ஆட்டம்-14

ஆட்டம்-14

“பெரியம்மா! எங்க காலேஜ்ல ஒரு பையன் செம ஹான்ட்சமா இருக்கான் தெரியுமா.. பிஜி ஜாய்ன் பண்ணியிருக்கான்” அரட்டையில் மும்முரம் கொண்டிருந்த திலோத்தமையின் அதரங்கள், வீட்டிலிருந்த லிப்ட் திறக்கப்படுவதைக் கண்டு,

‘அவங்களே கீழ வந்துட்டாங்க போல’ நறுமுகையும், உத்ராவும் தான் வருவதாக நினைத்துக் கொண்டவள்,

“அந்த பையன் அவனோட கூலர்ஸை ஸ்டைலா கழட்டுவான் பாருங்க” இதயத்தின் மேல் இரு கைகளையும் பொத்தி வைத்து, கன்னங்களில் ரசனை பரவ, பன்னீர் இதழ்கள் குவித்து கூறியவள் அமர்ந்திருந்ததோ, அந்த வீட்டின் ராஜகரீகமான டைனிங் அறையில்.

சமையல் அறையை பார்த்தபடி, டைனிங் டேபிளின் மேல் அமர்ந்து கொண்டிருந்தாள்.

“பெரியம்மா! அதுவும் அந்த பையன் காலேஜ் கல்சுரல்ஸ்ல பாடுனான் பாருங்க..” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மூன்று பெண்களுக்கும் பழச்சாறை, சமையல் அறையில் இருந்து எடுத்து வந்த அழகியின் விழிகள் திகைப்பிலும் திகிலிலும் விரிய, கால்கள் அந்த விலையுயர்ந்த லஸ்ட்ரஸ் அன்ட் மக்ரானா மார்பிலோடு (Lustrous and makrana marble) உறைந்து போக, தன்னை மறந்து பேசிக் கொண்டிருக்கும் திலோத்தமையையும், அவளுக்கு பின் அமர்ந்திருப்பவனையும் மாறி மாறி அழகி முழிக்க, பெரியம்மாவின் பார்வையில் தலையை திருப்பிப் பார்த்த திலோத்தமை, வானிலிருந்து பூமிக்கு வரும் லட்சம் சக்திவாய்ந்த மின்னல், தன்னை தாக்கி வீசிய உணர்வில் டைனிங் டேபிளில் இருந்து குதித்தே விட்டாள்.

ஆம்! அபிமன்யு தான் அமர்ந்திருந்தான்.

அதுவும் இரு கரங்களையும் டேபிளில் வைத்தபடி, நன்றாக சாயந்து, பேசிக் கொண்டிருக்கும் தங்கையின் மேல், தன் புலிப் பார்வை கொண்டு துளைத்தபடியே!

எச்சிலை விழுங்கினாள் இரட்டை வேங்கைகளின் தங்கை!

அவன் வந்தது கூட தெரியாது தான் பேசிக் கொண்டிருந்ததை நினைத்தவளுக்கு, அடி வயிற்றில் தொடங்கி, நெஞ்சம் வரை பதறியது.

தன்னைப் பார்த்ததும் தங்கை குதித்ததையும், என்ன செய்வது என்று தெரியாது திருட்டு முழி முழிப்பதையும், அவ்வப்போது தன் அன்னையை பக்கவாட்டாக திரும்பிப் பார்ப்பதையும் கண்டவன், குரலை செருமிவிட்டு, “மேல யாரு வந்தா?” என்று கணீர்க் குரலில் கேட்க இருவருக்கே, ‘ஐயோ’ என்றிருந்தது. தெரிந்துமே தான் கேட்டான்.

அவனுக்கு விஜயவர்தன், ரஞ்சனி, உத்ராவை பிடிக்கவே பிடிக்காது அல்லவா!

உத்ராவை பார்த்துவிட்டானோ?

என்ன ஆயிற்று?

அவள் எங்கே?

இருவருக்கும பல கேள்விகள் மனதுக்குள் புயலைப் போல கிளம்பிக் கொண்டு, ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டிக் கொண்டு வந்து கிலியை பரப்பியது.

