ஆதிரையன் -அத்தியாயம் 17

1653401117018-ef39bafe

Epi17

தீபாவுடன் உரையாடியப் பின் மனம் தெளிந்திருந்தாள் அதிதி.கணவன் மனைவியிடையே பேச்சுக்கள் இல்லாதபோதும் சந்தோஷமாக இரண்டு நாட்களை குடும்பமாக கழித்தவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.

அதிதியையே ஆதிரையன் கண்கள் தொடர்வதை அவளும் உணர்ந்திருந்தாள். ஏனோ அவன் முகம் காண படபடக்கும் மனதை தணிக்க வழி தெரியாது திரிந்துக்கொண்டிருதாள். அவனோடு எப்படி பேசவென்று ஒத்திகை பார்த்தே நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள்.

 

இவர்கள் ஊருக்கு கிளம்ப வண்டியில் ஏறியதும், இவள் பக்கம் குனிந்த தீபா,

“மாமா ஊருக்கு போய்ட்டு சரியா ஒரு வாரம் கழிச்சு எனக்கு கால் பண்ணுங்க உங்களுக்கு சப்ரைஸ் இருக்கு.”

 

“தீபா… “அவளை அதிதி முறைக்கவும்,

 

“உனக்கு ஒரு வாரம் தான் டைம் பேபி.”அவள் கன்னம் கிள்ளிக் கூறினாள். ஆதிரையன் அதிதியை பார்த்தானே தவிர தலையசைத்து தீபாவுடன் விடைபெற்றான்.அதன் பின் வீட்டுக்கு வந்து ஒருவாரம் ஆன பின்னும் அதிதியை எதுவும் கேட்கவில்லை. தீபாவோ அதிதியை ஒரு வாரம் முடிய தினமும் நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.

 

“ஹேய் நீயா சொல்லல,நான் சொல்லிருவேன்.அப்புறம் ரெண்டு நாள் கோபமா இருக்க வேண்டியவர்,ரெண்டு வாரத்துக்கு இருந்திடப் போறார்.உனக்கு இன்னும் ரெண்டே நாள்தான் டைம் .”

 

“நான் ஆபீஸ்ல இருக்கேன் தீபா. இங்க இருக்க வேலை போதாதுன்னு நீயும் என்னை டென்ஷன் பண்ற.காலைல இருந்து எத்தனை தடவை சொல்லிட்ட. அவங்க கூட பேசுறேன். அவங்களும் இந்த வாரம் மில்ல வேலையா இருக்காங்க.

“அதி, நீயா காரணம் தேடி சொல்ல வேண்டாம்.நீ அவங்க கூட பேசி சொல்லிட்டா நா ஏன் திரும்ப உன்னை தொல்ல பண்ணப்போறேன். “

 

“எனக்கு கொஞ்சம் டைம் குடு. நா பேசுறேன்டி “

 

“நோ வே அதி. இன்னும் ரெண்டே நாள். இனி உனக்கு கால் பண்ணல. நெக்ஸ்ட் மாமாக்குதான்.என்னை தெரியும்ல. பார்த்துக்கோ.”

அலைபேசியையே பார்த்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள் அதிதி. ஆதிரையனிடம் தன்னை வெளிப்படுத்த இத்தனை யோசிக்க இவளோ, அவளை கண்டுகொண்டதில் என்னவென்றே சொல்லலிட முடியா மனநிலையில் தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் ஆதிரையன்.

 

ஆலைக்கு நிறப்பூச்சு பூசும் பணி இந்த வாரம் முழுதும் நடந்துகொண்டிருக்க அலுவலகத்தை மகேஷோடு இணைந்து சுத்தப்படுத்திக்கொண்டிருந்தான் ஆதிரையன்.

“மகி இந்த ட்ராயர் ரெண்டையும் எடுத்துட்டு சுவருக்கே பிக்ஸ் பண்றப்போல செய்ய கொடுத்திருக்கேன். இன்னும் ரெண்டு நாளைல கொண்டு வந்து பிக்ஸ் பண்ணிருவாங்க. “

 

“சரிண்ணா.”

சில பைல்களை எடுத்து எது எதுவென்று பார்த்து அடுக்கிக் கொண்டிருந்தவன் கூற,

 

“மகி அதென்ன?” அவன் கையிருந்த பைலை கேட்டான்.

“இதுவா?இது அப்பா மினரல் கம்பனி சம்பந்தமா உங்களுக்கு அனுப்புன டீடெயில்ஸ்.நீங்கதான் பார்க்கவே இல்லையே.”

