ஆதிரையன் அத்தியாயம் -8.1

Screenshot_2021-07-27-16-11-56-1-cb2e865f

ஆதிரையன் அத்தியாயம் -8.1

அத்தியாயம் -8.1

 

ஆதிரையன் வீட்டுக்கு செல்லும் வழியில் தாபலகம் சென்றான்.அவனுக்கான கடிதத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வர நேரம் மணி மூன்றைத் தொட்டிருந்தது.

“சாரிமா, சீக்ரம் வந்துரலாம்னு தான் சென்றேன். ஆனா முடிலம்மா. “

 

“பரவால்லப்பா, எனக்கும் பசிக்கல. குளிக்கிறதுன்னா குளிச்சிட்டே வந்து சாப்பிடலாம். “

“பத்தே நிமிஷம் சட்டுனு வந்துர்றேன்.”

 

அவன் வந்ததும் இருவருமாக உணவு உண்டனர்.

“ம்மா,கொஞ்சம் லேட்டா ரெண்டு பேருமா நம்ம தோட்டம் சுத்தி பார்த்துட்டு வரலாமா?”

“இன்னிக்கு வேணாம்ப்பா. இன்னொரு நாள் போலாம்.

“ம்மா நம்மளால, அதுவும் உன்னால மீண்டு வர்றது முடியாதுன்னு எனக்கு நல்லா தெரியும்.புரியுதும் கூட. இனி இந்த வாழ்க்கைக்கு நாம பழகித்தானே ஆகணும்.நீயா உன்னை சரிப்படுத்திக்கோம்மா.”

 

ஆதிரையன் கூற அவன் தோள் வளைவில் முகம் புதைத்துக் கொண்டவருக்கு அப்படி ஒரு அழுகை. “என்னால முடிலடா நானும் முயற்சி பண்ணிட்டுதானே இருக்கேன். “

 

அன்னையை இன்னும் அணைவாய் அணைத்துக்கொண்டவன்,

“சரியாகிடும் ம்மா… சரியாகிடும்.”

தனக்கும் சேர்த்தே சொல்லிக்கொண்டான். உறவினர்கள் என்று யாருமில்லை. இவ்வளவு காலமும் மூவருமாக மட்டுமே இருந்து, வாழ்ந்து பழகியவர்களுக்கு மிகவும் கடினமாகவே இருந்தது அதனை கடந்து, மீண்டுவர. அன்னையோடு சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து அப்படியே அவரது கட்டிலில் சாய்ந்தமர்ந்து இருந்தவன் உறங்கியிருந்தான்.

 

அதிதி வீட்டுக்கு வந்தவள் மாலை ஐந்து மணியளவில் தன்னுடைய இருச்சக்கர வண்டியில் ஆதிரையன் வீட்டுக்கு சென்றாள்.

 

அவளுக்கு அவசியமென்று இல்லை. சிறுவயதில் அவருடைய முகம் நினைவிருந்தாலும், உறவாடிய நினைவில்லை.ஆதிரையனைக் கூட. அழகனின் இறப்பென்னவோ அவளை சந்தித்து விட்டு செல்லும் போதே என்றிருக்க, அவளுக்கு ஏதோ உறுத்தல். தன்னை பார்க்க அவரது பாத்துக்காப்பையும் மீறி வந்ததுதான் காரணமோ? செல்வநாயாகும் வெளியூர் சென்றிருக்க,தனியே இறுதி சடங்குக்கு செல்லவும் துணிவின்றி இருந்துவிட்டாள். இதோ இப்போது அவர் மனைவியை பார்த்தாலாவது மனம் சமன்படுமா என்று பார்க்கச் செல்கிறாள்.

 

வழியில் ஆலையின் அருகே வரவும் அதிதியால் வண்டியை நிறுத்தாமல் முடியவில்லை. அப்போதுதான் வேலை விட்டு கிளம்பிகொண்டிருத்தனர்.

 

மிக நன்றாகவே தொழில் வளர்ச்சி கண்டுள்ளது. வேலை செல்வோரிடம் இருந்து எவ்வித முறைப்பாடுகளும் இன்றளவு மட்டும் வந்ததில்லை.ஊர் மக்களுக்களையும் அவர்களின் தொழிலையும் முன்னேற்றிவிட்டு நன் மதிப்பாகவே இருவருடங்களா முன்னேறிக்கொண்டு இருக்கிறான் ஆதிரையன்.

