இணைந்து வாழ்வோம்(லிவ் இன்)

அவளுக்கு திருமணம் என்று கேட்ட பின்பு அவனுள் மீதமிருந்த கொஞ்சநஞ்சம் நிம்மதியும் அவனை விட்டு நீங்கி தனியாய் துறவறம் மேற்கொள்ளப் போய்விட்டது…

கண்ணீர் எதனால் வருகிறது என்று கேட்டால் h2o+ nacl யினால் என்று சொன்னவன்…. இப்போது என் தியாவினால் என்கிறான்… எந்த அன்பை தன் இதயம் வரை செல்லவிட்டால் நிம்மதி சென்றுவிடுமோ என்று பயந்தானோ இன்று அந்த அன்புக்காக ஏங்கி தன் நிம்மதியைத் தொலைத்து நிற்கின்றான்…

பலவீனம் ஆகக்கூடாது என்று சொல்லி சொல்லியே பலவீனமாகிப் போன தன்னை சரி செய்ய வழியற்று செய்வதறியாது தவித்தான்….

அவள் பிரிந்த பின்பு தான் அவள் மீது இன்னும் காதல் அளவில்லாமல் வழிந்தது அவனுக்கு.. இதுவரை காதலை மூளையில்  வைத்தே பார்த்தவன் முதன் முதலாய் மனதில் வைத்து உணர ஆரம்பித்தான்.. அவன் மூளையில் acc பகுதியில் இருந்து உண்டாகிய வலியை விரும்பியே ஏற்றுக் கொண்டான்.. எவ்வளவு முயன்றாலும் அவளின் நினைவு ஒரு புறம் மலராகவும் மறுபுறம் முள்ளாகவும் தைத்தது..

தனக்கு துணையாய் இருக்கும் செல்லாவிடம் அவன் தன் சோகத்தைப் பகிர்ந்துக் கொள்ள அவனது  சோகம் தாங்காமல் அதுவும் மடிந்துப் போனது..

அவளின் நினைவாய் இருந்த அதுவும் தன்னை விட்டு நீங்கிப் போனதைத் தாங்க முடியாமல் போதையை கையில் எடுத்தான்…

வேதனையை மறைக்க குடித்தானோ இல்லை மறக்க குடித்தானோ ஆனால் இதுவரை குடியைப் பற்றி சையின்ஸ் பேசியவன் மொடாக் குடிகாரன் ஆனான்..

வீட்டை விட்டு வெளியே வராமல் இரவும் பகலும் குடித்தான்.. தன் மகனைக் காண வந்த ரித்திகா ஷர்மாவோ அவனது நிலையைக் கண்டு போய் அதிர்ந்தார்… தன் மகனா? குடித்தானா என்று சந்தேகம் தாளாமல் நின்றார்… அவனை சின்ன வயதில் இருந்து இப்போது வரை கண்காணித்ததில் ஒரு கெட்டப் பழக்கமும் தன்னை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொண்டவன் இன்று முழுதாய் குடியின் பிடியில் ஆட்பட்டு இருப்பதைக் கண்டு நிலைக் குலைந்து போனார்…

அவன் அருகே போதை தெளியும் வரை அமர்ந்து இருந்தவர் அவன் எழுந்ததும் கோபமாய் முறைத்தார்.. தன் தாயை எதிர் பார்க்காத அவனோ முதலில் அதிர்ந்து பின்பு அவரை விட ரௌத்திரமாக முறைத்தான்..

தன் திருமணம் வேண்டாம் என்ற முடிவிற்கு வித்தாய் இருந்தது இவர்கள் தானே.. என் தியா என்னை விட்டு செல்லக் காரணமாய் இருந்தது இவர் தானே என்ற கோபத்தில் இருந்தான்…

” அர்ஜீன் என்னது இது.. எப்போத்துல இருந்து இந்த குடிக்கிற பழக்கம் வந்துது.. அதுவும் இப்படி மொடாக் குடிகாரன் மாதிரி போதையில விழுந்து கிடக்கிற”

” என்ன புதுசா புள்ளை மேலே பாசம்.. புள்ளைய பத்தி அக்கறை இல்லாம சினிமாவில  கான்சென்ட்ரெட் பண்ணி எல்லாம் சாதிச்சாச்சு.. இப்போ கடைசிக் காலத்துல மட்டும் புள்ளை மேலே புதுசா அக்கறை முளைச்சுடுச்சோ”

” அர்ஜீன் போதும் நிறுத்து.. நான் உன் முன்னாடி வந்தாலே நீ கோபமா பீஹேவ் பண்ற உன்னோட நிம்மதியை ஏன்  கெடுக்கனும்னு தான் நான் உன் முன்னாடி வரல.. ஆனால் தூரத்துல இருந்து உன்னை பார்த்துட்டும் கண்காணிச்சுட்டும் தான் இருப்பேன்”

” அப்போ இப்போ மட்டும் ஏன் முன்னாடி வந்தீங்க உங்களால என் நிம்மதி கெடுது சோ வீட்டை விட்டுப்  போங்க.. “

” அர்ஜீன் அப்போ என் மேலே இருந்த  கோபம் இன்னும் குறையலயா உனக்கு??.. அன்னைக்கு நான் ஆஸ்பிட்டல்ல இருந்த அப்போ என் கிட்டே நல்லா பேசுன.. நான் ட்ரீட்மென்ட் முடிச்சுட்டு இந்தியா வந்ததும் முதல் வேலையா உன்னை தான் பார்க்க வந்தேன்.. இங்க வந்து விசாரிச்ச அப்புறம் தான் உனக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சுன்ற விஷயம் தெரிஞ்சுது.. ஆமாம் தியா எங்கே??”

” ஆஸ்பிட்டல்ல நான் அப்படி நடந்துக்கிட்டது ஒரு மனிதாபிமான முறையில ஒன்னும் பாசம் வந்து அப்படி பண்ணல… எனக்கு இன்னும் உங்கள் மேலே ஆத்திரம் குறையல… அதனாலே உங்கள் லிமிட்ஸை க்ராஸ் பண்ணாதீங்க… நான் நடந்ததை மறக்க மாட்டேன்.. நீங்க பண்ண விஷயத்தினாலே எனக்கு கல்யாணத்து மேலே நம்பிக்கையே போயி என் தியாவை நான் இழந்துட்டேன்.. எல்லாம் உங்களால தான்”

” என்னது தியா போயிட்டாளா.??.”

” ஆமாம் போயிட்டா.. கல்யாணம் ஆகிருச்சு போதுமா.. இப்போ சந்தோஷமா உங்க ரெண்டு பசங்க வாழ்க்கையும் உங்களால முடிஞ்சுடுச்சு.. சரியான செல்ஃபிஷ் சேடிஸ்ட்”

” போதும் அர்ஜீன் நானும் ரொம்ப அமைதியா இருக்கேன்.. என்னை கோபப்படுத்தாத.. “

” என்ன உண்மையை சொன்னதும் வலிக்கிதோ… உங்களை ஆஸ்பிட்டல்ல சேர்த்த அப்போ நான் உண்மையான பாசத்தோட தான் வருத்தப்பட்டேன்.. ஆனால் அந்த நிமிஷம் என் கண்ணு முன்னாடி உங்களாலே செத்துப் போன என் தங்கச்சி தான் கண்ணுக்கு தெரிஞ்சா.. அந்த நிமிஷமே உங்கள் மேலே வெளிப்பட்ட என் பாசம் எல்லாமே வத்திப் போச்சு.. நான் தெரியாம தான் கேட்குறேன்.. உங்களாலே ஒரு உயிரைப் பாத்துக்க முடியலைனா அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிறீங்க..  உங்கள் கேரீயர் தான் முக்கியம்னா எதுக்கு அந்த குழந்தையை பெத்துக்கிறீங்க… சூழ்நிலை மாறிடும் போது மனுஷங்களும் மாறிடுறாங்க தான் இல்லை.. தன்னோட சந்தோஷம் தான் பெருசுனு நினைக்கிறவங்க ஏன் ஒரு குழந்தையைப் பெத்துப் போட்டு அது சந்தோஷத்தை பிடிங்குறீங்க.. என் தங்கச்சி அந்த கடைசி நாட்களிலே உங்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா.. அந்த அஞ்சு வயசுல எவ்வளவு துடிச்சு இருப்பா.. பாசமும் கிடைக்காம உடம்புல வலியும் தாங்க முடியாம.. அவளை கவனிக்கக்கூட உங்களுக்கு நேரம் பத்தல இல்லை… அவள் இறந்த அப்புறம் உங்கள் மேலே இருந்த கொஞ்ச நஞ்ச பாசமும் எனக்கு போயிடுச்சு.. உங்கள் கிட்டே பாசத்துக்கு ஏங்கி நிற்கக் கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்…. இப்போ உங்களுக்கு சந்தோஷம்ல நீங்க பெத்த ரெண்டு குழந்தை வாழ்க்கையையும் அழிச்சாச்சு…” என்று அவன் கத்த அவள் அன்னையோ சிலை என அமர்ந்து இருந்தாள்… ஆனால் பின்னால் இருந்து கோபமாய் ஒரு குரல் கேட்க திரும்பிப் பார்த்தவன் ஒரு கணம் மூச்சுவிடத் தோன்றாது சிலை ஆனான்…

அன்று போல் இன்றும் கனவு காண்கின்றேனோ??என தன் கண்களை நம்பத் தோன்றாது சந்தேகப்பட்டான்.. 

