ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 21

 

அனைவரும் போட்ட ப்ளான் அருமையாக வேலை செய்யச் சைத்ரா, முகில் ஜோடி இடையே காதல் தீ எக்குத்தப்பாகப் பற்றிக்கொண்டது.

 

வீட்டுக்கு வந்த சைத்ராவை ஆழியும் மீராவும் ஒருவர் மற்றி ஒருவர் கிண்டல் செய்ய, சைத்ரா கன்னம் வெட்கத்தில் சிவந்தது.

 

“பாரு மீரா, இப்ப தான் அந்த முகில் உன்கிட்ட இவளை புடிச்சிருக்குன்னு சொன்னா மாதிரி இருக்கு. அதுவும் அதை இவகிட்ட கூடச் சொல்லல, உனகிட்ட தான் சொன்னான். ஆனா, அதுக்குள்ள இன்னைக்குப் பாத்தா… பய தாலியோட வந்து நிக்குறான். அவன் காதல் மேல அவனுக்கு எவ்ளோ நம்பிக்கை பாரேன்” என்றதும் தன்னவன் தன் மீது வைத்த தூய்மையான அன்பை நினைத்து சைத்ரா உள்ளம் துள்ளிக்குதித்து.

 

“ஆமா ஆழி. முகில் மட்டும் இல்ல அவங்க மூணு பேரும் ஒரு முடிவோட தான் சுத்திட்டு இருக்காங்க. ஒன்னு நாம அவங்களைக் கல்யாணம் பண்ணுமாம். இல்லாட்டி… அவங்க நம்மள கல்யாணம் பண்ணிக்குறேன்னு புதுசா பேசிட்டு திரியுறாங்கடி… அதுக்குச் சாட்சி தான் முகில் கைல இருந்த தாலி. நீயும் சீக்கிரம் ஆதவ்க்கு ஓகே சொல்லாட்டி உனக்கும் இதே தான் நடக்கும். அவ்ளோதான்” என்ற மீராவை ஆழி‌ முறைக்க,

 

“ஏய் இப்ப ஏன்டி நீ மீராவ முறைக்கிற… அவ சரிய தான் சொல்ற… அன்னைக்கு இருந்த சூழ்நிலையைப் பாத்து முகில் என் மேல பரிதாபப்பட்டுத் தான் என்னை எத்துக்க நினைக்குறாருன்னு நெனச்சு முதல்ல எனக்குக் கோவம் வந்துச்சு, அப்புறம் அவர் சொன்னதைக் கேட்ட அப்புறம் தான் எனக்கே புரிஞ்சுது. எனக்கு என்ன குறைனு… பாக்க உன்னை மாதிரி சூப்பரா இல்லாட்டியும் நானும் கொஞ்சம் அழகத் தான் இருக்கேன். தென் நல்லா படிச்சிருக்கேன். என்னோட சொந்தகால்ல நிக்கும் தைரியம் எனக்கு இருக்கு… எல்லாத்துக்கும் மேல ஏஞ்சல் மாதிரி நீங்க ரெண்டு பேர் என் கூட இருக்கீங்க… அப்புறம் என்கிட்ட என்ன குறை இருக்குன்னு யோசிச்சேன். எனக்கு நடந்ததில் கூட என்னோட தப்பு எதுவும் இல்லையே… வெறி புடிச்ச ரெண்டு நாய்ங்க என்னைக் கடிச்சதுல என்னோட தப்பு என்ன இருக்கு சொல்லு… அப்டி இருக்கும் போது நான் ஏன் என் வாழ்க்கைய எனக்குப் புடிச்ச மாதிரி, புடிச்சவர் கூட வாழக்கூடாதுனு தோனுச்சு… ஆனா, முகிலுக்கும் என்னைப் புடிக்குமான்னு ஒரு பயம் சின்னத உள்ளுக்குள் இருந்துச்சு. இன்னைக்கு ரெஸ்டாரன்ட்ல அவருக்குப் பொண்ணு பார்க்கணும் ஆதவ் சொல்லும்போது எனக்கு உள்ள பக்குன்னு இருந்துச்சு தெரியுமா… அப்றம் விஷ்ணு நீ முகிலை கட்டிக்கிறீயான்னு கேக்கும் போது எனக்கு அவ்ளோ சந்தோஷம். நான் சரி சொல்ல தொடங்கும் முன்ன முகில் எதையே பேச, நானும் பதிலுக்குப் பேச” என்று சைத்ரா சொல்ல,