 

‘வீட்டின் பத்திரம் அவனிடம் கொடுத்து விட்டிருந்தாலும் வீட்டை மீட்டெடுத்தாலே போதுமே, அவனுக்கு அவப்பெயர் தானே. இனி தந்தையுடைய சகலதும் அவனையே சாரும் என்று கூறினானே.அவன் அந்த தரவுகளை படித்து தன்னோடு இதுப்பற்றி எப்படியும் கலந்தாலோசிப்பான் தானே, அப்போது அதற்குண்டான பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.இல்லாவிட்டால் அதுவும் அவனுக்கு உறுத்தக்கூடுமே. அத்தோடு இந்நிலத்தோடு கொண்ட தொடர்பை முடித்துக்கொள்ள வேண்டும்.’ ஆலையினை பார்த்துக்கொண்டே  தனக்குள் ஓர் தீர்மானம் எடுத்துக்கொண்டாள் அதிதி.

 

அவள் முன்னே வந்து நின்ற மகேஷ்,

“ஹலோ மேடம்,எப்போவுமே வண்டி இங்க வந்துட்டா நின்னுருதே.என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா? “

அவனைப்பார்த்தவள்,

“தெரியல ஏதோ இந்த இடத்தோட ஒரு பந்தம் அதான் போல.”

 

“அதி, சத்தியமா எனக்கு நேற்று மாமா சொல்லவும்தான் ஞாபம் வந்தது. சின்ன வயசு ஞாபங்கள் அவ்வளவா இல்லை.”

 

“அட! கண்டு பிடிச்சிட்டீங்களே.அது யாருக்கும் இருக்காது. ஒருசில அதுவும் மனசுல பதிந்துப்போன நினைவுகள் மட்டும் எப்போவும் இருக்கும்.”

 

“அதுன்னா உண்மைதான்.உள்ள வரியா நான் சுத்தி காமிக்குறேன். “

 

“வேணாம், இன்னொரு நாள் பார்த்துக்கலாம். “

“வீட்டுக்கு வரலாமே? “

“கண்டிப்பா. ஆனந்தன் அங்கிள் வீட்டுக்கும் இன்னும் போனதில்லை.”

 

“அதோட பகக்கத்துலதான் எங்க வீடும். அம்மா பார்த்த ரொம்ப சந்தோஷப்படுவாங்க.”

 

“கண்டிப்பா இன்னொருநாள் வரேன். இப்போ டைமாச்சு.கிளம்புறேன் “

அவனிடம் விடைபெற்று வந்தவள் ஆதிரையன் வீட்டு முற்றத்தில் வண்டியை நிறுத்தனாள்.எவ்வளவு தடுத்தும் கண்கள் அவ்விடத்தை சுற்றிச்சுற்றி பார்க்கவே செய்தது.

 

வீட்டு அழைப்பு மணியை அழுத்தி காத்திருக்க,ரேவதிதான் கதவைத்திறந்தார். பகல் வந்த ஆதிரையனுக்கு அதிதி வருவதாகக் கூறியது அப்போதே மறந்து போயிருந்தது. அவனோ அறையில் நன்றாக உறங்கியிருக்க இப்போது அழைப்பு மணிக்கூட அவன் காதை சென்றடையவில்லை.

“வணக்கம் ம்மா. “

கையில் கொண்டுவந்திருந்த சில இனிப்புப் பண்டங்கள் அடங்கிய பொதியினை அவர் கையில் கொடுக்க,

அவரோ அவளை ஆச்சர்யமாக பார்த்து,

 

“ஹே! நீ தில்லை பொண்ணு தானே? “

அவள் கன்னம் வருடி கேட்க, சட்டென  கண்கள் கலங்கிப்போனது அதிதிக்கு.

 

தன்னை அத்தனை எளிதில் கண்டுக்கொண்டாரே என்று.

