இராவணனே இராமனாய்! – அத்தியாயம் 02

254606228_4809727112372023_87932805690980889_n

இராவணனே இராமனாய்! – அத்தியாயம் 02

அத்தியாயம் 02 

முன் தினம் முழுவதும் ஊரைவிட்டுத் தள்ளி தனது தனிமைக்கென கட்டியிருந்த பங்களாவில் தங்கியிருந்துவிட்டு வந்த தனது பேரனை கீழ்க்கண்ணால் நோக்கியபடியே உணவருந்திக்கொண்டு இருந்தார் ஜனார்த்தனம்.

ஜனார்த்தனத்தின் வியாபார வாரிசு என செல்லமாக அழைக்கப்படுபவன் விஷ்வஜித். தாயினதும் தந்தையின் இறுதிச் சடங்கில் தம்பி மற்றும் பத்ராவுடன் வெறித்தபார்வையுடன் அவனை பார்த்த அந்த நாளை எண்ணினாலும் ஏதோ ஒரு சிலிர்ப்பு ஓடி மறையும் அவருக்குள் 

அவன் கண்களில் இருந்த வெறி! வெறுப்பு! குரோதம்! ஏதோ ஒன்று அவரை அவனிடம் இருந்து சற்று தள்ளியே நிற்கவைத்தது. வெறித்தனமாகப் படித்தான். மேல்ப்படிப்பை வெளிநாட்டில் முடித்தான். ஜனார்த்தனமின் முடங்கியிருந்த சில வியாபாரங்களை எழுப்பி விட்டான். தொட்டவை அனைத்தையும் ஜெயமாக்கினான் 

அவனைத்தட்டிக்கேட்க யாரும் இல்லை தான்! ஆனால் மது, மாது என்று கெட்டபழக்கங்களும் இல்லாமல் வளர்ந்தான். அவ்வப்போது புகைப்பதைத் தவிர! அவனுக்கு என்ன தேவை என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். மனம்விட்டு அவனிடம் யாரும் எளிதில் பேசிவிட முடியாது. விஷ்வாவின் மனதில் உள்ளது பத்ராவுக்கு தெரியும் என்பது ஜனார்த்தனமிற்கு தெரியும். விஷ்வாவிடம் கூட ஒரு சொல்லைப் பெற்று விடலாம். பத்ராவிடம் விஷ்வாவிற்கு எதிராக ஒரு பார்வையைப் பெற்று விடவே நாக்குத் தள்ளி விடும் 

ஹாலின் சோபாவில் காலின் மேல் கால்களைப்போட்டவாறு அமர்ந்து இறுக்கமான முகத்துடன் காலைப்பத்திரிகையை புரட்டிக்கொண்டிருந்த கண்களில் அருணகிரி இல்லத்தைப் புனரமைக்க கட்டிடநிர்மாண நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது பட்டது. கண்களில் செவ்வரி தோன்ற தாடையை பற்களைக் கடித்து இறுக்கிய விஷ்வா அருகில் இருந்த பத்ராவிடம் அவ்விளம்பரத்தைக் காட்டிகெட் திஸ் பத்ராஎன்றான் 

பாஸ்! பட் இது ஒரு சின்ன கன்ட்ராக்ட்தயக்கமாக இழுக்கவும் 

இது எனக்குக்கிடைச்சு இருக்கிற சின்ன மீன் தான் பத்ரா. சின்ன மீனைப்போட்டுத்தானே அந்தத் திமிங்கலத்தைப் பிடிக்க வேண்டி இருக்கு”  

புரியுது பாஸ்என்றவனைப்பார்த்து அழுத்தமாகத் தலை அசைத்தவன்  “அருணகிரி!! வந்துட்டே இருக்கேன்என்று கூறி விகாரமாக சிரித்துக்கொண்டான். 

அண்ணா!” என்றவாறே தனது அருகில் அமர்ந்த அஷ்வஜித்தைக் கண்டவுடம் முகம் கனிந்து போனது விஷ்வாவிற்கும் பத்ராவிற்கும். அதை எப்பொழுதும் போல ஆச்சர்யமாக நோக்கினார் ஜனார்த்தனம். அஷ்வஜித் தான் இந்த வீட்டின் செல்லப்பிள்ளை. அவரது செல்லப்பேரன். அவனது குறும்பு சிரிப்பு இல்லாவிடின் விஷ்வஜித்தின் முறைப்பையும் விறைப்பையும் மட்டுமே வீடு தத்து எடுத்து இருக்கும் 

அருகில் அமர்ந்த தம்பியின் தோளில் கைபோட்ட விஷ்வாவா அஷ்வஜித்! எங்க ஆளையே காணோம்?” என்று கேட்க  

