இருப்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 13

Screenshot_2021-06-21-17-30-01-1-d6906683

 

Epi13

“என்னாச்சுடா எங்க கிளம்பிட்ட?”‘

 

“தருண்‌ வண்டிய ஏர்போர்ட்க்கு விடு.” என்றவன்‌ சீட்டில்‌ தலை சாய்த்துக்கொண்டான்‌.

 

தனதறைக்கு வந்த அருணா அழ அவர்‌ தோள்‌ தொட்ட ராஜ்‌,

” என்ன அருணா? ” எனவும்‌.

” இப்போவாச்சும்‌ ஒரு வார்த்தை அவனை எங்க போறன்னு கேட்டிருந்தீங்கன்னா அவன்‌ அடுத்த நிமிஷமே நின்னுருப்பான்‌. நீங்க எங்க

கேட்க நானே அவன்‌ கூட பேசல்ல. நானே என்‌ பிள்ளைய அனுப்பி வச்சுட்டேன்‌. அவர்‌ அழுந்து புலம்ப.”

 

“இங்கே பாரு அருணா, அவன்‌ கொஞ்ச நாள்‌ இருந்துட்டு வரட்டும்‌. நிவிய பார்க்குறப்ப எல்லாம்‌ இவன்‌ வேணாம்னு சொன்ன தாலத்தானே இப்படி ஆச்சுன்னு தோணும்‌. அவனை எல்லாருமா எதாவது பேச, அவன்‌ தான்‌ பந்து போல எல்லோர்‌ பேச்சிலும்‌ அடி படுவான்‌.’

 

‘நிவி கொஞ்சம்‌ சரியாகட்டும்‌. அதுக்கப்புறம்‌ அவனை அழச்சிப்போம்‌ மா.”

 

” என்னமோ சொல்றிங்க.என்‌ மனசே

ஆறலை.”

 

“போய்‌ அம்மா என்ன பண்ராங்கன்னு

பாரு.அவனில்லைன்னா அவங்கதான்‌ ரொம்பவே கஷ்டப்பட போறாங்க. ஹாஸ்டெல்ல ஒரு வருஷம்‌ தங்கினதுக்கே தாங்கல. போ போய்‌ பாரு.” ராஜ்‌ அவரை அனுப்பி விட்டு அவருக்குமே கவலைதான்‌.ஆனால்‌ அருணாவோ, ராஜோ மற்றவர்‌

பிள்ளைக்காகத்தான்‌ தன்‌ பிள்ளையை

கோவித்துக்கொண்டுள்ளோம்‌ என்று நினைக்கவே இல்லை. அவர்களது இரு குடும்பமும்‌ ஒன்றாக இருப்பதற்கு இதுவே காரணம்‌.

 

“விஜய்‌ இப்போ நீ போகவே வேணும்னே என்ன அவசியம்‌.இங்கயே இருக்கலாம்‌ல.” தருண்‌ வினவ

 

“இருக்கலாம்டா. ஆனா எல்லாம்‌ இப்படியே தான்‌ இருக்கும்‌. நீயும்‌ கல்யாணம்‌ பண்ணனும்‌ அதுக்கப்புறம்‌ தானே நான்‌ பண்ணிக்கணும்‌. நீ பண்ணினா தானே என்‌ ரூட் கிளியர்‌ ஆகும்‌.”

 

தான்‌ ரிலாக்ஸாக இருப்பதாக காட்டிக்கொள்ள தாராவை மனதில்‌ வைத்து இவ்வாறு கூற தருணோ நிவியை வைத்து தான்‌ பேசுகிறான்‌ என எண்ணி

“ஆமால்ல.”

“ஹ்ம்ம்‌ ஆமா தான்‌. டேய்‌ தருண்‌ பிரபா நெஸ்ட்‌ மந்த் எண்ட்ல வருவான்‌. நம்ம ஷோ ரூம்‌ வேலை வேறு இருக்கு பார்த்துக்கோ.”

 

“பார்க்கலாம்‌ பார்க்கலாம்‌.எல்லாம்‌

என்‌ தலைல கட்டிட்டு போ. நீ எங்க போறன்னு தெரியாம நான்‌ வேறு பிக்கப்‌ பண்ண வந்துட்டேன்‌. வீட்ல எனக்கு எல்லாம்‌ தெரியும்னு நினச்சு கேள்வி மேல கேள்வி கேட்ப்பாங்க…”

 

“அப்படியெல்லாம்‌ யாரும்‌ உன்னை ஒன்றும்‌ கேட்க மாட்டாங்க. அப்பப்ப வீட்டுக்கு வந்துட்டு போ.’

