ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 22

 

ஆழி அமைதியாக அமரந்திருக்க, அவள் மடியிலேயே உறங்கி இருந்தாள் நிலா. 

 

“என்னாச்சு ஆழி உனக்கு? ஏன் இப்டி ஒருமாதிரி இருக்க… இட்ஸ் எவ்ரிதிங் ஓகே?” என்ற மீராவை நிமிரந்து பார்த்த ஆழி கண்கள் கலங்கி இருந்தது.

 

“ஏய் ஆழி என்ன இது? எதுக்கு உன் கண்ணு கலங்குது” என்றபடி அவள் அருகில் வந்த சைத்ரா அவள் கண்ணைத் துடைத்துவிட, அவள் கையை தன் கன்னத்தோடு அழுத்திக்கொண்டாள் ஆழினி.

 

“ஏன் சைத்து இப்படி எல்லாம் நடக்குது… ஏன் அந்த யுவ்ராஜ் ஆஷாவை கொன்னான், ஏன் ஆஷா இதயம் எனக்குள் துடிக்கணும், ஏன் நிலா பாப்பா என்மேல இவ்ளோ பாசமா இருக்கணும், ஏன் ஆதவ் என்னை விரும்பணும்… அவர் காதலுக்கு துளி கூட தகுதி இல்லைனு தெரிஞ்சு, ஏன் எனக்கு அவர் மேல… நேத்து நான் ஏன்‌ அப்டி” என்றவள் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பிக்க,

 

 “ஏன் நிலாவும் ஆதவ்வும் என் வாழ்க்கையில வந்தாங்க…” என்று மீண்டும் அழுதவள், குழந்தைத் தூக்கிக்கொண்டு அவள் அறைக்கு சென்றுவிட, மீராவும் சைத்ராவும் ஒன்றும் புரியாமல் நின்றனர்.

 

“என்ன மீரா, ஆழிய பார்த்தாச்ச?” என்று கேட்டபடி வந்த ஆதவை திரும்பி பார்த்த இருவரும், 

 

“ம்ம்ம் பார்த்துட்டோம்… பட், நாங்க பாத்தது எங்க ஆழி தானான்னு எங்களுக்கே குழப்பமா இருக்க?, அவ ரொம்ப டிஸ்டர்ப்ட தெரியுற… அவளை கொஞ்சம் கவன்சிக்கோங்க… இந்தங்க இந்த பென்டிரைவ்ல யுவ்ராஜ் ஷெட்டியூல் இருக்கு அவகிட்ட குடுங்க, நாளைக்கு யுவ்ராஜ் இந்தியா வர்ரணு சொல்லிடுங்க” என்றவர்கள் அங்கிருந்து கிளம்ப, 

 

“ஒரு நிமிஷம் நில்லுங்கமா” என்ற ஆதவ் குரலில் இருவரும் நின்று திரும்பி ஆதவ்வை பார்த்தனர்.

 

“நீங்க நினைக்குற மாதிரி அவ உங்க பழைய ஆழி இல்ல தான். இப்ப அவ என்னோட ஆழி, நிலாவோட அம்மா ஆழி… அதை அவ மனசு உணர ஆரம்பிச்சு இருக்கு, அதோட வெளிப்பாடு தான் அவளோட இந்த மாற்றம். இது நீங்க… நம்ம அவகிட்ட வரணும்னு எதிர்பார்த்த மாற்றம் தான். சோ யூ டோண்ட் வொறி. யுவ்ராஜ் மேட்டர் முடிஞ்ச அப்புறம் ஒரு நல்ல நாள் பாத்து முதல்ல உங்க ரெண்டு பேர் கல்யாணத்தை, வயசுல பெரியவங்களா நின்னு நாங்க நடத்தி வைக்குறோம். அப்புறம் சின்னவாங்களா லட்சணமா நீங்க நாலு பேரும் எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும்… என்ன ஓகேவா” என்றதும் மீராவும் சைத்ராவும், “டபுள் ஓகே பெரியவரே” என்று சொல்ல…

 

“ம்ம்ம் குட்… இப்ப நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க, நாங்க ஈவ்னிங் வரோம்‌. அதுக்குள் அவ சரியாகிடுவா…” என்றவனை பார்த்து கிண்டலாக சிரித்த சைத்ரா, 

 

