இரும்புக்கோர் பூ இதயம் -இறுதி அத்தியாயம் 1

Screenshot_2021-06-21-17-30-01-1-4fd46864

இறுதி அத்தியாயம்.

 

விஜய்‌ தாரா இருவரும்‌ காதலர்களாக இந்த ஒருமாதத்தினை கடக்கும்‌ முயற்ச்சியில்‌ ஈடுபட்டிருந்தனர்‌. அவளை ஆபிஸ்‌ தேவைகள்‌ கூறி அடிக்கடி வரவழைத்தான்‌. வந்தவளை பகல்‌ உணவுக்கு, டீ சாப்பிடவென காரணம்‌ கூறி வெளியே அழைத்து சென்றான்‌. சில நாட்கள்‌ ஷாப்பிங்‌. இப்படியாக அவர்கள்‌ சந்திக்க நேரம்‌ பல உருவாக்கிக்கொண்டான்‌. கல்யாணம்‌ இன்னும்‌ பத்து நாட்கள்‌ என்றிருக்க அழைப்பிதழ்கள்‌ கொடுக்கவென விஜய்‌ அவன்‌

அன்னையுடன்‌ தாராவின்‌ வீடு வந்திருந்தான்‌.அவளை இரண்டு நாட்கள்‌ காணமுடியவில்லை. அதற்கான காரணங்கள்‌ அமையவில்லை இருவருக்கும்‌. தருண்‌ கல்யாண அழைப்பிதழ்‌ அச்சிடுவதாகவும்‌ விஜய்‌ வரவேற்பு அழைப்பிதழ்களை அச்சிடுவதாகவும்‌ பேசிக்கொண்டு அதனை கொடுக்கும்‌ சாக்கில்‌ வந்திருந்தான்‌. அருணா மாதவியுடன்‌ பேசிக்கொண்டு

இருக்க குமார்‌ சிறிது நேரம்‌ அவனுடன்‌ வெளி தோட்டத்தில்‌ இருந்தவாரு பேசிவிட்டு “இருங்க நான்‌ ஸ்ரீயை அனுப்பி விடறேன்‌ பேசிட்டு இருங்க. என்கூட எவ்வளவு நேரம்‌ தான்‌ பேசுவீங்க ” என்றவர்‌ உள்ளே சென்று, “தம்பிக்கு எதுவும்‌ சாப்பிட எடுத்துட்டு போடா” என்றார்‌ .

 

‘ஹ்ம்ம்‌ சரிப்பா என்றவள்‌ அவனைக்காண வந்தவள்‌, வெளி தோட்டத்தில்‌ காணவில்லை.’எங்க போனாங்க.’ என அவனை தேட அவனோ வண்டியில்‌ அமர்ந்து எதுவோ தேடிக்கொண்டிருந்தான்‌.

அவனருகே சென்றவள்‌.

“வண்டிக்குள்ள என்ன பண்றிங்க? ” எனவும்‌ அது உனக்கு ஒன்னு கொடுக்கலாம்னு கொண்டு வந்தேனா அதைத்தான்‌ தேடறேன்‌

காணோமே.

” சரிப்பா காருக்குள்ள தான்‌ இருக்கும்‌ பாருங்க. ” என்றவள்‌ மற்ற பக்கமாக வந்து அமர்ந்துகொண்டாள்‌. அமர்ந்தவள்‌ அது எப்படி இருக்கும்‌, என்ன நிறம்‌ சொல்லுங்க நானும்‌ தேடறேன்‌ என்றாள்‌.

 

“அதுவா?அதுக்கு நிறமெல்லாம்‌ இல்லை ஸ்ரீ. அதை தொடவெல்லாம்‌ முடியாதுப்பா. உணரத்தான்‌ முடியும்‌.’என்றவாறு தொலைபேசியில்‌ குமாருக்கு அழைத்தவன்‌,

“மாமா நான்‌ ஸ்ரீ கூட சின்னதா ஒரு டிரைவ்‌ போய்ட்டு பிப்டீன்‌ மினிட்ஸ்ல வந்துர்றேன்‌. ” என்றவன்‌ வண்டியை ஸ்டார்ட்‌ செய்திருந்தான்‌.