 

“ஹ்ம்.” என அதைப்பற்றி பேசப்பிடிக்காதவனாய் கூற,

அதை திறந்த மகேஷ் சிரித்துக் கொண்டே,

” அதோட அன்னிக்கு நீங்க கலெக்டர் மீட் பண்ண போனப்ப எதுக்கு வந்தீங்கன்னு எழுதி கொடுத்த பத்திரம் இருக்கு.” கூறியவன் எடுத்து அவன் கைக்கு கொடுத்தான்.

ஆதிரையனும் சிரித்துக்கொண்டே தான் அதை எடுத்தான். எடுத்தவன் அதன் கீழ் பொறிக்கப்பட்ட அவள் கையொப்பம் கண்டவன் கண்கள் இன்னும் கூறாக்கி அதை உற்றுப் பார்த்தான்.

 

அதில் பொறிக்கப்பட்ட தீ எனும் அவன் தீயின் பெயர் அவனை எரிப்பதாய். அப்படியே இருக்கையில் அமர்ந்தான்.

‘இது எப்படி சாத்தியம்?அவளுக்கு முன்னமே தெரிந்திருக்குமோ? நாந்தான் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டேனோ?’

 அன்று தீபாவுடன் பேசிய வார்த்தைகள் சரியாய் இப்போதும் நினைவில் வளம் வந்தது.’எல்லாமே விட்டு கொடுத்தேன்னு’ தீபா ஏதோ பேசிட்டு இருந்தாளே,அவளை புரிந்து கொள்வேனான்னு கேட்டுட்டு இருந்தாளே.

‘அவளுக்கு என்னை தெரிந்திருந்ததனால் தானோ?’

 

அவனுக்குள் பல கேள்விகள்.

என்ன முயன்றும் அவன் மனம் கொள்ளும் பதற்றத்தை தணிக்கமுடியவில்லை.எல்லாம் தெரிந்தால், அவளை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று மறைத்திருக்கிறாள் 

ஆனாலும்…

 

இரவு உணவுநேரம் ஆகியும் ஆதிரையன் வீடு வரவில்லை. அதிதி அழைத்தும் அவன் அலைபேசியை எடுத்து பார்த்தானே தவிர பதில் கொடுக்கவில்லை. ரேவதி அழைக்க

“மில்ல இருக்கேன் மா. நீங்க சாப்பிடுங்க. வர லேட்டாகும்.” கூறிவிட்டு அழைபேசியை அமர்த்தி வைத்தான்.

 

நேரம் இரவு ஒன்பதை தொட்டிருக்கும், வீட்டின் முன்னே வண்டிச்சத்தம் கேட்டது.

 

“ஆதியோட வண்டிச் சத்தம் இல்லையே இந்த நேரத்துக்கு யாரா இருக்கும்” கேட்டுக்கொண்டே முன்வாயில் கதவை திறந்தார் ரேவதி.

 

“யாருத்த?” கேட்டுக்கொண்டே அதிதியும் பின்னாலேயே வந்தாள். வண்டியிலிருந்து இறங்கினார் அருள்ராயன். ரேவதியின் தந்தை.

 

“ப்பா.” என ரேவதி இதழ் உச்சரித்தாலும் இப்போதும் அவரைக்கான உடல் என்னவோ நடுங்கதான் செய்தது.

‘இவரென்ன இந்த நேரத்துல’ யோசனையோடு அதிதியும் பார்க்க அவள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார் ரேவதி. அவர் கை சில்லிட்டு இருப்பதிலேயே அவர் பயம் உணர்ந்தவள்,

 

“அத்த அவங்க சும்மா வந்திருப்பாங்க, எதுக்கு இத்தனை டென்ஷன்? பொறுமையா இருங்க.”

இவர்களை பார்த்துக்கொண்டே வந்த அருள்ராயன்,

 

“என்ன மகளே பெத்த அப்பன் வரேன் இப்படி வெறிச்சு பார்த்துட்டு இருக்க. வந்தவனை உள்ள வான்னு சொல்லவுமா தோணல?”

 

அப்போதும் ரேவதி அசையாதிருக்க,

“எங்க என் பேராண்டி அவனை பார்க்கலாம்னு தான் வந்தேன். உன்ன பார்க்க வந்தேன்னு நினைச்சியா?உன் மேல இருக்க பாசமெல்லாம் எப்போ என் பொஞ்சாதி போய் சேர்ந்தாளோ அவகூட அப்போவே சேர்த்து எரிச்சிட்டேன்.”

