இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 3

Screenshot_2021-06-21-17-30-01-1-2cb3fa33

Epi3

தன்னை யாரும் பிழையாக எண்ணி விடுவார்களோ என விஜய் பயந்துவிட்டான். அவனருகே வந்த நிவி,விஜய் முழிப்பதை பார்த்து விட்டு

“நத்திங் டு வொர்ரி அத்து, ஷி ஹாவிங்  ஹர் பீரியட்ஸ் அதோட உன்ன பாத்தும் பயந்துட்டா போல அதான் மயங்கிட்டா.”

“பாவம் டா சின்னபொண்ணு.”

 நல்லா சின்ன பொண்ணுதான் அத்து. அவளுக்கு பதினேழு வயசாகுதாம், பார்க்கத்தான் பத்து  வயது போல இருக்கா.ஆமா அத்து பொண்ணு உன்ன பாத்ததுமே மயங்கிட்டா என்ன பண்ண? ” என அவனை கிண்டல் பண்ண, அவளை  விஜய் அடிக்க வரவும்,

” அத்து கிட்ட வர முடியல நாற்றம் ஊருக்கே அடிக்குது இப்போவாவது குளி… ” என்றவாறு தருண் வீட்டினுள் புகுந்து விட்டாள். அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று இவனும் குளித்து உடை மாற்றிக்கொண்டான்.

நிவி மற்றும் அவளது நண்பிகள் தாராவின் அறையில் இருந்தனர்.வீட்டுக்கு அழைத்து  வரப்பட்டவள் குளித்து உடை மாற்றி இருக்க அவளை உட்கார வைத்து தலை துவட்டியவாறே,

“அனிதா கூட விளாடிண்டு தானே இருந்தே குட்டி.கிணற்று பக்கம் எதுக்கு போன?” எனவும், தலையை தூக்கி தாயை பாவமாக பார்த்தவாரு,

“குடத்துக்கு தண்ணி அள்ள போனேனா நேற்றிலிருந்து கொஞ்சமா வயிறு  வலிச்சுக்கிட்டே இருந்தது.சொன்னா அப்பா இங்க வரமாட்டாங்களோன்னு  சொல்லல்ல. குடத்துல தண்ணி அள்ளி தூக்கும் போது வலி தாங்க முடியல அப்டியே குடமும்  விழுந்தது.அனிதாவை கூப்பிட்டேன் அவ வரவே இல்ல.”

 

“ஆமா நீ கத்துனா உனக்கே கேட்க்காது  இதுல எங்க எனக்கு கேட்கும் என அ னிதா  கூற, 

 

“அப்போ தான் அவங்க வந்தாங்க. “

“அங்க போக வேண்டாம்னு உன்ன சொன்னேன் தானேடா குட்டி. நல்ல நேரம் தம்பி வந்தார்.கிணத்துல மயங்கி  விழுந்திருந்தால்… கடவுளே! நினைக்கவே நெஞ்சு படபடங்குது. சரிடா குட்டி நீ அனிதாகூட இரு அம்மா அவங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வறேன்.”

என்று அவளை அறையில் விட்டு சென்றார்.

விஜய்,பிரபா தருணின் அப்பாவுடன் வெளியில் அரட்டை அடித்துக்கொண்டிருக்க அங்கே வந்த தருண், ” வாங்கடா  சாப்பிடலாம் உள்ள எல்லாம் அம்மா வெச்சுட்டாங்க.”

“ஆமாண்டா பசி தாங்கமுடியலை என பிரபா கூறிக்கொண்டே உள்ளே சென்றான். அவர்கள் சாப்பிட்டதும் நாங்க சாப்பிடறோம் ஆன்ட்டி என்ற நிவி தாராவின் அறைக்கு செல்ல திரும்பியவள்,

“அத்து உன் ஹாண்ட் செயின் எங்க  காணும்?” என கேட்டாள். அப்போது தான்  அதை கவனித்தவன்,

“அது…’ என யோசித்தவன் பின்,

‘டவல்ல மாற்றியிருந்தது நிவி அதுலதான் இருக்கும் கொஞ்சம் பாரு நானும் கவனிக்கல.” எனவும்,

“என்னடா பிறந்ததில் இருந்து போடற மிஸ் பண்ணினது கூட விளங்கல்லையா உனக்கு, வெயிட் பண்ணு உள்ள  பாக்குறேன் ” என்றவள் தாராவிடம் உள்ளே சென்று டவல் எங்கே அதில் விஜயின்  செயின் சிக்கி இருந்ததாம் என கேட்டாள்.