 

“கடைசில எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது” என்ற ஆழியும் மீராவும் சைத்ராவை கட்டியணைத்து கொண்டனர்.

 

“நீ டப்பிக்கை மாத்தத ஆழி… நீ ஆதவ்க்கு ஏன் ஒகே சொல்ல மாட்ற..‌. அத சொல்லு…”

 

“ப்ச் அந்தக் கதை இப்ப வேணாம் சைத்து… இப்ப நம்ம ஹாப்பிய இருக்கோம். முதல்ல அதை முழுசா அனுபவிப்போம். எப்படியே உன் ரூட் கிளீயர், ம்ம்ம் அடுத்த விஷ்ணு என்ன பண்றாருன்னு பாப்போம்”

 

“விஷ்ணு என்ன பண்ணனும் ஆழி?” என்று சைத்ரா புரியாமல் கேட்க,

 

“ம்ம்ம் அவரும் மீராகிட்ட அவர் லவ் பத்தி லைட்ட கோடு போட்டு கமிச்சு இருக்காரு. பட், நம்ம மேடம் அதெல்லாம் புரியாத மாதிரியே மெயின்டெய்ன் பண்ணிட்டு வந்துட்டாங்க… சோ விஷ்ணு கண்டிப்பா வேற எதாவது குட்டி கலாட்டா பண்ணுவாரு… இவ வாயால ஓகே சொல்றவரை விட மாட்டாரு… நீ வேணும்னா பாரு” என்ற ஆழி,

 

“சரிடி எனக்கு டைம் ஆச்சு நான் கெளம்புறேன்” என்றவள் வீடுக்கு கிளம்பினாள்.

 

விஷ்ணு கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்து எதையே தீவிரமாக யோசிக்க, ஆதவும் முகிலும்,

 

“டேய் என்னடா ரொம்ப நேரமா என்னத்தையோ யோச்சிட்டு இருக்கீயே, அது என்னன்னு தான் சொல்லித்தொலையேன். என்ன எதாவது புதுக் கேஸா…”

 

“கேஸ்காக எல்லாம் இப்டி உக்காந்துட்டு யோசிக்கிற ஆளா இவன். நீ வேற ஆதவ். சார் இப்ப தீவிரமா மீராவை எப்படிக் கரெக்ட் பண்றதுன்னு திங்க் பண்ணிட்டு இருக்காரு… என்னடா விஷ்ணு நான் சொல்றது சரிதான…?”

 

“சென்பர்சென்ட் கரெக்ட் டா… அன்னைக்கு நான் ரெஸ்டாரன்ட்ல பேசினது அவளுக்கு நல்லா புரிஞ்சுதுடா‌. ஆனா, ஏன்னு தெரியால ஒன்னும் தெரியாத மாதிரி போய்ட்டா… அதான் எப்டி அவ லவ்வை வெளிய கொண்டு வர்ரதுனு திங்க் பண்ணிட்டு இருக்கேன்.”