“என்னாச்சு அபி? நம்ம உத்ரா தான்” அவசரமாக பேசும் அன்னையை போரின் வாள் போன்று பளபளக்கும் கூர்மையான பார்வை பார்த்தவன்,

“நம்ம?” என்று நக்கல் தெறிக்க கேட்க, அவரின் இதழ்கள் அதற்கு மேல் பேச முனையவில்லை.

அவனின் கேள்வியிலேயே அவன் அவளை எங்கு வைத்திருக்கிறான் என்று அழகிக்கும் புரிந்தது. திலோத்தமைக்கும் நன்றாகவே புரிந்தது.

வழக்கம் போல வலது பெருவிரலால் இடது புருவத்தை தீண்டி கடும் ஆத்திரத்தை கட்டுப்படுத்தி எழுந்தவன், “அவ மயங்கி விழுந்துட்டா.. நறுமுகை ரூம்ல விட்டுட்டு வந்திருக்கேன்” செய்தியைப் போல சொல்லிவிட்டு, தன் வேலை முடிந்தது என்று அவன் தனது வழக்கமான சுறுசுறுப்பான நடையுடன் நகர, அழகியும், திலோத்தமையும் அடித்து பிடித்து மேலே ஓட, வெளியே சென்று கொண்டிருந்தவனுக்கு திரும்பாமலேயே அன்னையும், தங்கையும் ஓடும் வேகம் புரிய, அவனின் வதனமோ இறுகிப் போனது.

இதே சமயம் நறுமுகையின் படுக்கையில் படுத்திருந்த உத்ராவுக்கு முழிப்புத் தட்ட, கண்களைத் திறந்தவளுக்கு தான் இந்தியாவில் இருப்பது கூட முதலில் நினைவில் இல்லை போலும். அன்னை தந்தையை தேடியது அவள் விழிகள்.

ஆனால், சற்று விநாடியில் ஒவ்வொன்றாக நினைவில் அரங்கேற, இறுதியாக அபிமன்யுவின் வலுவான இரும்புக் கரங்களில், மயங்கி விழுந்தது நினைவு வர, அவனின் முரட்டு ஸ்பரிசம், அவள் மேனியில் இப்போது இருப்பது போல உணர்ந்தவள், லட்சம் மின்சாரம் உடலில் தாக்கிய உணர்வில் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் தூக்கிவாரிப் போட எழுந்து அமர, திடீரென எழுந்ததின் தாக்கமாக மீண்டும் தலை லேசாக சுற்றியது.

அவள் தலையை பிடித்துக் கொள்ள, அவளுக்கு தண்ணீரை எடுத்து வந்த நறுமுகை, “ஹே உத்ரா!” என்று அவளின் முதுகில் தட்டியவள்,

“ரிலாக்ஸ். என் ரூம் தான் இது. கொஞ்ச நேரம் படு” அவள் அவளை படுக்க வைத்துக் கொண்டிருக்கும் போதே, உள்ளே அழகியும் திலோத்தமையும் வந்துவிட்டனர்.

“என்னாச்சு?” இருவரும் ஒரே சமயத்தில் படுத்திருந்தவளை பார்த்தபடியே நறுமுகையிடம் வினவ,

“ஒண்ணுமில்ல அத்தை. என் ரூமுன்னு நினைச்சு. அபி மாமா ரூமுக்குள்ள போயிட்டா போல. கரெக்டா இரண்டு டோருக்கு நடுவுல மாட்டிக்கிட்டா. மாமா செகன்ட் டோர் திறந்தவுடனே பயந்து மயங்கிட்டா” நறுமுகை வாயில் வந்தவரை கூறியிருக்க,

“வந்த அன்னிக்கே என் அண்ணனை பாத்து மயங்கிட்டையா டி” திலோத்தமை கேலியும் சிரிப்புமாக கேட்க, படுத்திருந்தபடியே அவளை முறைத்த உத்ரா, “இடியட்” என்று அவளைப் பார்த்து பல்லைக் கடித்தாள்.

நறுமுகையின் ஃபோன் இசைக்க, அதை எடுத்துப் பார்த்தவள், தனது ஆபிஸ் சூட்டில், “அத்தை, அபி மாமா தான். ஐ ஹேவ் டூ லீவ். பை (I have to leave. Bye)” என்றவள், “பை உத்ரா, பை திலோ” என்றுவிட்டு பறக்க,

“அத்தை நானும் கிளம்பறேன்” என்று உத்ரா எழ, “படுடா” என்றார் அழகி.