 

“பொண்ணு வேண்டாம். ஆனா பொண்ணு பெத்த பையன் மட்டும் வேணுமா? இது எந்த ஊர் நியாயம் தாத்தா.”

 

“ஹேய் பொண்ணு, நீ யாரு நியாயம் பற்றி பேச. எனக்கு முழு உரிமையும் இருக்கு அவன் மேல.எனக்கு மட்டும் தான் இருக்கு. போனா போகுதுன்னு அவனை அவன் விருப்பப்படி வாழட்டும்னு விட்டா அதுவும் நடக்கல போலயே. என்ன நான் சொல்றது சரிதானே? “

 

அதிதியிடம் கேட்க அவளோ அவரை பார்த்த பார்வையில் அவர்கள் நிலையை உறுதி படுத்திக்கொண்டவராய்,

” மூனு மாசம் பார்த்தாச்சு. இதுக்கும் மேல நான் பார்த்துக்குறேன். என்னவோ அன்னைக்கு அவன் கொஞ்சம் சத்தமா பேசவும் நானும் பயந்து ஒதுங்கி போயிட்டேன்னு நினைச்சுட்டான் போல. அவன் என் நிழலுக்குள்ளேயே தான் இருக்கான். ஞாபகம் இருக்கட்டும்.”

 

அதிதிக்கு அவர் பேசப்பேச, இவர்களை தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறார் என்பது நன்றாகவே புரிந்தது.

 

“அவன் உன் மேல பிரியம் இல்லாமதானே வாழ்ந்துட்டு இருக்கான். அப்புறம் நீ எதுக்கு அவனை கூடவே இருந்து கஷ்டப்படுத்துற.அன்றே கூறினேன், விலகிப்போய்டுனு.அவன் அப்பன் செஞ்ச தப்புக்கு அவன் இதெல்லாம் கட்டி காக்கணும்னு இல்லை. அவனுக்கு எதுக்கு உங்கப்பன் சொத்து. அவன் தாத்தன் சொத்து ஏராளமா கொட்டிக்கிடக்கு.அவனை என்கூட அனுப்பிரு அவனை ராஜாவாட்டம் பார்த்துக்குறேன்.”

 

“அதி என்ன சொல்றார் இந்த மனுஷன்? “

 

“அத்த அவங்க நம்மளை வேணும்னே வம்பு பண்ண வந்திருக்காங்க. ஆதி வந்தாங்கன்னா இருக்க இடம் தெரியாம ஓடிருவாங்க.”

 

அதிதி ரேவதியை சமாதானப் படுத்தினாலும் அவர் செய்த வேலைகள் அறிந்திருந்தவளால் உள்ளுக்குள் கொஞ்சம் கிலியுடனே இருந்தாள்.

 

“நீயும் அன்னைக்கு உன் புருஷன் கூட வந்திருந்த இந்நேரத்துக்கு உன்ன புதச்ச இடத்துலக்கூட புல் முளைச்சிருக்கும். ஏதோ தப்பிட்ட, இல்ல அன்னைக்கு உன் புருஷன் கூடவே உன்னையும் அனுப்பியிருப்பேன். இன்னிக்கு என் பேரனும் என்கூடவே இருந்திருப்பான்.”

 

அவர் சொல்லி முடிக்கவுமே, அவர் சட்டையை கழுத்தோடு சேர்த்து பிடித்திருந்தார் ரேவதி.

 

“ப்பா என்ன சொல்றீங்க?எதுக்கு இத்தனை கொடூரமா நடத்துட்டு இருக்கீங்க? அவரை ஏதும் செஞ்சிருவீங்கன்னு பயந்து தானே அன்னைக்கும் என் மானம் போனாலும் பரவால்ல, என் பெயர் கெட்டுப்போனாலும் பரவால்லன்னு அப்படி வீட்டை விட்டு வந்தேன். இப்போவும் அதே வன்மத்தோட தானே இருக்கீங்க?”

 

“யாரோட மானம் போனுச்சு, யார் பெயர் கெட்டுப்போச்சு. எல்லாமே என் தலையோடாதானே போச்சு. அன்னைக்கு என்கிட்ட நீ ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே? உன்னால உங்கம்மாவையும் சேர்த்துதானே இழந்தேன். போனவ என் மரியாதை மொத்தத்தையும் சேர்த்துல்ல எடுத்துட்டு போயிட்ட.’

