ஆதிரையன் -அத்தியாயம் 13

Screenshot_2021-07-27-16-11-56-1-e42fa695

அதிதி ஆதிரையனிடம் திருமணம் முடிக்க சம்பந்தம் தெரிவித்து ஒரு வாரம் கடந்திருந்தது. அலுவலகத்தில் வேலைகளை முடித்துக்கொண்டு கிளம்ப தயாரானவளுக்கு ஓர் அழைப்பு. அப்படியே அமர்ந்திருந்தவள் எண்ணம் முழுதும் ஆதிரையன். தனக்கு வந்த அழைப்பைப் பற்றி அவனிடம் சொல்வதா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

அடுத்த வாரம் திருமண நாள் குறித்திருக்க கோயிலில் வைத்து திருமணம் முடித்து பின் அந்த ஊரின் பிரபல மண்டபத்தில் பகல் உணவுக்கு அந்த ஊர் மக்கள் மொத்தப் பேருக்கும் ஏற்பாடு செய்திருந்தான்.

 

இவர்களின் திருமணத்தில் மகிழ்ந்தது மிகையாய் செல்வநாயகமும் ரேவதியுமே.

 

செல்வ நாயகம் ஊருக்கு சென்ற மறுநாள் அதிதிக்கு வேலை மிகையாக இருக்க, ஆதிரையனிடம் இருந்து வந்த இரண்டு அழைப்புகளை ஏற்காது விட்டிருந்தாள். பகல் உணவுவேளை கொஞ்சம் ஓய்வு கிடைக்கவும் அந்த நேரத்தில் மகேஷின் இலக்கத்தில் இருந்தும் அழைப்பு வர, ஏதும் முக்கியமாக இருக்குமோ என அழைப்பை எற்றாள்.ஏற்று காதினில் வைத்து “ஹலோ” எனக் கூறவுமே அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் அறையில் ஆதிரையன் அமர்ந்திருந்தான்.

அதிதி அப்போதுதான் ஒரு கவளம் உணவை வாயில் போட அறையுள்ளே வந்திருந்தான்.

“காலைல இருந்து எத்தனை வாட்டி கால் பண்ணிட்டு இருக்கேன்? மகேஷ் போன்ல எடுத்து இரண்டாவது ரிங்க்லேயே ஆன்செர் பண்ற?”

கோபமாய் பேசிக்கொண்டே அவள் முன்னிருக்கையில் அமர்ந்தான்.

 

“நீங்கதான் பேசுறீங்கன்னு தெரில எனக்கு.”

“தெரிஞ்சிருந்தா எடுத்திருக்க மாட்டியே? மகேஷ் நம்பர்ல எடுக்கவும் தானே பேசுன?”

 

“காலைல இருந்து எனக்கு இங்க ஏகப்பட்ட வேலை. யார் போனையும் நான் எடுக்கல.’கொஞ்சம் கோபமாகக் கூறினாள். அத்தை கூட காலைல எடுத்திருந்தாங்க. அதான் இப்போ மகேஷ் போன்ல வரவும் எதாவது ப்ரோப்லமா இருக்குமோன்னு எடுத்தேன்.”

விளக்கம் கூறினாள் அதிதி. கூறியவள் அவன் முகம் பார்க்க,

அவள் உண்டுக் கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தான்.

” சரி நீ சாப்பிடு நா அப்புறம் வரேன். “

 

அவன் எழுந்து செல்ல முற்பட,

“இருங்க.நா அப்புறம் சாப்பிடறேன். நீங்க என்னனு சொல்லுங்க? “

 

“என்ன முடிவு பண்ணிருக்க? “

 

“அது,”

 

“அதி,நான் அம்மாட்டயும் காலைல நம்ம கல்யாணம் பற்றி பேசிட்டேன். அதுக்காகத்தான் உனக்கு கால் பண்ணுனாங்களா தெரில. “

 

“நான் இன்னும் சரின்னு, ” அவள் பேச அவளை இடை நிறுத்தியவன்,

 

“நீ வேணாம்னு சொல்றதுக்கு இதுல எந்த ரீசணும் இல்லையே?’