“இல்லை அத்தை. எனக்கு எதுவும் இல்லை” என்று எழுந்து அமர்ந்தவள், திலோத்தமையிடம் போகலாம் என்பதுபோல தலையசைக்க, மூவரும் எழுந்தனர்.

அழகி முன்னே செல்ல, அவரைத் தொடர்ந்து உத்ரா செல்ல, அவளுக்கு பின் வந்த திலோத்தமை உத்ராவின் ஷ்ரக் (shrug) பின்னே கிழிந்திருப்பதை பார்த்து,

“உத்ரா உன்னோட..” அவள் தொடங்க, சலாரென அவளைத் திரும்பிப் பார்த்தவள், தன் இதழ்களின் மேல் விரலை வைத்து விழிகளாலேயே பேசாதே என்பது போல விழிகளால் சொல்ல, அவளும் வாயை மூடிக் கொண்டாள்.

உத்ராவின் அருகே வந்த திலோத்தமை அவளின் தோளில் கை போட்டு கிழிந்த இடத்தை மறைத்துக் கொள்ள, “சரி கிளம்பறோம் அத்தை” என்றாள் புன்னகையுடன்.

“வர்றோம்னு சொல்லுடா” அவளை அழகி திருத்த,

‘எது மறுபடியுமா?’ உள்ளுக்குள் அதிர்ந்து போனவள், “சரி அத்தை” என்று கூற, இரு பெண்களும் அங்கிருந்து கிளம்பினர்.

அங்கிருந்து வந்தவர்களை மறித்த இமையரசி, “இரண்டு பேரும் வாங்க.. மட்டன் சூப் குடிங்க” என்றுவேறு அழைக்க, “அப்புறம் அப்புறம்” என்று இருவரும் மேலே ஓட, அவளின் மேலேயே கை போட்டுக் கொண்டு ஓடிய திலோத்தமையிடம்,

“அவள புடிச்சு ஏன் தொங்கிட்டே போற?” இமையரசி கீழ் இருந்தே குரல் கொடுக்க, “ம்ம் வேண்டுதல்” நடக்க நடக்க கூறிய திலோத்தமையை,

“கீழ வருவே இல்ல இருக்கு இரு உனக்கு. வாலு” திட்டிவிட்டுச் சென்றவர் தான் உத்ராவை கவனிக்கவில்லை. ஆனால், சிம்மவர்ம பூபதி கவனித்திருந்தார்.

அதுவும் உன்னிப்பாக உத்ராவின் வதனத்தை!

உத்ராவின் வதனத்தில் வீற்றிருந்த குழப்பத்தையும்! பொதிந்திருந்த சங்கோஜத்தையும்! மறைந்திருந்த நடுக்கத்தையும்!

யோசனையுடனேயே அமர்ந்திருந்தவர், நறுமுகைக்கு அழைக்க, காரில் அபிமன்யுவுடன் சென்று கொண்டிருந்தவளோ, “குட் மார்னிங் தாத்தா!” என்றாள் அவளின் புன்னகை அவரை எட்டும் வகையில்.

“குட் மார்னிங் டா” என்றவர், “அபி எங்க?” என்று கேட்டார்.

ஃபோனை காதில் வைத்திருந்தபடியே அபிமன்யுவை பார்த்தவள், “பக்கத்துல தான் தாத்தா. ட்ரைவ் பண்ணிட்டு இருக்காங்க” அவள் கூற, அபிமன்யுவிற்கு புரிந்தது அவர் எதற்காக கேட்கிறார் என்று.

இருந்தும் நறுமுகை தன்னை கேள்வியாய் பார்ப்பதை உணர்ந்தும், அவன் அதை பற்றி சிறிதும் கவலையின்றி காரினை செலுத்திக் கொண்டிருந்தான்.

“உத்ரா அங்க வந்தா பாத்தியாடா?” அவர் அடுத்து கேட்க,

“எஸ் தாத்தா. பாத்தேன்” என்றவள் மீண்டும் அபிமன்யுவையே பார்க்க, அவனின் உள்ளமோ சுனாமியாய் எழுந்து, அனைவரையும் வாரிச் சுருட்டி உள்ளிழுத்து, பேரழிவை ஏற்படுத்தும் விபரீத முடிவுகளுடன் காத்திருந்தது.

