இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 4,5

Screenshot_2021-06-21-17-30-01-1-59329014

Iepi 4,5

இரண்டு மாதங்களின் பின்னர்….   

தாராவிற்கு பிளஸ்டு பரீட்சை நாளை ஆரம்பம். நன்கு பரீட்சைக்கு தயாராகி  இருந்தவள் இரவானதும் ஒருவித டென்ஷனில் இருந்தாள். நாளை பரிட்சை எனும் நிலையில் தாராவின் நிலை எப்போதும் இவ்வாறே.அவளோடு ஒருவர் மாற்றி ஒருவர் கதைத்து அவளை இலகு  படுத்துவர். தந்தையின் தோளில் சாய்ந்து இருந்தவள் காதில் அலைபேசி, தருண் தான் அழைத்திருந்தான். எப்போதும் வீட்டிற்கு வருபவன் அவனுக்கும் ப்ராஜெக்ட் ஒர்க் நேரம் கல்லூரி கடைசி வாரம் என்பதால் வரமுடியவில்லை, அதனால் தான் இந்த அழைப்பு. 

 

“ஸ்ரீ குட்டி… குட்டிம்மா என்ன பண்றிங்க? ” என கேட்க, இவள் பதில் கூறும் முன்னே,

“டேய் என்னடா குட்டிங்குற என்ன பார்த்தா  குட்டியாட்டமா இருக்கு?” என பெல்கனியில் இருந்த விஜய் அவனை அழைப்பதாக  நினைத்து குரல் கொடுக்க, தருணோ மீண்டும் தாராவை அழைக்க, 

வீடியோ கோளில் பேசிக்கொண்டிருந்த இவளும் யாரது என பார்க்க, “குட்டிமா  உன்னைத்தான்.” என்றான் தருண் திரும்ப, “இருக்கேன்ணா …’ என இவள் மறுபடியும் பேச வாயெடுக்க,

 

 “டேய் என்னாச்சு உனக்கு குட்டி குட்டின்னு கொஞ்சுற,டேய்  பிரபா இவனப்பாறேன் என்ன குட்டிங்குறான்.”

“தாரும்மா வைட் ” என கையால்  அசைத்தவன் அலைபேசியை கையில் எடுத்துக்கொண்டு பெல்கனிக்கு சென்றான

ன். “டேய் வளர்ந்து கெட்டவனே உன்ன எவன்டா கூப்பிட்டாங்க. நான் ஸ்ரீ கூட போன்ல கதைக்கிறேன்.” எனவும் தான் அவனையும் அவனது போனையும் பார்த்தவன், “நான் நினச்சேன் என்னதான் பாசமா கூப்பிட்டியோன்னு.” போனில்  விஜயையே பார்த்திருந்தாள் தாரா.

“நாளைக்கு பரீட்சை இருக்குல்ல அதான் டென்டின்சனா இருக்கா.” என்று விட்டு தாராவுடன் பேச்சை தொடர்ந்தான்.

 

“ஸ்ரீ குட்டி உனக்கு ரொம்ப மூளை அதான்  இப்படி. படிச்சு முடிச்சாச்சில்ல ரிலாக்சா இரு எதாவது பாட்டு கேளுங்க. உனக்கு பிடிச்ச ஏதாச்சும் வரைஞ்சு பாருங்க மைண்ட்  கூலாகிரும் ஓகேவா. இதோ பக்கத்துல இருக்கானே அதைத்தான் பண்றான்.

ஆனால் கிளாஸ் பஸ்ட் வந்துருவான். ” மெலிதாக சிரித்தவள் ஓகே ண்ணா தேங்க்ஸ் ‘எனவும், விஜயும், “ஆல் தே  பெஸ்ட் ” என்றான்.மெலிதாக சிரித்து ‘தேங்க்ஸ்’ என்றவள் அலைபேசியை வைத்தாள். 