 

“ஹேய்‌ எங்க போறீங்க. நான்‌ டிரஸ்‌ கூட சேஜ்‌ பண்ணல.” எனவும்‌ ஜஸ்ட்‌ அப்டியே “ஒரு ரவுண்டு போகலாம்‌ வா “என்றவன்‌ அவள்‌ வலக்கையை எடுத்து அவன்‌ கையோடு கோர்த்துக்கொண்டவன்‌ வண்டியை ஓட்டினான்‌. அவளும்‌ அப்படியே அவன்‌ தோள் சாய்ந்துக்கொள்ள மிதமான வேகத்தில்‌ வண்டி சற்று தூரம்‌ சென்று அமைதியான பாதை ஒன்றின்‌ ஒரு ஓரமாக நிறுத்தினான்‌. “ஸ்ரீம்மா மிஸ்‌ யூ லோட்‌ டா.”

“நானும்‌” என்று அவன்‌ இடக்கையை தன்‌ இரு கைக்கொண்டு இருக்கி அணைத்துக்கொண்டாள்‌.

“எப்போடா உன்னை கூட்டிப்போகலாம்னு இருக்கு.”

 

“சரி எதுவோ எனக்கு கொண்டு வந்ததா சொன்னிங்க.எங்க தேடி எடுத்துட்டீங்களா? “

“அதுவா இதோ இருக்கே என்றான்‌.

 

“எங்க?” என அவள்‌ அவன்‌ கை விட்டு அவளது சீட்டில்‌ இருந்தவாறே இவன்‌ பக்கமாக திரும்பி அமர்ந்தவாறு கேட்க,

 

இந்த இருபந்தைந்து நாட்களில்‌ சந்தித்துக்கொண்ட ஒவ்வரு சந்தர்ப்பங்களிலும்‌ அவளுக்காக ஏதேனும்‌ வாங்கி வருவான். இன்றும்‌ அவ்வாறே கேட்க, “இதோ” என்றவன்‌ அவளுக்கான பரிசை முத்தமாக வழங்கினான்‌ அவள்‌ கைகளில்.இன்று தான்‌ தனித்து சந்திக்கும்‌ சந்தர்ப்பம்‌ கிடைத்திருந்தது. எனைய சந்திப்புகள்‌ பெரும்பாலும்‌ பலரும்‌ ஒன்று கூடும் இடங்களாகவும்‌ பகல்‌ நேரங்களாகவுமே இருந்தது.இன்று நேரமும்‌, இடமும்‌, தனிமையும்‌ சந்தர்ப்பமும்‌ அவனுக்கு சாதகமாக அமைய அவனது அவளுக்கான பரிசு முத்தமாக மாறியிருந்தது. அவள்‌ நெற்றி முட்டியவன்,

நெற்றியில்‌ இதழ்‌ பதித்து விட்டு,”தேங்ஸ்‌ ஸ்ரீ” என்று அவனது சீட்டில்‌ சாய்ந்து அமர்ந்தவன்‌ அவளை பார்க்க கண்கள்‌ மூடி அவளும்‌ இவனைப்‌ போலவே அமர்ந்திருந்தாள். அந்த முத்தத்தில்‌ அவன்‌ அவளின்‌ பிரிவை தாங்க முடியாது என்பதை உணர்த்தியதாகவே விளங்கியது. அவன்‌ கைகளோ உதடுகளோ அதன்‌ எல்லையை மீறுவதற்கான சந்தர்ப்பத்தில்‌ இருந்தாலும்‌

அதில்‌ காதல்‌ மட்டுமே நிரம்பி இருந்தது. அதனை இருவருமே உணர்ந்திருந்தனர்‌.

