ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 9

 

ஆழியும் மீராவும் சமையலறையில் இருக்க, சைத்ரா கத்தி அலறும் சத்தம் கேட்டு இருவரும் ஹாலுக்கு ஓடி வர அங்குச் சைத்ரா முகத்தை மூடியபடி தரையில் அமர்ந்திருக்க, அவள் உடல் முழுவதும் வேர்த்திருந்தது.

 

ஆழியும் மீராவும் அவள் அருகில் சென்று அவள் தோளைத் தொட, பாய்ந்து வந்து இருவரையும் கட்டிக்கொண்டாள் சைத்ரா.

 

அவள் உடல் முழுவதும் நடுநடுங்கி இருக்க, அதை உணர்ந்த ஆழி, அவளைத் தன் நெஞ்சோடு இறுக்கிப் கட்டிப்பிடித்தபடி, அவள் தலையை மெதுவாக வருடிவிட, மீரா வேகமாகச் சென்று தண்ணீர் எடுத்து வந்து சைத்துவுக்குப் புகட்டி விட்டு, கண்ணீர் கோடுகளாக இருந்த அவள் கன்னத்தைத் தன் துப்பட்டா கொண்டு துடைத்து விட்டாள்.

 

“என்னடா? என்னாச்சு உனக்கு? ஏன் இப்படிப் பயந்து போயிருக்க, என்னம்மா ஆச்சு?” என்று ஆழி கேட்க, சைத்த தன் கையை உயர்த்தி விரலை நீட்டி காட்ட, அவள் விரல் தொட்ட திசையில் இருந்த வெள்ளைத் திரையில் தெரிந்தவன் முகத்தைப் பார்த்து ஆழி, மீரா இருவரும், “சைலேஷ்…!!” என்று இருவரும் திகைத்து போயினர்.

 

ஒரு வழியாகச் சைத்ராவை சமாதானம் செய்து உட்கார வைத்து அவள் எதிர் அமர்ந்தனர் ஆழியும் மீராவும்.

 

“இப்ப என்ன செய்யணும்னு நீயே சொல்லு சைத்து? நம்ம இங்கிருந்து போகணும்னு நீ சொன்னாலும் எனக்கு ஓகேதான், உடனே எங்கயாவது போய்டலாம்” என்ற ஆழியைப் பார்த்து இடவலமாகத் தலையாட்டிய சைத்ரா,

 

“அவன் சாகணும், அதுவும் என் கண் முன்னே அவன் துடிச்சு துடிச்சு சாகுறதை நான் பாக்கணும் ஆழி, எனக்காக நீ இதைச் செய்விய?” என்று கேட்க, ஆழி ஒரு கர்வச் சிரிப்போடு சைத்ராவை பார்த்து, “தடஸ் மை சைத்து” என்று சொல்ல,

 

“ஹஸ் யுவர் விஷ், நீ கேட்டு எதை நாங்க செய்யாம இருந்திருக்கோம் சைத்து” என்ற மீரா, ஆழி இருவரையும் கட்டிக்கொண்டாள் சைத்ரா.

 

“முதல்ல அந்த விஷ்ணு குடுத்த ஃபோட்டோஸை நான் சரி கவனிக்காமல் விட்டுட்டேன். அதான் சைலேஷ் இருந்தது எனக்குத் தெரியல” என்றாள் ஆழினி‌.

 

“இல்ல ஆழி, இவன் நம்ம முன்ன பாத்த மாதிரி இல்ல, நிறையச் சேஞ்சஸ் தெரியுது இவன்ட்ட, மேபீ மறுவேஷத்துல சுத்திட்டு இருக்கான் போல”

 

“ம்ம்ம் இருக்கலாம் மீரா, இனிமே நம்ம எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் ரொம்பக் கேர்ஃபுல்ல இருக்கணும். ஏன்னா சைலேஷ்க்கு நம்மைத் தெரிய வாய்ப்பிருக்கு. என்னதான் அவன் நம்மைப் பாத்து பல வருஷமாகி இருந்தாலும், அவன் நம்மை மீட் பண்ண சிட்டுவேஷன் நார்மல் சிட்டிவேஷன் இல்ல, சோ நம்ம எப்படி எதையும் மறக்கலயோ, அதே மாதிரி அவனும் நம்ம செஞ்சதை மறந்திருக்க மாட்டான். சோ வி ஹவ் டு பீ கேர் ஃபுல்.” என்றாள் ஆழினி.