அறைக்கு சென்றவள் அவளது நோட்  புத்தகத்தில் அவளது கை வண்ணத்தில் கிறுக்கல் ஒன்று உருவாகியது. இறுதியில் அது கழுத்தில் டவலினை மாலையாக போட்ட படி பெனியனுடன் படிகளில் இறங்கும் ஒருவன்.வரைந்து முடித்தவள், அதனை பார்த்தவள் அவளது அலுமாரியில் பத்திரப்படுத்தி விட்டு நன்கு உறங்கி எழுந்தாள்.பரிட்சையும் நல்லபடியாக முடிய, அடுத்து மூன்றி நாட்களில் விஜயும் அவனது நண்பர்களும் கல்லூரி  வாழ்வினை முடித்துக்கொண்டு தத்தமது வாழ்வினை எதிர் நோக்கிய பயணப்பாதையில் காலடி எடுத்து வைக்க செல்லும் தருணம். 

விஜய் அவனது கம்பெனியை இன்னும் திறம்பட நடத்துவதற்காக வெளிநாட்டில்  உயர் கல்வியை தொடர விரும்பினாலும் தந்தைக்கு ஓய்வு கொடுக்க விரும்பி இங்கேயே படிப்பையும்  தொடர்த்துக்கொண்டு தந்தையிடம் ட்ரைனராக இருந்து தொழில் கற்க நினைத்தான். 

தருணும் தந்தைக்கு உதவியாக அவரது தொழிலையே முன்னேற்ற விரும்பினான். பிரபா அவனது அக்கா ஆஸ்திரேலியா வில்  இருக்க நிவியின் அண்ணன் திருமணம் முடிய வேலைக்காக அங்கு கிளம்பும் நோக்கத்தோடு எல்லா ஆயத்தங்களையும் செய்து வைத்திருக்கிறான்.

 

நண்பர்கள் மூவரும் ஊருக்கு செல்வதற்கு முன் காலையில் நிவியை பார்க்க வந்தவர்கள் அவளையும்  அழைத்துக்கொண்டு அருகில் இருந்த ரெஸ்டாரண்டில் காலை உணவை உண்ணச் சென்றனர்.

“நிவி எப்போ வீட்டுக்கு வருவ?”

” புதன் வரலாம்னு இருக்கேன்  அத்து.வருவதற்கு முன் எனக்கு சொல்லிவிடு முடிந்தால் வருகிறேன். ” என்று விஜய் கூறினான். “ஹ்ம்’ எனவும் .

 

“என்னாச்சு நிவி ஒரு மாதிரி இருக்க?”என பிரபா கேட்க,

” ஒன்னுமில்லை. ” என்றாள்.

அவனுடன் ஒன்றுக்கொன்று சண்டை இட்டுக்கொண்டாலும் அவனுடன் அண்ணன் என்ற உறவை உரிமையாய்  வைத்துக்கொள்வாள். அவனும் அவ்வாறே. எவ்வாறாயினும் பிரிவு என்பது மிகவும் வலிகளை தரக்கூடியது.அது பலகிய  நாட்கள் குறுகியதாயினும்.நிவி கல்லூரி சேர்தந்தது முதல் இவ் வருடம் முழுதும் இவர்களுடன் ஒன்றாகவே பலகியவள் பிரிவை நினைத்து வருந்தினாள். 

தருண் நண்பர்களுடன் எப்போதும் அரட்டை அடிப்பவன் நிவி உடன் இருக்கும் பொழுதுகளில் வாயே திறக்க மாட்டான். விஜய் அதை கவனித்தாலும் ஆரம்பம் முதலே அவன் அப்படி நடந்து கொள்வதால் அதை பெரிதாய் அவனிடம் கேட்டதில்லை.

 

அவன்தான் பார்த்த முதலே காதலில விழுந்து விட்டானே. 

