உடையாத(தே) வெண்ணிலவே 17

மதுரா மருத்துவமனையே மான்யாவை பரிதாபமாக பார்த்தது.

கால சக்கரம் போல காலையிலிருந்து மாலை வரை நிற்காமல், அவள் கால்கள் சுழன்றால் சுற்றியிருப்பவர்கள் அப்படி பார்ப்பது வாஸ்தவம் தானே.

ஆனால் விஷ்வக்கால் எல்லோரையும் போல வெறுமனே நின்று அவளை வேடிக்கை பார்க்க முடியவில்லை.

பதற்றமாக நடந்து சென்றவளின் முன்னே கை நீட்டி இடைமறித்தான். அவள் பார்வை கேள்வியாய் அவன் மீது விழுந்தது.

“ஏன், மான்யா காலையிலே இருந்து வேலை வேலைனு ஓடிட்டு இருக்க. சர்ஜரி கூட இல்லையே” அவன் குரலில் அக்கறை ஊறியிருந்தது.

“ஆமாம் விஷ்வக். ஆனால் ஷ்யாம் எமெர்ஜென்சியிலே வந்து அட்மிட் ஆகுற பேஷன்ட்ஸை எல்லாம் பார்க்க சொல்லிட்டாங்க. அதான்…” என்று இழுத்தவளை பெருமூச்சோடு பார்த்தான்.

“அதுக்குனு சாப்பிடாம கூட வேலை பார்ப்பாங்களா?” கண்டித்தபடியே அவள் கையை இழுத்துக் கொண்டு கேன்டீனை நோக்கி நடக்க முயன்றான்.

“விஷ்வக் ஒரு ப்ளட் டெஸ்ட் எடுக்கணும் எடுத்து முடிச்சுட்டு வந்துடுறேனே” அவசரமாக சொன்னவளை மறுப்பாக பார்த்தான்.

“நீ என்ன சொன்னாலும் விட மாட்டேன். டைம் நாலுக்கு மேலே ஆகிடுச்சு. இன்னும் லன்ஞ் சாப்பிடாம இருந்தா என்ன அர்த்தம்?” அவள் கையிலிருந்த பேப்பரை பிடிங்கியவன் அங்கு நின்றிருந்த நர்ஸ் ப்ரீத்தியிடம் நீட்டினான்.

“நீங்க அந்த பேஷன்டை டேக் கேர் பண்ணிக்கோங்க. மான்யா, இன்னும் அரை மணி நேரத்திலே வந்துடுவாங்க” தகவலாக சொல்லியபடியே மான்யாவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு கேன்டீனில் உட்கார வைப்பதற்குள் அவனுக்கு மூச்சு வாங்கியது.

தன்னைப் பற்றி யோசித்து தனக்காக மெனக்கெடும் விஷ்வக்கைக் கண்டு அவள் இதழ்களில் புன்னகை முகிழ்த்தது.

அவள் புன்னகையைக் கண்டவன், “என்ன சிரிப்பு? அதிகமா வொர்க் கொடுத்தா மறுக்காம இப்படி தான் எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்வீயா?” வருத்தமாக கேட்டபடியே அவளுக்கான உணவை ஆர்டர் செய்தான்.

“இல்லை விஷ்வக், ஷ்யாம் என்னை நம்பி ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்கும் போது தட்டிக் கழிக்க மனசு வரலை. அதான்…” என்று இழுக்கும் இந்த மான்யா விஷ்வக்கிற்கு மிகப் புதியவள்.

“மான்யா ஆர் யூ ஆல்ரைட்?” என்றான் குழப்பமாக.

“யா ஐ யம்” என்றவளின் பதிலை வேகமாக தலையசைத்து மறுத்தான்.

“நோ யூ ஆர் நாட் அட் ஆல் ரைட். ஷ்யாம் சரியாவே ஏதாவது சொன்னாலும் மல்லுக்கட்டி நிற்பியே. பட் இப்போ அதிகமான வேலைபளு கொடுக்கும் போது நீ சண்டை போட்டு இருக்கணும். ஆனால் போடல. ஏன்?”

