ஈஸ்வரனின் ஈஸ்வரி

IMG-20201019-WA0006-46ec2262

ஈஸ்வரனின் ஈஸ்வரி

அத்தியாயம் – 13 

தன் அத்தை மாமாவுடன், வீட்டிற்குள் நுழைந்தவள் அங்கே ஒவ்வொருவரும் செய்யும் வேலைகளை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

கொஞ்ச நஞ்ச வேலையா பார்த்தார்கள் அன்று, தங்களுக்குள் அன்று பிரச்சினையை ஏற்படுத்தி, சண்டையை பெரிதாக்கி விட்டவர்கள் அல்லவா.

அது மட்டுமா! அத்தையை அன்று பேச விடாமல் செய்ய என்னவெல்லாம் செய்ய துனிந்தார்கள் என்று பார்த்தவள் ஆயிற்றே.

“என்ன சித்தி! எப்படி இருக்கீங்க? திரும்ப எதும் பிளான் போடுறீங்களா என்ன?” என்று கேட்டவளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

“எங்க எந்த பக்கம் போனாலும், புருஷனும், பொண்டாட்டியும் கேட் போட்டு வச்சு இருக்கீங்களே. அதுவும் அன்னைக்கு வாங்கின அரை தான், எனக்கு மறக்குமா என்ன? ” என்று நினைத்துக் கொண்டார் ஈஸ்வரனின் அத்தை.

“வா மா! எப்படி இருக்க? தம்பி நல்லா இருக்கானா? அப்போ எதோ புத்தி கெட்டு போய் அப்படி பண்ணிட்டேன், அதுக்குன்னு என் தம்பி குடும்பத்தை பழி வாங்குவேணா என்ன?” என்று கூறிய அவரை பார்த்து, மனதிற்குள் நொடித்துக் கொண்டாள்.

“ம்க்கும்! இது பேசுறது எல்லாம் அண்ட புழுகு, ஆகாச புழகு, அப்படியே நாங்க நம்புற மாதிரி என்னமா ஆக்டிங் கொடுக்குது?”.

“நான் எல்லாம் என் வீட்டுக்காரருக்கே டப் கொடுக்குற ஆளு, இது எம்மாத்திரம்?” என்று எண்ணிக் கொண்டவள், அடுத்து அவள் கூறிய விஷயத்தில், அவர் தான் அரண்டு விட்டார்.

“இன்னும் ஒரு வாரம் இங்க தான், என் அத்தை எங்களுக்கு சமைச்சதுக்கு அப்புறம் நீங்க உங்களுக்கு வேண்டியதை செய்துக்கோங்க”.

“இது இப்போ மட்டும் இல்லை, இனி எப்போவுமே இப்படித்தான். அப்புறம் எங்க உங்க பசங்க எல்லாம்?” என்று கேட்டாள்.

அப்பொழுது தான் எழுந்து வந்த அவரின் ரெட்டை பிள்ளைகள், அவளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இவள் வருவது பற்றி, அங்கே யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் அவர்கள் இன்று ஊர் சுற்ற எண்ணி இருந்தனர், இப்பொழுது ஊர் என்ன வீட்டு படியை கூட தாண்ட முடியுமோ என்பது சந்தேகம் தான்.

“அட அட! இங்க தான் இருக்கீங்களா! சரி சரி, ஒட்டடை குச்சி எடுத்து, வீட்டை சுத்தி இருக்கிற ஒட்டடை எல்லாம் எடுத்து விடுங்க”.

“ஒரு ஆள் கீழே, இன்னொரு ஆள் மேல போய் ஓட்டடை எடுங்க. ஆமா உங்க தலை எங்க, ஊர் சுத்த போய்ட்டானா என்ன?” என்று அவர்களின் சின்ன மாமனின் மகன் மூர்த்தியை விசாரித்தாள்.

அவர்கள் திருதிருவென்று முழிக்கும் விதத்திலேயே, அவன் வீட்டில் இல்லை என்பதை புரிந்து கொண்டாள். அவனை இங்கே வர வைக்க, அவள் அடுத்து டார்கெட் செய்தது அவனின் அம்மா மாலாவை தான்.