 

தாரா இருக்கும் போது சகஜமாக பேசி  அவள் மீதான காதல் மற்றவர்களுக்கும் அவளுக்கும் விளங்கிடுமோ என அவள் வந்தாலே வாயை மூடிக்கொள்வான்.

 

இப்படியே சொல்லாக் காதலாகி போனது தான் விந்தை.

( சொல்லாத காதல் செல்லாத  காதலாகி விடும் என்பதை இவனுக்கு யார் கூறுவார் )  

 

ஓகே டா,நாங்க கிளம்பட்டுமா டைமாச்சு. ”  என்று அவர்களது வண்டி அருகே வந்தனர் நண்பர்கள்.

நிவி அவளது ஸ்கூட்டரில் வந்திருக்க விஜய் அவளது முகத்தை பார்த்து விட்டு அருகே வந்து அவளை தோளோடு அணைத்து, ” நிவி குட்டி நெஸ்ட் வீக் தான் கல்யாணத்துல பார்க்கலாமே எதுக்கு இப்படி இருக்க.இதுக்கே இப்படின்னா ஜாப்  போனா என்ன பண்ணுவ,சோ மனச எதையும் தாங்க பழக்க படுத்திக்கனும் ஓகே வா? ” என கேட்டான்.

 

(அதை அவனுக்காக சொன்னானா அருகில்   சோகமாக இருபவனுக்காக சொன்னானா யாரறிவார் )

“ஹ்ம் ஓகே அத்து, ஐ ரியல்லி கோயிங் டு மிஸ் யூ எ லோட் என்று கூற, பிரபுவும் அவளது தலையை பிடித்து ஆட்டியவாறு  “வரட்டுமா ஜான்சிராணி.” என்று வண்டியில் அமர்ந்தான். விஜேயும் ஓட்டுநர் இருக்கையில் அமர தருண் இவளை பார்த்தவன் வார்த்தை தொண்டையில் சிக்கி வெளி வர மறுக்க பார்வையே போதுமடி இந்த உயிருக்கு என்று மனதை  சமாதானப்படுத்தி விட்டு வண்டியில் ஏறினான்.

(இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல பார்த்துகிட்டே இருக்கவேண்டியது என மனதினுள் பொறுமிய ஒரு மனம், ‘உன் வாயை திறக்க நா பண்னுற காரியத்தில் எல்லோர் முன்னாடியும் உன் காதலை சொல்ல வைக்கல இருக்கு மவனே என கூறிக்கொண்டது. )

*****

 

விஜய் அவனது வீடு வர மாலையாகி விட்டிருந்தது. வீட்டின் முன் ஹார்ன் அடிக்க வாயிற்கதவுகளை திறக்க வண்டி உள்ளே சென்றது. நவீன முறையில் கட்டப்பட்ட வீடென்றாலும் பார்க்கும் போது அதில் பழைமையின் ரசனை அடங்கியுள்ளதை  உணரும் வகையில் இருந்தது. நேரான காங்கிறீட் கற்கள் பதித்த பாதை வீட்டோடு வரும் போது நடுவே தடாகம் ஒன்று அமைக்கப்பட்டு பூ குழாய்கள் பொருத்தி அழகாக இருக்க அங்கிருந்து இரு பக்கமாக பாதை பிரிந்து செல்கிறது.நேரான பாதையின் இடப்பக்கம் முழுதும் புற்தரை யாகவும் இடையிடையே நிழலுக்காக மரங்களும் இருந்தன. அடுத்தப்பக்கம் வாகனங்கள் நிறுத்த ஏதுவாக கற்களே பதித்து இருந்தது. வண்டியை விட்டு வாசலில் இறங்கியவன் வீட்டின் அனைவரும் வெளியே அமர்ந்து தேநீர் அருந்துவதையே கண்டான். வண்டியிலிருந்து பைகளை வேலையாள் அவனது ரூமிற்கு கொண்டு செல்ல இவன் அவர்களை நோக்கி சென்றான். இவனை கண்ட 