அவளது சின்ன வயதுப் போட்டாவை வைத்து அவள் பெரிதானால் எப்படி இருப்பாள் என நினைத்து கம்ப்யூட்டரில் வரைந்தானோ அதைப் போலவே அவன் எதிரினில் அவனது தங்கை நின்றுக் கொண்டு இருந்தாள்…

” அண்ணா போதும் நிறுத்து அம்மாவை இதுக்கு மேலே எதுவும் சொல்லாதே” என அவள் குரல் கேட்க நிஜம் என்று அவன் மனதுக்கும் மூளைக்கும் புரிந்தது…

” ப்ரியா நீ எப்படி.. உயிரோட… சின்ன வயசுல இருக்கும் போது உன்னை இனிப் பார்க்க முடியாது நீ இறந்துட்டேனு தானே சொன்னாங்க…. எப்படி??” என அவன் மனதினுள் யோசித்தபடியே  அதிர்ச்சி விலகாமல் ஸ்தம்பித்து  நின்றான்…

“அண்ணா போதும் இனி அம்மாவைப் பத்தி ஒரு வார்த்தை பேசாதே.. என்ன தெரியும் அவங்களைப் பத்தி உனக்கு.. குறை மட்டும் தானே சொல்லத் தெரியும்.. அப்பா இறந்த அப்புறம் அம்மா எந்த கவலையும் இல்லாம சினிமாக்கு நடிக்கப் போனாங்கனு மட்டும் தானே தெரியும்.. ஆனால் அதுக்கு முன்னாடி வரை அவங்களுக்கு அந்த சினிமா ஆசை இல்லையே அப்புறம் எதுக்காக அந்த பீல்டூக்கு போனாங்கனு யோசிச்சியா??.. எல்லாம் நமக்காக தான்னா…. அப்பா இறந்த அப்புறம் தான் தெரிஞ்சது நம்மளோட சேர்த்து கடனையும் அவர் விட்டுட்டு போய் இருக்கார்னு…. அதுக்காக தான் அம்மா நடிக்க போனாங்க.. நம்மள கவனிக்க நேரமும் பத்தல… அதுக்கு அவங்களை குறை சொல்றது தப்புனா.. நமக்காக தானே இவ்வளவும் பண்ணாங்க.. நீ என்னை எவ்வளவு நல்லா பாத்துப்பல்லனா சின்ன வயசுல.. என் மேலே உயிரையே வெச்சு இருந்த… நான் உன் கிட்டே தான் அதிகமா வளர்ந்தனா.. அந்த  10 வயசுலேயே ஒரு 5 வயசு குழந்தைக்கு நீ தாயாவும் தந்தையாவும் மாறிட்டனா.. உனக்கே தெரியும்ல என் முகம் சின்ன வயசிலேயே முதிர்ச்சி அடைஞ்சா மாதிரி இருக்கும்னு… அதுக்கு காரணம் என்ன தெரியுமா எனக்கு progeria னு ஒரு நோய் இருந்தது… என்னோட ஐந்து வயசுல அந்த நோய் முத்திப் போய் மூச்சு விட முடியாத மாதிரி ஆகிருச்சுனா.. ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போன அப்போ முதலிலே நான் செத்துட்டேனு தான் சொல்லி இருக்காங்க.. ஆனால் புதைக்கிற அப்புறம் தான் தெரிஞ்சு இருக்கு என் உடம்பில மறுபடியும் உயிர் வந்து இருக்குனு நான் அசையுறதைப் பார்த்து உடனே ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போய் இருக்காங்க.. அதுக்கு அப்புறம் தான் நான் பிழைச்சேன்.. ஆனால் இந்த நோய் வந்தவங்க 20 வயசுக்குள்ளேயே செத்துப் போயிடுவாங்கனு டாக்டர்ஸ் எல்லாரும் சொல்லி இருக்காங்க.. அதான் உன் கிட்டே மறுபடி நான் உயிர் பிழைச்சதை சொல்லல.. நான் செத்தேனு நினைச்சது நினைச்ச படியா இருக்கட்டும்னு விட்டுட்டாங்க.. மறுபடி உன்னை கஷ்டப்படுத்த விரும்பாம.. அப்புறம் என்னை ஃபாரின்க்கு கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் நிறைய பண்ணாங்க.. நான் உயிரோட இருக்க காரணமே அம்மா தான் அண்ணா.. அவங்க நடிச்சு சம்பாரிச்ச பணத்தால தான் நான் உயிர் வாழுறேன்.. அவங்க ஒன்னும் பொழுது போக்குக்காக நடிக்கல புரியுதா.. அம்மாவுக்கு கேன்சர் வந்த அப்போ கூட நான் ஹாஸ்பிட்டலுக்கு அம்மாவைப் பார்க்க வந்தேன்.. நீ அப்போ என்னை பார்த்துட்ட…. ஆனால் நான் உனக்கு தெரியாம அந்த இடத்தை விட்டு கிளம்பிட்டேன்.. ஏன்னா எனக்கு இன்னொரு ஒரு பெரிய சர்ஜரி இருந்ததுனா.. அது மட்டும் சக்ஸஸ் ஆகிருச்சுனா இனி என் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைனு சொல்லிட்டாங்க… எங்கே அந்த ஆப்பரேஷன் எனக்கு சக்ஸஸ் ஆகாம போய் நான் மறுபடியும் செத்துப் போயிட்டனா நீ இன்னொரு தரம் எனக்காக வருத்தப்பட்டு கஷ்டப்படக் கூடாதுனு தானா நான் அங்கே இருந்து போயிட்டேன்.. இப்போ அந்த ஆப்பரேஷன் சக்ஸஸ் ஆகி என் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைனு சொன்ன அப்புறம் உன்னைப் பார்க்கலாம்னு வந்தா அம்மாவை இப்படியா வார்த்தையாலே சாகடிப்ப” என அவள் பொறிந்தத் தள்ள ஓடிச் சென்று தன் தங்கையைக் கட்டிக் கொண்டான்…

“ப்ரியா நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் டா.. உன் இழப்பு என்னை ரொம்ப வருத்தி எடுத்துச்சு.. அதுக்கப்புறம் நான் யார் கூடவும் சேராம தனியா தான்டா இருந்தேன்.. அதுல தான் இந்த அண்ணன் ரொம்ப முரடனாகிட்டேன் போல.. பெத்த தாயைக் கூட பேச விடாம அவங்க பேச்சுக்கு மதிப்பு கொடுக்காம இருந்துட்டேன்…. என்னை மன்னிச்சுடுங்க.. ஐ யம் சாரி மாம்  ” என்று பட்டென்று தன் அன்னையின் காலில் விழுந்தான்…

அதில் பதறியவர்கள் ” ஐயோ அர்ஜீன் எழுந்துருப்பா.. உன் மேலே எனக்கு உண்மையா கோபம் இல்லை… கொஞ்சம் வருத்தம் தான்.. என்னை புரிஞ்சுக்கலயேனு.. ” என்று அவனை எழுப்பியவர் ” என் மருமகள் தியா எங்கேடா.. அவள் கிட்டே ஏதாவது நீ ஏடாகூடாம பேசி இருந்தனா மன்னிப்பு கேட்டு கூட்டிட்டு வந்துடுறா.. ஈகோலாம் பார்க்காத… நீ இப்படி உடைஞ்சு போய் நிக்குறதை பார்க்க என்னாலே முடியல…. “