 

“டேய் அதை இங்க உக்காந்துட்டு யோசிச்சு என்ன யூஸ். கிளம்பி மீரா வீட்டுப் போடா..‌. அவ பக்கத்துல இருந்ததான், எதாவது தோனும்… போடா முதல்ல”

 

“கரெக்ட் முகில்… நான் அவ கூட இருந்தா, சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் என்னோட லவ்வை அவளுக்கு உணர்த்திட்டே இருப்பேன்‌. தேங்க்ஸ் டா…”

 

“இங்க பாருடா முகில் கொஞ்ச நாள் முன்னாடி வரை அவங்க மூணு பேரையும் கண்ட மேனிக்கு திட்டிட்டு இருந்தவன், என்னைக்கு மீராவை பாத்தானே, டக்குன்னு அப்படியே அந்தர் பல்டி அடிச்சு மாறிட்டான்.” என்ற ஆதவ் அருகில் வந்த விஷ்ணு,

 

“ஆமாடா, நான் மீராவை பாத்ததும் மாறிட்டேன் தான். சரி… இங்க மட்டும் என்ன வாழுதாம். என்னமோ நம்ம வேலை முடிஞ்சது மிஸ். ஆழினிய ஒரேயடியா மிஸ் ஆகிடுவான்னு டைலாக் எல்லாம் பேசினா, இப்ப என்னடான்ன எங்கும் ஆழி, எதிலும் அழின்னு சுத்திட்டு இருக்க… நீ என்னைச் சொல்றீயா” என்று ஆதவ் காலை வார, ஆதவ் விஷ்ணு தோள்மீது கை போட்டவன்,

 

“டேய் மச்சான் நான் அன்னைக்குச் சொன்னதைத் தான் இன்னைக்கும் சொல்றேன். இந்த வேலை முடிஞ்சதும், மிஸ். ஆழினி மிஸ் ஆகிடுவா, இனிமே மிஸ். ஆழினி இல்லை” என்றவனை விஷ்ணுவும் முகிலும் புரியாமல் பார்த்தனர்.

 

“என்ன புரியலயா… நான் சொன்னதை நீங்க தெளிவ புரிஞ்சிக்கல. இந்த வேலை முடிஞ்சதும் மிஸ். ஆழினி, மிஸஸ். ஆழினி ஆதவேஷ்வரனா மாறிடுவா… அதைத் தான் அன்னைக்கு நான் சொன்னேன்.” என்றவனைக் கையெடுத்து கும்பிட்ட விஷ்ணு, “தெய்வமே நீங்க எங்கயே போய்ட்டிங்க,” என்று சொல்ல, அவன் தோளை தட்டிக்கொடுத்த ஆதவ்,

 

“நான் எங்கயே போறது இருக்கட்டும், நீ இப்ப கெளம்பி சீக்கிரம் மீராவ பாக்க போடா” என்றதும் மின்னல் வேகத்தில் மீரா வீட்டுக்கு விரைத்திருந்தான் விஷ்ணு.

 

மீரா, சைத்ரா, ஆழி மூவரும் எதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க, சரியாக அங்கு வந்து சேர்ந்தான் விஷ்ணு.

 

ஆழி, சைத்து, மீராவை பார்த்து, ‘நான் சொன்னது சரியப் போச்ச’ என்று கண்களால் சமிக்ஞை செய்ய, மீரா வெட்கத்தில் தலைகுனிந்து கொண்டாள்.

 

“என்ன ஆழி ஏதோ முக்கியம டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க போல, மே ஐ கம் இன்” என்றபடி மீராவை ஓரக்கண்ணால் பார்த்தபடியே உட்கார்ந்தான்.

 

“ம்ம்ம் ஆமா விஷ்ணு… ஒரு கன்சைன்மெண்ட் வாங்கப்போகணும். எனக்கும் சைத்துக்கும் ஒரு முக்கியமான வேலை இருக்கு, அதான் மீராவை அனுப்பலாம்னு இருக்கேன்” என்று சொல்ல மீரா ஆழியை அதிர்ந்து பார்க்க, சைத்ரா வந்த சிரிப்பை அடக்கப் படாதபாடுபட்டாள்.

 

“ஏய் ஆழி என்னடி… கன்சைன்மெண்ட் வாங்க நீதானா போறேன்னு சொன்ன… இப்ப என்ன என்னைப் போகச் சொல்ற” என்று ஆழி காதைக் கடித்தாள்.