“அருணா,  ஸ்ரீ என எழுந்துக்கொள்ள “ஹாய்  மா.”என அவரை அணைத்து கொண்டவன், ஹாய்  ப்பா, எப்டி இருக்கீங்க மாமா, ஹாய் அத்தம்மா, ஹே கல்யாண மாப்பிள்ளை  எப்டி இருக்கண்ணா?” என அவனையும் அணைத்து விடுவித்தான். ஹரி அத்தை மகன் என்றாலும் அண்ணன் என்றே  கூறிப்பழகிவிட்டான். இவ்வாறு அனைவரையும் நலம் விசாரித்து விட்டு முகத்தை ம்ம் என வைத்துக்கொண்டு மறு பக்கம் திரும்பி அமர்ந்திருந்த பாட்டி அருகே அமர்ந்தான்.

“ஹாய்  வள்ளி எப்டி இருக்கீங்க டார்லிங். ” என தோள்களில் கையை போட கையை தட்டி விட்டவர்.

 டார்லிங் டீலிங்ன கொன்னுருவேன் படவா ‘ என தோள்களில் அடித்தவர்  ‘அடுத்த வாரம் வரேன்னு சொன்னவன் ரெண்டு மாதம் கழிச்சு வந்திருக்க.”

 

“சாரி பாட்டிம்மா இடைல வர முடியல, அதான் தினமும் பேசினனே.இதற்கு பிறகு  இனி உங்க கூடத்தான் இருக்கப்போறேன் ஓகேயா.” என அவரை அணைத்துக்கொண்டான். அவர்களுடன் தேநீரை அருந்தியவன், அருணாவுடன்  வீட்டுக்கதைகளை பேசியவாறே அறைக்கு ஓய்வெடுக்கச்சென்றான். போனவன் நண்பர்களுக்கு வீட்டுக்கு வந்த செய்தியையும், அவர்கள் சென்றடைந்ததையும் கேட்டுக்கொண்டான்.

 

அடுத்த நாள் சூரியன் தன் ஒளிக்கதிர்களை பரப்பியது முதல் கல்யாண வேலை ஆரம்பித்தது. ஹரியுடன் இணைந்து அவனுக்கு தேவையான அனைத்தும் ஷாப்பிங் செய்தனர்.

வீட்டில் நிறப்பூச்சு வேலைகள் முடிவுக்கு வந்திருக்க நிச்சயத்திற்கு தேவையான  அலங்கார வேலைகள் நடந்தன. வியாழனன்று பகல் நிவிதா வருவதாகவும் அவளுக்காக வண்டி அனுப்பப்பட்டது. விஜய்யை முக்கிய ஆபிஸ் வேலையாக ராஜ் அனுப்பியிருக்க, வெளியில் சென்று மாலையே வீடு வந்தான். வந்தவன் பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு கதை பேசிக்கொண்டிருந்தவளை, “ஹே நிவி  எப்போ வந்த? லஞ்சுக்கே வந்து விடலாம் என்று தான் நினைத்தேன். தாமதமாகி விட்டது சாரி டா என்றான்.”

” பரவால்ல அத்து. பிரண்ட்ஸ் எப்போ வருவாங்க நிவி?”

” நாளைக்கு காலைல தான் வருவாங்க,

 

“அப்டின்னா அவங்களுக்கான அறைகளை தயார் பண்ணிக்கோ நாளைக்கு டைம் இருக்குமோ தெரியாது என்றான்.” அவங்க  என்கூடவே தங்கிக்கட்டும் அத்து.”

உன்னுடைய விருப்பம் படி பண்ணிக்கோ.” நா பிரெஷாகிட்டு வரேன் என அவனது அறைக்குச் சென்றான்.