” இல்லைமா நான் அவள் கிட்டே பேச மாட்டேன்.. என் மந்திக்கு இந்நேரம் கல்யாணமே ஆகி இருக்கும்… அவள் முன்னாடி இப்போ போய் நின்னு அவளை கஷ்டப்படுத்த விரும்பல மா.. ஆரம்பிக்கப் போற புது வாழ்க்கையை எந்த சலனமும் இல்லாம அவள் ஆரம்பிக்கட்டும்.. அவள் எனக்கு கல்யாணம் பண்ண போறாங்கனு  சொல்லிட்டு வேக வேகமா போயிட்டா மா.. எங்கே நான் ஏதாவது கேட்டா அவளுக்கு சங்கடம் ஆகிடுமோனு… அவள் பயப்பட்டா மாதிரி நான் அவளை சங்கடப்படுத்த மாட்டேன்.. ஆனால் மனசுக்குள்ளே சின்ன ஒரு நம்பிக்கை இருந்ததுமா.. அவங்க அப்போ வந்து கூப்பிட்ட உடனே தான் அவசரமா சொல்லிட்டு அப்படி போயிட்டா.. கொஞ்ச நாளிலே அவங்க வீட்டுல இருக்கிறவங்களை  சமாதானப்படுத்திட்டு மறுபடியும் என் கிட்டேயே வந்துடுவானு நினைச்சு  மனசோட ஒரு மூலையிலே உண்மையா  அவளுக்காகக் காத்திட்டு இருந்தேன் மா.. ஆனால் கீர்த்தி அவளுக்கு கல்யாணம்னு சொன்னதும் உண்மையா அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சானு என்னாலே ஏத்துக்கவே முடியலம்மா” என மீண்டும் உடைந்துப் போய் அழுதான்…

அவன் முதுகை வருடிக் கொடுத்து சமாதானப்படுத்தியவர் ” சரிப்பா நீ தியா கிட்டே பேச வேண்டாம்.. அதுக்காக இப்படி உடைஞ்சுப் போய் இருக்கக்கூடாதுப்பா.. இந்த மாதிரி குடி எல்லாம் விட்டுடு..  தியாவை உன்னோட பலவீனமா மாத்திக்காதே பலமா மாத்திக்கோ… அவளுக்கு என்னப் பிடிக்குமோ அதை செய்.. ” என சொல்ல அவர் கூறுவதை ஆமோதித்தான்…

” அம்மா அவளுக்கு நிறைய குழந்தைகளை படிக்க வைக்கணும்னு ஆசை.. நானும் அது பண்றேன் மா.. எந்த விதமான மாரல் சப்போர்ட்டும் இல்லாத குழந்தைகளுக்கு எல்லாம் ஒரு ஸ்கூல் கட்டலாம் மா… என் தியாவோட கனவை நான் செயல்படுத்துறேன்” என சொல்ல அவன் கருத்தை அவர் ஆமோதிக்க அவள் தங்கையும் உடன் சேர்ந்து ஆமோதித்தாள்…

அன்று தொடங்கிய அவனது புதிய வாழ்க்கையில்  அன்றாட செயலாக காலையில் எழுந்து செல்லா இறந்த பிறகு அதற்காக சிறிதாகக் கட்டப்பட்ட கல்லறையில் கொஞ்ச நேரம் அமர்ந்து தான் இன்று செய்யப் போகும் வேலைகளை எல்லாம் சொல்லுவான்…. பின்பு தியாவிற்காக கட்டிய  “மந்தியா இல்லம்” ற்கு சென்று பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருவான்… வீட்டிற்கு வந்தப் பிறகு சிறிது நேரம் கதை எழுதுவிட்டு தோன்றும் போழுது எல்லாம் ஓவியம் வரைவான்.. தாய் தங்கையுடன் இரவு உணவை உண்டு முடித்துவிட்டு படுக்கும் முன்பு மீண்டும் செல்லாவின் கல்லறைக்கு சென்று அன்று நடந்தது முழுக்க பகிர்ந்து கொள்வான்… இதே வழக்கத்தைத் தான் அவள் இல்லாமல்  கடந்த வந்த இந்த ஆறு மாதங்களில் வழக்கம் மாறாமல் செய்துக் கொண்டு இருந்தான்..

வழக்கம் போல அன்று எழுந்தவன்  செல்லாவிடம் பேசிவிட்டு உள்ளே வந்தான்.. அவன் சுற்றி முற்றிப் பார்க்க அந்த அறை முழுக்க அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.. என்னவென்று யோசித்த அவன் மூளைக்கு உடனடியாகப் பதில் கிடைத்துவிட ” ஹேப்பி பர்த்டே மாம்” என ஓடிச் சென்று கட்டிக் கொண்டான்.. அவரும் பதிலுக்கு அவனைக் கட்டிக் கொண்டு ” ஹேப்பி பர்த்டே அர்ஜீன் கண்ணா” என்றார்…

போதும் போதும் பாச மழைப் பொழிஞ்சது உங்கள் ரெண்டு பேருக்காகவும் நானே சமைச்சு வெச்சு இருக்கேன் வந்து சாப்பிட்டு எப்படி இருக்குனு  கமென்ட்ஸ் சொல்லுங்க என்று டைனிங் டேபிளில் அமர வைத்து ப்ரியா அவர்களுக்குப் பரிமாறினாள்…

அதில் இரண்டு வாயை எடுத்தவனது நினைவில் இதேப் போல் தன் பிறந்த நாளுக்காக தியா சமையல் செய்தது நினைவு வர தானாய் தன் கண்கள் கண்ணீரைக் கசிந்தது.. அதைக் கண்ட ப்ரியா காரமா எனக் கேட்க இல்லை என்று தலையசைத்தவன் அவள் வருத்தப்படக்கூடாது என்பதற்காக மீதி உணவையும் சாப்பிட்டுவிட்டு எழுந்தான்…

அவன் மனம் ஏதோ அலைப்புறுதலாகவே இருக்க தன் மந்தியை முதன் முதலாக சந்தித்த அந்த பூங்காவிற்கு செல்ல முடிவெடுத்தான்.. அவன் பூங்காவிற்கு உள்ளே நுழையும் போது தாமரையைக் கண்டுவிட கோபமாக அவளருகே வந்தவன் ” ஹே நீ ஸ்கூலுக்கு போறது இல்லையா?.. ஏன் மறுபடி இங்கேயே வேலை செய்ய வந்துட்டே..  ” என கத்த ” ஐயோ அண்ணா நான் ஸ்கூலுக்கு தானா போறேன்… தியா அக்கா தான் மாசா மாசம் பணத்தை அனுப்புறாங்களே.. இன்னைக்கு ஸ்கூல் லீவ் அதான் அப்பாவுக்கு உதவலாமேனு வந்தேன்” என சொல்ல அவன் மனம் நொந்தது..

” தாமரையை எல்லாம் மறக்காம இருக்கா… அப்புறம்  நீ ஏன் தியா என்னை மறந்துப் போன… அட்லீஸ்ட் என் கிட்டே போன் பேசி இருக்கலாம்ல” என தன் மனதினுள் புலம்பியவன் தாமரையிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அவளை முதல் முறையாகக் கண்ட மரத்தின் மீது ஏறி அமர்ந்துக் கொண்டு  கண்களை மூடிக் கொண்டான்….

அன்றிலிருந்து இன்று வரை நடந்தது எல்லாம் கண் முன்னே நிழலாடியது.. இவ்வளவு அன்பா இவ்வளவு காதலா அதுவும் நீ விலகி சென்ற பிறகு தான் இத்தனையும் எனக்குப் புரிய வேண்டுமா என எண்ணிக் கொண்டு இருக்கும் போது ஆள் ஆரவம் கேட்க கண்களைத் திறந்து கீழேப் பார்த்தான்…

முதலில் கண் திறந்து பார்த்தவன் கனவு என்று நினைத்து கண்களைக் கசக்கி மீண்டும் பார்க்க இப்போதும் அதே உருவம் தான் தெரிந்தது.. கண்களை நம்பாமல் கைகளைக் கிள்ளிப் பார்த்தான்.. அதுவும் நடப்பது உண்மை தான் என சொல்லியது.. உடனே மரத்திலிருந்து கீழே குதித்து அவள் முன் நின்றான்…

முதலில் அவன் குதித்ததில் பயந்த தியா பதற பின்பு அது தன்னுடைய கடுவன் தான் என்பது தெரிய இதழ்களில் புன்னகையை ஒட்டிக் கொண்டாள்…

” ஹே மந்தி எப்படி இருக்கடி.. ” என அவன் புன்னகை மாறாத முகத்துடன் கேட்ட படி அவளை மீண்டும் பார்க்கும் போது தான் அவன் கண்களுக்கு  தென்பட்டது அவளது மேடேறிய வயிறு அதைக் கண்டு ஒருக்கணம் அவனது புன்னகை மறைந்து மீண்டும் தென்பட்டது…

” ஓய் தியா காங்கிராட்ஸ் மா.. இது எத்தனாவது மாசம்.. ஹஸ்பென்ட் என்ன பண்றாங்க” என கேட்க அவள் சிறியதாய் புன்னகைத்துவிட்டு நகர்ந்தாள்…

” தியா ப்ளீஸ் மா.. என் கிட்டே பேசு டா.. நீ எப்படி இருக்க??”