“அது அம்மா வோஷ் பண்ண  போட்டாங்கக்கா.” எனவும்

“அதுல ஒன்னும் இருக்கலயேமா நான் பார்த்துதான் போட்டேன்.”

 

“ஐயோ அது பிளாடினம் செயின் ஆன்ட்டி அவன் ரொம்ப ஆசையா சின்ன வயசுல இருந்து வச்சிருப்பான் “எனவும்,

“ஐயோ கிணத்துக்கிட்ட விழுந்திச்சோ தெரில பசங்கள பார்க்க சொல்லலாம்.’என்றவர் தருணிடம்,’விஜய் செயின காணமாமேப்பா.சாப்பிட்ட பிறகு தோட்ட பக்கம் போய் பாருங்க, நம்மள தவிர யாரும் அந்தப் பக்கம் போமாட்டாங்க.”

 

“அயோ இருக்கட்டும் ஆன்ட்டி.நா அப்புறமா  பாக்குறேன் அது பிரச்சினை இல்ல.” என சாப்பிட அமர்ந்தனர்.

 

அறைக்குள் இருந்தவளது மனமோ பந்தய குதிரையின் வேகத்துக்கு ஓட ஆரம்பித்து  இருந்தது.ஐயோ கண்டு பிடித்து விடுவார்களோ, மனம் படபடத்தது.இவளை பார்த்துக்கொண்டிருந்த அனிதா, என்ன தாரா இப்டி முழிக்கிற, கண்ணு ரெண்டும் இப்டி அடிச்சுக்குது. “

“இல்லையே அப்டில்லாம் ஒன்னும் இல்ல.

“அந்த அண்ணாவோட செயின் தொலஞ்சி போச்சுன்னு அதைத்தான் யோசிக்கிறியா? “ஆமா”  என தலையை ஆட்டி வைத்தாள்.

நிவி அறைக்குள் வந்து இவர்கள்   இருவரையும் அவர்களுடன் சாப்பிட அழைக்க தாராவை பார்த்து என்னாச்சு இன்னும் உட்கார்ந்த இடத்தை விட்டு எழாம இருக்க? “

” இல்லக்கா அண்ணாவோட செயின்  காணோம்னு வொர்ரி பண்ரா அதான்.”

“ஆஹ் அதுவா அவனுக்கே அது  கணக்கில்லலையாம்.நீ வொரி பண்ணிக்காத, வா ஒன்னா எல்லாம் சாப்பிடலாம்…” என்று சாப்பிட சென்றனர்.

 

 தாரா மயங்கி விழும் போது விஜய் அவளை தாங்க ஒரு கையை முதுகுக்கும்  ஒருகையால் அவளது மற்றைய கையை மணிக்கட்டோடும்  பிடித்திருந்தான்.அவளது கையில் இருந்த செயினில் அவனதும் மாட்டிக்கொள்ள அத்தோடு டவலிலும் சிக்கி கொள்ள விஜயின் கையிலிருந்து கலண்டுவிட்டிருந்தது. 

விஜய்க்கு அவனுக்கு சிறு வயதில் அவனது இடுப்பிற்கு போட்டு விட்டது. அவனுக்கு மிகவும் பிடித்தமானது. எனவே பெரிதானதும் அதனை கையில் இரண்டு, மூன்று சுற்று சுற்றி போட்டுக்கொண்டான்.

வீட்டிற்கு வந்து குளிக்கும் போதே இதை தாரா கவனித்தாள்.யாருடையது என  யோசித்தவள், ” ஓஹ்! ஹீரோ சார் தூக்கிவிடும் போது மாட்டிக்கிச்சா? ” என பார்த்தவள்,குண்டுமணிகள் போன்று அழகாக விட்டு விட்டு கோர்த்த செயின் அது.மணிகளுக்கு இடையே வெண்கற்கள் பதித்து இருந்தது. அப்போது அது வெறும்  வெள்ளியாக இருக்கும் என்றே நினைத்தாள்.அதை திருப்பி கொடுக்கவேண்டும் எனும் எண்ணம் ஏனோ தாராவிற்கு வரவில்லை. அது அதன்  அழகினாலோ. அல்லது விஜய்யினது என்பதாலோ அவளே அறியாள். 