 

“ஸ்ரீ… “என்று அவளை பார்க்க கண்கள்‌ முடியவாரே வீட்டுக்கு போலாம்ப்பா.” என்றாள்‌. அவள்‌ முகம்‌ பார்த்தவன்‌ ஏதும்‌ கூறாது வண்டியை வீட்டை நோக்கி செலுத்தினான்‌. வீட்டருகே வந்தவன்‌,

‘சாரி ஸ்ரீ..” என்றான்‌. அவன்‌ பார்க்க அவள்‌ இவனை பார்க்காது குனிந்திருந்தாள்‌. “கோபமா ஸ்ரீ,சாரி டா”.

அவனை நிமிர்ந்து பார்த்தவள்‌ அவனை எட்டி கழுத்தில்‌ கையிட்டு கட்டிக்கொண்டாள்‌.

‘லவ்‌ யூ சோ மச்‌.” என்றிட, தன்‌ வண்டிச்சத்தம் கேட்டு தன் அன்னையோடு தாராவின்‌ பெற்றோரும்‌ வெளி வர

இருவரும்‌ சட்டென விலகி வண்டி விட்டு இறங்கினர்‌.

“அப்போ நாங்க கிளம்புறோம்‌. அருணா அவர்களிடம்‌ விடை பெற்றவர்‌ ‘ஏதும்னா விஜய்‌ அப்பாகூட பேசிக்கோங்கண்ணா. ஸ்ரீ குட்டி வரட்டுமா என அவள்‌ கன்னம்‌ தடவி நெற்றியில்‌ இதழ்‌ பதித்தவர்‌.’ நாளைல இருந்து வெளில போக முடியாது பொண்ணுங்க ரெண்டு பேரும்‌ வீட்டுக்குள்ள தான்‌ இருக்கணும்‌. ரெண்டு பேரும்‌ பார்த்துக்க முடியாது.”

 

“என்ன மாதவி. அதானே முறை.” என மாதவியை பார்த்து கேட்க,

 

“ஆமா.” என்றார்‌ அவரும்‌.

 

“ரெண்டு நாள்‌ பார்க்கலைன்னு

இன்னக்கி வந்தது போல எல்லாம்‌ வர முடியாது.” என்று விஜயை பார்க்க அவனும்‌ பாவமாக தன்‌ அன்னையை பார்த்தான்‌.

 

” சரி அப்போ நாங்க கிளம்புறோம்‌. ” என அவர்களிடம்‌ இருந்து விடை பெற்றனர்‌. அடுத்த இரண்டு நாட்கள்‌ கழித்து அனைவரும்‌ ஓரிடம்‌ கல்யாண உடைகள்‌ எடுக்க வந்திருந்தனர்‌. அதன்‌ பின்னர்‌ இன்று வரை சரியாக ஒரு வாரம்‌ இருவரும்‌

பார்த்துக்கொள்ள வில்லை. வீடியோ அழைப்புகளை தாரா மறுத்தாள்‌. எதற்கென்று கேட்டதுக்கு” அதுல பார்த்துட்டு

என்னால இருக்கமுடியாது.’என்று விட விஜயும்‌ அதன் பின்‌ கேட்க வில்லை. அதோடு பேச அவர்களுக்கு நேரமும்‌

இருக்க வில்லை.இதோ இன்று மாலை மணப்பெண்கள்‌ இருவருக்கும்‌ மேகெந்தி பன்ஷஹன்‌ நடைபெற அதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

 

இரு வீட்டினரின்‌ கல்யாண வேளைகளை இலகு படுத்தவென விஜயும்‌ தருணும்‌ இணைந்து ஒரு ரெசார்ட்டினை மூன்று நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தனர்‌. இரு வீட்டினரும்‌ ஒன்றாகவே இணைந்து அணைத்து வேலைகளையும்‌ செய்துகொண்டனர்‌.  மண்டபத்தின்‌ வெளிபகுதி இருவருக்குமாக இரண்டு தீமில்‌ அலங்கரிக்கப்பட்டு இரு மணப்பெண்ணும்‌ தோழிகள்‌, உறவினர்கள்‌ சூழ அமர்ந்திருக்க அவர்களது கொண்டாட்டம்‌ ஆரம்பித்தது.