 

திரு மணத்திற்கு முதல்நாள் அதை உறு திப்படுத்த சுற்றம் அறிய ‘மணவோலை’ எழுதி வாசிப்பர்.இந்நிகழ்வே இன்று

நிவிதாவின் அண்ணன் ஹரிக்கு.

 

அதனை முன்னிட்டு பண செழுமையை காட்டும் விதமாக வீடு மிக அழகாக இயற்கை வண்ண வண்ணப் பூக்களில் அலங்காரம் பண்ணப்பட்டு வீட்டில்  உள்ளவர்களது முகங்களோ பணத்தின் செழுமை கடுகளவும் இல்லாது பூக்களை போன்றே மலர்ந்த முகத்துடன் அனைவரையும் வரவேற்க்க,வீட்டில் நடைபெறும் குடும்பத்தின் முதல் விஷேசம் என்பதால் அனைவரும் மகிழ்வோடு இருந்தனர்.

 

தருண் மற்றும் பிரபா பகல் தான்   வந்தனர்.வந்தது முதல் இருவரும் அவ் வீட்டின் ஒருவனாக சுழன்றுக்கொண்டு  வேலைகளில் ஈடுபட்டுகொண்டு இருந்தனர். அவ்வப்போது கண்கள் நிவியை தேடவும்  மறக்க வில்லை பெண் வீட்டிலேயே விழா நடைப்பெற இருந்தது எனினும் பாட்டியின்  விருப்பத்திற்கு பெண் வீட்டாரும் மறுப்பு தெரிவிக்காததினால் இவரகளது வீட்டிலேயே விழா ஏற்பாடு பண்ணப்பட்டது.

 

மணவோலை வாசிக்கப்பட்டு மணமகன் மணமகள் மோதிரங்களை மாற்றி கொள்ள பெற்றோர் ஆசிர்வாதத்துடன் இனிதாக நிட்ச்சய விழா முடிந்தது.

 

பெண் வீட்டில் மருதாணி இடும் வைபவம் ஏற்பாடு பண்ணியதாகவும். மாப்பிளை  வீட்டின் சார்பாக பெண்களை அழைத்திருந்தனர்.

பெண்கள் அனைவரும் அங்கு சென்று  கைகள் நிறைய மருதாணி அலங்காரணங்களுடன் வீடு திரும்பினர். அப்போது வரையிலும் நிவியை தூரத்தில்  இருந்தே தருணால் பார்க்க முடிந்தது.

 

கைகள் இரண்டிலும் முழங்கை வரை முழுதாக போட்டுருந்தவள் விஜய், தருண் மற்றும் பிரபா வீட்டின் பின் பகுதியில் இருந்த நீச்சல் தடாகம் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அவ்விடம் வந்தவள் ஒற்றை காலை மடக்கி அமர்ந்தவாறு பிரபா எதுவோ செய்துக்கொண்டிருக்க திடிரென்று, ” பிரபாண்ணா பின்னாடி… ” எனக் கத்த என்னவென்று பதட்டத்தில்  திரும்பியவன் அடுத்து நொடி தடாகத்தின் உள்ளே இருந்தான்.

“டேய் பிரபா…” என இருவரும் கத்த,

 

“ராட்சசி இப்படியாடி கத்துவ பாரு விழுதுடேன். மெதுவா சொல்ல மாட்ட  அன்னைல இருந்து பார்க்கின்றேன் என்னை நீ தண்ணில தள்ளிவிடவே பார்க்குற.ஆமா நல்லதுக்கில்ல சொல்டேன்.” என பிரபா நீரில் இருந்தவாரே கத்த

“வாடா மேல.”  என இருவரும் கை குடுக்க 

“வேணாம்டா நா படி வாழியாவே வரேன். அவளுக்கு சப்போர்ட் பண்றவனுகல நம்ப முடியாது.” என்று படிக்கட்டு வழியாக ஏறினான். துடைப்பதற்கு டவல்  கொடுத்தவன் டிரஸ் மாத்ததிக்கோடா. ” எனவும் ஆமாண்ணா ரொம்ப குளிருது இல்ல. ” எனவும் 

“இல்லையே.” என அவளது தலையில்  குட்டியவன் சிரித்து விட்டு அறைக்கு சென்றான்.