‘ஆஹ்‌ அது இனி நீ எப்படியும்‌ அடிக்கடி வருவல்ல…” விஜய்‌ அவனை கிண்டலடிக்க தருண்‌ சிரித்தான்‌.

“அய்யே வழியுது…”

 

“டேய்‌ விஜய்‌! பொறாமைடா உனக்கு.”

 தருண்‌ அவனை சகஜமாக்கும்‌ பொருட்டு இருவரும்‌ இருவரையும்‌ கலாய்த்துக் கொள்ள,

“யாரு எனக்கு பொறாமையா. அது சரி.நீ பார்க்கத்தானே போறே அண்ணணுக்கு தெரியாம அவன்‌ தங்கச்சிக்கு ரூட்ட விட்டு அவ அப்பாவையே எங்க வீட்ல பேச வெக்கிறேனா இலையான்னுப்பாரு. நாமெல்லாம்‌ காதல்னு வந்துட்டா அந்த காதலுக்கு சேதாரமில்லாம எப்படி வட்டியும்‌ முதலுமா காதலை எடுத்துக் குறதுன்னு தான்‌ பார்ப்பேன்‌… ” விஜய்‌ கூற,

” அன்னைல இருந்து பார்க்குறேன்‌ என்னால புரிஞ்சிக்க முடியாதது போலயே பேசுற…

நீ எதுவேன்னா பண்ணு. நீ ஹேப்பியா இருந்தா அதுவே போதும்‌… ” தருண்‌ கூற, அவனது அழைபேசி ஒலித்தது.

 

பார்க்க தாரா அழைத்துக் கொண்டிருந்தாள்‌. அச்சோ மறந்தே போய்ட்டேன்‌.என்ன? விஜய்‌ கேட்க,

“காலையில பேசினா,கொஞ்சம் லேட்டா பேசுறேன்ன்னேன்‌.மறந்துட்டேன டா

திட்டப்போரா.’

‘ஹலோ ஸ்ரீ குட்டி,சாரிடா உண்மையா

மறந்துட்டேன்‌.”

”பரவால்லண்ணா. “

 

“செமினார்‌ முடிஞ்சதா? ஹாஸ்டெல்‌ வசந்துட்டியாடா?”

 

“ஹ்ம்ம்‌ இப்போ கொஞ்சம்‌ முன்னாடி தான்‌ வந்தேன்‌.”

“என்னாச்சு குட்டி. ஒரு மாதிரி பேசுற.

என்னை திட்டுவன்னு எதிர்பார்த்தேன்‌…”

 

“ஒன்னில்லண்ணா கொஞ்சம்‌ தலைவலி அதான்‌. எங்க இருக்கீங்க? டிரைவ்‌ பண்றியாண்ணா? “

 

“ஆமா ஸ்ரீ, ஏர்‌ போர்ட்‌ போய்கிட்டு இருக்கேன்‌ டா.”

‘ஏர்போர்ட்‌ எதுக்கு திடிர்னு…”

“அதை ஏன்‌ கேக்குற ஸ்ரீ,இதோ விஜயை ட்ரோப்‌ பண்ண போறேன்‌. வெளில போறான்‌.”

“ஓஹ்‌! அண்ணி வீட்டுக்கு

வந்துட்டாங்களா?”

“ஆமாடா குட்டி. நா வீட்டுக்கு போய்‌ உனக்கு கால் பண்றேண்டா. வச்சிரவா?”

தருண்‌ பேசிவிட்டு வைக்க,அவளும்‌ சரியென்று என்றஅலைபேசியை வைத்தவள்‌ மனமோ,

 

‘பிஸ்னஸ்‌ விஷயமா எங்கயாச்சும்‌ போராங்களா இருக்கும்‌.’ மனதுக்கு ஆறுதல்‌ கூறிகொண்டவள்‌, தலைவலி அதிகமாக இருக்க அனிதாவிடம்‌ எழுப்ப வேண்டாம்‌ எனக் கூறி அப்படியே உறங்கிப்போனாள்‌. உன்னை விட்டு வெகு தூரம்‌ போகிறான்‌ நீ காத்திருப்பாய்‌  என்று.