 

தாரா மாலைச்‌ தரியனின்‌ வண்ணத்தில்‌ ஆடை உடுத்தி பூக்களினால்‌ நகை அணிந்து கைகளிலும்‌ கால்களிலும்‌ மருதாணி அலங்காரம்‌ இட்டிருக்க, நிவி பச்சை வண்ண ஆடையில்‌ தாராவை போன்றே பூக்களினாலான நகை அணிந்து மருதாணி போட்டுக்கொண்டிருந்தாள்‌. மணவாளர்கள்‌ இவர்களை பார்த்தவாறு நண்பர்களுடன்‌ அவர்களது கேலிகளை சமாளித்துக்கொண்டும்‌. சகித்துக்கொண்டும்‌ இருந்தனர்‌. மணப்பெண்ணிடம்‌ போக விடாது அவர்களை இழுத்துப்பிடித்து வைத்துகொண்டிருந்தனர்‌.

 

பிரபாவோ புன்யாவுடன்‌ காதல்‌ பாடம்‌ படித்துக்கொண்டிருக்கு தருணும்‌ விஜயும்‌ அவனை கேலி செய்துகொண்டிருந்தனர்‌.

 

இனிதாக இரவும்‌ கழிந்தது.காலை ஒன்பது மணிக்கு சுபநேரம்‌ குறிக்கப்பட்டிருக்க. கல்யாணம்‌ கோயிலில்‌ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்‌ பின்னர்‌ பகல்‌ உணவு இவர்கள்‌ தங்கியிருக்கும்‌ ரெசார்ட்டிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை ஆரம்பமாகும்‌ வரவேற்பு விழா பிரபல ஹோட்டல்‌ ஒன்றிலும்‌ ஏற்பாடு செய்திருந்தனர்‌. இவ்வாறு அனைத்தையும்‌ இருவீட்டினரும்‌

நண்பர்கள்‌ இருவரும்‌ இணைந்து செய்ய அழகாகவும்‌, சிரமங்கள்‌ இல்லாமலும்‌ செய்ய முடிந்தது.

 

தாராவை இரவு விஜய்‌ அலைப்பேசியில்‌ அழைத்திருக்க நண்பிகள்‌ அவளது அலைபேசியை வழங்காது கிண்டல்‌ செய்து கொண்டிருந்தனர்‌. ஊர்‌ சென்றிருந்த அனிதா அங்கு அவள்‌ குடுப்பதிலேயே நல்ல வரனாக வந்திருக்க அவளுக்கு பெற்றோர்‌ பேசி திருமணம் முடித்திருந்தனர்‌. அவள்‌ திருமணத்திற்கு புன்யா மற்றும்‌ தன்‌ பெற்றோருடன்‌ தாரா வேளையில்‌ சேர்ந்து ஆறு மாதங்களில்‌ சென்று வந்திருந்தாள்‌. அதன்‌ பின்னே இன்று தான்‌ நண்பிகள்‌ சந்தித்து கொள்கின்றனர்‌. அனிதா ஆறு

மாத கர்ப்பிணியாக இருந்தாள்‌. புன்யாவுக்கும்‌ அவளது வீட்டில்‌ அவளுடைய காதலுக்கு பச்சை கொடியை கொஞ்சம்‌ கஷ்டப்பட்டே காட்டினர்‌. அவனுக்கு பெற்றோர்‌ உறவினர்‌ என யாரும்‌ இல்லை என்பதை புன்யா வீட்டினர்‌ முன்வைக்க, பிரபாவின்‌ அக்காவும்‌ கணவரும்‌ வந்து அவர்களுடன்‌ பேசி சம்மதம்‌ வாங்கியிருந்தனர்‌.