“மாலா அத்தை! எங்க இருக்கீங்க? கொஞ்சம் இங்க வாரீங்களா” என்று ஹாலில் அமர்ந்து அழைத்தவளை பார்த்து, நடுங்கிக் கொண்டே வந்தார் அவர்.

அவருக்கு நன்றாக தெரியும், அவள் மகனை பற்றி தான் கேட்பாள் என்று, அவள் வந்ததை அறிந்தவுடன், பெட்ரூம் சென்று மறைந்தவர் தான் வெளியே வர அவ்வளவு பயந்தார்.

ஏனெனில், அவர் மகனை பற்றி தான் அவருக்கு நன்றாக தெரியுமே. காலையில் சென்றால், அவன் வருவது இரவு ஒரு மணியோ, ரெண்டு மணியோ தான். அந்த அளவு, அவன் தன் நண்பர்களுடன் வெளியே சுற்றுவதை தான் விரும்பினான்.

இதை பற்றி கேட்டால், அவனுக்கு கோபம் முன்னுக்கு வந்து எல்லோரையும் ஒரு வாட்டு வாட்டி எடுத்து விடுவான். அந்த அளவுக்கு அவன் கோபக்காரன், அன்று நடந்த பிரச்சனைக்கு பிறகு அவன் தன்னையே இறுக்கிக் கொண்டான்.

“அத்தை!! நாம ஒண்ணுமே செய்ய முடியாதா?” என்று கேட்டான் மூர்த்தி அவன் அத்தையிடம்.

“செக் வச்சுடாங்க டா! இனி நாம செய்ய ஒண்ணுமே இல்லை. ஹ்ம்ம்! இனி நாம அவங்க சொல்லுறதை கேட்டு இருந்தா தான், நாம நம்ம சொத்தை அனுபவிக்கவாவது முடியும், இல்லைனா முடியாது” என்று கூறி பெருமூச்சு விட்டார் கங்காவதி.

அன்று இறுகி போனவன் தான், அதன் பிறகு அவன் இங்கே வீட்டுக்கு வருவது தூங்க மட்டுமே. அவனின் ஏமாற்றம் அறிந்த அவனின் அத்தையும், அவனை அவன் போக்கில் விட்டு விட்டார்.

“என்ன அத்தை? இப்படி பம்மிகிட்டு இருக்கீங்க? உங்க பையனை வர சொல்லுறீங்க, அதுவும் இப்போவே. சார் கிட்ட பேச வேண்டி இருக்கு, நான் வர சொன்னேன்னு சொல்லியே கூப்பிடுங்க” என்று கூறிவிட்டு மாடியில் உள்ள அவர்களின் அறைக்கு சென்றாள்.

இன்று அவள் ஒரு முடிவுடன் தான், இங்கு கிளம்பி வந்தாள். தன் மாமனாருக்கு அவர்களின் சுயரூபத்தை காட்டிக் கொடுக்க வேண்டும், அதன் பிறகு இங்கு இருந்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவள் வந்ததே.

கீழே மூர்த்தியின் அன்னை நடுங்க தொடங்கினார், பையனிடம் பேசவே முடியாது இப்பொழுது. ஆகையால் அவரின் அண்ணியின் உதவியை நாடினார் அவர்.

“அண்ணி! நீங்களே போன் பண்ணி சொல்லுங்க, என் பையன் நான் சொல்லி கேட்கவா போறான். நீங்களே பேசி அவனை வர வைங்க, இல்லைனா நம்ம நிலைமை இதை விட மோசமா போனாலும் போகாலாம்” என்று கூறினார்.

அவருக்கும் புரிந்தது, இப்பொழுது ஈஸ்வரி எதற்கு வந்து இருக்கிறாள் என்பதை அறியாதவரா? அன்றே சொல்லிவிட்டு சென்றாளே, திரும்பவும் வருவேன் என்று.

“மூர்த்தி! எங்க இருந்தாலும் நீ உடனே கிளம்பி வா இங்க, இருக்கிற சொத்தை அனுபவிக்கனும் அப்படின்னு நினைச்சா வீட்டுக்கு வந்து சேறு” என்று சொல்லிவிட்டு வைத்தார் கங்காவதி.