“ஹலோ பாஸ்… எங்க ஆழி வேலைனு வந்துட்ட வெள்ளைகாரி மாதிரி, எல்லாம் பிரச்சனை தூக்கி அந்தால வச்சிட்டு இந்தால போட்டு தள்ளிட்டு போய்ட்டே இருப்பா” என்றவளை ஆதவ் தலையில் கொட்டி,

 

 “வாயி வாயி… உன்னை கட்டிகிட்டு முகில் எப்பிடி தான் சமாளிக்க போறானே” என்று கிண்டல் செய்ய, சைத்ராவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

 

“அதெல்லாம் நான் அவரை நல்லா கவன்சிக்குவேன்… நீங்க உங்க ஆளை கவனிங்க” என்றுவிட்டு ஆதவ் அடிக்க வரும் முன் மீராவுடன் அங்கிருந்து ஓடிவிட, ஆதவ் அவளை பார்த்து சிரித்தவன்,

 

“வாலு வாலு… நான் ஏற்கனவே நேத்து கவனிச்சதில் தான் அவ எஸ்.ஜே சூர்யா மாதிரி, இருக்கு இல்ல… இல்ல இருக்குன்னு புரிஞ்சும் புரியாம பேசிட்டு திரியுற…, அது தெரியாம இது ஒலறிட்டு போகுது” என்றவன் ஆழி அறைக்குள் செல்ல, இவனை கண்டதும் சட்டென டேபிள் மேல் இருந்த பேபர்ரை அங்கிருந்து ஃபைல்லில் அவசர அவசரமாக மறைந்து வைத்தாள் அழி.

 

அதை ஆதவ் கண்கள் கவனித்தாலும், மனதில் அது வித்தியாசமாக பதியாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.

 

“என்ன மிஸஸ். ஆழினி மேடம். உங்க ஃப்ரண்ஸ் கிட்ட என்னை பத்தி என்ன கம்ப்ளைன்ட் பண்ணீங்க, ரெண்டு உன்னை நான் சரியா கவனிக்கவே இல்லைனு திட்டிட்டு போதுங்க…” என்று அவளை இழுத்து அணைத்து,

 

 “அப்படியாடி?? நான் உன்னை சரியா கவனிக்குறது இல்லயா” என்று குறும்பாக கேட்டவன், அவள்‌ நெற்றியில் நெற்றி முட்டி, அவள் மூக்கின் நுனியை தன் மூக்கால் தேய்த்து, “இனிமே ஆயுசுக்கும் உன்னையும், நிலாவையும் கவனிக்கிறது ஒன்னு மட்டும் தான்டி என்னோட வேலை… அதுக்காக தான்” என்று எதையே சொல்ல வந்தவன், 

 

“ம்ஹூம் அதை இப்ப சொல்லமாட்டேன். நம்ம கல்யாணத்துக்கு நான் உனக்கு தர்ர கிஃப்ட் அதான்” என்றவனை அவர் இமை உயர்த்தி பார்க்க, நீர்கோர்த்திருந்த அவள் கண்களில் தன் இதழ்களை அழுத்தி பதித்து அவள் கண்ணீரை துடைத்தான்.

 

“எனக்கு அழுகுறது புடிக்காது. அதுவு எம் பொண்டாட்டி அழுத அது எனக்கு சுத்தமாக புடிக்காது. போ போய் ஃபேஸ் வாஷ் பணணிட்டு வந்து… மீரா பென்டிரைவ் குடுத்திருக்க, அது என்னன்னு பாரு” என்றவன் அங்கிருந்து செல்ல, போகும் அவனை முடிந்தவரை தன் மனதிலும் நினைவிலும் நினைத்துக்கொண்டாள் ஆழி.

 

“இப்ப என்ன பண்ணலாம் ஆழி?” என்ற மீராவை பார்த்து சிரித்த ஆழி,

 

