ஆட்டம்-20

ஆட்டம்-20

அன்றிரவு அபிமன்யு கீழே டின்னருக்கு வர, சுறுசுறுப்புடன் இறங்கி வரும் மகனையே பார்த்திருந்த அழகி, எதுவும் பேசாது மகனுக்கு பரிமாறச் சென்றார்.

யாருமே இன்றி வரவேற்பறை வெறிச்சோடி இருந்ததை கவனித்த அபிமன்யு, முகத்தில் எதையும் காட்டாது சென்று டைனிங் டேபிளில் அமர, அமைதியாய் உள்ளே இருந்து டைனிங் டேபிளிற்கு உணவு அடங்கிய பாத்திரங்களை அன்னை எடுத்து வருவதை கண்டான்.

ஆக, இன்னும் யாரும் உண்ணவில்லை என்பதை புரிந்து கொண்டவன் தனக்கு பரிமாற வந்த அன்னையை தடுத்து, “யாரும் இன்னும் சாப்பிடலையா?” என்று கேட்டான்.

அவர், ‘இல்லை’ என்பதுபோல அமைதியாய் தலையசைக்க, அவரின் செய்கை அவனுக்கு கோபத்தை விளைவிக்க, நீரஜாவும் வந்து அங்கு சேர்ந்தார்.

“அபி இப்பதான் சாப்பிட வர்றியா?” கேட்டபடியே அவனருகே வந்து அவர் அமர,

“இன்னும் யாருமே சாப்பிடலை அத்தை” என்றான் அன்னையின் மேலிருந்த விழிகளை எடுக்காது. அவனின் பார்வையிலேயே கோபத்தின் கொந்தளிப்பு தெறிக்க, அழகி மனதுக்குள் குளிரெடுத்த போதிலும் எதையும் பேசவில்லை.

அபிமன்யுவின் பதிலில் நீரஜா அழகியை பார்க்க, “யாரும் சாப்பிட வரலை நீரஜா.. நான் என்ன பண்ண முடியும்” மகனின் மேல் இருந்த கோபத்தில் விட்டேற்றியாக பதில் கூறியவர், தட்டை எடுத்து நீரஜாவுக்கு வைத்து பரிமாற, அவர் என்ன பேசுவது என்று தெரியாது அமர்ந்திருக்க, அபிமன்யு சலாரென கோபம் ஆட்கொண்ட உள்ளத்தோடு எழ, அவன் அமர்ந்திருந்த மர நாற்காலி கீறிச்சிட்டு பின் சென்றது.

யாரையும் பார்க்காமல் விடுவிடுவென்று அவன் படிகளில் ஏற, அவன் செல்வதையே பார்த்த நீரஜா, “என்ன அண்ணி நீங்க?” என்று மருமகன் சாப்பிடாது சென்றதில் சங்கடப்பட,

“நீ சும்மா இரு நீரஜா.. உங்க அப்பாக்கு உங்க அண்ணனுகளுக்கு இருக்க பிடிவாதம் எல்லாம் ஒண்ணுமே இல்ல.. இந்த இரண்டு பசங்களோட பிடிவாதத்துனால எல்லாம் எங்க வந்த நிக்குதுனு நீயும் பாத்துட்டு தானே இருக்க.. நீங்க எல்லாம் சின்ன வயசுல என்னையும் என் தங்கச்சியையும் எதுவுமே மிரட்ட விடல.. தலைக்கு மேல வளந்ததுக்கு அப்புறம் சொல்லவும் முடியல.. இப்ப சொல்ற நிலைமைலயா இருக்கு” ஆதங்கமும், கோபமமும், தழுதழுப்புமாக சின்னக் குரலில் வெடித்தவர், அங்கிருந்த நாற்காலியிலேயே அமர்ந்து கொள்ள, தனது அறை இருக்கும் தளத்தை அடைந்த அபிமன்யு, நறுமுகையின் அறைக் கதவை தட்டினான்.

மனதில் பற்பல கொதிப்புகள் கொப்பளித்துக் கொண்டிருந்த போதிலும், அமைதியாக இருக்க நினைத்தான்.

உள்ளே படுக்கையில் படுத்திருந்த நறுமுகை, நீரஜா தான் என்று நினைத்து, “திறந்து தான் இருக்கு ம்மா.. வா” என்றாள்.

மாலை வந்து படுக்கையில் யோசனையும், குழப்பமும் என்று உள்ளுக்குள் உழன்று கொண்டு படுத்தவள் தான். இப்போது அபிமன்யு அழைத்த போது தான் தன்னிலைக்கு வந்திருந்தாள்.

அபிமன்யு கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல, உள்ளே வந்தது அபிமன்யு என்பதை அறியாதவள், அவனுக்கு முதுகு காட்டி, பால்கனி பக்கம் பார்வையை பதித்திருந்தாள். பால்கானி கண்ணாடி வழியே எதையோ தவிப்புடன் தேடிக் கொண்டிருந்தாள் அவள்.

அப்போது தான் கண்ணாடித் தடுப்பில் தெரிந்த நிழலில் வந்தது அன்னை இல்லை என்பதை உணர்ந்தவள், நெஞ்சில் பதட்டம் ஆட்கொள்ள, விடுக்கென எழுந்தவளின் அருகே அபிமன்யு சேரை இழுத்துப் போட்டு அமர, அவளை கனத்துப் போன வதனத்தை உற்று நோக்கினான்.