நிவிதா அது பிளாட்டினம், ஆசையாக பல வருடங்களாக வைத்திருந்தது எனவும், குடுத்து விட நினைத்தவள்,’ரொம்ப  வருஷமா அவங்க போட்டது தானே இனி நான் போட்டுக்குறேன்’ என மனதுக்குள் கூறிக்கொண்டாள்.அதுவும் ஏனோ !

அவளே அறியாள்.

 

பகல் உணவை சாப்பிட்டவர்கள் தோட்டத்தை சுற்றி பார்ப்பதாக  கூறிக்கொண்டு அவ் ஊரை ஒரு வழி செய்தனர்,மாலை நிவியும் அவளது நண்பிகளும் தோட்டத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து அரட்டையில் இருக்க மற்ற மூவரும் கிணற்றில் குளித்தனர்.மாலதி இவர்களுக்கான தேநீர். சிற்றுண்டிகளை வேலையாளிடம் அனுப்பிவிட்டிருந்தார்.குளித்து  வந்தவர்களும் இவர்களுடன் இணைந்து தேநீர் அருந்த நிவி

“அத்து செயின் இருந்ததா,தேடி பார்த்தியா?”  எனவும் பார்த்தேன் நிவி. நான் இங்க வர்றப்பவும் கையில் இருந்தது போலத்தான் என் நினைவு.விடு அம்மாட்ட சொல்லி அதே போல ஒன்னு பண்ணிக்கலாம், பட் ஐ மிஸ்ஸிங் இட் வெரி மச், பிறந்தது முதல்  என்கூட இருந்தது என கையை நீவி விட்டுக்கொண்டான்.”

“ஏன் பிரபா பிரண்டுக்காக இதுகூட பண்ணலேன்னா எப்படி, நீங்ககெல்லாம் எதுக்கு  பிரென்ஸ்ன்னு இருக்கீங்க?”

” இப்போ நீ என்ன சொல்ல வர? “

” இவ்வளவு வொரி பண்றாங்க அத்தான், கொஞ்சம் கிணத்துல குதிச்சு தேடலாமில்ல.”

“சொல்லுவடி யேன் சொல்லமாட்ட இவ்வளவு அத்தான் கழுத்துல தொங்குறவ நீ பாய வேண்டியது தானே என்னை  கொலை பண்ணப்பாக்குற.”

“நா தேடறேனு தான் சொன்னேன் அத்தான் தான் விடல.நா வேணும்னா கிணத்துல குதிச்சு தேடட்டா அத்தான்.”

“வேணாண் டா நிவி விடு அந்த கதையை.”

“இல்ல அத்து பிரபா கிணத்துல இறங்கி தேடவான்னு கேட்குறாங்க?”

 அவனை பார்த்த விஜய்  “முடியுமாடா?” என கேட்க,

“நல்லா வருவீங்கடா ஒரு செயினுக்காக சாக சொல்றியா?”எனவும், விஜயும் தருணும் பக்கென்று சிரித்து விட்டனர். சும்மாடா என அவனை களாய்த்தவர்கள், 

 ஓகே  கைஸ் நைட் என்ன பண்ணலாம் என கேட்டவர்கள், “இந்த இடமே ஓகேப்பா வீட்லன்னா அவர்களுக்கும் டிஸ்டர்பா இருக்கும் “எனவும் இந்த இடம் சூப்பரா இருக்க இந்த இடத்திலே அவர்களது ஓபன் நைட் கிளப்பாக மாற்ற முடிவெடுத்தனர்.

ஒரு பக்கம் மியூசிக், இன்னொரு பக்கம் பிபி கியூ போட தேவையான ஆயத்தங்கள். டின்னெர் மாத்திரம் மாதவி செய்து தருவதாக கூறவும் ஓகே என்றனர்.வீட்டிற்கு சென்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு வருவோம் என வீட்டிற்கு சென்றனர்.

 

 

மதியம் உண்ட பின் தாரா வயிறு வலி காரணத்தால் நன்கு உறங்கி இருந்தாள்.மாலை 6மணி போல இவர்கள் வீடிற்கு வர அப்போது தான் எழுந்த தாரா  அறையை விட்டு வெளியில் வந்தாள்.