தாரா விஜய்க்கு இப்போ பேச முடியாது என மெசேஜ்‌ வைத்து நாளைக்கு பேசலாம்‌ என்று அனுப்ப அவனோ, “நாளைக்கு எங்க பேசுறதுக்கு டைமிருக்கும்‌ அதான்‌ இன்னக்கி பேசலாம்னா நீதான்‌ வரமாட்டேங்குற.மருதாணி சிவந்திருக்கா ? எனக்கு நேர்ல பார்க்கணும்‌ ஸ்ரீ”

எனவும்‌ … “அச்சோ முடியல ஸ்ரீ இவளுங்க என்னை விடமாட்டேன்னு ஒரே அடம்‌ “

 

“ஓகே அப்போ வேணாம்‌ ‘என்றவன்‌ “ஏற்கனவே என்னை ஒன்‌ வீக்கா பார்க்க விடாம இருந்து இன்னக்கி இவ்வலோ பக்கத்துல இருந்தும்‌ என்னை வரவிடல்ல… இதுக்கெல்லாம்‌ சேர்த்து வசூலிக்கிறது நாளைக்கு ரொம்ப அதிகமா

இருக்கும்‌ ” எனவும்‌…

 

‘பரவாயில்லைப்பா.. வட்டியும்‌ சேர்த்து போட்டுக்கோங்க” என்று அனுப்ப,

 

“வெயிட்டிங்‌ பொண்டாட்டி ” என்று

அனுப்பியிருந்தான். அவளும் அப்படியே நாளைய கனவுகளுடன்‌ உறங்கிப்போனாள்‌.

 

மணமக்கள்‌ இருவரும்‌ தேவதைகள்‌ என அலங்காரம்‌ செய்து இன்னும்‌ அழகு மிளிர மணவாளன்களும்‌ வேட்டி சட்டையில்‌ ஆண்மைக்குரிய அழகுடன்‌ மணவறையில்‌

அமர்ந்து தன்‌ வருங்கால துணைகளுக்காக

காத்திருந்தனர்‌.அனைவரது உள்ளதிலும்‌ அன்பு நிறைந்த ஆசிர்வாதங்களுடன்‌, பெற்றோர்‌ ஆனந்த கண்ணீர்‌ கண்களில்‌ மிளிர, நண்பர்கள்‌ சேர்ந்து பூக்கள்‌ தூவி ஆசிர்வதிக்க மணமக்கள்‌ தன்‌ துணைகளுக்கு பொன்‌ தாலியை அணிவித்து தன்னில்‌ பாதி, தன்‌ உயிர்‌ மீதி என்று ஏற்றுக்கொண்டனர்‌. மகிழ்வான தருணங்கள்‌ படமாக்கப்பட, இனிதாக

கல்யாணம்‌ முடிய இரு ஜோடியும்‌ தன்‌ குடும்பம்‌ சூழ ரிசார்டுக்கு வந்தடைந்தனர்‌. மணமக்களை அமரவைத்து நண்பர்கள்‌ பட்டாளம்‌ சூழ்ந்து அவர்களை கேலி கிண்டல்கள்‌ செய்து நேரத்தினை போக்க,மதிய உணவினை அனைவரும்‌ சேர்ந்து உண்டனர்‌.மாலை வரவேற்பிற்கு தயாராக வேண்டும்‌ என்பதால்‌ மண

மக்களை சற்று ஓய்வெடுக்குமாரு அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு அனுப்பப்பட்டனர்‌. தாராவுக்கு உதவியாக புன்யா வந்து அவளது நகை உடைகளை கழட்ட உதவியவள்‌ அவளும்‌ உடை மாற்றிக்கொண்டு சற்று வெளியே வர தாராவும்‌ கட்டிலில்‌ சாய்ந்தவள்‌.அப்படியே உறங்கியும்‌ விட்டாள்‌. விஜய்‌ உள்ளே வந்து பார்க்க நல்ல உறக்கத்தில்‌ இருந்தாள்‌. சற்று நேரம்‌ சோபாவில்‌ சாய்ந்திருந்தவன்‌ குளித்து உடை மாற்றி வரவேற்பிக்காக தயாராகினான்‌. ஷர்ட்டை மட்டும்‌ அணிந்து கொண்டவன்‌ வெளியில்‌ சென்று புன்யாவை  அனுப்பி விட அவள்‌ வந்து எழுப்பும்‌ வரை

எழுந்திருக்கவில்லை.” ஹேய்‌ பேபி எழுந்துக்கோ..

