ஆழியின் ஆதவன்

மாலை ஐந்து மணி போல் ஆழினி வீடு திரும்பி இருந்தாள்.

 

அன்று ஆபீஸில் இருந்து சீக்கிரமே வீட்டுக்கு வந்திருந்த ஆதவ் குழந்தை நிலாவை கையில் வைத்து கொஞ்சிக் கொண்டு இருக்க, அப்போது ஆழி உள்ளே வருவதைப் பார்த்தான்.

 

“என்ன ஆழி மேடம். மதியம் கோயில் போனவங்க ஈவ்னிங் திரும்பி வர்றீங்க, என்ன புதுசா கோயிலே கட்டி முடிச்சு, கும்பாபிஷேகம் பண்ணிட்டு, அப்றம் சாமிய கும்பிட்டுட்டு வரீங்க போல” என்று கிண்டலாகக் கேட்க, அந்த நேரம் அங்கு வந்தார் வெண்மதி.

 

“டேய் என்னடா கேள்வி இது? கோயில்னு போனா கொஞ்சம் முன்னபின்ன தான் இருக்கும். இதுல இவ்ளோ நேரமா வெளிய நல்ல மழை வேற பேஞ்சிட்டு இருந்துச்சு, எங்கயாது ஒதுங்கி நின்னுட்டு, மழை நின்னதும் வந்திருப்பா” என்று வெண்மதி ஆழிக்கு துணைக்கு வர, ஆழியும் லேசாக நனைந்திருந்தாள் ஆதவ் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

 

“சரி சரி முதல்ல போய்த் தலைய தொவட்டிட்டு, டிரஸ் மாத்திட்டு வா, கோல்ட் எதாவது வந்திடா போகுது.” என்று அக்கறையாகச் சொன்னவனை ஆழினி முறைத்து பார்த்தாள்.

 

“ஹலோ மேடம், நான் ஒன்னும் உனக்காகச் சொல்லல, உனக்குக் கோல்ட் வந்து, அது அப்றம் ஃபீவர்ர மாறி, அது என் பொண்ணுக்கும் பரவி, அப்றம் எனக்கும் அம்மாக்கும் வந்துட்டா… நான் என்ன பண்றதாம்… அதுக்காக தான் சொன்னேன். உனக்காக ஒன்னு சொல்லல, போ போய் டிரஸ் சேஞ்ச் பண்ணு” என்றவனை முறைத்து பார்த்து விட்டு ஆழி தான் அறைக்குச் செல்ல, ஆதவ் செல்லும் ஆழியைச் சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

ஆழினி தன் அறைக்குள் நுறைந்தவள், பாத்ரூம் சென்று ஷவரை திறந்து அதன் கீழ் அப்படியே கைகளால் கால்முட்டியை இறுக்கி பிடித்தபடி உட்கார்ந்து விட்டாள். அனைத்தையும் விடுத்து, எதையே நினைத்து, எதையே தேடி அவள் இங்கு வர, அவள் விட்டுவிட்டு வந்தத, இல்லை மிச்சம் வைத்து வந்தத எதுவென்று தெரியவில்லை, இன்று மீண்டும் அவள் முன் வந்து நிற்கிறது. வாழ்க்கையில் முதல் முறை அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க முடியாத நிலையில் குழம்பி இருந்தாள் ஆழினி.

 

முழு டேங்க் தண்ணியும் காலியாகும் வரை, அரைமணி நேரம் ஷவர் அடியில் இருந்தவள், எழுந்து வெளியே வந்து உடை மாற்றி அமர்ந்த, அடுத்த நிமிடம் அவள் ஃபோன் அடித்தது.