 

“ஹ்ம் ஆமா.” என்றிட,

 

“தனியா வந்திருக்க, அம்மா எங்க? நான் வந்திருக்கேன்னு யாரு சொன்னாங்க? வா வா உள்ளே வா. இங்கே நிற்க வச்சு பேசிட்டிருக்கேன்.” என அவளை கைப்பிடித்து அழைத்துச் சென்றவர்  முன்னறைத்தாண்டி உள்ளே உணவு மேசையருகே அமரச் செய்து அவரும் அமர்ந்துக்கொண்டார்.

 

“எப்டிம்மா இருக்க?” அவர் மனம் சூழ்ந்திருந்த கவலைகள்கூட சட்டென்று காணாமல் போன உணர்வு.

“அதி நீங்க இன்னும் இந்த ஊர்லதான் இருக்கீங்களா?

“இப்போ ஒரு மாதமாகத்தான் இருக்கேன்.”

 

“எவ்ளோ பெரிய பொண்ணாகிட்ட. அப்பவும் பார்த்தியா பார்த்ததும் கண்டுப் பிடிச்சிட்டேன். அப்படியே அம்மாவோட ஜாடை.”

 

“இந்த ஊர் விட்டுப் போனதோட எல்லாமே விட்டுப்போச்சு. உங்கம்மா மட்டும்தான் எனக்கு உறவுன்னே இருந்தாங்க. அதுக்கப்புறம் நானும், பையன், புருஷன்னு அவங்க மட்டுமே உலகம்னு வாழ பழகிட்டேன். ஆனா இப்போ அது கூட… “

 

அதிதி அவரின் கைகளை பற்றிக்கொள்ள, அவளுக்குமே கண்கள் கலங்கி விட்டது. அத்தனையும் இழந்த பெண் தானே இவளும். அவர் இவளை இன்னார் மகள் எனக் கண்டுகொள்வார் என்பதை நினைக்கவே இல்லை. கலெக்டராக வந்து சென்றிடலாம் எனும் எண்ணத்தில் தான் வந்தாள். ஆனால் இங்கு!

 

ரேவதி கண்களை துடைத்துக்கொண்டவர், “வீட்டுக்கு வந்த பிள்ளையை கண்கலங்க வச்சுட்டேன்.சரி சொல்லு டா அம்மா, அப்பாவெல்லாம் எப்டி இருகாங்க?”

 

‘தன் தந்தையின் இழப்பை கூட இவருக்கு தெரிவிக்கப் படவில்லையே.’

 

“நீங்க ஊர் விட்டுப் போக, அப்பா கொஞ்ச நாளைலேயே இறந்துட்டாங்க.”

 

“என்ன சொல்ற? “

 

“ஹ்ம்ம் திடீர்னு.அப்புறம் நானும் அம்மாவும் தான். எனக்கு பத்து வயசு இருக்கும்,நாம ஊர்ல இருந்து போகும் போது.”

 

“எனக்கு இது ஒன்றுமே இத்தனை நாள் தெரியாதும்மா.தெரிந்திருந்தால் உன்னை தனியா விட்டிருக்க மாட்டேனே “

 

புன்னகைத்தவள்,

“அம்மாக்கு அப்பா போனதுக்கப்புறம் இங்க இருக்கப்பிடிக்கவே இல்லை.”

 

ரேவதியிடம் எதற்காக ஊர் விட்டு சென்றனர் என்பதை தெரியப்படுத்த விரும்பவில்லை அதிதி.

 

“அப்பாவோட தெரிஞ்சவங்க ஒருத்தர் மூலமா ஸ்கூல் மாற்றிக்கொடுத்து அங்கேயே அருகில் இருந்த ஹாஸ்டல் ஒன்றில் சேர்த்து விட்டாங்க. அங்க அவங்க வீட்டைத்தான் ஹாஸ்டல் போல நடத்துனதால அம்மாவும் அங்கேயே தங்கி வேல பார்த்தாங்க. அப்புறம் அம்மாவும் இரண்டு வருடம் போகவும், நெஞ்சுவலி வந்து இறந்துட்டாங்க. அப்புறம் நான் மட்டும் தான்.”