டைமாச்சு… அவள்‌ எழுந்து அமரவும்‌ ” நா என்னவோ ரெண்டு பேரும்‌ ரொமான்ஸ்‌ பண்ணிக்கிட்டு

 

இருப்பீங்கன்னு பார்த்தா நீ நல்லா தூங்கியிருக்க. ஹீரோ சார்‌ ரெடியாகிட்டு உன்னை எழுப்பி விடுன்னுட்டு போறாரு. சுத்தம்‌…’ என்றவள்‌, ‘ போ பிரெஷாகிட்டு வா.. டிரஸ்‌ பண்ணிவிட வெளில வெய்ட்‌ பன்றாங்க. ” என்றாள்‌.

 

“அச்சோ வந்திருந்தாங்களா? நா நல்லா அசந்து தூங்கிட்டேன்‌ பா.ஆமா அனி எங்க? ” எனவும்‌,

 

“அவ ரூம்ல ரெஸ்ட்‌ பண்றா… டைம்க்கு வந்தா போதும்ணேன்‌. பார்க்க டையார்டா இருந்தா “

 

‘அப்போ நானும்‌ போய்‌ ரெடி ஆகுறேன்‌.. உன்னை பார்த்ததும்‌ ஹீரோ சார்‌ மயங்கி விழணும்‌ உன்‌ அழகுல ஓகே. ” என அவள்‌ கன்னத்தில்‌ இதழ்‌ பதித்தவள்‌ வெளியே போக அவளை அலங்கரித்து விட வந்தவர்கள்‌ இரண்டு மணிநேரங்கள்‌ அவளை ஒரு தேவதை என ஆங்சரித்திருந்தனர்‌. ஏற்கனவே அவள்‌ அழகும்‌ நிறமும்‌ நன்றாகவே இருக்க அதட்கேற்ற அவள்‌ உடை நிறமும்‌ அவள்‌ அழகை இன்னும்‌ ஜொலிக்க வைத்தது.இரு ஜோடியும்‌ மேடை ஏற அனைவரும்‌ சந்தோஷ கூச்சல்களுடன்‌ வரவேற்றனர்‌. இனிதே வரவேற்பு முடிந்து இரு ஜோடிகளும்‌ அதே ஹோட்டலில்‌ தங்க ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது.

 

அதனால்‌ ஏனையோர்‌ அவர்களிடம்‌

விடைப்பெற்றுக்கொண்டு கிளம்ப இரு ஜோடிகளும்‌ பாட்டியிடம்‌ ஆசிர்‌ வாதம்‌ வாங்கிவிட்டு அருணாவிடம்‌

வந்த நிவி “சாரி அத்தை” என்றாள்‌..

 

“ஹேய்‌ என்ன இது சந்தோஷமா இருடா ” என நெற்றியில்‌ இதழ்‌ பதித்து விடைக்கொடுத்தார்‌ .

 

விஜய்‌ அருகில்‌ வந்தவள்‌, “அத்து எனவும்‌ “என்னடா? என அவளைப் பார்க்க,”சாரி அத்து… எல்லாத்துக்கும்‌… அன்‌ தேங்க்ஸ்‌ அ லோட்‌.”  என்றாள்‌. கண்களோ நீர்‌ நிறைந்து ஓரிரு துளிகள்‌ கன்னங்களில்‌ இறங்க,

“நிவி குட்டி என்ன இது… பி ஹாப்பி டா… நாளைக்கு பார்க்கலாம்‌.” என அவளை தோளோடு அணைத்து கொள்ள “தேங்க்ஸ்‌ அத்து…” மீண்டும்‌ கூறியவள்‌ தாராவிடமும்‌ கூறிக்கொண்டு உள்ளே சென்றனர்‌. குமார்‌ விஜயின்‌ தோள்களில்‌ தட்டிக்கொடுத்தவர்‌, “சந்தோஷமா இருங்க என்று ஆசிர்வதித்து காலையில அழைச்சிட்டு போக வருவாங்க.”