அடப்பாவி அண்ணா! நீ தான் நேற்று காணாம போன!! நான் இல்லை. இப்போ ஏதோ நான் காணாம போனது போல சீன் வேற! உனக்காக நேற்று ஃபுல்லா ஆபிஸ்ல இருந்தேன் தெரியுமா?” என்று செல்லமாக சலித்துக்கொண்ட எட்டு வயது இளையவனை  இலேசாக அணைத்துக்கொண்ட விஷ்வா 

அது தான் நான் வந்துட்டேனே! இனி நான் பார்த்துக்கிறேன்என்ற உடன்சூப்பர் ணாஎன்று மகிழ்ந்தவன்அப்போ நான் இன்றைக்கு கார்த்திக்கோட சின்ன ட்ரிப் போய்ட்டு வரவா?” என்று ஆசையாகக் கேட்டான். 

அவனுக்கு சம்மதமாக தலை அசைந்தாலும் பத்ராவை நோக்கி அஷ்வஜித்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விழி அசைக்கவும் பத்ராவும் தலை அசைத்து சம்மதித்தான் 

இவனுக செய்றதைப்பார்க்கிறப்போ வர வர ஏதோ கொள்ளைக்கூட்டத்துக்கு நடுவுல இருக்கிற மாதிரியே இருக்குஎன்று சலித்தபடி கைகளைத் துடைத்தவாறு அஷ்வஜித்தின் அருகில் வந்து அமர்ந்த ஜனார்த்தனம் 

என்ன அஷ்வா! எங்க போற?”  

சும்மா ஒரு ரவுன்ட் தான் தாத்தாஎன்றவன் அவர்  புறம் சற்று சரிந்துஆமா! என்னோட அண்ணாவை காலையில இருந்து சைட் அடிச்சிட்டு இருந்தீங்களே என்ன விஷயம்என்று ஹஸ்க்கியாக கேட்கவும் பக்கென்று இருந்தது அவருக்கு 

சும்மா இருடா நீ வேற! சைட் அடிக்கிற மாதிரியாடா அவன் முகத்தை வைச்சு இருக்கான்?” 

ஏன்? ஏன்? என் அண்ணா முறைப்பா இருந்தாலும் சும்மா கெத்து தெரியுமா?” 

ம்க்கும்ம். பதினைஞ்சு வருசமா அவனோட ஒழுங்கா கதைக்கக் கூட முடியல. இதுல இது வேற. போடா படவா!”  

ஹாஹா!! அய்யோ தாத்தா. நல்ல வேளை உங்களுக்கு பிள்ளைங்க யாரும் இல்லை. இருந்து இருந்தா அவங்க கூடவும் பேச முப்பது நாற்பது வருசமா ட்ரை பண்ணிட்டு தான் இருந்து இருப்பீங்க போலஎன்றவுடன் விரக்தியாக சிரித்தவரின் வேதனை அறிந்த விஷ்வஜித்  

அஷ்வஜித்!” என்று அதட்டலாக அழைக்கவும்  

அய்யையோ!! நான் ஒன்றும் பேசலணா. மௌனவிரதம் நானுஎன்று கத்தியபடி ஓடிச்சென்றவனைக் கண்டு மூவரின் இதழிலும் புன்னகை. 

************ 

சார்! நாங்க அமௌன்ட் ட்ரான்ஸ்ஃபர் பண்ணி பத்துநாள் ஆகிடுச்சு. இன்னும் எந்தப்பதிலும் இல்லை என்று கால் பண்ணி கேட்டால் பணம் வரல என்று சொல்றாங்கபல வருடங்களாக பிரகாசத்தின் தொழில் வட்டத்தில் இருக்கும் நம்பிக்கைக்கு உரியவர்கள் பிழைத்துப்போனது எப்படி என்று தெரியவில்லை அவருக்கு. அனுப்பிய அனைத்துமே கறுப்புப்பணம் 

அதனால் பொலிஸிடமும் செல்ல இயலாது. தெரிந்த பொலிஸ் அதிகாரிகள் இருக்கின்றனர் தான். ஆனால் அவர்களிடம் போனால் பணம் தொலைந்து போன விடயம் சில பெரிய தலைகளுக்கு தெரிய வந்துவிடும். பின்னர் அவர்களிற்கு பினாமியாக இருக்கும் இவருக்கே அது ஆபத்தாக முடியலாம். அந்தக் கறுப்புப்பணத்தில் இவரது பங்குகள் மட்டும் அல்லவே! 

