கூர்க்கு சென்று கொண்டிருக்கிறான் ஆதித்யன்.. தன் நண்பன் ஒருவன் மூலம் கூர்க்கில் உள்ள காபி எஸ்டேட்டில் அவனுக்கு வேலை கிடைக்க, கிளம்பி விட்டான் இந்தியாவின் ஸ்காட்லாந்து நோக்கி..”

“ஆதித், தமிழன் என்று உரைக்கும் கவர்ந்து இழுக்கும் தேன் நிறம், வலிமையான உடல்வாகு, 6’2 உயரம், கருத்த மீசை, அதோடு ஒட்டி உறவாடும் டீரீம் செய்த தாடி, என்கிட்ட கொஞ்சம் உஷார்ர இரு என்று எச்சரிக்கும் கூர்மையான பார்வை, அடங்காமல் காற்றில் அலையும் அடாங்கபிடாரி தலைமுடி, எதையும் சாதிக்க முடியும் என்ற திமிரும், தைரியமும் கொண்ட மனதுடைய முப்பது வயது ஆண்மகன்..”

“விடிந்து, சூரிய வெப்பத்தில் பனித்துளி கரைந்து, வானம் வெளிச்சம் போர்த்தி இருந்த பொழுது..”

“இயற்கை எழில் கொஞ்சும், பனி போர்த்திய காபி எஸ்டேடை ரசித்துக்கொண்டே நடந்தான் ஆதித்.. இனி இங்கு தான் அவனுக்கு வேலை.. அந்தக் காபி எஸ்டேட் ஓனர்க்கு இந்தக் காபி எஸ்டேட்டோடு சேர்த்து, டீ எஸ்டேட்டும், ஆரஞ்சு தோட்டமும் உண்டு.. இந்த எல்லா எஸ்டேட் மற்றும் தோட்டத்தைப் பார்த்துக் கொள்ளும் மேனேஜருக்கு உதவியாகத் தன் ஆதித் இங்கு வந்திருக்கிறான்..

“அங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்காக இருந்த வீடுகளில் தனக்காக ஒதுக்கப்பட்ட வீட்டிற்குச் சென்றவன்… ஹீட்டரை போட்டு கொதிக்கும் தண்ணீரில் குஷியாகக் குளித்துவிட்டு, உடைகளை மாற்றி வெளியே வந்தவனைக் கைகளில் காலை உணவோடு வரவேற்றார் வேலு..”

“வேலு அந்த எஸ்டேட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்.. இந்த எஸ்டேட்டில் தான் வேலை செய்கிறார்.. புதிதாக வந்த ஆதித்யனுக்குக் கூடமட உதவி செய்ய எஸ்டேட் ஓனர் பிரபு, வேலுவை இங்கு அனுப்பி இருக்கிறார்.. வேலுவிற்கு அங்கு இருக்கும் அனைவரை பற்றியும் நன்கு தெரியும்..”

“வேலுவுடன் இயல்பாக இணைந்து கொண்ட ஆதித்.. அந்த எஸ்டேட், அதைச் சுற்றியுள்ள இடங்கள், அவன் வேலை செய்யப்போகும் இடம் மற்றும் உடன் வேலை செய்ய போகிறவர்கள் பற்றி கேட்டு தெரிந்து கொண்டான்.. பிரபு வேலுவை, எஸ்டேட் மேனேஜரிடம் ஆதித்தை அறிமுகப்படுத்த சொல்லி சொல்லி இருந்தான்..”