 

இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை மாடியில் இருக்க மாடிப்படிகளில் ஏற காலை  வைத்தவன் படி ஆரம்பிக்கும் இடத்தில் இருந்த அறையில் இருந்து தாவணியை சரி  செய்தவாறே வந்த தாரா அவனது மேல் மோதி நின்றாள்.

 

படிகளில் ஏறுவதற்கு காலை வைத்தவன் பேலன்ஸ் தவறி விலப்போக கைப்பிடியை  பிடித்துகொண்டான்.மோதியவளோ அவனைக்கண்ட நொடி பயத்தில் வார்த்தை வராமல் தந்தியடிக்க இவனும்  அவளைத்தான் பார்த்தான்.

 

“சாரி…” என தன்னிலைக்கு வந்தவள்.

” ஓஹ் தட்ஸ் ஓகே.நீங்க வர்றத நானும்  கவனிக்கல.’என்றவன்

‘இப்போ உடம்புக்கு ஓகேயா? ” எனவும் தலையாட்டினாள்.

“ஹ்ம்  குட் ‘என்றவன்,

 ‘இப்படி இருந்தா எப்டி நல்லா சாப்பிடணும் அப்போதானே உடம்புக்கு முடியாத போது  தாங்கிக்கொள்ள முடியும்.’ என்று கூறி விட்டு, ‘சின்ன வேலையா வந்தேன்.”என படிகளில் எற,

 

மறுபடியும் தாரா “சாரி’ எனவும் எதற்கு என்பது போல இவன் பார்க்க,

‘இல்ல செயின் என்னாலதானே…”எனவும்,

“ஹையோ விடுங்க அதெல்லாம்  ஒன்றுமில்லை, நாவரலைன்னா நீங்க  கிணத்துல விழுந்திருக்கலாமே.சோ இட்ஸ் நாட் மச் வெளு தான் அ லைப்.” என்று கூறிவிட்டு சென்றான்.

‘அப்போ அது இனிமே எனக்கா?’ என்று மனதில் நினைத்தவள்.

 

அடுத்தவங்க பொருளுக்கு யேன் இவ்வளவு ஆசை,தன் அண்ணனின் பேனா  ஒன்றையாவது கேட்கா மல் இவ்வளவு நாளில் எடுத்ததில்லை.ஏன் இந்த திருட்டு புத்தி’ என தானே தன்னை கடிந்தவள் எதோ தனக்கு உரிமையானது போன்ற ஓர் உணர்வுடன் திரும்ப அறைக்குள் சென்று அந்த செயினை எடுத்தவள் கழுத்தில்  வைத்து பார்த்தாள், ‘ஹ்ம் நல்லா தான் இருக்கு, ஆனா போட முடியாதே. கைக்கும் சுற்ற முடியாது என்ன பண்ணலாம்…’ என யோசித்தவள்,

 

மெதுவாக அவள் இடையை சுற்றி வைத்துபார்க்க அளவாக இருந்தது. அக்கனமே போட்டுக் கொண்டாள்.

 

தாவணியை இழுத்து விட்டவள்  அனிதாவை தேடிச்செல்ல அவள் நிவி அவளது நண்பிகளுடன் சமயலறையில் அமர்ந்து அவர்கள் எதுவோ செய்ய  இவளும் அவர்களிடம் சென்று அமர்ந்துகொண்டாள்.

அனிதா, “என்ன பண்றிங்கக்கா?” என கேட்டாள்.

“நைட் பிபிகியு போட சிக்கென் மசாலா  பண்றோம்” எனவும் இவளும் அவற்றை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

 

“ரெண்டு பேரும் பிளஸ் டு முடிச்சிட்டு  காலேஜ் எங்க சேரலாம் என்ன பண்ணலாம்னு டிசைட் பண்ணிடீங்களா?”  எனவும்

“ஹ்ம், என்ஜினீயரிங் பண்ணலாம்னு தான்  ஐடியா அக்கா. ஆனா தாராவிற்கு வேலைக்கு போக விருப்பமில்லை.”

 

“ஏன் தாரா இவ்வளவு படிச்சிட்டு ஜாப்  வேண்டாம்னு சொல்ர?”

 

“வேணாம்னு இல்லக்கா இன்டெரெஸ்ட் இல்ல, படிச்சு முடியவும் இஷ்டம்னா  போகலாம்னு இருக்கேன்.

