இராவணனே இராமனாய் – அத்தியாயம் 04

இராவணனே இராமனாய் – அத்தியாயம் 04

அத்தியாயம் 04

நெற்றியில் வழிந்த வியர்வை முகத்தைத்தாண்டி மார்புச்சேலையை நனைக்க  விழிகளில் வழிந்த கண்ணீர் கண்மையைக்கரைக்க கடந்த ஒரு மணிநேரமாக இடம்பெறும் மிருணாளினியின் நடனத்திற்கு அங்கு ஒலித்த சலங்கை ஒலி மட்டுமேசாட்சியாய் அமைந்து போனது. அது நடனாலயாவில் அமைந்து இருந்த ஒரு அரங்கம். அங்கு கற்பிக்கும் ஆசிரியைகளுக்குஅவர்களின் பயிற்சிக்காக அமைக்கப்பட்டு இருந்தது. பெரும்பாலும் அங்கே யாரும் இருக்க மாட்டார்கள். சந்தோசம் என்னதுக்கம் என்ன மிருணாளினி அன்னையின் மடியை அடுத்துத் தஞ்சமடையும் இடம் இது. மிருணாளினியை நடனாலாயாவின்அனைத்து இடங்களிலும் தேடி அங்கு வந்து சேர்ந்த ஆராதனா ஒரு நிமிடம் அவளின் நடனத்திலும் அதில் தெரிந்தவேதனையிலும் கோவத்திலும் மலைத்து நின்று விட்டாள்.

தேகங்கள் எரியும்

யாகங்கள் புரியும்

ஆடுகிறேன் இது அமைதியின் கீதம்

ஜீவிதமே ஒரு நாட்டியமாகும்

உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே

உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே

என்னுயிரைத் தேடுகிறேன் நானே

ஆஆ….   ஆஆ….

வேதம் அணுவிலும் ஒரு நாதம்

ஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆ…

 

‘பட்’ மெல்லச்சென்று ஆராதனா ரெக்கோடரை நிறுத்தியவுடன் அப்படியே சுழன்று கொண்டு இருந்த மிருணாளினி மூச்சுவாங்கியபடி நிலத்தில் ஓய்ந்து அமர்ந்தாள். அமர்ந்தவளை நோக்கிச் சென்று தனது கைப்பையில் இருந்ததண்ணீர்ப்போத்தலை ஆராதனா நீட்டவும் அதை விலக்கியவள் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டாள்.

அவள் கைகளை விலக்கிவிட்டு போத்தலின் மூடியைத் திறந்து ஆராதனா அதனை மிருணாளினியின் உதடுகளின் அருகில்பிடிக்கவும் வாங்காமல் விடமாட்டாள் என்று புரிந்தவளாக போத்தலைப் பற்றி “மடக் மடக்” என நீரை அருந்தி முடித்தவள்நெஞ்சில் எழுந்த நெருப்பை அக்குளிர்ந்த நீர் அணைக்காமல் போகவும் அதனை அப்படியே கோவத்தில் தூக்கி எறிந்தாள்.

இந்த மிருணாளினி ஆராதனாவிற்குப் புதியவள். சிறுவயதில் இருந்தே இருவரும் ஒரே பள்ளியில் கல்வியைத்தொடர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல மிருவின் நட்புக்காகவே நாட்டியத்துறையில் தானாகவே ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டவள் ஆராதனா. மிருணாளினி இயல்பிலேயே மென்மையான சுபாவம் கொண்டவள். சுபாவம் மென்மையாயினும் அவளது மனது மிகவும்உறுதியானது.

அவளைப் பயத்துடனோ, குழப்பத்துடனோ, கோவத்துடனோ ஆராதனா கண்டதே இல்லை. எதிலும் தெளிவாக இருப்பாள். இதுதான் எனக்கு என்று முடிவுடன் இருப்பாள். அவளது தேர்வுகள் எதுவும் பிழைத்துப்போனது இல்லை. அனைத்தையும் விடஅவளின் அன்பான குணத்திற்காகவே பாடசாலை, கல்லூரியில் அவளுக்கென்று ஒரு சில விசிறிகள் இருந்ததும் ஆராதனாஅறிந்ததே. மிருணாளினியின் தந்தை மிகப்பெரிய வணிகராக இருந்தாலும் அது பற்றிய துளிக்கர்வமே இல்லாமல் அவள்பழகும் விதமும் அந்த விசிறிகள் கூட்டத்திற்கு ஒரு காரணம் எனலாம்.