அவன் கேள்விகள் நியாயமானது தான். முன்பிருந்த மான்யாவாக இருந்திருந்தால் கண்டிப்பாக ஷ்யாமை எதிர்த்து துருதுருவென கேள்வி கேட்டிருப்பாள். ஆனால் இப்போதிருக்கும் மான்யாவிற்குள் ஒரு நிதானம் குடியேறியிருந்தது.

“என் நல்லதுகாக தானே ஷ்யாம் இதெல்லாம் செய்யுறார் விஷ்வக். பின்னே ஏன் மறுக்கணும்?” அவளின் எதிர்க்கேள்வி அவன் நெற்றியில் சிந்தனை முடிச்சுக்களை பின்னியது.

இந்த திடீர் மாற்றம் சரியில்லையே!

ஷ்யாம் அன்று சொன்னானே ‘இதே அன்பை வைத்து விளையாட துவங்கினால் அவள் தாங்குவாளா?’ என்று.

ஒரு வேளை ஆட்டம் துவங்கிவிட்டதோ?

கவலையாக நிமிர்ந்து மான்யாவைப் பார்த்தான்.

“மான்யா ஐ யம் டெல்லிங் ஒன் திங்க். அதை எப்பவும் மறந்துடாதே” பலமான பீடிகையுடன் துவங்கினான்.

“ஷ்யாம் கிட்டே கொஞ்சம் கவனமா இரு” என்றான் எச்சரிக்கை குரலில்.

“இதுவரை அருமை பெருமையா சொன்ன உன் சீனியரைப் பத்தி இப்போ நீயே வார்ன் பண்றியே. உன் சீனியர் மேலே இருந்த நல்லெண்ணம் எங்கே போச்சு?” அசட்டையாக உணவைப் பிய்த்து வாயில் போட்டபடியே கேட்டாள்.

“அவர் மேலே எப்பவும் எனக்கு நல்லெண்ணம் இருக்கு. இருக்கும். ஆனால் உன் விஷயத்திலே மட்டும் அவரை நம்ப பயமா இருக்கு” என்றவனின் பதற்றத்தையும் அச்சத்தையும் அவள் உணரவே இல்லை.

சரி சரியென்று பெயருக்கு சொன்னவள் மீண்டும் சாப்பிட துவங்கும் பொழுது ஷ்யாமிடமிருந்து சரியாக அழைப்பு வந்து விழுந்தது.

அதைக் கண்டவள் “உன் சீனியர் தான் கூப்பிடுறாரு. இதோ போயிட்டு வந்துடுறேன்” பரபரப்பாக சொல்லிவிட்டு ஓடி சென்றவளின் காதுகளில் இவன் அழைப்பு கேட்கவேயில்லை.

பெருமூச்சோடு திரும்பியவனின் விழிகளில் கால் வாசி கூட காலி செய்யப்படாத உணவு தட்டு பட்டதும் கலக்கம் குடிக் கொண்டது.

எமெர்ஜென்சி அறை!

அங்கே கடுகடு முகத்துடன் நின்றிருந்தான் ஷ்யாம். அவனெதிரே உதட்டை கடித்து கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள் மான்யா.

“உன்னை நம்பி தானே இந்த ஃபுட் பாய்சன் பேஷன்ட்டை ஒப்படைச்சேன். ஏன் இவருக்கு இன்னும் ஸ்டூல் டெஸ்ட் எடுக்கலை” என்றான் கோபமாக.

“இவருக்கு ஆன்டிபயாடிக்ஸ் கொடுத்துட்டேன் ஷ்யாம் சார். ஆனால் டெஸ்ட்டுக்கு கன்டெய்னர் எடுக்க போறதுக்குள்ளே ட்ராமா பேஷன்ட் வந்துட்டாங்க. அவங்களுக்கு ட்ரீட் பண்ண போயிட்டேன்” என்றவளை கண் இடுங்க பார்த்தான்.

“சரி அந்த ட்ராமா பேஷன்டுகாவது எக்ஸ்ரே எடுத்தியா? இல்லை இதே மாதிரி பாதியிலேயே விட்டுட்டு போயிட்டியா?” என்றான் குரலில் காரத்தை பூசி.

“க்ளீன் பண்ணி ட்ரெஸிங் பண்ணிட்டேன் சார்.  ஆனால்…” என்று இழுத்தாள் அவள்.