 

“ஓகே ஓகே கைய். நம்ம கேர் ஃபுல்லவே இருப்போம். இனிமே இது அந்த வெண்ணவெட்டி விஷ்ணுவோட ப்ராஜெக்ட் இல்ல, நம்ம ப்ராஜெக்ட், சோ தீயா வேலை செய்யணும் குமாரி… சொல்லுங்க சொல்லுங்க முதல்ல யாருக்குப் பிண்டம் வைக்கலாம்” என்ற சைத்ராவின் துள்ளல் பேச்சில் அவள் தேறி விட்டாள் என்று தெரிந்து இருவர் மனதுக்கும் நிம்மதியா இருந்தது.

 

“சைலேஷ் ப்ளான் இப்ப வேணாம். ஏன்னா அவன் நம்ம சைத்துவோட ஸ்பெஷல் டார்கெட், சோ கொஞ்சம் டைமெடுத்து வச்சு செம்மய செய்யலாம். அந்த முதல் ஃபோட்டோல இருக்குற‌ அந்தப் பையன் யாரு சைத்து. பாக்க பால்வாடி பையன் மாதிரி இருக்கான். இவன எதுக்குக் கொல்ல சொன்னாங்க?!” என்று கேட்ட ஆழியைப் பார்த்து அசட்டையாகச் சிரித்த சைத்து,

 

“இந்தப் பால்வாடி பையன் பண்ண வேலை தெரிஞ்ச நீ இப்படிச் சொல்மாட்ட ஆழி.”

 

“அப்படி என்ன பண்ணிட்டான்?” என்று கேட்டாள்‌ மீரா.

 

“இவனுக்கு என்ன வயசு இருக்கும் மீரா?”

 

“ம்ம்ம்‌… என்ன ஒரு இருபது, இருவத்தி ஒன்னு இருக்கும் போல”

 

“எக்ஸாக்ட்லி மீரா, இவனுக்கு இருவது வயசு தான். ஆனா, இதுவரை இன்மேல கிட்டத்தட்ட ஏழு ரேப் கேஸ் இருக்குன்னு சொன்னா நீ நம்புவீயா? என்ற சைத்துவின் பதிலில் ஆழி, மீரா இருவரும் திகைத்து நின்றனர்.

 

“என்னடி சொல்ற? உண்மையாவ?”

 

“ஆமா மீரா. அதுவும் அவனோட பதினேழு வயசுல ஒரு பொண்ணை ரேப் பண்ண ட்ரை பண்ணி இருக்கான். அந்தப் பொண்ணு இவன்ட்ட இருந்து தப்பிக்க மாடில இருந்து குதிச்சு செத்துப்போச்சு, அந்தக் கேஸ்ல இவன் மைனர்ன்ற‌ ஒரு பாய்ண்ட்ட வச்சு இவனை ஈசியா வெளிய கொண்டு வந்துட்டாங்க, “

 

“வாட்?!… என்னடி சொல்ற, ஒரு மைனர் பையன் ரேப் பண்ண ட்ரை பண்ணது தப்பில்ல. ஆனா, அவனுக்குத் தண்டனை குடுத்தால் அது தப்பா?? என்ன எழவுடி இது” என்று மீரா கொதிக்க,

 

“பையனோட அப்பாக்கு எவ்ளோ சொத்து தேரும் சைத்து?” என்ற ஆழியைப் பார்த்து வரண்டு சிரித்த சைத்து, “இந்திய பணக்காரங்க லிஸ்ட்ல டாப் டென் ல இருக்காரு”

 

“ம்ம்ம்… அப்புறம் பையன் மைனரா இருந்த என்ன மேஜரா இருந்த என்ன… வெளிய விட்ற வேண்டியது தான” என்ற ஆழியின் கண்களில் அத்தனை கோவம்.

