இராவணனே இராமனாய் – அத்தியாயம் 7

அத்தியாயம் 07

“ஆமா யாரு நீங்களாம்? எதுக்காக எங்க ரெண்டு பேரையும் இங்க கொண்டு வந்து வைச்சு இருக்கீங்க? இதோ இவன் தான்ஏதோ செய்து எங்களை இங்க கொண்டு வந்து வைச்சு இருக்கான்? இருக்கிற பிரச்சனை போதாது என்று இவனுக வேற” முறைத்துக்கொண்டு இருந்த பத்ராவை தானும் முறைத்தபடியே ஹாலில் அமர்ந்திருந்த மாதவியின் அருகே வந்த ஆராதனா

“எழுந்திருங்க ஆன்டி போகலாம். மிருவைத் தேடனும்” என்று கூறி அவர் கைபற்றி இழுத்தாள். அவளது இழுப்பிற்குசெல்லாமல் அசையா பார்வையுடன் ஜனார்த்தனமையே நோக்கிக் கொண்டு இருந்த மாதவி 

“ஜனாப்பா! என் பொண்ணு எங்க?” என்று தவிப்பாக கேட்டார்.

ஒரு பெரு மூச்சுடன் தலையைப் பற்றிக் கொண்ட ஜனார்த்தனம் “எனக்குத் தெரியல மாதவி! விஷ்வஜித் தான் இதுக்குப்பின்னாடி இருக்கான் என்று புரியுது. பட்.. எங்க இருக்காங்க. என்ன ப்ளான் பண்ணி இதைச் செய்யுறான் எதுவுமே தெரியல” சோர்வாக உரைத்தார். அந்த இடத்தில் பத்ராவைக் காட்டிக்கொடுக்க ஜனார்த்தனத்தால் முடியவில்லை.

அப்படியே அவரது காலடியில் வீழ்ந்த மாதவி “தப்புத்தான் ஜனாப்பா. உங்களுக்கு நாங்க பண்ணது தப்புத் தான். அதுக்காகஎனக்கு என்ன தண்டனை என்றாலும் கொடுங்க. என் பொண்ணு பாவம். அவளுக்கு நடந்தது எதுவும் தெரியாது. அவ அப்பா,  அருணகிரியோட கைப்பொம்மை என்றும் தெரியாது. அவளை நான் நம்ம தமயந்தியைப் போல நல்ல்லவளாத் தான்வளர்த்தேன். அவ உருவத்தில தமயந்தியைப் பார்த்தேன். தயவு செய்து அவளை எதுவும் பண்ண வேணாம் என்று சொல்லுங்கபா”

சூடான மாதவியின் கண்ணீர் காலில் பட்டுத் தெறிக்க அவரது தலையை நடுங்கும் கையால் கோதியவர் “பயப்படாத மாதவி! உன் பொண்ணுக்கு எதுவும் ஆகாது. விஷ்வஜித் ஒரு சுயம்பு! நான் அவனை இப்படி வளர்த்தேன்! அப்படி வளர்த்தேன்! என்றுசொல்லிப்பெருமைப் பட உண்மையில் நான் எதுவுமே செய்யல. அவனா வளர்ந்தான். அவனா ஆளாகினான். இறுகிப்போனபாறையாகிப் போனானே ஒழிய தப்பான எந்த வழிகளுக்கும் அவன் போனது இல்லை. உன் பொண்ணு எப்படி போனாளோஅப்படியே  திரும்பி வருவா.. பொறு! நான் அவனுக்கு கால் பண்றேன்” என்றவர் பாக்கெட்டில் இருந்து தனது  கைபேசியைஎடுத்தார்.

விஷ்வஜித்தின் தொலைபேசி இலக்கத்தை அழுத்த அவர் தனது விரலைத்தூக்கியது தான் தாமதம் “யாரு தாத்தா இவங்க? ஏன்அண்ணா இவங்களோட பொண்ணைக் கடத்தி வைச்சு இருக்கார்?” படியில் இருந்து இறங்கி வந்த அஷ்வஜித்தின் குரல்எதிர்பார்ப்புக்கலந்த உச்சப்பட்ட டெசிபெல்லில் ஒலித்தது.