 

ஃபோன் டிஸ்ப்ளேயில் சைத்ரா பெயர் வர, ஃபோனை ஆன் செய்து காதில் வைத்த ஆழி, “நான் சொன்னது கரெக்ட் தான சைத்ரா?” என்று கேட்க,

 

“எஸ் ஆழி. நீ சொன்ன மாதிரி, எல்லாமே ஸ்டார்ட் ஆனது உன் ஃபோன்ல இருந்து தான். யாரோ அதுல ரெண்டு, மூணு முறை தப்பான் பாஸ்வேர்டு போட்டு, லகின் பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க. அதை நீ நோட் பண்ணாம விட்டிருக்க, லகின் பண்ண டேட் வச்சு பாக்கும் போது, அந்த டைம் நீ ரெக்கவரில இருந்திருப்பனு தோணுது. அதான் நீ அதைக் கவனிக்காம விட்டீருக்க, அதுக்கு அப்றம் தான் இதெல்லாம் நடந்திருக்கும் போல… பட், அது எப்டின்னு தான் எனக்குப் புரியல ஆழி. நம்ம மூணு பேர் ஃபோனையும் யாரும் அவ்ளோ ஈசியா ஹாக் பண்ணிட முடியாது. அது உனக்கும் தெரியும். அப்டி யாராவது நம்ம ஃபயர்வால் ஹாக் பண்ணி உள்ள வந்தால், உடனே நமக்கு அலர்ட் மெசேஜ் வந்திடும். தென் நம்ம மொத்த ஃபைல்லும், ஆட்டோமேட்டிக்க அந்த டிவைஸ்ல இருந்து ஏரேஸ் ஆயிடும். அப்டி இருக்குப் போது, இது எப்டி நடந்துச்சின்னு எனக்குச் சுத்தமா புரியல ஆழி” என்று சைத்ரா குழம்பினாள்.

 

“நம்ம ஃபோனை ஹாக் பண்ண முடியாது தான் சைத்து. பட் பாஸ்வேர்டு போட்டு ஓபன் பண்ணலாமே… அப்டி பாஸ்வேர்டு போட்டும் போது அலர்ட் வராது இல்ல. அதுதான் இங்க நடந்திருக்கு”

 

“என்ன உளற்ர ஆழி நீ… நம்ம பாஸ்வேர்டு… எப்டி?”

 

“இப்ப நீ சொன்னீயே நா உளற்ரேன்னு அதுதான் இதுக்குப் பதில்” என்று ஆழி சொல்ல, சைத்ரா மீரா இருவருக்கும் ஆழி சொன்னதின் அர்த்தம் புரியாமல் முதலில் முழித்தவர்கள், பின் அதன் அர்த்தம் புரிந்து,

 

“யூ மீன்?”

 

“எஸ் மீரா. அதுதான் நடந்திருக்கணும்” என்று ஆழி உறுதியாகச் சொல்ல,

 

“மை காட், பிரச்சனை மேல பிரச்சனை வருது.” என்று தலையில் கை வைத்த மீரா, “சரி ஆழி… ஆனா, உன்னோட பாஸ்வேர்டு? அது எப்டி?”

 

“அது இனிமே தெரிஞ்சிடும்.” என்றவள், “சைத்ரா மத்த நம்பர், மெயில் ஐடி எல்லாம் என்னாச்சு?”

 

“ம்ம்ம் எல்லா டீடெயில்ஸூம் எடுத்தாச்சு, உனக்கு மெயில் பண்ணி இருக்கேன். முதல்ல அதை பாரு, அப்றம் என்ன செயறதுன்னு முடிவு பண்ணு”

 

“ம்ம்ம் ஓகே. இன்னேரம் அவங்களுக்கு நான் தனிய இல்ல, நீங்க ரெண்டு பேரும், என் கூட இருக்கீங்கன்னு தெரிஞ்சிருக்கும். சோ எதுக்கும் ரெடிய இருங்க”

 

“இத நீ சொல்லணுமா ஆழி… நமக்கென்ன இதெல்லாம் புதுசா, விடு பாத்துக்கலாம். நம்ம லைஃப்ல ஒரு மாற்றத்தை தேடி, தனித் தனிய பிரிஞ்சு போய் வாழ ஆரம்பிச்சோம். ஆனா, இப்ப விதி மறுபடியும் நம்ம பழைய வழியில இழுத்து விடப் பாக்குது போல… ம்ம்ம் என்னதான் நடக்குதுனு கடைசிவரை போய்ப் பாத்துடுவோம். அதுதானா நம்ம ஸ்டைல்” என்ற சைத்ரா, “இதுக்கு அப்றமும் நீ அந்த வீட்ல இருக்குறது சரியா வருமா ஆழி?” என்று சற்று தயங்கியபடி கேட்டாள்.