“ஓஹ்! அப்படியா படித்த படிப்பை வீணடிக்க கூடாது தாரா அதை கொண்டு நாமளும்  நம்மளால மற்றவர்களுக்கும் உபயோகமா மாற்ற வேண்டும்.

“ஹ்ம் ஓகே க்கா.”

 

அனிதா நிவியிடம், “நீங்க தருண் அண்ணாவோடதானே பண்றிங்க? எனவும் 

 

“நா இப்போதான் பஸ்ட் இயர் முடியப்போகுது.ஐ ஜஸ்ட் வாண்ட் டு பெகம் அன் அர்கிடெக்சேர்.”

கனவுகள் மின்ன நிவி கூறினாள். அவ்வளவு கட்டிட கலை மேல் ஆர்வமானவள். தத்ரூபமாக வரையவும் செய்வாள்.

அதனை அவளது நண்பிகள் கூற அனிதாவும்,

” நம்ம தாராவும் ரொம்ப அழகா வரைவா, ஆனால் அவ்வளவா இண்டெர்ஸ்ட் காட்ட மாட்டாள்.”

இவ்வாரு ஐந்து பேரும் அவர்களது கல்லூரி கதைகளை பேசிக்கொண்டு இருந்தனர், சரிப்பா நான் இதை பிரபாவிடம்  அனுப்பிவிட்டு டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரோம்.’

‘நீங்க ரெண்டு பேரும் நம்ம கூட ஜோஇன் பண்ணிக்கோங்க.”

 

“வேணாம்க்கா நீங்க பிரெண்ட்ஸ் கூட என்ஜோய் பண்ணுங்க நாங்க எதுக்கு என்றாள்.

அதோட  என்னால ரொம்ப நேரம் உட்கார்ந்து இருக்க முடியலக்கா.’

 

“ஆமால்ல அப்போ நா தருண கொஞ்ச  நேரம் கழிச்சு அனுப்புறேன். அவன் கூட வந்து நம்மளோட டின்னெர்ல ஜோஇன் பண்ணிக்கோங்க ஓகே! “என்று  விட்டு சென்றனர்.

 

நண்பrகள் மூவரும் ரெட் டீ ஷர்ட் பிரவுன் த்ரீகுவாட்டர் பாண்ட்ஸ் அணிந்திருந்தனர்.

பெண்கள் மூவரும் ரெட் டாப் பிரவுன்  லெக்கிங்ஸ் அணித்திருந்தனர்.

எப்போதும் ஒருமுறை அனைவரும் ஒரே போல அணிவதற்கு ஆடை தெரிவு செய்து வைத்திருந்தனர்.

பெண்கள் மூவரும் மரத்தடியை  சென்றடைய ரெட் பலூன் வைத்து ஓபன் பார்ட்டி ஹால் அலங்காரம் பண்ணப்பட்டிருந்தது.

லைட்சும் செட் பண்ணி இருந்ததால் வெளிச்சமாக சூப்பரா இருந்தது. அவரகள் பார்ட்டி ஆரம்பித்து பிரண்ட்ஸ்  அரட்டை, பாடல், என அவர்களுக்கேயான நேரமது, கல்லூரி விட்டு பிரிந்தால் மீண்டும் என்று இவ்வரான சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.தருணது கண்களோ நொடிக்கொரு முறை நிவியை பார்த்தது.

இதை இன்னொரு ஜோடிக் கண்களும் கவனிக்கத்தான் செய்தது.கவனித்து என்ன செய்ய மூன்று வருடங்களாக பார்க்கமட்டும் தானே செய்கிறது, என அக் கண்கள் ரெண்டும் வேறு புறம் திரும்பிக்கொண்டது

 

இவர்களுடன் டின்னர் எடுக்க வீட்டில்  உள்ளவர்களையும் அழைத்து வருமாறு விஜய் கூறவும் தருண் வீட்டிற்கு சென்று வர மறுத்த அம்மா அப்பாவையும் சேர்த்து அனிதா, தாராவும் அவ்விடம் வந்தனர்.

மாதவி செய்த உணவோடு விஜய் ஒரு பக்கமாக நின்றுகொன்டு பிபிக்யூ மெஷினில் சிக்கனை ஒரு வழிபண்ணிக்கொண்டு இருந்தான்.