அப்படிப்பட்ட தனது தோழியை இவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாகக் காண்பது ஆராதனாவிற்கு ஆச்சர்யமாகவும் கவலையாகவும்இருந்தது. ஒரு முடிவுடன் மிருணாளினியை நெருங்கிய ஆராதனா அவள் முகம் பற்றித்திருப்பி அவளது கண்ணீரை அழுந்தத்துடைத்து விட்டாள்.

“என்ன மிரு? ஏன் இப்படி இருக்க? என்னாச்சு?”

“ஆரா” என்று அழுகையினூடு அழைத்தவாறே அவளது மடியில் கவிழ்ந்தவள் விம்மல்களுக்கிடையே வீட்டில் நிகழும்மாற்றங்களை அதிரடிகளைக் கூறிமுடித்தாள். ஆராதனாவிற்கும் என்ன  சொல்வதென்றே தெரியவில்லை. பிரகாசம் பற்றிஅவளுக்கு அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை என்றாலும் கூட அவர் மகள் மீது மிகுந்த பாசமுடையவராகவே இவ்வளவுநாள் ஆராதனாவின் கண்களுக்கு தோன்றியுள்ளார்.  அப்படி பாசம் உள்ள மனிதர் கைலாஷிற்கு மிருவைத் திருமணம் செய்யஎண்ணி இருப்பாரா?

ஓரிரு முறை அவனை ஆராதனா கண்டு இருக்கின்றாள். அமைச்சர் அருணகிரியின் பையன் ஆதலால் அவனை அடையாளம்காண்பது சிரமமாக இருக்காது. எப்பொழுதும் போதையேறிய விழிகளுடன், பெண்களை கழுத்தின் கீழே நோக்கும்பார்வையுடன் ச்சீச்சீ.. அவன் என் மிருவிற்கு கணவனா? நினைக்கவே குமட்டுகின்றதே!!

இதை எப்படி மிரு தாங்குவாள்? மாதவி ஆன்டி எப்படித் தாங்கினார்? அதுதானே!! பிரகாசத்தின்  முடிவிற்கு எப்படி மிருவின்அம்மா ஒத்துக்கொண்டார்? மடியில் கவிழ்ந்திருந்த தோழியை நிமிர்த்தியவள்

“ம்ச்! அழுதுட்டே இருக்காத மிரு. அழுதா தீர்வு கிடைச்சுடுமா? எப்பவுமே தெளிவா இருக்கிற மிருளாணியால தான் இந்தசிக்கலில் இருந்து வெளியே வர முடியும். அம்மா என்ன சொன்னாங்க? அதை முதல்ல சொல்லு?”

நண்பியின் குலலில் சற்றுத்தெளிந்தவள் “அம்மா என்னை இப்போதைக்கு அப்பாவை எதிர்த்து எதுவும் செய்ய வேண்டாம்என்று சொல்றாங்க ஆரு! என்னோட திருமணம் கைலாஷோட நடக்காம இருக்க கண்டிப்பா தான் ஏதாச்சும் செய்வேன். அவங்களை நம்பச்சொல்றாங்க”

“….”

“அம்மா சொல்றதும் பிழையா படல. இப்போ நான் எதிர்த்துப் பேசப்போய் இருந்தால் என்னை வீட்டை விட்டு  வெளிய வரவிடாம அடைச்சு வைச்சு இருந்து இருப்பார். இப்போ கூட அவரோட ஆட்களை என்னைக் கவனிக்கச் சொல்லிதான்இருக்கார். அம்மா மேல நம்பிக்கை இருக்குத்தான். பட் அவங்க போடுற திட்டத்தில ஏதாவது பிழைவந்திடுச்சு என்றால் நான்அந்தக் கைலாஷின் கையால தாலி வாங்கனுமா? அதுக்கு நான் செத்தே போய்டலாம். பொண்ணுங்களை போதையாப்பாக்கிறவனை நான் எப்பிடி.ச்சே” அருவருப்பாக முகத்தை சுழித்துக்கொண்டாள்.

“புரியுது மிரு! நீ என்ன நினைக்கிற?”

“இன்னும் இரண்டு வாரத்தில திருமணத்திற்கு நாள் குறிச்சு இருக்காங்க! அமைச்சர் வீட்டுத் திருமணம் பிரம்மாண்டமாசெய்வாங்க. நிறைய பாதுகாப்புக்கு ஆட்கள் போட்டு இருப்பாங்க. அம்மா என்னை எதுவும் செய்ய வேண்டாம் என்றுசொல்றாங்க. நான் வெளியே வர்றப்போலாம் எனக்குக் காவலுக்கு கொஞ்சப்பேர் வந்துட்டே இருக்காங்க. ஓடவும் முடியல! ஒளியவும் முடியல! ஒருவேளை அம்மாவோட திட்டம் பிழைச்சா, நான் திருமணத்தன்று ஓடிப்போய்த் தான் தப்பிக்க வேண்டிவரும். எனக்கு உன்னோட ஹெல்ப் வேண்டும் ஆரா”

அவளின் கைகளைப் பற்றி அழுத்திய ஆராதனா “நீ இதை சொல்லனுமா? என்ன செய்யனும் சொல்லு!”