 

“இல்ல சைத்து நான் இங்க தான் இருப்பேன். நிலாக்கு ஒரு வயசு ஆகிடுச்சு, இன்னு கொஞ்ச நாள் தான். அதுக்கு அப்புறம் அவளுக்கு என்னோட தேவை இருக்காது. வெண்மதி அம்மா இன்னும் கொஞ்ச நாள் எனக்காக வெய்ட் பண்ணி பாத்துட்டு ஆதவ்க்கு வேற பொண்ணு பாத்து, கண்டிப்பா கல்யாணம் செஞ்சி வச்சிடுவாங்க, அந்தப் பொண்ணு வந்துட்ட, அப்றம் நிலா பத்தி நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. என்னோட வாக்கும் நிறைவேறிடும். அதுவரைக்கும் என்ன நடந்தாலும் என்னால நிலாவ விட்டு வரமுடியாது. என் உயிரே போனாலும் ஐ டோண்ட் மைட்” என்று முடிவாகச் சொல்ல, சைத்ரா, மீராவுக்கு ஆழி குணம் தெரியும் என்பதால் எதுவும் பேச முடியவில்லை.

 

“சரி, எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்ல இருங்க, சன்டே அந்த டெப்டி கமிஷனரை பாத்துட்டு, ஒரு முடிவுக்கு வருவோம்.” என்ற ஆழி ஃபோனை வைத்தாள்.

 

அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்தது அந்தச் சின்ன வீடு.

 

ஆழி ஒரு சேரில் அமர்ந்திருக்க, அவள் எதிரில் போலீஸூக்கே உண்டான கம்பீரத்தோடு அமரந்திருந்தான் விஷ்ணு.

 

“சொல்லுங்க டெப்டி கமிஷ்னர் சார். எதுக்காக இதெல்லாம். உங்களுக்கு என்கிட்ட இருந்து என்ன வேணும்?” என்று ஆழி நேராகக் கேட்க, அவளைப் பார்வையால் அளந்த விஷ்ணு,

 

“பெருசா எல்லாம் ஒன்னு இல்ல மிஸ். ஆழினி. எனக்கு நீ வேணும்” என்றவனை வலது புருவம் உயர்த்திப் பார்த்த ஆழினி,

 

“ம்ம்ம் புரியுது‌.” என்றாள்.

 

“என்ன புரியுது? சாதாரணமா இந்த மாதிரி ஒரு பொண்ணுகிட்ட சொன்னா நியாயமா அவங்களுக்குக் கோவம் வரும். பட், நீ ரொம்பக் கேஷுவல்ல புரியுதுன்னு சொல்ற!” என்று கேட்ட விஷ்ணுவை பார்த்து ஏளனமாகச் சிரித்தாள் ஆழினி.

 

“நீங்க சொன்னா மாதிரி சாதாரணமான ஒரு பொண்ணுக்கு, நீங்க சொன்னதைக் கேட்ட, கண்டிப்பா கோவம் வரும் தான், அப்டி கேட்டவனை நல்லா அசிங்கமா திட்ட கூடச் செய்வாங்க தான். பட், நான் சாதாரணமான பொண்ணும் இல்ல, வெறுமான திட்டிட்டு விட்டு போற ரகமும் இல்ல, அது டெப்டி கமிஷ்னருக்கு ஒரளவு தெரியும்னு நெனைக்கிறேன். சோ அந்த அர்த்தத்தில் நீங்க சொல்லி இருக்க வாய்ப்பில்ல”

 

“ம்ம்ம் அப்ப நீ வேணும்னு, நா சொன்னதுக்கு வேற என்ன அர்த்தம் இருக்கும்னு நீ நெனக்கிற?”

 

“ம்ஹூம்” என்று அசட்டையாகச் சிரித்த ஆழி, “யாரை கொல்லனும்னு கேக்குறதுக்கு முன்ன, உனக்கு எப்டி என்னைத் தெரியும்?” என்றவளை கூர்மையாகப் பார்த்தான் விஷ்ணு.