அபிமன்யுவின் பார்வையில் உள்ளுக்குள் அவளின் உள்ளம் பயத்தில் பீறிட, எச்சிலை கூட்டி விழுங்கியவள், “வாங்க மாமா” என்றவள் கால்களை மடக்கி கைகளை காலோடு சேர்த்து அவனை பார்த்து புன்னகைக்க முயன்றாள்.

“நறு! ஏன் சாப்பிட வரலை?” என்ற அபிமன்யுவின் ஒற்றை கேள்வியில் அத்தனை கூர்மை. போர் வாளை விட கூர்மையாய் இருக்க, அவள் பதிலளிக்க முடியாது, தலையை இலேசாக கவிழ்த்தி, மடித்து வைத்திருந்த கால்களின் மேல் இருந்த தன் கை விரல்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் தொண்டைக் குழி தொடர்ச்சியாக ஏறி இறங்குவதையே பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யுவுக்கு புரிந்தது அவளின் மனம் இப்போது பட்டுக் கொண்டிருந்த பாட்டை!

மனம் இளகினாலும் அவளின் வருங்காலத்திற்காக தன்னை கடினப்படுத்தியவன், தன்னுடைய அதிகாரக் குரலில், இறுக்கம் விரவ, “நறுமுகை!!!” என்றழைக்க, அவனின் குரலில் இருந்து வந்த அனல் பறக்கும் கோபத்தில் சட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள் அவனின் அத்தை மகள்!

“ஏன் சாப்பிட வரல?” மீண்டும் அதே கேள்வி. ஆனால் கேட்ட தொணி வேறு.

“பசிக்கல” என்றாள் வரவிருக்கும் அழுகையை உள்ளிழுத்தபடியே.

“நீ சாப்பிடலைன்னு.. உன் அம்மா சாப்பிடல.. உன் மாமா அத்தை சாப்பிடல.. உன் பாட்டி தாத்தா சாப்பிடலை” அவன் அனைத்தையும் அவளின் உறவாய் கூற, மெலிதாய் அரும்பிய புன்னகையுடன் அவனைப் பார்த்தவள்,

“நீங்களும் இன்னும் சாப்பிடல” என்றாள் அவனை நன்கு அறிந்திருந்தவளாய்.

அவளையும் அவளின் விழிகளை எட்டாத புன்னகையையும் உற்று கவனித்தவன், “நறு! யூ வான்ட் விக்ரம்? (You want vikram?)” என்று வினவ, ‘இல்லை’ என்று மருகலுடன் தலையாட்டியவளின் மனம், ‘ஐ நீட் ஹிஸ் லவ் (I need his love)” என்று வாய்விட்டு கத்தியது.

அதை வெளியில் சொல்ல தான் அவள் விரும்பவில்லை!

“நீ இப்படி இருக்கிறதுனால என்னால உன் ஆன்சரை நம்ப முடியல நறு.. நீ பொய் சொல்றியோனு தோணுது” நன்றாக சாய்ந்து அமர்ந்து கைகள் இரண்டையும் பின்னே தலைக்கு கொடுத்தபடி, அபிமன்யு ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க, அவளுக்கு உடலில் குளுமை ஏறுவது போல இருந்தது.

அபிமன்யுவையே பார்த்திருந்தவள், மீண்டும், ‘இல்லை’ என்பது போல தலையாட்ட, அபிமன்யு அடுத்த ஆயுதமாக, நறுமுகையிடம் தன் திட்டத்தை வைத்தே வலை வீசினான். அதை கூறினாலே போதுமல்லவா

“உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம் நறுமுகை.. நீ என்ன நினைக்கறே?” அவளுக்கு தகவல் போல கூறி அவன் சாவகாசமாக கேள்வி கேட்க, அளவிற்கு அதிகமான அதிர்ச்சியை அவளின் தலையில் அபிமன்யு இறக்கி வைத்திருக்க, உள்ளுக்குள் பயப்பந்து உருண்டு வந்து, அவளின் இளம் நெஞ்சில் விநாடியில் பாரமாய் ஏற, கதிகலங்கி போனவளுக்கு முகம் வெளிறிப் போக, அவளின் முக உணர்வுகளே அபிமன்யுவிற்கு அவளின் மனவோட்டத்தை ஓடை நீர் போன்று தெளிவாக கூற,

“ஸோ (So), நீ இன்னும் அவனை லவ் பண்ற?” என்ற அபிமன்யுவின் அடுத்த கேள்வியில் பெண்ணவளின் மேனி முழுதும் தூக்கிவாரிப் போட, விதிர்விதிர்த்துப் போனவள், எதிர்பாராதவிதமாக வந்த கேள்விகளில் உள்ளுக்குள் துவண்டு போனாள்.

இனி மறைத்துப் பயனில்லை தான். இருந்தும் அவள் தன் ஈகோவை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.

“மா.. மா..” என்று கரகரத்த குரலோடு அபிமன்யுவை அழைத்தவள்,

“நான் அம்மா மாதிரியே இருந்திடட்டா?” என்று கேட்டாலே பார்க்கலாம், அபிமன்யு நாற்காலியில் இருந்து எழுந்த வேகத்தில், அவன் அமர்ந்திருந்த நாற்காலி படீரென்று கீழே விழுந்த சப்தத்தில், நறுமுகையின் சப்த நாடியும் ஆடிப் போனது.