 

“பின்ன அவன் வெளிய இருந்த தான நம்ம அவனை முடிக்க முடியும். இல்லாட்டி இவனை முடிக்க நம்ம ஜெயிலுக்கு இல்ல போகணும். இப்ப அந்த வேலை மிச்சம்” என்ற சைத்ரா கன்னத்தில் தட்டிய மீரா,

 

“அவுதும் கரெக்ட் தான். அதுசரி சார் இப்ப என்ன பண்ணிட்டு இருக்காரு…”

 

“இவனெல்லாம் என்ன திருந்தி காவியமா எழுதப்போறான். எங்கயாது எவளாவது கெடப்பாளன்னு அலஞ்சிட்டு இருப்பான்… என்ன சைத்து சரிதான்.”

 

“சென் பர்சன்ட் ரைட் மீரா. இந்த நாய்‌ பார்ட்டினு பெரிய பெரிய வீட்டுப் பொண்ணுங்களை இவன் வீட்டுக்கு வரவச்சு, அவங்க ட்ரிங்க்ஸை ஸ்பைக் பண்ணி அவங்க மயக்கத்தில் இருக்கும் போது அவங்களை அசிங்கமா ஃபோட்டோ எடுத்து வச்சிட்டு, அவங்களை எல்லாம் பிளாக்மெயில் பண்ணி அவனுக்குத் தேவையான எல்லாத்தையும் சாதிச்சிட்டு இருக்கான். இதுக்கு அவன் அப்பனும் கூட்டு”

 

“த்துத் கருமம் புடிச்ச அப்பன இருப்பான் போல. பையன் மார்கழி மாச நாயின்னா, அப்பன் சொறிபுடிச்ச வெறி நாய் போல, போலீஸ் இதுங்களை ஒன்னும் செய்யலய சைத்து?”

 

“அந்த ஃபோட்டோ பொண்ணுங்களில் கமிஷனர் பொண்ணும் ஒருத்தி மீரா”

 

“கிழிஞ்சுது… இப்ப புரியுது, அந்த டெப்டி ஏன் இந்த வேலைய நம்மகிட்ட தந்தான்னு.”

 

“சரி சைத்து அதுல கமிஷனர் பொண்ணு இருக்குன்னு உனக்கு எப்படித் தெரிஞ்சுது‌?” என்று கேட்டாள்‌ ஆழி.

 

“அந்தப் பக்கியோட ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹெக் பண்ணி அவன் ஐபி அட்டிரஸ் ட்ரக் பண்ணி அவன் சிஸ்டம் குள்ள போயி பாத்தேன். சனியம்புடிச்ச கழுசடை அதுல இருந்த சில ஃபோடோஸ் பாத்து எனக்குக் குடலே வெளிய வந்துடுற‌ அளவு வாந்தி வந்திடுச்சு ஆழி…”

 

“அப்புறம் என்ன பண்ண சைத்து?”

 

“இதென்னடி கேள்வி?! வாந்தி எடுத்த, என்ன பண்ணுவாங்க, வாயை கழுவுவாங்க தான, அதுதான் உலக வழக்கம். அதைத் தான் நானும் செஞ்சேன்” என்ற சைத்துவை முறைத்தாள் ஆழி.

 

“சரி சரி மொறைக்காத, அந்தப் பையன் சிஸ்டம்கு ஒரு சின்ன வைரஸை அனுப்பி விட்டேன். அவன் எங்க லாகின் பண்ணாலும் அந்த டிவைஸ் புளிப்போட்டு வெளக்குன பித்தளை பாத்திரம் மாதிரி பளபளன்னு கிளீன் ஆகிடும். ஐ மீன் அவன்ட்ட‌ ஒரு பொண்ணோட ஃபோட்டோவும் இனிமே இருக்காது. எவ்ளோ பெரிய‌ தில்லாலங்கடி கம்ப்யூட்டர் இன்ஜினியர் வந்தாலும், போனதை ரெக்கவர் பண்ண முடியாது. வடக்குப்பட்டி ராமசாமிக்குக் குடுத்த பணம் உஊஊதான்…” என்று சிரித்தாள் சைத்ரா.

 

“ம்ம்ம் குட் சைத்து, இனி இவனுக்கு ஸ்கெட்ச் போட்டுடலாம்.”

 

“அந்தப் பொறுக்கி இன்னும மூணு நாள் கழிச்சு கொடைக்கானல் போகுது ஆழி. அங்க வச்சு ஸ்கெட்ச் போட்ட சரிய இருக்கும். ஏன்னா சென்னையில் அவனுக்கு அவங்கப்பன் டைட் செக்யூரிட்டி போட்டிருக்கான். அதுல இருந்து எஸ்ஸாகத் தான் அந்த நாய் கொடைக்கானல்கு பொறுக்கப் போகுது. சோ நம்ம வேலைக்கு ஈசியா இருக்கும்.”