 

 ‘ஊரு மொத்தம் கூடி நின்னு என் முகத்தை பார்க்க எத்தனை அவமானப்பட்டேன்னு எனக்குல்ல தெரியும்.”

 

“அதுக்காக அவங்க உயிரை எடுக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஒரு வார்த்தை என்ன, உங்க பக்கத்துல நின்னு பேசுறதுக்கு எப்போ என்னை அனுமதிச்சு இருக்கீங்க?எந்த குறையும் இல்லாம தான் என்னை வளர்த்தீங்க. எப்போவும் இல்லன்னு சொல்லல. ஆனால் அப்பான்னு அம்மான்னு சிரிச்சு பேசிருக்கனா? ஏதோ நானும் அந்த வீட்ல ஒரு பொருள் போலத்தானே இருந்தேன். எனக்கு அதையெல்லாம் பேச வேணாம். எனக்கு உங்க ரெண்டுபேரோட அன்பு மொத்தமும் அவங்களே எனக்கு கொடுத்து ரொம்ப ரொம்ப சந்தோஷமா தான் வாழ்ந்தேன்.’

 

‘உங்களுக்கு தப்பு பண்ணுனது உங்க மகள். அப்போ எனக்கு தானே தண்டனை. அவங்களை எதுக்கு இப்படி பண்ணுனீங்க சொல்லுங்க? உங்களுக்கு யாரு அந்த உரிமை கொடுத்தாங்க சொல்லுங்க?”

 

ரேவதி அத்தனை ஆவேசம் கொண்டவராய் அருள்ராயனின் சட்டைக் காலரை இறுகப் பற்றி கத்தி கூச்சலிட

 “அத்த…” என அவரை பின் நின்று அதிதி இழுத்தும் அவரை விடுவதாய் இல்லை.

 

அதிதியோ அதற்கிடையே ஆதிரையனுக்கு எத்தனை முறை அழைத்தும் அவனுக்கு அழைப்போ செல்லவே இல்லை.

‘அச்சோ கடவுளே.இவங்க வேற.’

மகேஷுக்கு அழைத்து அவசரமாக ஆதிரையனை வீட்டுக்கு வருமாறு கூறினாள். அதற்குள் அருள்ராயன் ரேவதியை பிடித்து தள்ளி விட, அவரோ அவர் பலம் தாங்காது இரண்டு மூன்றடி தள்ளி விழுந்தார்.

விழுந்த இடம் சீமெந்து தரையாக இருக்க கைகள் உராய்ந்து இரத்தம் வழிந்தது.

 

விழுந்த ரேவதியை மிதிப்பது போல அவர் காலையும் தூக்க,

“தாத்தா!” என அவர் கால்களை தள்ளிவிட்டு ரேவதியை மறைத்தாள் அதிதி.

“ஹேய் என்னடி, ரொம்பத்தான் புருஷன் மேல பாசம். என் பொண்ணா பிறந்து தொலச்சிட்டேன்னு இத்தோட விடுறேன். நீ உசுரோட இருக்க வரைக்கும் உன் பையனை நிம்மதியா வாழ விட மாட்டேன் பார்த்துக்க.” கூறியவர் வந்த வழியே கிளிம்பியும் விட்டார்.

 

“அத்த எந்திரிங்க.” அவங்க ஏதோ உளறிட்டு போறாங்க. நீங்க எதையும் மனசுல வச்சுக்க வேணாம், வாங்க உள்ள போலாம். அவரை எழுப்ப,

 

“அதிம்மா, என்னால என் பையன் வாழ்க்கை கெட்டுப்போக வேணாம், நானும் உங்க மாமா போன இடத்துக்கே போய்டுறேன். என் ஆதி சந்தோஷமா வாழணும்டா…”

 

“அத்த அப்டில்லாம் சொல்லாதீங்க, அவர் ஏதோ உளர்ரார். நீங்களும் இல்லன்னா அவங்களுக்கு யாரிருக்கா அத்த. முதல்ல எந்திரிங்க வீட்டுக்குள்ள போலாம்.” அவரை எழுப்பி வீட்டுக்குள் அழைத்துச் செல்லவும் வியர்த்து உடல் மொத்தம் நனைந்தவறாய் அப்படியே மயங்கி சரிந்தார்.

 

“அத்த…” அதிதி கத்தவும் ஆதிரையன் வீட்டுக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

 

“ம்மா என்னாச்சு?”