அவர்களின் சத்தம் வீடு வரை  கேட்டுக்கொண்டிருக்க என்ன செய்கின்றார்கள் என பார்க்கும் ஆசையில் வந்தாலும் தாராவினால் வயிறு வலி தாளவில்லை.சாப்பிடவும் மறுத்து விட்டாள். அவர்கள் எதாவது நினைப்பார்கள் என சிப்ஸ் மாத்திரம் எடுத்துக்கொண்டு குமாரின் தோளில் சாய்ந்தவாறு  இவர்களது அரட்டையை ரசித்திருந்தாள். அவ்வப்போது விஜயை கண்கள் பார்த்துக்கொண்டிருக்க,

“என்ன தாரா சிக்கன் பீஸ் ஒன்னு டேஸ்ட் பண்ணி பாரேன் அதையே  பார்த்துக்கொண்டு இருக்க” என நிவி கூற விஜயும் அவளை தான் அந்நொடி  பார்த்தான். பார்வைகள் ஒன்றோடு ஒன்று மோதும் முன்பே பார்வையை நிவி பக்கம் நோக்கிய தாரா,வேணாம் என தலையை ஆட்டினாள்.அதன் பின் அந்த பக்கமே பார்க்க மறுத்தாள். அம்மா அப்பா, அனி சாப்பிடும் வரை பொறுமையாக இருந்தவள் வீட்டுக்கு போகலாமா என மாதவியிடம் கேக்க,

“வலிக்குதா நீதானே வரணும்ன,  முடியலைன்னா வீட்ல உன்கூட இருந்திருப்பேன்ல. “

“பரவலம்மா இப்போ ரொம்ப முடியல ” எனவும் இவர்கள் நால்வரும் வீட்டுக்கு  செல்வதாகவும் அவர்களை நமக்கு டிஸ்ட்டப்னு நினைக்க வேண்டாம் நீங்க என் ஜோஇ பண்ணுங்க ‘என கூறிவிட்டு குமார் இவர்களை அழைத்து  mவந்தார்.

வந்தவள் அப்படியே கட்டிலில் விழுந்தவளுக்கு உறக்கம் தான் வரவில்லை, நான் ஏன் அப்படி அவங்கள பார்த்தேன், எனக்கு என்னாச்சு. அவங்க செயின வேற  திருடிட்டேன். நான் ஏன் கெட்ட பொண்ணாகிட்டேன். இப்படியே சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ யோசித்து அப்படியே உறங்கியும் விட்டாள். காலை நேரம் சென்று எழுந்தவள் நண்பர்களும் நேரம் சென்றே எழுந்திருந்தனர். அவர்கள் ஊர் போக  ரெடியாகி மேசையில் அமர பகல் உணவையே மாதவி சமைத்திருக்க அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதையே கண்டாள்.

விஜய் குமாரோடு பேசிக்கொண்டிருப்பது கேட்டது,

 

“அடுத்த வாரம் நம்ம வீட்டுக்கு போகலாம்னு  தான் பிளான் பண்ணி இருந்தோம் அங்கிள், ஆனால் இரண்டு மாதத்தில் நிவிதாவுடைய அண்ணாவுக்கு திருமணம் உள்ளது. திருமணத்திற்கு முன்னைய நாள் நம்ம வீட்ல நிச்சயமும், அடுத்த நாள் காலை   கல்யாணத்தை வைக்கலாம்னும் ஈவினிங் ரிசெப்சன் வைக்கலாம்னு இருக்கோம். சோ,கண்டிப்பா நீங்க ஆன்ட்டி எல்லாம்  வரனும், டைம் இருந்தா நான் கண்டிப்பா இன்வைட் பண்ண வருவேன் இல்லன்னா தருணகிட்ட இன்விடேஷன் அனுப்புவேன் அங்கிள் கண்டிப்பா பாமிலியோட வாங்க.”

 

“ரொம்ப சந்தோஷம்பா. ஏன் ஒரே நாளைல ரிசெப்ஷன் வெக்கிறீங்க?”

 

 அண்ணிக்கு அடுத்த நாளே கனடா போக வேண்டி இருக்கு எக்ஸாம் லெக்ச்சார் ஒன்னுக்காக. முன்னமே பிக்ஸ்  பண்ணுனாதாம் அதனால அண்ணாவும் அப்டியே அங்க போயிட்டு வரலாம்னு இருக்கான் போல.”