“நாலு பேரும் காணாம போயிருக்காங்கனு தெரிஞ்ச பிறகும் இவன் இவ்ளோ கூட உஷார இல்லாட்டி இவனெல்லாம் என்னடி பெரிய வில்லன். எதிரி சப்பைய இருந்த பேட்டில் (Battle) போர் அடிக்கும் மீரா… இப்ப என்ன அவன் எல்லார்கிட்டயும் மும்பை வர்ரத சொல்லிட்டு, பெங்களூர் ஏர்போர்ட்ல லேண்ட் ஆகி இருக்கான். இப்ப அவன் எங்க இருக்கான்னு தெரியல, அவ்ளோ தானா… நமக்கு ஒன்னும் அவனை கண்டு புடிக்கிறது பெரிய விஷயம் எல்லாம் இல்ல மீரா. நீ அவன் அப்பா நம்பரை ஹாக் பண்ணு சைத்து, அப்ப அவனோட ஃபோன் நம்பரை நம்ம புடிச்சிடலாம். நமக்கும் மும்பையில் இருந்து அவனை இங்க கடத்துற‌ வேலை மிச்சம்..‌. சரி அவனோட வீக்னஸ் லிஸ்ட் எடு, அதுல நமக்கு எதாவது யூஸ் ஆகுதான்னு பாப்போம்.”

 

“ஆழி அந்த யுவ்ராஜ்க்கு அவனோட அப்பான்னா ரொம்ப மரியாதை. அவர் மேல இவனுக்கு பாசம் அதிகம், அவர் தான் இவனோட பெரிய வீக்னஸ்” 

 

“வாவ் இது ஒன்னு போதுமே… நம்ம அவனை தேடி போக வேணாம்… அவன் நம்மை தேடிட்டு வருவான். தேங்க்ஸ் பார் தீ இன்பர்மேஷன் முகில்” என்ற ஆழியை புரியாமல் பார்த்தான் முகில்.

 

“என்ன போலீஸ்கார் எப்பவும் போல இப்பவும் அவ சொல்றது புரியலய” என்ற சைத்துவை பார்த்து முறைத்த முகில்,

 

“ஆமா பின்ன… என்னைக்கு தான் நீங்க மூணு பேரும் பேசுறது எங்களுக்கு புரிஞ்சிருக்கு..‌. எப்ப பாரு புரியாத மாதிரி பேசுறது… என்ன பழக்கவழக்கமோ” என்ற முகிலை பார்த்து அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

 

“டேய் முகில், ஆழி சொல்றது, யுவ்ராஜ்க்கு அவன் அப்பா மேல இருக்க பாசத்தை யூஸ் பண்ணி, அவனை பத்தி அவன் அப்பாகிட்ட சொல்லிடுவேன்னு பிளாக் மெயில் பண்ணி அவனை தூக்கலாம்ணு சொல்ற..‌. இப்ப உனக்குப் புரியுதா அவ என்ன சொல்றன்னு” 

 

“ம்ம்ம் ம்ம்ம் நல்லாவே புரியுது.‌.. ஆழி என்ன சொல்றன்னும் புரியுது..‌. நீ ஆழிய நல்லா புரிஞ்சி வச்சிருக்கேன்னனும் புரியுது.‌‌.. ஆனா, இந்த மாற்றம் எல்லாம் எப்ப நடந்ததுனு தான் புரியல… ஒரு வேலை மதி அம்மா ப்ளான் ஓர்க் ஆவுட் ஆகிடுச்ச… அப்ப சீமந்தம் கன்ஃபார்மா” என்றதும் ஆழி தலையை குனிந்துகொள்ள, ஆதவ் முகில் முதுகிலேயே ஒன்று வைத்தான்.

 

“இப்ப எதுக்குடா என்னை அடிச்ச??

 

“இப்ப மட்டும் நீ வாய மூடால… அடிக்க மாட்டேன். சைத்ரா இருக்கான்னு கூட பாக்கம, எட்டி ஒரே மீதி…” என்றவனை முறைத்தபடி எழுந்து விஷ்ணு அருகில் சென்றவன், 

 

“சம்திங் ராங்டா விஷ்ணு..‌. சம்திங் ராங்” என்று சொல்ல, 

 

“அங்க என்னடா சத்தம்?” 

 

“ம்ம்ம் நாங்க சும்மா ஏதோ பேசுறோம் நீ உன் வேலைய பாருடா” என்ற முகில் சைத்ரா அருகில் சென்று அவனை இடித்தபடி உட்கார்ந்து அவன் காதல் பயிரை வளர்க்க ஆரம்பித்து விட்டான்.

 

“அப்ப யுவ்ராஜ் பத்தி அவன் அப்பாகிட்ட சொல்லிட்டுவேன்னு மிரட்டி அவனை நம்ம சொல்ற இடத்துக்கு வர வைக்கணும்..‌. இல்ல ஆழி?” என்ற ஆதவை நிறுத்தினான் முகில்.