 

“என்ன தைரியம் உனக்கு… ஒரு போலீஸ்காரன் முன்னாடி உக்காந்துட்டு, எவ்ளோ திமிரா பேசிட்டு இருக்க நீ, என்ன தைரியம்டி உனக்கு… ஒரு பொண்ண இருந்துட்டு, பணத்துக்காக மனுஷங்க உயிரை எடுக்கிறீயே, இதெல்லாம் என்ன பொழப்புடி?” என்ற விஷ்ணு அருகில் சென்ற ஆழினி,

 

“பணத்துக்காகக் கொலை பண்ற என்கிட்ட வந்து வந்து ஹெல்ப் கேக்குற உன் பொழப்பை விட என்னுது பெட்டர் தான். இவ்ளோ பேசுற நீ என்ன டேஷ்க்கு என்ன தேடி வந்திருக்க… போலீஸ் உன்னால முடியாததை முடிக்கத் தானா என்னைத் தேடி வந்திருக்க… அந்தத் திமிரும் தைரியமும் தான். சோ, மூடிட்டு… ஐ மீன் வாயமூடிட்டு வந்த விஷயத்தை ஒழுங்க சொல்லு. அன்ட் என்னைப் பத்தி உனக்குச் சொன்னது யாரு? என்னை எப்டி உனக்கு தெரியும்?”

 

“என்ன கேள்வி இது மிஸ். ஆழினி. உன்னை மாதிரி ஒருத்திய, ஒரு கொலைகாரிய, போலீஸூக்குத் தெரியுறது நேச்சுரல் தானா…” என்று ஆழி அருகில் வந்து அவள் கன்னைத் இறுக்கிப் பிடித்துத் தன் புறம் இழுத்து,

 

“ம்ம்ம சும்மா சொல்லக்கூடாது… நீ பாக்க செம்ம அழகு தான்… பட் பழகினால் உயிருக்கே ஆபத்து. சூப்பர் காம்போ தான் நீ. ஒரு சின்ன எவிடன்ஸ் கூட இல்லாம இத்தனை கொலைங்க…! செம்ம கில்லாடி தான் போ நீ. அதுவும் நீ கொன்ன எல்லாரும் சொசைட்டில பெரிய பெரிய விஐபி, விவிஐபிங்க.‌.” என்றபடி அவளை முகத்துக்கு அருகில் சென்று அவள் கண்களை உற்று பார்த்த விஷ்ணு,

 

“தி கிரேட் கில்லர் மிஸ். ஆழினியை எனக்கு… போலீஸுக்கு தெரியாம இருக்குமா… ” என்று விஷ்ணு நக்கலாகச் சிரிக்க, ஆழி அவனைப் பார்த்து இதழ் சுழித்துச் சிரித்தாள்.

 

“நீ சொல்ற காரணம் உண்மை இல்லான்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.” என்று சேரில் இருந்து எழுந்தவள், “ஓகே. நீ சொல்ல மாட்ட, சரி எதுக்காக என்ன டார்கெட் பண்ற?” என்ற கேட்டவள் முன் விஷ்ணு மூன்று பேரின் புகைப்படங்கள், அவர்களைப் பற்றித் தகவல்கள் இருந்த பென்ட்ரைவ் வை வைத்தான். ஆழினி அதை ஒரு நிமிடம் உற்று பார்த்தவள், “நான் முடியாதுன்னு சொன்னா, நீ என்ன பண்ணுவா?”

 