 

‘இந்த சொத்தையெல்லாம் அனுபவிக்குறதுக்காக நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்குறேன்னு நீ நினைக்குறதா இருந்தா மட்டும் சொல்லிரு.”

 

“அச்சோ அப்டில்லாம் எப்போவும் நினைக்கவே இல்லை.”

 

“அதி, அன்னிக்கே நான் சொன்னதுதான்.என்னால கூட சட்டுனு இந்த கல்யாண வாழ்க்கைக்குள்ள ஒத்து போகலாமா தெரில. நானும் என் மனசோட போராடி இந்த முடிவை எடுத்திருக்கிறேன். ஆனா கண்டிப்பா உன்னை நல்லா வச்சுப்பேன். என் மனசையும் சரிபண்ணிக்குவேன். “

 

“நான் செல்வா அப்பா கூட பேசிட்டு சொல்றனே. “

 

“செல்வா அங்கிள் கூடவும் நானே பேசிர்றேன். நீ உன் முடிவை, உன் மனசுல பட்டதை மட்டும் தயங்காம சொல்லு.”

 

‘தன்னவனையே மணக்க, தன்னவனே வந்து கேட்க மறுக்குமா மனம்? இருந்தும், உள்ளுக்குள் தன்னவனை உரிமையாய் உரித்தாட முடியாத காரணத்தை என் செய்வாள்?’

 

“சரி.”

“சரின்னா என்ன அர்த்தம்?”

 

“சரின்னா சரின்னு அர்த்தம். “

 

“ஹ்ம். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை காலைல ஒன்பது மணிக்கு முகூர்த்தம். கோயில்ல ஏற்பாடு பண்ணிருக்கேன். அப்றம் மதியம் லஞ்ச் எல்லாருக்கும் ஆர்டர் பண்ணிட்டேன்.ஊர்ல இருக்க மண்டபத்தையே புக் பண்ணிருக்கேன்.உனக்கு யாருக்காவது சொல்லனும்னா, சொல்லு, இல்ல நானும் வந்து அழைக்கனும்னா கூட சொல்லு போய் பத்திரிகை வைக்கலாம். நாளைக்கு காலைல பத்திரிகை எல்லாம் வந்துரும்.”

 

“நான் இப்போதானே சரி சொல்றேன், ஆதுக்குள்ள எப்படி?இரண்டு வாரம் கூட முழுசா இல்லையே?”

 

“நீ சரின்னுதான் சொல்வன்னு மனசு சொல்லிச்சு அதான்.’

 

‘எதுக்கு டைம் வேணும்?”

 

“இல்ல, எதுக்கு இவ்ளோ அவசரமா? வேறேதாவது பிரச்சினையா?”

 

“ஹ்ம் ஆமா. இந்த சொத்து பிரச்சினை பற்றி நம்மை தவிர இன்னும் ஒருத்தங்களுக்கு தெரிஞ்சிருக்கு.”

 

“செல்வாப்பா, அப்றம் சரண் அண்ணாக்கு தெரியும், வேற யாருக்கும் என் வழியா தெரியாது. “

 

“நோ எங்க பக்கம், ஐ மீன், எங்க பேமிலில ஒருத்தங்களுக்கு.”

 

“பேமிலி?’

கேள்வியாக அவனைப் பார்த்தவள்,

‘அதுனால இப்போ என்ன பிரச்சினை?”

 

“அப்பாவோட நேம் ஸ்பாயில் பண்ணனும்னு நினைக்கிறாங்க.”

 

“கண்டிப்பா உங்கப்பா இருந்திருந்தா, மே பி அப்பாக் கூட நான் இந்த சொத்து சம்பந்தமா பிரச்சினை பண்ணி அவங்க அரசியல் பெயர் இல்லைனாலும் நல்லவர்குற பெயர் கெட்டுப்போக வாய்ப்பிருந்ததே. அப்போ என்னப் பண்ணியிருப்பீங்க? “

 

“கண்டிப்பா அவர் அப்படி அவர் பெயர் ஸ்பாயில் பண்ணிக்க மாட்டார். கண்டிப்பா சொத்தையும் கொடுத்திருக்க மாட்டார். எந்தளவுக்கு அவர் நல்லவறோ அந்தளவுக்கு சுயநலம் கொண்டவரும் கூட.”