 

“அது அப்ப… இது இப்ப… எல்லாம் ஒரு காரணமா தான் சொல்றேன், நீ வாய்மூடிட்டு ஒழுங்க கிளம்பு” என்று மெதுவாகப் பல்லை கடித்துக் கொண்டு பேசிய ஆழி,

 

“அப்பறம் விஷ்ணு என்ன இந்தப் பக்கம்” என்று வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க,

 

“அது ஒன்னு இல்ல ஆழி… அந்த யுவ்ராஜ்கு என்ன ப்ளான் முடிவு பண்ணி இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கத் தான் வந்தேன்” என்று அசடுவழிய,

 

“ம்ம்ம் பாத்தாலே தெரியுது… உங்களுக்குக் கடமை தான் முக்கியம்னு எனக்கு நல்லாவே தெரியுமே… கரெக்ட் டைம்க்கு தான் வந்திருக்கீங்க, நேத்து தான் நெட்ல ஒரு சூப்பர் மேட்டர் புடிச்சேன். நம்ம நல்லா நேரம் எங்களுக்கு மெட்டீரியல் சப்ளை பண்ற ஏஜெண்ட்கிட்ட அது ஸ்டாக் இருக்காம். யாருக்கோ வரவச்சது… டபுள் பேமெண்ட் குடுத்து அதை நான் வாங்கிட்டேன். அதைக் கலெக்ட் பண்ண தான் மீரா போறா” என்ற சொல்ல, ஒரு நிமிடம் எதையே யோசித்த விஷ்ணு,

 

“ஏஜெண்ட்னா யாரு அந்த விமல் பையனுக்குப் பூச்சியோ புழுவோ குடுத்தனே அவனா…” என்று பதற. ஆழி உள்ளுக்குள்ளே சிரித்தாள்.

 

“ஆமா விஷ்ணு அவனே தான்… நான் கூட மீரா மேல அவனுக்கு ஒரு க்ரஷ்னு சொன்னேனே அவனே தான்” என்று அலுங்காமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட, சட்டென எழுந்த விஷ்ணு,

 

“ஆழி… மீரா எதுக்குத் தனிய போகணும். நான் இப்ப ஃப்ரீ தான், பேசாம நானே கூட்டிட்டு போய்ட்டு வரேனே” என்றதும் ஆழி திரும்பி மீராவை பார்த்து கண்ணடித்து,

 

“நோ ப்ராப்ளம் விஷ்ணு‌… அவ வந்த நீங்க கூட்டிட்டு போங்க…” என்றவள்,

 

“மீரா கன்சைன்மெண்ட் பத்திரம். வெண்மதி அம்மாகிட்ட ஒரு புதுக் காண்ட்ராக்ட் கிடைக்குற மாதிரி இருக்கு, அது விஷயமா ஒருத்தரை பாக்கப்போறேன்னு சொல்லிட்டு வந்தேன். நான் சீக்கிரம் போகணும், நானும் கிளம்புறேன். சைத்ரா பைடி” என்றவள் ரகசியமாக, “ஆல் தீ பெஸ்ட் மீரா” என்று விட்ட செல்ல, விஷ்ணுவுடன் மீரா புறப்பட்டாள்.

 

 

மீரா முன்னே நடக்க, அவள் பின்னால் வந்த விஷ்ணு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

 

“இப்ப எதுக்கு மூஞ்சிய இப்படி வச்சிட்டுவறீங்க நீங்க?” என்ற மீராவை முறைத்த விஷ்ணு,

 