“அபி?” தாத்தா மீண்டும் கேட்க, “தா.. த்தா” என்று தயங்கினாள் பெண்ணவள்.

மீண்டும் அபிமன்யுவை பார்த்தாள்!

அதில் வெகுண்டு எழுந்தவனின் மனம், ஆங்காரத்தின் அதி மிகுதியில் கொதிக்கத் துவங்க, தன் மனதில் இருக்கும் அபாய உஷ்ணத்தை வெளியே காட்டாத வகையில், நறுமுகையிடம் கையை நீட்டினான்.

அவள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவனிடம் ஃபோனைத் தர, வாங்கி தனது காதில் வைத்தவன், ஒரு கரத்தால் தனது சான்டோரினி ப்ளாக் (Santorini black) நிற ரேன்ஞ் ரோவரை, செலுத்திக் கொண்டே ஒவ்வொரு வார்த்தைஃயையும் அழுத்தமாக உச்சரிக்க அவனின் உள்ளத்தில் இத்தனை வருடங்களாக இருந்த அத்தனை ஆக்ரோஷமும் வெடிக்கத் துவங்கியது.

“உங்க மச்சினன் பொண்ணை பாத்து முடிச்சாச்சுனா, நம்ம வீட்டுக்கு வரலாம். நீங்க கேக்கற ஒவ்வொரு கேள்விக்கும் நானே பதில் சொல்லத் தயார். அவளை நான் பாத்தது வரைக்கும்” என்றவன் தொடர்பை துண்டிக்க, அவனின் கருப்பு நிற ராட்சனன் அவனின் அழுத்தத்தில், உயர் வேகத்தில் பறந்தான்.

காரின் வேகம் அதி அழுத்தத்தில் இருப்பதை உணர்ந்த நறுமுகை, “அவளோட ஷ்ரக் கிழிஞ்சு இருந்துச்சு?” என்றாள் அபிமன்யுவிடம். அதாவது கேள்வி கேட்டாள்.

அவளின் கேள்வியில் ஷ்டியரிங்கில் இருந்த அவனின் கரங்கள் உடும்பின் அதீத உறுதியுடன் அதை மேலும் பற்ற, “ஷுட் ஐ க்யுவ் ஆன் எக்ஸ்ப்நேஷன் (Should I give an explanation)?” என்று கேட்டான்.

நான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டுமா என்று பெண்கள் விஷயங்களில் நெறிமுறை, நியமம், தரநிலை என அனைத்திற்கும் சொந்தகாரனானவன், நறுமுகையிடம் அசராது தன் கேள்வியை முன் வைத்தான்.

அவனை அமைதியாக திரும்பிப் பார்த்தவள், “ஆனா, உத்ரா விஷயத்துல மட்டும் மிஸ்டர்.அபிமன்யு ஒப்பினியன்னேடட்டோனு (opinionated – தன் பிடிவாதம்) தோணுது” என்றாள்.

சிறு வயதில் நடந்தது இன்னமும் அவளுக்கு நினைவு இருந்தது.

“இட்ஸ் ஓகே டூ பி ஒப்பினியன்னேடட் (It’s okay to be opinionated)” என்றவனிடம் அவள் அதற்கு மேல் என்ன வாதம் புரிய இயலும்.

இருவரும் அலுவலகம் வந்து சேர, அபிமன்யுவின் சான்டோரினி ப்ளாக் ரேன்ஞ் ரோவருக்கு எதிரே, கானகத்தில் இருக்கும் அனைவரையும் பயமுறுத்துவது போல வந்து எதிரில் வந்து, கீறிச்சிடலுடன் நின்றது மெட்டலிக் ரெட் ரேன்ஞ் ரோவர்.

அண்ணனுக்கும் தம்பிக்கும் எதில் பொருத்தமோ இல்லையோ! காரை ரசிப்பதில் மட்டும் பொருத்தமாய் இருந்தனர்!

ஆனால், அதிலும் வெவ்வேறு நிறங்களை தேர்ந்தெடுத்தனர்.

