ஆழியின் ஆதவன்

அத்தியாயம் ‌14

 

ஆழி கமிஷனர் பேரை சொன்னதும் அதை நம்பமுடியாமல் குழம்பி நின்றனர் மூன்று ஆண்களும்.

 

“நீ என்ன சொல்ற ஆழி? ஆஷா கமிஷனர் கிட்டய அந்த மெமரி கார்ட்டை குடுத்த? அதை ஏன் அவர் இவ்ளோ நாளா எங்ககிட்ட சொல்லல? ஏன் அவர் எந்த ஆக்சனும் எடுக்கல?”

 

“நீங்க கேட்டதுக்கு நாங்க பதில் சொல்றது இருக்கட்டும், முதல்ல நாங்க கேக்குறதுக்கு நீங்க பதில் சொல்லுங்க? இந்தக் கேஸ்காகத் தான் நீங்க மூணு பேரும் வேற வேற இடத்தில் விசாரணை பண்ணிட்டு இருந்தீங்க? அதுல நீங்க என்ன கண்டுபுடிச்சிங்க? ஏன் உங்களுக்கு இதெல்லாம் தெரியவர்ல?” என்ற ஆழியை நிமிர்ந்து பார்த்த ஆதவ்,

 

“முதல்லயே இந்தக் கேஸ் எங்களுக்கு வர்ல, வேற ஆபிசர்ஸ் தான் இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருந்தாங்க, பட், ஒரு வருஷம் மேல ஆகியும் அவங்களால எதுவும் கண்டுபுடிக்க முடியலைனு, அதோட அந்தக் கேஸ் இன்வெஸ்டிகேஷன்ல இருந்த ஆபிசர்ஸ் பாதிபேர் வேலைய விட்டுட்டாங்க, சிலபேர் இறந்து போய்ட்டாங்க, அதுக்குப் பிறகு இந்தக் கேஸை எடுக்கவே போலீஸ்ல சிலபேர் தயங்கினாங்க… அப்ப தான் காணாமல் போன சில பொண்ணுங்க பேரன்ட்ஸ் இந்தக் கேஸை சிபிஐக்கு மாத்த சொல்லி கோர்ட்ல ரிட் போட, இந்தக் கேஸ் என் கைக்கு வந்தது. இந்தக் கேஸ்ல கமிஷனர் தான், நாங்க மூணு பேரும் ஃப்ரண்ஸ்னு தெரிஞ்சு, எனக்குத் துணையப் போலீஸ்ல இருந்து விஷ்ணு, முகிலை என் கூட ஜாயின் பண்ணி விட்டாரு, நாங்களும் பல ஊர்ல இன்வெஸ்டிகேட் பண்ணோம். அதுல கடைசிய அந்த விமல், அவன் அப்பன் மாட்னாங்க. பட், ஸ்டரங் எவிடன்ஸ் எதுவும் வசமா கிடைக்கல, அதைத் தேடித்தான் நாங்க அலஞ்சிட்டு இருந்தோம். பட், எப்டின்னு தெரியல நாங்க எங்க எல்லாம் அவங்களைப் புடிக்க ப்ளான் போட்டோமே, அந்த எல்லா இடத்திலும் அவங்க சொல்லி வச்ச மாதிரி அவங்க எஸ்கேப் ஆனாங்க”

 

“சொல்லி வச்சனால தான் அவங்க எஸ் ஆனாங்க, சொன்னது உங்க கமிஷனர்… ம்ம்ம் மேல சொல்லுங்க” என்றாள் சைத்ரா.

 

“நாங்க கஷ்டபட்டு ஒரு ஸ்டெப் எடுத்த, மூணு ஸ்டெப் பின்னாடி இழுத்திருக்கான் அந்தக் கமிஷனர்” என்று பல்லை கடித்த விஷ்ணு,

 

“நாங்க ஒரு வழிய விமல் ஆன்ட் அவன் அப்பனோட சேர்த்து இதுல சைலேஷ்னு ஒருத்தன் இருக்குறதை கண்டுபுடிச்சோம். அதுக்கு அப்புறம்” என்றவன் குரல்‌ உடைந்தது.