“வேலுவோடு அந்த மேனேஜரை பார்க்க எஸ்டேட் ஆஃபீஸ்க்குச் சென்றான் ஆதித்.. ஆஃபீஸ்க்குக் கொஞ்சம் தூரம் முன் ஒரு ஜீப் ரிப்பேராகி நிற்க.. வேலு அது நம்ம எஸ்டேட் வண்டி மாதிரி இருக்கு தம்பி வாங்க போய்ப் பாப்போம் என்றதும், ஆதித் வேலுவோடு அந்த ஜீப் அருகில் சென்றவன்.. ஜீப்புக்கு கீழே ஸ்போட்ஸ் ஷூ அணிந்து ஜீன்ஸ் போட்ட ரெண்டு கால்கள் மட்டும் வெளியில் தெரிவதை கண்டவன்.. என்ன ப்ராப்ளம்.?? என்று கேட்க.. அந்த ஜீப் டிரைவர் ஆதித்தையும், வேலுவையும் மாறி மாறி பார்த்தவன்.. இது யாரு வேலாண்ணா என்று கேட்க??”

“இவரு நம்ம எஸ்டேட்டில் புதுச வேலைக்குச் சேந்திருக்காரு டா.. அதுசரி வண்டிக்கு என்ன ஆச்சு..?? நா வேணும்னா மெக்கானிகை கூட்டிவரட்ட என்று கேட்க.. அந்த டிரைவர் வாய் திறக்கும் முன்.. அதெல்லாம் வேணா வேலண்ணா, வேல முடிஞ்சிது என்று வந்த பெண் குரலில் ஆதித் அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்று சுற்றிமுற்றி பார்க்க.. வேலுவுக்கு அந்தக் குரல் நல்ல பரிட்சையம் என்பதால் ஜீப் டிரைவரை பார்க்க.. அவன் ஆமாம் என்று தலையாட்டினான்..”

“ஜீப்புக்கு அடியில் இருந்து கையில் டூல் பாக்ஸ்யுடன் வெளியே வந்தாள் ஒரு இருபத்தியேழு வயது பெண்.. கருப்பு நிற ஜீன்ஸ், அடர்நில நிற முழுக்கை சட்டை, அதை முட்டி வரை மடித்து வைத்திருந்தாள்.. முகம், கைகளில் கீரிஸ் ஒட்டி இருந்தது. மொத்த முடியையும் அள்ளி ஹய்பண் போட்டிருக்க, சில முடிகள் மட்டும் அவள் முகத்தில் தவழ்ந்து விளையாடியது.. 5’7 அடி உயரத்தில், சற்றும் அலைபாயாத தீர்க்கமான கண்களுடன், உறவைத்து தோலுரித்த பாதாம் நிறத்தில், சற்றும் சதைப்பற்று இல்லாது, செதுக்கி வைத்த சிலை போன்ற உடல்வாகு, மொத்தத்தில் அந்த நிமிடம் அழுக்காய் இருந்த அழகுமலர் அவள்..”

“ஆதித் அந்தப் பெண்ணையே பார்த்திருக்க..”

வேலு “உங்கள பாக்க தாம்மா எஸ்டேட்டுக்கு வந்திட்டு இருந்தோம் என்ற வேலுவை என்ன என்பது போல் பார்த்தவள்.. டூல் பாக்ஸை ஜீப்பில் வைத்துவிட்டு.. தன் ஜெர்கீனை எடுத்துப் போட்டுக்கொண்டே.. என்ன வேலண்ணா என்ன விஷயம்.?? இவ்ளோ காலையில என்ன பாக்க வந்திருக்கீங்க..?? இவரு யாரு என்று ஆதித்தை பார்த்து கேட்க??”

“இவரு பேரு ஆதித்யன் ம்மா.. முதலாளி புதுசா ஒருத்தர் வேலைக்கு வரர்ன்னு சொல்லி இருந்தாரே அவர் தாம்மா.. உங்கள பாக்க தான் கூட்டி வந்தேன் என்றவர்.. ஆதித்திடம் திரும்பி.. இவங்க தான் தம்பி நம்ம மேனேஜர் என்று அவளை அறிமுகம் செய்து வைத்தார்..”