நடப்பவற்றை புரியாத பாவனையுடன்  பேந்தப் பேந்த விழித்தவாறு பார்வையிட்டுக்கொண்டு இருந்த ஆராதனா இன்னொருபுதியவன் வரவும் ‘யாருடா இவன்?’ என்று திரும்பிப் பார்த்தாள்.ஆபிஸிற்கு செல்வதற்கு ஆயத்தமாகி இறங்கி வந்தவன் அங்குநடந்த உரையாடல்களைக் கேட்டிருந்தான்.

அவனைப் பொறுத்தவரை அண்ணா எந்தத் தவறுகளும் செய்யமாட்டான். இப்பொழுது இவர்கள் பேசுவதைப் பார்த்தால்விஷயம் பெரியது போல இருக்கின்றதே!

அஷ்வஜித் ஜனார்த்தனத்தின் அருகே வரவும் பட்டென்று  எழுந்து அவனின் அருகில் விரைந்த மாதவி உணர்ச்சி வேகத்தில்நடுங்கிய விரல்களால் அவனது முகத்தைத் தடவிவிட்டு “அப்படியே தமயந்தி தான் இல்லப்பா” என்று கூறி முடிப்பதற்குள்ஒருதுளிக் கண்ணீர் அவரது கன்னத்தைத் தாண்டி வழிந்தது.

அவர் முகத்தைத் தடவவும் சங்கடமாக விழித்துவிட்டு தற்செயலாக நிமிர்ந்தவன் பத்ராவின் சிவப்பேறிய கண்களை வியப்பாகநோக்கினான். “பத்ராண்ணா! என்னாச்சு?” என்று கேட்டபடி அவனை நெருங்க ஒன்றுமில்லை என்று தலையசைத்த பத்ராமாதவியை முறைத்தபடியே நின்றிருந்தான்.

‘என்ன்னடா நடக்குது இங்க?’ குழம்பி நின்ற அஷ்வஜித்தைக் கண்ட ஆராதனாவிற்க்கு அவ்வளவு சந்தோஷம். தன்னைப் போலஒன்றும் புரியாமல் குழம்பி நிற்க ஒரு ஜோடி கிடைத்து விட்டதே! இப்படியே இருந்தால் சரிவராது என்று தாத்தாவின் கையில்இருந்த மொபைலைப் பறித்து  அவர் அழைப்பை ஏற்படுத்த ஓபன் செய்து இருந்த விஷ்வஜித்தின் இலக்கத்தை அழுத்தினான்.

ஒரு ரிங்கிலே விஷ்வஜித் அழைப்பை ஏற்றதிலேயே அவன் இந்த அழைப்பை எதிர்பார்த்து இருந்து இருப்பான் போலும் என்றே அக்கணத்தில் அனைவருக்கும்  தோன்றியது. அனைவரையும் ஒருமுறை நோக்கி விட்டு ஃபோனை ஸ்ப்பீக்கரில் போட்டஅஷ்வஜித் 

“சொல்லுங்க ” என்று தனது அண்ணனின் கம்பீரக் குரல் கேட்கவும்

“அண்ணா!” என்று அழைத்தான்.

தம்பியின் குரலில் ஒரு விநாடி மௌனம் சாதித்தலிலேயே அவன் அஷ்வஜித்தின் அழைப்பை எதிர்பார்க்கவில்லை என்பதுபத்ராவிற்கு தெரிந்தது. 

“சொல்லு அஷ்வா!”

“அண்ணா யாரு இவங்கலாம்? பத்ரா அண்ணா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார்”

“க்கும்! கூட்டிட்டு வரல. தூக்கிட்டு வந்தான்” என்ற ஆராதனாவின் முணகலில் சட்டென அஷ்வஜித்தின் உதடுகளில் புன்னகைபூக்க பத்ராவோ பல்லைக் கடித்தான்.

“அஷ்வா! அவங்க அம்மாவோட ஃப்ரெண்ட். இனி கொஞ்ச நாள் அவங்க அங்க தான் இருக்கனும். இன்னொரு பொண்ணும்வந்து இருப்பா. அவ வெளியில போனா அவ உயிருக்கும் ஆபத்து வரலாம். அதுனால அவங்க இங்க நம்ம வீட்டில தான்இருக்கனும்”

“ஆ.ஆனா அண்ணா”

“ம்ம். கேளு அஷ்வா”

“அண்ணா அவங்க பொண்ணைக் காணோம்னு.. நீங்க தான்..” தயக்கமாக இழுத்தவனின் மனநிலை புரிந்தது போல

“நான் தான் அவங்க பொண்ணை ஒரு பாதுகாப்பான இடத்தில வைச்சு இருக்கேன். நான் எது செய்தாலும் சரியா இருக்கும்என்று நம்புற ல?”