அஹ்ஹ் அதுவும் நல்லது தான்,கண்டிப்பா வறோம். “என அவன் தோள் தட்டி கூறினார்.

“அப்போ அண்ணா வோட கல்யாணத்தை  உங்க கெட்டு கெதரா என்ஜோய் பண்ணலாம்னு இருக்கீங்க.

ஹ்ம் கலக்குங்க.”

 

‘அம்மாவையும் அப்பாவையும் மட்டும்தான் வர சொல்ராங்க நம்மள எல்லாம் கூப்பிட மாட்டாங்களோ.’ என மனதிக் நினைத்தவள் வாசல் ஊஞ்சலில் அமர்ந்தவாறே அவனைத்தான் பார்த்திருந்தாள்.

 

சாப்பிட்டு எழுந்தவர்கள் கிழே  கொண்டுவந்து வைத்திருந்த பைகளை காரில் வைக்க செல்ல நிவிதாவும் அவளது  நண்பிகளும் இவளருகே வந்து இப்போ ஓகேயா என கேட்டாள். இவளும் தலையாட்ட நீ, அப்புறம் அனிதாவும் கண்டிப்பா அப்பாகூட அண்ணா கல்யாணத்திற்கு வரவேண்டும். ” என அழைத்தாள்.அதற்கும் தலையாட்ட  இதுக்கும் தலையாட்டா,

“பொம்மையாட்டம் தலையை மட்டும் ஆட்டு.’ என சிரித்தாள்.

‘தாரா காலேஜ் போனப்ரம் இப்டி இருந்தன்னா ரொம்ப கஷ்டம்.”

 

“ஹ்ம் நம்ம நீவியாட்டம் நல்லா வாய் கிழிய பேசும்மா பேசு.ஹே நிவி நல்லா இருக்க பொண்ண கெடுக்க பாக்குற நீ. தேவைக்கு மட்டும் வாய் திறந்தாலே போதும் இப்போ எதுக்கு வெட்டிப் பேச்சுன்னு தான் பேசாம இருக்கா அவ. இல்ல சிஸ்டர்?” என பிரபா தாராவிடம் கேட்க,நிவியும் அவளையே பார்க்க.

“அப்படியெல்லாம் இல்லக்கா தப்பா  எடுத்துக்க வேணாம் என்றாள்.”

” டேய் பார்த்தியா நீதான் தப்பு தப்பா  சொல்ற… ” என இருவரும் திரும்ப ஆரம்பிக்க, 

 

இவர்கள் அருகே வந்த விஜய்,

“இன்னக்கி இவள வச்சு உங்க சண்டையை  ஆசரம்பிச்சாச்சா.போய் சேரும் வரைக்கும்  காது வழிதான் நம்மளுக்கு.” என மற்றவர்களும் சேர்ந்து கூற தாரா விஜய்யை பார்க்க அவனும் அவளை பார்த்து சிரித்தான்.

இவளும் மெலிதாக ஒரு சிரிப்பினை வழங்கினாள்.இப்படி கலகலப்புடனே அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டனர். 

 

வாசல் வரை வந்து வழியனுப்பி  விட்டனர்.திரும்ப கண்டிப்பா இன்னொரு  நாள் வாங்க.தருணும் தன் பெற்றோரிடமும்  தங்கையிடமும் கூறிக்கொண்டு, அனிதாவின் நண்பிகள் பின் சீட்டிலும் அதற்கு முன்னதில் பிரபாவுடன் தருண்  அமர்ந்து கொண்டான்.

நான் பின்னாடி வரேன் என நிவி கூற 

 

“எதுக்கு எம்மேல இந்த முறை எடுக்கவா, அம்மா பரதேவதையே முன்னால ஏறு.”  எனவும்,

“இல்ல நான்…”  என தருணை பார்க்க, விஜய்,”நிவி ஏறு முன்னால.” எனவும் ஏறி அமர்ந்தாள்.

 

“வரோம் அங்கிள்.” என பொதுவாக  எல்லோருக்கும் தலை அசைத்து கை அசைத்து பயணம் சொன்னவன், வண்டியை  கிளப்ப.மற்றவர்களும் கையசைத்து விடை பெற்றனர்

 

வண்டி அவர்களது ஹாஸ்டெல் நோக்கி  பயணப்பட்டது.