ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 2

 

காலையிலேயே ஆதவ் அரக்க பறக்க அவசரமாக ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருக்க, ஆழி அவனுக்கான டிபனை டேபிள் மீது எடுத்து வைப்பதை பார்த்தான்.

 

“எனக்கு டிபன் வேணாம். இன்னைக்கு முக்கியமான காண்ட்ராக்ட் ஒன்னு, அதுக்கு டிசைன் ஃபைனல் பண்ணனும், நா சீக்கிரம் போகணும்.”

 

“என்ன ஆதவ்… சாப்ட எவ்ளோ நேரம் ஆகப்போகுது. ரெண்டு வாய் சாப்டு போடா” என்ற வெண்மதி தோளில் கைபோட்டு மெதுவாக அணைத்த ஆதவ், 

 

“ரொம்ப முக்கியமா வேலை மா. சீக்கிரம் போகணும். சாமிகிட்ட எல்லாம் நல்லபடி நடக்கணும்னு அப்ளிகேஷன் போட்டு வைங்க”

என்று சிரித்தபடியே திரும்பி ஆழியைப் பார்த்தான்.

 

“நீ செய்ய மாட்டேன்னு தெரியும், உனக்கு நம்பிக்கை இல்லன்னு தெரியும், இருந்தாலும் கேக்குறேன். இந்தக் காண்ட்ராக்ட் நல்லபடி முடிஞ்சு, நம்ம கம்பெனிக்கு நல்ல பேர் கிடைக்கணும்னு வேண்டிக்க,” என்றவனைச் சட்டெனத் திரும்பி பார்த்த ஆழினி‌,

 

“எனக்குன்னு வரும் போது தான், எனக்குக் கடவுள் மேல நம்பிக்கை இருக்கிறதில்ல, மத்தங்வங்களுக்காக, உங்களுக்காக, உங்க கம்பெனி டீல் நல்லா நடக்கணும்னு நா கண்டிப்பா வேண்டிக்கிறேன்‌.” என்றவள் அது நம்ம கம்பெனி இல்ல, உன்னோட கம்பெனி என்பதைச் சொல்லாமல் சொல்ல, ஆதவ் இழுத்து மூச்சிவிட்டவன், “தேங்க்ஸ்” என்று ரெண்டடி நகர்ந்து, “வெளிய எங்கயும் போறீயா? காலையிலேயே ரெடியாகி இருக்க?” என்று கேட்டான்.

 

“ம்ம்ம் ஆமா, ஹாஸ்பிடல் போறோம். பாப்பாக்கு வேக்சின் போடணும்”

 

“நீ எப்டி போவ, நான் ஆபீஸ் போய்ட்டுக் கார் அனுப்பவ?”

 

“இல்ல வேணாம். நான் கேப் புக் பண்ணிக்குறேன்” என்றவள் அருகில் வந்த ஆதவ், “தன் பர்சில் இருந்து பணத்தை எடுத்து ஆழியிடம் நீட்டினான்.

 

“இல்ல என்கிட்ட இருக்கு பரவாயில்ல” என்றவள் கையில் பணத்தை வலுக்கட்டாயமாகத் திணித்து, “இன்னைக்குத் தேதி ஒன்னு, இது உன்னோட இந்த மாச சம்பளம்” என்று அழுத்தமாகச் சொல்ல, ஆழி ஒரு நிமிடம் அவனை இமைக்காமல் பார்த்தவள், தன் நெஞ்சின் மீது கைவைத்து அழுத்தியபடி கண்களை மூடி ஆழமாக மூச்செடுத்து, “தேங்க்ஸ்” என்று அந்தப் பணத்தை வாங்கிப் பார்த்தவள், “எதுக்கு இவ்ளோ?” என்று கேட்க,

 

“நீ குழந்தைய பாத்துக்க மட்டும் தான் இங்க வந்த. ஆனா, இப்ப சமைக்கிறதுல இருந்து வீட்டுப் பொறுப்பு எல்லாத்தையும் நீதான பாத்துட்டு இருக்க, அதான்” என்ற ஆதவ்வை நிமிர்ந்து பார்த்த ஆழி, ‘சரியென்று’ லேசாகத் தலை ஆட்டியவள் அடுத்து ஒரு நிமிடம் கூட அவன் முன் நிற்காமல் அமைதியாக அங்கிருந்து செல்ல, வெண்மதிக்கு “ஐய்யோ” என்றாகி விட்டது.