காரினுள் இருந்து மூவருமே ராஜ தோரணையும், அந்த அலுவலகத்திற்கே சொந்தக்காரன் என்னும் திமிரும், ஆணவமுமாய் இறங்க, விக்ரமின் அருகில் வேகமாக வந்து இணைந்து கொண்டாள் அவனுக்காக காத்திருந்த அவனின் பெர்சனல் செக்கரெட்டரி.

தீஷா!

சைஸ் ஜீரோவில் இருந்தவள் ஹாட் பிங்க் நிற சட்டையும், முட்டி வரை இருந்த கால்களை ஒட்டிப் பிடித்திருந்த பென்சில் ஸ்கர்ட்டோடும், அவனுக்கு பின் அவனின் அன்றைய நாளுக்கான அனைத்து விவரங்களையும் கூறியபடியே வர, அவளை ஓர விழியால் முறைத்த நறுமுகை அபிமன்யுவுடன் இணைந்து நடந்தாள்.

நால்வரும் ஒரே லிப்ட்டிற்குள் நுழைந்தனர். வழக்கமாக எதிர் எதிர் லிப்ட்டிற்குள் நுழைவது தான் வழக்கம். விக்ரமுடைய லிப்ட் பழுதான காரணத்தால் இவர்களுடன் வேண்டுமென்றே நுழைந்திருந்தான் இவன்.

அபிமன்யு ஒட்டாது வெறுப்பேற்றுபவன் என்றால், இவன் வேண்டுமென்றே உடன் இருந்து வெறுப்பேற்றும் ரகம்.

பதினைந்து பேர் கூட நிற்க கூடிய லிப்ட்!

அபிமன்யு இடது புற பாக்கெட்டில் கரத்தை விட்டு தலையை நிமிர்த்தி மருந்துக்கும் சிரிப்பில்லாது நின்றிருக்க, இந்தப் பக்கம் விக்ரம் வலது புற பாக்கெட்டில் கரத்தை விட்டு, ஆணவத்துடன் முகத்தில் குறும்புடன் நின்றிருந்தான்.

நீரும் நெருப்பும் ஒன்றாய் நின்றிருந்தது. ஆனால், இதில் யார் நெருப்பு, யார் நீர் என்பது சூழ்நிலையைப் பொருத்ததுதான்.

ஒருவன் நெருப்பானால் இன்னொருவன் நீராய். மற்றவன் நெருப்பானல் இன்னொருவன் நீராய்.

சீண்டிவிட்டவன் நீராய்! சீண்டப்பட்டவன் நெருப்பாய்!

இருவருக்கும் இடையே நறுமுகை!

சிவப்பு நிற ப்ரொபஷனல் சட்டை அணிந்து, கீழே கருப்பு நிற பாண்ட் அணிந்து, ஆபிஸ் சூட்டில் நின்றிருந்தவளை பார்க்கவில்லை என்றாலும் அவளுக்கு இடது புறம் நின்றவனால் அவளை உணர முடிந்தது.

என்னதான் கண்டம் கடந்து கண்டங்கள் சென்று, ‘பிசினஸ் டைகூனாய்’ அதிகாரம் தெறிக்க, செல்வம் செழிக்க இருக்கும் வாலிபம் என்றாலும், மனம் பறிகொடுத்தவளிடம் அவனின் மனம் மிகவும் மோசமாய் வீழ்ந்து கிடந்தது.

எதிரில் இருந்த லிப்ட்டின் கதவில் தெரிந்த பிரதிபலிப்பில் தன்னவளை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தவனின் மனம், ‘ஒரு சாயல் சிலுக்கு மாதிரி இருக்கால்ல?’ என்று நினைத்துக்கொள்ள, அவனின் விழிகள் தன் மேல் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக சென்றதையும், அவனின் விழிகள் சில இடங்களில் குறுகுறுவென்று பார்த்துவிட்டு கீழே இறங்கியதையும் கண்டுவிட்டாள் பெண்ணவள்.

அருகில் அபிமன்யு நின்றிருக்க, விக்ரம் செய்து கொண்டிருக்கும் காரியம் அவனின் அஞ்சா நெஞ்சத்தை மங்கையவளுக்கு எடுத்துரைக்க, அவளின் உள்ளத்தில் இருக்கும் இரத்தங்களை மேலும் அதிவேகமாக ஓட வைக்கவே லிப்ட் நின்று போனது.