“என்னண்ணா இப்படிக் கேட்கிறீங்க?”

“அப்போ எந்தக் கேள்வியும் கேட்காமல் ஃப்ரீயா இரு. நான் சீக்கிரம் வருவேன். பத்ரா சொல்றதை கேட்டுக்கோ” என்றவன்அவ்வளவு தான் என்பது போல அழைப்பை துண்டித்தான்.

விஷ்வஜித்தின் பேச்சைக் கேட்டதும் பெண் எங்கு இருக்கின்றாள்? எப்படி இருக்கின்றாள்? அவள் மீது விழுந்த பழி எப்படிஅவளது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றது? என்ற தவிப்புடன் சோபாவில் அமர்ந்த மாதவியையும் தாடையைத்தடவிய படி சிந்தித்தவாறு  இருந்த ஜனார்த்தனத்தையும்  மாறி மாறி பார்த்த ஆராதனா

“இவனுங்க வீட்டுல இருந்து தான் என்னோட உயிரைப் பாதுகாக்கனும் என்று எனக்கு ஒன்றும் இல்ல. மிருவைத் தூக்கிவைச்சு இருக்கான். அவன் மேல போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து உள்ள தூக்கி வைக்காம இப்படி அழுதுட்டு இருக்கீங்க” என்று மாதவியை நோக்கிக் கத்திவிட்டு விடுவிடுவென வாசலை நோக்கி நகர்ந்தாள்.

*********

கீழொரு தளம் மேலொரு தளம் என இரு மாடிகளைக் கொண்ட அளவான அனைத்து வசதிகளும் உடைய அந்த வீட்டின் மேல்மாடியில் இருந்த ஒரு அறையினுள்  போடப்பட்டிருந்த கட்டிலின் முழங்கால்களுக்குள் முகத்தைப்புதைத்தவாறு அமர்ந்துஇருந்தாள் மிருணாளினி.

மனம் கடந்து வந்த ஒரு மாத காலத்தை நினைவு கூர்ந்து கொண்டு இருந்தது. ஏதோ ஒரு சுழல் வந்துது தாக்கி சிதைந்துபோன ஓலைக் குடிலாய் அவளது வாழ்வும் சிதைந்து  மாறிப்போனதை அவளால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும்முடியவில்லை.

விஷ்வஜித்தைக் கோவிலின் வெளியே கண்டதில் இருந்து தான், தந்தையின் சுயரூபம் வேறோ என்ற சந்தேகம் துளிர் விட்டது. அதற்கேற்றாற் போல அடுத்தடுத்து நிகழ்வுகளும் நடைபெற சோர்ந்து தான் போனது பெண்ணுள்ளம். இதோ யாரோஒருவனின் வீட்டில் சிறையடைக்கப் பட்டிருக்கின்றாள்.

இராமாயனத்தில் சீதை சிறைப்பட்டு இருக்கும் வேளையில் இராமன் வருவான். மீட்சி தருவான் என்று காத்து இருந்தாளாம். இங்கே என்னைக் காக்க எந்த இராமன் இருக்கின்றான் என்ற நினைப்பில் உதடுகளில் விரக்திப் புன்னகை ஒன்று ஜனித்துமரித்தது.

வீட்டின் முன் முற்றத்தில் சோலை, பின்னே நிச்சற்தடாகம், வாயிலைச் சுற்றி இரு காவலர்கள். ஹாஹா! அசோகவனமும்இப்படித்தான் இருந்தது போலும். என்ன சேடிப்பெண்கள் தான் இல்லை எண்ணமிடும் வேளையிலேயே

“அம்மா!” என்று மென்குரல் ஒன்று மிருவைத் தாக்கியது. ஜன்னலின் வழியே வெளியே வெறித்துக்கொண்டு இருந்த பார்வையைகுரல் வந்த திசையில் திருப்பியவளுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. மிருவின் வயதை ஒத்த ஒரு பெண்!