 

*****

 

விஜய்‌ ஜெர்மனி சென்று இன்றோடு மூன்று மாதங்கள்‌ ஆகியிருந்தது…

 

விஜய்‌ சென்று ஒரு மாதத்திலேயே அவன்‌ படிப்பதற்காண வேலைகள்‌ சரி வர படிப்பையும்‌ அதனோடு பார்ட்‌ டைம்‌ வேலை ஒன்றையும்‌ தேடி செய்துக் கொண்டிருந்தான்‌. அவனது காலேஜீனை அண்மித்து அபார்ட்மென்ட்‌ ஒன்றில்‌ தனியாக தங்கியிருந்தான்‌. அவ்வப்போது ரமேஷுக்கு அவன்‌ அங்கிருந்தப் படியே உதவ கம்பனி வேலைகள்‌ சீராக சென்றுக்கொண்டு இருந்தது. அதனால்‌ அவன்‌ இல்லாதது கம்பனிக்கு பெரிதாக ஒன்றும் இழப்புக்களை தரவில்லை.

 

வீட்டின்‌ நிலைதான்‌ சொல்லும்‌ படி இல்லை. விஜய்‌ போய்‌ சேர்ந்து விட்டதாக ஹரிக்கு அழைத்து கூறியிருந்தான்‌ அவ்வளவே. நிவி எழுந்து பழையப்படி நடமாட பேச்சு சத்தம்‌ அவளுக்கே கேட்கிறதா என்ற சந்தேகம்‌.இந்தக்‌

கொஞ்ச நாட்களாக அதையும்‌ நிறுத்தி விட்டிருந்தாள்‌. டாக்டரும்‌ அது பற்றி பெரிது படுத்தாமல்‌ அதற்க்கான டிரீட்மென்ட்‌ செய்ய இன்னும்‌ கொஞ்ச நாள்‌ போகட்டும்‌ என்றிருந்தார்‌.

 

ஆனால்‌ அவள்‌ முகத்தில்‌ ஓர்‌ சந்தோஷக்கலை.

(அது எதனால என்று நாம்‌ மட்டுமே அறிவோம்‌.தருணுடைய காதல்‌ குருந்தகவல்களில்‌ தினமும்‌ அவள்‌ காதல்‌ கலந்த இனிய நாட்கள்‌ நகர்கின்றது அல்லவா )

 

அவ்வப்போது மீனாவின்‌ குத்தல்‌ பேசு அருணாவை அதிகமாகவே பாதித்திருந்தது. வள்ளிப்பாட்டி வேறு சோகமாக இருக்க அவரை தேற்றி அருணாவின்‌ கவலைகள்‌ கொஞ்சம்‌ மறந்து போகின.அடிக்கடி தாராவின்‌ அன்னையுடன்‌ பேசி தன்‌ குடும்ப நிலைமை, விஜயை பிரிந்து வாடும்‌ தாய்‌ நிலை என அனைத்தையும்‌ பகிர அதுவே கொஞ்சம்‌ அவருக்கு ஆறுதலாக இருந்தது. மீனாவின்‌ பேச்சில்‌ எரிச்சல்‌ அடையும்‌ நிவி தருணிடம்‌ கூற. எந்த காரணத்துக்காகவும்‌ ஒன்றும்‌ பேசக்கூடாது என்றிருக்க அவளுமே தன்‌ காதலே இப்போ தனக்கு முக்கியத்‌ தேவை என அமைதிக்காத்தாள்‌.

 

விஜய்‌ சென்ற இரவு தருண்‌ தாராவிற்கு அழைத்து அனைத்தையும்‌ கூறியிருக்க,

 

‘ அவங்க என்னை அவங்க மனசுல நினைக்கவே இல்லையா. நல்லவேளை நான் அழைத்து பேசாதது. என்‌ காதல்‌ என்னுடனேயே மறைந்து போகட்டும்‌. புன்யாவும்‌ செமினாரன்று மாலையே அவளுடன்‌ அவள்‌ மனதை அரிக்கும்‌ விடயம்‌ என்னவென்று கேட்க, முதலில்‌ ஒன்றும்‌ இல்லை என மறுத்தவள்‌ பிறகு அதட்டவும்‌ தன்‌ உள்ளத்தைக்‌ கூறி, ‘அவருக்கு அப்படி என்‌ மேல ஒன்னும்‌ இல்லைனு நினைக்கிறேன்‌ புன்யா. இருந்திருந்தா கண்டிப்பா போக முன்னாடி என்கூட பேசி இருப்பாங்க. நானேதான்‌ ஆசைய வளர்த்துக்கிட்டேன்‌ ‘என்றாள்‌.