பல மில்லியன் டாலர்கள்! என்ன செய்வது என்று தவித்து நின்றவரைப் பார்த்த அவரது செயலாளரிற்கும் பாவமாக இருந்தது போலும்! எங்கே பிழைத்தது என்று செயலாளரிற்கும் தெரியவில்லை. ஆன்லைன் ட்ரான்ஸ்ஃபர் தான். ஒரு இல்லீகல் முறையில் தான் பரிமாற்றம் வங்கி அதிகாரிகளைக் கொண்டு நடந்து கொண்டு இருந்தது. உடனே கேட்டு இருந்தால் வங்கியின் மூலம் ஏதாவது செய்து இருக்கலாம். பத்து நாட்கள் கழித்துக் கேட்டால் அவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் சரியான அக்கவுன்ட்டிற்கு தான் சென்றதாகக் கூறுகின்றனர். தலை சுற்றிப் போனது.   

தலையில் கைகளிரண்டையும் வைத்து முழங்கைகளை மேஜையில் ஊன்றியவாறு அமர்ந்து இருந்த பிரகாசம் கைபேசி அழைக்கவும் நிமிர்ந்து நோக்கினார். ஏதோ புதிய எண்ணில் இருந்து அழைப்பு வரவும் புருவம் சுருக்கியவாறு யோசனையுடனேயே அழைப்பை ஏற்றார்.   

ஹலோ 

என்ன பிரகாசம் குரல் பிசிறடிக்குது?” 

ஹலோ யா..யாரு..யாரு பேசுறது?” 

ஹா..ஹா..ச்சூ ச்சூ தடுமாறுதே பிரகாசம்! என்ன பணத்தைக் காணாம முழிச்சுட்டு இருக்கியா?” 

டேய்!”  

உஷ்ஷ்! கத்தாத பிரகாசம். நான் யாரு? என்று யோசிக்க யோசிக்க நிறைய பேரோட முகம் மனசில ஓடுதா? அதுல நான் யாருமே இல்லை. ஏன் என் பெயர் கூட உனக்குத் தெரியாது. பட் உன்னோட பர்ஸனல் நம்பர் எனக்கு எப்படி வந்திச்சு பிரகாசம்? உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு. அதுனால ஒன்று சொல்றேன் கேளு!! உன்னை சுத்தி இருக்கிறவங்க தான் எனக்கு உதவி பண்ணதே!” 

என்..என்ன சொல்ற?” 

உனக்கு நெருக்கமான உறவு எனக்கு உதவி பண்ணிக்கிட்டு இருக்கு. உனக்கு ஒரு ஹின்ட் தந்து இருக்கேன்! இனி நீயே கண்டு பிடி பிரகாசம். இல்லன்னு வை இதோட நிறுத்திட மாட்டேன்”  

ஹே..ஹேய்!!” அழைப்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் வெறிபிடித்தவரைப்போல கத்திக்கொண்டு இருந்தவரை விநோதமாகப் பார்த்துக்கொண்டு இருந்த பிரகாசத்தின் காரியதரிசி பயத்தில் ஓரடி தள்ளி நின்றுகொண்டார் 

பிரகாசத்திடம் பேசிவிட்டு சிம்மைக் கழற்றி இரண்டாக்கி வெளியில் எறிந்துவிட்டு கார்க்கண்ணாடியை ஏற்றிவிட்ட விஷ்வஜித்தின் உதடுகள்விடமாட்டேன்டா உங்க யாரையும்என்று முணுமுணுக்க முகத்தில் ஒரு சிரிப்பு ஒட்டிக்கொண்டது. 

***** 

என்னம்மா ஏதோ ஒரு யோசனையோடவே இருக்கிற? அப்பாவும் ஏதோ பிரச்சனையில இருக்கிறமாதிரி இருக்கு!திரையில் ஓடும் படத்தில் கவனமில்லாமல் இருந்த தாயைக் கேள்வியாகப் பார்த்தவாறே கோவிலுக்கு செல்லவென்று தயாராக வந்தாள் மிருணாளினி. 

ஹான்! என்ன மிரு சொல்ற? நா..நான் என்ன மாதிரி இருக்கேன்? அது..அதுலாம் எதுவும் இல்லைதாயின் தடுமாற்றமே ஏதோ இருப்பதை அறிவிக்க தாயின் அருகில் அவரது கைகளைப் பற்றிய படி அமர்ந்தவள்  

அம்மா! இப்படியே எல்லாப் பிரச்சனைகளையும் உனக்குள்ளேயே வைச்சிட்டு இருந்தா உன்னோட ஹெல்த்துக்கு தானேமா பிரச்சனை? எனக்கு என்னமோ தப்பாவே படுது. என்ன என்று தான் தெரியலகுழப்பமாக புருவத்தை நீவிக்கொண்டவளின் முகத்தைப் பற்றி தன்னை நோக்கி திருப்பிய மாதவி  

ஒருநாளில சொல்ல முடியுற விஷயம் இல்லை மிரு எனக்குள்ள இருக்கிறது! நேரம் வர்றப்போ நான் உனக்குத் தான் சொல்லுவேன். உன்னிடம் தான் சொல்ல முடியும்“, தாய் இன்று எப்படியும் சொல்லமாட்டார் என்று உணர்ந்து கொண்டவள்  

சரிமா! எப்போ தோணுதோ அப்போ சொல்லு. பட்!! எதுவா இருந்தாலும் ஃப்ரீயா விடுமா. நீ தானே அடிக்கடி சொல்லுவஇதுவும் கடந்து போகும். ம்?” என்று கூறவும் ஆமோதிப்பாக தலை அசைத்த மாதவியை திருப்தியாக நோக்கியவாறே கோவிலுக்கு விரைந்தாள் மிருணாளினி. 