அடுத்த அரை மணி நேரத்தில் அவன் அங்கே வீட்டில் இருந்தான், கோபத்தில் வார்த்தைகளை கொட்டிக் கொண்டு இருந்தான் அங்கே அவன் அன்னையிடம்.

பளார் என்று அவன் அத்தை அடித்த பிறகு தான், அவனின் சுயத்திற்கு வந்தான்.

“அவ உனக்கு அம்மா முதல, அது நியாபகம் இருக்கா? உனக்காக தானே அவளும் இங்க, இவ்வளவு நடந்த பிறகும் இருக்கா. உனக்கு பிடிக்காதது எதுவும், இதுவரை அவ செய்து இருப்பாளா?”.

“கோபம் வந்தா என்ன வேணா, அவளை பேசிடுவியா நீ?” என்று அதட்டிக் கொண்டு அவர் இருக்க, அப்பொழுது அங்கே பலத்த கைதட்டல் சத்தம் கேட்டு, அங்கே திரும்பி பார்த்தவர்கள், ஈஸ்வரி அங்கே அவர்களை பார்த்து ஏளனமாக சிரித்தாள்.

“ஆஹா! ஆஹா! அப்படியே புல் அரிக்குது எனக்கு. இப்படி ஒரு நாளாவது நீங்க உங்க பெரிய தம்பி பையனுக்கு, அவரோட தப்புகளை சுட்டி காட்டி இருக்கீங்களா?”.

“அட்லீஸ்ட் அவரோட வெற்றிக்கு, எதுவும் பாராட்டு கொடுத்து இருக்கீங்களா? எதுவும் இல்லை!! ஏன்?” என்று அவள் கேள்வி எழுப்பினாள்.

“ ஹ்ம்ம்! அவன் ஒன்னும் என் சொந்த தம்பி இல்லையே. எவனோ ஒருத்தனை என் அம்மா, அப்பா உன் தம்பின்னு கூட்டிட்டு வந்து வளர்த்து, சொத்தை அவன் பேர் ல எழுதி வைப்பாங்க”

“அதை பார்த்திட்டு, நானும் அமைதியா இருந்திடனுமா என்ன? நியாயமா, அந்த சொத்து எல்லாம் எனக்கும், என் தம்பிக்கும் தான் சேரனும்”.

“அதுக்காக நான் எந்த அளவுக்கு வேணும்னாலும், போக தயார். இவன் என் தம்பி பையன், இவனை கண்டிக்க எல்லா உரிமையும் எனக்கு இருக்கு” என்று சற்று ஆங்காரத்துடன் கூறியவரை பார்த்து, இப்பொழுதும் கையை தட்டினாள்.

“வெரி குட்! இதை தான் உங்க கிட்ட இருந்து எதிர்பார்த்தோம். சரி! இன்னும் கொஞ்ச நேரத்தில் வக்கீல் எல்லாம் வருவாங்க, வீட்டை ஒழுங்குபடுத்தி வைங்க” என்று கூறிவிட்டு ஒரு பார்வை செலுத்தி சென்றவளை பார்த்து இப்பொழுது, அதிர்ந்து போனார் கங்காவதி.

“ வக்கீலா!! இப்போ என்ன குண்டு போட போறா டா இவ? ஹையோ! அவசரபட்டு கத்திட்டேன் போலயே!!” என்று பதறினார்.

உள்ளே வந்த ஈஸ்வரி, அங்கே தன்னுடைய மாமனாரின் நிலமையை பார்த்து, அவர் அருகே ஓடினாள். நெஞ்சை பிடித்துக் கொண்டு, அமர்ந்து இருப்பவரை பார்த்து அவளுக்கு வேதனையாக இருந்தது.

“மாமா! இப்போவாவது நான் சொல்லுறதை கேளுங்க, நாம இங்க இருக்க வேண்டாம். வக்கீல் வச்சு, இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு எடுப்போம்”.

“உங்க பையனுக்கு போன் பண்ணி தரேன், நீங்களே அவங்க கிட்டயும் பேசிடுங்க” என்று கூறிவிட்டு அவள் ஈஸ்வருக்கு அழைத்து, விஷயத்தை கூறி போனை தன் மாமனாரிடம் நீட்டினாள்.