“ஏன்டி கேக்க மாட்ட, நீ ஏன் கேக்கமாட்ட… அந்தப் பூச்சி, புழு விக்கிற பொறம்போக்கு உன்னை அப்படியே முழுங்குற மாதிரி பாக்குறான். நீ என்னடான்ன ஒன்னும் சொல்லாம கம்முன்னு நிக்குற… எனக்கு உள்ள எப்படி எரியுது தெரியுமா… அவனை நாலு மீதி மீதிக்கப்போனேன், ஆனா, நீ என்னைப் புடிச்சு இழுத்துட்டு வந்துட்ட… இருக்கட்டும் இன்னைக்கே அவன் இடத்தைச் சீஸ் பண்ணி, அவனை அரஸ்ட் பண்ணி உள்ள தள்றேன்”

 

“அது முடியாது விஷ்ணு. அவன் ஒவ்வொரு மெட்டீரியல் டிரன்சாக்ஷனுக்கும் ஒவ்வொரு இடமா மாத்திட்டு இருப்பான். இப்ப நீங்க அங்கப்போனா அங்க உங்களுக்கு ஒன்னு கிடைக்காது” என்று அவனை உற்று பார்த்து அழகாகச் சிரித்து,

 

“என்னை யார் பாத்த எனக்கு என்ன… என்னோட பார்வை எப்பவும் உங்க மேல தான் இருக்கும். இந்த மீராவின் பார்வை எப்பவும் அவ கண்ணன் மேல மட்டும் இருக்கும்” என்றவள் வேகமாக நடக்க, அவள் சொன்னதின் அர்த்தம் புரியாமல் முதலில் விழுத்த விஷ்ணு… பின் அர்த்தம் புரிய ஓடிப்போய் மீரா முன்பு நின்றான்.

 

“நீ… நீ சொன்ன கண்ணன் நான் தானே?” என்று கேட்க, மீரா அவனைச் செல்லமாக முறைத்தவள், “கடவுளே இவரைக் கட்டிட்டு நான் என்ன தான் செய்யப்போறேனே” என்று தலையில் அடித்துக்கொள்ள, “அதைப் பத்தி நீ கவலைப்படாத‌, அதெல்லாம் ஐயா தூள்கிளப்பிடுவேன்” என்றவன் அவளை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

 

ஆதவ் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஆழியைச் சீண்டி விளையாடா, அவன் அருகாமை ஆழியை ரொம்பவே படுத்தியது‌. அவளையும் அறியாமல் ஆழி கொஞ்ச கொஞ்சமாக ஆதவ்விடம் தன்னை இழந்து கொண்டிருந்தாள். எப்படியாவது ஆதவ்வை விட்டு தள்ளி இருக்க அவள் நினைக்க, உயிர் உள்ள வரை அவள் மனதிலும், எண்ணத்திலும் இருந்து மறக்க முடியாதபடி, விதி அவனோடு அவளை உயிரோட உடலாக இணைத்துவிட்டது.

 

யுவ்ராஜ் இந்தியா வர இன்னும் இரண்டு நாட்களே இருக்க ஆழி யாரும் தெரியாமல் சில வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள்.

 

அன்று ஆழி மாலை போல் வீட்டுக்குள் நுழைய ஆதவ்வின் சிரிப்பு சத்ததோடு, கூடவே ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தமும் கேட்க, ஆழி உள்ளே சென்று பார்க்க, அங்கு நிலாவை மடியில் வைத்தபடி, ஆதவ்வுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தாள் ஆஷாவின் சித்தி மகள் பிரியா.

 

“ஆழி” என்று அன்பாகக் குரல் வந்த திசையில் ஆழி திரும்பி பாக்க, அங்கு ஆழியை நோக்கி கையை நீட்டியபடி ஓடி வந்து அணைத்துக் கொண்டார் ஆஷா விஷ்ணுவின் தாய்.

 

“எவ்ளோ நாள் ஆகிடுச்சு ஆழி உன்னைப் பாத்து… எப்படிமா இருக்க?” என்று அவர் அன்போடு விசாரிக்க அந்தத் தாயின் அன்பில் கரைந்து போனால் ஆழி.

 

“நான் நல்லா இருக்கேம்மா… நீங்க எப்படி இருக்கீங்க?” என்று பரஸ்பரம் விசாரிப்புகள் முடியவே இரவு ஆகிவிட்டது.