 

“டேய் ஆதவ் ஏன்டா இப்படிச் செய்ற? அவ” என்று அவர் ஏதோ சொல்லவர, ஆதவ் போதும் என்பதுபோல் கைகாட்டினான்.

 

“ப்ளீஸ் மா… ப்ளீஸ் நீங்க நெனைக்கிற மாதிரி இங்க ஒன்னும் நடக்கப்போறதில்ல, தேவையில்லாம எதுவும் யோசிச்சு அப்பறம் அது நடக்கலன்னு ஃபீல் பண்ணதீங்க” என்றுவிட்டு வெளியே சென்றான்.

 

ஆதவ் பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருக்க, முகில் சூடான டீயை அவன் முன் வைத்தான்.

 

“டேய் ஆதவ் இந்த டீயை குடிச்சிட்டு வேலைய பாரு, மணி 12 ஆகுது. காலையில கூட ஒன்னு சாப்டல” என்றவனைச் சட்டெனத் திரும்பிப் பார்த்த ஆதவ்,

 

“நான் காலையில சாப்டலன்னு உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்க,

 

முகில், “ஐய்யோ மாட்டிக்கிட்டேனே, என்று நாக்கை கடித்துக்கொள்ள, ஆதவ் அவன் அருகில் வந்தான்.

 

“அம்மா ஃபோன் பண்ணங்கள?” என்று கேட்க, முகில் ஆமாம் என்று தலையாட்டினான்.

 

“ம்ம்ம்” என்று இழுத்து மூச்செடுத்த ஆதவ், “அப்ப நான் சாப்டாதது மட்டும் இல்ல, அதுக்கு அப்பறம் நடந்ததும் உனக்குத் தெரிஞ்சிருக்கும் இல்ல”

 

“ம்ம்ம் அம்மா சொன்னாங்க, நீ ஏன்டா இப்படி இருக்க, ஆழிக்கு என்னடா குறை? ஏன் நீ அவளை விட்டு தள்ளி தள்ளி போற? நீதான் இப்டின்னா… அந்தப் பொண்ணு உனக்கு மேல இருக்கு, உங்க ரெண்டு பேரையும் என்ன சொல்றதுனே எனக்குப் புரியல.”

 

“இங்க பாரு முகில் எங்க ரெண்டு பேருக்க நடுவுல இதுவரை ஒன்னும் இல்ல, இனியும் இருக்காது. எங்களுக்கு நடுவுல எதாவது இருக்குன்னா, அது நிலா மட்டும் தான்‌. அதர் தென் தட், தெர் இஸ் நாதிங் பிட்வின் அஸ்.”

 

“அதான் ஏன்னு கேக்குறேன். அவ ஒன்னும் நீ குடுக்குற சம்பளத்துக்காக உன் வீட்ல இல்ல, அவ ஒரு இன்டீரியர் டிசைனர், நீ சம்பளம் தந்து தான் அவ பொழப்பு ஓடணும்னு இல்ல, அது உனக்கே தெரியும். அப்படி இருந்து அந்தப் பொண்ணு உன் வீட்ல எதுக்காக வேலை பாக்குதுன்னு உனக்கு நல்லா தெரியும். எனக்குத் தெரிஞ்சு ஆழி பாக்க நல்ல பொண்ண தான் தெரியுது. நிலா மேல பாசமா, உயிரா இருக்கு, இதுக்கு மேல என்ன தான் வேணும் உனக்கு? ஏன் இப்படி பிடிவாதம் பண்ற, என்னதான் டா காரணம்.” என்று கண்கள் சுருக்கி கேட்க,

 

முகிலை நிமிர்ந்து பார்க்காமல் “ஆஷா” என்று ஆதவ் வறண்ட குரலில் சொல்ல, முகில் அடுத்து என்ன சொல்வதென்று புரியாமல் நின்றான்.

 

ஆதவ் கார் காற்றை விட வேகமாகப் பறக்க, அவன் இதயம் தாறுமாறாகத் துடித்துக்கொண்டிருந்தது.