“நீ முடியாதுனு சொல்ல முடியாது மிஸ். ஆழினி. ஒருவேளை நீ அப்டி சொன்னா, நீ யாருன்ற உண்மைய நான், அந்த ஆதவ்கிட்ட சொல்லவேண்டி வரும்.” என்றவனை அவள் அலட்சியமாகப் பார்த்து சிரிக்க, “ம்ம்ம் உன் சிரிப்பு, பார்வையோட அர்த்தம் எனக்கு நல்லா புரியுது. ஆதவ்கும் உனக்கும் நடுவுல ஒன்னும் இல்ல, அப்றம் எனக்கு என்ன பயம்னு நீ நெனைக்கிற. பட், அந்த ஆதவ் வைஃப் ஆஷாவுக்கும் உனக்கும் உயிருக்கு உயிரான சம்பந்தம் இருக்கே ஆழினி. அதுக்காகத் தானா கோடி கோடிய கெட்ற தொழில விட்டுட்டு இங்க வந்து ஆஷாவோட மகளுக்காகக் கேர்டேகர் வேல பாத்துட்டு இருக்க… நான் உன்னைப் பத்தி ஆதவ்கிட்ட சொன்னா, அதுக்கு அப்றம் என்னாகும்னு யோசிச்சு பாரு. உன்னைப் பத்தி தெரிஞ்ச அடுத்த நிமிஷம், ஆதவ் உன்னை வீட்டைவிட்டுத் துறத்திடுவான். அந்தக் குழந்தை நிலாவுக்கு அம்மாவும் இல்லாம, அம்மா மாதிரி இருக்க நீயும் இல்லாம மறுபடியும் அநாதை ஆகிடுமே, அப்றம் உன்னோட நன்றிக்கடன் காத்தோட காத்த போய்டும்” என்றவனை ஆழினி தீயாக முறைக்க, விஷ்ணு அவள் அருகில் வந்தான்.

 

“லிசன், உனக்கு வேற ஆஃப்ஷன் இல்ல. ஒழுங்க நான் சொல்றதை செய். அது தான் உனக்கு” என்றவன் சற்று பொறுத்து, “உங்களுக்கு நல்லது” என்று அழுத்தி சொல்ல, அந்த உங்களுக்கு மீராவும் சைத்ராவும் என்பது ஆழிக்கு தெளிவாகப் புரிந்தது.

 

“இங்க பாரு, நா சொன்னதைச் செஞ்ச அப்றம், ஐ ப்ராமிஸ் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ உன் வழில தாரளமா போலாம்.” என்றவனை ஒரு நிமிடம் உற்று பார்த்தாள் ஆழினி.

 

“எனக்கு ஒரு நாள் டைம் வேணும்” என்றவளை புரியாமல் பார்த்த விஷ்ணு,

 

“எதுக்கு? இதைச் செய்றத? வேணாமான்னு யோசிக்கவ?” என்றவனை அலட்சியமாகப் பார்த்த ஆழி,

 

“மூணு பேரையும் முடிக்க டைம் குறிக்க. எனக்கு ஒரு நாள் டைம் தேவை. இத உன்னை என்கிட்ட அனுப்பிவச்சவன்கிட்டயும் சொல்லிடு” என்றவள் அங்கிருந்த ஃபோட்டோ, பென்ட்ரைவ் வை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல,

 

“எனக்கு ஒரு டவுட்? ஒருவேல என் வேலை முடிஞ்சதும், நான் சொன்னபடி நடந்துக்காம, மறுபடியும் உன்ன டிஸ்டர்ப் பண்ண நீ என்ன பண்ணுவ?” என்று திமிராகக் கேட்க விஷ்ணுவை நின்று திரும்பி ஆழமாக ஒரு பார்வை பார்த்த ஆழி,

 

“பதினெட்டு பேரை, அதுவும் ஹய் ப்ரொபைல் ஆளுங்களை, ஒரு சின்ன எவிடன்ஸ் கூட இல்லாம, கிளீன்ன போட்ட எனக்கு… டெப்டி கமிஷனர் ஆஃப் போலீஸ்… உன்னால ஒன்னும் செய்ய வக்கில்லாம, உதவி கேட்டு வர்ர இடத்தில் இருக்க எனக்கு… நீயே சொன்னா தீ கிரேட் கில்லர் ஆழினிக்கு… டெப்டி கமிஷனர் விஷ்ணு எல்லாம் பெரிய மேட்டரே இல்ல மிஸ்டர். போலீஸ்கார். ஜஸ்ட் லைக் தட், சோலிய முடிச்சிட்டு போய்டே இருப்பேன்.” என்று அவனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல, விஷ்ணு போகும் அவளையே சிறிது நேரம் இமைக்காமல் பாத்திருந்தவன், “யாருக்கோ ஃபோன் போட்டு ஆழிக்கும்‌ அவனுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையைச் சொல்ல, அந்தப் பக்கம் ஏதோ உடைந்து நொறுக்கும் சத்தம் விஷ்ணுவுக்குத் தெளிவாகக் கேட்டது.