“ரெண்டு நார்மல் செல்ஃபோன் வாங்கு ஆரா! புது சிம் போட்டு ஆக்டிவேட்  பண்ணி என்கிட்ட தா! உன்னை எப்படியாவதுதிருமணத்திற்கு கூப்பிட்டுடுவேன். நம்ம கூட படிச்ச சரண் பொலிஸா இருக்கான். அவன் அருணகிரியோட கன்ட்ரோல்லஇருக்கிற ஏரியால இல்லை… ஸோ அவன்கிட்ட ஹெல்ப் கேளு. என்னை உன்னை அம்மாவை அவன் வீட்டுக்கு வெளியிலகூட்டிட்டு வந்தாலே போதும். நான் ஒரு டேக்ஸி அரெஞ்ச் பண்ணி வைக்கிறேன். நீயும் என்கூட வந்துடனும் ஆரா! என்னைக்காணோம் என்றதுமே உனக்கும் அம்மாவுக்கும் தான் ஆபத்து வர சான்ஸ் இருக்கு.”

ஆராதனாவிற்கு தாயும் அண்ணனும் மட்டும் தான். அண்ணன் திருமணமாகி இலண்டனில் செட்டிலாகி இருக்க அவனதுமனைவியின் பிரசவத்திற்காக தாயும் இலண்டன் சென்று இருந்தார். அதனால் அவளுக்கு மிருவுடன் செல்வது பிரச்சனையேஇல்லை.  ஒருவாறு திட்டமொன்றை வகுத்த நிம்மதியுடன் நண்பியின் தோளில் சாய்ந்த மிருவிற்கு என்ன தெரியும் வகுத்ததிட்டங்கள் இன்னொருவனால் மாற்றியமைக்கப்படப் போவது?

******

இன்னும் இரு நாட்களில் திருமணம். இன்னும் விஷ்வஜித் எதையும் திட்டமிடவில்லை. பெரும் குழப்பமாக இருந்தது பத்ராவிற்கு. திருமணத்திற்கான ஆயத்தங்கள் தடல்புடலாக நடந்து கொண்டு இருந்தது. அதே நேரம் வீட்டின் ஹாலில் மாதவியும் சோர்ந்து போய் அமர்ந்து இருந்தார்.

மகளின் திருமணத்தைத் தடுக்க அவர் மலைபோல் நம்பியிருந்த ஜீவனும் கையை விரித்து விட கையைப் பிசைந்து கொண்டு இருந்தவரின் கைகளின் இடையின் ஒரு விஷப்போத்தல் உறங்கிக்கொண்டு இருந்தது. அதுமட்டுமே இப்போதைய வழியென இறுகிப்பற்றிக் கொண்டவரின் கைகளில் ஒருவித நடுக்கம்!

“தென் பத்ரா! அருணகிரியோட கான்ட்ராக்ட் என்னாச்சு”

“நமக்கு கிடைச்சிடும் பாஸ்! நெக்ஸ்ட் வீக் தெரிய வரும்”

“ம்ம்! திருமண ஆயத்தங்கள் எல்லாம் எப்படிப்போய்க்கிட்டு இருக்கு?”

“அவனுக ரெண்டு பேரும் சந்தோசமா அதுக்கான ஆயத்தங்களை செய்துட்டு இருக்காங்க” பத்ராவின் குரலில் ஒலித்த சூட்டை உணர்ந்து கொண்ட விஷ்வஜித்தின் உதடுகளில் ஒருவித நக்கல் சிரிப்பு!

“கோவம் அவனுக மேலயா? என் மேலயா?”

“….”

“ஹா..ஹா!! கூல் பத்ரா. நம்மளும் இனி திருமண வேலையை ஸ்டார்ட் பண்ணிடலாமா?”

“பாஸ்?!”

“திருமணத்தன்று பிரகாசத்தோட பொண்ணு மண்டபத்தில இருக்கக் கூடாது”

“நம்ம கடத்தப் போறோமா?”

“நோ வே! நம்ம கடத்திட்டு வந்தா இருக்கக் கூடாது. அவ ஓடி வந்ததா இருக்கனும். ஸோ! நான் சொல்றதைச் செய்” என்றவன் தனது திட்டத்தைக் கூறவும் பத்ராவின் புருவங்கள் மேலேறின ஆச்சரியமாய்! பாராட்டாய்! வியப்பாய்!

error: Content is protected !!