“அத்து, இதை காட்டத்தான் வந்தேன்.” என இரு கைகளையும் விரித்து காட்டியவள்  “அழகா இருக்கா?” எனவும் அவள் கைகள் இரண்டையும் முகர்ந்து அதன் வாசனையை உள்ளிழுத்தவன் ரொம்ப அழகா இருக்கு டா.போய் தூங்கு ஏர்லி மோனிங்  எந்திரிக்கணும். ” எனவும்

 ஹம் ஓகே அத்து குட் நைட்.”என்றவள்  செல்ல,

 

“என்னடா அப்படி பார்க்குற?” என ஏக்கமாய் நிவியின் கைகளை பார்த்திருந்தவனிடம் விஜய் கேட்க,

“ஹாங்! இல்லடா எங்க ஸ்ரீகும்  மருதாணின்னா அவ்வளவு இஷ்டம் உன்னை போலவே கைகளில் அழியும் வரை  வாசம் நுகர்வாள்.” என்றான்.

“ஓ!அப்டியா.” என்றவன், அப்படியே அவர்களது அறைக்கு சென்றனர்.

 

அதிகாலை சூரியன் கடலில் குளித்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு உலகுக்கு ஒளி கொடுக்க கிழக்கே  மேலெழுந்து வர, கல்யாணவீட்டில் காலை ஒன்பது தொடக்கம் சூரியன் உச்சமடைய  முன் சுப நேரம், அழகிய வாழ்க்கைக்கு இனிய தொடக்கத்தை தரும் முகுர்த்தம் என நேரம் கூறியிருக்க, அனைவருக்கும் நிதானமாக நேர்த்தியாக வேலைகளை செய்ய முடிந்தது.

 

அனைவரும் அலங்காரத்துடன்  திருமணத்திற்கு தயாராக மணமகன் வீட்டில் அனைவரும் மஞ்சளும் பச்சையும்  சேர்ந்த வண்ணங்களில் ஆடைகள் உடுத்தி இருந்தனர்.அனைவரும் வீட்டிலிருந்து மண்டபம் சென்றடைய மணமகள் வீட்டாரும் வந்திருந்தனர். 11.15க்கு முகுர்த்தம் என்றிருக்க மண்டபத்திற்கு வாழ்த்துவோர் அனைவரும் வருகை தந்த வண்ணம் இருந்தனர்…

 

நிவி அவளுடன் நண்பிகளும் அத்தை அருணாவுடன் சேர்ந்து முன்னின்று பரிசு கொடுத்து அனைவரையும் வரவேற்க,தாரா  அவளின் அன்னை, தந்தை மற்றும் அனிதாவுடன் காரில் வந்திறங்கினாள்.

 

நீலவண்ணத்தில் மஞ்சள் வண்ண பாடர் வந்த அனார்கலி அணிந்து போனிடேல் போட்டு காதுக்கு பெரிய ஜிமிக்கி அவ்வளவே அவள் அலங்காரம்.

பார்க்க சாமிங் லுக்க்கில் இருந்தாள். அவரகள் வருவதை கண்ட நிவி அவர்களை  வரவேற்க. அருணாவும் மாதவியும் முன்னமே அறிமுகம் இருக்க நலம் விசாரித்துக்கொள்ள அவ்விடம் விஜயும்  நண்பர்கள் இருவரும் வந்தனர். விஜய் பட்டர் கிரீம் வண்ண ஷர்ட்டும் வெள்ளை வேட்டியிலும், தருண் மற்றும் பிரபா அதே வண்ண ஷர்ட்டும், ப்ளாக் பேண்ட்டும்  அணிந்திருந்தனர். அவர்களும் அவர்களை வரவேற்று தருணின் அப்பாவை உள்ளே அழைத்து சென்றனர்.