 

“அதி என்ன சொல்ற நீ? எப்டி இவ்ளோ வருஷம் தனியா? “

“சாகுற வயசா அது, உன்னை தவிக்க விட்டு, கடவுள் ஏன்தான் இப்படி இரக்கமில்லாம  நடந்துக் கொள்கின்றானோ… “

 

அவருக்கு மலைப்பாக இருந்தது, அன்னை தந்தை இன்றி அத்தனை சிறுவயதில்  தனித்து யாரோ ஒருவர் நிழலில் வாழ்வதென்பது கொடுமை அல்லவா?

 

“ஹாஸ்டல் நடத்துனவங்களுக்கு என்கூட ரொம்ப பாசம். கருணைனு கூட சொல்லலாம்.அவங்க பொண்ணுக்கும் என்னுடைய வயதுதான், அவளோடு என்னுடைய படிப்பையும் பார்த்துகிட்டாங்க. இப்போ வரை எனக்குன்னு இருக்கது அவங்க மட்டும்தான்.”

 

“அப்புறம் வேலை கிடைத்ததும் அவங்க ஊர்லயே போஸ்டிங் போட்டு கொடுத்தாங்க. இந்த வருஷம்தான் இந்த ஊருக்கு நானே கேட்டு வந்திருக்கேன்.”

 

“எனக்கு தெரியாதுடா செல்லம். இப்டில்லாம் ஆகியிருக்கும்னு கனவுல கூட நினைச்சது இல்லை. ஒரு பத்து நாள் முன்ன உன்னை, அப்றம்,உங்க அப்பா அம்மாவெல்லாம் கனவுல கண்டேன். அப்போவே நா ஆதிகிட்டயும் அவங்க அப்பாட்டயும் சொல்லிட்டு இருந்தேன், எப்டி இருக்காங்கலோன்னு. அப்போ கூட சொல்லல. மாமாக்கு தெரிந்திருக்காது மா. இல்லன்னா கண்டிப்பா உன்னை இப்படி விட்டிருக்க மாட்டாங்க.”

 

“பரவால்ல ஆன்ட்டி. பழகிட்டேன் இந்த வாழ்க்கைக்கு.”

 

இந்தப்பெண்ணை இப்படியான நிலையிலா சந்திக்கவேண்டும்.ரேவதிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

“சரி என்ன சாப்பிடற?”

 

“ஒன்னும் வேணாம். நான் உங்களை பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தேன். அன்னைக்கு அங்கிள் என்னை பார்க்க வந்துட்டு போறப்ப தான் அக்சிடன்ட் ஆகிட்டாங்க. எனக்கு அது உறுதிட்டே இருந்தது. அதான் உங்கட்ட மன்னிப்பு கேட்கலாம்னு… “

 

அவளை அணைத்து உச்சி முகர்ந்தார்.

 

“அன்னைக்கு ஆதிப்பா உன்னை பார்க்கத்தான் வந்தாங்களா?”

 

“ஆமா.”

“நீ அப்போ காலெக்டரா? அப்பாவோட அறிவு அப்படியே இருக்கு.பெரிய படிப்பெல்லாம் படிச்சு, ரொம்ப பெருமையா இருக்குடா.”

 

“பெத்தவங்க பார்த்து சந்தோஷப்பட கொடுத்து வைக்கவில்லையே.”

 

அவர் பேசக் கேட்டுகொண்டிருந்தாள் அதிதி.

 

“நீ என்னப்பண்ணுவ? உன்னை பார்க்கணும்னு அவருக்கு விதிச்சிருக்கு. அதுக்காக நீ ஏன்டா?”

 

“தெரில மனசுக்கு கஷ்டமா இருக்கு.”

 

“அப்போ அன்னைக்குத்தான் உன்னை அவங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்ல? ரொம்ப சந்தோஷப்பட்டாங்களா?”

 

“ஆனா ஏதோ பிரச்சினைனு ஆதி பேசிட்டு இருந்தான், நான் அவ்வளவா மனசுல எடுத்துக்கல.”

 

“பிரச்சினையென்றெல்லாம் இல்லை. அவர் நிலம் சம்பந்தமாகத்தான் பார்க்க வந்தார். வந்ததும்தான் நான் யாருன்னு தெரிந்துக் கொண்டர். வேறொன்றும் இல்லை.”

