இணைந்து வாழ்வோம்(லிவ் இன்)

images_(5)_(4)-b8eed23f

இணைந்து வாழ்வோம்(லிவ் இன்)

முன்னாடி எனக்கு  இருந்த அதே கண்கள் தான் இப்போதும் இருக்கிறது.. ஆனால் அப்போது அந்த கண்களால் ரசிக்கப்படாத இந்த கடுவன் இப்போது அதிகமாய் ரசிக்கப்படுகிறானே எதனால்?..

அவன் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்தால் இவள் கட்டிலில் உட்கார்ந்து அங்கே ரசித்து டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் அவனை இவள் ரசித்து பார்ப்பாள்…

புதிதாய் அவன் கண்களைப் பார்க்கும் போதெல்லாம் வெட்கம் வேறு சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஆக்கிரமித்து விடுகிறது..

முன்பு இயல்பாய் இருந்த தீண்டல் எல்லாம் இப்போது ஒரு வித சிலிர்ப்பை உள்ளுக்குள் செலுத்துகிறது… அதுவும் எப்படிப்பட்ட கோபமான மனநிலையில் இருந்தாலும் கடுவன் என்ற ஒரு பெயர் கேட்டால் ஏதோ ஒரு ஆனந்த பரபரப்பு…

வீட்டிற்குள் நுழையும் போது அவன் இல்லையென்றால் வெறுமை தோன்றுவதும் அவன் இருந்தால் கண்ணங்களில் செழுமை தோன்றுவதும் என்ன இது??

எங்கோ உறங்கிக் கொண்டு இருந்த உணர்வுகளை எல்லாம் அவன் தட்டி எழுப்பிவிட்டு இப்போது என்னை உறங்கவிடாமல் செய்து விட்டானே…

என்னை என்ன செய்தான் இவன்… ஐயோ லோக்கல் தமிழ் பேசும் வாயில் இப்படி செந்தமிழ் கொட்டுகிறதே கவிதை மாதிரி.. என்னை ஏன் கடுவா இப்படி மாத்திட்ட..

இந்த வைரமுத்து…  நா முத்துக்குமார்.. கார்கி… தாமரை எல்லோரும் சொன்னது எல்லாமே உண்மை தானா??..

காதல் வந்தா இப்படி தான் இருக்குமா.. கடுவா அப்போ நான் உன்னை லவ் பண்றானா?? ஆமாம் இது என்ன ஒரு கேள்வி லவ் தான்டி பண்ற என மனம் சொல்ல இதழ்களில் புன்னகையை தழுவவிட்டு மீண்டும் தன் மனதுக்கு நெருங்கியவனைப் பார்வையாலயே விழுங்கினாள்…

அவள் பார்வை வட்டத்துக்குள் தன் பிம்பம் சிக்கிக் கிடப்பதை உணர்ந்த அர்ஜீன்.. ” ஹே என்னடி என்னை இப்படி வெச்ச கண்ணு வாங்காம பார்க்குற… புதுசா இப்படி சைட்லாம் வேற  அடிக்கிறே.. மேடம்க்கு என்ன ஆச்சு” என தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த தியாவை அவன் கேட்க அவள் உதடுகள் பிரிந்து பதில் சொல்லவில்லை…

“ஹே என்னடி என்ன ஆச்சு உனக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா ” என அவன் கழுத்தை தொட்டுப் பார்க்க அவன் ஸ்பரிசம் கொடுத்த உணர்ச்சியில் அதுவரை பிரம்மை பிடித்து கிடந்த செல்கள் உயிர்பெற்றன… அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் சட்டென அவள் தலையை கீழே குனிந்து கொண்டாள்.. அவளுக்கே புரிவதில்லை இப்போது எல்லாம் ஏன் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமென கண்கள் சொல்கிறது என்று..

” ஹே அம்மு என்னடி என்ன ஆச்சு.. காய்ச்சலும் அடிக்கல.. அப்புறம் ஏன் இப்படி இருக்க  “என அவன் கைகள் மெதுவாக அவள் கண்ணத்தை தொட முகம் நாணச் சிவப்பை பூசிக் கொண்டது..

” ப்ளீஸ் அர்ஜீன் நீ இப்படி இயல்பா என்னை தொடும் போது எனக்குள்ளே வேற ஏதோ உணர்வு வருது” என அவள் சொல்ல ” அப்போ மேடம்க்கு இன்னும் அந்த கில்ட் ஃபீல் போலயா?.. சரி ட்ரைனிங் கொடுத்துடுவோம்னு” அவன் அவளை இழுத்து மடியில் உட்கார வைக்க அவள் இன்னும் அதிகமாக நெளிந்தாள்..

“ஹே என்னடி ஆச்சு உனக்கு.. ஏன் இப்படி நெளியுற.. என் தொடுதல்ல அப்போ நீ பாதுகாப்பை உணரலயா?” என அவன் கேட்க அவள் இடம் வலமாய் தலையசைத்தாள்..

அடுத்த நொடியே அவளை கீழே இறக்கிவிட்டவன் ” சாரி தியா.. நீ என்னை தப்பா நினைக்குற அளவுக்கு நான் எங்கே நடந்துக்கிட்டேனு எனக்கு தெரியல.. பட் அப்படி நடந்து இருந்தா ஐ யம் சாரி.. ” என அவன் அடிப்பட்ட குரலில் சொன்னான்..