அங்கே அவன் என்ன கூறினானோ, உடனே அவர் ஈஸ்வரி கூறியதற்கு ஒத்துக் கொண்டார். அன்றும் இதை செய்ய சொல்லி, தன் அத்தை கூறியதை கேட்டு அவருக்கு அப்பொழுது எதோ ஒன்று தடுத்து நிறுத்தி இருந்தது.

சகோதரியின் மேல் அவர் வைத்த அன்பும், மரியாதையும் எல்லோரும் அறிந்து இருந்தபடியால் அன்று சில விஷயங்களை மட்டும், அவர் சரி செய்து கொடுத்து இருந்தார்.

இன்று, இப்படி அவரின் சகோதரியின் வாயில் இருந்தே அவரின் எண்ணத்தை தெரிந்த பின், அவரால் இனியும் இங்கே இருப்பது சரியாக தெரியவில்லை.

அதனால், அடுத்து வக்கீல் வந்த உடனே கடையையும், வீட்டையும் சகோதரியின் பேரிலும், அவரின் தம்பியின் பேரிலும் எழுதி கொடுத்துவிட்டு தன் மகளையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு, அவர் அன்று மாலையே வெளியேறினார்.

“அம்மாடி! மன்னிச்சிடு மா, மனுஷங்களை சரியா புரிஞ்சிக்க இத்தனை வருஷம் தேவைப்பட்டது. மனைவியை, மகனை எல்லாம் இத்தனை வருஷம் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்”.

“சாரதா! உனக்கு நான் செய்தது எவ்வளவு பெரிய கொடுமை, அதான் கடவுள் எனக்கு இன்னைக்கு மண்டையில் நல்லா உரைக்குற மாதிரி என் அக்கா வாயில் இருந்தே விஷயத்தை போட்டு உடைச்சிட்டார்” என்று குலுங்கி குலுங்கி அழுது விட்டார்.

ஈஸ்வரியின் அன்னை வீட்டில் தான் எல்லோரும், இப்பொழுது இருந்தனர். அவரால் ஜீரணிக்க முடியவில்லை, இப்படி ஒரே நாளில் தான் இத்தனை நாள் இருந்த வீட்டை விட்டே வெளியேற்றப்படுவோம், என்று அவர் கனவில் கூட நினைக்கவில்லை.
அவரை ஈஸ்வரியும், அவரின் மனைவி சாரதாவும் தாங்கிக் கொண்டனர். எப்பொழுதும் அவருக்கு பக்க பலமாக இருப்போம், என்ற செய்தி அதில் இருப்பதாக அவருக்கு அப்பொழுது பட்டது.

“சம்மந்தி! இதுவும் உங்க வீடு மாதிரி தான். எந்த சங்கடமும் உங்களுக்கு வேண்டாம், சாந்தா அவங்களுக்கு தேவையானதை பார்த்து கொடு மா”.

அம்மாடி ஈஸ்வரி! மாப்பிள்ளைக்கு போன் போட்டு சொல்லியாச்சா?” என்று கேட்டார் ஈஸ்வரியின் தந்தை சங்கரன். 

“சொல்லியாச்சு பா! இனி அவங்களா போன் பண்ணுற வரைக்கும், நாம பேச முடியாது” என்றாள்.
அதன் பின் சங்கரன் வேறு பேச்சு கொடுத்து, ஈஸ்வரனின் தந்தை ருத்ரனை சகஜமாக்கினார். இரவு உணவு ஏற்பாடு செய்து கொண்டு இருந்த பெண்கள், அப்பொழுது வெளியே எதோ காரசாரமான விவாதம் கேட்கவும், வெளியே வந்த ஈஸ்வரி அங்கே நின்று இருந்தவனை பார்த்து கோபத்துடன், அங்கே விரைந்தாள்.

“டேய் சைத்தான்! இப்போ எதுக்கு டா இங்க வந்து கத்திகிட்டு இருக்க? என்ன பிரச்சினை உனக்கு?” என்று அவனை பார்த்து நக்கலாக கேட்டாள்.