 

“சரிம்மா, எனக்கு எப்போவும் அவங்க அரசியலும் பிடிக்காது, அதுனால அவங்க வேலை சம்பந்தமாக எதுலையுமே நான் தலையிட்டது கிடையாது.பாவம் ஆதி. இப்போ எல்லாம் அவன்தான் பார்த்துக்கொள்கிறான். “

 

“சரி ஆன்ட்டி, நான் கிளம்புறேன்.”

 

“இன்னும் ஆன்ட்டி சொல்லிட்டு இருக்க. உரிமையா இனி அத்தைனு கூப்பிடு. இரு சாப்பிட்டு கிளம்பலாம், நா ஆதியை  விட்டுட்டு வரச் சொல்றேன். “

 

“யார் கூட பேசிட்டிருக்க?”

 

கேட்டுக்கொண்டே அறையிலிந்து கைகளை மேலுயர்த்தி சோம்பல் முறித்தவாரே வந்தான் ஆதிரையன்.

 

அவனைக் காணவும் தன் இருக்கையில் இருந்து எழுந்தாள் அதிதி.

 

“ஆதி,உனக்கு இது யாருன்னு தெரியுமா?”

 

இவளைக் கண்டவனோ தன் அன்னையிடம் எதாவது கூறியிருப்பாளோ என்றும் யோசனைப் போக, அதற்கு மாறாய் அன்னையின் முகம் மலர்ந்திருப்பதைக் கண்டு, அன்னையின் கேள்வியில்,

 

“நானும் வந்ததும் சொல்லணும்னு இருந்தேன் மறந்துட்டேன்மா. இதுதான் நம்ம ஊர் கலெக்டர் புதுசா ஜோஇன் பண்ணிருக்காங்க.”

 

“இவ்வளவு தானா உனக்கு தெரியும்? “

 

“வேறென்ன?”

அன்னையை கேட்டவன் அதிதியை  கேள்வியாக நோக்க, அவளோ அவன் முகம் பார்க்க முடியாது தடுமாறினாள்.

 

“நம்ம அதிடா?”

 

“அவங்களுக்கு ஞாபகம் இருக்காது ஆன்ட்டி. எனக்குமே அவ்வளவா ஒன்னும் நினைவுல இல்லை.”

 

“அதெப்படி மறக்கலாம். நீ சின்னப் பொண்ணு. ஆனா இவன், நீ பிறந்து வீட்டுக்கு வந்ததுல இருந்து எங்க வீட்டுக்கு சாப்பிடவும், தூங்கவும் மட்டும் தான் வருவான், உன்கூடவேதான் இருப்பான். நாம ஊர் விட்டு போறப்பக்கூட அப்படி ஒரு ஆர்ப்பாட்டம் பண்ணிதான் கிளம்பினான். “

 

“ஆதி,ஞாபகம் இருக்காடா? “

 

“இருக்குமா, அதெப்படி இல்லாம போகும்…”

 

அதிதியை பார்த்துக்கொண்டே கூறினான். அவனுக்கு எதுவோ விளங்குவது போலவும், குழப்பமாகவும் இருந்தது.

 

“சரிங்க ஆன்ட்டி, இன்னொருநாள் வரேன் உடம்பு பார்த்துக்கோங்க,”

 

“இருடா சாப்பிட்டு போலாம்.”

 

“கண்டிப்பா இன்னொரு நாள் வரேன்.”

 

“சரிம்மா.கண்டிப்பா வரணும்.” அவள் தலைக்கோதி கூறினார்.

 

அவரிடம் புன்னகைத்து விடைப் பெற்றவள், ஆதிரையனை பார்க்க, ஏதோ  யோசனையில் இருப்பதாக தோன்றியது.

 

“ஆதி, கிளம்புறா.” அவன் தோள் தொட்டு கூறவுமே அவளைப் பார்த்தான்.

 

“வரேன்.”