 

“சைலேஷ் பத்தி தெரிஞ்சு நாங்க அவனை டார்கெட் பண்ண டைம்‌ பார்த்துட்டு இருக்கும் போது தான்…” என்று தொடங்கி ஆதவ்வும் அதற்கு மேல பேசமுடியாது கலங்கிப்போக, பெண்களுக்குப் புரிந்தது. அப்போது தான் ஆஷாவுக்கு விபத்து நடந்திருக்கிறது என்று.

 

“அப்ப தான் ஆழி ஆஷா ஆக்சிடென்ட் நடந்தது. அதைக் கேட்ட பிறகு எங்களுக்கு வேற எதுவும் ஓடல, உடனே ஹாஸ்பிடல் வந்துட்டோம். ஆதவ்வும் விஷ்ணுவும் ஷாக்ல பிரம்பபுடிச்ச மாதிரி ஆய்டாங்க, கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆச்சு இவனுங்க நார்மலா ஆக, அந்தக் கேப்ல அந்த நாதாரி கமிஷனர், இந்தக் கேஸ்னால தான், ஆஷா இறந்திருக்காங்க, சைலேஷ் ஆன்ட் விமல் தான் ஆஷா ஆக்சிடென்ட்டை செஞ்சது, இதுக்கு மேல நீ இந்தக் கேஸ்ல இருந்தால், உன் அம்மாவையும் குழந்தையும் கொன்னுடுவாங்கன்னு ஆதவ்கிட்ட சொல்லி, அந்தக் கேஸ்சை வேற ஆபிசர் க்கு மாத்திட்டத சொல்லி இருக்கான். ஆதவும் ஆஷாவை தான் இழந்துட்டேன். நிலாவையும் இழக்க தயாரா இல்லைனு அந்தக் கேஸ்ல இருந்து வெலகுறத‌ சொல்லிட்டான். ஆனா, ஆஃப் தி ரெகார்ட் நாங்க மூணு பேரும் இன்னும் இந்தக் கேஸ் பத்தி யாருக்கும் தெரியாமல் விசாரணை பண்ணிட்டு தான் இருக்கோம். அதுல சைலேஷ்க்கு மேல யாரோ இருக்காங்கனு எங்களுக்குத் தெரிஞ்சிது. பட்… அது யார்னு எங்களுக்குத் தெரில, சைலேஷ் எங்க இருக்கான்னே தெரியல… சோ அன்ஆபீஷியல விமலையும் அவங்க அப்பாவையும் கடத்தி விசாரிச்சோம். பட், அவங்களுக்கும் எதுவுமே தெரியல. அதுக்குள்ள கமிஷனர் அங்க வந்து, இந்தக் கேஸ்ல இருந்து உங்களை ரிலிவ் பண்ண பிறகு நீங்க இப்படி அன்ஆபீஷியல இவங்களைக் கடத்தி இருக்க விஷயம் வெளிய தெரிஞ்ச எவ்ளோ பெரிய பிரச்சனை வரும்னு தெரியுமான்னு கம்பி கட்ற கதையெல்லாம் சொல்லிட்டு அவங்களைக் கூட்டிட்டு போய்ட்டாரு. அப்ப தான் நாங்க அவங்களைக் கடத்தின மேட்டர் கமிஷனருக்கு எப்படித் தெரிஞ்சுதுனு எங்களுக்குச் சந்தேகம் வந்துது, அதுல இருந்து எங்க இன்வெஸ்டிகேஷன் பத்தி அந்த ஆளுக்கு எதுவும் தெரியாம பாத்தேக்கிட்டோம். அதோட நிலாக்கு ஒன்னும் ஆகிட கூடாதுன்ற பயம் வேற” என்று முகில் நடந்ததைச் சொல்ல,

 

“விமலுக்கும், அவன் அப்பனுக்கும் சைலேஷை மட்டும் தான் தெரியும். யுவ்ராஜ் பத்தி அவனுங்களுக்கு எதுவும் தெரியாது. அப்படி ஒருத்தனுக்காகத் தான் அவனுங்க வேலை பாக்குறனுங்கன்னு கூட அவனுங்களுக்குத் தெரியாது” என்று நிமிர்ந்து ஆதவ்வை பார்த்த ஆழி, “சோ… நேர் வழியில் போனா, பாப்பாக்கு எதாவது ஆகிடும்னு‌ பயந்து, என்ன செய்றதுனு யோசிக்கும் போது, அந்த நேரம் என்னைப் பாத்தி தெரிஞ்சு, அவங்களை முடிக்கிற வேலைய என்கிட்ட குடுத்தீங்க… ஆம் ஐ கரெக்ட்” என்ற ஆழியை நிமிர்ந்து பார்த்தான் ஆதவ்.