கை முஷ்டிகள் இறுகி, எரிமலையில் இருந்து வெடித்து வெளியே வரும் அக்னிக் குழம்பை போன்று அவனின் ஆக்ரோஷம் எகிற, கைகளை இறுக்கி கட்டுக்குள் வைத்தவன், பெருமூச்சை வெளியிட்டு நறுமுகையிடம் அமைதியாக, “உன்னை தனியா நிக்க வச்சு எல்லாரையும் பாத்து அழுக சொல்றியா? ஒருத்தர் போதும் குடும்பத்துக்கு அப்படி” என்றவன், அவள் அப்போதும் அமர்ந்திருப்பது கண்டு எரிச்சலுடன், “கெட் அப்” என்றான்.

அவனின் அதட்டலில் திக் பிரமை பிடித்தவள் போன்று அரக்க பரக்க எழுந்து நிற்க, அவளின் மேல் அவனுக்கு கண்ணாபின்னாவென கோபம் ஒவ்வொரு நொடியும் அதிகரித்துக் கொண்டிருந்தது.

அன்று திருமணத்திற்கு முன்பே அபிமன்யு அவளிடம் இரண்டு முறை, ‘அவளுக்கு சம்மதமா?’ என்று கேட்டிருந்தான். அப்போதெல்லாம் தலையை தலையை ஆட்டிவிட்டு, டயலாக் வேறு அடித்துவிட்டு, இப்போது அவளும் வாழமாட்டேன் என்று நிற்கிறாள், அவனும் ஒரு வார்த்தை கூறி அழைக்க மறுக்கிறான், இடையில் பெரியவர்களின் மன பாரம் என்று அனைத்தையும் யோசித்து தான் அபிமன்யு இந்த முடிவை எடுத்தது.

“இல்லைனா இப்பவே அங்க கிளம்பு” என்ற அபிமன்யுவின் அடுத்த தாக்குதலில் பெண்ணவள் துவண்டு போனாள். தைரியமற்று தலையைத் தாழ்த்தியவள், ‘முடியாது’ என்று தலையை மட்டும் ஆட்டி தன் விருப்பின்மையை தெரிவித்திருக்க,

“அப்ப கல்யாணத்துக்கு ஓகே?” என்றான்.

‘முடியாது’ என்பது போல அவள் மீண்டும் தலையாட்ட, ஊரை அடித்து வரும் வெள்ளமாய் அபிமன்யு ஆத்திரமும், ஆங்காரமும் எகிறிக் கொண்டு விண்ணை அடைய,

“நறுமுகை!!” அவன் கர்ஜித்ததில் பெண்ணவளின் மேனி தூக்கிவாரிப் போட, நறுமுகையை அழைக்க அங்கு வந்த அழகி, மகனின் கத்தலில், உள்ளே ஓடிவர, அழகியை கண்டது தான் தாமதம், அவளின் விழிகளில் இருந்து கரகரவென்று நீர் மணிகள் பொட்டு பொட்டாய் தேங்கி, கன்னத்தில் வழிய, அப்போதும் அவள் நின்ற இடம்விட்டு, அபிமன்யுவின் மேல் கொண்ட அச்சத்தில் அசையவில்லை.

நறுமுகையை வந்து அணைத்த அழகி, என்ன நடந்திருக்கும் என்று யூகித்தபடி மகனை முறைக்க, அவரை அவன் பார்க்கவே இல்லை. அவனின் பார்வை பதிந்திருந்தது என்னவோ கண்ணீரை உகுத்துக் கொண்டிருக்கும் நறுமுகையின் மேல் மட்டுமே தான்.

இந்த ஒன்றரை வருடமாக மனதில் இருந்த கோபமும், ஆற்றாமையும் இணைந்து அபிமன்யுவை தூண்டி விட்டிருக்க, தன் அறைக்கு சென்றவன், ஒரு பேப்பரை எடுத்து வந்து நறுமுகைக்கு முன் நீட்ட, அதை பார்த்த அழகிக்கு மகனின் இந்தளவான விக்ரமின் மேலுள்ள கோபமும், அதனால் விளைந்த அரக்கத் தனமும், அச்சத்தைக் கொடுக்க,

“அபி என்ன இது?” என்றவருக்கும் அதீத கோபத்திலும், மகனின் குணத்தை கண்ட விதத்திலும் கண்ணீர் இடம் கட்டியது.

ஆம், அது விவாகரத்து பத்திரம்.

“நீதான் லவ் பண்ணல ரைட்? கையெழுத்து போடு” என்றான். அபிமன்யுவின் செயலிலும், பேச்சிலும் செயலிழந்து போன நறுமுகை, “வேணாம் மாமா” என்றாள் கண்ணீர்த் தடத்துடன்.

“ஓகே தென் (Okay then). அங்க கிளம்பு” என்றான் அடுத்து.

ஒரே முடிவு தான். ஒன்று இங்கு இருந்து வேறொருவனை மணக்க வேண்டும். அல்லது அங்கு கிளம்ப வேண்டும். அரண்டு போனாள் மென் மனம் படைத்தவள்.

நீரஜாவும் நீண்ட நேரம் ஆனதில் மேலே வந்துவிட்டார்.

“நறு.. நீ கிளம்பு.. அதுதான் உன் வீடு” அழகி நறுமுகையிடம் கூற, “நான் போக மாட்டேன் அத்தை” என்றாள் கண்ணீருடன் சின்னக் குரலில்.