 

ரொம்ப நேரமாக அவளைக் கூடக் கவனிக்காமல் பிரியாவுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்த ஆதவ்வை ஒரு தவிப்போடு ஆழி பார்த்திருக்க, ஆதவ்வும் தவிப்பில் வாடிய தளிர் போல் வதங்கி இருந்த ஆழி முகத்தை அவள் அறியாமல் கவனித்துக் கொண்டு இருந்தான்.

 

“ம்ம்ம் மனசுல எம்மேல இவ்ளோ ஆசைய வச்சிட்டு வெளிய வேணாம்னு வேணாம்னு வேஷம் போட்டுட்ட திரியுற நீயி… இருடி இதுக்கொல்லாம் உனக்கு இருக்கு” என்றவன் உதட்டில் மர்ம புன்னகை.

 

 

“ஆழிம்மா இங்க பக்கத்தில் சொந்தக்காரங்க வீட்டுல ஒரு விஷேசம் இருக்கும்மா, நாங்க எல்லாம் அங்கப்போறம். நாளைக்கு காலையில் தான் வருவோம். அவங்க எல்லாம் நிலா பாப்பாவை பாக்கணும்னு சொல்லி கேட்டாங்கமா, நான் அவளையும் தூக்கிட்டுப்போறேன். இந்த ஆதவ் எங்கயே வெளிய போயிருக்கான். அவனுக்குச் சாப்பாடு மட்டும் எடுத்து வச்சிடுமா” என்று அனைவரும் ஆழியை மட்டும் வீட்டில் விட்டு விட்டு சென்றுவிட, ஆழி ஆதவ்காகக் காத்திருந்தாள்.

 

“ஏன் மதிம்மா, உங்க ப்ளான் வர்க்ஆவுட் ஆகுமா” என்ற முகிலை முறைத்த வெண்மதி,

 

“ஏன்டா… ஏன் ஆகுமான்னு… தொடங்கும் போதே வாயவைக்கிற..‌ அதெல்லாம் என் ப்ளான் சூப்பரா வர்க் ஆகும். நீ வேணும்னா பாரு… ஆதவ் மேல ஆழிக்கும் விரும்பம் இருக்குடா, அது அவ முகத்தைப் பாத்தாளே தெரியுது. ஆனா, ஏன்னு தெரியல அவ அதை ஒத்துக்க மாட்டேங்கிற… எனக்கு என்னமோ அவங்க ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசினால் எல்லாம் சரியாகிடும்னு தோனுச்சு. அதான் விஷேசத்தைச் சாக்க வச்சு எல்லாம் இங்க வந்துட்டோம். நிலாவையும் தூக்கிட்டு வந்தாச்சு. இப்ப அவங்க ரெண்டு பேர் மட்டும் தான். இடையில் வேற யாரும் இல்ல. பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரட்டும்.”

 

“அதுசரி அத்த… ஆனா, என்ன இருந்தாலும் ரெண்டு சின்னஞ்சிறுசுகளை இப்படி வீட்ல தனிய விட்டு வந்திருக்கீங்களே, ஒரு வேலை பை சான்ஸ் எதாவது எக்குத்தப்ப ஆய்ட்டா என்ன செய்வீங்க?” என்ற விஷ்ணு மேலிருந்து கீழாக பார்த்த வெண்மதி,

 

“ம்ம்ம் வேற என்ன செய்வேன், ஒன்பதாம் மாசம் வாளகாப்பு செய்வேன்” என்று கூலாகச் சொல்ல, விஷ்ணுவும் முகிலும், “ஏதே” என்று வாய்பிளந்து நின்றனர்.

 

இரவு எட்டு மணிபோல் ஆதவ் வீட்டுக்கு வர, அவனுக்காக உணவை எடுத்து வைத்தாள் ஆழி.