” டேய் லூசு உன் தொடுதல்ல தப்பு இல்லைடா.. ஆனால் என் உணர்தல்லா தான் ஒரு மாற்றம்.. முன்னாடி உன்னை ப்ரெண்டா நினைச்சேன்.. ஆனால் இப்போ உன்னை காதலனா நினைக்க தோணுது.. அதான் இப்படி நெளியுறேன்.. வெட்கப்படுறேன்.. இப்போ சரியா புரியுதா டியூப் லைட்..” என அவள் சொல்லிவிட்டு கீழே குனிந்துக் கொள்ள அவன்  முகத்தை நிமிர்த்தி நிஜமா என கண்களாலேயே கேட்க ” ஐ லவ் யூ டா” என்று சொல்லிவிட்டு அவன் மார்புக்குள்ளேயே புதைந்துக் கொண்டாள்..

பல நாள் காத்திருப்பிற்கு பிறகு கிடைத்த தன் பொக்கிஷத்தை கைகளில் பத்திரப்படுத்திக் கொண்டான்… ” ஹே என்னடா பண்ற.. இறக்கி விடு என்னை”

ஷீ என அவள் உதடுகளில் கை வைத்து பேச்சை தடை செய்தவன்  நேராக அவளை தூக்கிக் கொண்டு இது நாள் வரை  திறக்கப்படாத ஒரு அறைக்கு கூட்டிச் சென்றான்..

அவன் அந்த அறையைத் திறக்க அந்த அறை முழுக்கவே  வண்ணக் காகிதங்களால் நிரப்பபட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது…

நேர் எதிர் பக்க சுவற்றில் ” ஐ லவ் யூ மந்தி ” என எழுதப்பட்டு கீழே ” hav a beautiful love journey கடுவன் – மந்தி ” என எழுதப்பட்டு இருந்தது.. அவள் விழி விரித்து நோக்க ” ஐ லவ் யூ மந்தி மா”என சொன்னவன் அடுத்த நொடியே அவளது இதழை சிறை செய்தான்.. ஒரு ஆழ்ந்த இதழ் இணைப்பிற்கு பிறகு அவன் நெஞ்சின் அரவணைப்புக்கு வந்தாள் தியா..

” இதெல்லாம் எப்போ பண்ண கடுவா?”

” அதுவா நாம இங்கே வந்த ரெண்டாவது நாளே பண்ணிட்டேன்.. நீ தான் அட்லீஸ்ட் ப்ரோபோஸ் ஆவது பண்ணி இருக்கலாமேனு ஆசையா கேட்ட.. சரி சரி முறைக்காத ஆசையா கேட்கல ஒரு வார்த்தையா  கேட்ட.. அதான் முன்னாடியே ரெடி பண்ணிட்டேன்.. ஆனால் நான் ப்ரோபோஸ் பண்ணும் போது நீயும் லவ் உணர்ந்து இருக்கணும்னு நினைச்சேன்.. அது நாலு மாசம் கழிச்சு நடந்துருச்சு.. என் ஏஞ்சலை இங்கே கூட்டிட்டு வந்துட்டு ப்ரோபோஸ் பண்ணிட்டேன்.. அவளும் ஒத்துக்கிட்டா” என சந்தோஷ ஆரவாரத்தில் அவளைத் தூக்கி சுற்றினான்..

” ஐயோ தலை சுத்துது டா.. ஆமாம் எப்படி இவ்வளவு கான்ஃபிடன்ஸ்.. நான் லவ் பண்ணலனா என்ன பண்ணி இருப்ப”

” ஓய் இந்த க்ரேட் அர்ஜீனை யாராவது வேணாம்னு சொல்லுவாங்களா?”

” ம் நான் சொல்லுவேன்”

” ஹே என்ன டி” என அவன் முகம் சோகமாகி விட

” ஆமாம் உண்மையா தான் சொல்றேன்… நான் அர்ஜீனை லவ் பண்ணல.. என் கடுவனை தான் லவ் பண்றேன்” என கண்ணடித்தாள்…

” மவளே உன்னை என்ன பண்றேன் பாரு”

” என்ன பண்ணுவ கடூ” என சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் இதழ் சிறை செய்யப்பட்டது…

” சீ போடா.. ” என இவள் வெட்கப்பட்டு விலக ” ஹே என்னடி உனக்கு வெட்கம்லாம் வருமா?”

” வெட்கம் வரும்.. அது கூடவே சேர்ந்து பசியும் வரும் கடுவா..  எனக்கு பசிக்கிது.. தோசை சுட்டு தரியா.. நாளைக்கு ஆபிஸ்க்கு சீக்கிரமா போணும்” என சொல்ல வேகமாய் சமையலறைக்கு சென்றவன் சமைத்து கொண்டு வந்தான்…

அவள் சாப்பிட கையைக் கொண்டு போக இவன் அதைத் தடுத்தான்.. ” என்னடா.. பசிக்கிது.. கையை விடுறா”

“அடச்சீ இரு… ரொமன்டிக்கா கூட எதுவும் பண்ண விட்றாத.. ஊட்டி விட வந்தேன் டி”

” ஓ அப்படிங்களா?.. யாரும் அந்த எமோஷன்ஸ்லாம் பிடிக்காதுனு சொன்னாங்க.. ” என இவள் அவன் முகத்தை கேலியாய் உற்றுப் பார்க்க ” ஹே போடி நீயே கொட்டிக்க.. நான் போறேன்” என கோபமாய் எழுந்துக் கொண்டவனைக் கைப்பற்றி உட்கார வைத்தவள் அவனுக்கு ஊட்டிவிட இவனும் ஆசையாய் எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டான்… இருவரது வயிறும் நிரம்பிவிட இனி தொடங்கப் போகும் தங்கள் காதல் நாட்களை எண்ணி இரு கண்களும் கனவுகளை சுமந்துக் கொண்டு அவரவர் அறையில் படுக்க சென்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!