 

“எஸ் ஆழி… அவங்களை அப்படியே விட எங்களால எப்படி முடியும். என்னோட தங்கச்சி ஆஷா… அவ பாவம் தெரியுமா… ரொம்ப அப்பாவி. அவளைப் போய்” என்று கோவத்தில் எழுந்த விஷ்ணு, “அந்தக் கமிஷனர் ராஸ்கலை நான் சும்மா விடமாட்டேன். இப்பவே போய் அவனை என்ன செய்றேன்னு பாரு” என்று எழுந்த விஷ்ணு கையைப் பிடித்து நிறுத்திய மீரா,

 

“போம்போது மறக்காம ஒரு மலர்வளையம் வாங்கிட்டு போங்க, கரெக்டா நீங்க சென்னை போய்ச் சேரும் நேரம் அந்த ஆளோட இறுதி ஊர்வலம் நடந்திட்டு இருக்கும்.” என்ற மீராவை விஷ்ணு அதிர்ந்து பார்க்க, மீரா இதழோரமாகச் சிரித்தவள், “மேட்டர் தெரிஞ்ச பிறகும், எவிடன்ஸ் எதிர் பார்த்துட்டு சும்மா இருக்க நாங்க ஒன்னும் போலீஸ் இல்ல மிஸ்டர். விஷ்ணு. எங்களுக்கு வேண்டியது காரணம் தான், ஆதாரம் இல்ல. இப்ப இந்த உலகத்தில் ஆஷா இல்லாம போனதுக்கு அந்த ஆளும் ஒரு காரணம். சோ… முடிச்சச்சு” என்ற மீரா திரும்பி ஆழி, சைத்ராவை பார்க்க, அவர்கள் முகத்தில் வெற்றிப் புன்னகை.

 

மீரா சொன்னதைக் கேட்ட விஷ்ணு, உடனே தன் ஃபோனில் யாருக்கோ தொடர்பு கொண்டு பேசியவன், திரும்பி ஆதவ்வை பார்த்து தலையசைக்க, மீரா சொன்னது உண்மை என்று மூவருக்கும் புரிந்தது.

 

“நேத்து மிட்நைட் கமிஷனர் சூசைட் பண்ணிக்கிட்டாராம்.” என்ற விஷ்ணுவை பார்த்து சிரித்த சைத்ரா, அவரா சூசைட் செய்யல, நாங்க செய்ய வச்சோம் டெப்டி” என்றது தான் விஷ்ணு அப்டியே அமர்ந்து விட்டான்.

 

“இது எப்ப நடந்தது? நீங்க மூணு பேரும் இங்க கொடைக்கானல்ல தானா இருந்தீங்க… அப்பறம் ஏப்டி?”

 

“ஏங்க… படிப்பும், எக்ஸாம் கூட இப்ப எல்லாம் ஆன்லைன்ல வந்துடுச்சு, ஆப்ட்ர் ஆல் ஒரு மர்டர். அதை எங்களால ஆன்லைன்ல பண்ணமுடியாத… நாங்களும் அப்டேட் ஆகணும் இல்ல?” என்று சைத்து சிரிக்க, ஆழி விஷ்ணுவை பார்த்து,

 