 

“இப்போ உங்களை போலயே இல்லையா? “அதிதி அவனைக் கூர்ந்து பார்த்துக் கேட்க,

 

அவளை அவனும் அதேப் பார்வை பார்த்தவன்,

“கண்டிப்பா.’

‘ரொம்ப நன்றி என்னை சரியா புரிந்துக்கொண்டதற்கு.”

 

” இப்போ பிரச்சினை பண்றவங்களுக்கு நம்ம கூட வேற பிரச்சினை. அதை தீர்த்துக்க என்னை யூஸ் பண்ணிக்க பார்க்குறாங்க.”

 

“அதை விடு. நான் அதை பார்த்துப்பேன். அப்புறம், நிச்சியம்லாம் வேணாம்னு சொல்லியும் அம்மா கேட்கல. அதுனால புதன்கிழமை பூ வைக்க வரணும்னு சொல்ராங்க. உன்னால் அன்னைக்கு லீவ் போட முடியுமா? “

 

“இந்த வாரம் எனக்கு ரொம்ப வேலை ஜாஸ்தியா இருக்கு. ஈவினிங் தானே வருவாங்க. நான் நேரமா வர்றதுக்கு முயற்சி பண்றேன்.”

 

“சரி பார்த்து உனக்கு எப்படி வசதியோ சொல்லு.நான் கிளம்புறேன்.” கூறிக்கொண்டு எழ,

 

“ஒரு நிமிஷம்.’ என்னவென்று ஆதிரையன் பார்க்க,

‘ இப்போவும் சரி, கல்யாணத்திற்கு அப்பறமும் சரி எந்த காரணத்திற்காகவும் எந்த சொத்தும் என் பெயருக்கு மாற்றக்கூடாது. அதோட வேறெங்கயும் நீங்க வேலைக்கும் போக முடியாது.”

 

‘திருமணம் முடிப்பதே அதை காரணமாய் வைத்து அவளுக்கான உரிமையை வழங்கத்தானே? அதை வேணம்னா, எதுக்கு கல்யாணம்?’ஆதிரையன் மனதில் புலம்ப, அவன் முக பாவனைகளை பார்த்துக்கொண்டே 

அவளிருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.அவளைப்பார்த்தவன், “நான் நேற்றே வேலைக்கு ஜோஇன் ஆகிட்டேன். இப்போ போய் எப்படி? ‘

‘அதோட இந்த சொத்துக்கான உரிமை அப்படியாவது உனக்கு கிடைக்கணும்னு நினைக்குறேன். அதற்காகவும்தானே இந்தக் கல்யாணம்.”

 

“அது உங்க பிரச்சினை. இதான் என் முடிவு, ஓகேன்னா சொல்லுங்க கல்யாணம் பண்ணிக்கலாம்.”

 

 “இல்லன்னா? “

 

“எனக்கு வேலை இருக்கு மிஸ்டர் ஆதிரையன்,நீங்க கிளம்பலாம். “

 

‘இவ்வளவு நேரம் நான் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு, கடைசியா நம்மளை ஒரேதா சாச்சுட்டா.’

முனுமுனுத்துக்கொண்டே 

“வரேன்.” என, கதவைத் திறந்துக்கொண்டு வெளியேறியவன், மீண்டும் உள் நுழைந்து,

“முதல்ல சாப்பிடு, அப்றம் வேலை பார்க்கலாம்.” கூறிவிட்டு சென்றான்.

 

 நேராகச் சென்றது ஆலைக்குத்தான். அவனிருக்கையில் அமர்ந்தவனுக்கு அத்தனை களைப்பு. உடலுக்கு என்பதை விட மனதிற்கே அதிகம்.

 

நேற்று இதே போல ஆலையின் வரவு செலவுகளை மகேஷோடு அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்க அலைபேசிக்கு புதிய என்னில் இருந்து அழைப்பு வந்தது.

 

வேலை மும்முரத்தில் தெரியாத அழைப்பென்பதால் எடுக்காமல் விட, மீண்டும் அதே இலக்கத்தில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வர ஏற்றான்.