லிப்ட்டின் விளக்குகளும் அணைந்தது.

ஆண்கள் இருவரும் உறுதியாக எதுவும் ஆகாதது போல இருளுக்குள் நின்றிருக்க, பெண்கள் இருவருக்கும் பயம். தீஷா இருளின் பயத்தில் நின்றிருக்க, நறுமுகைக்கோ அருகில் நிற்பவனால், அபிமன்யுவின் மேல் ஏற்பட்ட பயம்.

விக்ரமின் கைகள் பரபரத்தது! தன்னவளை சீண்ட நினைத்தது!

தன் இடது கரத்தை எடுத்தவன், இருட்டிற்குள் பெண்ணவளின் இடைப் பகுதியில் கை வைக்க, ‘இவ்வளவு சாப்டா இருக்காளே?’ நினைத்தவன், மீண்டும் அழுத்தமாகத் தீண்ட,

‘இந்த சட்டை வேற டிஸ்டர்ப்!’ உள்ளுக்குள் உச் கொட்டி சலித்தவன், பிடித்து கிள்ளி வேறு வைக்க, லிப்ட்டும் அடுத்த நொடி உயிர்பெற, லிப்ட்டின் கதவில் தெரிந்த பிரதிபலிப்பை பார்த்தவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.

இத்தனை நேரம் அவன் தீட்டியது அபிமன்யுவை!

அவனின் கரத்தை!

அவனின் கரத்தை அவனின் கோட் சூட், மென்மையாக மூடியிருந்தது. அவனின் கரத்தின் அவளை தான் தன்னவளின் இடையின் அளவு என்று நினைத்துவிட்டான் நறுமுகையின் விக்ரம்.

சட்டென அவன் கையெடுத்துவிட, அபிமன்யுவின் பின்னே இருந்த நறுமுகை அவனை முறைத்துத் தள்ளினாள். ‘ச்சி எனக்கும் மாமாவுக்குமா வித்தியாசம் தெரியல’ உள்ளுக்குள் பொருமியபடி அவள் மீண்டும் இருவருக்கும் இடையே வந்து நிற்க, அபிமன்யுவோ அங்கு யாரும் நிற்காதது போலவும், எதுவும் நடக்காதது போலவும் அசைந்தானில்லை.

விக்ரம் தொட்டதை உணர்ந்தான்! யார் என்று நினைத்து சீண்டுகிறான் என்றும் உணர்ந்தான்!

ஆனால், அழுத்தமாய் நின்றிருந்தான்.

‘அடச்சை இவன் கை மேல இருந்த கோட்டுக்கும் இவ ஹிப்புக்கும் வித்தியாசம் தெரியாம போச்சே’ தனக்குள் திட்டிக் கொண்டவன், அருகில் இருந்தவளை, எதிரில் தெரிந்த பிரதிபலிப்பின் மூலம் முறைக்க, லிப்ட்டின் கதவு பதிமூன்றாவது தளத்தில் திறந்து கொண்டது.

அண்ணனும் தம்பியும் சற்று நேரத்திற்கு முன் நடந்தது ஒன்றுமே இல்லை, ஏன் நடக்கவே இல்லை என்னும் அளவிற்கு ஒரே கோட்டில் கம்பீரமும், துணிவும், உறுதியும், திமிரும் எங்கள் சாம்ராஜ்யம் எனும் அளவிற்கு பார்ப்போர் அனைவரையும் தங்கள் வேங்கை நடையில் தள்ளிவிட்டு நடந்து சென்று, மீட்டிங் ஹாலை அடைய, அங்கு அவர்களுக்காகவே காத்திருந்தனர் அந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர்ஸ் அரிமா பூபதி! அதியரன் பூபதி! நீரஜா சிம்மவர்ம பூபதி!

எக்ஸீக்யூட்டிவ் டைரக்டராக நறுமுகை அமர, மற்ற இரு இருக்கையில் அமர்ந்தனர் சித்தார்த் அபிமன்யுவும், விக்ரம் அபிநந்தனும்.

‘ஏ.என்.ஏ’வின் சி ஈ ஓஸ். (CEO)