ஆதித் “ஹாய் மேடம், ஐம் ஆதித்யன், இன் ஷாட் ஆதித் என்று தன் வலது கையை நீட்ட.. தன் இரு கைகளைச் சேர்த்து வணக்கம் என்றவள்.. ஹாய் மிஸ்டர் ஆதித்யன்.. ஐம் சம்யுக்தா.. நைஸ் டூ மீட் யூ என்று கம்பீரமாகச் சொன்னவள்.. திரும்பி ஜீப் டிரைவரிடம் வண்டிய ஸ்டார்ட் பண்ணி பாரு என்று சொல்ல.. அவள் கை பட்ட நேரம் வண்டி உடனே ஸ்டார்ட் ஆனது.. ம்ம்ம் என்று தலையாட்டியவள்.. ஓகே தென், எனக்கு டைம் ஆச்சு ஐம் லிவிங் என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு சென்றுவிட.. சரியான திமிர் புடிச்சவள இருப்பா போலயே, ஆன வேலு இந்தப் பொண்ணை ஆஹா, ஓகோன்னு புகழ்ந்தாரு என்று ஆதித் மனம் யுக்தாவை பற்றி யோசிக்க..”

“வேலு ஜீப் டிரைவரின் என்ன ஆச்சு என்று விசாரிக்க..”

“நா இந்தப் பக்கம் வரும்போது தீடிர்னு வண்டி மக்கர் பண்ணிடுச்சு வேலண்ணா.. வண்டியில முக்கியமான பொருள் இருக்குக் கரெக்ட் டைமுக்கு டெலிவரி பண்ணனும், வண்டி இப்புடி ஆகவும் எனக்கு என்ன பண்றதுன்னு ஒன்னு புரியாம நின்னுட்டு இருந்தேன்.. அப்ப தான் நம்ம மேனேஜர் அம்மா புள்ளைய ஸ்கூல்ல விட்டுட்டு இந்த வழிய வந்தாங்க.. என்னை பாத்து என்ன வெவரம்னு கேட்டுட்டு.. அவங்களே ஜீப்பை ரிப்பேர் பண்ணி கொடுத்துட்டு போறாங்க என்று வண்டி சரியான சந்தோஷத்தை சொல்ல..”

“ஆதித்துக்குக் குழப்பம்.. இவ்ளோ பெரிய எஸ்டேட் மேனேஜர்.. அவங்கள வலிய வந்து வண்டிய ரிப்பேர் பண்ணி தந்துட்டு போறாங்களா?? என்று ஆச்சரியமாகச் கேட்க..”

“அதுதான் தம்பி அவங்க.. … நல்ல பொண்ணு, எல்லாரையும் ஒரே மாதிரி தான் பாப்பாங்க.. அவங்க இங்க வந்து ரெண்டு வருஷம் தான் ஆச்சு.. அதிகம் யார்கிட்டையும் பேசமாட்டாங்க.. அவங்க உண்டு அவங்க வேல உண்டுன்னு இருப்பாங்க.. ஆன எங்களுக்கு நெறய உதவி செய்வாங்க.. இங்க இருக்க எல்லாருக்கும் அவங்களை ரொம்ப புடிக்கும்.. ஆள் பாத்து பழகமாட்டாங்க.. அவங்களுக்கு எல்லாரும் ஒன்னு தான்.. ஒய்வு நேரத்துல இங்க இருக்கச் சின்ன புள்ளைகளுக்குப் படிப்பு கூட சொல்லி தருவாங்க தம்பி.. உதவின்னு கேட்டு போனா அவங்களால முடிஞ்சதை கண்டிப்பா செய்வாங்க.. இங்க வந்த கொஞ்ச நாள்ல எங்களுக்கு நல்ல வீடு, சின்ன ஹாஸ்பிடல், இன்னும் அடிப்படை தேவைகளை எல்லாம் முதலாளி கிட்ட பேசி செஞ்சி தந்தாங்க தம்பி.. அந்தப் பொண்ணு எங்க எல்லார் மனசுலையும் அசைக்க முடியாத இடத்தைப் புடிச்சிட்டாங்க என்று வேலுவும், அந்த டிரைவரும் யுக்தாவை புகழ்ந்து தள்ள, ஆதித்துக்குக் கூட, கௌரவம் பார்க்காமல் யுக்தா நடுரோட்டில் தரையில் படுத்துக்கொண்டு ஜீப்பை ரிப்பேர் செய்ததைப் பார்த்த பிறகு வேலு அவளைப் புகழ்வது சரி என்றே பட்டது..”