 

“வேணாம்‌ மாமா ஹரிண்ணா இருக்காங்க. அவங்க கூட வந்துர்றோம்‌ மாமா.” என்று விடைபெற்றுக்‌ கொள்ள அவர்கள்‌ வீடு சென்றனர்‌. நாளை இரு வீட்டுக்கும்‌ மாறி செல்வதென்றால்‌ கஷ்டம்‌ என்று முதலில்‌ தருண்‌, தாரா வீட்டுக்கும்‌, அடுத்த நாள்‌

விஜய்‌, நிவி வீட்டுக்கும்‌ செல்லலாம்‌ என முடிவெடித்திருந்தனர்‌. ஹரியும்‌ அவனது மனைவியும்‌ ஒர்‌ அறை புக்‌ செய்து அங்கேயே தங்க ஏற்பாடு. அவர்கள்‌ அறையில்‌ நிவி மற்றும்‌ தாராவை உடை மாற்றி விட்டு அவர்களுக்கான இரவினை எதிர்‌ கொள்ள அவர்களது அறைக்கு ஹரியின்‌ மனைவி அனுப்பி வைத்தாள்‌ .படபட க்கும்‌ இதயத்துடன்‌

தன்னைவனைக்‌ காண சென்றாள்‌ தார.

 

‘ஹாப்பி மெரிட்‌ லைஃப்‌” என ஹரியின்‌ மனைவி அவளை வாழ்த்தி ‘ உள்ளே போ ‘ என அவளை அனுப்பிவிட்டு செல்ல, இவளும்‌ உள்‌ நுழைந்தாள்‌..

 

நிவிக்கும்‌ அவ்வாறே… .

தருண்‌ மற்றும்‌ நிவியும்‌ இனிதாக அவர்கள்‌ வாழ்வினையும்‌ மகிழ்வுடன்‌ தொடங்கினர்‌.

 

விஜயின்‌ அறையினுள்ளே தாரா நுழைய அறை முழுதும்‌

வெள்ளைப்‌ பூக்களால்‌ அலங்கரிக்கப்பட்டு இருக்க நாயகனோ இவளை எதிர்‌ பார்த்து காத்திருந்தான்‌. ஆனால்‌ இவள்‌ அவனை தேட அவனோ இவள்‌ பின்னால்‌ வந்தவன்‌,

“ஸ்ரீ குட்டி… எனவும்‌ பட்டென திரும்ப அவன்‌ மீதே மோதி நின்றாள்‌… ‘ஹேய்‌! பார்த்து பார்த்து என்றவன்‌ அவளை அணைவாய்‌ பிடித்து அவளை பார்க்க முகம்‌ சிவந்திருக்க, “என்னாச்சு?”  எனவும்‌ “ஒன்னுமில்ல’ என தலையாட்டியவள்‌ அவன்‌ நெஞ்சிலே சாய்ந்துக்கொண்டாள்‌. கொஞ்ச நேரம்‌ எந்த சத்தமும்‌ இல்லாமல்‌ இருக்க” ஸ்ரீ…”என அழைக்க அவன்‌ முகம்‌ இவள்‌ பார்க்க சிரித்துக்கொண்டே “நான்‌ நினச்சேன்‌ மயங்கிட்டியோன்னு…”

 

இவள்‌ பட்டென அவன்‌ நெஞ்சிலே அடித்துவிட, அவள்‌ கைகளை பிடித்துக்கொண்டவன்‌ “நான்‌ தானே பனிஷ்மென்ட்‌ தாரதா சொன்னென்‌. நீ ஏன்‌ அடிக்கிற” என அவளை அப்படியே திருப்பி பின்னிருந்து அணைத்துக்கொண்டான். அவளை இதமாய் தன்‌ வசப்படுத்தியவன்‌