” நான் நல்லா இருக்கேன் அர்ஜீன்.. நீ எப்படி இருக்க??.. உன்னோட மூளையில இருக்கிற acc part எப்படி இருக்கு” என கேட்க அவன் மெல்லிதாய் புன்னகைத்தான்… இவள் இன்னொருவனின் மனைவி என்னும் போது என் வலியைச் சொல்லி அவளை குழப்ப வேண்டாம் என அமைதிக் காத்தான்…

” தியா ப்ளீஸ் எனக்காக என் கூட வரீயா.. ப்ளீஸ்” என கேட்க ” அர்ஜீன் நான் எதுக்கு உனக்காக உன் கூட வரணும்.. சாரி எனக்கு இந்த எமோஷனல் டயலாக்ஸ்லாம் பிடிக்காது” என சொல்ல தன் வார்த்தைகளால் தானே அடிப்பட்ட வலியை உணர்ந்தான்..

அவன் முகம் சோர்ந்து சுருங்கிட அதைக் கண்டவளோ ” ஓ.கே பர்த்டே அதுவுமா முகத்தை இப்படி வைக்காதே அர்ஜீன்.. போலாம் வா” என சொல்ல அவன் ஆனந்த அதிர்ச்சி அடைந்தான் அவள் இன்னும் தன் பிறந்த நாளை மறக்கவில்லை என்பதை உணர்ந்து…

அவளை தன் காரில் ஏற்றிக் கொண்டு நேராக மந்தியா இல்லமிற்கு கூட்டிச் சென்றான்.. அங்கே அந்த இல்லத்தின் பெயரைக் கண்டவளின் கண்களோ கண்ணீர் சிந்தியது.. அர்ஜீன் இந்த பேரு என் நியாபகமா வெச்சதா என கேட்க அவன் ஆம் என தலையசைத்து உள்ளே கூட்டிச் சென்றான்.. அங்கே ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் கவனித்துக் கொண்டும் அவர்களுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டுக் கொண்டும் இருந்தனர்… கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு வகுப்புகள் நடந்துக் கொண்டு இருந்தது.. அவர்களுக்கு ஆசிரியர்களாக கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் சில மிருகங்களின் இச்சைக்கு இரையாகிப் போன வெள்ளை மணம் கொண்ட பெண்களும் வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்தனர்..  அது ஒவ்வொன்றையும் அவன் விளக்க அதைக் கேட்ட தியாவோ  விக்கித்துப் போய் நின்றாள்…

தன் கனவை அர்ஜீன் நனவாக்கி இருக்கிறான்… என் கனவு முதற் கொண்டு அவனுக்கு நியாபகம் இருக்கிறது என்றால் என்னையும் அவனுக்கு  நியாபகம் இருந்திருக்கும் தானே.. இந்த பிரிவு ஒரு வேளை அவன் மனதினுள் காதலை இன்னும் அதிகரித்து இருக்குமோ.. என் மேடேறிய வயிற்றைக் கண்டு ஒரு கணம் விக்கித்து நின்று பின்பு தன் முகத்தை சரி செய்தானே.. அப்படி என்றால் அவனுக்கு வலித்து இருக்கும் தானே.. நான் இன்னொருவருக்கு சொந்தமாவதை அப்போது அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை தானே.. எப்போதும் அவன் கண்களுக்குள் இருக்கும் குறும்புத்தனத்தையும் சிரிப்பையும் தேடினாள்…. ஆனால் அந்த வெறுமையான கண்கள் அவளுக்கு அவனின் சோகத்தை தெள்ளந்தெளிவாய்ப் பிரதிபலித்தது… அப்படி என்றால் என் கடுவன் காதலை உணர்ந்து விட்டானா.. ஆனால் இவ்வளவு தாமதமாக உணர்ந்து தொலைத்து இருக்கானே என அவள் அவன் முகத்தைப் பார்த்து மனதுக்குள் பேசிக் கொண்டு இருந்தாள்…

” இதான் தியா உனக்கு காமிக்கனும்னு நினைச்சேன்… நீ புதுசா எந்த குழந்தைக்கு education provide பண்ணனும்னு நினைச்சாலும் நம்ம இல்லத்துக்கு கொண்டு வந்து விட்டுடு ” என சொல்ல சரியென தலையசைத்தவள் நினைவு வந்தவாய் செல்லாவைப் பற்றிக் கேட்டாள்…

ம்ம் செல்லா எப்படி இருக்கானு கேட்க தெரியுது ஆனால் நான் எப்படி இருக்கேனு கேட்குறாளா பாரு என்று மனதுக்குள் சலித்தவன் ” செல்லா இறந்துட்டான் தியா.. வா அவன் கல்லறைக்குப் போய் அவனைப் பார்க்கலாம்” என அவன் சொல்ல ” வாட் செல்லவுக்குக் கல்றையா” என வியந்தாள்…

“ம்ம் ஆமாம்.. வா ” என அவளைக் காருக்குள் ஏற்றிக் கொண்டு வீட்டிற்குக் கூட்டிச் சென்றான்…  அந்த வீட்டைக் கண்டதும் அவனோடு இருந்த அந்த இனிமையானப் பொழுதுகள் நினைவுக்கு வர முதலில் மெலிதாய் புன்னகைத்தவள் இறுதியில் இயலாமையுடன் வெளி வந்ததை நினைத்ததும் அவளது உடல் மீண்டும் விரைத்தது…

நேராக உள்ளே வீட்டிற்குள் அழைத்தவனை நோக்கி வர மாட்டேன் என செய்கை செய்தவள் ” எனக்கு உள்ளே வரலாம் டைம் இல்லை.. வீட்டுல தேடுவாங்க.. செல்லாவோட கல்லறை மட்டும் காட்டு நான் பார்த்துட்டு போயிடுறேன்.. இப்போ நான் என்ன உறவில இங்கே அதிக நேரம் நின்னு பேசுறது” என கேட்க அவன் கண்களில் வலியோடு திரும்பினான்…

அவளை நேராக செல்லாவின் கல்லறைக்கு அழைத்துச் செல்ல அங்கே குட்டியாய் அவ்வளவு நேர்த்தியாய் ஒரு சிமெண்ட் மேடும் அந்த அளவிற்கு ஏற்றாற் போல் குட்டியாய் ஒரு மாலையும் இருந்தது.. கொஞ்சம் மேலே வளைவாய் ஒரு பெயர்ப்பலகை அமைக்கப்பட்டு இருந்தது..