பாவாடை தாவணியில் எளிமையான அலங்காரத்தில் ஜொலித்த அவளது முகம் அவ்வளவு சாந்தமாக இருந்தது. அதேசாந்தத்துடன் தானே மிருணாளினியின் மனமும் இருந்தது. எங்கிருந்தோ வந்து என்ன என்னவோ எல்லாம் செய்துவிட்டானேஅவன்! ஏதோ ஒரு கோவம் மனமேங்கும் வியாபிக்கத் தொடங்கியது.

முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் தன்னை வெறித்தவாறு இருந்த மிருவைப் பார்த்து அவளுக்கு என்ன தோன்றியதோகையில் இருந்த தட்டுடன் அவள் அருகில் சென்றவள்

“அம்மா! நேற்று இரவுல இருந்து எதுவுமே சாப்பிடல என்று சமையலம்மா சொன்னாங்க! கொஞ்சமாச்சும் சாப்பிடுங்க மா!” என்று தட்டை நீட்டியது தான் தாமதம் வெறிப்பிடித்தவள் போல தட்டைப் பறித்து தூக்கி வீசிய மிருணாளினி

“சாப்பாடு ஒன்று தான் எனக்கு இப்போ குறை! இதுல கொஞ்சம் விஷம் கலந்து குடு! சாப்பிட்டுட்டு செத்துப் போய்டுறேன்” என்று அடித்தொண்டையில் இருந்து கத்தினாள்.

“அவ்வளவு சீக்கிரம் உன்னை சாக விட்டுடுவேனா மிருணாளினி” என்ற குரல் இப்பொழுது வாசலில் கேட்கவும் தலையைக்குனிந்தவாறு அந்த வேலைக்காக வந்த  பெண் வழிவிட்டு நிற்க  பூட்ஸ் சத்தம் கேட்க உள்ளே நுழைந்தான் விஷ்வஜித்!

அவனைக் கோவமாகப் பார்த்துவிட்டு “ச்சே” என்றபடி மிருணாளினி முகத்தைத் திருப்ப அதைக் கணக்கில் கொள்ளாமல்சிதறியிருந்த உணவையே  வெறித்தன விஷ்வஜித்தின் கண்கள்.

“மல்லிகா!”

“ஐயா!”

“இந்த இடத்தைக் க்ளீன் பண்ணிடு!”

“சரிங்க ஐயா”

“தென்! இந்த அம்மாவுக்கு இன்று முழுவதும் உணவு கொடுக்கக்கூடாது. வெறும் தண்ணீர் மட்டும் தான். சாப்பாட்டோடஅருமை ஒரு நாள் பட்டினி கிடந்தால் தான் இவளைப் போல ஜென்மங்களுக்குப் புரியும்! உடம்புல இருக்கிற திமிரும்அடங்கும்” என்று அடக்கப்பட்ட கோவத்துடன் கூறவும் சலனமே இல்லாமல் வெறித்த மிருவைப் பாவமாக நோக்கினமல்லிகாவின் கண்கள்.

“அன்ட் மிஸ்.மிருணாளினி பிரகாசம்!! உன்னோட பணக்காரப்புத்தியை என்கூட இருக்கிறப்போ காட்டாமல் இருப்பது உனக்குநல்லது. இப்போ உன்னோட  இந்தத் திமிருக்கான ஒரு சின்ன கிஃப்ட்! இதோ” என்றவாறு பத்திரிக்கையை அவளது கட்டிலில்எறிந்தவன் அவ்வளவு தான் என்பதுபோல வெளியேற தயங்கித் தயங்கி மிருணாளினியை நோக்கியவாறு மல்லிகாவும்வெளியேறினாள்.

அவர்கள் அகன்றதும் அப்பத்திரிக்கையை எடுத்து வாசித்த மிருணாளினியின் உதடுகளில் ஓரு விரக்தி சிரிப்பு. ‘எனக்கு இந்தத்திருமணத்தில் இஷ்டமில்லை. எனக்கான வாழ்க்கையைத் தேடிப்போகின்றேன்” இந்த இரு வரிகள் தான் தந்தைக்காகமிருணாளினி எழுதிவைத்துவிட்டு வந்தது. ஆனால் அதை யாரோ ஒருவனுடன் ஓடிப்போனதாகத் திரித்து வந்த செய்தியைப்பார்க்கப் பார்க்க விழிகளில் அவளையறியாமலே நீரி வழியத்தொடங்கியது.