“அப்ப சைன் பண்ணு” அபிமன்யு அவளிடம் பத்திரத்தையும், பென்னையும் நீட்ட, உள்ளே வந்த நீரஜா, “நறு! உன் லைஃப். நீதான் டிசைட் பண்ணனும்” என்றிட,

அழகி, “நறு நான் சொல்றேன்.. நீ கிளம்பு” என்று அவளிடம் எடுத்துக் கூற, நறுமுகையோ அபிமன்யுவை பார்த்தாள்.

அவளுக்கு இப்போது கூட அபிமன்யுவின் மேல் கோபம் எல்லாம் கிடையாது. அவன் எதற்காக அவ்வாறு கூறுகிறான் என்று கூட அவள் உணர்ந்தாள். தன் அன்னையை போல தானும் தனியே போய் விடக்கூடாது என்ற அக்கறை தான் என்று உணர்ந்தே இருந்தாள். சிறிய வயதில் இருந்து இப்போது வரை தன்னை பிடித்திருப்பவனை அவளால் வெறுக்க இயலாதே!

கைகளில் அவளைத் தூக்கி மகிழ்ந்தவன் அவன்! சிறு வயதில் இருந்தே அவளை எதுவும் நெருங்காது பார்த்துக் கொண்டவன்! விக்ரமை காதலிக்கிறேன் என்று சொன்ன போது கூட தன் கோபம் மறந்து அவளின் சந்தோஷத்திற்கு தான் வழிவிட்டவன்!

அன்று அப்படி தணிந்து போனவன் தான் இப்போது இப்படி வீம்பாக நிற்கிறான். இத்தனை நாளில் ஒரு முறை கூட தன்னை அழைக்காத விக்ரமின் வீம்பு கண் முன் வர, அந்த சமயம் அவளின் புத்தி அடியோடு புரட்டி போடப்பட்டது.

தனக்காக ஒருமுறை கூட தன்னிடம் தணியாத கணவனையும், தன் எதிர்காலத்திற்காக இப்போது தன் முன் நிற்கும் அபிமன்யுவையும் மாறி மாறி யோசித்தவள், அபிமன்யுவிடம் விவாகரத்து பத்திரத்தை வாங்க போக, அவளின் கரத்தை தட்டிவிட்ட அழகி, “பைத்தியமாடி நீ?” என்று கத்தினார்.

அவ்வளவு எளிதில் கோபம் வராதவருக்கே நறுமுகையின் செயல் ஆத்திரத்தை விளைவித்தது.

“அபி! எதுவா இருந்தாலும் விக்ரமையும் வச்சு முடிவுல எடு” என்று கிட்டத்தட்ட மன்றாடினார்.

“அவன் இதை யோசிச்சானா?” என்று அன்னையிடம் எதிர்க் கேள்வி அவன் கேட்க, அவரோ மௌனமாகிப் போனார். யார் பக்க நியாயங்களை பேசச் சென்றாலும் இப்படித் தான் முட்டிக் கொண்டு நின்றுவிட வேண்டும்.

நறுமுகையின் அதரங்கள் துடிக்க, விழிகளில் கண்ணீர் வழிய நின்றிருந்த தோற்றம், அனைவரின் மனதையும் பிசைய, அபிமன்யு மட்டும் சொட்டு நீர் கூட இறங்காத பாறையாய் இறுகிப் போயிருந்தான். நீரஜா மகளின் நிலையை கண்டு உள்ளுக்குள் வேதனையுடன் நின்றிருந்ததை பார்த்த அபிமன்யு ஒரு முடிவை எடுத்தவனாக, பேப்பரை அங்கிருந்த மேஜையில் வைத்தவன்,

“நான் நாளைக்கு ஏர்லி மார்னிங் யூ.எஸ் கிளம்பறேன். உனக்கும் தெரியும்.. வர்றதுக்குள்ள இதுல கையெழுத்து போட்டு வை.. இல்லைனாலும் மத்த ப்ரொசிஜர்ஸ் எனக்கு ரொம்ப ஈசி தான்” என்றவனின் குரலில் இருந்த உறுதியில் நறுமுகையின் உள்ளம் மிரளத் துவங்கியது.

அனைத்தையும் வாயிலில் இருந்தபடி பார்த்திருந்த இமையரசி, அறைக்கு வந்து கணவரிடம் அனைத்தையும் கூற, சிம்மவர்ம பூபதியோ, “எனக்கு நிம்மதியே இல்ல அரசி.. யாரை நினைச்சு கவலைபடறதுன்னே தெரியல” என்றவரின் கரத்தை பற்றியவர்,

“விக்ரம் பாத்துப்பான் விடுங்க” என்றவரை பார்த்து கேலியாய் புன்னகைத்தவர்,

“சின்னப் பேரனுக்கு எல்லாத்தையும் செய்தி வாசிச்சிட்டு வந்துட்டியாக்கும்?” என்றவரின் தோளில் சாய்ந்தவர்,

“விக்ரம் நறுமுகை பிரச்சினை சரியானவுடனே.. அபி கல்யாணத்தை யோசிக்கணும்.. அவனுக்கும் முப்பது ஆச்சு.. அந்த நினைப்பே இல்லாம இருக்கான்” என்றார் வருத்தத்துடன்.