ஒரு சிறிய கரப்பான்பூச்சிக்கு கல்லறையா என வியந்தவளுக்கு பிறகே புரிந்தது..  அதில் எழுதப்பட்ட  மந்தியின் நினைவுச் சின்னம் என்பதைக் கண்டதும்.. நான் விட்டுச் சென்ற கரப்பான் பூச்சி வரை அவ்வளவு காதலித்து இருக்கிறான் என்றால் என்னையும் காதலித்துத் தானே இருக்கின்றான் என கடுவனையே உற்றுப் பார்த்தாள்…

அவள் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் அவன் கீழே குனிய ” இதை நீ எப்போ பண்ண கடுவா” என்றாள்.. எத்தனை மாதங்கள் கழித்துக் கேட்கிறான் அவளது வாயால் கடுவன் என்ற வார்த்தையை.. இதுவரை பொதுப்படையாக அர்ஜீன் என்று அழைத்துக் கொண்டு இருந்தவள் இப்போது என் மந்தியாய் என்னைக் கூப்படுகிறாள்… அதில் அவன் கண்கள் பளபளக்க தன்னை மறந்து பேசத் துவங்கினான்…

” நீ என்னை விட்டுப் போன ஒரு மாசத்திலேயே செல்லா செத்துட்டான் மந்தி..நீ இல்லாத குறையை தீர்த்துக்க நான் எப்பவுமே தினமும்  அவன் கூட தான் பேசிட்டு இருப்பேன்.. நீயும் போனா மாதிரி அவனும் என்னை விட்டுப் போவானு நான் நினைக்கவே இல்லை மந்தி.. அவனுக்காக ஒரு கல்லறை கட்டணும்னு தோணுச்சு அதான் கட்டிட்டேன்.. ஆமாம்  நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிக் கேட்டில்ல மந்தி மூளையில acc part ல வலி வந்துச்சானு.. நான் உன் கிட்டே சொல்லும் போது ஆக்ஸிடென்ட் ஆனா எவ்வளவு வலி வருமோ அதே வலியைத் தான் acc part லவ் ஃபெலியர் அப்போ கொடுக்கும்னு சொன்னேன்.. ஆனால்  என் உடம்பில ஒவ்வொரு எலும்பும் நொறுங்குனா அந்த வலி எப்படி இருக்குமோ அந்த வலியை விட அதிகமா அனுபவிச்சேன்டி.. நீ என்னை விட்டு போனதுக்கு அப்புறம்.. என் இதயத்தை யாரோ பிச்சு எடுத்துட்டு போனா மாதிரி இருந்தது.. என்னாலே முடியாம குடி போதைனு அப்படி அதுக்கு அடிமை ஆகிட்டேன் மந்தி.. அப்புறம் அம்மாவும் என் தங்கச்சியும் வந்து தான் என்னை மாத்தி கொஞ்சம் நார்மலா இருக்க வெச்சாங்க.. அதுக்கு அப்புறம் ஆரம்பிச்சது தான் மந்தியா இல்லம்.. அதுக்கு அப்புறம் தான் என் லைப்ல கொஞ்சமாவது நிம்மதி  கிடைச்சது.. இன்னைக்கு என் பிறந்த நாள் அதுவும் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா…  அதான் நான் உன்னை மீட் பண்ண அந்த இடத்துக்கே வந்தேன் மந்தி.. ஆனால் என் நல்ல நேரம் உன்னைப் பார்த்துட்டேன்.. நீ நல்லா இருக்குறதை பார்த்ததும் எனக்கு இன்னும் நிம்மதியா இருக்கு” என அவன் சொல்லி முடிக்க அவள் குழப்பமாய் இருந்தாள்..

” கடுவா உனக்கு தங்கச்சியா?? இதுவரை நீ சொன்னதே இல்லை.. நான் பார்த்ததே இல்லை.. ” என அவள் கேட்க அவன் நடந்து முடிந்த மீதிக் கதையைப் பற்றி சொல்லிவிட்டு மேலும் தன் மனதிலுள்ள எல்லாவற்றையும் கொட்டினான்……

“என் தங்கச்சி இறப்பை என்னாலே தாங்கவே முடியல மந்தி.. அந்த சம்பவத்துக்கு அப்புறம்  இந்த பாசம்ன்ற வார்த்தை  மேலேயே பயம் வந்துருச்சு.. நான் அதிகமா பாசம் வெச்ச என் அப்பாவும் போயிட்டாரு. அடுத்து என் தங்கச்சி போனா… அப்புறம் அம்மானு இருந்தும் இல்லாத மாதிரி ஒரு உணர்வு.. எங்கே அதிகமா பாசம் வெச்சா அடுத்து இதே மாதிரி வலியை அனுபவிக்கனுமோனு தான் நான் தனியாவே இருந்தேன் மந்தி.. ஆனால் உன்னை முதல் தரம் பார்த்ததும் எனக்கு உன் கூட என் வாழ்க்கையை ஷேர் பண்ணிக்கனும்னு தோணுச்சு… அதான் தயங்காம லிவ் இன் பார்ட்னரா இருக்கியானு கேட்டேன்.. என் மனசு சொல்றதை நான் என்னைக்கும் கேட்டதே இல்லை தியா… ஏன்னா அது என்னை பலவீனம் ஆக்கிடுமோன்ற பயம் தான்.. அன்னைக்கு மால்ல உன்னை சைட் அடிச்சான்ல ஒருத்தன் அவனை அப்போவே துவைச்சு எடுக்கனும்னு தோணுச்சு டி.. எனக்குள்ளே அப்போவே பொசெசிவ்நெஸ் எல்லாம் வந்துருச்சு… உன் கூட நான் மனசால நெருங்கிட்டேன் மந்தி.. இன்ஃபேக்ட் நான் கல்யாணம் பண்ணக் கூடாதுனு எடுத்த முடிவையே மறந்துட்டேன்.. அந்த டைம்ல தான் என்  தங்கச்சி அம்மாவைப் பார்க்க ஆஸ்பிட்டலுக்கு வந்து இருந்தா… அவளைப் பார்த்ததும்  முதலிலே  நான் பிரம்மைனு நினைச்சு தான் எதுவும் யோசிக்கல.. எப்படி இறந்துட்டானு சொன்னவ முன்னாடி  வருவானு தான் நான் அதைப் பத்தி யோசிக்கவே இல்லை… ஆனால் அங்கே பார்த்த  அவளோட உருவம் எனக்குள்ளே இருந்த பழைய அர்ஜீனை மறுபடியும் கொண்டு வந்துருச்சு.. என் மனசுல இருந்த கோபம் , என்னோட முடிவு எல்லாமே நியாபகம் வந்துருச்சு மந்தி.. மறுபடியும் என் மனசுக்குள்ளே போராட்டம் ஆரம்பிச்சுருச்சு… அந்த இயலாமையை தான் உன் மேலே கோபமா காட்டிட்டேன்… அன்னைக்கு நான் கம்ப்யூட்டர் முன்னாடி உக்கார்ந்துட்டு இருக்கும் போது என் தங்கச்சி வளர்ந்தா எப்படி இருப்பானு நான் எடிட் பண்ண போட்டாவைப் பார்த்துட்டு இருந்தேன் மந்தி.. அந்த டைம் நீ வந்து பேசிட்டு இருக்கும் போது நான்  உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன்… அதுக்கு அப்புறம் வந்த நாட்களிலேயும் உன்னை அதிகமா காயப்படுத்தினேன் மந்தி.. ஆனால் நீ எனக்காக உன்னை மாத்திக்கிட்டதை பார்த்த  அப்போ என் காதல் இன்னும் கூடிட்டே தான் போச்சு.. எங்கே நான் என் முடிவுல இருந்து மாறிடுவேனோ தோத்து போயிடுவேனோனு பயம் வந்துருச்சு.. அதான் இன்னும் உன் மேலே அதிகமா கோபத்தைக் காட்டினேன்… நீயும் ரொம்ப பொறுத்திக்கிட்ட மந்தி ஆனால் உன் பொறுமைக்கும்  ஒரு எல்லை இருக்கும் தானே.. அந்த எல்லைக் கடந்ததும் நீ  வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லிட்டு போயிட்ட… ஆனால் நான் அதுக்கு அப்புறம் தான்டி உன் மேலே இருந்த முழுக் காதலை உணர்ந்தேன்… உனக்கு எவ்வளவு வலிச்சு இருக்கும்ல தியா நான் ஒவ்வொரு வாட்டியும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்லும் போது…  இவ்வளவு நாள் நான் பண்ண அந்த  தப்புக்கு தண்டனையா இந்த காதல் தர கொடூர வலியை சுகமா  வாங்கிக்கிட்டேன்…  எனக்கு என் சின்ன வயசிலேயே ஆழ் மனசில பதிஞ்ச விஷயம் ஒன்னே ஒன்னு தான் தியா…  நானும் இதே மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் ஒரு வேளை என் மனைவியோ நானோ கோபப்பட்டு மனஸ்தாபத்துல பிரிஞ்சுட்டா அந்த குழந்தை என்னை மாதிரியோ இல்லை என் தங்கச்சி மாதிரியோ பாசம் கிடைக்காம பாதிக்கப்பட்டுட கூடாதுன்ற எண்ணத்துல தான் கல்யாணம் வேண்டாம்ன்ற முடிவு பண்ணேன்…. ஆனால் என் தியாவும் நானும் ஒன்னா சேர்ந்து இருந்தா இந்த ஜென்மத்துக்கு என்ன ஏழேழு ஜென்மத்துக்கும் எங்களை  பிரிக்க யாரும் வர மாட்டாங்க  எங்க குழந்தைகளுக்கும் இந்த மாதிரி நிலைமை வராதுன்றது  எனக்கு புரிஞ்ச நேரத்துல நீ பிரிஞ்சு போயிட்ட தியா… இந்த புத்தி எனக்கு முன்னாடியே வந்து இருந்தா என் மந்தி இப்போ கடுவனோட மந்தியா இருந்து இருப்பா … ” என்று சொன்னவன் திடீரென உடைந்து அழுதான்.. பின்பு தன்னைத் தானே நிலைப்படுத்திக் கொண்டு ” சாரி மந்தி ஏதோ என் மனசுல இருக்கிறது எல்லாம் வெளியில வருது.. எங்கே கடைசி வரைக்கும் என் காதலை உனக்கு சொல்லாம போயிடுவேனோன்ற பயத்துல கொஞ்சம் அதிகமாவே உளறிட்டேன்….. உன் கடுவா உன்னை உண்மையா லவ் பண்ணேன் சரியா.. சோ ஃப்யூச்சர்ல நீ  ஒரூ தடவைக் கூட கடுவா என்னை பத்தி ஃபீல் பண்ணலாயானு  நினைச்சுடக் கூடாது… இப்போ மனசுல ஒரு நிம்மதி கிடைச்சு இருக்கும் மந்தி.. நீ இத்தனை நாள் யோசிச்சு தீர்வுக் கிடைக்காத கேள்விக்குலாம் விடைக் கிடைச்சு இருக்கும்… சோ எந்த மனஸ்தாபமும் இல்லாம வருத்தமும் இல்லாம நீ போய் உன் லைப்பை கன்டினியூ பண்ணு சரியா??” என கேட்க இம்முறை அவள் உடைந்து அழுதாள்… அவள் அழுவதைப் பார்த்து பதறியவன்