“ஆதித் அன்று முழுவதும் எஸ்டேட் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் இடங்களைப் பார்ப்பதிலேயே முழுநாளும் கழிந்துவிட.. மாலை நேரத்தில் அவன் வீடுக்குச் செல்லும் வழியில் நடந்து வரும்போது ஒரு சிறுவன் வேகமாக ஓடிவந்து சாலையில் தவறி விழுவதைப் பார்த்தவன்.. வேகமாகச் சென்று அந்தச் சிறுவனைத் தூக்கியவன்.. என்ன குட்டிப் பையா பாத்து வர கூடாது.. இப்டியா வேகமாக ஓடி வர்ரது.. எங்கயாது அடிப்பட்டுருக்க என்று சிறுவன் முகம் பார்த்து கேட்க.. அந்தச் சிறுவன் இல்லை என்று தலையாட்ட.. ப்ரணவ் என்று ஓடி வந்த யுக்தா குழந்தையைப் பார்த்ததும்.. என்ன ப்ரணவ் இது.. இப்படி வேகமாக ஓடாதன்னு எத்தனை தடவ சொல்றது என்று அதட்டியவள்.. ஆதித்தை பார்த்துத் தேங்க்ஸ் என்க..”

”இட்ஸ் ஓகே மேடம், உங்க பையானா என்றவன்..?? ப்ரணவ்விடம் என்ன குட்டிப் பையா நீங்க தேங்க்ஸ் எல்லாம் சொல்லமாட்டிங்களா என்று விளையாட்டாகக் கேட்க..??”

“அவன் பேசமாட்டான் என்று சொல்லிக்கொண்டே ப்ரணவ்வை அணைத்தாள் யுக்தா..”

ஏன் மேடம்??..

“அவனுக்குப் பேச வராது, ஒரு ஆக்ஸிடென்ட் ல அவனுக்கு இப்படி ஆகிடுச்சு என்று விரக்கியாக எங்கோ பார்த்துக்கொண்டு அவள் சொல்ல.. ஆதித்க்கு ஒருமாதிரி ஆகிவிட்டது..”

“ப்ரணவ் அளவு குனிந்தவன்.. சாரி என்று செய்கையிலேயே சொல்ல.. ப்ரணவ் மலர்ந்து சிரித்தவன்.. இட்ஸ் ஓகே என்று செய்கையிலேயே பதில் தந்தான்.. அங்கு யாருக்கும் சைன் லாங்குவேஜ் தெரியாது என்பதால் ப்ரணவ் யாருடனும் அதிகம் பழகுவது இல்லை.. இப்போது ஆதித் சைன் லாங்குவேஜில் ப்ரணவ்விடம் பேச, முப்பது வயது ஆதித்க்கும், ஆறு வயது ப்ரணவ்விற்க்கும் இடையில் புதிதாக ஒரு குட்டி நட்பு மலர்ந்தது.. ஆதித் ஏதேதோ கேட்க.. கடைசியாக உங்க அப்பா எங்க என்று கேட்க.. ப்ரணவ் செய்த செய்கையில் அதிர்ந்த ஆதித், யுக்தாவை பார்க்க..”

“யுக்தா மெதுவாகத் தலையாட்டியவள்.. ‘ஹீஸ் நோ மோர்’ செத்து ரெண்டு வருஷம் ஆகுது என்று அழுத்தமாகச் சொன்னவள், ப்ரணவ்வை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட, போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித் பார்வையில் இப்போது யுக்தா மீது மதிப்புக் கூடியிருந்தது..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!