அவளையும்‌ முழுவதுமாக தன்‌ வசமாக்கிக்கொண்டான்‌…

 

அன்றைய இரவினை திகட்ட திகட்ட அனுபவித்தவர்கள்‌ நடுநிசி தாண்டிய அதிகாலைக்கு முன்னரான நேரமே

உறக்கத்தை தழுவி இருந்தனர்‌…

 

காலை முதலில்‌ கண்விழித்தவள்‌ பார்க்க, அவன்‌ நெஞ்சிலே தலை சாய்ந்திருக்க அவன்‌ ஒரு கையால்‌ அவளை அணைவாய்‌ பிடித்த வண்ணம்‌ நல்ல உறக்கத்தில்‌ இருந்தான்‌. சிறிது நேரம் அவனை பார்திருந்தவள் அப்படியே அணைத்த வண்ணம்‌ மீண்டும்‌ உறங்கிப்போனாள்‌. விஜய்‌ ஏழு மணிபோல எழும்ப அவளை பார்த்தவன்‌ நல்ல உறங்கிக் கொண்டிருந்தாள்‌. மெதுவாக அவளை விட்டு எழுந்தவன்‌ அவனது அறை மினி கிட்சேனை போலவே இங்கும்‌ இருக்க இருவருக்குமாக டீ தயாரித்தவன்‌ அவளருகே வந்து அவள்‌ முகத்தில்‌ விழுந்திருந்த முடிகளை காதோடு ஒதுக்கியவன்‌

“ஸ்ரீம்மா…’ என அவள்‌ நெற்றில்‌ இதழ்‌ பதித்து எழுப்பினான்‌… புரண்டு அவன்‌ மடியில்‌ தலை வைத்தவள்‌ அவனை அணைத்துக் கொண்டு,”கொஞ்ச நேரம்‌ ப்பா…”

” இது ரொம்ப மோசம்‌ ஸ்ரீ,நான் 

பண்ண வேண்டியதெல்லாம்‌ நீங்க பண்றீங்க நாளைல இருந்து நீதான்‌ என்னை எழுப்பனும்‌ நாந்தான்‌ உன்மடில தூங்கிக்கனும்‌… “

“ஓகே என்றுவள்,’பஸ்ட்‌ எழுந்தவங்களுக்கு பனிஷ் மென்ட்டா அடுத்தவங்களுக்கு டீ போடணும்‌ ஓகே” என்றாள்.அவள் எழுந்தமர அவனோ அவளை பார்த்தவிதம்‌ அவளை முழுவதுமாக போர்வையால்‌ போர்த்திக்கொண்டாள்‌. இருவரும்‌ தேநீர்‌ அருந்தி காதல்‌ யுத்தமிட்டு குளித்து முடித்து தயாராகினர்‌. அவர்கள்‌ வீடு செல்வதற்க்காக.

 

அவர்களை, இனிதாய்‌ காதலுடன்‌ என்றும்‌ சிறப்பாக வாழ்க என வாழ்த்தி விடை பெறுவோம்‌.

 

ஆண்களுக்கு பூ போன்ற இதயம்‌ இருக்க பெண்களை

இதமாய்‌ கையாள்வர்‌…

கல்லென இதயம்‌ இருக்க பெண்கள்‌ கரும்பென சக்கையாக

பிழியப்படுவர்‌…

ஆண்கள்‌ ஆண்மையிலும்‌

கம்பீரத்திலும்‌

உறுதியிலும்‌

பொறுப்புக்களிலும்‌

 உழைப்பிலும்‌

இரும்பென இருந்து,

மனதில்‌ பூ போன்று இருக்க அவர்களை பூவாகவே பெண்களுக்கு தெரிவார்கள்‌…

நாளை  epilogue.