***** 

கோவிலில் இருந்து வெளியே வந்தவளை அந்தக் கபில நிறக்கண்கள் வெறித்துக்கொண்டு இருந்தது. பிரகாசத்திற்கு மகளாகப் பிறந்ததைத் தவிர வேறு என்ன தவறு செய்தாள்? மனசாட்சி கேள்விகேட்டாலும் அதனை அப்படியே உள்ளேயே அமிழ்த்தியவன்இந்தப் பழிவாங்கும் போராட்டத்தில் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவேன்என்று கறுவிக்கொண்டான் 

இவங்க தான் பாஸ் பிரகாசத்தோட மகள் 

அழகாத்தான் இருக்காள்ல?” 

“….”  

ஹா..ஹா..என்ன பத்ரா பேச்சையே காணோம் 

பாஸ் ..அது 

என்ன சொல்லப்போற பத்ரா?! இதுக்குள்ள பொண்ணுங்களை எதுக்காக இழுக்கனும் என்றுதானே?”  

“…” 

இதுல இரக்கம், பாவம் பார்க்கிற நிலைமைல நான் இல்லையே பத்ரா!”  

புரியுது பாஸ்! நீங்க சொல்லுங்க. நான் செய்து முடிப்பேன் 

ம்ஹூம்.. இவ விஷயத்துல செய்யவேண்டியதை அருணகிரி ஸீனுக்குள்ள வந்ததும் வைச்சுக்கிறேன். இப்போ அவளுக்கு முன்னாடி கொண்டு போய் காரை நிறுத்துஎன்றவனின் கைகள் இயல்பாக கூலர்ஸை அணிந்து கொண்டது. 

ஓகே பாஸ் 

****** 

நளினமாக நடந்துபோய்க்கொண்டு இருந்தவளை தடுப்பதுபோல நிறுத்தப்பட்ட காரை முறைத்துப்பார்த்தவளின் விழிகளை உற்று நோக்கியபடியே காரிலிருந்து இறங்கிய விஷ்வா 

எக்ஸ்க்யூஸ்மி! இந்த ஊர்ல பிரகாசம் என்று ஒரு பிஸ்னஸ்மேன் இருக்காரே! அவரோட அட்ரஸ் தெரியுமா?”  

இவன் தெரிஞ்சு கேட்கிறானா தெரியாம கேட்கிறானா? ஆள் வேற ஃபாரின் ரிட்டர்ன் போல இருக்கான்குழப்பத்துடன் விஷ்வஜித்தையே நோக்கியவள் 

அவரை எதுக்கு நீங்க பார்க்கனும்?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள் 

ஒரு பிஸ்னஸ் விஷயமா பார்க்கனும் 

ஓஹ். நான் அவரோட மகள் தான். அப்பா வெளியூர் போய் இருக்கிறார் 

என்னங்க சொல்றீங்க? நான் நேற்று தானே அவரை மீட்பண்ணேன் 

நோ! நோ! அப்போ இது வேற யாரோவா இருக்கும் 

ஸீ! நான் தேடி வந்தது மிரு  ஜுவலரி ஓனரஎன்றது விழி விரித்தவள் 

என்னோட அப்பா தான்.. ஆனா வெளியூர்என்று தடுமாறியவளை சுவாரஸ்யமாகப் பார்த்தவன்  

அதுதான்ங்க எனக்கும் தெரியல. நீங்க சொல்றதைப் பார்த்தால் எப்பிடியும் அவர் வீட்டுல இருக்க மாட்டார் போல இருக்கு. ஸோஎன்றவாறே காரிலிருந்து ஒரு ஃபைலை எடுத்துக் கொடுத்தவன்இதை அவர்கிட்ட கொடுத்துடுங்கஎன்று கூறிவிட்டு காரில் ஏறி விரைந்தான் 

விஷ்வஜித் சென்றபிறகும் அவன் கொடுத்த ஃபைலை வெறித்தபடி நின்றவளின் மனதிற்குள் பல்வேறு இடியப்பச்சிக்கல்கள். ஃபைலின் முகப்பில் இருந்ததுட்ரான்ஸ்ஃபர் கன்ஃபர்மேஷன் ஒஃப் டென் மில்லியன் டாலர்ஸ்(Transfer confirmation of ten million dollars)  

error: Content is protected !!