 

“அத்த என்னாச்சு?” அவர் கன்னம் தட்டியவள் தண்ணீர் தெளிக்க சில வினாடிகள் கடந்து மெதுவாக கண் திறந்தார்.இரத்தஅழுத்தம் கூடியிருக்கும் போல.

அதோடு ஆதிரையனை கட்டிக்கொண்டு கதறி அழுதார். அன்று அப்பா இறந்த போது அவன் கண்ட அழுகையை மிகைத்திருந்தது இன்று.

 

“ம்மா இப்போ நிறுத்தப்போறியா இல்லையா? அந்தாளுக்குதான் மூளையே கிடையாது, நீயும் அந்தாளு பொண்ணுன்னு நிறுரூபிக்கிறியா?”

 

“ஏன்டா என்கிட்ட மறைச்ச? “

 

“சொல்லி என்ன பண்ண? இதோ இதுதானே நடந்திருக்கும். இருக்க நிம்மதி மொத்தம் அழிஞ்சு போயிருக்கும்.”

 

 “என்னால உனக்கு தான் எவ்ளோ கஷ்டம் அம்மாவை மன்னிச்சிருடா? “

 

“ம்மா என்னதிது.”

அவரை அணைத்துக்கொண்டான்.

 

“உங்கப்பா கெட்டவராகவே இருக்கட்டும். அரசியல் பண்றேன்னு சொல்லும் போதே எனக்கு பிடிக்கவே இல்லை. ஆனாலும் அவங்க விருப்பத்திற்கு தடையா இருக்கவேணாமேன்னு தான் நான் அது பற்றி தலை இடவே இல்லை.

எனக்கு அதெல்லாம் வேணாம் டா. எனக்கு என் புருஷன் எப்போவும் துளி அன்பை குறைக்கவும் இல்லை, எனக்கான மரியாதையை குறைக்கவும் இல்லை.

எப்போவும் என்னை ராணிமாதிரிதான் பார்த்துட்டாங்க. எப்பவும் ஒரு குறை வச்சதே இல்லை. எனக்கு மொத்த உறவுகளோட பாசத்தையும் கொடுத்தாங்க. எதுக்காகவும் நான் ஏங்குனதும் இல்ல.யாரோட உறவுக்காவும் தவிச்சது இல்லை. அப்படித்தான் என்னை பார்த்துக்கொண்டார்.”

 

“சரிம்மா சரிம்மா.எனக்கு தெரியும் ம்மா.” ஆதிரையன் அவரை ஆறுதலாக அணைத்துக்கொண்டான்.

 

‘எனக்கு மட்டும் கெட்டவனா போய்ட்டாங்க.’ உள்ளுக்குள் ஆதிரையன் தந்தையை நினைத்துக்கொண்டவளாக அவர்களையே பார்த்திருந்தாள் அதிதி.

 

“ஆதி, போலீஸ்ல சொல்லிரலாம்டா.”

உன் பிரென்ட் இருக்கான்ல,இந்த மனுஷன் என்ன பண்ணுவார்னே தெரிலயே.

 

“அதெல்லாம் நான் பார்த்துப்பேன் மா.நீ அதையெல்லாம் யோசிச்சு உன் உடம்பை கெடுத்துக்காத. “

 

ரேவதியின் அழுகை ஓய்வதாய் இல்லை, பேசிப்பேசியே பருக பாலை கொடுத்து அதனாடு அவரை உறங்க தூக்கமாத்திரை அரை பாதிசேர்த்தும் கொடுத்தவன், அவர் உறங்கவுமே எழுந்து அவன் அறைக்குச் சென்றான்.

 

அவனும் ஒன்றும் உண்ணாதிருக்க அவனுக்கு தேநீரை தயாரித்து எடுத்துக்கொண்டவள் மாடியேறி அவனிடம் கொடுக்க, அவளை சிலநொடிகள் பார்த்திருந்தவன் இவளும் அவனை பார்க்க, திரும்பிக்கொண்டான்.

 

அதிதி மீண்டும் கீழேச் செல்லப்பார்க்க,

“ஒரு நிமிஷம்.” கூறியவன்,

அவள் கையில் ஆலையில் இருந்து கொண்டுவந்த பத்திரத்தை கொடுத்தான்.

 

அதைப் பார்தத்துவிட்டு அவனை பார்த்தவள்,

“நானே…”

கையுயர்த்தி ‘அவளை பேசவேண்டாம்’ என்றவன் தேநீர் கோப்பையை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.