“ஆனால்?” அழுத்தமாக கேட்டான் அவன்.

“ஹை ஃபீவரோட ஒரு பேஷன்ட் அட்மிட் ஆனாங்க. அவங்களுக்கு ப்ளட் டெஸ்ட் எடுக்க போயிட்டேன்” என்றவளைக் கண்டு பற்களை நறநறத்தான்.

“அந்த ப்ளட் டெஸ்டாவது எடுத்து தொலைச்சுயா?” பொறுமை இழந்திருந்தது அவன் குரல்.

“இல்லை சார் அதுக்குள்ளே சாப்பிட போயிட்டேன்” என்றாள் உதடுகளை கடித்தபடி.

“குட் அந்த வேலையாவது பர்ஃபெக்டா பண்ணிங்களே” குரலிலே கேலியின் தொனி.

அந்த கேலி மான்யாவை எப்போதும் போல இப்போதும் கீறியது. இத்தனை பேர் முன்னால் தன்னை வார்த்தையால்  கீழிறக்கியவனை கண்களில் துளிர்த்த கண்ணீரை அடக்கிக் கொண்டு கோபமாக முறைத்தாள்.

வேகமாக அவனை திட்ட வாயெடுத்த நேரம் பார்த்து துண்டிக்கப்பட்ட விரல்நுனியோடு ஒருவர் அந்த அறைக்கு அவசரமாக சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டார்.

அதுவரை கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த ஷ்யாமின் முகத்தில் சட்டென்று இயந்திர பாங்கு குடிக் கொண்டது.

வேகமாக அவருக்கு முதலுதவி அளித்தவன், “மான்யா ஸ்யூட்சர் எடுத்துட்டு வேகமா வா” என்று கட்டளையிட்டான்.

ஒரு நொடியில் எல்லா உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு வந்து நின்றவளிடம் “அவருக்கு பர்ஸ் ஸ்ட்ரிங் ஸ்யூட்சர் போடு” என்றான்.

மான்யாவிடம் லேசான பின்வாங்கல்.

வட்டமாக ஏற்பட்டிருக்கும் காயங்களில் போடப்படும் ஒரு தையல் முறையே பர்ஸ் ஸ்ரிங் ஸ்வீட்சர். இதுவரை அவள் அந்த தையல் போட்டதே இல்லை.

முகத்தில் தயக்கத்தை காட்டினாள்.

“மான்யா, காது கேட்குதா இல்லையா? சீக்கிரமா தையல் போட ஸ்டார்ட் பண்ணு” அவன் கட்டளைக்கு மறுத்து தலையசைத்தாள்.

“சாரி ஷ்யாம் சார் எனக்கு இந்த தையல் போட தெரியாது” தயக்கத்துடன் சொன்னவளின் கைகளிலிலிருந்து, வேகமாக அந்த சர்ஜிகல் ஸ்யூட்சரை பிடுங்கினான்.

“உங்களுக்கு என்ன வேலை தான் ஒழுங்கா பண்ண தெரியும் மான்யா? சாப்பிடறதை தவிர்த்து” அவன் வார்த்தையில் அடிப்பட்டு போனாள். சுற்றியிருக்கும் அத்தனை மருத்துவ ஊழியர்கள், நோயாளிகளின் முன்பு அவன் இப்படி பேசியது அவள் தன்மானத்தை சீண்டியது.

அதுவரை விழிக்குள் விழாமல் திரண்டு நின்றிருந்த கண்ணீர் உருள துவங்க அழுத்தமாக கண்களைத் துடைத்தவள் ஷ்யாமை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டாள்.

அவளின் கண்ணீரைக் கண்டு ஒரே ஒரு நொடி அசைந்தவன் பின்பு வேகமாக தையல் போடுவதில் கவனமானான்.

தன் கன்னத்திலிருந்த கண்ணீரின் தடத்தை முழுமையாக துடைத்தபடி ஸ்வேதா அறைக்குள் நுழைந்தாள்.

எப்போதும் வாடை தென்றலாக குளிர்ச்சியாக இருக்கும் மான்யாவின் முகம் இன்று கோடையின் வறட்சியாய்.