 

“இல்ல ஆதவ் அது சரியா வராது… கமிஷனர், விமல், சைலேஷ்க்கு அப்புறம் அடுத்து லிஸ்ட்ல அவனா இருக்க சான்ஸ் இருக்கும்னு யோசிச்சு தானா, மும்பை வரேன்னு பொய் சொல்லி எல்லார் கவனத்தையும் அந்த பக்கம் திருப்பிட்டு பெங்களூர் வந்திருக்கான். இப்ப போய் நம்ம அவனை மிரட்டி நம்ம இடத்துக்கு வர சொன்ன, அதனால அவனோட உயிருக்கு ஆபத்து வரும்னு கூடவா அவன் யோசிக்க மாட்டான்”

 

“எஸ் ஆதவ், முகில் சொல்றது கரெக்ட் தான்… இவன மிரட்டின எல்லாம் வேலைக்கு ஆகாது” என்றான் விஷ்ணு.

 

“அப்ப இதுக்கு என்ன தான் பண்றது?” என்று அனைவரும் யோசிக்க, ஆதவ் ஆழியை பார்க்க, அவன் பார்வையிலேயே அவன் மனதை படித்தவள், கண்களை மூடித் திறக்க, ஆதவ் அவளை பார்த்து சிரித்தபடி,

 

“அவனை மிரட்டி வர வைக்க முடியாது… ஆனா, பணம் கேட்டு அவனை பிளாக் மெயில் பண்ணி வர வைக்க முடியும். நீ எனக்கு பணம் குடுக்காட்டி உன் அப்பாவோட ஆப்போசிட் பார்ட்டிக்கு உன்னை பத்திய எவிடாஸ் எல்லாம் அனுப்பி உங்க அப்பாவோட அரசியல் வாழ்க்கையை மொத்தம கவுத்துடுவோம்னு மிரட்டுவோம். அப்ப அவனுக்கு நம்ம பணத்துக்காக தான் அவனை பிளாக்மெயில் பண்றோம்னு கண்டிப்ப தோனும்… சோ அவன் அப்பாவுக்காக கண்டிப்பா வருவான்” 

 

“சூப்பர்டா ஆதவ். இதுதான் சரியான ரூட். இது பர்ஃபெக்ட்டா வேலை செய்யும். அவன் கண்டிப்பா வருவான்.” என்ற முகில்,

 

 “சரி எவ்ளோ பணம் டிமான் பண்ணலாம்னு டிசைட் பண்ணிட்டு, சட்டுன்னு அவனுக்கு ஃபோன் போடுங்க”

 

“டேய் நமக்கு பணம் முக்கியம் இல்ல… அவன் தான் முக்கியம்… சும்மா குத்துமதிப்ப ஒரு அமௌண்ட் கேக்க வேண்டியது தான்” 

 

“நோ விஷ்ணு… அது சரி இல்ல… நம்ம கேக்குற அமௌண்ட் நல்லா வர்த்த இருக்கணும். அப்பதான் அவனுக்கு உள்ள ஒரு பயம் வரும். இல்லாட்டி நம்மளை சும்மா அமெச்சூர் அக்யூஸ்ட்னு நெனச்சிடுவான். அது நமக்கு தான் பிரச்சனை. நமக்கு பணம் தான் முக்கியம்னு அவன் நம்பணும்… பணத்துக்காக தான் இதை செய்றோம்னு அவன் நம்பினா தான் அவன் நம்மகிட்ட சிக்குவான்.” 

 

 

“ஆதவ் இஸ் ரைட். இது நீங்க நினைக்குற மாதிரி இல்ல, அவனும் சாதாரணமான ஆள் இல்ல… தன்னோட சுய உழைப்பில், இன்னைக்கு டாப் பிஸ்னஸ் மேல் லிஸ்ட்ல உக்காந்துட்டு இருக்கவன். நம்ம மாதிரி எத்தனை பேரை தாண்டி, ஏறி மீதிச்சிட்டு இந்த இடத்துக்கு வந்திருப்பான். சோ வீ ஹவ் டூ பீ வெறி கேர்ஃபுல்… இப்ப நம்ம டிரம் கார்டு அவன் அவனோட அப்பா மேல வச்சிருக்க அந்த கண்மூடித்தனமான பாசம் தான்… நம்ம அதை யூஸ் பண்ண கண்டிப்பா அவனால வேற எதையும் யோசிக்க முடியாது. கொஞ்ச நேரத்துக்கு பிளாங்க் ஆகிடுவான். அந்த டைம்மை நம்ம யூஸ் பண்ணிக்கணும். அவனால அவங்க அப்ப கௌரவத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது. சோ நம்ம வளையில் கண்டிப்பா விழுவான்.” என்ற ஆழியை பார்த்து அனைவரும் ஆமாம் என்று தலையாட்டினர்.