மனைவியின் தோளில் சிரித்தபடியே கை போட்டவர், “அவன் என்னை மாதிரி சிக்காம கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்க நினைக்கிறான்டி” என்றிட,

“ஓஹ்” என்று வெகுளியாக தலையாட்டியவருக்கு, சில விநாடிகள் கழித்து தான் கணவரின் கிண்டல் புரிய, தலையை நிமிர்த்தி கணவரை முறைத்தவர், அவருக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டார்.

“சரிசரி விக்ரம் என்ன சொன்னான்.. அவ்வளவு கோவத்தோட போன?” அவர் வினவ,

“அதுனால தான் இப்ப அமைதியா வந்திருத்கேன்” என்றவர் கண்களை மூடிக்கொண்டார்.

***

இமையரசி வந்து சென்றதில் இருந்து, விக்ரமின் வீடே மயான அமைதியில் இருந்தது. கோதை வீட்டிற்கு வந்த கணவரிடம் விடையத்தை தெரிவிக்க, அங்கு அமர்ந்திருந்த அன்னையை கண்டவர், “இரண்டாவது பேரன் கிட்ட சொல்லியாச்சா?” என்று கோபமாக வினவியவர்,

“அப்பப்ப பிரச்சினையை முடிச்சிருக்கணும்.. இதெல்லாம் அப்பவே வந்து நீங்க சொல்லியிருக்கலாம்ல.. இப்ப வந்து மட்டும் சொல்றீங்க..” என்று அன்னையை கோபமும் கேலியும் கலந்து கேட்டவர், கோபத்திலும் ஆத்திரத்திலும் தீக்கங்குகளாய் அமர்ந்திருந்த மகனைப் பார்த்துவிட்டு மனைவியிடம், “அப்ப கையை கட்டிட்டு நின்னுட்டு..” என்று கோபத்துடன் கூறிவிட்டு அறைக்குச் சென்றுவிட,

அன்னையை அண்ணார்ந்து பார்த்த விக்ரமின் கண்கள் சிவந்து எரிமலையை வெடிக்க, “அவளா வருவான்னு நினைச்சது என் தப்புன்னு சொல்லிட்டு போயிட்டாரு?” இதழில் இகழ்ச்சியும் இளக்காரமும் பறக்க, கனலை கக்கியவன், எழுந்து தன் முழு உயரத்திற்கும் நிற்க, அங்கு நின்றிருந்த உத்ராவிற்கும், திலோத்தமைக்கும் அடி வயிற்றில் இருந்து சூடாய் ஏதோ பறந்தது, அவனின் கோபத்தைக் கண்டு.

“இனி எது நடந்தாலும் என்னை கேக்காதீங்க” என்று அறைக்குச் சென்றவனின் விழிகள் ஒரு துளி கூட அன்றிரவு மூடவில்லை.

இமையரசி கூறியதை பார்த்து அவன் நினைத்தது என்னவோ நறுமுகை வேறொரு திருமணத்திற்கு சம்மதித்துவிட்டால் என்றுதான். அவர்களுமே அபிமன்யு கூறியதில் அப்படி தான் நினைத்திருந்தனர்.

பால்கனி அருகே சென்று உறுமலோடு நின்றவனுக்கு நறுமுகையின் அறையும் அவள் பால்கனியும் தெரிந்தது. அவளின் இதயத்தைப் போலவே பால்கனியின் கண்ணாடிக் கதவும் அறைந்து சாத்தப்பட்டு இருக்க, அவள் அங்கு நின்றே பல மாதங்கள் ஆகியிருந்ததை அவனும் அறிவான் தான்.

‘இன்னைக்கு நல்லா தூங்கிக்கடி..’ என்றவளின் காதலைச் சுமந்திருந்த இதயம், தன்னவளின் நிராகரிப்பில் அவள் எடுத்திருந்த முடிவின் துணிவில், அவனின் இரும்பாய் இருந்த தசைகள் மேலும் கோபத்தினாலான விறைப்பில் இறுகியது.

உள்ளே வந்து லேப்டாப்பில் சில வேலைகளை கடகடவென்று முடித்தவன், மணியை பார்க்க, அதுவோ ஐந்தைக் காட்ட,சோம்பலை முறித்தவனின் வசீகர வதனத்திலும், அச்சு வார்த்த முரட்டு அதரங்களிலும், பளீரென்று புன்னகை வீச, சீழ்க்கை ஒலியில், ‘புது வெள்ளை மழை’ பாடலை இசைத்தபடி குளிக்கச் சென்றவன், ஹாட் ஷவரின் அடியே நின்றான்.

சாறலாய் விழுந்த வெம்மை நீரை போன்று அவனின் மனமும் கொதித்துக் கொண்டிருந்தாலும் இன்று அவனுக்கான முக்கிய நாள் அல்லவா!

அதனால் வதனம் புலராத காலைப் பொழுதிலேயே மலர்ந்திருந்தது!

ஷவரை நிறுத்தியவன், ஈரத்துடன் இருந்த சிகையை பின்னே கோத, அவனின் ஆண்மையில், தண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்த இரும்பு மேனியின் உறுதியில், இறுகிய புஜத்தில், கர்வத்துடன் வசீகரம் குழைத்த கம்பீரத்தில், புல்லினங்கள் வானில் நாணத்துடன் பறக்கத் துவங்கியது.