“என்ன தம்பி அழைப்பை எடுக்கவே இத்தனை தடவ யோசிக்கிறீங்க? கல்யாணம் பண்ணிக்க மட்டும் யோசிக்காம முடிவெடுத்துட்டீங்க?”

 

கொஞ்சம் வயதான ஒருவரின் குரல், இருந்தும் அத்தனை கம்பீரமாய் இருந்தது.

 

“ஹலோ யார் பேசுறது? “

 

“அட நான் யாருன்னு சொல்லாமலே பேசிட்டேன்ல. காலக் கொடுமைடா தம்பி. நான் யாருன்னு சொல்லி உன்கூட பேசணும்னு இருக்கு. ஆனா பாரு, இப்போ என்னை அறிமுகப்படுத்தி எந்த பிரயோஜனமும் இல்லையே.”

 

“அப்போ வைங்க சார், எனக்கு உங்ககிட்ட பேசிட்டிருக்க நேரம் இல்லை. “

 

“ஆமா ஆமா. உனக்கு நேரம் இல்லை தான்.அடுத்தவங்க சொத்துக்கு கணக்கு பார்த்து கொடுக்கணும்ல?”

 

ஆதிரையனுக்கு அப்போது தான் ஏதோ புரிவது போல இருக்க, அவரை பேசவிட்டு விடயம் எடுக்க நினைத்தான்.

 

“எதுக்கு நான் அடுத்தவங்க சொத்துக்கு பார்க்க? எனக்கு என் சொத்தையே பார்த்துக்க நேரம் பத்தல.”

 

“ஆமா ஆமா. இனி உன் சொத்துதானே? அப்பன் புத்தி இருக்கத்தானே செய்யும், அவளோடது கொஞ்சமாவது உன்கிட்ட ஒட்டி இருக்கும்னு நினைச்சனே, ஆனா இரண்டோடதும் சேர்த்து உன்கிட்ட கொட்டிக் கெடக்கு.”

 

“ஹலோ சார்.அவளே இவளேன்னா அப்புறம் என் வார்த்தையிலும் நீங்க மரியாதையை தேட வேண்டியிருக்கும்.”

 

“ஹேய் பொடிப்பயலே என்னடா சத்தம், என்னை யாருன்னு நினச்ச? ‘அருள் ராயன்’. என் ஊர்ல வந்து கேட்டுப்பாரு என்னை யாருன்னு? ஏன் உங்கம்மாவ போய் கேளேன். இருபத்தைந்து வருடமா உன்னால, உன்னால மட்டுமே அவங்க ரெண்டு பேரும் தப்பிட்டு இருந்தாங்க. இன்னிக்கு வரைக்கும் நான் பட்டுட்டு இருக்க வலியை இப்போதான் கொஞ்சம் இறக்கி வச்சிருக்கேன்.”

 

ஆதிரையனுக்கு ஒன்றுமே புரியா நிலை. ஆனால் தன் பெற்றோருக்கு வேண்டாதவர்கள் என்று மட்டும் தோன்றியது.

 

“என்ன தம்பி நான் யாருன்னு யோசிக்கிறயா?”சத்தமா சிரித்தார்.

 

“சார் எனக்கு வேலை இருக்கு, என்ன சொல்லணுமோ சொல்லிட்டு வச்சிருங்க.”

 

“தம்பி, எதுக்கு அடுத்தவங்க சொத்தை கட்டிட்டு இருக்க. உங்கப்பன் அடுத்தவங்க பொருளை அவங்களுக்கு அது எவ்வளவு முக்கியமாவோ, உரிமையோ இருந்தாலும் அப்படியே எடுத்துப்பானே. அதையே நீயும் எதுக்கு பண்ணப்போற?’

‘அதுமட்டுமில்லாம அந்த கலெக்டர் பொண்ண வேற கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொல்லிக்கிறாங்க.”

 

“யோ நான் என்ன பண்ணா உனக்கென்ன, தைரியமா நான் இன்னால் தான்னு பேசுறதுக்கு முடில, சும்மா பேசவந்துட்டான்?”அழைப்பை தூண்டிக்கப் போக,

 

“தம்பி ஒரு நிமிஷம், நமக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு. உங்க ஆத்தா தான் எல்லாத்தையும் விட்டுட்டு உங்கப்பன் முக்கியம்னு போய்ட்டா. அதுக்கப்பறம் என்னோட அழிஞ்சுப் போன சந்தோஷம், நிம்மதி,மானம் மரியாதையெல்லாமே உன்ன வச்சுத்தான் சரிபண்ணிக்கணும்னு இத்தனை வருஷமா காத்துட்டு இருக்கேன்.”