 

ஆழி முகத்தைப் பார்த்த படியே உண்டு முடித்த ஆதவ், மேலே தன் அறைக்குச் சென்றவன்,

 

“ஆழி உன்கிட்ட கொஞ்சம் பேசணும், மேலவா” என்று குரல் கொடுக்க, ஆழிக்குத் தனிமையில் அவனைச் சந்திக்கும் துணிவு இல்லாமல் போக, பல வருடங்களுக்குப் பிறகு தனக்குள் பயம் வருவதை உணர்ந்தாள்.

 

மெதுவாக ஆதவ் அறைக்குள் அவள் செல்ல, அது காலியாக இருந்தது. “எங்க இவரு’ என்று அறையைச் சுற்றி பார்த்து ஆழி கண்ணில், தனக்குப் பின்னால் கதவில் சாய்ந்தபடி, வசீகரிக்கும் சிரிப்போடு நின்றிருந்த ஆதவ் விழுந்தான்.

 

அவன் நின்ற கோலத்திலேயே ஆழி மதி மயங்கிவிட, அவனை ரசித்தபடி அப்படியே நின்றாள்.

 

மெதுவாக அவள் அருகில் வந்த ஆதவ், “நமக்குப் பின்னாடி காதல் பண்ண ஆரம்பிச்சது எல்லாம் பிக்கப் ஆகி டாப் கியர்ல போய்ட்டு இருக்குடி… நம்ம மட்டும் இன்னும் இப்படி முரட்டுச் சிங்கிள்ஸ் மாதிரி இருந்த எப்டிடி” என்று காதருகில் பேசியவன் குரல் அவள் மனதை உரச, அவன் மீசை முடிகள் அவள் காதுமடலில் மெல்ல உரச அந்தச் சின்னத் திண்டலில் சீக்கி சிதறி திண்டாடிக் கொண்டிருந்தாள் ஆழி.

 

“எப்ப தான்டி நீயும் என்னை லவ் பண்றேன்னு ஒத்துக்கவ?” என்றவன் குரலில் அதுவரை அவன் அணைப்பில் மயங்கி நின்ற ஆழிக்கு உணர்வு வர, சட்டென அவனை விட்டு தள்ளி நின்று, “நான் ஒன்னும் உங்களை லவ் பண்ணல… சும்மா நீங்களா எதாவது நினைச்சிக்கிட்ட அதுக்கு நான் பொறுப்பில்ல” என்று பொறிய,

 

“இங்க பாரு ஆழி என் பொறுமைக்கும் ஒரு லிமிட் இருக்கு… நீ சும்மா இப்படியே பேசிட்டு இருந்த… அப்றம் ரொம்ப நேரத்துக்கு நானும் குட் பாய்யா எல்லாம் இருக்க மாட்டேன்” என்று குறும்பாகப் பேசியவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க, அவனை முறைத்தாள் ஆழி.

 

“யாரு நீங்க குட் பாய்… அதை நாங்க நம்பணும்…”

 

“அப்ஃகோஸ் ஆழி. மீ குட் பாய் நம்பு” என்றவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்த அழி,

 

“ஒஒஒ அப்ப இந்தக் குட் பாய்க்கு என்னோட லேப்டாப் பாஸ்வேர்டு எப்படித் தெரிஞ்சிதாம்” என்று கேட்டு முறைக்க, ஆதவ் திருதிருவென முழித்தான்.

 

“என்ன நல்லவரே பதில காணும்?”