“சாரி மந்தி மா..  நான் கொஞ்சம் எமோஷனல் ஆகி உன்னையும் கொஞ்சம் எமோஷனல்  ஆக்கிட்டேன்.. நீ இந்த டைம்ல இருக்கும் போது பாப்பாவ பத்திரமா பார்த்துக்கணும்  மந்தி..  மைண்ட ரிலாக்ஸா வெச்சு இருக்கணும்… சரி மந்தி டைம் ஆயிடுச்சு.. வா உன்னை வீட்டுக்கு கொண்டு போய் விடுறேன்.. அப்படியே உன் ஹஸ்பெண்டை பார்த்தா மாதிரியும் இருக்கும்” என எழுந்தவன் அமர்ந்து இருந்த அவளுக்கு  கைக்கொடுத்து  எழுப்பி விட முயன்றான்…

ஆனால் அவளோ சட்டென்று அவனது கைகளை விலக்கிவிட்டு அவனது கையை இழுத்து கீழே அமர வைத்தவள் கண்ணத்திலேயே ஒரு அறை விட்டாள்…

” டேய் என்ன நினைச்சுட்டு இருக்க என் புருஷன் வீட்டுக்கு கொண்டு போய் விடுவியா நீ… நான் இப்போ என் புருஷன் வீட்டுல தான் இருக்கேன்… ” என அவள் சொல்ல புரியாமல் ” வாட் ” என்ற அவனது வார்த்தையின் ஒலியே சொன்னது அவன் எவ்வளவு  அதிர்ந்து இருக்கிறான் என்று..

” ஏன் கடுவா தாலி இருந்தா தான் அப்போ என்னை உன் பொண்டாட்டினு ஒத்துப்பியா.. நான் உன்னை என் மனசார புருஷனா நினைச்சுட்டேன் டா”

” ஆனால் கீர்த்தி உனக்கு கல்யாணம்னு சொன்னாலே”

” கல்யாணம்னு தானே சொன்னா?.. ஆனா ஆச்சுனு சொன்னாளா?? நான் தான் கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடியே நிறுத்திட்டேனே கடுவா.. முதலிலே என் அம்மா என் கிட்டே சத்தியம் வாங்கிட்டாங்க.. உன் வயித்துல பிறக்குற குழந்தையை நான் வளர்க்க  ஆசைப்படுறேனு… நானும் அவங்க உடம்பு கண்டிஷன்க்காக ஒத்துக்கிட்டேன் கடுவா.. ஏன்னா எனக்கு சத்தியம் பண்ண அப்பவே தெரியும்… உன் பாப்பா என் வயித்துக்குள்ளே வளர ஆரம்பிச்சுட்டாங்கனு… அதான் நான் உஷாரா வார்த்தையைத் தேர்ந்து எடுத்து சத்தியம் பண்ணேன்… முதலிலே நிச்சயதார்த்துக்கு ஏற்பாடு பண்ணாங்க அது முடிஞ்ச ஒரு வாரத்துலயே கல்யாணத்துக்கு நாள் குறிச்சாங்க… நான் நேரா அம்மா கிட்டே வந்து  நீங்க கேட்டா மாதிரி நான் குழந்தையை பெத்துத் தரேன்  வளர்த்துக்கோங்க இப்போ நான் இன்னொரு கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் இருக்காதுனு நினைக்கிறேன் அப்படினு சொன்னேன்.. முதலிலே அதிர்ச்சி ஆனாங்க.. என் மேலே கோபப்பட்டாங்க.. நான் வீட்டை விட்டு தனியா வந்துட்டேன்.. இந்த வயித்தோட ரோட்ல தண்ணீர்க்குடம் தூக்கிட்டு வரதைப் பார்த்ததும் அம்மா மனசு கொஞ்சமா இளகிடுச்சு.. அப்புறம் ஒரு சிசுவை அழிக்க மனசு வரல அவங்களுக்கு.. என் முடிவுக்கு சம்மதம் சொல்லிட்டாங்க… இதுக்கு மேலே அந்த ஊர்ல இருக்க முடியாதுனு நான் ஜாப் ஆ பெங்களூர்க்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போயிட்டேன்… ஏனோ தெரியல கடுவா… எனக்கு உன் பிள்ளையை உன் சொந்த ஊர்லயே பெத்து எடுக்கணும்னு ஆசை வந்துருச்சு… அதான் மறுபடியும்  சென்னைக்கு நாலு நாள் முன்னாடி  ட்ரான்ஸ்பர் ஆகிட்டு வந்துட்டேன்… இன்னைக்கு உன் பிறந்த நாள்ன்றதாலே உன்னை பார்த்த அந்த பார்க்குக்கு போலாம்னு தோணுச்சு வந்தா சார் கதையோட ஸ்டார்டிங்கல எப்படி என்டரி கொடுத்தீங்களோ அதேப் போல கதையோட ஃபினிஷிங்கலயும் அதே மாதிரி என்ட்ரி தரீங்க.. மரத்துல இருந்து குதிச்சு…  ” என அவள்  சொல்லி சிரிக்க அவனும் அவளோடு சேர்ந்து சிரித்தான்… ஆனால் அவன் மனம் இன்னும் ஆற்றாமையில் தவித்தது…

” உனக்கு தான் கல்யாணம் ஆகலைல…. அப்புறம் ஏன்டி நீ என் கிட்டே வரல.. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு சொல்லி நான் விலகி நின்னு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?”

” எந்த உறவுல டா நான் உன் கிட்டே வர முடியும்.. நீ தான் என்னை கல்யாணம் பண்ண மாட்டேனு சொல்லிட்டியே.. ஆனால் நான் உன்னை புருஷனா நினைச்ச அடுத்த நொடி நீ என் மனசை உடைச்சிட்டே.. அந்த மனசோட உன் கூட இருந்தா கண்டிப்பா என்னோட ஏமாற்றத்தை நான் உன் மேலே கோபமா காட்டி இருப்பேன்.. அதுவே நம்ம உறவை விரிசல் ஆக்கி இருக்கும்.. நம்ம அன்பும் காணாம போய் இருக்கும்.. அதான் நான் வந்துட்டேன் அர்ஜீன்” என்று அவள் கதற ஆரம்பிக்க அவள் முதுகை வருடிக் கொடுத்தான்..