“என்ன ஆச்சு ஆன்டி ஏன் டல்லா இருக்கீங்க?” முயன்று குரலை வரவழைத்து ஸ்வேதா கேட்டாள்.

“ஒன்னுமில்லை இன்ஜினியர்” வேகமாக சமாளித்தவள், “இப்போ எப்படி குட்டி ஃபீல் பண்றீங்க? பெட்டரா இருக்கா?” கேட்டபடியே ட்ரிப்ஸை மாற்றினாள்.

“நல்லா இருக்கேன் ஆன்டி. ஆனால் முடி தான் ரொம்ப கொட்டுது. எனக்கு உங்களை மாதிரி சில்கி ஹேர் வரதுக்கு என்ன பண்ணனும்?”  விழாமல் மீதமிருந்த கால்வாசி கேசத்தை வருத்தத்தோடு சுட்டிக் காட்டி கேட்ட ஸ்வேதாவை மலர வைக்க முயன்றாள்.

“ஸ்வே குட்டிக்கு பாப் கட் பண்ணா மாதிரி முடி ரொம்ப க்யூட்டா இருக்கே. எனக்கு இந்த முடி தான் பிடிச்சு இருக்கு என்னோட  வழவழ ஹேர் சுத்தமா பிடிக்கலை. இந்த ஹேர் வெச்சுட்டு உன் பியூட்டிஃபுல் ஹேர் தரீயா” மான்யாவின் வார்த்தைகளில் உலர்ந்திருந்த ஸ்வேதாவின் உதடுகளில் புன்னகை சொட்டு.

“உண்மையாவே என் ஹேர் சூப்பரா இருக்கா?” நம்பாமல் கேட்டாள்.

“யெஸ் ரொம்ப சூப்பரா இருக்கு குட்டி. நெக்ஸ்ட் கீமோதெரபி முடிஞ்சதும் நாம ஒன்னா சேர்ந்து ஹேர் ஸ்டைல் பண்ணிக்கலாம்” என்று சொன்ன மான்யாவை இழுத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

அதுவரை ஷ்யாம் பேசிய வார்த்தைகளை எண்ணி இறுகி கிடந்த மனது அந்த முத்தத்தில் பாகாய் உருகிப் போனது.

உதட்டில் பூத்த புன்னகையுடன் வெளியே வந்தவளின் விழிகளில் வெங்கட்ராமின் உருவம் விழுந்தது.

“குட் ஈவினிங் டாக்டர்” என்றாள் சம்பிரதாயமாக.

“ஈவினிங் மான்யா. நீங்க ரீசன்டா பண்ண ஹெபோடாமி சர்ஜரி சக்சஸ் ஆகிருக்குனு சொன்னாங்க. பெஸ்ட் விஷஸ் ஃபார் யுவர் கேரீயர்” வாழ்த்தியவரை ஆச்சர்யமாக  பார்த்தாள்.

‘புள்ளைக்கு தான் பாராட்டுறதுனா என்னனு தெரியலை. ஆனால் அப்பாவாது அந்த விஷயத்திலே கஞ்சமில்லாம இருக்கிறாரே’ என்று நினைத்தவள் உதட்டில் பூத்த முறுவலுடன் “தேங்க்ஸ் எ லாட் சார்” என்றாள்.

“ஏதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளுங்க மான்யா. அன்ட் மோர் ஓவர் ஷ்யாம் இன்னைக்கு எமெர்ஜென்சி வார்ட்லே பிஹேவ் பண்ணதை நினைச்சு ஃபீல் பண்ணாதீங்க ” ஆதரவாக சொல்லிவிட்டு சென்றவரையே ஆதூரமாக பார்த்தாள்.

‘எம்ப்ளாயிஸ்கு ஒன்னுனா அவர் கண்ணு தானா கலங்கிடும்’, மீரா முன்பொரு நாள் சொன்ன வார்த்தைகள் மனச்சுவற்றில் மோதியது.

உண்மை தான் தனது மருத்துவ ஊழியர்களை அவர் நன்றாகவே பார்த்து கொள்ள முயற்சி செய்கிறார்.

இப்படிப்பட்ட நல்ல மனிதர் ஏன் மீனாட்சியம்மாளுடன் இணைந்து  வாழாமல் பிரிந்து இருக்கிறார் என்ற கேள்வியோடு நின்றவளின் மீது ஆதரவாய் விஷ்வக்கின் கரம் விழுந்தது.