விஜய் போகும் வரை அவனையே விழியாகலாது பார்த்திருந்தவள், நிவி   கூப்பிடவுமே அவர்கள் பக்கம் பார்வையை திருப்பினாள்.

“ப்பா செம ஹன்சாமா இருக்காரு ஹீரோ. என்னா கலரு சந்தன நிறமா, தேன் நிறமா, ரெண்டும் குழைத்து நான் முகம் பூசும் பொன்னிறமா?”என ஆராய்ச்சியை மனதில் தொடங்கியவள் அவர்களுடன் உள்ளே சென்றாள்.

 

இவ்வளவுக்கும் தாராவையும் அனிதாவையும் பொதுவாக பார்த்து ஒரு  தலையசைப்புடனான வரவேற்பு அவ்வளவே.உள்ளே சென்றவர்கள் இனிதே வைபவத்தில் கலந்துக்கொண்டு திருமண கொண்டாட்டத்தில்  இணைத்துக்கொண்டனர்.

ஹரி அவனது வாழ்க்கை துணையை இனிதே கரம் பிடித்தான். அவனது திருமணம் இனிதே நடை பெற,

 

சூரியன் முகம் கண்டு மொட்டு விரிய காத்திருக்கும் தாமரை என மூன்று ஜோடிக்கண்கள் அதன் இணை ஜோடியை  நோக்கி தான் பார்வையை பார்த்து இருந்தனர்………..

 

மாதவி அருணா இருவரும் நன்கு ஒன்றிப்போக தினமும் அலைபேசி அழைக்க வேண்டும் பிள்ளைகள் நட்பு போலவே நம்முடையதும் தொடர வேண்டும் என பேசிக்கொண்டனர்.

 

அருணா அவரது பெற்றோருக்கு ஒற்றை பிள்ளை என்பதாலும் நிவியின் அன்னை அதிகம் பேசாதவர் அதனாலேயே, மாதவியின் நட்பு அருணாவிற்கு பிடித்தமானதாகி விட்டது.

 

மாலை ரெசெப்ஷனும் நல்ல படியே நிறைவடைய, மண்டபம் விட்டு வெளியே வந்த தாரா அனிதாவுடன் வெளியே இருந்த பூ பந்தல் அருகே இருந்து செல்பீ  எடுக்க அனிதாவின் கையை சுரண்டிய தாரா, “அவனை பாரேன் நாம வந்ததுல இருந்து  நம்ம பின்னாடியே சுத்துறாண்டி. பயமா இருக்கு உள்ள போகலாம் என்றாள்.”

” சும்மா இரு தாரா கல்யாண வீடுன்னா எல்லாம் எல்லா இடத்துலயும் தான் இருப்பாங்க, சும்மா நீ பயந்துகிட்டு.”

 

மண்டபம் வந்தது முதல் ஒருவன்  இவளையே தொடர்வதை உணர்ந்துதான் இருந்தாள்.பார்ப்பவன் (விஜயின் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவன் ) தூரமிருந்து பார்த்தாலும் மனதில் பயம்  கொண்டவள் அவ்வப்போது அவன் வருகிறானோ என திரும்பியபடியே இருக்க. அவனோ தன்னைத்தான் பார்ப்பதாக எண்ணி அவளுடன் பேசும் நோக்கில் அருகே வர, அதே நேரம் அனிதா உள்ளே சென்றிருக்க. அவன் அருகே வருவதை கண்டவள் பயத்தில் டெண்டஷன் ஆகி மயக்கம் வர தூர இருந்த தருணை கூப்பிட  முட்பட்டவள் கூப்பிடும் முன்னே மயங்கி விழ அவளை விஜய் தாங்கிப்பிடித்திருந்தான்.