“நான் ஒன்னும் பிரச்சனை பண்ணனும் அப்படினு நினைக்கல, ஆனா உன் புருஷன் எனக்கு பிரச்சனை கொடுத்துகிட்டு இருக்கான், சொல்லி வை அவன் கிட்ட” என்று மிரட்டினான் சேத்ரன், தொழிலதிபர்

பாண்டியனின் மகன், ஈஸ்வரியின் அத்தை மகன்.
“அப்போ நீ எதோ தப்பு செய்து இருக்க! அப்படிதானே?” என்று சரியாக கேட்டுவிட்டாள்.
“என்னது!! தப்பு பண்ணி இருக்கேனா? லூசு! லூசு! என் அப்பா இறந்து, அவரோட அஸ்தியை ராமேஸ்வரம் நதியில் கரைக்க, அவன் கிட்ட சொல்லிட்டு போகலாம் நினைச்சா, பெரிய இவன் மாதிரி, உங்க அப்பா கேஸ் ல மர்மம் இருக்கு, எங்கேயும் போக கூடாதுன்னு ரூல் போடுறான்”.

“எனக்கு மும்பையில் முக்கியமான மீட்டிங் எல்லாம் இருக்கு, ஆன்லைன் ல அட்டெண்ட் பண்ண வேண்டியது கிடையாது, நேர்ல போய் பார்க்க வேண்டியது”.

“அதுக்கும் போக விடாம, இப்படி எல்லாத்துக்கும் முட்டுக்கட்டை போட்டுகிட்டு இருக்கான். தொழில் பண்ணா தானே, நாளைக்கு என் பிள்ளையை இன்னும் நல்ல நிலமைக்கு கொண்டு வரலாம்” என்று பேசியவனை பார்த்து சிரிக்க தொடங்கினாள்.

அவனோ, இவ்வளவு சீரியசாக பேசிக் கொண்டு இருக்கையில் இவள் இப்படி சிரிப்பது பொறுக்காமல், அவளை பார்த்து கை ஓங்க போனான்.

அதற்குள் அவள் அடுத்து முறைத்த முறைப்பில், கை தானாக கீழே இறங்கியது.
“ஏன்டா மாமா இறந்ததை சொல்லல? அத்தை இறந்த அப்போ, மாமா அப்போவே எங்க கிட்ட சொல்லி எப்படி மன்னிப்பு கேட்டார் தெரியுமா?”.

“லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அது எங்க தாத்தாவுக்கு பிடிக்கல, அப்போ அவர் எங்க அப்பாவை, பெரியப்பாவை எல்லாம் அவங்க தங்கச்சி கூட பேச விடல”.

“இதான் சாக்குனு, அப்போ மாமாவும் அத்தையை கூட்டிட்டு போனவர் தான். அப்புறம் தாத்தாவுக்கு தெரியாம, அத்தையுடைய ஆசைக்காக, மாமா அப்போ அப்போ இங்க கோவிலுக்கு கூட்டிட்டு வந்து அவங்களை எங்க கூட பேச விடுவாங்க”.

“அப்படி தான் உங்களை பத்தி எல்லாம் நாங்க தெரிஞ்சி வச்சு இருக்கோம். உனக்கு எப்படி கல்யாணம் நடந்தது கூட எங்களுக்கு தெரியும், அத்தை இறந்ததே அந்த அதிர்ச்சியில் தானே”.

“பையனை சரியா வளர்க்கல அப்படினு நினைச்சு நினைச்சு, உயிர் விட்ட புண்ணியவதி டா அவங்க. நீ அப்போ எல்லாம் வராம எங்க போன, மாமா எவ்வளவு உடைஞ்சு போய் இருந்தார் தெரியுமா?”.

“அப்போ இந்தா உன் மனைவி சஞ்சனா தான், எங்களுக்கு போன் போட்டு சொல்லி எங்களை வர வச்சா. பாட்டி சொல்லி தான், அப்புறம் நாங்க அங்க உன் அப்பாவுக்கு துணையா இருந்தோம்”.

“உங்க அப்பாவுக்கும், எங்களுக்கும் அதுக்கு பிறகு தொடர்பு இருந்தாலும், சில காரணத்துக்காக ரொம்ப டச் ல இல்லாம இருந்தோம்”.

“ஆமா! ஏன் சஞ்சு நீயாவது சொல்லி இருக்கலாமே? நீ ஏன் எங்களுக்கு சொல்லவே இல்லை?” என்று கேட்டாள்.