 

ஆதவ்வின் தொழில்முறை எதிரி ஒருவன், ஆதவ்வுக்கு இப்போது கிடைத்திருக்கும் காண்ட்ராக்ட் க்கு போட்டி போட்டு தோற்றுப் போக, அவன் மொத்த கோவமும் ஆதவ் மேல் திரும்பியது. ஆதவிடம் இருந்து எப்படியும் அந்தக் காண்ட்ராக்ட் டை கைப்பற்ற நினைத்தவன், ஹாஸ்பிடல் சென்ற ஆழி மற்றும் குழந்தை நிலாவை கடத்தி இருந்தான்.

 

ஆபீஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஆதவ் ஃபோன் அடிக்க, எடுத்துக் காதில் வைத்தவன்‌, சட்டென் இருக்கையில் இருந்து எழுந்து நின்றான்.

 

“டேய் நீ சொன்ன மாதிரியே நான் செய்றேன். காண்ட்ராக்ட்டை நீயே எடுத்துக்கோ, பட் அவங்களை ஒன்னும் செஞ்சிடாத?” என்று ஆதவ் கத்த,

 

“ம்ம்ம் தட்ஸ் குட் ஆதவ். இந்த அறிவு உனக்கு முதல்லயே இருந்திருந்த நல்லா இருந்திருக்கும். எனக்கும் கடத்துற வேலை மிச்சமாகி இருக்கும்.” என்றவன் மயக்கத்தில் இருந்த ஆழியைப் பார்த்து, “ஆனாலும் பரவாயில்லை இந்தக் கடத்தல் ஒர்த் தான்” என்றவன்‌ அடுத்து சொன்ன வார்த்தையில் ஆதவின் இரத்தம் கொதித்தது.

 

“ஒன்னு சொல்லியே ஆகணும் ஆதவ். இந்தப் பொண்ணு செம்மய இருக்கா, ப்பா என்ன அழகுடா இவ. ஆமா, யார் இந்தப் பொண்ணு, எங்க ஆளுங்க ஒழுங்க உன் பொண்ணைக் கூடுத்துட்டு இவளை போகச் சொல்லியும் கேட்காம, அவங்ககிட்ட இருந்து உன் பொண்ணைக் காப்பாத்த ரொம்பத் தான் ட்ரை பண்ணி இருக்கா… வேற வழியில்லாம எங்க ஆளுங்க அவளுக்குப் போதை மருந்தை இன்ஜெக்ட் பண்ணி அவளையும் சேர்த்து தூக்கிட்டு வந்துட்டாங்க” என்று வக்ரமாகச் சிரித்தான்.

 

“இப்ப கூடப் பாரு அவ்ளோ போதையிலும் உன் பொண்ணை இறுக்கி கட்டி புடிச்சிட்டு உக்காந்துட்டு இருக்க, எனக்கு ஆசைய இருக்கு ஆதவ், உன் இருக்க இடத்தில் நான் இருக்கணும்னு” என்று சொல்ல, ஆதவ் கைகள் இறுகியது.

 

“டேய் இன்னொரு வார்த்தை அவளைப் பாத்தி பேசின…” என்று கர்ஜிக்க,

 

“பேசினா என்னடா பண்ணுவா, என்ன பண்ணுவ” என்று நக்கலாகச் சிரித்தவன், “உனக்கு இன்னும் ஒன் ஹவர் தான் டைம். அதுக்குள்ள காண்ட்ராக்ட் டாகுமெண்ட் என் பேருக்கு மாறி, அந்தப் பேப்பர்ஸ் என் கைக்கு வந்தகணும். இல்ல… முதல்ல உன் அருமை குழந்தை உயிர் போகும். அடுத்து கொஞ்ச நேரம் கழிச்சு, இந்தப் பொண்ணு” என்று வக்ரமாகச் சிரிக்க ஆதவின் கோபம் எல்லை கடந்தது.

 

குழந்தை நிலாவுக்கு எதுவும் ஆகிவிடுமே என்று எந்த அளவு அவன் மனம் பதறியதோ, அதே அளவு ஆழிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பதறியது.

 

‘அவ நெனச்சிருந்த குழந்தையை அவனுங்க கிட்ட கொடுத்துட்டுத் தன்னைக் காப்பாத்திக்கிட்டு இருக்கலாம். ஆனா, அவ… இப்ப அவ உயிரோட சேத்து’ என்றவனுக்கு அந்தக் கடத்தல்காரன் சொன்னதை நினைத்துப் பார்க்க கூட உள்ளம் நடுங்கியது.