“மான்யா இப்போ தான் எமெர்ஜென்சி ரூமிலே நடந்த விஷயம் கேள்விப்பட்டேன். சீனியர் கோபத்துலே பேசுனதை நினைச்சு வருத்தப்படாதே” என்றவனை திரும்பி கசந்த முறுவலோடு பார்த்தாள்.

“இதுக்கு முன்னாடி அவர் பேசுனதை என் நல்லதுக்கு தானு எடுத்துக்கிட்டேன். பட் இன்னைக்கு பேசுனதை என்னாலே பாசிட்டிவா எடுத்துக்க முடியலை விஷ்வக்” வருத்தமாக சொன்னவளின் முகம் ஒரு முடிவோடு நிமிர்ந்தது.

“எனக்கு  பர்ஸ் ஸ்ட்ரிங் ஸ்யூட்சர் போட கத்துக் கொடு. எந்த ஸ்டிசஸ் போட தெரியலைனு தானே என்னை அத்தனை பேர் முன்னாடி அசிங்கப்படுத்தினானோ அதே ஸ்டிட்சஸ்ஸை வேகமாக கத்துக்கிட்டு அவன் முன்னாடி கெத்தா நிற்கணும்” வேகமாக சொன்னவளைக் கண்டு அவன் முகம் மலர்ந்தது.

“இப்படி நிமிர்ந்து நிற்கிறவ தான் எங்களோட மான்யா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அழுதவள் வேற யாரோ” என்றபடி பக்கத்தில் காலியாக இருந்த அறையில் ஸ்வீட்சர் கிட்டோடு அவளுடன் நுழைந்தான்.

எதிரே பஞ்சு போன்ற ஒரு உறுப்பில் மெல்ல ஊசியைக் குத்தி உள்ளே இறக்கியவன் பின்னாலிருந்து மான்யாவின் கையைப் பிடித்தபடி தையல் போட கற்று கொடுத்தான்.

விஷ்வக் பின்னாலிருந்து கையைப் பிடித்த அடுத்த கணமே அவள் நினைவில் ஷ்யாம் வந்து விழுந்தான்.

வேகமாக தலையை அசைத்து கண்களை சுருக்கி அவன் உருவத்தை மனக்கோட்டிலிருந்து கலைக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை.

இப்போதெல்லாம் எப்போது தையல் போட துவங்கினாலும் ஷ்யாமின் கரங்கள் பின்னாலிருந்து அவளுடன் சேர்ந்து முடிச்சைப் போடுவது போன்ற மாயை.

‘ஏன் இப்படி திடீரென தோன்றுகிறது?’ உள்ளுக்குள் எழுந்த கேள்வியுடன் நிமிர்ந்தவளின் விழிகளில் கண்ணாடி வழியே வெளியிலிருந்து வெறித்த ஷ்யாம் விழுந்தான்.

இருவரின் பார்வை கோடுகளும் ஒன்றொடொன்று  வெட்டிக் கொண்டு நின்றது.

மான்யாவின் செயலற்ற நிலை உணர்ந்து விஷ்வக் நிமிர ஷ்யாம் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

“உன்னை நர்ஸ் ப்ரீத்தி தேடுறாங்க. போய் என்னனு பாரு. நான் மான்யாவுக்கு கைட் பண்றேன்” வேகமாக சொன்னவனை விஷ்வக் நம்பாமல் பார்த்தான்.

“உண்மையாவா?” என்று எதிர்க்கேள்வி கேட்டவனைப் பார்த்து ஆமென்று தலையசைத்துவிட்டு கையில் ஸ்வீட்சரை எடுத்தான்.

‘சீனியர் வர வர சரியே இல்லை. இது எங்க போய் முடியப் போகுதோ’ மனதில் முணுமுணுத்தவாறே அந்த அறையை விட்டு வெளியேறினான்.

“கம் ஆன் மான்யா. ஐ வீல் டீச் யூ” ஷ்யாம் அவள் கையை பிடிக்க,

“அத்தனை பேர் முன்னாடி என்னை அவமானப்படுத்துன உங்க கிட்டே கத்துக்க எனக்கு விருப்பமில்லை” வேகமாக அவனை உதறிவிட்டு முன்னே செல்ல முயன்றாள்.