 

அவனைப்பாரத்து கூறியவள் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

 

“டேய் எதிர் பார்க்கவே இல்லை இவளைப் பார்ப்பேன்னு. மனசுக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா பாரு எவ்வளவு ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்த உறவு, ரொம்ப தள்ளி போய்டுச்சு.” “யாரோன்னுதான் என்னை பார்க்க வந்தா. ஆனால் நான் யாருன்னு சொல்லவுமே, அவ முகத்துல எந்த மாற்றமும் இல்லை.பாவம் தனியா ரொம்ப கஷ்டப்பட்டுட்டா போல. கடவுள் நல்லவங்களைத்தான் சோதிக்கணும்னு இருக்கு. கண்டிப்பா இன்னொரு நாள் அவளை அழைத்து சாப்பிடக் கொடுத்துதான் அனுப்பனும். இனியாவதுஅவளைப் பார்த்துக்கனும் டா. அவ அப்பாவும் அம்மாவும் ரொம்ப உதவி பண்ணுனவங்க. நம்மளுக்கு துணையா இருந்திருக்காங்க ப்பா.

“கண்டிப்பா பார்த்துக்கலாம்.”

“ஹ்ம்ம். சரி போ.போய் முகம் கழுவிட்டு வா, டீ போடறேன்.”

 

சரியென்று ஆதிரையன் மேலே தன் அறைக்கு சென்றான்.முகம் கழுவி  துவாளையால் முகத்தை துடைத்துக்கொண்டே அவனறை வெளித்தால்வாரத்திற்குவர அதிதி அப்போதுதான் அவர்களது தென்னந்தோப்பிலிருந்து இறங்கி வண்டியில் ஏறுவதைக் கண்டான்.

 

மனதில் அவன் செல்லம்மாவின் நினைவுகள். இவளாய் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளோடு அந்த மகிழ்வை கூட பகிர்ந்திட முடியாமல் இன்றைய காலை நடந்த நிகழ்வுகள் தடையாய் வந்து நின்றது. தனியாக இத்தனை வருடங்கள்? எப்படி இருந்திருப்பாள்? அவள் அத்தனை சிறிதாக  இருக்கும் பொழுதே அருளும், தில்லையும் எத்தனை அன்பாய், தவமிருந்து பெற்ற மகளை சீராட்டிக்கொண்டிருந்தனர். தரையில் நடக்கக்கூட விட மாட்டார்களே.ஏன் ஆதி கூட அவளை அத்தனை தாங்கிக்கொண்டுதானே இருந்தான். எப்படி யாரும் இல்லாது வாழ்ந்தாள்? வியப்பாக இருந்தது.

 

இத்தனை பெரிய பதவியில், பாராட்டத்தக்கது. இவன் முகத்தில் சற்றே மென்னகை.’சில்லு வண்டு எப்போப்பாரு கத்திட்டே தான் இருப்பா.’

அவள் சிறு வயது நினைவோடு காலை அவள் தந்த பத்திரத்தின் நினைவும் வர, கீழே வந்து அன்னை தந்த தேநீரை எடுத்துக்கொண்டு அவன் அலுவலக அறைக்குள் நுழைந்தான்.

 

அந்த பத்திரத்தில்,அவளது தந்தையின் பெயரில் இருந்த வீடு மற்றும் வீட்டை 

சுற்றிய நிலப்பகுதி, அதாவது இப்போது ஆதிரையன் வீடு அமைந்துள்ள பகுதி, இவள் பெயரிலும் அந்நிலத்துக்கு பொறுப்பாளராக அழகன் இருப்பதாகவும் இருந்தது.

‘இப்போது வரையில் அது அப்படியேதான் இருக்கா?’

ஆதிரையனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவனிடம் இந்நிலத்துக்காண பத்திரம், இல்லாவிட்டாலும் வீடு கட்டுவதற்கான வீட்டு வரைப்பட அனுமதி என்பன எடுக்கும்போது 

எதாவது குழருபடிகள் இருந்திருக்க தெரிந்திருக்குமே. அப்படியொன்றுமே நடக்கவில்லையே.இதென்ன?

 

‘அப்பா அவங்க இல்லன்னதும் இதையும் சேர்த்தே எடுத்துக்கொண்டாரோ?

ஆனாலும் அடுத்தவங்க சொத்து நமக்கெதுக்கு? அப்பா இதுக்காக மட்டும்

அதிதியை பார்க்கச்சென்றிருப்பார் என்றும் தோன்றவில்லை. வேறென்னவோ இருக்கு.’

யாரைக் கேட்டு இவற்றையெல்லாம் தெரிந்துக்கொள்வது?’