” சாரி மந்தி” என்றவன் அணைத்துக் கொண்டு இருக்கும் போது அவன் மீது மோதிய அவளுடைய மேடேறிய வயிற்றுக்குள் இருக்கும் சிசு தன்னுடையது என்னும் போது அவன் இதயம் புது உணர்வில் தத்தளித்தது…

கீழே குனிந்து அவள் வயிற்றில் தன் தலையை புதைத்தவன் ” சாரி என் பட்டுக்குட்டி அப்பா உன் கூட இவ்வளவு நாள் பேசவே இல்லை…   அதுக்காக அப்பாவை தயவு செஞ்சு  மன்னிச்சிடுங்க.. இனி அப்பா உன் கூடவே இருப்பேன் சரியா” என சொல்ல குழந்தை உள்ளிருந்து எட்டி உதைத்தது…

குழந்தையின் முதல் அசைவை உணர்ந்தவன் கண்களில் தானாய் நீர்க் கோர்த்துக் கொண்டது.. வயிற்றில் ஈரத்தை உணர்ந்தவள் உடனே அவனை மேலே எழுப்பி தன்னோடு அணைத்து இதழைப் பதித்தாள்.. இந்த பத்து மாதப் பிரிவை அந்த ஒற்ற  முத்தத்தில் தீர்த்துக் கொள்ள நினைத்தார்களோ.. அதுவும் அவர்கள் கொண்ட அன்பு போல் முடியாமல் நீண்டு கொண்டே இருந்தது… இருவரும் விலகி மூச்சு வாங்கும் போது நினைவு வந்தவளாக ” கடுவா ஹேப்பி பர்த் டே டா” என சொல்ல

” செல்லம் தேங்க்ஸ்டி..அன்னைக்கு கொடுத்தா மாதிரியே இன்னைக்கும்  பர்த்டே கிப்ட் தருவீயா?”

” சீ கடுவா.. பாப்பா கேட்டுற போறாங்க.. நான் உனக்கு சில பல மாசம் கழிச்சு கிப்ட் தரேன் ஓ.கே வா? ” என கேட்க  அவன் ” ஓ.கே ஓ.கே என உல்லாமாக சொல்லி சிரித்தான்.. இருவருக்கும் இது நாள் வரை இருந்த மன பாரம் நீங்கி மனதுக்குள் அடை மழையாய் இன்பம் வந்து நனைக்கத் தொடங்கியது..

???????

கடுவனின் தோட்டத்திலேயே அழகாய் மணமேடை அமைக்கப்பட மந்தி வீட்டு ஆட்களும் கடுவன் வீட்டு ஆட்களும் அசோக் மற்றும் கீர்த்தி மட்டுமே அந்த கல்யாண வைபவத்தில் இருந்தனர்….

புதுப் பெண் அலங்காரத்தில் எழிலோவியமாய் அவள் அன்ன நடையிட்டு வர அவள் நடந்து வரும் அழகையே மேடையில் அமர்ந்து இருந்தவன் ரசித்துக் கொண்டு இருந்தான்… ” ஐயோ இந்த பெரிய வயிறை வெச்சுக்கிட்டு அழகா கண்ணத்துல வெட்கத்தை பூசிட்டு சிரிச்சே கொல்றாளே” என மனதுக்குள்ளேயே அவளை வர்ணித்துக் கொண்டு இருந்தான்..

இவள் விழியுயர்த்தி அவனைப் பார்க்க அந்த வேஷ்டி சட்டையில் தனக்கே உரித்தான அந்த கண்களின் சிரிப்போடு உதட்டில் முறுவலோடு அமர்ந்து இருந்த அவனைக் கண்டு ஒரு நொடி மயங்கித் தான் போனாள்..

அந்த சிவந்த அருந்ததி தன் அருகில் அமர கம்பீரம் கொண்ட இவன் வென்பனியாய் உருகினான்… ஐயர் சொன்ன மந்திரங்களையும்  சம்பிரதாயங்களையும் அப்படியே இருவரும் செய்தனர்.. கடைசியில் ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என சொல்ல அவன் அவளது கழுத்தில் மங்களநாணை அணிவித்தான்..  என் மந்தி  இப்போது என்னுடைய பாதி என அவன் உள்ளம் நிறைய என் கடுவன் என்னுடயை மீதி பாதி என அவளும் மனம் நிறைந்தாள்… தங்களின் உறவுக்கான அடையாளமாய் கழுத்தில் அணியப்பட்ட அந்த தாலியையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.. இந்த தாலி கடுவனால் தன் கழுத்துக்கு வந்து சேர்ந்துவிடாதா என தவித்த நெஞ்சத்துக்கு நேரே இப்போது அவன் அணுவித்த தாலி உரசிச் செல்ல அவள் கண்களில் கண்ணீர்த்துளி சுகமாய் இமை மீறியது…

அவளை உள்ளே அழைத்துச் சென்ற கடுவன்.. ” ஹே மந்தி இந்த டயர்டா இருக்கும்.. முதலிலே இந்த ஜீசை குடி” எனச் சொல்ல அவள் அப்போதும் தன் மீது இருந்த தாலியையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.. அதைக் கண்டு கொண்ட கடுவனோ நினைவு வந்தவனாய் “ஆமாம் மந்தி இனி இந்த தாலியை கழட்டவேக்கூடாது சரியா” எனச் சொல்ல அவளும் வேகமாய் தலையாட்டினாள்..

” கண்டிப்பா நான் கழட்டவே மாட்டேன் கடுவா.. எத்தனை போராட்டத்துக்கு பிறகு வாங்கின தாலி இதை எப்படி கழட்ட எனக்கு மனசு வரும்”

” அதும் கரெக்ட் தான் மந்தி.. ஆனால் நான் இன்னொரு காரணத்துக்காகவும் சொல்றேன்”

” என்ன காரணம் கடுவா??”

” actually பெண்களுக்கு மார்பு குழியில ஒரு நரம்பு முடிச்சு இருக்கு அது மூளையில இருக்கிற பேசல் ரீஜன் ற பகுதியில தொடர்புடையது.. இது நியாபக சக்தியோட தொடர்புடைய நரம்பு… பெண்களுக்கு மட்டும் இந்த நரம்பு முடிச்சுல  இருந்து இரண்டு பாதை மூளைக்கு போகும்… ஆனால் ஆண்களுக்கு ஓரே ஒரு பாதை தான் போகும்.. அதனாலே தான் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான நியாபக சக்தி இருக்கும்.. இது சில சமயம் அதிகமான குழப்பத்தை உண்டாக்கும்.. சோ இதுக்கு தீர்வா தான் தாலின்ற ஒன்னை கண்டுபிடிச்சாங்க.. தங்கம்ன்ற உலோகத்துக்கு அந்த மருத்துவக் குணம் இருக்கிறது கண்டுபிடிச்சு தங்கத்துல தாலி செஞ்சாங்க.. அது பெண்ணோட மார்பு குழியை உரசும் போது அதிகமான நன்மை தரும்… பட் அந்த தங்கம்  மார்புக்கு குழிக்கு வரணும்னா கரெக்டா மூணு முடிச்சு போட்டா தான் மார்புக் குழிக்கு வரும்னு கணக்கு போட்டாங்க.. சோ அதை அவுக்காத சரியா அதனாலே அவ்வளவு நன்மை இருக்கு” என சொல்ல அதைக் கேட்டு எரிச்சல் அடைந்தவள் கத்தத் தொடங்கினாள்…

“ஐயோ நான் மறுபடியும் ஏமாந்துட்டேன்.. இவன் மறுபடியும் செயின்ஸ் பேசி என்னை சாவடிக்கிறான்.. போ நான் என் அம்மா வீட்டுக்கே போறேன்” என சொன்னவளின் வாயைப் பொத்தி ” ஹேய் செல்லம் சும்மாடி”  என சொல்ல அவள் அப்போதும் சமாதானம் ஆகாமல் எழுந்திருத்துக் கொள்ளும் போது பிரசவ வலி ஏற்பட்டது…  அவள் கண்ணீரைக் கண்டு அவன் அரண்டு போனான்.. அவள் அறைக்கு உள்ளே உடம்பினால் பிரசவ வலி அனுபவித்துக் கொண்டு இருக்க இவனோ அறைக்கு வெளியில் மனதினால் பிரசவ வலியை அனுபவித்துக் கொண்டு இருந்தான்…

சிறிது நேரத்திற்கு பிறகு குழந்தையின் அழுகுரல் கேட்க இவன் ஓடிச் சென்று சோர்ந்துப் போய் இருக்கும் தன் மனைவியைப் பார்த்தான்.. அவளது நெற்றியில் முத்தமிட்டு இவன் குழந்தையைத் தூக்கிக் காட்ட அவள் மனம் நிம்மதியில் புன்னகை சிந்தியது….