 

புன்யாவோ விஜயின்‌ கண்களில்‌ தாராவை பார்க்கும்‌ போதும்‌ இருக்கும்‌ மாற்றத்தினை உணர்த்திருக்கிறாள்‌.  இருந்தாலும்‌ அதைக்கூறி அவளை டென்ஷன்‌ படுத்த வேணாம்‌ என நினைத்தவள்‌,

 “தாரு பேபி அவங்க அங்கயே இருக்க போராங்களா இல்லல்ல. எப்படியும்‌

வருவாங்க தானே. நீயும்‌ இப்ப காலேஜ்‌ விட்டு நின்னன்னா எப்படியும்‌ வேலைக்கு போவ. எப்படியும்‌ ரெண்டு வருடம்‌ கழிஞ்சிரும்‌. அதுக்குள்ள வந்துருவாங்க. பார்க்கலாம்‌ டா. உன்‌ காதல்‌ அவங்களுக்குள்ளும்‌ இருந்ததுன்னா உனக்காக வருவாங்க. ஆனா அதையே மனசுல போட்டு குழப்பிட்டு இருக்காம, எதையும்‌ பேஸ்‌ பண்ண கத்துக்கோ. கடைசில கிடைக்காத பொருளுக்காக ஹோப்‌

வெச்சுகிட்டு கஷ்டப்டப்படாம. ஓகே…’

 

‘அதோட தருண்‌ அண்ணா லவ்‌ இப்போதான்‌ அவருக்கு கிடைச்சிருக்கு. சோ உனக்கு டைமிருக்கு  பார்க்கலாம்‌ பிரியா இரு. “

 

புன்யா பேச மனம்‌ சற்று லேசாக அதன்‌

பிறகு அது பற்றி அவள்‌ பெரிதாக நினைக்கவில்லை.எனினும்‌ அவன்‌ மெல்லிய சிரிப்பும்‌ உயிரை கொள்ளையடிக்கும்‌ கண்களும்‌ தினமும்‌ அவளை இம்சித்தது. அதை சுகமாக ஏற்றுக்கொள்ள பலகிக்கொண்டாள்‌. தாராவின்‌ காலேஜ்‌ முடிந்து வீட்டில்‌ இந்த ஒரு மாதமாக இருந்தவள்‌. அன்னையுடன்‌ சமையல்‌ கற்கிறேன்‌ என்று அவரை ஒரு வழி பண்ணிவிட்டாள்‌.

 

தினமும்‌ பேசும்‌ அருணாவிடமும்‌ அவரும் அதுப்பற்றி கூறி விடுவார்‌.அதே போல இன்றும்‌ அருணா அழைத்திருக்க,

“அருணா இவளை வச்சிட்டு முடியல. அதிகம்‌ வாய்‌ மட்டும்‌ தான்‌ பேசாது. அதற்கும்‌ சேர்த்து செய்யும்‌ குசும்போ தாங்க முடியல என்னால. இன்னும்‌ ரெண்டு வருடத்துக்கு காலேஜ்‌ வச்சிருக்கலாம்‌.”

ஸ்ரீ அப்டி பண்றா, இப்பிடி பண்றா என ஸ்ரீ புராணம்‌ தான்‌ அருணாவிடம்‌. இடையே தாராவும்‌ போனை பறித்து அன்னை திட்டுவதை அவரிடம்‌ புகார்‌ விட,

 

‘அவள்‌ பேசுறதை வெச்சு அவளை நல்லவன்னு நம்பாத அருணா. “மாதவி இடையே போட்டுக் குடுக்க,

 

“ஒருநாள்‌ பொண்ண கூட்டிக்கொண்டு வாயேன்‌ மாதவி அவள்‌ சேட்டையை சொல்லும்‌ போதும்‌ அவளை பார்க்கணும்‌ போல இருக்கு. என்‌ ஸ்ரீயும்‌ இப்படித்தான்‌ வீட்ல இருந்தான்னா… ‘ அருணா வருந்த.

“பையன்‌ பேசலைன்னா என்ன நீ பேசு அவன்‌ கூட.” மாதவி கூற.