மந்தகாச புன்னகையுடன் தலையை துவட்டியபடி வெளியே வந்தவன், அவளுக்கு பிடித்த வெண்மை நிற ப்ரென்ச் க்ரௌன் வைட் சர்ட்டை (French crown white shirt) அணிந்து, அதற்கு ப்ளூ ஜீன்ஸை அணிந்து முடித்து, உலகை வெல்லும் உவகையுடன் கீழே இறங்க, அப்போது தான் அறையில் பல்லை விளக்கிவிட்டு வெளியே வந்த உத்ரா அவனை பார்த்து திடுக்கிட்டுப் போனாள்.

‘என்ன நேத்து அவ்வளவு கோபமா இருந்துட்டு இப்ப இவ்வளவு ஜாலியா போறாரு.. எங்க போறாரு.. இவரே கல்யாணம் பண்ணி வைக்க போறாரா?’ என்று அவன் செல்வதைப் பார்த்து அவன் பின்னேயே சென்றவள்,

“மாமா! வெயிட் வெயிட்” அவன் நடைக்கு இணையாக வேகமாக நடந்தவள்,

“என்ன மாமா காலைலயே கேசுவல் ஔட் பிட்ல (Casual outfit).. இப்படியே ஆபிஸுக்கா?” நாசுக்காக அவனிடம் வினவ, தொழில் சாம்ராஜ்யத்தில் தனக்கென்ற ஒரு உயரத்தை வைத்து, யாரையும் அங்கு நெருங்க கூட முடியாத இடத்தில் இருப்பவனால், அதை புரிந்து கொள்ள முடியாதா?

அவளை குனிந்து பார்த்தவன், அவள் அவனுக்கு ஈடாக தன்னுடன் நடந்து வருவது, அதுவும் அவள் இருக்கும் உயரத்திற்கு அவனிடம் ஆர்வமாக கண்களை உருட்டியபடி கேட்டது, அவனுக்கு சிரிப்பைக் கொடுக்க, அவளைப் பார்த்து குறும்பாய் விழிகளைச் சிமிட்டியவன், தனது ரேன்ஞ் ரோவரில் ஏற, அவனுடன் தானும் ஏறி அமர்ந்த உத்ரா, “நானும் வருவேன்” என்றாள்.

“ஓகே. உன் விருப்பம்” என்றவன், வண்டியை எடுத்து நிறுத்தியது என்னவோ அபிமன்யுவின் வீட்டில் தான்.

உத்ராவின் மனம் என்ன நடக்கப் போகிறதோ என்ற பதைபதைப்பில் இதழ்களும் பேரதிர்ச்சியில் விரிந்து கொள்ள, விக்ரமை பார்க்க, அவனோ ரியர் வ்யூ மிரலில் தலையைக் கோதிக் கொண்டே, “இன்னிக்கு பாக்க எப்படி இருக்கேன் உத்ரா?” என்று தலையை இடமும் வலமும் திருப்பியபடி கேட்க,

“உங்களுக்கென்ன மாமா ஜம்முன்னு இருக்கீங்க” என்றவள் இரு கைகளையும் வைத்து அவனுக்கு நெட்டி முறித்து, “பாத்தீங்களா எவ்வளவு சத்தம்.. எல்லாம் கண்ணும் செத்திருச்சு..” என்றிட, இருவரும் ஹைபை அடித்துக் கொண்டனர்.

காரிலிருந்து இறங்கியவன் விடுவிடுவென்று உள்ளே செல்ல, அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, அழகி வழக்கம் போல பூஜை அறையில் இருந்து தீபாராதனை தட்டுடன் வெளிப்பட்டார்.

முதன்முறையாக தங்கை மகன் வீட்டிற்குள் வந்திருக்கின்றான். அவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாது இருந்தது.

நேராக அழகியிடம் சென்றவன் அவரின் கால்களில் சென்று விழுந்து, புன்னகையுடன் எழ, அவனின் நெற்றியில் அழகியும் திருநீறு வைத்துவிட, நேரே நறுமுகையின் அறைக்கு இரண்டு இரண்டு படிகளாகத் தாவினான் அந்த அடிவடிக்காரன்.

அவன் நடந்த வேகத்திற்கு அவனின் கால்களே ஈடுகொடுக் முடியாது பெரும்பாடு பட, அதையெல்லாம் கவலை கொள்ளாதவன் கதவைத் திறந்த வேகத்தில், அப்போது தான் முகம் கழுவி, பல்லை துலக்கிவிட்டு வந்த நறுமுகைக்கு படீரென்று கதவு திறக்கப்பட்டதில், யாரென்று பார்த்தவளுக்கு உள்ளம் திடுக்கிட்டுப் போனது.

வருவான் தன்னிடம் பேசுவான் என்று தெரியும். ஆனால், வீட்டிற்கே வருவான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தொடைகளுக்கு மேல் வரை இருந்த வெண்மை நிற நைட் டாப்பிலும், அதே நிற பட்டியாலா பேண்ட்டிலும் இருந்தவளின் இலக்கணம் கூட வகுக்க இயலாத அழகிலும், வனப்பிலும், செழிப்பையும் கொண்டவளை மேலிருந்து கீழே ரசினையுடன் அலசியவன், அவளின் அறையை முதன்முதலாக சுற்றிப் பார்த்தான்.