 

“சைத்துச் சொல்றதும் நல்லா ஐடியா தான் ஆழி. நீயென்ன சொல்ற?”

 

“இது நல்லா ஐடியா தான்.‌ நமக்கு வேலை ஈசியா முடியும். பட் இதுக்காக நம்ம எப்படியும் நாலு இல்ல ஐஞ்சு நாளைக்கு கொடைக்கானல் போகவேண்டி இருக்குமே… நான் அந்த ஆதவ்கிட்ட என்னன்னு சொல்லிட்டு வர்ரது. அதோட பாப்பா இத்தனை நாள் என்னை விட்டு இருக்கமாட்டளே…” என்ற ஆழியைப் பார்த்த மீரா,

 

“நீ சொல்றது புரியுது ஆழி. பட் இது நமக்குக் கிடைச்ச பெஸ்ட் சான்ஸ், டோண்ட் வேஸ்ட் இட்” என்ற மீராவை பார்த்து ஆமோதித்துத் தலையாட்டிய ஆழி,

 

“ம்ம்ம்…” என்று தன் கையில் இருந்த வாட்சை பார்த்து, “சரிடி டைம் ஆகுது. நான் கெளம்புறேன். ப்ளான் என்னன்னு ஸ்கெட்ச் போட்டுட்டு ஃபோன் பண்றேன். பை, டே கேர்” என்ற ஆழி அங்கிருந்து கிளம்ப, போகும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர் மீராவும் சைத்ராவும்.

 

“ஆழிகிட்ட இப்பெல்லாம் நெறய சேஞ்ஜஸ் தெரியுது மீரா. அந்தப் பாப்பாவோட சேத்து அந்த வீட்டு ஆளுங்க கூடவும் இவ அட்டச் ஆகிட்ட மாதிரி தோணுது.” என்ற சைத்ராவை பார்த்த மீரா,

 

“அவ நேச்சரே அப்படித்தான சைத்து, ஏன் நம்ம விஷயத்தையே எடுத்துக்க, இதுவரை எந்த ஒரு பிராஜக்ட்லயாது அவ நம்ம இறக்கி இருக்காலா சொல்லு, இந்த ரத்தம், சாவு, கொலை எல்லாம் என் ஒருத்தியோட போகட்டும். உங்க ரெண்டு பேருக்கும் இது வேணாம்னு, எல்லாத்தையும் நம்ம ஒதுக்கி தான வச்சிருக்கா. டெக்னிக்கல் சப்பேட், டீடெயில்ஸ் கலெக்ட் பண்றது இந்த மாதிரி தான் நமக்கு வேல கொடுப்பா, நம்ம கைல எந்த ரத்த கரையும் படியக் கூடாதுன்றதுல அவ ரொம்ப அடமெண்ட்ட இருந்தா, இப்பவும் அப்படித்தான் இருக்கா, அவ சொல்லலாம் நிலாவை பாத்த பிறகு தான் அவ தாய்மைய உணர்ந்தான்னு, பட் உண்மை என்னான்னா, அவ நமக்குச் செய்ற எல்லாமே ஒரு அம்மாக்கு அவ குழந்தைக்குச் செய்றது மாதிரி தான். அது அவளுக்குத் தான் புரியல” என்ற மீராவின் வார்த்தை உண்மை என்று தலையாட்டினாள் சைத்ரா.

 

ஆழி வீட்டுக்குள் நுழையவும் ஆதவ் அவன் அறையில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

 

“என்ன ஆழி மேடம் வரவர நீங்க அடிக்கடி வெளிய போறீங்க, 

ரொம்ப நேரம் கழிச்சு தான் வீட்டுக்கு திரும்பி வரீங்க… என்ன மேட்டர்” என்று கேட்க, அங்கு வந்த வெண்மதி,

 

“டேய் ஏன்டா எப்ப பாரு அவளையே நோண்டிட்டு இருக்க? நீதான சொல்லுவா அவ நிலாக்கு வெறும் கேர் டேங்கர் தான், அதுக்கு நான் சம்பளம் தரேன்னு. அப்படி இருக்க, அவளைக் கேள்வி கேக்குற உரிமைய உனக்கு யார் தந்தது.” என்ற தான் தாயை முறைத்தான் ஆதவ்.