 

“நம்பர்‌ கூட தரமாட்டேங்குறான்‌. பேசிட்டா அவனால இருக்க முடியாது அங்க. ஸ்ரீ அப்பா சொல்ராங்க போனதோட அவன்‌ படிப்ப்பை முடித்துக்கொண்டே வரட்டும்‌ அது அவனுக்கு தொழில்‌ செய்ய உதவும்னு. “

 

“ஆமா அருணா அண்ணா சொல்றதும்‌ சரிதானே. எங்க போய்டப்போறன்‌, வந்துருவான்‌. யோசிக்காத என்ன.’

‘உங்க வீட்டுக்குன்னு இல்ல இவங்க அப்பாக்கூட எங்க நாம பயணம்‌ போக.ஸ்ரீ கூட தோட்ட வீட்டுக்கு போகணும்னு எத்தனையோ நாட்களாக கேட்கிறாள்‌ இவங்களுக்கு இந்தக்‌ கொஞ்ச நாட்களாக நேரமே கிடைக்க மாட்டேங்குது. தருண்‌ கூட போகலாம்ன்னா அவனுமே ஏதோ ஷோரூம்‌ வேலை அது இதுன்னு அலைஞ்சிகிட்டு இருக்கான்‌. இவளும்‌ வீட்ல போர்னு வேலைக்கு போகணும் சொல்ரா.கல்யாணம்‌ பண்ணினா இப்படியெல்லாம்‌ இருக்க முடியுமா அருணா. வீட்ல பிரீயா இருன்னா எங்க கேட்க்குறா.”

“அப்படி சொல்லாத மாதவி, அவள்‌ போகனும்னா அனுப்பி விடேன்‌. நான்னா என்‌ மருமகளை அவளுக்கு இஷ்டப்படி தான்‌ வாழ விடுவேன்‌. என்‌ பையன்‌ சந்தோசமா இருந்தான்னா அது போதும்‌ நமக்கு. அருணா கூறினார்‌.நானும்‌ அப்படித்தான்‌. ஆனா இவளுக்கு அமைர வாழ்க்கையும்‌ அது படி அமையனும்‌ இல்லை. மாதவி கூற,

 

“அவள்‌ நல்ல மனசுக்கு அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை அமையும்‌ பாரேன்‌.”

 

“உன்‌ வேண்டுதல்‌ நிறைவேறட்டும்‌ அருணா.” மாலதி கூறி”,வச்சிரவா நாளைக்கு பேசுறேன்‌ இவங்க அப்பா வர டைமாச்சு. ” என போனை வைத்தார்‌.

 

தாராவை பார்க்க அவளோ இவரை முறைத்த வண்ணம்‌ அமர்ந்திருந்தாள்‌. என்னாச்சுடி முறைக்கிற. யாரிப்ப என்‌ கல்யாணம்‌ பத்தில்லாம்‌ கதைக்க சொன்னாங்க.”

 

“அச்சோ! அதுவா பேச்சு வாக்குல வந்துருச்சி, ஆமாஅதுக்கிப்போ என்னாங்குற? ”  மாதவி கேட்க,

“ஹ்ம்ம்‌ ஒன்னில்ல.நான் வேலைக்கு போய்ட்டு தான்‌ கல்யாணம்‌ பண்ணிப்பேன்‌. அண்ணாவை வேணும்னா கல்யாணம்‌ கட்டிக்க சொல்லு அதுக்கப்புறம்‌ தான்‌ நான்‌…’

 

“எது… நா கல்யாணம்‌ பண்ணிக்கவா அதுக்கெல்லாம்‌ டைமிருக்கும்மா.’ என்றவண்ணம்‌ வீட்டினில்‌ நுழைந்தான்‌

தருண்‌

 

 ‘ இவளை கட்டிக்‌ குடுக்கலாம்‌. வீட்ல வச்சுகிட்டு என்ன பண்ண. ” தருண்‌ தாராவை வம்பிழுக்க.

 

அவனை முறைத்தவள்‌, “தருண்ணா உனக்கும்‌ இருபத்தேழு ஆச்சில்ல முதல்ல உனக்கு பார்கலாமாடா ? அம்மாக்கும்‌ வயசாகுது பேரன்‌ பேத்தி கொஞ்ச்னும்னு ஆச இருக்கும்ல…” அவனை பார்த்து கண்‌ சிமிட்டியவாரே கூற.