சட்டென்று அவள் கைகளை இழுத்து தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன், “உனக்கு இந்த ஷ்யாம் பத்தி தெரியாதா மான்யா?” என்றான் மெல்லிய குரலில்.

அந்த மயக்கும் குரலில் அவள் திகைத்து திரும்ப, “ஒரு கோவத்துலே எல்லார் முன்னாடியும் அப்படி சொல்லிட்டேன். சாரி ஃபார் தட். ஒரு சீனியரா உனக்கு டீச் பண்ண வேண்டியது என் கடமை” என்றவனின் வார்த்தைகளை மறுத்து பேச முடியாதபடி எதுவோ ஒன்று அவளை கட்டிப் போட்டது.

அவள் கைகளை தன் கைகளோடு சேர்த்து பிணைத்தவன் தையல் போட கற்று தருவதில் கவனமாகிவிட இவளோ தவிக்க துவங்கினாள்.

அவன் கைகளில் அடங்கிப் போன உள்ளங்கை வெப்பத்தில் இவளுக்குள் இருந்த எதுவோ ஒன்று அடங்கிப் போனது. அவள் பின்னங்கழுத்தில் அவன் தாடை உரச உரச பூனை முடிகள் சிலிர்த்து நின்றது.

நேர்த்தியாக தையல் போட்டுவிட்டு நிமிர்ந்த ஷ்யாம், மான்யாவின் பேச்சற்ற நிலையைக் கண்டு முதலில் புருவம் சுருக்கியவன் பின்பு எதையோ எண்ணி வேகமாக புருவத்தை விரித்தான்.

அதுவரை இயந்திரபாங்காய் கிடந்த முகத்தில் ஷ்யாம், புன்னகையை தைத்துக் கொண்டு பார்க்க மான்யாவிடம்  திணறல்.

அதே நேரம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே விஷ்வக் வந்து நின்றான்.

“சீனியர் என்னை நர்ஸ் ப்ரீத்தி தேடலையாம். ஆனால் உங்களை தான் நர்ஸ் மோகனா அவசரமா தேடுறாங்க. நான் மான்யாவுக்கு கைட் பண்றேன்” என்றபடி ஷ்யாமிடமிருந்த ஸ்யூட்சரை பிடுங்கினான்.

“உண்மையாவா?” இம்முறை கேட்பது ஷ்யாமின் முறையானது.

“உண்மையா தான். நீங்க போங்க” விஷ்வக் இழுக்காத குறையாக ஷ்யாமைக் கொண்டு போய் வெளியில் விட்டுவிட்டு வந்தவனோ மான்யாவின் ஸ்தம்பித்த நிலையை கண்டு கலங்கினான்.

முன்பு பார்த்த மான்யா நிச்சயமாக இவள் இல்லை. இவளுக்குள் ஏதோ ஒரு விதை விழுந்திருக்கிறது. அது விருட்சமாக வளர்ந்து இவளையோ சாய்க்கும் முன்னால் அதை வேரோடு பிடிங்கி எறிய வேண்டும். முடிவோடு நிமிர்ந்தான்.

“மான்யா ஷ்யாம் மேலே ஏதாவது ஃபீலிங்க்ஸ் உனக்கு இருக்கா?” கூர்மையாய் அவன் கேட்க தன் தலையை சிலுப்பிக் கொண்டு அவள் நிமிர்ந்தாள்.

“எனக்கு அந்த சைக்கோ மேலே இந்த ஜென்மத்திலே எந்த ஃபீலீங்க்ஸ்ம் வராது விஷ்வக். அகெய்ன் ஐ யம் டெல்லிங் ஹீ இஸ் நாட் மை டைப்” அவள் அழுத்தமான வார்த்தைகள் கேட்டு விஷ்வக்கிடம் நிம்மதி பெருமூச்சு.

பாவம் மான்யாவிற்கு தெரியாது!
இந்த சைக்கோவின் மீது காதல் கொண்டு பித்தாகி அலையும் நாள் வெகு தூரத்தில் இல்லையென்று.

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!