 

“என்ன பேசுறீங்க நீங்க, அவ இந்த வீட்ல தான தங்கி இருக்கா, அந்த உரிமையில தான் கேட்டேன்.” என்று சமாளிக்க,

 

“அதெப்படி டா. அவ ஒன்னும் இந்த வீட்டு ஆள் இல்லயே, இந்த வீட்ல தங்கியிருக்க அவ்ளோதான். ஆழி வெறும் பேயிங் கெஸ்ட் தான். நீ எப்படி மாச மாசம் அவளுக்குச் சேலரி குடுக்குறீயே, அதே மாதிரி அவளும் இங்க தங்க வாடகை குடுக்குற, சோ அவளைக் கேள்வி கேக்க உனக்கு எந்த ரைட்ஸ்சும் இல்லை” என்று வேண்டுமென்றே ஆதவ்வை வெறுப்பேற்ற ஆதவுக்குத் தன் அம்மவை நினைத்து எரிச்சலாக வந்தது.

 

“விடுங்கம்மா, வர்ர கொஞ்சம் டைம் ஆகிடுச்சு, அதான் கேக்குறாரு போல” என்ற ஆழி, ஆதவிடம் திரும்பி, “நான் உங்கிட்ட பாப்பா கொஞ்சம் பெருசனதும் இங்க இருந்து போய்டுறேன்னு சொல்லி இருந்தேன். அப்படி நான் இங்க இருந்து போனதுக்கு அப்புறம் நான் வேலைக்குப் போகணும் தான. அதான் என்னோட வேலை விஷயமா வெளிய போயிருந்தேன். அங்க கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்ற ஆழியை ஆழமாகப் பார்த்த ஆதவ்,

 

“அப்ப பழைய வேலைய மறுபடியும் ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லு?” என்ற ஆதவின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து, திரும்பி வெண்மதியிடம் இருந்த நிலாவை தன் கைகளில் வாங்கிக்கொண்டு, “பழசு எல்லாத்தையும் மொத்தமா, எந்தப் பாக்கியும் இல்லாம முடிச்சிட்டு தான் நான் இங்க வந்தேன். சோ ஐ ஆம் பேக் மோமென்ட் எல்லாம் இங்க இல்ல” என்று நிலாவை பார்த்து, “இது வேற. இதை முடிக்கும் நேரமும், நான் இங்க இருந்து போகும் நேரம் ஒன்னா இருக்கும். சோ நீங்க ஆசப்பட்ட மாதிரி நான் சீக்கிரம் இங்க இருந்து போய்டுவேன்” என்று சொல்ல வந்தவளின் வார்த்தையைப் பாதியில் நிற்க வைத்தது, நிலா “ம்மா” என்று மழலை மொழி‌.

 

ஆழி நிலாவையே இமைக்காமல் விழிவிரிய பார்த்திருக்க, நிலா ஆழியின் கன்னத்தைத் தன் பிஞ்சு கரத்தால் தடவியபடி மீண்டும், “அம்மா” என்றழைக்க ஆழிக்கு அந்த ஒரு நொடியை கடக்க, பல நிமிடங்கள் தேவைப்பட்டது‌.

 

ஆழி விட்டுப் போகிறேன் என்று சொல்லும் சமயம், அதுவரை அம்மா என்றழைக்காத குழந்தை, சரியாக அந்த நேரம் அந்த அமுத வார்த்தையைச் சொல்ல, ஆழியின் இதயம் அன்பால் வேகமாக அடித்துக்கொண்டது.

 

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் கால்கள் தடுமாறிய ஆழி குழந்தை நெஞ்சோடு சேர்த்து இறுக்கி அணைத்தபடி அவள் அறைக்குச் சென்றுவிட, ஆதவ் போகும் அவளையே புருவம் உயர்த்தி ஆழமாகப் பார்த்திருக்க, வெண்மதிக்கு தான் ஆசைப்பட்டது, தான் பேத்தியின் மூலம் கூடிய சீக்கிரம் நடந்து விடும் என்ற நம்பிக்கை பிறந்து.