 

“யார் சார் நீங்க?”

 

“உங்க அம்மாவை பெத்து வளர்த்து தொலச்ச உந்தாத்தன் தான்.”

 

“உங்கம்மாதான் என் பேச்சு கேட்கல. நீயாவது நான் சொல்றதை கேட்டு நடந்துக்க. உன் வாழ்க்கை நல்லா இருக்கும்.”

 

“இல்ல உன் விருப்பப்படிதான் நடப்பண்ணா உங்கப்பன் போன இடத்துக்கே பையனையும் அனுப்பிட்டு உங்க அம்மாவை தனியா நிற்க வச்சுருவேன். உங்கப்பனோடவே போய் சேர வேண்டியவ, ஏதோ உன் புண்ணியத்துல தப்பிச்சுட்டா.”

 

“ஹேய்! மனுஷனாயா நீ?பொண்ணோட புருஷனேயே கொன்னு, பெத்தப் பொண்ணையே விதவையா நிற்க வச்சுட்ட? கோபம் இருக்குன்னு இப்டில்லாம் மிருகத்தனமா நடந்துப்பாங்களா?ஒரு அப்பா செய்ற காரியமா இது? ச்சே.” ஆதிரையனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை.

 

“ஆமா மனுஷனே இல்லை.பெத்த பொண்ணையே கொல்லணும் சொல்ற நானெல்லாம் மனுஷனே இல்லை.சரிதான்.”

 

“டேய் பேராண்டி,ஊரு முழுக்க பத்திரிகை அடிச்சு வீடு முழுக்க சொந்தமெல்லாம் கூடி இருக்க, அவ்வளவு சீராட்டி வளர்த்த பொண்ணு இராத்திரியோட காணோம்னு நான் பட்ட அவமானம் இருக்கே, அதை கூட தாங்கிப்பேன். பெத்த பொண்ணைக் காணோம்னு, கவலைலேயே உயிர்விட்ட என் பொண்டாட்டி திரும்பி வந்துருவாளா? அத்தனை பாசத்தை ஒரே பிள்ளைக்கு கொட்டி வளர்த்தேனே. ஒரு நொடில என்னை விட்டு என் மொத்த சந்தோஷத்தையும் சிதச்சு போட்டுட்டு போய்ட்டால்ல”

 

ஆதிரியனுக்கு வாய்க்கு பூட்டிட்டது போல பேச முடியாது அமைதியானான். செவி வழி கேட்கும் செய்திகள் அத்தனையும் புதிது. இதுவரை எப்போதுமே பேசியதில்லை. ரேவதி அவரது குடும்பத்தினை பற்றி ஒன்றுமே பகிர்ந்ததில்லை. ஆக, இவர் கூறக் கூற மிகவும் சங்கடமாகிப்போனது. ஆனாலும் இவனால் அவற்றுக்கெல்லாம் பொறுப்பாக முடியாதே.பேசி முடிக்க மட்டுமே அமைதியாகவே இருந்தான்.

 

“போனவ ஒரு வாட்டி இத்தனை வருஷத்துல வந்து பார்த்தாளா? அவ அம்மா உயிரோட இல்லைனு கூட அவளுக்கு தெரியுமா தெரில. உங்கப்பனுக்கு தெரிஞ்சிருக்கும், சொல்லிருக்க மாட்டான். அவன் செத்தப்றம் கூட இன்னும் என் மனசு ஆறல.”

“நீ என்ன பாவம் பண்ண அதான் உன்ன மட்டுமே விட்டு வைக்கலாம்னு இருந்தேன்.ஆனா ஒவ்வொரு தடவையும் உன்னாலதான் ரெண்டுபேரும் என் கை நழுவி போயிட்டே இருந்தாங்க. ஊருக்கு வர்றேன்னதும் உங்க அம்மாவும் வருவான்னுதான் நினைச்சிருந்தேன். ஆனா உங்கப்பன் மட்டுமே வந்துட்டான்.கிடைத்த சந்தர்ப்பதை விடவேணாமேண்ணுதான் முடிச்சிட்டேன்.”