 

“கடவுளே அவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகிட கூடாது. ப்ளீஸ்” என்று வேண்டியவனுக்கு அந்தக் கடத்தல்காரன் ஆழியைப் பற்றிச் சொன்னது நினைவு வர, கோவத்தில் அவன் கண்கள் சிவந்தது. அந்தக் கோவம் அவன் கைகளில் பிரதிபலிக்க, கார் காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்தது.

 

இங்குப் போதை மயக்கத்தில் இருந்த ஆழி, நிலாவை தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கி பிடித்திருக்க, ஆழி நெஞ்சில் சாய்ந்திருந்த நிலா, தான் பாதுகாப்பாகத் தான் இருக்கிறோம் என்றுணர்ந்து அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

 

இருவரையும் கடத்தியவன் ஆழி அருகில் வந்து, அவளையே விழுங்குவது போல் பார்த்து, “டேய் இதுவரை நீங்க செஞ்ச வேலையில உருப்படியான வேலை இதுதான்டா, ஆளு செம்மைய இருக்க, அந்த ஆதவ் குடுத்து வச்சவன் தான்.” என்றபடியே ஆழி கன்னத்தில் கை வைக்கப் போக, “கீரிச்” என்ற சத்தத்துடன் வேகமாக வந்து நின்றது ஆதவ் கார்.

 

அங்குச் சென்ற ஆதவ் கண்ணில் முதலில் பட்டது, கண்கள் சொருகிய நிலையில், தலை நிலையில்லாமல் அப்படியும் இப்படியும் ஆடிக்கொண்டிருக்க, அவ்வளவு போதையிலும் நிலாவை தன் நெஞ்சோடு சேர்த்து இருக்கிப்பிடித்த ஆழினி தான்.

 

“இப்ப ஆழிக்கு எப்டி இருக்கு” என்ற முகிலை நிமிர்ந்து பார்த்த ஆதவ் கண்கள் லேசாகக் கலங்கி இருந்தது.

 

“ரொம்ப ஹெவி டோஸ் ட்ரக் இவளுக்கு இன்ஜெக்ட் பண்ணி இருக்காங்க டா, இவ கண்ணு முழிக்கவே எப்டியும் இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு டாக்டர் சொன்னாங்க” என்றவன் குரல் கலங்கி இருந்தது.

 

“ஆழிக்கு ஒன்னு ஆகாது ஆதவ். ஷி வில் பீ ஆல்ரைட்”

 

ஆதவ் லேசாகத் தலையை ஆட்டியவன்‌, “அவனுங்க?” என்று கேட்க,

 

“ஆல் செட்… நீ ஃப்ரீயா விடு நா பாத்துக்கிறேன். நீ இவளை கவனி, அதுதான் இப்ப முக்கியம்.”

 

“யு நோ முகில், அவனுக்குத் தேவை நிலா தான். பாப்பாவ வச்சு என்ன ப்ளாக் மெயில் பண்றது தான் அவன் ப்ளான். இவ நெனச்சிருந்த தப்பிச்சி போயிருக்கலாம். பட்,” என்று மயக்கத்தில் படுத்திருந்த ஆழியைப் பார்த்தவன், “ஏன்டா இவ போகல? ” என்று அவளைப் பார்த்துக் கொண்டே கேட்க, லேசாகச் சிரித்தான் முகில்.

 

“இத நீ அவகிட்ட தான் கேக்கணும். மயக்கம் தெளிஞ்சதும் கேளு, இப்ப நா கிளம்புறேன். அவனுங்களைக் கொஞ்சம் என் கையால வெளுத்த தான் எனக்கு நிம்மதியா இருக்கும் நா வரேன்.” என்ற முகில் அங்கிருந்து செல்ல, ஆதவ் நடந்ததை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

ஆழி, நிலா கடத்தல் பற்றி ஆதவ் முகிலிடம் சொல்ல, முகில் ஆதவ் சொன்ன இடத்தில் அவனின் ஆட்களைக் குவித்து விட்டான். ஆதவ் அங்கு வந்தவுடன் அந்தக் கடத்தல் காரன் டாக்குமெண்டை வாங்க ஆசையாக முன்னோ வர, பாவம் அவனுக்குக் கபாலம் பிளந்து ரத்தம் தான் வந்தது.