??????

டேய் இங்கே பாரு பாட்டி சொல்றதைக் கேளு.. ஆம்பளப் புள்ளைனா பொறுப்பா இருக்கணும் சரியா.. பொண்ணுங்கள தப்பானை பார்வையில பார்க்கக்கூடாது.. உனக்குனு ஒரு  கற்பு இருக்கு அதை நீ தான் ஒழுங்காப் பார்த்துக்கணும்.. நீ நல்லா பிள்ளையா எந்த பொண்ணுக்கும் தொந்தரவு கொடுக்காம வளர்ந்து நம்ம குடும்ப கௌரவத்தை காப்பத்தணும் சரியா எனச் சொல்ல ஐந்து வயது நிரம்பிய விமல் பொறுப்பாய் தலையாட்டிவிட்டு பசிக்குது பாட்டி அடுத்த வாயை ஊட்டிட்டு நெக்ஸ்ட் பேசு என சொல்ல அவரும் ஊட்டிவிட்டு மீண்டும் தன் பேரனுக்கு அறிவுரைகளை சொல்ல ஆரம்பித்தார்…

இங்கோ தியாவின் அப்பா ரேடியாவில் வால்யூமை அதிகமாக வைத்துக் கொண்டு ஹைபிச்சில் கத்தி கொண்டு இருந்தார்.. சாரி பாடி கொண்டு இருந்தார்…

கடுவனின் அம்மாவோ கல்யாணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்று இருந்த  தன் மகள் ப்ரியாவை காண சென்றுவிட்டார்…

அமைதியான சூழலிலேயே கதை எழுதும் கடுவன் இங்கே போடப்பட்டு இரைச்சலில் கதை எழுதுவதை பாதியில் நிப்பாட்டிவிட்டு் வெளியே வந்து நேராகச் சென்று தியாவின் முன்பு நின்றான்.. ” ஹே முடியலடி என்னால.. ப்ளீஸ் பஞ்சு எங்கே  இருக்குனு சொல்லு.. சே உன் கூட லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருந்ததுக்கு பதிலா  உன் ஃபேமிலியோட ஒன்னாவே தங்கி ரிலேஷன்ஷிப் வெச்சு இருந்து இருக்கலாம்.. அப்போவே இந்த கொடுமைலாம் இந்த அப்பாவி இளைஞனுக்கு நடக்கும்னு தெரிஞ்சு நான் முன்னாடியே ஓடிப் போய் இருந்து இருப்பேன்.. முடியல டி.. ஷப்பா… “

” என்னடா கொழுப்பு ஏறிப் போச்சோ” என ஜல்லிக் கரண்டி வெச்சு மிரட்ட ” அவன் சும்மா காமெடிக்குனு ” சொல்லி ஜகா வாங்கினான்..

” ஹே ஆமாம்டி விமல்க்கு கற்புனா என்னனுக் கூட புரியாது.. இந்த வயசிலேயே சொல்லித் தராங்க”

” அது அப்படித் தான் கடுவா.. சின்ன வயசுல அ ஆ இ ஈ க்கு அர்த்தம் தெரியாது.. ஆனால் ஒரு தரம் படிச்சா எப்படி கடைசியில சாகுற வரைக்கும் இருக்கு.. அதே மாதிரி தான் இதுவும்.. இப்பவே சொல்லிக் குடுத்தா மைண்ட்ல பதிஞ்சுரும் அதான்…  அக்ஷ்வலி அம்மா பெண் குழந்தையை வளர்க்கணும்னு தான் ஆசைப்பட்டாங்க சுதந்திரமா கட்டுப்பாடு இல்லாம கட்டுக்கோப்பா வளர்க்கணும்னு..” என அவள் சொல்ல அவளை அப்படியே கைவளைவில் அணைத்துக் கொண்டு தன் அறைக்கு தள்ளிக் கொண்டு வந்தான்…

” டேய் இப்போ எதுக்குடா ரூமுக்கு கூட்டிட்டு  வந்துட்டு கதவைச் சாத்துற”

” நீ தானே டி…. உன்  அம்மாவுக்கு பெண் குழந்தை பெத்துத் தர முடியலேனு வருத்தப்பட்ட.. அந்த குறையைத் தீர்க்க தான்”

” டேய் வேணாம் டா” என அவள் பின்னே செல்ல ” எனக்கு வேணும்” என அவளை முழுமையாக எடுத்துக் கொண்டான்…

இருவரும் சோர்ந்து கிடக்க தியா அவன் மார்பில் தலை வைத்தபடி ” கடுவா எப்படி டா உன்னால மட்டும் இப்படி இருக்க முடியுது.. என்னை கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி காதலிச்சியோ கல்யாணத்துக்கு அப்புறமும் அதே மாதிரி சில சமயம் அதை விட அதிகமா காதலிக்கிற… நீ என்னை எந்த விஷயத்திலேயும் கன்ட்ரோல் பண்றது  இல்லை.. என் சுதந்திரத்தை எனக்கே கொடுத்துட்ட… அதிகமா அன்பு வைக்கிறேன்ற பேருல சின்ன சின்ன விஷயத்துக்குலாம் எதிர்பார்த்து தேவையே இல்லாம கோபப்பட்டு அப்புறம்  நான் விளக்கம் கொடுத்து உன் கோபத்தைப் போக வைக்கணும் அப்படின்ற மாதிரி சீன் எதுவும் இதுவரைக்கும் நம்ம வாழ்க்கையிலே நடந்தது இல்லை… எப்படி டா என் மேலே இவ்வளவு நம்பிக்கை வெச்சு இருக்க.. அதே சமயத்துல கம்மியா நீ அன்பு காட்டுறேனும் நான் ஒரு நாளும் ஃபீல் பண்ணதும் இல்லை…. எப்படி டா இவ்வளவு பேலன்ஸ்டா என் மேலே அன்பு செலுத்த முடியுது.. ??”

” மந்தி என் கிட்டே இதுக்கு ஒரே பதில் தான்டி இருக்கு… நான் உன்னை காதலிக்கிறேன்…. நீ காயப்படக்கூடாதுனு நினைக்கிறேன்… உன் அன்பை பரிசோதனைப் பண்ணி நான் எதுவும் பண்ண போறது இல்லைடா.. ஏன்னா எனக்கு உன் மேலே அளவுக் கடந்த நம்பிக்கை இருக்கு…”

” ஓ.கே கடுவா.. லவ் ஃபார்முலா சொல்லு”

” ஹே உனக்கு மனசாட்சி இல்லையாடி இதே கேள்வியை தினமும் கேட்பீயா??”

” நீ மட்டும் என்னை எத்தனை வாட்டி சையின்ஸ் பேசிக் கொன்னு இருக்கா.. ஒழுங்க லவ் ஃபார்முலா என்னன்னு சொல்லு டா”

” ம் டி.. வேற வழி சொல்றேன்.. சொல்லித் தொலையுறேன்… லவ்வோட பார்முலா என்னன்னா அன்பு + எதிர்பார்ப்பின்மை அப்புறம் கொஞ்சுண்டு காமம்” என அவன் சொல்ல

” அப்போ முன்னாடி ஏதோ ஜிலேபியை பிச்சுப் போட்டா மாதிரி ஏபிசிடியை கலந்து அடிச்சு ஏதோ சொன்னியே அதுக்கு பேரு என்ன”

” அது ஏதோ ஒரு முட்டாள் பையன் சொன்ன லூசுத்தனமான ஃபார்முலா மா… நான் இப்போ சொன்னேன்ல அதான் காதலுக்கான உண்மையான ஃபார்முலா” என்று சொல்லிட  “அது” என்று கெத்தாக அஜித் ஸ்டைலில் சொன்னாள்…

” சரி தியா மா.. நாளைக்கு ஏதோ ப்ரோஜெக்ட்டை முடிக்கணும்னு சொன்னல டா.. நீ போய் அதை முடி நான் மீதி இருக்கிற வேலையைப் பார்த்துக்கிறேன் ” என்று சொல்ல நன்றியாய் கணவனைப் பார்த்து முறுவலித்தாள்…

இந்த புரிதலும் இந்த அன்பும் போதும் இறுதி வரை  வாழ்க்கையில் அவர்கள் இணைந்து வாழ்வதற்கு..

                   —— முற்றும் ——-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!