“ஆஷாக்கு அந்த மெமரி கார்ட்டை யார்கிட்ட தர்ரதுன்னு புரியல விஷ்ணு‌, ஆனா, பிரியா எப்படியாவது அந்தக் குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தரணும்னு கடைசிய சொன்னதையும் அப்படியே விடவும் முடியல. அந்த நேரம் தான் அவங்க வளைகாப்புக்கு அந்தக் கமிஷனர் வந்திருக்காரு, நீங்க அந்த ஆளை பத்தி ஆஷாகிட்ட நல்லவிதமாகச் சொன்னதை நம்பி அவங்களும் அந்த ஆள்கிட்ட ஹெல்ப் கேட்டிருக்க…” என்று இழுத்து மூச்சுவிட்ட ஆழி, “பட், அப்ப ஆஷாக்கு தெரியல, அந்த ஆள் தான் அவங்க சாவுக்குக் காரணமாகப் போறான்னு. கமிஷனர் பொண்ணோட மோசமான ஃபோட்டோஸ் வச்சு ப்ளாக் மெயில் செஞ்சு தான் அவரை அந்த விமலும், சைலேஷும் அவங்க கண்ட்ரோல்ல வச்சிருந்தாங்க, ஆஷா பத்தி அவங்ககிட்ட சொல்லி, அந்த மெமரி கார்ட்டை விமல்கிட்ட குடுத்து, தன் மகளோட ஃபோடோவை டெலிட் பண்ண வைக்கலாம்னு அந்த ஆள் ப்ளான் போட்டிருக்கான். அதுக்காக ஆஷாவை சைலேஷ் கிட்ட காட்டிக் குடுத்திட்டான்…”

 

“அவன் பொண்ணைக் காப்பத்த, அவன் ஆஷாவை பலி குடுத்திருக்கான். அவன் பொண்ணு மாதிரி ஆஷாவும் ஒரு பொண்ணு தானா, அதுவும் வயித்துல புள்ளையோட இருந்த பொண்ணைப்போய்…” என்ற குமுறிய முகில், “அந்த ஆளை எப்படித் தற்கொலை பண்ணிக்க வச்சிங்க?” என்று கேட்டான்.

 

“எந்தப் பொண்ணுக்காக அவன் ஆஷாவை காட்டிக்கொடுத்து, அவங்க சாவுக்குக் காரணம இருந்தனோ, அந்தப் பொண்ணை வச்சே அவன் கதைய முடிச்சோம். விமல் சிஸ்டம் ஹாக் பண்ணி அதுல இருந்த எல்லாத்தையும் நாங்க டெலிட் பண்ணோம்‌. அப்படிச் செய்யும்போது அதுல கமிஷனர் பொண்ணு பிக்ஸ் இருந்ததைப் பாத்தோம். எதுக்கும் இருக்கட்டும்னு அதை விமல் சிஸ்டம்ல இருந்து டெலிட் பண்ணிட்டு நாங்க எங்க டேட்டாபேஸ்ல சேவ் பண்ணி வச்சோம். அதை அந்தக் கமிஷனர்கிட்ட சொல்லி, ஒழுங்க நீயே தற்கொலை பண்ணிக்கிட்ட, மானம், மரியாதையாது மிஞ்சும். இல்லாட்டி நாளைக்குக் காலையில் என்ன நடக்கும்னு நாங்க சொல்லவேண்டியது இல்லைனு சொன்னோம். அவ்ளோதான் தான் வேலை முடிஞ்சதும். ஆன்ட் நாங்க அந்த ஆளுக்கு வாக்கு குடுத்த மாதிரி அந்தப் பொண்ணு ஃபோட்டோ எல்லாத்தையும் மொத்த டெலிட் பண்ணிட்டோம்” என்று நடந்ததைச் சொல்லி முடிக்க, ஆதவ் ஆழியைத் தீயாக முறைத்தான்.

 

“என்ன வேலைடி பாத்திருக்க நீ?? அந்த விமலுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்டி இருக்கு. நீயும் ஒரு பொண்ண இருந்துட்டு, இப்படிச் செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது… கமிஷனர் அயோக்கியன் தான் அதுக்கு அந்தப் பொண்ண என்ன செஞ்ச? அவளை வச்சு… ச்சீ. இது உனக்கு தப்பா தெரியல” என்ற ஆதவ்வை பார்த்து நக்கலாகச் சிரித்த ஆழி, 

 