“மாமா இறந்த கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்துட்டாங்க அக்கா, அப்போ எல்லோரையும் இது கொலையா இருக்கும் நினைச்சு, அவங்க கண் பார்வையில் தான் இருக்கணும் அப்படினு சொல்லிட்டாங்க”.

“போன் பேசுறது கூட பெர்மிஷன் கேட்கணும் சொல்லுறாங்க. ஆனா டாக்டர் ஹார்ட் அட்டாக் தான்னு, சொல்லுறார். போலீஸ் இது கொலை அப்படினு, கேஸ் மூவ் பண்ணிகிட்டு இருக்காங்க”.

“இதுக்கு இடையில், என் பொண்ணு கீர்த்திக்கு தடுப்பு ஊசி போடுறதுக்கு டாக்டரை வீட்டுக்கே வரவழைக்க வேண்டி இருக்கு அக்கா. மாமா இறந்ததே எனக்கு அதிர்ச்சி அக்கா, இதுல அடுத்து அடுத்து இப்படி கொலை அது, இதுன்னு சொல்லவும் என்னால அடுத்து என்ன செய்யனும் கூட தெரியல அக்கா”.

“உங்களுக்கு சொல்லாம விட்டதுக்கு சாரி அக்கா, தப்பா எடுத்துக்காதீங்க” என்று அவனின் மனைவி சஞ்சனா கூறவும் அவளின் நிலமையை எல்லோரும் புரிந்து கொண்டனர்.

ஆனால் ஈஸ்வாிக்கு, சேத்ரன் மேல் அதிக சந்தேகம் எழுந்தது. போன தடவை கூட, பாண்டியன் மாமா இவன் சொத்துக்காக பண்ண கூத்தை எல்லாம் சொல்லி வருத்தப்பட்டாரே.
எல்லோரும் சேத்ரனிடம், அவன் தந்தையின் இறப்புக்கு துக்கம் விசாரிக்க, சஞ்சனாவோ தன்னையே குருகுருவென்று பார்ப்பது போல் தோன்றவும், என்ன நினைத்தாளோ அவளை அழைத்துக் கொண்டு அவளின் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

மற்றவர்கள் பிள்ளையை படுக்க வைக்க அழைத்து சென்றதாக எண்ணி, அவனிடம் பேசிக் கொண்டு இருந்தனர். ஆனால் அவனோ, எல்லோரின் கேள்விக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தாலும், உள்ளே எரிமலையின் சீற்றத்துடன் அமர்ந்து இருந்தான்
இந்த ஈஸ்வரியை வைத்து, அவன் ஈஸ்வாிடம் பேச வைத்து அவன் மும்பை செல்ல எண்ணி இருக்க, அவளோ அவனை பார்த்த பார்வையில் அவன் தான் அரண்டு விட்டான்.

“இவ முழியே சரியில்லையே, ஒரு வேளை இவ என்னை மோப்பம் பிடிச்சிட்டாளா என்ன?? இல்லையே நாங்க ரெண்டு மூணு தடவை தான் பார்த்து இருப்போம், அப்போவும் இப்படி சண்டை தான் எப்போவும்”.

எதுனாலும் சரி, இனி பின் வாங்க மாட்டேன். இவளை வச்சே, நான் அந்த ஈஸ்வர் கதையை முடிக்கிறேன்” என்று எண்ணிக் கொண்டு, பல திட்டங்களை தீட்டினான். 

ஆனால் அவனுக்கு தெரியவில்லை, இருவரும் அவனுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதும், ஏற்கனவே ஹார்பரில் இவனின் தொழில் என்னவென்று அறிந்து கொண்டு, அதற்கான ஆதாரங்களையும் கைப்பற்றிக் கொண்டு, இவனை கைது செய்யும் பணியை தொடங்கி விட்டான் ஈஸ்வர் என்பதும் இவன் அறியவில்லை.

அப்படி அறிந்த பிறகு, அவனின் செயல்கள் அடுத்து எப்படி இருக்கும்? இதில் யார் பாதிக்கப்படுவர்? அதன் விளைவுகளை எல்லாம் எப்படி சமாளிப்பான் ஈஸ்வர்?.

தொடரும்..

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!