“ஹேய்! என்னாச்சு ராதா எந்திரி ” என அவள் கன்னங்கள் தட்ட, தருணும் அவ்விடம் வந்து நீர் தெளித்து அவளை  எழுப்பி அமரவைத்தனர்.” என்னாச்சு? ” என தருண் கேற்க அவனை பார்த்து பயந்து விழுந்து விட்டேன் என்று கூறி தகராறு ஏதும் ஏற்படும் என்று பயந்து “தெரியலண்ணா. ” என கூறினாள். அவள் அருகே வந்த  அனிதா, “ஹேய் என்னாச்சுடி அவன் ஏதும் பண்ணினானா?” என கேட்டாள். இல்ல என் பக்கத்துல வர்ற மாதிரி இருந்தது அதான் பயத்துல  அப்படியே…” என்றவள். அனிதாவின் முறைப்பில் வாயை மூடிக்கொண்டாள்.

” நீ இப்படியே பயந்து பயந்து விழு.உனக்கே நல்லருக்கா மனச கொஞ்சம் தைரியமா வெச்சுக்கோ தாரா எனவும் தலையை ஆட்டியவள்.

“யாரு என்னை விழாம பிடிச்சது?” எனவும் “விஜய் அண்ணாதான்.”  என்றாள்.

“ஓஹ்!”  என்றவள் அவனை பார்க்க இவர்கள் பேசியதை கேட்டிருந்தவன் இவனை பார்த்து தான் மயங்கினாள் என்று நினைத்தான்.

‘என்னடா இவ நம்மள பார்த்து மயங்கி விழுறா, சின்ன பொண்ணு பயப்படும் படியா நம்ம முகம் இருக்கு.’ என நினைத்தவன் வெளியில் பேசாது அவளை பார்த்தான். நிவியும் அவர்களிடம் வந்தவள் எல்லோர் முன்னும் அதையே கேட்க, தாராவிற்கு வெட்க்கமாகி போனது…

மணமக்களை பெரியவர்கள் வீட்டுக்கு அழைத்து செல்ல கிட்டிய உறவுகளை தவிர்த்து நண்பர்கள் பட்டாளங்களும்  உறவுகளும் தத்தமது வீடு நோக்கி பயணப்பட்டனர். பிரபா ரெண்டு நாளில் ஆஸ்திரேலிய செல்லவிருப்பத்தால் அவனும் நண்பர்களிடம் விடை பெற  தருணும் அவனது பெற்றோருடனே ஊர் திரும்பினான்.

தாராவும் அவனது ஹீரோவின் மீது பார்வை இருக்க தருணோ மீண்டும் எப்போது எனும் வகையில் நிவியின் கண்ணோக்க விஜய் ஒரு பக்கமாக திரும்பி குமாருடன் பேச, நிவி விஜயின் கைகளை  கோர்த்தவாறு தாராவிடம் பேசிக்கொண்டு இருந்தாள். 

 

அவர்களது கைகளை பார்த்தவன் மனம் கனத்த படி விடை பெற்று காரில் ஏறினான். அய்யோ  ‘இவன் எப்போ தான் மனச திறப்பானோ, மடையனே கையை பார்த்தவன் கொஞ்சம் என் கண்ணையும் பாரேன் அந்தப்பார்வை யாருக்காக காத்திருக்குனு புரியும் ‘என ஒரு மனம் கத்த விடைபெற்றுகொண்டனர்.

 

அவ் இரவில் நிலவு உலகை வலம் வர ஹரி அவனது இல்லறம் துவங்கினான்

 

இவர்கள் அவர்களுக்கான பாதைகளில் எதிர் காலம் நோக்கி பயணப்பட்டனர். பாதைகள் பல எனினும் இறுதியில் ஒரே  திசையில் பாதைகள் வந்து சேருமோ ?

நாமும் அவர்களுடன் பயணம் செய்வோம். 

பாதை வழி மாறினால்…