 

அழகனின் பிஏவிற்கு அழைத்தான். அவரிடம் கேட்டிட, அன்று அதிதியை  பார்த்து விட்டு வண்டியில் ஏறும் போதே அழகன் கூறியிருந்தார்.இதைப்பற்றி எப்போதும் ஆதிரையனுடன் பேசக்கூடாது என்று. ஆக,

“தம்பி, நான் வெளிலதான் இருந்தேன். அப்பா மட்டும்தான் போய் பேசிட்டு வந்தாங்க, அது பற்றி எனக்கு தகவல் ஒன்றும் தெரியாது.” என்றுவிட்டார்.

 

அப்போதுதான் டிசி சரணின் நினைவு வந்தவனாக, இன்னிக்கு காலைலயும் வந்திருந்தானே.அவனைக் கேட்கலாம் என அழைத்தவன், நலம் விசாரித்து பின்னே, அதிதியை பற்றி விசாரிக்கவேண்டும் என்றிட,

 

“இன்னைக்கு காலைல அதிதிய மீட் பண்ண போன தானே. அப்போ ஒன்னும் பேசிக்கலயா? “

 

“இல்லை அது… “என்று,ஆதிரையன் காலை நடந்ததைக் கூற,

“ஓஹ்!நான் அதி கூட இன்னும் பேசல.சரி இப்போ உனக்கு என்ன தெரியணும்?”

 

“இந்த லேண்ட் சம்பந்தமா தெரிந்துக்கொள்ள வேண்டும்.”

 

“அதிக்கு உங்கப்பா கூடத்தான் கோபம்டா. அவர் அவளுக்கு பண்ணுன, ஐ மீன் அவங்க அப்பாக்கு பண்ணுன துரோகத்தை, உங்கப்பாகிட்ட தீர்த்துக்கணும்னு நினச்சா. ஆனா உங்கப்பாவோட நல்ல நேரம், நல்ல பெயரோடையே போய் சேர்ந்துட்டார்.”

 

“கொஞ்சம் புரிற போல சொல்லிடு. ஏற்கனவே குழம்பிப்போய் இருக்கேன்.”

 

“ஆதி… “

என ஆரம்பித்த சரண் அத்தனையும் சொல்லி முடிக்க, ஆதிரையனுக்கு  சரணோடு பேசவே வெட்கிப்போனது.

 

“டேய் லைன்ல இருக்கியா? “

 

“ஹான்! இருக்கேன்.இப்படி இருக்கும்னு கனவுல கூட நினைக்கல. அப்பா என்கிட்ட அதி அப்பா மீட்டுக்க முடியாம இருக்கவும், தானே எல்லாவற்றையும் மீட்டுக்கொண்டதாகவே கூறினார்.”

 

“ஆதி,இனி அதிக்கு உன்கிட்ட இருந்து எப்போவும் அந்த சொத்துக்களை எடுக்கணும்னு நினைக்கல. அவளுக்கு பிடிக்கவும் இல்லை. உனக்கும் இதுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லைன்னு சொல்றா.உன்கிட்ட இப்போ இதை சொல்லிட்டேன்னு தெரிந்தாலே என்ன சொல்வாளோ தெரியாது.நீயா யோசிச்சி எதாவது பண்ணு.”

 

“ஹ்ம்ம் கண்டிப்பா,வச்சிர்றேன். “

 

அலைபேசியை வைத்தவனுக்கு அத்தனை கோபம். அடுத்தவர் சொத்தை அனுபவித்துக்கொண்டுதான் இத்தனை நாள் வாழ்ந்துக்கொடிருக்கிறேனா?

எத்தனை முன்னேற்றம் கண்டிருந்தாலும், நிலத்தில் எழுப்பிய கட்டிடங்கள் வருமானத்தை ஈட்டித்தந்தாலும், நிலங்களின் தன் உழைப்பே இப்போது இருந்தாலும் நிலம் தனதில்லையே?’

 

“என்ன செய்யலாம் என்ன செய்ய வேண்டும் ” யோசித்தப்படியே தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான். நினைவெல்லாம் சரண் கூறிய விடயங்களை அலசிகொண்டிருக்க, அதிதியும், இவ்வூரில் கடைசியாய் கடத்திய அவள் சிறு வயது நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!