 

“ஏய் ஆழி… அது… அது வந்து..‌. நான் ஒன்னும் வேணும்னு அங்க எல்லாம் பாக்கல..‌. அன்னைக்கு நீ வலில துடிச்சிட்டு இருந்த, டாக்டர் ஆன்ட்டி உன்னோட உடம்புல நெறய வயர்ஸ் மாட்டிட்டு போய்ட்டாங்க… மிட்நைட் டைம் நர்ஸ் யாரும் பக்கத்தில் இல்லாத நேரம், உன் நெஞ்சில் மாட்டி இருந்த வயரோட பின் அவுந்து இருந்ததைப் பாத்தேன். சரி நம்ளோ மாட்டி விடுவோம்னு நெனச்சு ஜஸ்ட் இவ்ளோ தான், இத்துனுண்டு தான் உன்னோட ஷர்ட்டை ஒபன் பண்ணி அந்தப் பின்னை மாட்டிவிட்டேன். அப்ப தான் அந்த இடத்தில் எதோ கருப்ப தெரிஞ்சுது. எதுவும் பூச்சியோன்னு இன்னும் கொஞ்சம் வெலக்கி பாக்கும் போது தான் அது டாட்டூனு தெரிஞ்சுது‌. பாரதியார் மீசை போட்டு அதுக்குக் கீழ அச்சமில்லை னு டாட்டூ பண்ணி இருந்ததைப் பாத்தேன். அப்புறம் நான் போட்டு பாத்த பாஸ்வேர்டு எல்லாம் ராங்னு வரவும், சும்மா ஒரு ட்ரைக்கு அச்சமில்லை னு போட்டேன். லேப்டாப் ஓபன் ஆகிடுச்சு” என்றனை அவள் முறைத்தாள்.

 

“சாரிடி நான் வேணும்னு எல்லாம் பண்ணல, அப்ப அது தப்பு தான் பட்… இப்ப அது தப்பு இல்ல…” என்றவன் அருகில் கோவமாக வந்த ஆழி,

 

“ஏன் ஏன் தப்பில்ல..‌. அதெப்படி தப்பில்லாம போகும்.” என்று கண்களை உருட்டி மிரட்டி கேட்க, அவளை இழுத்து, தன் நெஞ்சோடு சேர்த்து, அவள் இடையை இருகைகளால் இறுக்கி கட்டிக்கொண்டவன்,

 

“பிகாஸ் அப்ப நீ யாரோ..‌. ஆனா, இப்ப நீ என்னோட ஆழி… இப்ப நீயே முழுசா எனக்குச் சொந்தமாகிட்ட பிறகு தப்பு எங்கிருந்து வரும்” என்றவன் கைகள் அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக்கொள்ள, அவன் அணைப்பில் தன்னிலை மறந்து நின்றாள் ஆழி.

 

ஜன்னல் வழியே வந்த குளிர் காற்று இருவர் உடலையும் சிலிர்க்க செய்ய, இருவரின் அணைப்பும் இன்னும் இறுகியது. ஒருவருக்குள் ஒருவர் புதைந்துவிடும் அளவு இருவரும் பினைந்து கிடக்க,

 

காலமே, காதலே, காமமே ஏதோ ஒன்று, ஒரு நேரத்தில் இருவரையும் தாக்க, ஒருவர் அணைப்பில் ஒருவர் தனிமையில் தன்னிலை மறந்தனர்.

 

அவன் அவளிடம் தன் தேடலை தொடங்க, அவள் அதற்கு இசைத்து இடம் கொடுத்தாள். அவன் மேல் உண்மை காதல் கொண்ட அவளின் மனம் அவனை முழுதாகத் தன்னுள் ஏற்றுக்கொண்டது.

 

அவன் அவளை எடுக்க நினைக்கவில்லை. ஆனால், மொத்தமாக எடுத்துக்கொண்டான். அவள் அவனை விலக்க தான்ஸநினைத்ததால், ஆனா, மொத்தமாக அவனுக்குள்ளேயே புதைந்து விட்டாள்.

 

இல்லறம் நடத்த தனக்குத் தகுதி இல்லை என்று தள்ளி நின்றவள், இன்று உடலோடு உயிராக அவனுடன் கலந்து விட்டிருந்தாள். ஆனா, இருவருக்குள்ளும் நடந்த இந்தச் சங்கமம் ஆழி எடுத்திருக்கும் முடிவை மாற்றுமா???