 

“சரி எவ்ளோ கேக்கலாம்?”

 

“ஒரு 50 லாக்ஸ் கேக்கலாம் ஆழி” என்ற விஷ்ணுவை ஆழி முறைக்க, மீரா‌ தலையில் அடித்துக்கொண்டாள்.

 

“ஏங்க… ஏங்க நீங்க இப்படி இருக்கீங்க. அந்த யுவ்ராஜ் கதையை முடிக்க, நாங்க வாங்கி வச்சிருக்கோமே ஒரு கன்சைன்மெண்ட், அது எவ்ளோ லட்சம் தெரியுமா… நீங்க என்னடான்னா…” 

 

“எதே..‌. லட்சமா..‌. ஏய் நீ என்னடி சொல்ற…?”

 

“ஆமா பின்ன இல்லிகல்லா ஒரு பொருளை அதுவும் இது மாதிரி ஒன்னை நாடுவிட்டு நாடு‌ எடுத்துட்டு வர்ரதுன்னா என்ன சும்மாவா… அந்த பிராணா பீஷ் என்ன ரேட் தெரியுமா?” என்ற மீராவை அதிர்ச்சியாக பார்த்தான் விஷ்ணு.

 

“ஆமா நானும் ரொம்ப நாளா கேக்கணும்னு நெனச்சேன். நீங்க உங்க ஒரு அசைன்மென்ட்கே எவ்ளோ வாங்குவீங்க?” 

 

“இப்ப அது எதுக்கு டெப்டி… நீங்க போலீஸ் தானா, என்னமோ ஐடி டிபார்ட்மெண்ட் மாதிரி வருமானம் எவ்ளோன்னு கேக்குறீங்க? நாங்க ஒழுங்க டேக்ஸ் கட்ற ஆளுங்க தான் டெப்டி சார்” 

 

“ச்சீ சி… அதெல்லாம் ஒன்னும் இல்ல சைத்து, சும்மா தெரிஞ்சிக்கலாம்னு தான் கேட்டேன், சொல்லேன்.”

 

“அது ஆளையும், ஆழி எடுக்கும் ரிஸ்க்கையும் பொறுத்தது விஷ்ணு”

 

“ஒஒஒ அப்ப நார்மல் ஆளா இருந்த என்ன செய்வீங்க மீரா?”  

 

“அசைன்மென்ட் எடுக்கவே மாட்டோம்… ஒன்லி ஹை புரோஃபைல் ஆளுங்க தான். அதுல அரசியல் ஆளா இருந்த ஒன் இல்ல ரெண்டு கோடி ஆகும்… இல்ல பெரிய பிக் ஷார்ட்டா இருந்த” எனும்போதே மீராவை கையெடுத்து கும்பிட்ட விஷ்ணு,

 

“போதும்மா போதும். ஒரு குக்கர் சாதப் பதத்துக்கு ரெண்டு விசிலே பதம்” என்றவனை கேவலமாக ஒரு லுக்கு விட்ட மீரா… 

 

“ஆழி நீ சொல்லு எவ்ளோ டிமான் பண்ணலாம்” 

 

“150 கிரோஸ் (Crore’s) கேளு” என்றவள் எழுந்து செல்ல, மீராவும் சைத்துவும் ஆழி சொன்னதை செய்து முடித்தனர். 

 

இவர்கள் சாட்டிலைட் ஃபோன் பயன்படுத்தியதால் யுவ்ராஜால் இவர்கள் யார் என்றும், இருக்கும் இடத்தையும் கண்டு பிடிக்க முடியாமல் போக, தன்னை பற்றி தன் தந்தைக்கு தெரிந்து விடுமோ என்ற பயத்தில் முழுதாக தன்னிலை இழந்து பைத்தியமாகி இருந்தவன் வெகு சுலபமாக ஆழி விரித்த வளையில் சிக்கிக்கொண்டான்.

 

அந்து காட்டுக்குள் இருந்த இடிந்த கட்டிடத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுத்துக் கிடந்தான் யுவ்ராஜ்.