அவளுக்கு பிடித்த வெண்மை நிறத்தில், அறை முழுதும் அனைத்தும் இருந்தது. படுக்கைக்கு பின்னே அவளின் புகைப்படம். அதுவும் விக்ரம் எடுத்த புகைப்படம் தான். அதை அருகே சென்று சாவகாசமாக பார்த்துக் கொண்டிருந்தவன், அவளைத் திரும்பி பார்த்து எள்ளலாக புன்னகைக்க, அவனின் பார்வையில் உள்ளுக்குள் அலுத்தவளுக்கு கோபமாய் வந்தது.

‘யாரைக் கேட்டு உள்ளே வந்தான்?’

‘யார் இவனை உள்ளே விட்டது?’

‘எல்லாரும் எங்கே போனார்கள்?’

மனம் உலையாய் கொப்பளிக்க, மனதில் வரிசையாய் கேள்விகள் ஆத்திரத்துடன் எழ, அதை வாயால் கேட்கத் தான் முடியவில்லை.

இரவு முழுதும் அழுகையில் கரைந்திருந்த அவளின் வீங்கியிருந்த வதனத்தை உற்று நோக்கியவனுக்கு, அவள் அவளையே வருத்திக் கொள்வது புரிந்தது. அதுவும் அவளின் சிவந்த விழிகளில் தெரிந்த வலியைத் தாண்டி, இப்போது அவள் தன்னைத் திட்டுவதும் புரிய, முகத்தில் இருந்த அவனின் புன்னகை மறைந்தது.

அவளருகே அவன் செல்ல, பின்னே நகர்ந்தவளை கடந்து சென்றவன், மேசையில் இருந்த பத்திரத்தை எடுத்து படிக்க, அவனின் ஆங்காரம் ஆகயாத்தை தாண்டி பறக்க, உடலில் இருந்த ஒவ்வொரு அணுவும் வெடித்தது.

விவாகரத்து பத்திரம் தான். அதுவும் நேற்று இரவு கையெழுத்து போட்டு விடலாமா என்று நினைத்த நறுமுகை பேனாவை பேப்பரில் வைத்திருக்க, ஒரு புள்ளி மட்டும் கையெழுத்து இடும் இடத்தில் இருக்க, விக்ரமிற்கு புரிந்து போனது. கையெழுத்திட தன் மனைவி முனைந்திருக்கிறாள் என்று.

அதை உணர்ந்த விநாடி, விக்ரமின் விழிகளில் விநாடிக்குள் கோபத்தின் விளைவாய் செவ்வரிகள் பரவ, அவனையே பார்த்திருந்த நறுமுகைக்கு நெஞ்சில் நீர் வற்றிப் போக, அங்கிருந்து ஓடப்பார்த்தவளை ஒரே எட்டில் இடையை சுற்றிப் பிடித்தவன், “வா சைன் போடு” என்றான் உறுமலுடன்.

தன் வயிற்றை சுற்றியிருந்த அவனின் கரத்தை குனிந்து பார்த்தவள், பட்டு பட்டென்று அடித்து, ஓடப்பார்க்க முடிந்தால் தானே?

அவளை இழுத்து ஒரே தூக்கில் தன் முன் நிற்க வைத்தவன், “சைன் போடுடி என் ஆச பொண்டாட்டி” என்று அவளின் இடையை மேலும் இறுக்கிப் பிடிக்க, “விடுங்க” என்றாள் திமிறியபடி.

அவளின் திமிறலை எல்லாம் ஒரே நொடியில் அடக்கியவன், “சரி ஒண்ணா சைன் பண்ணுவோமா?” பற்களை கடித்துக் கொண்டு புன்னகையுடன் கேட்டு, அவளின் கரத்தில் பேனாவை வைத்து பிடிக்க,

“வேணாம்.. ப்ளீஸ் ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலும் அழுகையுமாக.

அவளை தன்னுடன் நெருக்கி அவள் பஞ்சுக் கன்னத்தோடு, தன் ட்ரிம் செய்யப்பட்ட கன்னம் உரச, அழுந்த நின்றவன், “அதுதான் நேத்து சைன் பண்ண போயிட்ட போலையே? வா இப்ப இரண்டு பேரும் சைன் பண்ணுவோம்” என்று அவள் கரத்தை பேப்பரில் வைத்தவன், அவள் அழுகையோடு மறுக்க மறுக்க கையெழுத்தை இட்டு முடித்தான்.

‘மிஸஸ்.நறுமுகை விக்ரம் அபிநந்தன்’ என்று அவன் கையெழுத்தை அங்கு வேண்டுமென்றே இட்டிருக்க, சட்டென அழுகை நிற்க, கணவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.

தன்னவள் தன்னை விக்கித்து நோக்குவதை பார்த்தவன், “சரி போகலாம்” என்று கரம் பிடித்து இழுக்க, “நான் வரமாட்டேன்” என்று அவள் மறுக்க முயல, அறைக்கு வெளியே வரை இழுத்து வந்துவிட்டான் அந்த விடாக்கண்டன்.

“மாமா!!” அவள் அபிமன்யுவின் அறையை பார்த்து கத்த, அப்போது தான் அவளுக்கு அவன் அதிகாலையிலேயே யூஎஸ் கிளம்பிவிட்டான் என்று நினைவு வந்தது.