 

ஆதவ் அவன் கழுத்தில் அடித்த ஒரு அடியில் அந்த ஆறடி எருமை “ஐய்யோ” என்று அலறியபடி அப்படியே தரை முட்டிபோட்டு உட்கார்ந்து விட, அவனின் அடியாட்கள் ஆதவ் நோக்கி வர, முகில் ஏற்படு செய்திருந்த ஆட்கள் அவன் ஆட்களை அடித்து நொறுக்கினார்.

 

ஆதவ் அங்கிருந்த ஒரு இரும்புராடை எடுத்து, திரும்பி ஆழியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இந்த வாய் தானடா அவளைத் தப்பா பேசிச்சு” என்று ராடால் வாயில் ஒன்று வைக்க, அவன் மொத்த பல்லும் கொத்தாக வெளியில் வந்து கொட்டியது.

 

அடுத்து அவன் மண்டை உடைந்து சண்டை முடித்து, ஆழியையும், குழந்தையையும் தூக்கிகொண்டு ஹாஸ்பிடல் வந்துவிட்டான் ஆதவ்.

 

ஆழியையே பார்த்துக்கொண்டிருந்த ஆதவுக்கு மதியம் முகில் பேசியது மனதில் ஓடியது.

 

ஆதவ், “ஆஷா” என்று சொல்ல,

 

“டேய் என்டா பேசுற நீ… ஓகே நா ஒத்துக்குறேன். ஆஷா உன் வைஃப், நிலாவோட அம்மா, உனக்கு அவங்களைப் புடிக்கும் தான். பட், அதுக்கு என்னடா பண்ண முடியும். உனக்கும் அவங்களும் வாழ்க்கை தொடங்கும் முன்னையே… தலையெழுத்து எல்லாம் முடிஞ்சு போச்சு. கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் தான் நீங்க ஒன்ன இருந்தீங்க, அப்றம் வேலை விஷயம, வெளியூர் போன நீ அவங்க டெலிவரிக்கு தான் திரும்பி வந்த, ஆனா, அந்த மகராசி..‌.” என்று பழைய நினைவில் மனம் கலங்கிய முகில் இழுத்து மூச்சு விட்டு, “அவங்க தான் இப்ப உயிரோட இல்லயே ஆதவ். இன்பேக்ட் ஆஷாவோட உயிர், இப்ப ஆழிகிட்ட தான் இருக்குது. அத நீ மறந்துடுடாத…” என்ற முகிலின் வார்த்தைகள் ஆதவ் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க, அவன் காதை இறுக்கி மூடிக்கொண்டான்.

 

இரண்டு நாட்கள் கழித்து மருந்தின் வீரியம் குறைந்து அன்று காலை தான் ஆழினி வீடு திரும்பி இருந்தாள்.

 

காலை உணவை ஆதவ் அவள் முன் நீட்ட, இன்னமும் அவளால் கை, கால்களைச் சரியாக ஆசைக்க முடியாமல் இருக்க, ஆதவ் உணவை கையில் எடுத்து அவள் வாயருகே கொண்டு செல்ல, ஆழி அவனை முறைத்து பார்த்தாள்.

 

“இந்த முறைப்பை எல்லாம் தின்னுட்டு தெம்ப முறை, இப்ப வாயத்தொற, எனக்கு வேலை இருக்கு” என்றவனை அவள் இன்னும் முறைக்க, ஆதவ் இது வேலைக்காகது என்று அவள்‌ கன்னத்தைப் பிடித்து அழுத்த அவள் வாய்த் தன்னால் திறந்து கொண்டது.

 

தட்டில் இருந்த மொத்தத்தையும் ஊட்டி முடித்த ஆதவ், “இது வயிரா? இல்ல முதுமக்கள் தாழியடி? இவ்ளோ பெருசா இருக்கு…?” என்றவன் முகத்தில் கஷ்டப்பட்டு அங்கிருந்த பொம்மையை எடு அவள் வீச,

 

“இந்த நெலமயிலும் உன் திமிர் அடங்கலடி” என்றுவிட்டு சிரித்தபடியே அவன் செல்ல, ஆழி போகும் அவனை எரித்துவிட்டு அளவு முறைத்துக் கொண்டிருந்தவள் கண்ணில் எதேச்சையாக அன்றைய செய்தித்தாள் பட, அதில் வந்த செய்தியை பார்த்து குழம்பி போனாள் ஆழினி.

 

அவளைக் கடத்திய ஆள் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த செய்தி தான் அது.