 

ஆதிரையனுக்கு நினைக்கவே நெஞ்சில் வலி, அன்னையும் தன்னை விட்டுப் போயிருந்தால்?’ அதுமட்டுமல்லாமல், உயிரை கொல்லும் அளவிற்கு வெறுப்பு, அவர் பக்கம் ஞாயம் இருந்தாலுமே தன் அன்னைத்தந்தை 

என்றிட தாங்குமா மனம்.

 

“உங்க பகையை இப்படித்தான் ஒரு உயிரைக் கொன்னு தீர்த்துக்கணுமா? “

 

“தம்பி, அவ மேல எவ்வளவு பாசம்னு அந்த ஊருக்கேத் தெரியும், என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம், எனக்கு கண்டிப்பா பிடிக்க வாய்ப்பே இல்லை தான். ஆனாலும் வேறேதாவது முயற்சி பண்ணி அவ வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருப்பனே. பொண்ணை இழந்து, பொண்டாடியை இழந்து, என் மொத்தமும் இழந்துட்டு நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தானே தெரியும்.”

 

“விடு தம்பி, உனக்கு புரியப்போறதில்லை. அங்க இருக்க மொத்தத்தையும் அந்த பொண்ணுக்கே கொடுத்துரு. நமக்கெதுக்கு அடுத்தவங்க சொத்து. நான் நம்ம பக்கத்துல நல்ல பொண்ணா பார்த்து சிறப்பா உன் கல்யாணத்தை நடத்துறேன். இங்க உன் தாத்தனுக்கு ஏகப்பட்ட சொத்துடா. மொத்தமும் உனக்கு தான். வந்து வாழுற வழியப்பாரு.”

 

கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார் அருள்ராயன்.

 

‘இங்க ரெண்டு நிலத்தை வச்சு வேலைப் பார்க்கவே மனுஷனுக்கு நேரம் பத்தலை, இதுல தாத்தன் வீட்டு சொத்தா?’

 

இவன் அழைப்பை ஏற்கவும் எழுந்து வெளியில் சென்ற மகேஷ், இவன் இருக்கையில் சாய்ந்து அமர உள்ளே வந்தான்.

 

“என்னாச்சுண்ணா?”

 

“என்னனு சொல்றது மகி, இருக்க பிரச்சினையே இங்க தீர்த்துக்க நான் படர அவஸ்தை. இதுல புதுசா ஒன்னு.”

 

“சரி பார்த்துக்கலாம் விடு.”

 

ஆதிரையனுக்கு தன் அன்னையோடு இவற்றைப் பற்றியெல்லாம் பேச விருப்பமில்லை. நடந்து முடிந்ததாயிற்று. அவர்கள் பிழையோ சரியோ, அன்று அவர்கள் பக்கம் அவர்களுக்கான ஞாயமான காரணம் இருந்திருக்கும். கண்டிப்பாக அப்பா எதாவது அவருக்கு இலாபம் இல்லாமல் அம்மாவை மனம் முடித்திருக்கவும் மாட்டார். தன்னுடையை தந்தையை நன்கு புரிந்துக்கொண்டவனுக்கு அவரின் பிழைகளை சரிசெய்ய தானே நடுவில் சிக்கிக்கொண்டதை எண்ணி கஷ்டமாக இருந்தது.

 

இருக்கையில் கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்தவன் கண்களுக்குள் ஓர் நிழல் உருவம்.

“தீ…”

மனம் அவளை அழைக்க,

“கவிஞரே,நான் உங்களுக்கு வேணாமா? “அந்நிழல் அவனிடம் கேற்பதாய் ஓர் பிரம்மை.

 

கண்ணோரம் துளி நீர் காதோடு வழிந்தது.மனம் விரும்பியவளே மனைவியாக வரப்போகிறாள் என்று தெரியாமலேயே உள்ளுக்குள் நொறுங்கிப்போனான் ஆதிரையன்.

 

தொடரும்.