விக்ரமை முறைத்தவள், “மாமா மட்டும் யூஎஸ் போகாம இருந்திருக்கணும்..” என்று பல்லைக் கடிக்க, அவளின் கரத்தை சட்டென விட்டவன்,

“ஓஹ்.. இந்த டயலாக்கை வேற கேக்கணுமா நான்?” என்று நெற்றியை நீவிவிட்டு,

“எனக்கும் அவன் நான் உன்னை இப்ப தூக்கிட்டுப் போறதை பாக்க இல்லைன்னு ஃபீலிங்கா தான் இருக்கு..” என்றவன் அவளை அடுத்த விநாடி தோளில் போட்டான். அவள் கத்தல், அழுகை, திமிறல், துள்ளல் எதையும் ஒன்றும் இல்லாது ஆக்கியவன் ஒற்றை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு கீழே வருவதை பார்த்த அனைவரும் உள்ளுக்குள் திடுக்கிட்டுத் தான் போயினர்.

ஆனால், யாரும் தடுக்கவில்லை.

அழகி தீபாராதனையை எடுத்து அவளை பார்த்தபடியே எல்லா இடங்களையும் சுற்றி வர, அரிமா பூபதி சின்ன மகனை எதுவும் கேட்கவில்லை. செய்தித்தாளில் இருந்து நிமிரக் கூட இல்லை. அதுவும் இமையரசியை சொல்லத் தேவையில்லை. டைனிங் ரூமில் கருவேப்பிலையை எண்ணையில் போட்டுக் கொண்டிருந்தார்.

“விடு.. என்னை விடு” கத்தியபடி அவன் முதுகில் அடித்தவள், அனைவரும் அப்படியே இருப்பதை கண்டு, “அம்மா! தாத்தா!” என்று அழ, சிம்மவர்ம பூபதிக்கும், நீரஜாவுக்கும் அவள் அழுகை பொறுக்கவில்லை.

இருவருமே, “விக்ரம்” என்று அழைத்தபடி எழ,

“யாராவது இதுல தலையிட்டீங்க..” என்று அவன் உறுமிய உறுமலில், அவனின் பார்வையில் பளபளத்த ரௌத்திரத்தில் அனைவரும் மௌனமானார்கள் என்றால், அவனின் தோளில் இருந்தவளின் உடல் தூக்கி வாரிப் போட்டு நடுங்கியது.

“இதை நான் முன்னாடியே செஞ்சிருக்கணும்..” என்றவன் நீரஜாவை பார்த்து, “ஐம் ஸாரி அத்தை” என்று யாரையும் பார்க்காமல் நறுமுகையுடன் செல்ல, விக்ரமின் நெருப்பாய் கனன்று கொண்டிருந்த மனம்,

“வேணும்னா உன் மாமாவுக்கு ஒரு செல்பி அனுப்பலாமா?” என்று கேட்டு ஒரு செல்பியை தோளில் இருந்த நுறுமுகையோடு சேர்த்து அனுப்பியவள், காருக்கு வர, ஏற்கனவே இருவரையும் பார்த்துவிட்ட உத்ரா, அரண்டு போய் காரில் இருந்து இறங்கிவிட்டாள்.

வந்தவன், நறுமுகையை தூக்கி உள்ளே போட்டுவிட்டு லாக் போட்டவன், வெளியே உத்ராவிடம் எதையோ பேச வர, உள்ளே இருந்த நறுமுகை கண்ணாடியை தட்டிக் கொண்டே இருக்க, உத்ராவின் பார்வை அங்கு செல்வதை உணர்ந்தவன், “உத்ரா! ஜாக்கிரதையா இரு. ஒன் வீக் நீ ஹாஸ்பிடல் போக வேணாம். வீட்டுல இரு. அபிமன்யு எப்படியும் விஷயம் போய் அடுத்த நாளே வந்திருவான்” கூறியவன், கார் கண்ணாடி தட்டப்பட்டுக் கொண்டே இருக்க,

“பாரு என் பொண்டாட்டி என்னை கூப்பிட்டுட்டே இருக்கா.. ரொம்ப அவசரம் போல என்னை லவ் பண்ண” என்றவன் காரில் சென்று ஏற, அந்த கேப்பில் கார் கதவை திறக்க முயன்றவளை இழுத்து அடக்கியவன், காரை ராட்சஷ வேகத்தில் இயக்கினான்.

அழுது கொண்டே வருபவளை பார்க்க அவன் மனம் வலித்தது. அவனின் மேல் தவறு என்று அவனுக்கே தெரியும். ஆனால், அதை ஒப்புக்கொள்ளத் தான் அவனின் தலைகணம் ஒத்துழைக்க வில்லை.

கண்ணீர் விடாது விழிகளில் வழிய, துடைத்துக் கொண்டே வீம்பாய் அவனுடன் பேசாது அமர்ந்திருந்தவளிடம் அவன் டிஷ்யூவை நீட்ட, அதை வாங்கியவள், சுக்குநாறாக கிழித்து அவன் மேலேயே வீச, அவளை மேலும் வெறுப்பேற்ற எண்ணிய அவனின் குறும்பு மனமோ, டிஷ்யூ டப்பாவையே அவளின் மடியில் எடுத்து வைத்தது.

டப்பாவையே எடுத்து பின்னால் வீசியவள், வெளியே பார்த்தபடி அமர்ந்து கொண்டு வர, இருவருக்கும் கடந்த கால நினைவுகள் மனதில் வந்தது.

(ப்ளாஷ் பேக் ரொம்ப எல்லாம் இருக்காது.. ஒரே அத்தியாயம் தான் மக்களே.. இன்னும் 3 அல்லது 4 அத்தியாயத்தோட முதல் பாகம் முடியுது)

error: Content is protected !!