 

“அதுக்கு…” தருண்‌ இழுக்க,

 

“என்ன அதுக்கு…னு இழுக்கிற தருண்‌?”  குமாரும்‌ வீட்டுக்கு வந்து விட, “ஹாய்‌ ப்பா…’

 

‘அதானே பாருங்களேன்ப்பா. நல்லா கேளுங்க.” அவரருகே அமர்ந்தவள்‌ அவருடன்‌ இணைந்து அவனை மேலும்‌ சீண்ட…

 

‘அதெல்லாம்‌ கொஞ்சநாள்‌ போகட்டும்‌. பிஸ்னஸ்‌ இப்போதான்‌ எனக்கு பிடிபட்டு இருக்கு. அதோட அடுத்த மாதம்‌ ஷோரூம்‌ வேறு ஓபன்‌ பண்ணனும்‌… ‘தருண்‌ கூற,,

 

“பார்த்தியா மாதவி நம்ம பையன்‌ பொறுப்பாகிட்டான்‌.டேய்‌ தருண்‌ உன்‌ வயசுல எனக்கு நீ ரெண்டு வயசு பையன்டா…”

 

தரணோ அவரை பாவமாக பார்க்க, “அப்பா விடுங்க போதும்‌ அவனை சீண்டினது.” தாரா பெரிது பண்ணி அவனை காப்பாற்றுவது போல காப்பாற்ற, “இங்க வா எனதருணையும்‌ அருகே அமர்த்திக்கொண்டவர்‌.

‘”ரெண்டு பேரும்‌ உங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை மன நிறைவாக பண்ணிக்கணும்‌. யாருடைய மனசும்‌ கஷ்டப்படுத்தாம. அப்போ ரெண்டு பேரோட வாழ்க்கையும்‌ இதோ உங்க அப்பா, அம்மாவுடையது போல உங்களை

போலவே பிள்ளைகள்‌ பெற்று சந்தோஷமா இருக்கும்‌ டா.” குமார்‌ கூற,

 

ஹ்ம்ம்‌ என்று இருவரும்‌ சிறு குழந்தைகள்‌ போல அவர்‌ தோள்‌ சாய்ந்தனர்‌. மாலதி அவர்களை பார்த்து உள்ளம்‌ மகிழ்த்தவராக, “டேய்‌ அப்படியே இருங்க போட்டோ ஒன்னு எடுத்துர்றேன்‌” என்றவர்‌ தருணின்‌ போன்‌ வாங்கி அதனை அழகிய படமாக்கினார்‌. …

 

தருண்‌ அப்படத்தினை வாட்ஸ்ஏப்பில்‌ ஸ்டேட்டஸ்‌ வைக்க அதை பார்த்த விஜய்‌ ‘தருணுக்கு அழைத்து என்னடா புள்ள ரெண்டும்‌ அப்பாவை ரெண்டு பக்கமா இருந்து ஐஸ்‌ வக்கிறாப்புல இருக்கு.’

 

“அதுவா அப்பா நம்மளுக்கு பிடிச்ச வாழ்க்கையை பிடிச்சவங்க கூட அமச்சுக்கோங்கன்னு சொல்லிட்டாரா

அதுதான்‌.”

 

“சூப்பர்‌ அப்பால்ல…”விஜய்‌ பாராட்ட,

 

“ஹ்ம்ம்‌ ஆனா யாரோட மனசையும்‌ கஷ்டப்படுத்த கூடாதுன்னு

சொல்லிட்டாங்க…” என்றான்‌ தருண்‌.

 

“ஹ்ம்ம்‌, அதை ஏன்‌ இவ்வளவு சோகமா சொல்ற சரியாத்தானே சொல்லிருக்கார்‌. யாரும்‌ நோகாம பார்த்துக்கலாம்‌ விடுடா. என அவனுடன்‌ பேசி விட்டு வைத்தவன்‌, ‘நம்ம மாமனார்‌ சரியாத்தான்‌ சொல்லியிருக்கார்‌.’ அவன்‌ கண்களோ நீண்ட நாட்களின்‌ பின்னர்‌ காதல்‌ விழிகளுடன்‌ அவனது ஸ்ரீயை தழுவி, ‘உங்கப்பா உனக்கு பிடிச்ச வாழ்க்கையை அமச்சுக்கோன்னு சொன்னது அவ்வளவு சந்தோஷமா

பேபி?’ அவள்‌ எனக்காக இருப்பாள்‌. மனம்‌ சந்தோஷமடைய. இப்படி எல்லாம்‌ மனசுக்கு நிறைவாக நடக்குறப்ப தனிமையும்‌ இனிமையாகத்தான்‌ இருக்கு. ‘மிஸ்‌ யூமை

டக்லிங்‌…’