“இந்த அறிவு என்னோட பாஸ்வேர்டு தெரிஞ்சிக்கும் போது எங்க போய்ச்சு மிஸ்டர். சிபிஐ…? புல் மோய போய்டுச்ச?!” என்று அவன் மட்டும் கேட்கும் குரலில் கேட்ட, ஆதவ் முக்ததை வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

 

“என்ன மிஸ்டர். ஆதவ் பதிலையே காணும்.” என்று நக்கலாகச் சிரித்தவள், “ஐ திங்க் நாங்க யாருன்னு உங்களுக்கு மறந்து போச்ச போல? வீ ஆர் நாட் ஏ நார்மல் பொண்ணுங்க மிஸ்டர் சிபிஐ. எங்களுக்குப் போற வழி முக்கியம் இல்ல. எங்க வேலை முடியனும், அப்படிதான் நாங்க இருந்தோம். அந்த வழியில் இருந்து எங்களை, வெளிய கொண்டு வந்த ஒரு நல்ல ஆத்மா சாகக் காரணம இருந்தவர்களை அழிக்க, இது இல்ல… இதை விடக் கீழ, மோசமான எந்த எல்லைக்கும் ஏறங்கிக்கூட நாங்க வேல செய்வோம். நாங்க வீட்டு செடி இல்ல மிஸ்டர், காட்டு மரம் எங்க இஷ்டத்துக்குத் தான் எங்க கிளை போகும்.” என்று அங்கிருந்து எழுந்த ஆழியை நிறுத்திய ஆதவ்.

 

“அந்த மெமரி கார்டு உங்ககிட்ட இல்லனு தானா நீ சொன்ன… அப்பறம் உனக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சுது” என்று கேட்ட ஆதவ்வை, திரும்பி பார்த்தாள் சைத்ரா.

 

“நீங்க சந்தேகம் பாடும் ஆளை பத்தி விசாரிச்சு, எவிடன்ஸ் கேதர் பண்ணி அப்புறம் புடிப்பிங்க. பட், எங்க வழி தனி வழி. ஆளை புடிச்சிட்டு தான் அடுத்த வேலைய பாப்போம்.” என்று திமிராகச் சொல்ல, முகில் அவள் அருகில் சென்று, “யாரு அந்தச் சைலேஷா?” என்று ஆச்சரியமாகக் கேட்க, சைத்ரா புருவம் உயர்த்தி அவனைப் பார்த்து, “பரவாயில்ல உங்களுக்குக் கூடக் கொஞ்சம் மேல் மாடி வேலை செய்யும் போல” என்றபடி மூன்று பெண்களும் அங்கிருந்து செல்ல, ஆதவ், விஷ்ணு அடுத்து என்ன என்று குழம்பி இருந்தனர்.

 

விமல் மற்றும் அவன் அப்பனையும் முகில் விடாமல் தொடர்வதால், ஆழி அவர்களைக் கடத்தி இருந்தால் அது முகிலுக்குத் தெரிந்திருக்கும். சைலேஷ் ஒருவன் மட்டும் தான் எங்கிருக்கிறான் என்று முவருக்கும் தெரியாது. அதனால் ஆழி கடத்தியது சைலேஷை என்று முகில் புரிந்து கொண்டான். ஆனால், போலீஸூக்கே சிக்காத சைலேஷ் இந்தப் பெண்கள் பொறியில் எப்படிச் சிக்கினான் என்று மூன்று போலீஸ் மூளைக்கும் புரியவில்லை.

 

முகில் போய்க்கொண்டிருந்த பெண்களைத் நிறுத்தி, அவன் சந்தேகத்தைக் கேட்க, ஆழி அவனைப் பார்த்து சிரித்தபடி, “விஷ்ணு என்னைப் பஸ்ட் டைம் பாக்கும் போது சொன்னாரு, நீ செம்ம அழகா ஹாட்ட இருக்கான்னு” என்றவள் சிரித்துக்கொண்டே அங்கிருந்து செல்ல, முவருக்கும் புரிந்துவிட்டது. சைலேஷ் எப்படி இந்த அழகு பெண்களிடம், அலேக்காகச் சிக்கி இருப்பான் என்று. ஆனால், இது எப்போது நடந்தது…?